Tnpsc

13th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை யார்?

அ) லவ்லினா போர்கோஹெய்ன் 

ஆ) புசெனாஸ் சுர்மெனெலி

இ) மேரி கோம்

ஈ) சாக்ஷி சௌத்ரி

  • விஜேந்தர் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற 3ஆவது இந்திய குத்துச்சண்டை வீரராக ஆனார் லவ்லினா போர்கோஹெய்ன். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், அவர் வெண்கலம் வென்றார். அஸ்ஸாமின் கோலாகாட்டைச் சேர்ந்த அவர், 2018 AIBA பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மற்றும் 2019 AIBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் வெண்கலம் வென்றுள்ளார். அஸ்ஸாமில் இருந்து அர்ஜுனா விருது பெற்ற 6ஆவது நபராவார் இவர்.

2. ஹார்பூன் கூட்டு பொதுச் சோதனைத் தொகுப்புகளை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) இஸ்ரேல்

இ) இங்கிலாந்து

ஈ) அமெரிக்கா 

  • ஹார்பூன் என்பது அனைத்து வானிலைக்கும் ஏற்ற ஒரு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு ஆகும். 82 மில்லியன் டாலர் மதிப்பீட்டிலான ஒரு ஹார்பூன் கூட்டு பொதுச் சோதனை மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இது தற்கால மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் திறனை மேம்படுத்த உதவும். இந்த ஒப்பந்தத்தின் முதன்மை ஒப்பந்தக்காரர் அமெரிக்காவின் சிகாகோவை தலைமையிடமாகக்கொண்ட போயிங் நிறுவனமாகும்.

3. மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதா, 2021’இன்படி, சிந்து மத்திய பல்கலைக்கழகம் நிறுவப்படவுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ) லடாக் 

ஆ) ஜம்மு காஷ்மீர்

இ) பஞ்சாப்

ஈ) ஹரியானா

  • 2021 ஆகஸ்ட்.6 அன்று லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மத்திய கல்வியமைச்சர் தர்மேந்ர பிரதான், மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2021 பற்றி தனது சுருக்கமான அறிக்கையில், ஆண்டுதோறும் சுமார் 7,000 மாணவர்கள் கல்விக்காக லடாக்கிலிருந்து வெளியேறுவதாகவும் மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதன்மூலம் சுமார் 2,500 மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலயே கல்விக்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் கூறினார். `760 கோடி செலவில், சிந்து மத்திய பல்கலை நிறுவப்படவுள்ளது.

4. தற்போதுள்ள சிந்து நீர் ஒப்பந்தத்தின்படி, பின்வரும் எந்த மூன்று ஆறுகளின் நீரானது இந்தியாவின் தடையற்ற பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது?

அ) சிந்து, ஜீலம் மற்றும் செனாப்

ஆ) கங்கை, யமுனா மற்றும் கோதாவரி

இ) சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி 

ஈ) பியாஸ், கோஸி மற்றும் பாகீரதி

  • நாடாளுமன்றக் குழுவொன்று, ஆற்றுவடிநிலத்தின் நீர் விநியோகத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும், ஒப்பந்தத்தில் காணாத பிற சவால்களுக்கு தீர்வுகாண்பது குறித்தும் பாகிஸ்தானுடன் சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து மறு பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரைத்துள்ளது.
  • 2021 ஆகஸ்ட்.5 அன்று, நீர்வள ஆதார நிலைக்குழு அவ்வறிக்கையை மக்களவையில் தாக்கல்செய்தது. 1960ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தானால் கையெழுத்திடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி, சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி நதிகளின் அனைத்து நீரும் இந்தியாவின் தடையற்ற பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. மேற்கு சிந்து, ஜீலம் & செனாப் நதிகளின் பெரும்பாலான நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்படுகிறது.

5. தேசிய கைத்தறி நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) 6 ஆகஸ்ட்

ஆ) 8 ஆகஸ்ட்

இ) 5 ஆகஸ்ட்

ஈ) 7 ஆகஸ்ட் 

  • 2021 ஆகஸ்ட்.7 அன்று ஜவுளி அமைச்சகம் ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடியது. இந்த நாளில், கைத்தறி நெசவு சமூகம் இந்தியாவின் சமூகப்பொருளாதார வளர்ச்சியில் அது ஆற்றும் பங்களிப்புக்காக கௌரவிக்கப்படுகிறது. அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள மொஹ்பரா, கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள கோவளம் மற்றும் ஸ்ரீநகரின் புட்காமில் உள்ள கனிஹாமா ஆகியவை 3 கைத்தறி கைவினை கிராமங்களாக அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து ஜவுளி அமைச்சகத்தால் அமைக்கப்பட உள்ளன.

