TnpscTnpsc Current Affairs

12th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

12th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 12th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. சுக்விந்தர் சிங் சுகு என்பவர் கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்?

அ. கோவா

ஆ. குஜராத்

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. உத்தரகாண்ட்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஹிமாச்சல பிரதேசம்

  • ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு சமீபத்தில் பதவியேற்றார். அவர் நான்கு முறை சமஉஆகவும், காங்கிரஸின் மாநிலத் தேர்தல் பிரசாரக் குழு தலைவராகவும் இருந்தார். துணை முதல்வராக முகேஷ் அக்னிகோத்ரி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

2. ‘G20 வளர்ச்சிப் பணிக்குழு கூட்டம்’ நடத்தப்படுகிற நகரம் எது?

அ. மும்பை

ஆ. வாரணாசி

இ. அகமதாபாத்

ஈ. சென்னை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மும்பை

  • G20 வளர்ச்சிப் பணிக்குழுவின் நான்கு நாள் கூட்டம் இந்தியக்குடியரசுத்தலைவர் தலைமையின்கீழ் மும்பையில் தொடங்கவுள்ளது. வளர்ச்சிப் பணிக்குழு கூட்டமானது வளரும் நாடுகள், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் தீவு நாடுகளின் வளர்ச்சிப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. IUCN சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட Meizotropis pellita (Patwa) சார்ந்த இனம் எது?

அ. ஆமை

ஆ. மருத்துவத் தாவரம்

இ. பாம்பு

ஈ. வண்ணத்துப்பூச்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மருத்துவத் தாவரம்

  • இமயமலையில் காணப்படும் மூன்று மருத்துவத் தாவர இனங்கள் IUCN சிவப்புப் பட்டியலில், ‘அச்சுறு நிலையை அண்மித்த இனப்’பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக ‘பட்வா’ என்று அழைக்கப்படுகிற Meizotropis pellita, உத்தரகாண்டைப் பூர்வீகமாகக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. இது ‘மிகவும் அருகிவிட்ட இனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. Fritilloria cirrhosa ‘அழிவாய்ப்பு இனம்’ என்றும், Dactylorhiza hatagirea ‘அருகிவிட்ட இனம்’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

4. 2022 – உலக மண் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Soils: Where food begins

ஆ. Soils: Where life begins

இ. Soils: Where earth begins

ஈ. Soils: Where all begins

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Soils: Where food begins

  • வளம்மிகு மண்ணின் முக்கியத்துவத்தை சிறப்பித்துக்காட்டவும், மண் வளங்களை நிலையான மேலாண்மைக்காக பயன்படுத்துவது குறித்து எடுத்துக்கூறுவதற்குமாக ஆண்டுதோறும் டிசம்பர்.5ஆம் தேதி அன்று ‘உலக மண் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. “Soils: Where food begins” என்பது இந்த ஆண்டு (2022) உலக மண் நாளுக்கானக் கருப் பொருளாகும். 2002ஆம் ஆண்டில் சர்வதேச மண் அறிவியல் சங்கத்தால் மண்ணைக் கொண்டாட ஒரு சர்வதேச நாள் பரிந்துரைக்கப்பட்டது. உணவு மற்றும் உழவு அமைப்பின் FAO மாநாடு கடந்த 2013 ஜூனில் உலக மண் நாளை அங்கீகரித்து பேரறிவிப்பு செய்தது.

5. இந்தியாவின் முதல் கரிம–சமநிலை பண்ணை அமைக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. குஜராத்

இ. கேரளா

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கேரளா

  • இந்தியாவின் முதல் கரிம–சமநிலை பண்ணையாக கொச்சியின் ஆலுவாவிலுள்ள விதைப்பண்ணையை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். கரியமில வாயு (CO2) உமிழ்வைக்குறைத்ததால், வேளாண் துறையின்கீழ் உள்ள அவ்விதைப்பண்ணை கரிம–சமநிலையை அடைய முடிந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் அப்பண்ணையிலிருந்து வெளியேற்றப்பட்ட மொத்த கரியமில வாயுவின் அளவு 43 டன்கள் ஆகும்.

