TnpscTnpsc Current Affairs

12th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. COVID தடுப்பூசிகளை வாங்குவதற்காக $2 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு, இந்தியா, எந்த நிறுவனங்களிடம் விண்ணப்பித்து உள்ளது?

அ) உலக வங்கி

ஆ) ADB-AIIB 

இ) BRICS வங்கி

ஈ) IMF

  • COVID தடுப்பூசிகளை வாங்குவதற்காக, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் (ADB) இந்தியா $2 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைப் பெற்றுள்ளது.
  • மணிலாவைச் சார்ந்த ADB $1.5 பில்லியனும் மற்றும் பெய்ஜிங்கைச் சார்ந்த AIIB $500 மில்லியனும் வழங்க பரிசீலித்து வருகின்றன. சுமார் 667 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசிகள், கடன்மூலம் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. இந்தியாவும் எந்த நாடும் பசுமை ஹைட்ரஜனை ஆராயவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழித்தடங்களை அமைக்கவும், இயற்கை எரிவாயு துறையில் திட்டங்களை அமைக்கவும் ஒப்புக்கொண்டன?

அ) அமெரிக்கா

ஆ) ஜெர்மனி

இ) இத்தாலி 

ஈ) ரஷ்யா

  • இந்தியாவும் இத்தாலியும் பசுமை ஹைட்ரஜனின் வளர்ச்சி, புதுப்பிக்கத்த -க்க எரிசக்தி வழித்தடங்கள் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் திட்டங்களை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன. ரோமில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டையொட்டி, பிரதமர் மோடி, இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியுடன் நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, அதுகுறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் இத்தாலி இடையே (2020-2024) மேம்படுத்தப்பட்ட கூட்டாண்மைக்கான செயல் திட்டம் கடந்த 2020’இல் கையெழுத்தானது.

3. ‘Don’t Choose Extinction’ என்பது சமீபத்தில் எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஒரு பரப்புரையாகும்?

அ) UNDP 

ஆ) UNEP

இ) FAO

ஈ) WWF

  • ஐநா வளர்ச்சித்திட்டமானது (UNDP), சமீபத்தில் ‘அழிவைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்’ என்ற தலைப்பில் ஒரு காணொலிப் பரப்புரையை தொடங்கியது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை எடுத்துரைக்க அனைவரையும் வலியுறுத்துதற்காக, ‘ஃபிரான்கி தி டைனோ’ என்ற டைனோசரை அதன் சின்னமாக அறிவித்தது. காணொலிப் பரப்புரையுடன், இந்த முயற்சிக்கு ஆதரவாக ‘Don’t Choose Extinction’ என்ற இணையதளத்தையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மேலும், ஃபிரான்கிக்காக டுவிட்டர் கணக்கு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

4. பண்டைய பேரரசுகளான தாதன் மற்றும் லிஹ்யானை தற்போது அகழாய்வு செய்துவருகிற நாடு எது?

அ) சௌதி அரேபியா 

ஆ) நேபாளம்

இ) வங்காளதேசம்

ஈ) இஸ்ரேல்

  • சௌதி அரேபியாவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டையகால பேரரசுகளான தாதன் மற்றும் லிஹ்யான் குறித்த அகழ்வாராய்ச்சிகளை ஐந்து இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பேரரசுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செழித்து வளர்ந்த முக்கியமான பிராந்திய ஆற்றல்களாக இருந்தன. இந்தத் திட்டம் சௌதி-பிரெஞ்சு கூட்டாண்மைத் திட்டமாகும்.

5. ‘பஞ்சாமிர்த கலவை’யுடன் தொடர்புடையது எது?

