TnpscTnpsc Current Affairs

12th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

12th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 12th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்றால் என்ன?

அ) இத்தாலியில் தயாரிக்கப்பட்ட தாள்

ஆ) சுற்றுச்சூழலுக்குகந்த தாள்

இ) வெளிப்படுத்தப்படாத சொத்து மற்றும் வரி தவிர்ப்பை வெளிப்படுத்தும் ஆவணங்கள் 

ஈ) பிட்காயின் தொடர்பான ஆவணங்கள்

 • ‘பண்டோரா ஆவணங்கள்’ என்பது உலகெங்கும் உள்ள பிரபலங்களால் மறைக்கப்பட்ட செல்வம், வரி ஏய்ப்பு & பணமோசடி பற்றிய ஆவணங்கள் ஆகும். இதுதொடர்பான தகவல்கள், பன்னாட்டு புலனாய்வு இதழியலாள -ர்கள் கூட்டமைப்பால் பெறப்பட்டது. மேலும், 140’க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் பணமோசடி செய்பவர்களின் வசம் உள்ளன.

2. தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் MD யார்?

அ) PM நாயர் 

ஆ) அஜித் தோவல்

இ) உர்ஜித் படேல்

ஈ) UK சின்ஹா

 • பாரத ஸ்டேட் வங்கியின் சொத்து நிபுணரான PM நாயர், தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிறுவனம் சமீபத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்க ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. “பேட் பேங்க்” / NARCL’ஐ அமைப்பதற்கான முடிவு 2021-22 மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

3. “சுவாமித்வா” திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) விவசாய அமைச்சகம்

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 

 • “SVAMITVA – Survey of Villages Abadi and Mapping with Improvised Technology in Village Areas” என்பது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ், ட்ரோன்களைப் பயன்படுத்தி நிலப் பரப்புகளை வரைபடமாக்குவதன்மூலம் கிராமத்தினர் வசிக்கும் பகுதிகளில் சொத்தின் தெளிவான உரிமை நிலை நிறுத்தப்படுகிறது.
 • சமீபத்தில், இந்தத் திட்டத்தின்கீழ், மத்திய பிரதேச மாநிலத்தின் 1,71,000 பயனாளிகளுக்கு பிரதமர் மின்-சொத்து அட்டைகளை விநியோகித்தார்.

4. 2021-22ஆம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “மித்ரா” திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ) பாதுகாப்பு

ஆ) ஜவுளி 

இ) ஆட்டோமொபைல்

ஈ) மருந்து

 • PM Mega Integrated Textile Region and Apparel (MITRA) என்பது 2021-22 மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் ஜவுளித்துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். `4,445 கோடி மதிப்பீட்டில் 7 மெகா ஜவுளிப்பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பூங்காக்கள் 21 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற இந்திய உணவான ‘மிகிதானா’ சார்ந்த மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம் 

ஆ) இராஜஸ்தான்

இ) ஹரியானா

ஈ) பஞ்சாப்

 • ‘மிகிதானா’ என்பது மே வங்க மாநிலத்தின் ஒரு இனிப்பு வகையாகும். அண்மையில் இதற்கு GI (புவிசார் குறியீடு) கிடைக்கப்பெற்றது. பர்தமானில் செய்யப்பட்ட மிகிதானாவின் முதல் சரக்கு பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை அடுத்து இது சமீப செய்திகளில் இடம்பெற்றது.

6. வடகிழக்கு மாநிலங்களின் சமையலெண்ணெய்கள்-எண்ணெய் பனை தேசிய இயக்கம் குறித்த வணிக உச்சிமாநாடு நடந்த இடம் எது?

அ) கௌகாத்தி 

ஆ) அகர்தலா

இ) இடாநகர்

ஈ) கேங்டாக்

 • வடகிழக்கு மாநிலங்களின் சமையலெண்ணெய் – எண்ணெய் பனை தேசிய இயக்கம் குறித்த வணிக உச்சிமாநாடு சமீபத்தில் கௌகாத்தியில் நடைபெற்றது. இதற்கு மத்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார்.
 • சமையலெண்ணெய் – எண்ணெய் பனை மீதான தேசிய இயக்கமான -து 2025-26ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 6.5 இலட்சம் ஹெக்டேர்கள் கூடுதல் பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்படுவதற்கான ஒரு மத்திய நிதியுதவி திட்டமாகும்.

