TnpscTnpsc Current Affairs

12th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

12th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘உலக மக்கள்தொகை தரவேடு – 2022’ அறிக்கையின்படி, எந்த ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது?

அ. 2023 

ஆ. 2024

இ. 2026

ஈ. 2030

  • 2022 ஜூலை.11 – உலக மக்கள்தொகை நாளன்று, ‘உலக மக்கள்தொகை தரவேடு – 2022’ என்ற தலைப்பில் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின் இருபத்தேழாவது பதிப்பை ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டது. இத்தரவேட்டின்படி, 2023–இல் உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையானது 2022 நவ.15–இல் எட்டுப்பில்லியனை எட்டுமெனக் கணிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் அது வளரக்கூடும்.

2. 2022 – விம்பிள்டன் மகளிர் மற்றும் ஆடவர் பட்டத்தை வென்றவர்கள் யார்?

அ. எலெனா ரைபகினா, நோவக் ஜோகோவிச் 

ஆ. ஒன்ஸ் ஜாபியர், நோவக் ஜோகோவிச்

இ. எலெனா ரைபாகினா, நிக் கிர்கியோஸ்

ஈ. வீனஸ் வில்லியம்ஸ், ரபேல் நடால்

  • 23 வயதான வீராங்கனை எலினா ரைபகினா கஜகஸ்தானின் முதல் வீராங்கனையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். 2011–க்குப் பிறகு இளம் விம்பிள்டன் சாம்பியனான பெண்ணானார் அவர். நோவக் ஜோகோவிச் தனது 4ஆவது விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றார். ரபேல் நடாலைவிட (22) சரியாக ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் குறைவாகக்கொண்டுள்ளார் நோவக் ஜோகோவிச்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘OALP’ மற்றும் ‘HELP’ என்பவற்றுடன் தொடர்புடைய துறை எது?

அ. நிலக்கரி

ஆ. எண்ணெய் 

இ. தானியங்கி

ஈ. மின்னணுவியல்

  • எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்வதற்கான புதிய கொள்கையான Hydrocarbon Exploration and Licensing Policy (HELP), பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் கடந்த 2016ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. Open Acreage Licensing Programme (OALP)இன் 7 ஏலச்சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதுவரை 134 ஆய்வு மற்றும் உற்பத்தித் தொகுதிகள் தரப்பட்டுள்ளன. சமீபத்திய 7ஆவது ஏலச்சுற்றில், ONGC, OIL மற்றும் GAIL ஆகியவை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்திக்காக வழங்கப்பட்ட எட்டுத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றைப் பெற்றன.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற கனகனஹள்ளி என்பது எந்த மாநிலம் /யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால பௌத்தத்தலமாகும்?

அ. ஆந்திரப் பிரதேசம்

ஆ. கர்நாடகா 

இ. பஞ்சாப்

ஈ. பீகார்

  • கனகனஹள்ளி என்பது கர்நாடக மாநிலத்தின் கலபுராகி மாவட்டத்தில் பாயும் பீமா ஆற்றின் கரையில் உள்ள ஒரு பழமையான பௌத்தத்தலமாகும். இது சன்னதி தளத்தின் ஒருபகுதியாகும். இந்தியத் தொல்லியல் துறை தற்போது இந்தப் பௌத்தத்தலத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற சிங்களிலா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. மேற்கு வங்கம் 

இ. உத்தரகாண்ட்

ஈ. சிக்கிம்

  • மேற்கு வங்க மாநிலத்தின் மிகவுயரமான பாதுகாக்கப்பட்ட பகுதியான சிங்களிலா தேசியப்பூங்கா, 5 ஆண்டுகளில் சுமார் 20 சிவப்புப்பாண்டாக்களை விடுவிக்கும் திட்டத்தைத்தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா இருபது சிவப்புப்பாண்டாக்களை (Ailurus fulgens) காடுகளுக்குள் விடுவிக்கும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

6. எந்த இந்திய மாநிலம், மாணவர்களிடமிருந்து ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழிப் பொருட்களை பெறுவதற்காக ‘திரும்பப்பெறும்’ திட்டத்தை அறிவித்துள்ளது?

அ. கேரளா

ஆ. ஹிமாச்சல பிரதேசம் 

இ. சிக்கிம்

ஈ. இராஜஸ்தான்

  • ஹிமாச்சல பிரதேச மாநிலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை பெறுவதற்கான ‘திரும்பப்பெறும்’ திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. இப் புதிய திட்டத்தின்கீழ், மாணவர்கள் பள்ளியில் வழங்கும் ஒரு கிலோ நெகிழிப்பொருட்களுக்கு அரசு `75 செலுத்தும். இத்திட்டம் வளர்ந்துவரும் இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. அண்மையில் காமன்வெல்த் நாடுகளில் இணைந்த காபோன் மற்றும் டோகோ, எந்தப் பகுதியைச் சேர்ந்தவை?

