TnpscTnpsc Current Affairs

12th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

12th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 12th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

12th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. IMFஇன் அண்மைய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி (2022 அக்டோபர்), இந்தியாவின் 2022–23 காலகட்டத்திற்கான GDP கணிப்பு என்ன?

அ. 5.8%

ஆ. 6.0%

இ. 6.8%

ஈ. 7.0%

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 6.8%

  • பன்னாட்டு செலாவணி நிதியம் அதன் அண்மைய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில், 2022–23 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கான முன்கணிப்பை 6.8 சதவீதமாகக் குறைத்துள்ளது. IMF ஆனது உலகளாவிய பணவீக்க நெருக்கடியைக் குறிப்பிட்டு இதில் காட்டியுள்ளது. IMF இந்தியாவின் வளர்ச்சிக்கணிப்பை கடந்த ஜூலை மாதத்தில் 7.4 சதவீதமாகக் குறைத்திருந்தது; இதிலிருந்து 0.6% தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

2. ஐக்கிய நாடுகளின் 2022 – உலக இடஞ்சார் மாநாட்டு (UNWGIC) நிகழ்வை நடத்தும் நகரம் எது?

அ. பெங்களூரு

ஆ. ஹைதராபாத்

இ. டாக்கா

ஈ. மாலே

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹைதராபாத்

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஹைதராபாத்தில் வைத்து ஐக்கிய நாடுகளின் 2022 – உலக இடஞ்சார் மாநாட்டு (UNWGIC) நிகழ்வைத் தொடங்கி வைத்தார். “Geo–Enabling the Global Village: No one should be left behind” என்பது 2022 – UNWGICஇன் கருப்பொருளாகும். இது மனிதர்கள் குறித்த தரவு மற்றும் இடம் ஆகியவற்றிற்கான சமூகத்தை உருவாக்குவதில் தனது கவனத்தைச் செலுத்துகிறது.

3. நீதியரசர் U U லலித்துக்குப்பிறகு, இந்தியாவின் 50ஆவது தலைமை நீதியரசராக பதவியேற்கவுள்ளவர் யார்?

அ. நீதியரசர் DY சந்திரசூட்

ஆ. நீதியரசர் சஞ்சை கிஷன் கௌல்

இ. நீதியரசர் S அப்துல் நசீர்

ஈ. நீதியரசர் K M ஜோசப்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நீதியரசர் DY சந்திரசூட்

  • நீதியரசர் தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் இந்தியாவின் ஐம்பதாவது தலைமை நீதியரசராக தற்போதைய தலைமை நீதியரசர் U U லலித் முறைப்படி அவரை பரிந்துரைத்ததை அடுத்து பதவியேற்கவுள்ளார். நடைமுறையின்படி, மூத்த நீதியரசரான உச்சநீதிமன்ற நீதியரசர் இந்தியாவின் தலைமை நீதியரசராக பணியாற்றுகிறார்; மேலும் அவருக்குப் பின் அப்பதவிக்கு வருவோர் யாரென அரசாங்கம் பரிந்துரை கோருகிறது. நீதியரசர் DY சந்திரசூட், ஓரினச்சேர்க்கை என்பது குற்றமில்லை என்றும் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கிய அமர்வுகளின் ஒரு பகுதியாக இருந்தார்.

4. Crypto–Asset Reporting Framework (CARF) என்பதை உருவாக்கிய உலகளாவிய கூட்டமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. பன்னாட்டு செலவாணி நிதியம்

ஈ. OECD

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. OECD

  • பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) நாடுகளுக்கு இடையே கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான தகவல்களைத் தானாக பரிமாற்றம் செய்வதற்கான புதிய உலகளாவிய வரி வெளிப்படைத்தன்மை கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. Crypto–Asset Reporting Framework (CARF) எனப்பெயரிடப்பட்ட கட்டமைப்பானது, கிரிப்டோ சொத்துகளின் எல்லை தாண்டிய பரிமாற்றத்தைக் கண்காணிக்க நாடுகளால் பயன்படுத்தப்படும். இந்த வாரம் வாஷிங்டன் DCஇல் வைத்து G20 நிதியமைச்சர்களுக்கு CARF வழங்கப்படும்.