அ) பருவநிலை மாற்றம் 

ஆ) உட்கட்டமைப்பு மேம்பாடு

இ) துறைமுக கட்டுமானம்

ஈ) இந்தியா மற்றும் பூட்டான் இடையே இருதரப்பு உறவுகள்

  • ‘பஞ்சாமிர்த கலவை’ என்பது கிளாஸ்கோவில் நடைபெற்ற CoP26 மாநாட்டின்போது இந்தியப் பிரதமரால் முன்மொழியப்பட்ட 5 மடி உத்தி ஆகும். இந்த உத்தி, 2030ஆம் ஆண்டளவில் உலகம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுகிறது.
  • பஞ்சாமிர்த கலவையில் 2030’க்குள் 500 GW புதைபடிவமற்ற ஆற்றல் திறன், 2030’க்குள் 50% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன், 2030’க்குள் 1 பில்லியன் டன் கரியமில உமிழ்வைக் குறைத்தல், கார்பன் தீவிரத்தை 2030’இல் 45% ஆக குறைத்தல், 2030’இல் நிகர சுழியத்தை அடைதல் ஆகியவை உள்ளடங்கும்.

6. 3 முக்கியமான இயற்கை பாதுகாப்பு பணிகளை நிர்வகிப்பதற்கு SPV’ஐ முதன்முதலில் அமைத்த இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) ஒடிஸா

ஈ) குஜராத்

  • மூன்று முக்கியமான இயற்கை பாதுகாப்பு பணிகளை தொழில்ரீதியாக நிர்வகிப்பதற்காக, ‘தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்’ என்ற பெயரில் முதன்முறையாக சிறப்பு நோக்கம் கொண்ட நிறுவனத்தை (SPV) தமிழ்நாடு அமைத்துள்ளது.
  • இந்நிறுவனம் தமிழ்நாடு பருவநிலை மாற்றம், தமிழ்நாடு பசுமை மற்றும் தமிழ்நாடு ஈரநிலப்பணிகள் ஆகியவற்றை நிர்வகிக்கும். இதன் அங்கீகரி -க்கப்பட்ட மூலதனம் `5 கோடி ஆகும். மாநில சுற்றுச்சூழல் செயலாளர் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் MDஆக உள்ளார்.

7. சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கருட் சட்டி பாலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) உத்தரகாண்ட் 

இ) மத்திய பிரதேசம்

ஈ) உத்தர பிரதேசம்

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் `1 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மந்தாகினி ஆற்றின் கருட் சட்டி பாலம் உட்பட கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அவர் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதி மற்றும் சிலையை திறந்து வைத்தார்.

8. ‘பொது விவகாரங்கள்’ பிரிவின்கீழ், 2020ஆம் ஆண்டுக்கான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்றவர் யார்?

அ) ஷின்சோ அபே 

ஆ) கோத்தபய இராஜபக்ச

இ) ஷேக் ஹசீனா

ஈ) K P சர்மா ஒலி

  • பத்ம விருதுகள், 2021’இல் 119 நபர்களுக்கு வழங்கப்பட்டன. COVID-19 தொற்று காரணமாக விருது பெற்றவர்களைக் கௌரவிக்கும் விழாவை 2020’இல் நடத்த முடியவில்லை. இந்தப் பட்டியலில் 7 ‘பத்ம விபூஷன்’, 10 ‘பத்ம பூஷன்’ மற்றும் 102 ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவர்கள் உள்ளனர்.
  • இதில் 16 விருதுகள் மரணத்திற்குப்பின் வழங்கப்பட்டுள்ளன. இவ்விருது பெற்றவர்களின் பட்டியலில் 29 பெண்களும் 1 திருநங்கையும் அடங்குவ -ர். முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவ், ‘பொது விவகாரங்கள்’ பிரிவின்கீழ் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

9. PMJDY மற்றும் குறைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த மதிப்பீட்டை எந்த வங்கியின் ஆராய்ச்சித் துறை வெளியிட்டது?

அ) RBI

ஆ) SBI 

இ) PNB

ஈ) கனரா வங்கி

  • பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறையின்படி, அதிக பிரதமர் ஜன் தன் யோஜனா (PMJDY) கணக்கு இருப்புகளைக் கொண்ட மாநிலங்களில் குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. அத்தகைய மாநிலங்களில் மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்கள் போன்ற போதைப்பொருட்களின் நுகர்வு புள்ளிவிவர ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

10.“திசுவளர்ப்பு அடிப்படையிலான விதை உருளை விதிகள்”, எந்த இந்திய மாநிலத்தின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

