Tnpsc

13th & 14th December 2020 Current Affairs in Tamil & English

13th & 14th December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th & 14th December 2020 Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் முதலிடம் பிடித்த நாடு எது?

அ. ஐக்கியப் பேரரசு

ஆ. டென்மார்க்

இ. சுவீடன்

ஈ. ஜெர்மனி

 • காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டை ஜெர்மன்வாட்ச் & நியூகிளைமேட் ஆகிய நிறுவனங்கள் காலநிலை நடவடிக்கை வலையமைப்புடன் (CAN இன்டர்நேஷனல்) இணைந்து வெளியிட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பதாம் இடத்திலிருந்து இந்தியா, இந்த ஆண்டு (2020) ஒரு தரவரிசை குறைந்து பத்தாவது இடத்திற்கு சென்றுள்ளது. முதல் மூன்று இடங்களை எந்த நாடும் பெறவில்லை.
 • நான்காமிடம் சுவீடனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தக்குறியீடு, ஐம்பத்தேழு (57) நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்திறனையும் நான்கு பிரிவுகளாக மதிப்பிட்டுள்ளது.

2. இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. சுற்றுலா அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

 • இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் என்பது வெளியுறவு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். அது, 1950’இல் மெளலானா அபுல் கலாம் ஆசாத் என்பவரால் நிறுவப்பட்டது. ICCR தலைவர் வினய் சகஸ்ரபுத்தேயின் கூற்றுப்படி, இந்தியாவைப் பற்றி உலகளவில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பள்ளிகளின் பாடநூல்களை, “Global Understanding of India Project – இந்தியா பற்றிய உலகளாவிய புரிதல்” திட்டத்தின்கீழ் அது ஆய்வு செய்து வருகிறது.

3. சிறார் ஆபாசவியலை கையாளுவதற்காக, சமீபத்தில் பன்னாட்டுக் காவலகத்திலிருந்து, ‘Crawler’ என்ற மென்பொருளை வாங்கிய மாநில காவல்துறை எது?

அ. குஜராத்

ஆ. மகாராஷ்டிரா

இ. உத்தர பிரதேசம்

ஈ. பீகார்

 • மகாராஷ்டிரா மாநில காவல்துறையின் இணையவெளிக் குற்றத்தடுப்புப் பிரிவானது அண்மையில் INTERPOL’இலிருந்து, ‘Crawler’ என்ற மென்பொருளை வாங்கியுள்ளது. இந்த மென்பொருளை வாங்கிய முதல் இந்திய அமைப்பு இதுவாகும். இம்மென்பொருள், மகாராஷ்டிர மாநிலத்தில் சிறார் ஆபாசவியலை (Child Pornography) கையாள உதவும்.
 • இணையத்தில் பதிவேற்றப்பட்ட சிறார் ஆபாசப்படங்களைக் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள் காவல்துறைக்கு உதவுகிறது. நிர்வாணத்தைக் கண்டறிவது, முக்கிய சொற்களைத் தேடுவது, வயதை அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்களை இந்த மென்பொருள் கொண்டுள்ளது.

4. 2020-2023ஆம் ஆண்டு வரையிலும் கடைப்பிடிக்கப்படுகிற அனைத்துலக உள்நாட்டு வான்போக்குவ -ரத்து நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Advancing Innovation for Global Aviation Development

ஆ. Leaving No Country Behind

இ. Flying Around the Globe

ஈ. COVID-19 Free World

 • 1996ஆம் ஆண்டில், ஐநா அவையின் பொது அவை, டிச.7’ஐ அனைத்துலக சிவில் வான்போக்குவரத்து நாள் என அறிவித்தது. அனைத்துலக உள்நாட்டு வான் போக்குவரத்து மாநாட்டில் கையெழுத்திட்டதன் ஐம்பதாமாண்டு நிறைவுநாளான 1994 டிச.7ஆம் தேதி முதல் பன்னாட்டு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைப்பால் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. உலகின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வானூர்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதே இந்நாளின் நோக்கமாகும்.

5. “ஆர்கனோகுளோரின்” என்பது பொதுவாக கீழ்க்காணும் எதுவாக பயன்படுத்தப்படுகிறது?

அ. தடுப்பூசி

ஆ. உணவுச் சேர்ப்பு

இ. பூச்சிக்கொல்லிச் சேர்ப்பு

ஈ. எரிபொருள் சேர்ப்பு

 • சில இந்திய அமைப்புகள் ஆந்திர பிரதேச மாநிலத்தில் பரவிய ஒரு மர்ம நோய்க்குக் காரணம், பூச்சிக் கொல்லியாகவோ (அ) கொசு ஒழிப்பானாகவோ ‘ஆர்கனோகுளோரைன்’ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரித்து வருகின்றன. இந்நோய் ஒருவரின் இறப்புக்கு வழிவகுக்கிறது. ‘ஆர்கனோ குளோரைன்கள்’ புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை மற்றும் இது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள், இவை மனிதரில் பல நோய்களை ஏற்படுத்துகின்றன என்பதை நிரூபித்துள்ளன.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயன் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. பஞ்சாப்

