TnpscTnpsc Current Affairs

12th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

12th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்திய ரிசர்வ் வங்கியால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘UPI123Pay’ வசதியின் இலக்குப் பயனாளிகள் யார்?

அ) பார்வைக் குறைபாடுடையோர்

ஆ) கைபேசி பயனர்கள் 

இ) குழந்தைகள்

ஈ) மூத்த குடிமக்கள்

  • RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் ‘UPI123Pay’ எனப்படும் சாதாரண கைபேசிகளுக்கான UPI வசதியை அறிமுகம் செய்தார். ‘டிஜிசாதி’ என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக் -காக 24×7 ஹெல்ப்லைனையும் அவர் தொடங்கினார்.
  • ‘UPI123Pay’ ஆனது ஸ்கேன் செய்து பணஞ்செலுத்தும் சேவையைத்தவிர அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் சாதாரண கைபேசியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்க -ளை அனுமதிக்கும். இந்த வசதியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கை சாதாரண கைபேசியுடன் இணைத்திருக்க வேண்டும்.

2. ‘BBIN’ மோட்டார் வாகன ஒப்பந்தத்தை செயல்படுத்துவ -தற்காக பின்வரும் எந்த நாடுகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ) பூட்டான்-நேபாளம்

ஆ) வங்காளதேசம்-நேபாளம் 

இ) பூட்டான்-கம்போடியா-நேபாளம்

ஈ) வங்காளதேசம்-மியான்மர்-நேபாளம்

  • இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகியவை வங்க தேசம்-பூடான்-இந்தியா-நேபாளம் (BBIN) மோட்டார் வாகன ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துண -ர்வு ஒப்பந்தத்தை இறுதிசெய்துள்ளன. இந்தக்கூட்டத்தில் பூடான் பார்வையாளராக பங்கேற்றது.
  • BBIN ஆனது பிராந்திய வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “பரம் கங்கா” என்றால் என்ன?

அ) COVID தடுப்பு மருந்து

ஆ) கங்கை புத்துயிரளிப்புத் திட்டம்

இ) மீத்திறன் கணினி 

ஈ) கிரிப்டோ-நாணயம்

  • தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் 1.66 பெடா பிளாப்ஸ் திறன்கொண்ட “PARAM Ganga” என்ற மீத்திறன் கணினியை நிறுவியுள்ளது.
  • இது மின்னணுவியல் & தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பத்துறை ஆகியவற்றால் கூட்டாக இயக்கப்படுகிறது. நவீன கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர் ஆகியவற்றால் இது செயல்படுத்தப்படுகிறது.

4. ‘பால்-தாத்வாவ் படுகொலை’ இன்றைய எந்த இந்திய மாநிலத்தில் நடைபெற்றது?

அ) குஜராத் 

ஆ) மேற்கு வங்கம்

இ) அஸ்ஸாம்

ஈ) உத்தரகாண்ட்

  • குஜராத் மாநில அரசு ‘பால்-தாத்வாவ்’ படுகொலையின் 100ஆம் ஆண்டு நிறைவைக்குறிப்பிட்டு, இது “ஜாலியன் வாலாபாக்கை விடவும் மிகப்பெரிய படுகொலை” என்று கூறியது. அம்மாநிலத்தின் குடியரசு நாள் அலங்கார ஊர்தியிலும் இந்தப்படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.
  • குஜராத் மாநிலத்தின் ‘பால்-சிதாரியா’ மற்றும் ‘தத்வாவ்’ கிராமங்களில் 1922 மார்ச்.7ஆம் தேதி இப்படுகொலை நடந்தது. மோதிலால் தேஜாவத் தலைமையிலான, ‘ஏகி இயக்கத்தின்’ ஒருபகுதியாக கிராமமக்கள் ஒன்றுகூடிய போது, ஆங்கிலேயர்களால் சுமார் ஆயிரம் பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதீத நிலவருவாய் வரிக்கு எதிராக போராட்டம் நடத்துவதே அவர்களின் நோக்கமாகும்.

5. ‘கௌசல்யா மாத்ரித்வா யோஜனா’ தொடங்கப்பட்ட இந்திய மாநிலம் எது?

அ) ஒடிஸா

ஆ) குஜராத்

இ) சத்தீஸ்கர் 

ஈ) இராஜஸ்தான்

  • சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், ‘கௌசல்யா மாத்ரித்வா யோஜனா’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்கீழ் இரண்டாவது பெண் குழந்தை பிறக்கும் பெண்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அவர், ‘கன்யா விவாக யோஜனா’ குறிப்பு ஏடு & சகி தொலைபேசி விவரக்கொத்தை வெளியிட்டார்.

6. “sun-to-liquid” எரிபொருளைப் பயன்படுத்தும் உலகின் முதல் வானூர்தி நிறுவனம் எது?