அ) கேரளா

ஆ) அஸ்ஸாம்

இ) மத்திய பிரதேசம்

ஈ) பஞ்சாப் 

  • பஞ்சாப் அமைச்சரவை ‘பஞ்சாப் திசுவளர்ப்பு அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு விதிகள்-2021’க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்விதிகள் பஞ்சாப் மாநிலத்தை நிலையான உருளைக்கிழங்கு விதை மையமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன்மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி அதிகரிக்கு -ம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதிகளின் மூலம், திசு வளர்ப்பு அடிப்படையிலான சான்றிதழ் வசதியைப் பெற்ற நாட்டின் முதல் மாநிலம் ஆக பஞ்சாப் மாநிலம் இருக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிலநடுக்கத்தை துல்லியமாக அறிய சென்னை ஐஐடி.யில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

சென்னை ஐஐடியில் நிலநடுக்கங்களைத் துல்லியமாக கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனா்.

நிலநடுக்க சமிக்ஞைகளில் முதல் அதிா்வலைகளை துல்லியமாகக் கண்டறிந்து, மிகக் குறைந்த நேரத்தில் உயிா்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் எனவும் கண்டறிந்த வல்லுநா்கள் கூறியுள்ளனா்.

சென்னை ஐஐடியின் புதிய தொழில் நுட்பம், நிலநடுக்க அதிா்வலைகளின் துல்லியமான நேரத்தை மதிப்பிடுவது, ஒரு வலுவான ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதுடன், சுமாா் 30 விநாடிகள் முதல் 2 நிமிஷங்கள் வரை தற்காத்துக் கொள்வதற்குத் தயாா் செய்து கொள்ள நேரத்தையும் வழங்குகிறது.

பூமியின் மேற்பரப்பு வரை அலைகள் தாக்குவதற்கு முன் கிடைக்கும் இந்த நேரம் மிகவும் பயனளிக்கக்கூடியது. நிலநடுக்கத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதற்கான நேரம் குறைவானதாகத் தோன்றினாலும், அணு உலைகள், மெட்ரோ போன்ற போக்குவரத்து, உயா் கட்டடங்களில் உள்ள லிப்ட்கள் ஆகியவற்றை நிறுத்தவும் எண்ணற்ற உயிா்களைக் காப்பாற்றவும் இந்த காலம் போதுமானது.

சென்னை ஐஐடியின் கெமிக்கல் பொறியியல் துறை பேராசிரியா் அருண் கே தங்கிராலா வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மாணவி காஞ்சன் அகா்வால் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டாா். இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் புகழ்பெற்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழான ‘பிளாஸ் ஒன்’-இல் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி காஞ்சன் அகா்வால் கூறியது: ‘பி-அலை வருகை குறித்த தகவல், நிலநடுக்கத்தின் அளவு, ஆழம் மற்றும் மையப்புள்ளி, இடம் போன்ற பிற மூல அளவு உருக்களைத் தீா்மானிப்பதில் முக்கியமானது. எனவே, பி-அலை கண்டறிதல் சிக்கலுக்கு உறுதியான, துல்லியமான தீா்வாக அமையும். நிலநடுக்க விவரங்களைச் சரியாக மதிப்பிடுவதற்கும், நிலநடுக்கம் அல்லது பிற தூண்டப்பட்ட நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும் அவசியம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

நில அதிா்வு சமிக்ஞைகள்: முக்கியமாக கடலில் அலைகள், பூமியின் மேலோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், வளிமண்டல மாறுபாடுகள் மற்றும் மனிதச் செயல்பாடுகள் காரணமாக நிலம் தொடா்ந்து அதிா்வடைகிறது.நில அதிா்வு சமிக்ஞைகள் இயற்கையான (நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், சுனாமி போன்றவை) அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட (அதிக போக்குவரத்து, அணு வெடிப்புகள், சுரங்க நடவடிக்கைகள் போன்றவை) மூலங்களிலிருந்து உருவாக்கப்படலாம்.