ஆ. உத்தர பிரதேசம்

இ. பீகார்

ஈ. ஜார்க்கண்ட்

 • அண்மையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான மத்திய வனவுயிரி பூங்காக்கள் ஆணையத்தின் கூட்டத்தில், இரு புதிய உயிரியல் பூங்காக்கள் அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவை, பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள இராஜ்கீர் வனவுயிரி பூங்கா பயணமும் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயன் ஆகியனவாகும். இதன்மூலம், உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள உயிரியல் பூங்காக்களின் எண்ணிக்கை 9 ஆனது.

7. கூகிள் இந்தியாவின்படி, இந்த ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட ஆளுமை யார்?

அ. நரேந்திர மோடி

ஆ. ஜோ பைடன்

இ. சுஷாந்த் சிங் இராஜ்புத்

ஈ. நயன்தாரா

 • கூகிள் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது வருடாந்திர ‘Year in Search’ முடிவுகளை வெளியிட்டது. அது, கூகிளில் மிகவும் பிரபலமான தேடல்களை முன்னிலைப்படுத்தியது. அந்த அறிக்கையின்படி, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், இவ்வாண்டு (2020) கூகிளில் அதிகம் தேடப்பட்ட ஆளுமையாவார். IPL, நடப்பாண்டின் (2020) சிறந்த பிரபலமான தேடலாக இருந்துள்ளது. COVID-19 தொற்றுநோயைப் பற்றிய தேடல்களும் இப்பட்டியலில் அதிகம் இடம்பெற்றன.

8. ’Recover Better – Stand Up for Human Rights’ என்ற கருப்பொருளுடன் டிச.10 அன்று அனுசரிக்கப்பட்ட சிறப்பு நாள் எது?

அ. மருத்துவர்கள் நாள்

ஆ. மனிதவுரிமைகள் நாள்

இ. சமூக நீதி நாள்

ஈ. இனப்பாகுபாட்டை ஒழித்துக்கட்டுவதற்கான நாள்

 • மனிதவுரிமைகள் நாளானது ஆண்டுதோறும் டிச.10 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள், கடந்த 1948’இல், ஐநா பொதுச்சபை, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. “Recover Better – Stand Up for Human Rights: சிறந்த முறையில் மீள்வோம் – மனிதவுரிமைகளுக்காக நிற்போம்” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

9. NASA’இன், நிலவில்-தரையிறங்கும் திட்டத்தின் பெயர் என்ன?

அ. பெர்சிஸ்டன்ஸ்

ஆ. டிஸ்கவரி

இ. ஆர்ட்டெமிஸ்

ஈ. ஹோப்

 • 18 விண்வெளி வீரர் / வீராங்கனைகள் அடங்கிய குழுவில் சரிபாதி பெண்கள் இருப்பார்கள் என NASA அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில், ‘ஆர்ட்டெமிஸ்’ என்ற பெயரிலான அதன் நிலவில்-தரையிறங்கும் திட்டத்திற்கு அவர்கள் அனைவருக்கும் பயிற்சியளிக்கப்படவுள்ளது. அவர்களுள், நிலவில் கால்தடம் பதியப்போகும் முதல் பெண்ணும், அடுத்த ஆணும் தெரிவு செய்யப்படுவார்கள். இக்குழுவில் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் ஆகியோரும் அடங்குவர். அவர்களிருவரும் உலகின் முதல் அனைத்து பெண் விண்வெளி நடையணத்தை நிகழ்த்தியவர்களாவர்.

10. இந்திய கரும்புலி இறால்களுக்கான இறக்குமதி ஆய்வுக்கு விலக்கு அளித்துள்ள நாடு எது?

அ. ஐக்கியப் பேரரசு

ஆ. ஆஸ்திரேலியா

இ. ஜப்பான்

ஈ. தென் கொரியா

 • அண்மையில், இந்திய கரும்புலி இறால்களுக்கான இறக்குமதி ஆய்வுக்கு ஜப்பான் விலக்களித்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்திய கரும்புலி இறால்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக ஜப்பான் உள்ளது. ஏற்றுமதிப்பண்டங்களில் செயற்கை பாக்டீரியா எதிர்ப்புமருந்தான ‘புராசோலிடோன்’ முற்றிலும் இல்லாததையடுத்து இம்முடிவை அந்த நாடு எடுத்துள்ளது. இம்முடிவானது, மேற்கு வங்கம் & கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் வேளாண்மை மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தும்.

13th & 14th December 2020 Current Affairs in English

1. Which country topped the Climate Change Performance Index (CCPI)?

[A] United Kingdom

[B] Denmark

[C] Sweden

[D] Germany

 • The Climate Change Performance Index (CCPI) has been released by Germanwatch and NewClimate Institute together with the Climate Action Network (CAN International). India came one rank down from ninth in 2019, to tenth position this year. No country bagged the first three ranks. The fourth rank is presented to Sweden, followed by the UK and Denmark. The index assesses the performances of 57 countries and European Union in four categories.

