Tnpsc

12th August 2020 Current Affairs in Tamil & English

12th August 2020 Current Affairs in Tamil & English

12th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

12th August 2020 Current Affairs Pdf Tamil

12th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Which Union Ministry implements the PM SVANidhi Scheme?

[A] Ministry of Housing and Urban Affairs

[B] Ministry of Home Affairs

[C] Ministry of Finance

[D] Ministry of Social Justice and Empowerment

  • Ministry of Housing and Urban Affairs implements the PM SVANidhi Scheme. It was launched in June 2020, to provide affordable Working Capital loan to Street vendors to resume their livelihoods. Recently, the Ministry has launched Letter of Recommendation (LoR) module for the scheme. It enables the vendors who do not possess Identity Card (ID) and Certificate of Vending (CoV), to avail benefits under the scheme.

2. The Export Import Bank of India (EXIM Bank) has extended a USD 250 million worth LoC to which country, to improve its power supply quality?

[A] Mozambique

[B] Maldives

[C] Malaysia

[D] Mauritius

  • Export–Import Bank of India (Exim Bank) has extended a USD 250–million worth Line of credit (LOC) to Mozambique to improve power supply quality in the country. With the signing of this LoC Agreement, India has so far extended 14 LoCs to Mozambique worth USD 772.44 million. A total of 264 LoCs have been extended to as many as 62 countries across the world around USD 25.98 billion.

3. Which Indian pharmaceutical industry has partnered with GAVI and the Bill & Melinda Gates Foundation, to produce 100 million doses of COVID–19 vaccines?

[A] Serum Institute of India

[B] Sun Pharma

[C] CADILA

[D] Apex Pharmaceuticals

  • Pune based Serum Institute of India has partnered with international vaccine alliance, GAVI and the Bill & Melinda Gates Foundation to fast track the production of 100 million doses of COVID–19 vaccines. The vaccines would be developed for India and other low and middle–income countries. Serum Institute of India (SII) is the world’s largest vaccine manufacturer. It had bagged the contract with AstraZeneca to supply Oxford University’s potential COVID–19 vaccine.

4. Which country is set to host the 2021 International Cricket Council (ICC) T20 World Cup?

[A] South Africa

[B] India

[C] Sri Lanka

[D] Pakistan

  • As per the recent notification of the International Cricket Council (ICC), India retained the right to host the 2021 T20 World Cup. ICC also announced that Australia will conduct this year’s (T20 World Cup 2020) postponed edition of the World Cup Tournament in 2022. Next year’s women’s ODI World Cup in New Zealand has been postponed till February–March 2022.

5. What is the name of the special campaign launched by the Prime Minister to free India of garbage?

[A] Gandagi Mukt Bharat

[B] Swachh Bharath

[C] Garbage Less India

[D] ODF Free India

  • The Indian Prime Narendra Modi has launched a week–long campaign named ‘Gandagi Mukt Bharat’ to free India of garbage. While delivering the inaugural address at the launch of the Rashtriya Swachhata Kendra near Raj Ghat, Delhi, the Prime Minister launched the campaign. This week–long campaign to free India of garbage will be till August 15.

6. Rajamalai, where a massive landslide has occurred, is located in which state?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Karnataka

[D] Andhra Pradesh

  • A massive landslide occurred at Rajamalai, Idukki district of Kerala after torrential rains. At least 15 people were said to have been died with several people being injured. More than 50 people among the settlement of tea estate workers in are feared to have been trapped under debris. A team of the National Disaster Relief Force (NDRF) has been deployed in the rescue operations.

7. Which country has declared an ‘Environmental emergency’ after the ship MV Wakashio spilled fuel?

[A] Maldives

[B] Mauritius

[C] Malaysia

[D] Sri Lanka

  • Mauritius has recently declared an ‘Environmental emergency’ after the Japanese–owned ship MV Wakashio was found spilling tons of fuel. Prime Minister of Mauritius Pravind Jugnauth announced the decision as the areas that were declared as ‘very sensitive’ were found as a dark layer in satellite images. The ship was carrying nearly 4,000 tons of fuel and it had suffered cracks.

8. The Prime Minster of India is to inaugurate a submarine Optical Fibre Cable (OFC) to provide telecom services to which UT?

[A] Jammu and Kashmir

[B] Andaman & Nicobar Islands

[C] Lakshadweep

[D] Puducherry

  • The Prime Minister of India Narendra Modi will inaugurate the submarine Optical Fibre Cable (OFC) connecting Chennai and Port Blair. This new network will provide fast and reliable mobile and landline telecom services to the Andaman and Nicobar Islands. The project was announced by the Prime Minister in the year 2018. About 2,300 km of Submarine Optical Fibre Cable (OFC) has been laid at a cost of over Rs 1200 crore.