அ. ஐரோப்பா

ஆ. ஆப்பிரிக்கா 

இ. ஓசியானியா

ஈ. ஆசியா

  • பிரெஞ்சு மொழிபேசும் மேலை ஆப்பிரிக்க நாடுகளான காபோன் மற்றும் டோகோ காமன்வெல்த்தில் இணைந்தன; பிரிட்டனுடன் எந்த வரலாற்று உறவும் இல்லாத நாடுகளாக, காமன்வெல்த் நாடுகளில் நுழையும் புதிய நாடுகளாக இவை ஆகின. பெரும்பாலும் முன்னாள் பிரித்தானிய காலனித்துவத்தின் கீழிருந்த 54–நாடுகளின் குழுமமான காமன்வெல்த்தின் ருவாண்டாவில் நடந்த தலைமை உச்சிமாநாட்டின் இறுதிநாளில், டோகோ மற்றும் காபோனின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2009–இல் ருவாண்டாவிற்குப் பிறகு காமன்வெல்த் அமைப்பில் இணைந்த முதல் புதிய உறுப்புநாடுகள் இவையாகும்.

8. ‘வதைக்குள்ளானோர்க்கு ஆதரவு தரும் உலக நாள்’ அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ. மே

. ஜூன் 

இ. ஜூலை

ஈ. செப்டம்பர்

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.26 அன்று வதைக்குள்ளானோர்க்கு ஆதரவளிக்கும் உலக நாள் அனுசரிக்கப்படுகிறது. துஷ்பிரயோகம் மற்றும் வதைகளை எதிர்கொண்ட மற்றும் தொடர்ந்து எதிர்கொள்ளும் மக்களுக்காக அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க வலியுறுத்துவது இதன் நோக்கமாகும். 1997ஆம் ஆண்டில், ஐநா பொதுச்சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது; ஜூன்.26ஐ வதைக்குள்ளானோர்க்கு ஆதரவளிக்கும் உலக நாளாக அறிவித்தது. இது மனித சித்திரவதையின் ஏற்றுக்கொள்ள முடியாத தன்மைபற்றிய விழிப்புணர்வை பரப்புவது மட்டுமல்லாமல் அது ஒரு குற்றம் என்பதையும் குறிப்பிடுகிறது.

9. 2022–இல் அதன் முதல் இரஞ்சிக்கோப்பையை வென்ற இந்திய மாநிலம் எது?

அ. பஞ்சாப்

ஆ. மத்திய பிரதேசம் 

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

  • பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணி மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் இரஞ்சிக்கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யாஷ் துபே, ஷுபம் சர்மா மற்றும் ரஜத் படிதார் ஆகியோரின் சதங்கள் அடங்கும். 23 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேச அணியின் கேப்டனாக இருந்த பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் இவ்விளம் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றார்.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘அவினாஷ் குல்கர்னி’, எவ்வமைப்பின் புதிய தலைமைச் செயலதிகாரி ஆனார்?

அ. UIDAI

ஆ. தேசிய நலவாழ்வு ஆணையம்

இ. IDRCL 

ஈ. UGC

  • இந்திய கடன் தீர்வு நிறுவனத்தின் (IDRCL) தலைமைச் செயலதிகாரியாக அவினாஷ் குல்கர்னி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அரசாங்க ஆதரவுடைய தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தால் (NARCL) பெறவேண்டிய `83,000 கோடிக்கும் அதிகமான வாராக்கடன்களுக்குத் தீர்வுகாண்பதற்காக இது உருவாக்கப்பட்டது.
  • அவர் இந்திய மீட்டெழுச்சி சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் (IRARC) தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார் மற்றும் SBIஇலும் பணியாற்றியுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மக்கள்தொகை: 2023-இல் இந்தியா முதலிடம் பெறும்: ஐ.நா. தகவல்

மக்கள்தொகை பெருக்கத்தில் 2023-ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என்றும், நிகழாண்டு நவம்பரில் உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டும் என்றும் ஐநா கணித்துள்ளது. இதுதொடர்பாக ஐநா பொருளாதார, சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாவது:

உலக மக்கள்தொகை நிகழாண்டு நவ.15-இல் 800 கோடியை எட்டும். 1950-க்குப் பின்னர் உலக மக்கள்தொகை மெதுவான வீதத்தில் வளர்ச்சியடைகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 850 கோடியையும், 2050-ஆம் ஆண்டில் 970 கோடியையும் எட்டும். 2080-இல் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக இருக்கும். 2100 வரை இதே விகிதம் நீடிக்கும்.

2023-இல் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள்தொகைகொண்ட நாடாக இந்தியா விளங்கும். வரும் 2050-இல் இந்தியாவின் மக்கள்தொகை 166 கோடியாக இருக்கும்.

உலக மக்கள்தொகையில் 29 சதவீதத்துடன் அதாவது 230 கோடி மக்கள்தொகையுடன் 2022-இல் உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட பிராந்தியமாக கிழக்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா திகழ்கிறது. மத்திய, தெற்கு ஆசியா 210 கோடி மக்களுடன் உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் தலா 140 கோடி மக்கள்தொகையுடன் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. 2050-ஆம் ஆண்டுவரையிலான உலக மக்கள்தொகை பெருக்க கணக்கீட்டின்படி, காங்கோ குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், தான்ஸானியா ஆகிய 8 நாடுகளும் 50%-க்கும் அதிகமான பங்குவகிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. As per the ‘World Population Prospects 2022’report, India is projected to surpass China as the world’s most populous country in which year?