அ) ஜப்பான் ஏர்லைன்ஸ்

ஆ) கேத்தே பசிபிக் ஏர்வேஸ்

இ) சுவிஸ் ஏர்லைன்ஸ் 

ஈ) குவாண்டாஸ் ஏர்வேஸ்

  • சுவிஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான லுப்தான்சா குழுமம், அதன் சூரிய ஆற்றல் எரிபொருளைப்பயன்படுத்த செயற்கை எரிபொருள் குழுவான சின்ஹெலியன் உடன் கூட்டுசேர்ந்துள்ளது.
  • இதன்மூலம், “sun-to-liquid” எரிபொருளை பயன்படுத்தும் உலகின் முதல் வானூர்தி நிறுவனமாக சுவிஸ் மாறும். சுவிட்சர்லாந்தைச்சார்ந்த சின்ஹெலியன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வானூர்திக்கான நிலையான எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்
    -தை உருவாக்கியுள்ளது.

7. ‘குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள்’ என்ற தேசிய மாநாட்டை நடத்தும் மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) சத்தீஸ்கர் 

இ) ஒடிஸா

ஈ) குஜராத்

  • தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0, வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகத்தின்கீழ், ‘குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள்: கழிவு மேலாண் -மையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்’ என்ற தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. இராய்பூரில் சத்தீஸ்கர் மாநில அரசுடன் இணைந்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

8. ‘இந்திய அரசின் சுற்றுச்சூழல் அறிக்கை – 2022’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் 

இ) சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றம் அமைச்சகம்

ஈ) ஐநா வளர்ச்சித் திட்டம்

  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான மையத்தின் ‘டௌன் டூ எர்த்’ என்ற இந்திய சுற்றுச்சூழல் அறிக்கை – 2022’ஐ வெளியிட்டார்.
  • தில்லியைச் சார்ந்த இலாப நோக்கற்ற அறிவியல் மையம் ஏற்பாடு செய்த அனில் அகர்வால் பேச்சுவார்த்தையில் இது வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை முறையே 11 மற்றும் 14ஆம் SDG-களில் தேசிய சராசரியைவிடக்குறைவாக உள்ளன. SDG-இல் கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டன.

9. 2022-ISSF உலகக்கோப்பை நடைபெறும் இடம் எது?

அ) கெய்ரோ 

ஆ) பாரிஸ்

இ) புடாபெஸ்ட்

ஈ) மாஸ்கோ

  • நடப்பாண்டுக்கான (2022) முதல் ISSF உலகக்கோப்பை எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது.
  • ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சௌரப் சௌத்ரி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன்மூலம் நாட்டிற்கு 2ஆவது பதக்கத்தை வென்று தந்தார்.

10. ‘ஸ்த்ரீ மனோரக்ஷா திட்டத்தை’த் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 

ஆ) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஈ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் பெண்களின் மனநலத்தை மேம்படுத்த ‘ஸ்த்ரீ மனோரக்ஷா திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது.
  • பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் துன்பத்திற்கு ஆளான பெண்ளை எவ்வாறு கையாள்வது என்ற திறனை வளர்ப்பதில் இத்திட்டம் கவனஞ்செலுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஸ்டான்லி மருத்துவமனையில் `2.44 கோடியில் வாழ்வூட்டும் மருத்துவ ஆராய்ச்சி மையம்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் `2.44 கோடி செலவில் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

2. சாகித்திய அகாதெமி விருது…

“சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்ற சிறுகதைத் தொகுப்புக்காக எழுத்தாளர் அம்பைக்கு சாகித்திய அகாதெமி விருதும் “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” என்ற படைப்புக்காக எழுத்தாளர் மு முருகேசுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்பட்டன.

3. சேதி தெரியுமா?

பிப்.28: ‘SEBI’ என்றழைக்கப்படும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் முதல் பெண் தலைவராக மாதவி புரி நியமிக்கப்பட்டார்.

மார்ச்.1: உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெறும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கி கையெழுத்திட்டார்.

மார்ச்.2: அரசுப்பணி நியமனங்களில் 3ஆம் பாலினத்தவரு -க்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச்.3: போர் நடைபெறும் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க வசதியாக எம்பி-க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, MM அப்துல்லா, எம் எல் ஏ டி ஆர் பி இராஜா ஆகியோர் அடங்கிய குழுவைத் தமிழக அரசு நியமித்தது.

மார்ச்.4: தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேயர், துணை மேயர், தலைவர், துணைத்தலைவர் ஆகியோரைத் தேர்வுசெய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பதவிகளை திமுக கூட்டணி வென்றது.