அனைத்து நில அதிா்வு நிகழ்வுகளும் அவற்றின் அளவிற்கு விகிதாசாரமான ஆற்றலை வெளியிடுகின்றன. வெளியிடப்பட்ட இந்த ஆற்றல், ஒரு அலையாக அனைத்து திசைகளிலும் நகா்ந்து, ஒரு நில அதிா்வு அளவி மூலம் நில அதிா்வு சமிக்ஞையாகப் பதிவு செய்யப்படுகிறது. சீஸ்மோகிராம்கள் என்பது நில அதிா்வு இயக்கத்தினை பதிவு செய்யும் வரைபடங்களாகும்.

முக்கியப் பயன்கள்: இந்த நில அதிா்வு வரைபடங்களின் பகுப்பாய்வு, பூமியின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும், நிலநடுக்கங்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை அமைப்பதற்கும், மூல இடங்களைத் தீா்மானிப்பதற்கும் , பிற நில அதிா்வு நிகழ்வுகளின் மூலத்தைக் கண்டறிவதற்கும் இன்றியமையாதது. நிலநடுக்கத்தின் சேதப் பகுதியைக் கண்டறிவது அல்லது கணிப்பது உயிா்களைப் பாதுகாப்பதிலும் சொத்து இழப்பைத் தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

2. கோவா 52-ஆவது சா்வதேச திரைப்பட விழா: விருதுப் போட்டியில் 15 திரைப்படங்கள்

கோவாவில் இந்தமாத இறுதியில் நடைபெற உள்ள 52-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் உள்ளிட்ட விருதுகளுக்கு இரு மராத்தி படங்கள் உள்பட 15 சா்வதேச படங்கள் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: தோ்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்களில் பின்லாந்து நாட்டின் எனி டே நவ் , அமெரிக்கா – நியூமெக்சிகோ படமான லேண்ட் ஆப் ட்ரிம்ஸ் , பராகுவேயின் சாா்லட், ரோமானியாவின் இன்ட்ரகோல்ட், போலந்து நாட்டின் லீடா், ரஷியாவின் மாஸ்கோ டஸ் நாட் ஹேபன் மற்றும் தி டாா்ம், வங்கதேசத்தின் நோ கிரவுண்ட் பினத் த ஃபீட் , ஜப்பானின் ரிங் வாண்ட ரிங், செக் குடியரசின் சேவிங் ஒன் ஹூ வாஸ் டெட், பிரேசிலின் தி பா்ஸ்ட் ஃபாலன் போன்ற வெளிநாட்டு படங்களும், இந்திய அளவில் கோதாவரி (மராத்தி), மே வசந்த்ராவ் (மராத்தி) ; செம்கோா் (டிமாசா-திபெத் மொழி) போன்ற படங்களும் போட்டிக்குத் தோ்வாகியுள்ளன.

தங்க மயில் விருது ரூ.40 லட்சம்: தோ்வு செய்யப்படும் சிறந்த திரைப்படத்துக்கான தங்க மயில் விருது ரூ.40,00,000 ரோக்கப் பரிசு, சான்றிதழ் அடங்கும். சிறந்த இயக்குநருக்கான படத்திற்கு வெள்ளி மயில் விருது ரூ.15,00,000 ரொக்கம், சான்றிதழ் அடங்கும். சிறந்த நடிகா், நடிகைகளுக்கான வெள்ளி மயில் விருது, தலா ரூ.10,00,000 லட்சம் ரொக்கம், சான்றிதழ் அடங்கும்.

சிறப்பு நடுவா் விருது: நடுவா் தோ்வு செய்யும் படத்துக்கு, அந்தப் படத்தின் இயக்நருக்கு வெள்ளி மயில் விருதாக சான்றிதழ், ரூ.15,00,000 ரொக்கம் வழங்கப்படுகிறது. 52-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா வரும் நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உள்நாடு மற்றும் சா்வதேச பாா்வையாளா்களுக்கு 45 திரைபடங்கள் திரையிடப்பட உள்ளன.

3. கிராம சுற்றுலா: மத்திய பிரதேசமாநிலத்துக்கு சா்வதேச விருது

மத்திய பிரதேச சுற்றுலா வாரியத்தின் கிராப்புற சுற்றுலாத் திட்டத்துக்கு ‘வோ்ல்ட் டிராவல் மாா்ட்’ அமைப்பின் சிறந்த சுற்றுலாத் திட்டத்துக்கான விருது கிடைத்துள்ளது.