5. அண்மையில் தொடங்கப்பட்ட மகாகல் லோக் திட்டம் அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மத்திய பிரதேசம்

  • பிரதமர் நரேந்திர மோதி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகல் லோக்கில் மகாகல் லோக் திட்டத்தின் முதற்கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மொத்த திட்டத்திற்கான மொத்த செலவு சுமார் `850 கோடி ஆகும். மகாகல் வழித்தடத்தில் சிவபெருமானின் ஆனந்த தாண்டவச் சொரூபங்களை (நடன வடிவம்) சித்தரிக்கின்ற நூற்றெட்டு (108) ஸ்தம்பங்கள் (தூண்கள்) உள்ளன.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘நான்மடோல்’ புயல் கீழ்க்காணும் எந்த நாட்டில் கரையைக் கடக்கும்?

அ. இந்தோனேசியா

ஆ. ஜப்பான்

இ. பிலிப்பைன்ஸ்

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜப்பான்

  • ‘நான்மடோல்’ புயலானது ஜப்பானில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றல்வாய்ந்த இந்தப் புயல் குறித்து அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. நான்மடோல் சூறாவளிக்கு கரையைக் கடக்கும் முன் மக்கள் அனைவரும் தஞ்சமடைய வேற்றிடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய அமைப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து ஒகினாவா பிராந்தியத்திற்கு வெளியே அறிவிக்கப்பட்ட முதல் சூறாவளி தொடர்பான சிறப்பு எச்சரிக்கை இதுவாகும்.

7. ‘உணவு மற்றும் உழவிற்கான தாவர மரபணு வளங்களுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தின் (ITPGRFA)’ ஆளும் குழு அமர்வை நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இந்தியா

  • ‘உணவு மற்றும் உழவிற்கான தாவர மரபணு வளங்களுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தின் (ITPGRFA)’ ஆளும் குழு அமர்வை இந்தியா நடத்தவுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இவ்வொப்பந்தத்தை 149 நாடுகள் அங்கீகரித்துள்ளன. ITPGRFAஇன் புது தில்லி உச்சிமாநாட்டில் உறுப்புநாடுகள் அனைத்திற்கும் சிறந்த தரமான விதைகளுக்கான அணுகலை வழங்கும், ‘மூலவுயிருருவின் பயன்–பகிர்வு’ குறித்து ஒருமித்த ஆமோதிப்பு பெற வாய்ப்புள்ளது.

8. 2023இல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) சேருவதற்கான முறையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. ஈரான்

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. ஈராக்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஈரான்

  • 2023ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) நிரந்தர உறுப்பினராவதற்கான ஒரு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது. SCO உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதன்மூலம் இருபது ஆண்டுகளில் உசுபெகிஸ்தானுக்கு வருகைதரும் முதல் ஈரானிய அதிபராக இப்ராகிம் ரைசி ஆனார். 2005 ஜூனில் ஈரான் SCO அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்தைப்பெற்றது. 15 ஆண்டு காத்திருப்புக்குப்பிறகு 2021 செப்டம்பரில் அதன் முழுநேர உறுப்பினருக்கான முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டது.

9. ‘சுற்றுச்சூழல் நிலைத்தன்மை 2020–21’ ஆண்டறிக்கையை வெளியிட்ட நடுவண் அமைச்சகம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

ஆ. இரயில்வே அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இரயில்வே அமைச்சகம்

  • இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘ஸ்வச்சதா பக்வாரா – 2022’ஐ தொடங்கிவைத்து, ‘சுற்றுச்சூழல் நிலைத்தன்மை 2020–21’ ஆண்டறிக்கையை வெளியிட்டார். பசுமை மற்றும் தூய எரிசக்தியை வளர்த்தெடுக்க இரயில்வே அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் விரிவான ஆவணமாக இந்த அறிக்கை உள்ளது. இவ்வறிக்கை, நிகர சுழிய மாசு வெளியேற்றத்தை நோக்கிய இரயில்வே அமைச்சகத்தின் முனைவுகளை வெளிப்படுத்துகிறது.