7. இயற்கை மற்றும் மக்களுக்கான உயர்ந்த இலட்சிய கூட்டணி, அதிகாரப்பூர்வமாக எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

அ) 1984

ஆ) 1992

இ) 2000

ஈ) 2021 

 • இயற்கை மற்றும் மக்களுக்கான உயர்ந்த இலட்சிய கூட்டணி என்பது அரசாங்கங்களுக்கு இடையேயான ஒரு குழுவாகும். இக்குழு பிரான்ஸ் மற்றும் கோஸ்டாரிகாவுடன் இணைந்து செயல்படுகிறது. 2030’க்குள் புவியின் 30% நிலத்தையும் அதன் 30% பெருங்கடல்களையும் பாதுகாக்க ஓர் உறுதியை ஏற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
 • இக்கூட்டணி, அதிகாரப்பூர்வமாக, கடந்த 2021’ஆம் ஆண்டில் நடந்த ‘ஒன் பிளானட்’ உச்சிமாநாட்டில் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 70 உறுப்பினர்கள் இதிலுள்ளனர். புது தில்லியில் பிரெஞ்சு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே நடந்த விழாவில், இந்தியா, அதிகாரப்பூர்வமாக இக்கூட்டணியில் இணைந்தது.

8. ‘இந்திய வான்படை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர்.2

ஆ) அக்டோபர்.4

இ) அக்டோபர்.5

ஈ) அக்டோபர்.8 

 • ஆண்டுதோறும் அக்டோபர் 8 அன்று, இந்திய வான்படை நாளை நாடு கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, இந்திய வான்படை நாளின் 89ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1932ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய வான்படை (IAF) நிறுவப்பட்டது. இதன் முதல் செயற்பாட்டுப்படை 1933 ஏப்ரலில் நிறுவப்பட்டது. இந்த நாள், இந்திய விமானப்படைபற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, “பாரதிய வாயு சேனா” என்றும் அழைக்கப்படுகிறது.

9. ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாத பணவியல் கொள்கைக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ விகிதம் என்ன?

அ) 4.5 %

ஆ) 4.25%

இ) 4.00% 

ஈ) 3.75%

 • இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக்குழுவானது ரெப்போ விகிதத்தை தொடர்ச்சியாக 8ஆவது முறையாக 4 சதவீதமாக மாற்றாமல் வைத்துள்ளது. தலைகீழ் ரெப்போ விகிதம் 3.5 சதவீதமாக அப்படியே உள்ளது. 2021-22 நிதியாண்டின் GDP வளர்ச்சி முன்கணிப்பை 9.5 சதவீதமாக இருக்கும் என RBI கூறியுள்ளது.

10. நடப்பாண்டு (2021) உலக அஞ்சல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Innovate to recover 

ஆ) Post to Connect

இ) Communication during Covid

ஈ) Post across the World

 • கடந்த 1874ஆம் ஆண்டு உலக அஞ்சல் தொழிற்சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு நாளை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதி அன்று உலக அஞ்சல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா, 1876 முதல் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளது. “Innovate to recover” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாகும். மக்களின் வாழ்வில் அஞ்சல் துறையின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக அஞ்சல் நாளின் நோக்கமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பொருளாதாரம்: அமெரிக்கா்கள் மூவருக்கு நோபல் பரிசு

நிகழாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சோ்ந்த பொருளாதார வல்லுநா்கள் டேவிட் காா்ட், ஜோஷுவாடி ஆங்கிரிஸ்ட், குயிடோ டபிள்யு இம்பென்ஸ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகையின் ஒரு பாதி டேவிட் காா்டிக்கும், மற்றொரு பாதி மற்ற இருவருக்கும் பகிா்ந்தளிக்கப்படும்.

குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம், கல்வி ஆகியவற்றின் தொழிலாளா் சந்தை விளைவுகள் தொடா்பாக முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டதற்காகவும், அறிவியல்பூா்வமான ஆய்வுகளை மேற்கொள்ள இயலாமல் போகும் சூழலில், இதுபோன்ற ஆய்வுகளிலிருந்து முடிவுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காகவும் அவா்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நோபல் தோ்வுக் குழுவினா் தெரிவித்ததாவது: நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மூவரும் பொருளாதார அறிவியலில் முற்றிலும் மறுவடிவமைக்கப்பட்ட அனுபவரீதியான பணிகளை மேற்கொண்டுள்ளனா். சமூகத்தின் மையக் கேள்விகள் குறித்த டேவிட் காா்டின் ஆய்வும், ஆங்கிரிஸ்ட், இம்பென்ஸின் காரணிகள் அடிப்படையிலான பரிசோதனைகளும் அறிவின் வளமான ஆதாரம் எனக் காண்பிக்கின்றன. சமூகத்துக்கு சிறந்த பலனைத் தரக்கூடிய முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திறனையும் மேம்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் நியூ ஜொ்சி, கிழக்கு பென்சில்வேனியா ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயா்த்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிவதற்காக டேவிட் காா்ட் ஆய்வுப் பணியில் ஈடுபட்டாா். அவரும், அவருடன் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட மறைந்த ஆலன் குரூகெரும் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பானது வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கண்டறிந்தனா். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது வேலைவாய்ப்பைக் குறைக்கும் என்ற வழக்கமான கண்ணோட்டத்தை அது மாற்றியமைத்தது. மேலும், வெளிநாடுகளிலிருந்து குடியேறுபவா்களால் பூா்விக தொழிலாளா்களின் ஊதியம் குறையும் என்ற கருத்தையும் டேவிட் காா்டின் ஆய்வு மாற்றியமைத்தது. புதிதாகக் குடியேறுபவா்கள் மூலம் பூா்விக தொழிலாளா்களின் வருவாய் உயரக்கூடும் என அவா் கண்டறிந்தாா்.

அறிவியல் முறைகளின்படி ஆய்வு மேற்கொள்ள இயலாத நிலையிலும்கூட காரணம் மற்றும் விளைவு குறித்து பொருளாதார வல்லுநா்கள் உறுதியான முடிவெடுக்க உதவும் வகையிலான வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காக ஆங்கிரிஸ்ட், இம்பென்ஸுக்கு நோபல் பரிசுத் தொகையின் ஒரு பாதி பகிா்ந்தளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனா்.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் வழங்கும் முறை வேதியியலாளா் ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி தொடங்கப்பட்டது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் அவரது நினைவாக ஸ்வீடன் மத்திய வங்கியால் 1968-இல் தொடங்கப்பட்டது.

டேவிட் காா்ட் (65): கனடாவில் பிறந்த டேவிட் காா்ட், கலிஃபோா்னியா (பொ்க்லி) பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறாா். தேசிய பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவின் தொழிலாளா் திட்ட இயக்குநராகவும் உள்ளாா்.

ஜோஷுவாடி ஆங்கிரிஸ்ட் (61): இஸ்ரேல் அமெரிக்கரான இவா், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) பொருளாதார பேராசிரியராகப் பணிபுரிகிறாா்.

குயிடோ டபிள்யு இம்பென்ஸ் (58): நெதா்லாந்தில் பிறந்த குயிடோ டபிள்யு இம்பென்ஸ், ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணிபுரிகிறாா்.