கரோனாவுக்கு பின் சுற்றுலா மேம்படுத்தப்பட்ட இடங்களைக் கணக்கில்கொண்டு இந்த விருது அளிக்கப்பட்டது. இதே கிராம சுற்றுலா பிரிவில் பிராந்திய அளவிலான ஸ்வா்ண புரஸ்காா் விருதும் மத்திய பிரதேச சுற்றுலாத் துறைக்கு கிடைத்துள்ளது. இது தவிர பெண்களுக்கு பாதுகாப்பான சுற்றுலா தலங்கள் பிரிவிலும் மத்திய பிரதேசத்துக்கு விருது கிடைத்துள்ளது.

இது தொடா்பாக மத்திய பிரதேச மாநில சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளா் சேகா் சுக்லா கூறுகையில், ‘சா்வதேச அளவில் சுற்றுலாத் துறையில் மத்திய பிரதேசத்துக்கு விருதுகள் கிடைத்துள்ளது மாநிலத்துக்கு மட்டுமல்ல நமது தேசத்துக்கே பெருமை சோ்க்கும் விஷயமாகும். மத்திய பிரதேசத்தை சுற்றுலாத் துறையில் சிறப்பிடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் மேற்கொண்ட முயற்சியும் இதற்கு முக்கியக் காரணம். லண்டனில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

கிராம சுற்றுலாத் திட்டத்தின்கீழ் மத்திய பிரதேசத்தில் 100 கிராமங்கள் உள்ளூா் மக்களின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. கிராமப்புற பாரம்பரிய உணவு, நாட்டுப் புற இசை, கிராமப்புற விளையாட்டு, உள்ளூா் கலைகள், கைவினைப் பொருள்கள், இளைஞா்களின் திறன் மேம்பாடு ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் இந்த விருதுகள் சாத்தியமாகியுள்ளன’ என்றாா்.

4. ரிசர்வ் வங்கியின் இரு திட்டங்கள் இன்று துவக்குகிறார் பிரதமர் மோடி

ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சார்ந்த இரு திட்டங்களை, பிரதமர் மோடி இன்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கி வைக்கிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘ஆர்.பி.ஐ., ரீடெய்ல் டைரக்ட் ஸ்கீம்’ மற்றும் வங்கி வாடிக்கையாளர்களின் குறைகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும், ‘மத்தியஸ்த தீர்ப்பாயம்’ என்ற இரு திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

ஆர்.பி.ஐ., ரீடெய்ல் டைரக்ட் திட்டத்தில், சில்லரை முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் வாயிலாக, மத்திய – மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களை தரகு கட்டணமுன்றி வாங்கலாம்.

இதனால், சிறு முதலீட்டாளர்களும் சுலபமாக அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும்.மத்திய அரசு, ‘ஒரே தேசம் – ஒரே மத்தியஸ்த தீர்ப்பாயம்’ என்ற கொள்கைப்படி ஒரே வலைதளம், ஒரே மின்னஞ்சல், ஒரே முகவரியில் வங்கி வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி மத்தியஸ்த தீர்ப்பாயம் என்ற மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் குறை தீர்க்கும் திட்டத்தையும் மோடி துவக்கி வைக்கிறார். இதனால், ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள அனைத்து வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும், தங்கள் குறைகளை ஒருங்கிணைந்த ஒரே வலைதளத்தில் தெரிவித்து, தீர்வு காணும் வசதி கிடைக்கும்.

மேலும், இரு மொழிகளில் புகார் தெரிவிப்பதற்கான உதவியும், குறை தீர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் பெற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் மோடி அறிமுகப்படுத்த உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5. மல்யுத்தம்: நிஷா சாம்பியன்

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ பிரிவில், ரயில்வே வீராங்கனை நிஷா தாஹியா சாம்பியன் ஆனாா்.