A. 2023 

B. 2024

C. 2026

D. 2030

  • The United Nations released the twenty–seventh edition of the official population estimates and projections titled ‘World Population Prospects 2022’ on World Population Day, July 11, 2022. As per the publication, India is projected to surpass China as the world’s most populous country in 2023. The global population is projected to reach eight billion by November 15, 2022, could grow to around 8.5 billion in 2030 and 9.7 billion in 2050.

2. Who are the winners of Wimbledon women’s and men’s title in 2022?

A. Elena Rybakina, Novak Djokovic 

B. Ons Jabeur, Novak Djokovic

C. Elena Rybakina, Nick Kyrgios

D. Venus Williams, Rafael Nadal

  • 23–year–old player Elena Rybakina became the first player from Kazakhstan to win a grand slam title. She also became the youngest Wimbledon champion since 2011. Novak Djokovic won his fourth straight Wimbledon men’s singles title, and his 21st grand slam title overall. He is now one grand slam title behind the all–time record set by Rafael Nadal of 22.

3. ‘OALP’ and ‘HELP’ which are sometimes found in the news, are associated with which field?

A. Coal

B. Oil 

C. Automobile

D. Electronics

  • Hydrocarbon Exploration and Licensing Policy (HELP), a new policy for finding and producing oil and gas, was launched by the Ministry of Petroleum and Natural Gas in the year 2016. Seven bid rounds of the Open Acreage Licensing Programme (OALP) have been concluded so far and 134 exploration and production blocks were awarded. In the recent 7th bid round, ONGC, OIL and GAIL got most of the eight blocks offered for exploration and production of oil and gas.

4. Kanaganahalli, which was seen in the news, is an ancient Buddhist site located in which state/UT?

A. Andhra Pradesh

B. Karnataka 

C. Punjab

D. Bihar

  • Kanaganahalli is an ancient Buddhist site on the bank of Bhima River in Kalaburagi district of the state of Karnataka. It forms a part of the Sannati site. Archaeological Survey of India has now taken up conservation work at this Buddhist site.

5. Singalila National Park, which was seen in the news recently, is situated in which state?

A. Himachal Pradesh

B. West Bengal 

C. Uttarakhand

D. Sikkim

  • The Singalila National Park, the highest protected area in West Bengal has launched a programme to release about 20 red pandas in a period of five years. West Bengal’s Padmaja Naidu Himalayan Zoological Park has started this programme to release 20 of red pandas (Ailurus fulgens) into the forests.

6. Which Indian state has announced a buy back scheme to purchase single–use plastic items from students?

A. Kerala

B. Himachal Pradesh 

C. Sikkim

D. Rajasthan

  • The Himachal Pradesh is set to implement a buy–back scheme in schools and colleges to purchase single–use plastic items from students. Under the new scheme, the government will pay students Rs 75 for a kg of single–use plastic items they deposit with the school. The scheme aims to inculcate a habit of environment conservation among the youngsters.

7. Gabon and Togo, which recently joined the Commonwealth of Nations, are from which region?

A. Europe

B. Africa 

C. Oceania

D. Asia

  • The French–speaking West African countries Gabon and Togo joined the Commonwealth, becoming the latest nations with no historic ties to Britain to enter the Commonwealth of Nations.
  • The 54–nation group of mostly former British colonies accepted Togo and Gabon’s application for membership on the final day of its leadership summit held in Rwanda. They are the first new members to join the Commonwealth since Rwanda in 2009.

8. ‘International Day in Support of Victims of Torture’ is observed in which month?

A. May

B. June 

C. July

D. September

  • Every year June 26 is observed as the International Day in Support of Victims of Torture. It aims to urge all the stakeholders to unite for people who have faced and continue to face the abuse and torture. In 1997, the United Nations General Assembly passed a resolution, declaring June 26 as the International Day in Support of Victims of Torture. It not only spread awareness on the unacceptable character of human torture but also notes that it’s a crime.

9. Which Indian state clinched their maiden Ranji Trophy title in 2022?

A. Punjab

B. Madhya Pradesh 

C. Gujarat

D. Karnataka

  • Madhya Pradesh defeated Mumbai by six wickets in the final to clinch their maiden Ranji Trophy title at M Chinnaswamy Stadium, Bengaluru. The match included centuries from Yash Dubey, Shubham Sharma and Rajat Patidar in the first innings. The renowned cricket coach Chandrakant Pandit, who was the captain of the Madhya Pradesh team 23 years ago, has guided the young team to victory.

10. ‘Avinash Kulkarni’ who was in the news recently, is the new CEO of which body?

A. UIDAI

B. National Health Authority

C. IDRCL 

D. UGC

  • Avinash Kulkarni has been selected as the CEO of India Debt Resolution Company (IDRCL). It was formed to resolve more than ₹83,000 crore of bad loans to be acquired by the government–backed National Asset Reconstruction Company (NARCL). He was the Chief executive of India Resurgence Asset Reconstruction Company (IRARC) and also had served in SBI.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!