10. UNICEF நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட காலநிலை ஆர்வலர் வனேசா நகேட் சார்ந்த நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. உகாண்டா

இ. வெனிசுலா

ஈ. ஆப்கானிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உகாண்டா

  • 25 வயதான உகாண்டா காலநிலை ஆர்வலர் வனேசா நகேட் UNICEF நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். அவர் ஆப்பிரிக்க காலநிலை ஆர்வலர்களுக்கு ஆதரவாக எழுச்சி இயக்கம் என்ற தளத்தை உருவாக்கினார். அவர் ஆப்பிரிக்க மழைக்காடுகளை அழிப்பதைத் தடுக்கும் ஒரு முனைவுக்குத் தலைமைதாங்கினார். தனது சொந்த நாடான உகாண்டாவின் தொலைதூரப்பகுதிகளில் சூரியப்பலகங்களை (solar–panel) நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட, ‘வாஷ் பசுமை பள்ளிகள் திட்டத்தை’ அவர் தொடங்கினார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி DY சந்திரசூட்: UU லலித் பரிந்துரை

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக DY சந்திரசூட்டை நியமிக்குமாறு, உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி UU லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் UU லலித் வரும் நவ.8-ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கிறார்.

இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகத்திடமிருந்து வந்த பரிந்துரையை ஏற்று, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்கலாம் என்று UU லலித் பரிந்துரை கடிதம் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 2024 நவ.10-ஆம் தேதி வரை பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.8%ஆக குறைத்தது IMF

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.8 சதவீதமாக சர்வதேச செலாவணி நிதியம் (IMF) குறைத்துள்ளது. 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரியில் IMF கணித்திருந்தது. பின்னர், இது 7.4 சதவீதமாக கடந்த ஜூலையில் குறைக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ஏற்கெனவே பல்வேறு சர்வதேச அமைப்புகள் குறைத்துள்ள நிலையில், அந்த வரிசையில் IMF இணைந்துள்ளது. IMF சார்பில் உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. உலக வங்கி மற்றும் IMF அதிகாரிகளின் வருடாந்திர கூட்டத்துக்குப்பின் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை கணிப்புடன் ஒப்பிடுகையில் இது 0.6 சதவீதம் குறைவாகும். 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது.

உலகப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு குறைப்பு: உலகப் பொருளாதார வளர்ச்சி 2021இல் 6.0 சதவீதமாக இருந்த நிலையில், 2022இல் 3.2 சதவீதமாகவும் 2023இல் 2.7 சதவீதமாகவும் குறையும் என்று IMF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கணிப்புகள், பெரும் பொருளாதார நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா) குறிப்பிடத்தக்க அளவிலான மந்தநிலையை எதிரொலிப்பதாக IMF தெரிவித்துள்ளது.

12th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. As per the IMF’s recent World Economic Outlook report (October 2022), what is India’s 2022–23 GDP forecast?

A. 5.8%

B. 6.0%

C. 6.8%

D. 7.0%

Answer & Explanation

Answer: C. 6.8%

  • The International Monetary Fund, in its latest World Economic Outlook report, cut the forecast for India’s gross domestic product (GDP) growth in financial year 2022–23 (FY23) by to 6.8 per cent. IMF flagged global inflation crisis and gave a warning of a long and tough economic winter. This is a 0.6 percentage downgrade since July forecast, when IMF cut India’s growth forecast to 7.4 per cent.

2. Which city is the host of the United Nations World Geospatial Congress (UNWGIC) 2022?

A. Bengaluru

B. Hyderabad

C. Dhaka

D. Male

Answer & Explanation

Answer: A. Bengaluru

  • Prime Minister Narendra Modi inaugurated the United Nations World Geospatial Congress (UNWGIC) 2022 in Hyderabad. The theme of UNWGIC 2022 is ‘Geo–Enabling the Global Village: No one should be left behind’, which focuses on building a community for human data and geography.

3. Who is set to take over as the 50th Chief Justice of India (CJI) after Justice UU Lalit?

A. Justice DY Chandrachud

B. Justice Sanjay Kishan Kaul

C. Justice S. Abdul Nazeer

D. Justice K.M. Joseph

Answer & Explanation

Answer: A. Justice DY Chandrachud

  • Justice Dhananjaya Yeshwant Chandrachud is set to take over as the 50th Chief Justice of India (CJI) after the present Chief Justice UU Lalit formally recommended him as his successor. As per the procedure, the senior most judge Supreme Court judge serves as the Chief Justice of India and the government seeks a recommendation from the CJI to name their successor. Justice DY Chandrachud was part of benches that decriminalised homosexuality, decriminalised adultery, and allowed women in the Sabrimala shrine.