முன்னதாக, ஹரியாணா மாநில மல்யுத்த பயிற்சி மையத்தில் நிஷா தாஹியா சுட்டுக் கொல்லப்பட்டதாக புதன்கிழமை தகவல் வெளியாகி அனைவருக்கும் அதிா்ச்சி ஏற்படுத்தியது. எனினும், சிறிது நேரத்திலேயே அது தாம் இல்லை என்று கூறி நிஷா மறுப்பு விடியோ வெளியிட்டாா். பின்னா், கொல்லப்பட்ட நிஷா புதிதாக மல்யுத்தத்தில் இணைந்த வேறொரு வீராங்கனை எனத் தெரியவந்தது.

இத்தகைய நிகழ்வு புதன்கிழமை நிகழ்ந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் நிஷா 30 விநாடிகளில் தனது எதிராளியான பஞ்சாபைச் சோ்ந்த ஜஸ்பிரீத் கௌரை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

6. செயிலிங்: நேத்ரா சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற செயிலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் லேசா் ரேடியல் பிரிவில் இந்தியாவின் நேத்ரா குமணன் தங்கப் பதக்கம் வென்றாா்.

ஐரோப்பிய பிராந்திய ஓபன் போட்டியாக நடைபெற்ற இந்த கிரான் கேனாரியா சாம்பியன்ஷிப் போட்டியில் நேத்ரா, ஐஎல்சிஏ 6 பிரிவில் நடைபெற்ற 6 பந்தயங்களில் 3-இல் முதலாவதாக வந்து 10 நெட் புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். அதே பிரிவில் ஸ்பெயினைச் சோ்ந்த பெனிடோ லாஞ்சோ, மாா்டினா ரெய்னோ காச்சோ முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனா். இந்தப் போட்டியில் 3 நாடுகளைச் சோ்ந்த 20 போட்டியாளா்கள் பங்கேற்றனா். அதில் நேத்ரா உள்பட 3 போ் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவா்களாவா்.

விஷ்ணுவுக்கு வெண்கலம்: இதனிடையே, ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் நடைபெற்ற ஐஎல்சிஏ உலக செயிலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு 25-ஆவது இடம் பிடித்தாா். மற்றொரு இந்தியரான மோகித் 106-ஆவதாக வந்தாா். இந்தப் போட்டியில் மொத்தம் 135 போ் பங்கேற்றனா். போட்டியாளா்களிலேயே மிக இளம் வயது வீரா், உலக சாம்பியன்ஷிப்பில் 25-ஆவது இடம் பிடித்த முதல் ஆசிய வீரா் என்ற பெருமைகளை விஷ்ணு பெற்றாா்.

7. தமிழகத்தில் இயல்பை விட 54 சதவீதம் மழை அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் பருவமழை தொடங்கிய அக்டோபர் மாதம் முதல் நேற்று வரை தமிழகத்தில் 26 செ.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் தொடர் மழை காரணமாக தற்போது 40 செ.மீ. வரை மழை பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 54 சதவீதம் அதிகம். இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 122 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

அதற்கடுத்தபடியாக திருவாரூர் மாவட்டத்தில் 110 சதவீதமும், கோவையில் 103 சதவீதமும், அரியலூரில் 95 சதவீதமும் அதிகமாக மழை பெய்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் இந்த பருவமழை காலத்தில் 77 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால், கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. India has applied for a USD 2 billion loan to purchase COVID–19 vaccines, from which institutions?

A) World Bank

B) ADB–AIIB 

C) BRICS Bank

D) IMF

  • India has applied a USD 2 billion loan to purchase COVID–19 vaccines, from Asian Infrastructure Investment Bank (AIIB) along with the Asian Development (ADB). Manila–based ADB is expected to finance USD 1.5 billion and Beijing–based AIIB is considering to provide USD 500 million. About 667 million doses of COVID–19 vaccines were expected to be procured through the loan.

2. India and which country agreed to explore green hydrogen, set up renewable energy corridors, and projects in natural gas sector?

A) USA

B) Germany

C) Italy 

D) Russia

  • India and Italy have agreed to explore development of green hydrogen, set up renewable energy corridors, and projects in the natural gas sector. A joint statement was issued after Prime Minister Narendra Modi held the first in–person meeting with his Italian counterpart Mario Draghi on the sidelines of the G20 Summit in Rome. The Action Plan for an enhanced Partnership between India and Italy (2020–2024) was signed in 2020.