மார்ச்.4: ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் (52) தாய்லாந்தில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

மார்ச்.5: மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரின் ரிஜிஜுவுக்கு அனுப்பினார்.

மார்ச்.5: மணிப்பூரில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 86.01 சதவீத வாக்குகள் பதிவாயின.

3. புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம் நிறுவனத்துக்கு தடை: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம் நிறுவனத்துக்கு ஆர்பிஐ தடை விதித்துள்ளது. ஆன்லைன் நிதி பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தடை விதித்துள்ளது. 1949ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் விதி 35-ஏ பிரிவின்கீழ் இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பான ஐயப்பாடு காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ஆர்பிஐ கூறியுள்ளது.

நிறுவனத்தின் ஐடி செயல்பாடுகளை தணிக்கை செய்ய தகவல் தொழில்நுட்ப (ஐடி) தணிக்கைக் குழுவை அமைக்குமாறு பேடிஎம் நிறுவனத்தை ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது. ஐடி தணிக்கை நிறுவனம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய வாடிக்கையாளர்களை அனுமதிப்பதற்கு சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆர்பிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் சிறிய நிதி வங்கி தொடங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கியை இரு தினங்களுக்கு முன் பேடிஎம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் நிறுவன செயல்பாடு குறித்த புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

4. இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானிகள் பயிற்சி விமானம்: ஹன்சா-என்ஜி-இன் கடல்மட்ட சோதனை வெற்றி

விமானிகள் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஹன்சா-என்ஜி நவீன பயிற்சி விமானத்தின் கடல்மட்ட சோதனைகள் வெற்றிபெற்றன.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) ஆய்வுக்கூடங்களில் ஒன்று பெங்களூருவிலுள்ள தேசிய விமானவியல் ஆய்வகம் (என்ஏஎல்). இந்த ஆய்வகம், விமானி பயிற்சிக்காக ஹன்சா என்ற இரு நபர் விமானத்தை 1993-ல் உருவாக்கியது.

மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டபுதிய தலைமுறை ஹன்சா – என்ஜி (New Generation) என்ற அடையாளத்தோடு செப்.2021-ல் முதன்முதலாக பறக்க விடப்பட்டது. ஆராய்ச்சி நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்குச் செல்ல பல விதமான விமான சோதனைகள் செய்யப்படும். சமீபத்தில் நடந்த கடல் மட்ட சோதனைகளில் ஹன்சா-என்ஜி வெற்றி பெற்றுள் ளது. இதுகுறித்து அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஹன்சா-என்ஜி விமானத்தின் கடல்மட்ட சோதனைகள் புதுச்சேரியில் நடைபெற்றன. மணிக்கு 155 கிமீ வேகத்தில் பறந்த விமானம் பெங்களூருவிலிருந்து புதுச்சேரி வரை உள்ள 140 கடல் மைல் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்தது.

இதுவரை 37 முறை சோதனை

பிப்.19 முதல் மார்ச் 5 வரை கடல் மட்ட சோதனைகளில் இந்த விமானம் 18 மணி நேரம்ஈடுபடுத்தப்பட்டது. விமானத்தின் பல்வேறுசெயல்பாடுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனைகளுடன் இதுவரை விமானம் 37 முறை பறக்க விடப்பட்டு 50 மணி நேரம் சோதிக்கப்பட்டது. இன்னும் சில சோதனைகளுக்கு பிறகு சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் அனுமதி பெறப்படும். விமானம் உற்பத்தி நிலைக்குச் செல்ல கடல்மட்ட சோதனையின் வெற்றி ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

ஹன்சா-என்ஜி விமானத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு தயாரிப்பாகவும் எரிபொருள் சிக்கனமும் உள்ளதால் விமான பயிற்சி பள்ளிகளுக்கு ஏற்ற விமானமாக இது இருக்கும். இந்த விமானத்தை வாங்குவதற்கு இதுவரை 80 விமான பயிற்சி பள்ளிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1. Who are the targeted beneficiaries of ‘UPI123Pay’ facility, recently launched by the Reserve Bank of India?

A) Visually Challenged Persons

B) Feature Phone Users 

C) Children

D) Senior Citizens

  • RBI Governor Shaktikanta Das launched UPI for feature phones called UPI123Pay. He also launched 24×7 helpline for digital payments named ‘DigiSaathi’. UPI 123Pay will allow customers to use feature phones for all transactions except scan and pay. It doesn’t need an internet connection for transactions while customers have to link their bank account with feature phones to use this facility.

2. India signed MoU with which countries to implement the ‘BBIN’ Motor Vehicles Agreement?

A) Bhutan–Nepal

B) Bangladesh–Nepal 

C) Bhutan–Cambodia–Nepal

D) Bangladesh–Myanmar–Nepal

  • India, Bangladesh and Nepal finalised an enabling Memorandum of understanding (MoU) for implementing the Bangladesh–Bhutan–India–Nepal (BBIN) Motor Vehicles Agreement (MVA).
  • Bhutan participated in the meeting as an observer. BBIN aims to boost the regional trade and connectivity.