4. Which global bloc created Crypto–Asset Reporting Framework (CARF)?

A. World Bank

B. World Economic Forum

C. International Monetary Fund

D. OECD

Answer & Explanation

Answer: D. OECD

  • The Organisation for Economic Co–operation and Development (OECD) has created a new global tax transparency framework for automatic exchange of information related to crypto assets between countries. The framework named Crypto–Asset Reporting Framework (CARF) will be used by the countries to track the cross–border transfer of crypto assets. CARF will be presented to G20 Finance Ministers this week in Washington DC.

5. Mahakal Lok Project, which was inaugurated recently, is located in which state/UT?

A. Maharashtra

B. Madhya Pradesh

C. Uttar Pradesh

D. Gujarat

Answer & Explanation

Answer: B. Madhya Pradesh

  • Prime Minister Narendra Modi dedicated Phase I of the Mahakal Lok Project to the nation at Shri Mahakal Lok in Ujjain, Madhya Pradesh. The total cost of the entire project is around ₹850 crore. The Mahakal Path contains 108 stambhs (pillars) which depict Anand Tandav Swaroop (Dance form) of Lord Shiva.

6. Typhoon Nanmadol, which was seen in the news, made landfall in which country?

A. Indonesia

B. Japan

C. Philippines

D. Sri Lanka

Answer & Explanation

Answer: B. Japan

  • ‘Typhoon Nanmadol’ is expected to make landfall in Japan. The country’s weather agency issued a rare warning about the powerful storm. Nearly two million people in Japan have been asked to seek shelter before Typhoon Nanmadol. It is the first typhoon–linked special warning issued outside of the Okinawa region since the present system began in 2013.

7. Which country is the host of the Governing Body session of ‘International Treaty on Plant Genetic Resources for Food and Agriculture’ (ITPGRFA)?

A. India

B. UAE

C. United States of America

D. Australia

Answer & Explanation

Answer: A. India

  • India is set to host of the Governing Body session of ‘International Treaty on Plant Genetic Resources for Food and Agriculture’ (ITPGRFA).
  • The pact, which came in force in 2004, has been ratified by 149 countries. Member countries at the New Delhi summit of ITPGRFA are likely to reach a consensus on benefit–sharing of germ plasm which will provide access to better quality seeds.

8. Which country has signed a formal MoU to join Shanghai Cooperation Organisation (SCO) in 2023?

A. Israel

B. Iran

C. UAE

D. Iraq

Answer & Explanation

Answer: B. Iran

  • Iran signed a formal MoU to become a permanent member of the Shanghai Cooperation Organisation (SCO) in 2023. Iranian President Ebrahim Raisi became the first Iranian president in 20 years to visit Uzbekistan, by attending the SCO Summit. Iran acquired observer status in the organisation in June 2005. Its bid for full membership was approved in September 2021 after a wait of 15 years.

9. Which Union Ministry launched the ‘Annual report on Environment Sustainability 2020–21’?

A. Ministry of Environment, Forest and Climate Change

B. Ministry of Railways

C. Ministry of MSME

D. Ministry of Labour and Employment

Answer & Explanation

Answer: B. Ministry of Railways

  • Railways Minister Ashwini Vaishnaw launched the Swachhta Pakhwara 2022 and released the Annual report on Environment Sustainability 2020–21. The report is a comprehensive document highlighting the steps taken by Railways to promote green and clean energy. This report brings out the efforts of Railways Ministry towards net zero emission.

10. Climate activist Vanessa Nakate, who was appointed as UNICEF Goodwill Ambassador, is from which country?

A. USA

B. Uganda

C. Venezuela

D. Afghanistan

Answer & Explanation

Answer: B. Uganda

  • 25–year–old Ugandan climate activist Vanessa Nakate has been appointed as UNICEF Goodwill Ambassador She created a platform called Rise Up Movement to support African climate activists. She led an initiative to stop the deforestation of African rainforests and launched ‘Vash Greens Schools Project’, which aims to install solar panels in remote areas of her home country, Uganda.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!