9. Which financial institution releases the ‘Consumer Confidence Survey’?

[A] RBI

[B] SEBI

[C] SIDBI

[D] MUDRA

  • India’s central bank, the Reserve Bank of India releases the ‘Consumer confidence Survey’. RBI has recently released the results of the July 2020 edition of the survey. Due to the impact of the COVID–19 pandemic, the survey was conducted online through telephone interviews from over 5000 households in 13 major cities including Delhi, Kolkata, Chennai among others.
  • The current situation index dropped to 53.8 in July, which was at the alltime low since the index was introduced.

10. When is International Day of the World’s Indigenous Peoples or World Tribal Day celebrated?

[A] August 9

[B] August 10

[C] August 11

[D] August 12

  • The International Day of the World’s Indigenous Peoples or World Tribal Day is celebrated on August 9 every year. The United Nations General Assembly declared the World Tribal Day in the year 1994. It marks the day of the first meeting of the United Nations Working Group on Indigenous Populations in Geneva in 1982. The day seeks to promote and protect the rights of the indigenous population.

நடப்பு நிகழ்வுகள்

1. பிரதமரின் சுவநிதி திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

  • பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) எந்த நாட்டின் ஆற்றல் விநியோகத் தரத்தை மேம்படுத்துவதற்காக, $250 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் தவணையை வழங்கியுள்ளது?

அ. மொசாம்பிக்

ஆ. மாலத்தீவுகள்

இ. மலேசியா

ஈ. மொரீஷியஸ்

  • இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) மொசாம்பிக் நாட்டில் ஆற்றல் விநியோகத் தரத்தை மேம்படுத்துவதற்காக $250 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் தவணையை அந்நாட்டிற்கு வழங்கியுள்ளது. இந்தக் கடன் தவணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன்மூலம், இந்தியா, இதுவரை, $772.44 மில்லியன் டாலர் மதிப்புள்ள 14 கடன் தவணைகளை மொசாம்பிக் நாட்டிற்கு வழங்கியுள்ளது. $25.98 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய மொத்தம் 264 கடன் தவணைகளை, மொத்தம் 62 நாடுகளுக்கு இந்தியா வழங்கவுள்ளது.

3. 100 மில்லியன் பேருக்கான COVID-19 தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக GAVI மற்றும் பில்&மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டிணைந்துள்ள இந்திய மருந்துத் தொழில் நிறுவனம் எது?

அ. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

ஆ. சன் பார்மா

இ. CADILA

ஈ. அபெக்ஸ் நிறுவனம்

  • புனேவில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, 100 மில்லியன் மக்களுக்கான COVID-19 தடுப்பூசிகளை விரைவாக உற்பத்திசெய்வதற்காக பன்னாட்டு தடுப்பூசிக் கூட்டணி, GAVI மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது. இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளுக்காக இத்தடுப்பூசிகள் உருவாக்கப்படும். சீரம் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகும். இது, ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 தடுப்பூசியை விநியோகிப்பதற்காக, அஸ்ட்ராசெனெகாவுடனான ஒப்பந்தத்தைப்பெற்றுள்ளது.

4. பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) 2021ஆம் ஆண்டு T20 உலகக்கோப்பையை நடத்தவுள்ள நாடு எது?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. இந்தியா

இ. இலங்கை

ஈ. பாகிஸ்தான்

  • பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) அண்மைய அறிவிப்பின்படி, 2021ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா தக்கவைத்துக்கொண்டது. 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு (2020) T20 உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா நடத்தும் என்றும் ICC அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது, 2022 பிப்ரவரி-மார்ச் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

5. இந்தியாவை குப்பைகளிலிருந்து விடுவிப்பதற்காக பிரதமர் தொடங்கியுள்ள சிறப்பு பரப்புரையின் பெயர் என்ன?

அ. காந்தகி முக்த் பாரத்

ஆ. தூய்மை இந்தியா

இ. குப்பைகளற்ற இந்தியா

ஈ. திறந்தவெளி மலங்கழித்தலற்ற இந்தியா

  • இந்தியாவை குப்பைகளின் கோரப்பிடியிலிருந்து விடுவிப்பதற்காக, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, “காந்தகி முக்த் பாரத்” என்ற பெயரில் ஒருவாரகாலம் நீளும் பரப்புரையத் தொடங்கினார். தில்லியின் இராஜ்காட் அருகே இராஷ்டிரிய ஸ்வச்தா கேந்திராவை திறந்துவைத்தபோது, பிரதமர், இப்பரப்புரையத் தொடங்கினார். இந்தப் பரப்புரையானது, வரும் 2020 ஆகஸ்ட்.15 வரை நடைபெறும்.