3. What is “PARAM Ganga”, which was seen in the news recently?

A) COVID Vaccine

B) Ganga Rejuvenation Scheme

C) Super–computer 

D) Crypto–currency

  • The National Supercomputing Mission (NSM) has deployed “PARAM Ganga”, a supercomputer at IIT Roorkee, with a supercomputing capacity of 1.66 Petaflops.
  • NSM is driven jointly by Ministry of Electronics & Information Technology (MeiTY) and the Department of Science and Technology (DST) and implemented by Centre for Development of Advanced Computing (C–DAC) and Indian Institute of Science (IISc), Bangalore.

4. ‘Pal–Dadhvav Massacre’ was held at which present–day Indian state?

A) Gujarat 

B) West Bengal

C) Assam

D) Uttarakhand

  • The Gujarat government marked 100 years of the Pal–Dadhvav killings, citing it a massacre “bigger than the Jallianwala Bagh”.
  • The killings had also been featured on the state’s Republic Day tableau. The massacre took place on March 7, 1922, in the Pal–Chitariya and Dadhvaav villages of Gujarat. When Villagers gathered as part of the ‘Eki movement’, led by Motilal Tejawat, around 1000 were shot down by the British. Their aim was to protest against the land revenue tax.

5. Which Indian state launched ‘Kaushalya Matritva Yojana’?

A) Odisha

B) Gujarat

C) Chhattisgarh

D) Rajasthan

  • Chhattisgarh Chief Minister Bhupesh Baghel launched the ‘Kaushalya Matritva Yojana’. Under this scheme, financial assistance of Rs 5000 will be given to women on the birth of second girl child.
  • He also released ‘Kanya Vivah Yojana’ Coffee Table Book and Sakhi One Stop Center Telephone Directory.

6. Which is the first airline in the world to use “sun–to–liquid” fuel?

A) Japan Airlines

B) Cathay Pacific Airways

C) Swiss Airlines 

D) Qantas Airways

  • Swiss and its parent company, the Lufthansa Group, have partnered with synthetic fuel group Synhelion to use its Solar Fuel.
  • This will make Swiss the first airline in the world to use “sun–to–liquid” fuel. Switzerland–based Synhelion, has developed a technology for manufacturing sustainable aviation fuel (SAF) from renewable energy sources.

7. Which state is the host of ‘National conclave on ‘Social Enterprises for Garbage Free Cities’?

A) Bihar

B) Chattisgarh 

C) Odisha

D) Gujarat

  • Swachh Bharat Mission–Urban 2.0, under the aegis of the Ministry of Housing and Urban Affairs (MoHUA), organised a national conclave on ‘Social Enterprises for Garbage Free Cities: Encouraging Women Entrepreneurs in Waste management’. The conclave was organised in collaboration with the Chhattisgarh Government in Raipur.

8. Which institution released the ‘State of India’s Environment Report 2022’?

A) NITI Aayog

B) Centre for Science and Environment 

C) Ministry of Environment, Forest and Climate Change

D) UN Development Programme

  • Bhupender Yadav, Union minister of environment, forests and climate change, released Centre for Science and Environment – Down to Earth’s Annual State of India’s Environment Report 2022. This was released at the Anil Agarwal Dialogue organised by Delhi–based non–profit Centre for Science and Environment (CSE).
  • As per the report, Uttar Pradesh and Bihar are below the national average in 11 and 14 SDGs, respectively. Kerala, Tamil Nadu and Himachal Pradesh fared best in SDGs.

9. Which is the venue of the 2022 ISSF World Cup?

A) Cairo 

B) Paris

C) Budapest

D) Moscow

  • This year’s first ISSF World Cup is being held in the city of Cairo, Egypt. Indian shooting ace Saurabh Chaudhary won the gold medal in the men’s 10m air pistol event. Another Indian player Esha Singh bagged the second medal for the country after she won a silver in the women’s 10m air pistol event.

10. Which Union Ministry launched the ‘Stree Manoraksha Project’?

A) Ministry of Women and Child Development 

B) Ministry of Health and Family Welfare

C) Ministry of Social Justice and Empowerment

D) Ministry of Law and Justice

  • The Ministry of Women and Child Development (MoWCD) launched the ‘Stree Manoraksha Project’ to improve the mental health of women in India. The project has been launched in collaboration with the National Institute of Mental Health and Neuro Sciences, Bengaluru.
  • The project would focus on building on capacity building of One–Stop Centers on how to handle the cases of women who have suffered violence and distress.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!