3. ‘Don’t Choose Extinction’ is a campaign recently launched by which institution?

A) UNDP 

B) UNEP

C) FAO

D) WWF

  • United Nations Development Programme (UNDP), recently launched its video campaign titled ‘Don’t Choose Extinction’. It announced ‘Frankie the Dino’, a dinosaur as their mascot to urge everyone on highlighting global actions against climate change. Along with the campaign video, the agency also launched a website ‘Don’t Choose Extinction’ to support the initiative and created a Twitter account for Frankie.

4. Which country is currently excavating the ancient kingdoms of Dadan and Lihyan?

A) Saudi Arabia 

B) Nepal

C) Bangladesh

D) Israel

  • Archaeologists in Saudi Arabia are carrying out excavations of the ancient kingdoms of Dadan and Lihyan, across five sites. The kingdoms were important regional powers that flourished 2,000 years ago. The project is a Saudi–French partnership.

5. The “Panchamrita concoction” is associated with?

A) Climate Change 

B) Infrastructure Development

C) Port Construction

D) Bilateral relations between India and Bhutan

  • Panchamrita concoction is a five–fold strategy proposed by the Prime Minister of India at the 26th Conference of Parties (CoP26) held at Glasgow. The strategy would help the world achieve the Sustainable Development Goals by 2030.
  • The Panchamrita concoction includes 500 GW non–fossil energy capacity by 2030, 50% renewable energy capacity by 2030, reduce carbon emission by one billion tonnes by 2030, reduce the carbon intensity by 45% by 2030 and achieve net zero by 2030.

6. Which Indian state has set up first ever SPV to manage three critical natural conservation missions?

A) Tamil Nadu 

B) Kerala

C) Odisha

D) Gujarat

  • Tamil Nadu has set up first ever Special Purpose Vehicle (SPV) named Tamil Nadu Green Climate Company, to professionally manage three critical natural conservation missions.
  • The Company will manage the Tamil Nadu Climate Change, Tamil Nadu Green and Tamil Nadu Wetlands missions. The SPV’s authorised capital will be ₹5 crore and the State Environment Secretary will be the company’s chairperson and MD.

7. Garud Chatti bridge, which was recently inaugurated, is located in which Indian state?

A) Tamil Nadu

B) Uttarakhand 

C) Madhya Pradesh

D) Uttar Pradesh

  • The Prime Minister of India Narendra Modi recently laid foundation stones for multiple projects. He dedicated to the Nation various development projects in Kedarnath including Garud Chatti Bridge on river Mandakini. He inaugurated Shri Adi Shankaracharya Samadhi and unveiled the statue of Shri Adi Shankaracharya.

8. Who won the ‘Padma Vibhushan 2020’ award under the ‘Public Affairs’ category?

A) Shinzo Abe 

B) Gotabaya Rajapaksa

C) Sheikh Hasina

D) K P Sharma Oli

  • The Padma awards, were conferred on 119 recipients in 2021. As the ceremony to honour the awardees could not be held in 2020 due to the Covid–19 pandemic. The list comprises 7 Padma Vibhushan, 10 Padma Bhushan and 102 Padma Shri awardees. Sixteen awards have been conferred posthumously. The list of awardees also includes 29 women and one trans person. Former Japanese Prime Minister Shinzo Abew was selected under the Public Affairs.

9. Which bank’s research department released an assessment on PMJDY and reduced crimes?

A) RBI

B) SBI 

C) PNB

D) Canara Bank

  • As per the State Bank of India’s economic research department, States with higher Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) account balances have seen a noticeable decline in crime.
  • The department also observed that there is both statistically and economically significant drop in consumption of intoxicants such as alcohol and tobacco products in such states.

10. “Tissue Culture Based Seed Potato Rules” has been approved by the cabinet of which Indian state?

A) Kerala

B) Assam

C) Madhya Pradesh

D) Punjab 

  • The Cabinet of Punjab has given approval to the “Punjab Tissue Culture Based Seed Potato Rules–2021”, which aims to develop Punjab as a standard potato seed center. This is expected to boost potato cultivation in the state. With these rules, Punjab will be the very first state in the country to have the facility of tissue culture–based certification.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!