6. PM-DAKSH யோஜனாவை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 

ஈ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

  • பிரதமரின் தக்ஷ் தளம் மற்றும் பிரதமரின் தக்ஷ் திறன்பேசி செயலியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கி உள்ளது. தேசிய மின்னாளுகை பிரிவுடன் (NeGD) இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்த தளமும், செயலியும் பின்தங்கியோர், பட்டியல் பிரிவினர் மற்றும் தூய்மை தொழிலாளிகளுக்கு திறன் வளர்த்தல் திட்டங்களை கிடைக்கச்செய்யும்.
  • பிரதமரின் தக்ஷ் திட்டம் 2020-21ஆம் ஆண்டு முதல் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

7. டோக்கியோ ஒலிம்பிக்கில், மல்யுத்த வெள்ளிப்பதக்கம் வென்ற ரவி தஹியா சார்ந்த மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) ஹரியானா 

இ) பஞ்சாப்

ஈ) அஸ்ஸாம்

  • ரவி தஹியா, ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி வென்ற இரண்டாவது இந்திய மல்யுத்த வீரராவார். அவர் உலக சாம்பியனான சௌர் உகுவேவிடம் ஆடவர் பிரீஸ்டைல் 57 கிகி பிரிவில் பட்டத்தை இழந்தார். ரவி தஹியா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.

8. நடப்பாண்டுக்கான (2021) ஐஸ்னர் விருதை வென்ற இந்திய காட்சிக்கலைஞர் & இல்லுஸ்ட்ரேட்டர் யார்?

அ) ஆனந்த் ராதாகிருஷ்ணன் 

ஆ) ஜிபின் வர்கீஸ்

இ) பாஸ்கர் ராவ்

ஈ) பிரியேஷ் திரிவேதி

  • இந்திய காட்சிக்கலைஞரான ஆனந்த் ராதாகிருஷ்ணன் சிறந்த ஓவியர் / பல்லூடக கலைஞருக்கான நடப்பாண்டின் (2021) ஐஸ்னர் விருதை வென்றுள்ளார். ராம் வி எழுதிய கிராபிக் நாவலான ‘Blue in Green’க்கான விருதை இங்கிலாந்தைச் சேர்ந்த நிறவியலாளர் ஜான் பியர்சனுடன் அவர் பகிர்ந்துகொண்டார். இவ்விருது, கிராபிக் நாவல்களின் மேதை வில் ஐஸ்னரின் பெயரால் வழங்கப்படுகிறது. “காமிக் துறையின் ஆஸ்கர்” என அழைக்கப்படும் இவ்விருது, 32 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

9. மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) தெலுங்கானா

  • மக்களின் வீட்டுக்கேச் சென்று அத்தியாவசிய நலவாழ்வுச் சேவைகளை வழங்குவதற்காக, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கிருஷ்ணகிரியில் உள்ள சாமனப்பள்ளி சிற்றூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின்கீழ் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்களின் வீடுகளுக்கேச் சென்று சிகிச்சையளிக்கப்படும். திடீர் இறப்பு மற்றும் பரவா நோய்களும் இதன் மூலம் கண்டறியப்படும்.

10. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) அமெரிக்கா 

ஈ) ஜெர்மனி

  • 2020 டோக்கியோ விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஆகஸ்ட்.8 அன்று நிறைவுற்றதாக பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் அறிவித்தார். அமெரிக்கா 39 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. போட்டியை நடத்திய ஜப்பான், 27 தங்கங்களுடன் மூன்றாமிடத்தையும், கிரேட் பிரிட்டன் 22 தங்கப்பதக்கங்களுடன் நான்காமிடத்திலும் மற்றும் 20 தங்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலத்துடன் 48 ஆவது இடத்தைப் பிடித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகள் மத்திய அரசின் விருதுக்குத் தேர்வு