6. ‘மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கான விதிமுறைகளை’ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. FAO

ஆ. FSSAI

இ. ISO

ஈ. NIT ஆயோக்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. FSSAI

  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையமானது (FSSAI) மரபணு மாற்றப்பட்ட (GM) உணவுப் பொருட்களுக்கான விதிமுறைகளின் புதிய வரைவை பொதுமக்களின் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டுள்ளது. 1% அல்லது அதற்கு மேற்பட்ட மரபணு மாற்றப்பட்ட (GM) மூலப்பொருள்களைக் கொண்ட உணவுப்பொருட்களுக்கான விவரங்களை பொருளின் பொதி அட்டையில் ஒட்ட இது முன்மொழிகிறது. FSSAIஇன் முன் அனுமதியின்றி, GMO கொண்டு தயாரிக்கப்படும் எந்தவொரு உணவு அல்லது உணவுப்பொருளையும் யாரும் தயாரிக்கவோ, கட்டவோ, சேமிக்கவோ, விற்கவோ, சந்தைப்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ அல்லது இறக்குமதி செய்யவோ கூடாது.

7. பௌத்தவனம் என்ற பௌத்த பாரம்பரிய நோக்கப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. தெலுங்கானா

இ. மகாராஷ்டிரா

ஈ. திரிபுரா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தெலுங்கானா

  • பௌத்தவனம் என்ற பௌத்த பாரம்பரிய நோக்கப்பூங்கா திட்டமானது தெலுங்கானா மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை நாகார்ஜுனாசாகரில் தெலுங்கானா மாநில சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உருவாக்கியுள்ளது. நாகார்ஜுனா சாகர் அருகே பல்வேறு நாடுகளின் பௌத்த மடாலயங்களையும் பௌத்த பல்கலைக்கழகத்தையும் அமைக்கவும் மாநகராட்சி ஆய்வுசெய்து வருகிறது.

8. விலங்குகள் வதை தடுப்பு (திருத்தம்) மசோதா, 2022இன்படி, ஒரு விலங்கைக் கொன்றால் விதிக்கப்படும் அதிகபட்ச அபராதம் எவ்வளவு?

அ. ரூ.1 இலட்சம்

ஆ. ரூ.5 இலட்சம்

இ. ரூ.10 இலட்சம்

ஈ. ரூ.25 இலட்சம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ரூ.5 இலட்சம்

  • மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட விலங்குகள் வதை தடுப்பு (திருத்தம்) மசோதா, 2022, பொதுமக்களின் கருத்துக்கேட்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. ‘அருவருக்கத்தக்க வன் கொடுமை’ என்ற புதிய பிரிவின்கீழ், “விலங்குப் புணர்வு” உட்பட 61 சட்டத்திருத்தங்களை அது ஒரு குற்றமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது `50,000 முதல் `75,000 வரை அபராதம் அல்லது விலங்கின் மதிப்பு இதில் எது அதிகமோ அதனை அபாராதமாகவோ அல்லது ஓராண்டு முதல் மூவாண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் குற்றத்திற்கான தண்டனையாக விதிக்க பரிந்துரைக்கிறது. விலங்கொன்றைக் கொல்வதற்காக, அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையை விதிக்கவும் இவ்வரைவு மசோதா முன்மொழிகிறது.

9. அணுவாற்றலில் இயங்கும், ‘யாகுடியா’ என்ற பனி உடைப்புக் கப்பலை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. உக்ரைன்

இ. ஜப்பான்

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ரஷ்யா

  • ரஷ்யா அண்மையில் வடமேற்கு ரஷ்யாவில் உள்ள புனித பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பால்டிக் கப்பல்கட்டும் தளத்தில் அணுவாற்றலில் இயங்கும், ‘யாகுடியா’ என்ற பனி உடைப்புக் கப்பலை அறிமுகப்படுத்தியது. இந்த விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மெய்நிகராக கலந்துகொண்டார். ‘யாகுடியா’ ரஷ்யாவின் ரோசாட்டம் ஸ்டேட் அணுவாற்றல் கழகத்திற்காக கட்டப்பட்டுவரும், ‘திட்டம்–22220 அணுவாற்றலால் இயங்கும் பனி உடைப்புக்கப்பல்கள்’ வரிசையில் வருகிறது. இந்த வகை கப்பல்கள் உலக அளவில் மிகப்பெரியவையும் சக்திவாய்ந்தவையும் ஆகும்.

10. ‘UNESCO–இந்தியா–ஆப்பிரிக்கா (UIA) ஹேக்கத்தானை’ நடத்தும் நகரம் எது?