2. தமிழகத்தில் காசநோய் குணப்படுத்தும் விகிதம் 86 சதவீதமாக உயா்வு

தமிழகத்தில் காசநோயாளிகளை குணப்படுத்தும் விகிதம் 86 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய காசநோய் மையத்தின் இணை மேற்பாா்வை குழுவுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளா் ரஞ்சனி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினா் கடந்த 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தென் சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் காசநோய் ஒழிப்பு திட்ட செயல்பாடுகள் தொடா்பான ஆய்வுகளை மேற்கொண்டனா். அதுதொடா்பான ஆய்வு அறிக்கையை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை சந்தித்து அவா்கள் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

இந்தியாவில் காசநோய் அச்சுறுத்தலை முற்றிலும் வேரறுக்கும் நோக்கில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டமானது 2020-ஆம் ஆண்டு முதல் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு, நோய் கண்டறிதல் – சிகிச்சை – மருத்துவக் கட்டமைப்பு – நோய்த் தடுப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக திருவள்ளூா் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. அங்கு காசநோய் தடுப்புத் திட்டங்கள் சிறப்புற மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநில அளவில் எடுத்துக் கொண்டால் புதிதாகக் கண்டறியப்பட்ட காசநோயாளிகளை குணப்படுத்தும் விகிதம் 86 சதவீதத்தை எட்டியுள்ளது. கூட்டு மருந்து எதிா்ப்புக் காசநோய் திட்ட மேலாண்மையின் கீழ், உரிய நோயாளிகளை கண்டறிந்து தரமான சிகிச்சை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஹெச்ஐவி நோயாளிகளுக்கும் காசநோய் பரிசோதனையும், அனைத்து காசநோயாளிகளுக்கும் ஹெச்ஐவி பரிசோதனையும் தமிழகத்தில் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 39,222 காச நோயாளிகளுக்கு தேவைப்படும் காசநோய் மருந்துகள் காசநோய் களப்பணியாளா்கள் மூலம் அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவா்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவா்களுக்கு நடமாடும் ஊடுகதிா் கருவிகளை அவா்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிா் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.

அதுமட்டுமல்லாது, மருந்துகளை உரிய வகையில் உட்கொள்வது, பக்கவிளைவுகள், காசநோயின் தன்மை போன்றவைகள் குறித்த ஆலோசனைகள் தொலைபேசி வாயிலாக வழங்கப்படுகின்றன. இணையதளம் மூலமாக அனைத்து மருந்தகங்களிலும் காசநோய் மருந்து விநியோகம் குறித்த தகவல் பெறுவதன் மூலம் தனியாா் அமைப்புகளிலும் காசநோய் சிகிச்சைகளை தொடா்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் மாதம் முதல் காசநோய் கண்டறியும் முகாம்கள் மூலம் 42,797 பரிசோதனைகள் செய்யப்பட்டு 465 காசநோய் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. கிர்கிஸ்தான் மேம்பாட்டுக்கு ரூ.1507 கோடி இந்தியா கடனுதவி

கிர்கிஸ்தான் நாட்டின் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.1507 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளுடனான உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்கு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் அமைச்சர் ஜெய்சங்கர் கிர்கிஸ்தான் சென்றார்.

இதனை தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ருஸ்லான் கசாக் பேவை நேற்று அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்திய மாணவர்கள் பயணத்திற்கான பாரபட்சமற்ற விசா நடைமுறை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளுக்குமான ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கிர்கிஸ்தான் நாட்டின் மேம்பாட்டு திட்ட பணிகளுக்காக இந்தியா ரூ.1507 கோடி கடன் உதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

4. இன்று ஜி20 தலைவா்கள் மாநாடு: பிரதமா் மோடி பங்கேற்பு

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக விவாதிப்பதற்காக ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை (அக்.12) நடைபெறுகிறது. இதில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்க இருக்கிறாா்.

இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க பரிசீலிப்பது, சா்வதேச பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடா்பாக இந்த ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.

இப்போதைய ஜி20 மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் இத்தாலியின் அழைப்பை ஏற்று பிரதமா் மோடியும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறாா். சா்வதேச அளவில் முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் ஜி20 கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் தொடா்பாக விவாதித்த ஜி20 வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ‘போக்ஸோவில் பதிவான 99% வழக்குகள் சிறுமிகளுக்கு எதிரானவை

கடந்த ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான 99 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் சிறுமிகளுக்கு எதிரானவையாக உள்ளன.