6. பேரளவில் நிலச்சரிவு ஏற்பட்ட இராஜமலை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • தொடர்மழை காரணமாக, கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இராஜமலை என்ற இடத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. பலர் காயமடைந்த பேரிடரில், குறைந்தது பதினைந்து பேராவது மரணித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 50’க்கும் மேற்பட்டோர், நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் பணிக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

7. MV வகாஷியோ கப்பல், எரிபொருளை கடலில் சிந்தியதை அடுத்து, ‘சுற்றுச்சூழல் அவசரநிலை’யை அறிவித்துள்ள நாடு எது?

அ. மாலத்தீவுகள்

ஆ. மொரீஷியஸ்

இ. மலேசியா

ஈ. இலங்கை

  • ஜப்பானுக்கு சொந்தமான M V வகாஷியோ கப்பல், டன் கணக்கிலான எரிபொருளை மொரீஷியஸ் கடல்புறத்தில் சிந்தியதை அடுத்து, மொரீஷியஸ், ‘சூழல் அவசரநிலை’யை அறிவித்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு, “மிகவும் உணர்திறன்” கொண்ட அந்நாட்டின் பகுதிகள் செயற்கைக்கோள் படங்களில் இருண்ட அடுக்காகக் காணப்பட்டதை அடுத்து, மொரீஷியஸின் பிரதம அமைச்சர் பிரவிந்த் ஜகநாத் இம்முடிவை அறிவித்தார். அக்கப்பல், கிட்டத்தட்ட 4000 டன் எரிபொருளை ஏற்றிச்சென்றதன் காரணத்தால், விரிசல் ஏற்பட்டு, இந்தப் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.

8. எந்த யூனியன் பிரதேசத்துக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக, கடலடி கண்ணாடி இழை வடங்கள் திட்டத்தை இந்தியப்பிரதமர் தொடங்கிவைத்துள்ளார்?

அ. ஜம்மு & காஷ்மீர்

ஆ. அந்தமான் & நிகோபார் தீவுகள்

இ. இலட்சத்தீவுகள்

ஈ. புதுச்சேரி

  • சென்னையையும், போர்ட் பிளேரையும் இணைக்கும் கடலடி கண்ணாடியிழை வடங்கள் திட்டத்தை பிரதமர் மோடி, ஆக.10 அன்று தொடங்கிவைத்தார். இந்த வடங்கள் போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார் நிகோபார், கமோர்தா, கிரேட் நிகோபார், லாங் தீவு, ரங்கத் ஆகிய தீவுகளையும் இணைக்கிறது. இந்தக் கண்ணாடியிழை வடங்கள் இணைப்பு விரைவான, நம்பத்தகுந்த அலைபேசி, தரைவழித் தொலைத்தொடர்பு சேவைகளை இந்தியாவின் இதரபகுதிகளைப்போல அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கும் வழங்கும். இந்தத் திட்டத்திற்கான அடிக்கல், போர்ட் பிளேரில், கடந்த 2018 டிசம்பர்.30 அன்று பிரதமரால் நாட்டப்பட்டது. சுமார் 2,300 கிலோமீட்டர் தொலைவுக்கு, `1224 கோடி செலவில், கடலுக்கடியில் நீர்மூழ்கி வடங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

9. “நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிடுகிற நிதி நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. இந்திய பங்கு & பரிவர்த்தனை வாரியம்

இ. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி

ஈ. முத்ரா

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) “நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வின் ஜூலை 2020 பதிப்பின் முடிவுகளை அவ்வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. COVID-19 தொற்றுநோயின் தாக்கங்காரணமாக தில்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பதிமூன்று முதன்மை நகரங்களில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், தொலைபேசி வாயிலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய நிலைமையில், கடந்த ஜூலை மாதத்தில் இந்தக் குறியீடு, 53.8 ஆகக்குறைந்தது. இது, இந்தக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெறப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண் அளவாகும்.

10. பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட் 9

ஆ. ஆகஸ்ட் 10

இ. ஆகஸ்ட் 11

ஈ. ஆகஸ்ட் 12

  • பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐநா செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • சென்னையில் உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களின் பெயர்களை தமிழ்நாடு அரசு மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம், ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சென்ட்ரல் மெட்ரோ நிலையம், ‘புரட்சித்தலைவர் M G இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ எனவும், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ, ‘புரட்சித்தலைவி Dr. J. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ’ எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!