அ. மும்பை

ஆ. நொய்டா பெருநகரம்

இ. காந்திநகர்

ஈ. ஜெய்ப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நொய்டா பெருநகரம்

  • நொய்டா பெருநகரத்தில் நடைபெற்ற UNESCO–இந்தியா–ஆப்பிரிக்கா (UIA) ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். இந்தியா மற்றும் 22 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் பங்கேற்கும் இந்த ஹேக்கத்தானை கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு, AICTE மற்றும் UNESCO ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உதயம் சக்தி இணையதளத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையில் பெண் தொழில்முனைவோர்களுக்கு நடுவண் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தின்மூலம் அளிக்கப்படும் நிதித்திட்டங்கள், கொள்கைகள் குறித்த தகவல்களை உதயம் சக்தி இணையதளம் (https://udyam-sakhi.com) அளிக்கிறது. 2022 அக்டோபர் மாதம் வரை உதயம் சக்தி இணையதளத்தில் பதிவுசெய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர்களின் மாவட்ட வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இராணிப்பேட்டையில் 334 பேர், சேலத்தில் 163 பேர், திருவண்ணா மலையில் 210 பேர், வேலூரில் 360 பேர் என மொத்தம் 1067 பெண் தொழில்முனைவோர்கள் உதயம் சக்தி இணையதளத்தில் பதிவுசெய்துள்ளனர்.

2. ஜி20: முதலாவது நிதிசார் கூட்டம் பெங்களூருவில் நாளை தொடக்கம்.

இந்தியாவின் ஜி20 தலைமையின்கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம், பெங்களூருவில் டிச.13 முதல் 15 வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின்கீழ் நிதி வழிமுறை குறித்த விவாதங்களின் தொடக்கமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. “21ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் குழு விவாதமும் நடைபெறும். “பசுமை நிதியளிப்பில் மத்திய வங்கிகளின் பங்கு” என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

3. PARAVAI திட்டம். 

தமிழ்நாட்டின் காவல்துறையானது PARAVAI – Personality and Attitude Reformation Assistance Venture for Affirming Identity என்ற திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. 18-24 வயதுக்குட்பட்ட முதல்முறை குற்றம் செய்தோரை சீர்திருத்தி அவர்களை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைத்து அதன்மூலம் அவர்கள் மீண்டும் குற்றவாழ்க்கைக்கு திரும்பாமல் தடுப்பதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்: நாட்டிலேயே முதலிடம் பெற்று தமிழ்நாடு சாதனை.

அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதில் நாட்டிலேயே முதலிடம் பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தரமான, விலையில்லா மருத்துவ சேவை வழங்கப்படுவதை நோக்கமாகக் கொண்டதுதான் இந்த ‘அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்’. ஆண்டுதோறும் டிச.12ஆம் தேதியன்று அனைவருக்கும் நலவாழ்வு திட்ட நாள் கொண்டாடப்படுகிறது.

12th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Sukhvinder Singh Sukhu was sworn in as the Chief Minister of which state?

A. Goa

B. Gujarat

C. Himachal Pradesh

D. Uttarakhand

Answer & Explanation

Answer: C. Himachal Pradesh

  • Sukhvinder Singh Sukhu has recently sworn in as the next Chief Minister of Himachal Pradesh. He was a four–time MLA and chairman of the Congress’ state election campaign committee. Mukesh Agnihotri has been selected as the deputy chief minister. The Indian National Congress party won the Himachal Pradesh state assembly elections.

2. Which city is the host of the ‘G20 Development Working Group meeting’?

A. Mumbai

B. Varanasi

C. Ahmedabad

D. Chennai

Answer & Explanation

Answer: A. Mumbai

  • The 4–day meeting of G20 Development Working Group (DWG) is set to begin in Mumbai under India’s Presidency. The Development Working Group meeting aims to discuss developmental issues in Developing Countries, Least Developed Countries and Island Countries.

3. Meizotropis pellita (Patwa), which was added to IUCN Red List, belongs to which species?

A. Turtle

B. Medicinal Plant

C. Snake

D. Butterfly

Answer & Explanation

Answer: B. Medicinal Plant

  • Three medicinal plant species found in the Himalayas have been added to IUCN Red List of Threatened Species. Meizotropis pellita, commonly known as Patwa and endemic to Uttarakhand, has been assessed as ‘critically endangered’, Fritilloria cirrhosa as ‘vulnerable’, and Dactylorhiza hatagirea as ‘endangered’.