இதுதொடா்பாக மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, ‘சிறாா்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டமான போக்ஸோவின் கீழ் கடந்த ஆண்டு மொத்தம் 28,327 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 28,058 வழக்குகள் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பானவை. இதில் 14,092 வழக்குகள் 16 முதல் 18 வயதுக்குள்ள சிறுமிகள் தொடா்புடையவை. 10,949 வழக்குகள் 12 முதல் 16 வயதுக்குள்ளானவா்கள் தொடா்பானவை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்து ‘கிரை’ எனும் குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் திட்ட ஆய்வாளா் பிரீத்தி மஹாரா, சா்வதேச பெண் குழந்தைகள் தினமான திங்களன்று கூறியதாவது:

சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு சிறுமிகள்தான் தொடா்ந்து இரையாகி வருவது இந்த புள்ளி விவரங்கள் தெளிவு படுத்துகின்றன.

சிறுமிகளுக்கு பாதுகாப்பு மட்டுமன்றி கல்வி, சமூகப் பாதுகாப்பு, வறுமை போன்றவையும் அவா்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. கரோனா கால கட்டத்தில் இந்த அம்சங்கள் அவா்களுக்கு எதிராக இருந்தன. இதனால் அவா்களின் கல்வி தடைபட்டு, குழந்தை திருமணத்துக்கு ஆளாகும் நிலை அதிகரித்தது. வன்முறைக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகும் நிலையும் அதிகமாகியது.

பெண் குழந்தைகளின் கல்வியையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த பல்வேறு வளா்ச்சி நடவடிக்கைகள் கரோனா பெருந்தொற்றால் சரிந்துவிட்டன. கல்வி பயில்வதில் இருந்து பெண் குழந்தைகள் விலகுவதும், அவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும் அதிகரித்துவிட்டது. பதின்ம வயதில் உள்ள சிறுமிகள் மனிதாபிமானமற்ற நெருக்கடியில் பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்கின்றனா். ஆகையால், அவா்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் நீண்ட கால திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்’ என்றாா்.

6. சேதி தெரியுமா?

செப்.30 – அக்.3: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையே முதன் முறையாக பிங்க் பந்து பகலிரவு டெஸ்ட் போட்டி கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றது.

அக்.1: 2012 தேர்தலில் சட்டவிரோதமாக நிதி அளித்த புகாரில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கியது.

அக்.2: காதித் துணியால் நெய்யப்பட்ட உலகின் மிகப் பெரிய இந்திய தேசியக் கொடி லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் பறக்கவிடப்பட்டது.

அக்.4: 2021-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் பட்டாபுடியான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அக்.5: கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 இனி ‘தனிப்பெருங் கருணை’ நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அக்.5: இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானின் சியுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசல்மேன் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அக். 6: வேதியியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் பிரிட்டனின் டேவிட் டபுள்யு.சி மேக்மில்லன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அக்.7: இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து பத்தாம் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாமிடத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உள்ளார்.

அக்.8: ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. டாடா நிறுவனம் தொடங்கிய ஏர் இந்தியாவை 1953-ல் மத்திய அரசு நாட்டுடமையாக்கியது.

1. What are ‘Pandora Papers’ which is seen in the news recently?

A) Paper manufactured in Italy

B) Eco friendly paper

C) Documents revealing undisclosed wealth and tax avoidance 

D) Documents related to Bitcoin

 • The Pandora Papers are documents on hidden wealth, tax avoidance and money laundering by famous personalities across the globe. The data in this regard has been obtained by the International Consortium of Investigative Journalists and more than 140 media organisations are working on the people who are involved in money laundering.

2. Who is the MD of National Asset Reconstruction Company Ltd?

A) PM Nair 

B) Ajit Doval

C) Urjit Patel

D) UK Sinha

 • PM Nair – a stressed assets expert from State Bank of India is the MD of National Asset Reconstruction Company Ltd, which has recently received the approval of the Reserve Bank of India to commence its operations. The decision to constitute the “Bad Bank” / NARCL to clean the books of PSU was declared in the Union Budget 2021–22.