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் விருதுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குற்ற வழக்குகள் சம்பந்தமான விசாரணைகளில் தொழில்முறைத் தன்மையை ஊக்குவிக்கவும், சிறப்பாக விசாரணை நடத்துபவர்களை ஊக்குவிக்கவும், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. காவல்துறை மட்டுமின்றி, சிபிஐ, என் ஐ ஏ அதிகாரிகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் 152 காவல் அதிகாரிகளுக்கு இந்த விருதுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஆக.12’இல் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிபிசிஐடி காவல் ஆய்வாளர் (நாகப்பட்டினம்) சரவணன், அனைத்து மகளிர் காவல் நிலையம் (திருவண்ணாமலை) காவல் ஆய்வாளர் அன்பரசி, புதுச்சத்திரம் காவல் நிலையம் (கடலூர்) காவல் ஆய்வாளர் கவிதா, வெங்கல் காவல் நிலையம் (திருவள்ளூர்) காவல் ஆய்வாளர் ஜெயவேல், திருப்போரூர் காவல் நிலையம் (செங்கல்பட்டு) காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சென்னை பெருநகர காவல்துறை உளவுப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், குரோம்பேட்டை காவல் நிலையம் (சென்னை) காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன், நாகர்கோவில் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் கண்மணி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2. நிலவில் தண்ணீா் இருப்பதை கண்டுபிடித்தது ‘சந்திரயான்-2’

நிலவில் நீா் மூலக்கூறுகள் இடம்பெற்றிருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலம் அனுப்பிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவா் ஏ.எஸ்.கிரண்குமாா் இணைந்து எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்கு பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7-ம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டா் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீா் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டா் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி தகவல் தொடா்பிலிருந்து விலகியது.

எனினும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ‘ஆா்பிட்டா்’ நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஆா்பிட்டா் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலவை சுற்றிவந்து தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு, பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. இந்த தரவுகள் மூலம் நிலவின் பரப்பில் நீா் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நடப்பு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கான வலைதளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:

ஆா்பிட்டரில் இடம்பெற்றிருக்கும் ஐஐஆா்எஸ் கருவி எடுத்து அனுப்பியிருக்கும் ஆரம்ப கட்ட புகைப்பட தரவுகளில், இயற்பியல் அடிப்படையிலான வெப்ப திருத்த ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, நிலவின் பரப்பில் ‘29என்’ மற்றும் ‘62என்’ இடையேயான அட்சரேகை பகுதியில் ‘ஓஹெச் (ஹைட்ராக்ஸில்), ஹெச்2ஓ’ ஆகிய நீா் மூலக்கூறுகள் பரவலாக இடம்பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது. முன்பு, அதிக அளவில் ஓஹெச் மூலக்கூறுகள் இருக்க வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்ட நிலவின் உயா் வெப்ப பகுதியைக் காட்டிலும், இப்போது கண்டறியப்பட்டிருக்கும் தாதுக்கள் நிறைந்த பாறைகளில் அதிக அளவில் ஓஹெச், ஹெச்2ஓ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நிலவின் சுற்றுப் பாதையில் ஆா்பிட்டா் தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதோடு, எடுக்கும் புகைப்படங்களை முன்னா் அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலத்துக்குத் தவறாமல் அனுப்பி வருகிறது என்று ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Who is the third Indian Boxer to win a bronze medal at the Olympics?

A) Lovlina Borgohain 

B) Busenaz Surmeneli

C) Mary Kom

D) Sakshi Chaudhary

  • Lovlina Borgohain became the 3rd Indian boxer after Vijender Singh and Mary Kom to win a bronze medal at the Olympics. She won the bronze medal at the Tokyo Olympics 2020. She belongs to Golaghat (Assam). She also won a bronze medal at the 2018 AIBA Women’s World Boxing Championship and the 2019 AIBA Women’s World Boxing Championships. She became the 6th person from Assam to get the Arjuna Award.

2. Which country has approved the sale of Harpoon Joint Common Test Sets to India?

A) Russia

B) Israel

C) UK

D) USA 

  • Harpoon is an all–weather, over–the–horizon, anti–ship missile system. The United States of America has approved the sale of one Harpoon Joint Common Test Set (JCTS) along with the related equipment to India for an estimated cost of USD 82 million.
  • This will help in improving India’s capability to meet current and future threats. The principal contractor of the deal will be Boeing Company which is headquartered in Chicago, USA.

3. According to the Central Universities (Amendment) Bill, 2021, Sindhu Central University is to be established in which state / Union Territory?

A) Ladakh 

B) Jammu and Kashmir

C) Punjab

D) Haryana

  • On 6th August, 2021, a bill seeking to establish a central university in the Union Territory of Ladakh was passed in the Lok Sabha. Education Minister Dharmendra Pradhan, in his brief statement about the Central Universities (Amendment) Bill, 2021, said that every year, around 7,000 students go out of Ladakh for education and with the establishment of the central university around 2,500 students will get the opportunity to study there. The Sindhu central university will be established at a cost of Rs 760 crore.