4. What is the theme of the ‘World Soil Day 2022’?

A. Soils: Where food begins

B. Soils: Where life begins

C. Soils: Where earth begins

D. Soils: Where all begins

Answer & Explanation

Answer: A. Soils: Where food begins

  • ‘World Soil Day’ is being observed annually on 5 December to focus on the importance of healthy soil and to advocate for sustainable management of soil resources. The theme of this year’s World Soil Day is ‘Soils: Where food begins’. An international day to celebrate soil was recommended by the International Union of Soil Sciences in 2002. The Food and Agriculture Organisation FAO Conference endorsed World Soil Day in June 2013.

5. Where is India’s first carbon neutral farm located?

A. Assam

B. Gujarat

C. Kerala

D. Telangana

Answer & Explanation

Answer: C. Kerala

  • Kerala Chief Minister Pinarayi Vijayan declared a seed farm, located in Aluva in Kerala, as the first carbon neutral farm in the country. Reduction in carbon emission has helped the seed farm under the Agricultural Department achieve the carbon neutral status. The total amount of carbon emission from the farm in the last one year was 43 tons.

6. Which institution released the ‘Genetically Modified (GM) Food regulations’?

A. FAO

B. FSSAI

C. ISO

D. NITI Aayog

Answer & Explanation

Answer: B. FSSAI

  • The Food Safety and Standards Authority of India (FSSAI) has released a new draft of Genetically Modified (GM) Food regulations for public consultation. It proposes front–of–the pack labelling for packaged food products that contain 1 per cent or more of GM ingredients. No person shall manufacture, pack, store, sell, market or distribute or import any food or food ingredient produced from GMOs, except with the prior approval of the Food Authority.

7. Buddhavanam, a Buddhist Heritage Theme Park, is located in which state?

A. Bihar

B. Telangana

C. Maharashtra

D. Tripura

Answer & Explanation

Answer: B. Telangana

  • Buddhavanam, the first–of–its–kind Buddhist Heritage Theme Park project, was inaugurated in Telangana. It was developed by the Telangana State Tourism Development Corporation at Nagarjunasagar. The corporation is also exploring to set upBuddhist Monasteries of different countries and Buddhist University near Nagarjunasagar.

8. As per the draft Prevention of Cruelty to Animals (Amendment) Bill, 2022, what is the maximum punishment for killing an animal?

A. Rs 1 lakh

B. Rs 5 lakh

C. Rs 10 lakh

D. Rs 25 lakh

Answer & Explanation

Answer: B. Rs 5 lakh

  • A draft Prevention of Cruelty to Animals (Amendment) Bill, 2022, prepared by the Ministry of Fisheries, Animal Husbandry, and Dairying, has been released for public comments. It has introduced 61 amendments in the law including “Bestiality” as a crime under the new category of ‘Gruesome cruelty’. It proposes fines from Rs 50,000 to Rs 75,000 or cost of the animal whichever is more or with imprisonment of one year to three years or both for the offence of gruesome cruelty. For killing an animal, the draft Bill proposes a maximum punishment of five years in jail.

9. Which country launched the nuclear–powered icebreaker Yakutia?

A. Russia

B. Ukraine

C. Japan

D. Israel

Answer & Explanation

Answer: A. Russia

  • Russia recently launched the nuclear–powered icebreaker Yakutia at the Baltic Shipyard in St. Petersburg in northwest Russia. The ceremony was attended by Russian President Vladimir Putin via video link. The Yakutia belongs to a series of ‘Project 22220 nuclear–powered icebreakers’ that are being built for Russia’s Rosatom State Atomic Energy Corporation. They are the largest and the most powerful in the world.

10. Which city is the host of the ‘UNESCO–INDIA–AFRICA (UIA) Hackathon’?

A. Mumbai

B. Greater Noida

C. Gandhinagar

D. Jaipur

Answer & Explanation

Answer: B. Greater Noida

  • Vice President of India Jagdeep Dhankhar addressed the UNESCO–INDIA–AFRICA (UIA) Hackathon at Greater Noida. The Hackathon involving young entrepreneurs from India and 22 African countries was organized by the Innovation Cell of the Ministry of Education, the AICTE and UNESCO.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!