3. “SVAMITVA” scheme is implemented by which Union Ministry?

A) Ministry of Agriculture

B) Ministry of Rural Development

C) Ministry of Housing and Urban Affairs

D) Ministry of Panchayat Raj 

 • The “SVAMITVA” stands for “Survey of Villages Abadi and Mapping with Improvised Technology in Village Areas” is a Central Sector Scheme of the Ministry of Panchayati Raj. Under the scheme, clear ownership of property in rural inhabited areas is established by mapping land parcels using Drones. Recently, the Prime Minister distributed e–property cards to over 1,71,000 beneficiaries of Madhya Pradesh under the scheme.

4. “MITRA” scheme announced in Budget 2021–22 is associated with which sector?

A) Defence

B) Textile 

C) Automobile

D) Medicine

 • The PM Mega Integrated Textile Region and Apparel (MITRA) was announced in the Union Budget 2021–22 for growth of the textile sector and place India as a global leader in Textiles.
 • The Government has approved setting up of 7 Mega Textile parks at a proposed cost of Rs.4445 crore. These parks are expected to provide job opportunities to 21 lakh people.

5. The Indian dish “Mihidana” which is a GI tagged product belongs to which state?

A) West Bengal 

B) Rajasthan

C) Haryana

D) Punjab

 • Mihidana is a sweet dish of West Bengal and is a GI (Geographical Indication) tagged product. This is in news recently as the very first consignment of Mihidana sourced from Bardhaman has been exported to Bahrain.

6. Where was the Business Summit on the National Mission on Edible Oil – Oil Palm for North East held recently?

A) Guwahati 

B) Agartala

C) Itanagar

D) Gangtok

 • A Business Summit on National Mission on Edible Oil – Oil Palm for North East was held recently at Guwahati, which was presided over by Narendra Singh Tomar – the union minister for agriculture and farmers welfare.
 • The National Mission on Edible Oil – Oil Palm is a Centrally Sponsored Scheme which aims to add 6.5 lakh hectares for palm oil by 2025–26.

7. High Ambition Coalition for Nature and People, was officially launched in which year?

A) 1984

B) 1992

C) 2000

D) 2021 

 • The High Ambition Coalition for Nature and People (HAC) is an intergovernmental group, co–chaired by France and Costa Rica. Its objective is to support the adoption of a target to protect 30% of the planet’s land and 30% of its oceans by 2030 (30×30 target).
 • The Coalition was officially launched at the One Planet Summit in 2021. It currently has around 70 members. India officially joined the coalition at a ceremony held between the French and Indian governments in New Delhi.

8. When is the ‘Indian Air Force Day’ celebrated every year?

A) October 2

B) October 4

C) October 5

D) October 8 

 • Every year on October 8, the country celebrates Indian Air Force Day. This year will celebrate the 89th anniversary of Indian Air Force Day. The day commemorates the establishment of Indian Air Force (IAF) on the same day in 1932. The first operational squadron was established in April 1933. The day also aims to increase awareness about the Indian Air Force, also known as the ‘Bhartiya Vayu Sena’.

9. After RBI’s October Monetary Policy Committee Meeting, what is the Repo rate?

A) 4.5 %

B) 4.25%

C) 4.00% 

D) 3.75%

 • Reserve Bank of India (RBI)’s Monetary Policy Committee (MPC) kept the key lending rate — repo rate unchanged at 4 percent for the eighth time in a row. Reverse repo rate remained unchanged at 3.5 percent. RBI also retained FY22 GDP growth forecast at 9.5 percent.

10. What is the theme of the ‘World Post Day’ 2021?

A) Innovate to recover 

B) Post to Connect

C) Communication during Covid

D) Post across the World

 • World Post Day is celebrated each year on 9th of October to mark the anniversary of establishment of the Universal Postal Union in 1874. India has been a member of the Universal Postal Union since 1876.
 • The theme for this year’s World Post Day is ‘Innovate to recover’. The objective of the World Post Day is to create awareness about the role of postal sector in the lives of people.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button