2. The Indian Council for Cultural Relations (ICCR) is an autonomous body functioning under which Ministry?

[A] Ministry of Culture

[B] Ministry of Tourism

[C] Ministry of External Affairs

[D] Ministry of Home Affairs

 • The Indian Council for Cultural Relations (ICCR), an autonomous body under the administrative control of Ministry of External Affairs. It was founded in 1950 by Maulana Abul Kalam Azad. As per the ICCR president Vinay Sahasrabuddhe, the body is surveying the textbooks taught in the schools of more than 200 countries, under the “Global understanding of India project”, to understand what is taught about India globally.

3. Which state Police has recently bought ‘Crawler’ software from Interpol, to tackle Child pornography?

[A] Gujarat

[B] Maharashtra

[C] Uttar Pradesh

[D] Bihar

 • The cyber wing of the Maharashtra state Police has recently acquired the ‘Crawler’ software from Interpol. It is the first Indian agency to acquire the software, which will help them tackle Child pornography in the state.
 • The software enables the Police to track down child pornography uploaded online, as it has advanced features to detect nudity, look for key–words and recognise age etc.

4. “Organochlorine” that is seen in news recently, is commonly used as which product?

[A] Vaccine

[B] Food additive

[C] Pesticide additive

[D] Fuel additive

 • Some Indian organizations are investigating “organochlorines” used as pesticides or in mosquito as the cause for a mysterious illness in Andhra Pradesh. The illness has led to the death of one person and more than 400 people being hospitalized. Organochlorines are cancer causing agents and researches have proved that it causes multiple human ailments.

5. Which special Day is observed on December 10 with the theme of ‘Recover Better – Stand Up for Human Rights’?

[A] Doctors Day

[B] Human Rights Day

[C] Social Justice Day

[D] Day for Elimination of Racial Discrimination

 • Human Rights Day is observed every year on 10 December across the world. It commemorates the day the United Nations General Assembly adopted the Universal Declaration of Human Rights (UDHR) in 1948. This year, the day was observed with the theme of ‘Recover Better – Stand Up for Human Rights’.

6. What is the theme of the ‘International Civil Aviation Day’ from 2020 to 2023?

[A] Advancing Innovation for Global Aviation Development

[B] Leaving No Country Behind

[C] Flying Around the Globe

[D] COVID-19 Free World

 • In 1996 the United Nations General Assembly proclaimed that 7 December was to be the International Civil Aviation Day. The day has been celebrated by the International Civil Aviation Organization since 1994 December 7, the 50th anniversary of the signing the Convention on International Civil Aviation. The purpose of the day is to recognize the importance of aviation to the social and economic development of the world.

7. Shaheed Ashfaque Ullah Khan Prani Udyaan, which was seen in the news recently, is located in which state?

[A] Odisha

[B] Gujarat

[C] Rajasthan

[D] Uttar Pradesh

 • At the recent meeting of Central Zoo Authority chaired by Union Minister for Environment, Forest and Climate Change, Prakash Javadekar, two new zoos were granted recognition. They are the Rajgir Zoo Safari in Nalanda, Bihar and Shaheed Ashfaque Ullah Khan Prani Udyaan in Gorakhpur, Uttar Pradesh. With this, the state of Uttar Pradesh has a total of 9 zoos.

8. Who was the most searched personality on Google this year, as per Google India?

[A] Narendra Modi

[B] Joe Biden

[C] Sushant Singh Rajput

[D] Nayanthara

 • Google India has recently released its annual ‘Year in Search’ results, which highlighted the most popular searches on Google. As per the report, US President–elect Joe Biden was the most searched personality on Google this year. The IPL was the top trending search of the year and Searches about Covid–19 pandemic featured the most in the list.

9. What is the name of the Moon–landing Mission of the NASA, for which it has chosen the first–ever woman?

[A] Persistence

[B] Discovery

[C] Artemis

[D] Hope

 • NASA has named the 18 astronauts group half of them being women, who will train for its Moon–landing Mission by 2024, named ‘Artemis’. From this set of astronauts, the first woman to set foot on the moon and the next man on the moon will be picked up. The group includes Christina Koch and Jessica Meir, who performed the world’s first all–female spacewalk.

10. Which country exempted import inspection for Indian black tiger shrimps?

[A] United Kingdom

[B] Australia

[C] Japan

[D] South Korea

 • Recently, Japan has exempted import inspection for the Indian black tiger shrimps. Japan is the second largest market for Indian black tiger shrimps after the US. This decision has been taken by the country after the export consignments were found totally free from any residue of synthetic anti–bacterial drug ‘Furazolidone’. This will enhance the farming and export of the shrimps from West Bengal and Kerala.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!