4. As per the existing Indus Water Treaty, all the waters of which three rivers are allocated to India for unrestricted use?

A) Indus, Jhelum and Chenab

B) Ganga, Yamuna and Godavari

C) Sutlej, Beas and Ravi 

D) Beas, Koshi and Bhagirathi

  • A parliamentary group recommended re–negotiating the Indus Water Treaty with Pakistan to address the impact of climate change on water supply in the basin and other challenges not covered by the agreement.
  • On 5th August, 2021, the Standing Committee on Water Resources tabled the report before the Lok Sabha. According to the Indus Waters Treaty which was signed by India and Pakistan in 1960, all waters of the Sutlej, Beas and Ravi rivers are allocated to India for unrestricted use. Most of the waters of the western Indus, Jhelum and Chenab rivers are allocated to Pakistan.

5. National Handloom Day is observed on which date?

A) 6th August

B) 8th August

C) 5th August

D) 7th August 

  • On 7th August, 2021 the Textile Ministry has celebrated the 7th National Handloom Day. On this day the handloom weaving community will be honoured for their contribution in the socio–economic development of India. Three Handloom Craft Villages at Mohpara Village, District Golaghat in Assam, Kovalam in Thiruvananthapuram, Kerala, and Kanihama, Budgam in Srinagar are being set up by the Ministry in collaboration with the respective State governments.

6. Which Ministry is implementing the PM–DAKSH Yojana?

A) Ministry of Home Affairs

B) Ministry of Housing and Urban Affairs

C) Ministry of Social Justice and Empowerment 

D) Ministry of Law and Justice

  • On 7th August, 2021, Dr. Virendra Kumar, Union Minister for Social Justice and Empowerment has launched ‘PM–DAKSH’ Portal and ‘PM–DAKSH’ Mobile App.
  • This portal and app have been developed by the Ministry of Social Justice and Empowerment, in collaboration with NeGD, to make skill development schemes accessible to the target groups of Scheduled Castes, Backward Classes and Safai Karamcharis. From the year 2020–21 the Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampann Hitgrahi (PM–DAKSH) Yojana is being implemented by the Ministry of Social Justice and Empowerment.

7. Ravi Dahiya, who won the wrestling silver medal in Tokyo Olympics, is from which state?

A) Gujarat

B) Haryana 

C) Punjab

D) Assam

  • Ravi Dahiya became only the second Indian wrestler to win a silver medal at the Olympic Games after he lost the men’s freestyle 57kg title clash to reigning world champion Zavur Uguev. Ravi Dahiya belongs from Haryana.

8. Which Indian Visual Artist & Illustrator has won the 2021 Eisner Award?

A) Anand Radhakrishnan 

B) Gipin Varghese

C) Bhaskar Rao

D) Priyesh Trivedi

  • Indian Visual Artist & Illustrator Anand Radhakrishnan has won the 2021 Eisner Award for Best Painter/Multimedia Artist (interior art). He shared the award with UK based colourist John Pearson for “Blue in Green,” a graphic novel authored by Ram V. Eisner Award is named after graphic novel legend Will Eisner and this award is known as the “Oscar of the comic field” and is presented in 32 categories.

9. Which state government has launched the Makkalai Thedi Maruthuvam scheme?

A) Tamil Nadu 

B) Kerala

C) Andhra Pradesh

D) Telangana

  • Makkalai Thedi Maruthuvam programme was launched by Tamil Nadu Chief Minister M K Stalin in Samanapalli village in Krishnagiri on Thursday to deliver essential healthcare at the doorstep of the people. Under this scheme those above 45 years of age and others with infirmities will be screened through routine door–to–door check–ups and detect non–communicable diseases that are also seen to cause sudden mortalities and impact the quality of life.

10. Which country has topped the medals tally in Tokyo 2020 Olympics?

A) China

B) Japan

C) USA 

D) Germany

  • The Tokyo 2020 Games were declared closed by IOC chief Thomas Bach on August 8, 2021. The Olympic flag was passed to Paris mayor Anne Hidalgo for the 2024 Games at the Tokyo closing ceremony.
  • The United States topped the tally with 39 gold medals, just one ahead of China. Host Japan finished third with 27 golds followed by Great Britain with 22 and the Russian Olympic Committee, the team for Russian athletes after their country was banned for systematic doping, were fifth with 20. India finished 48th with 1 gold, 2 silver and 4 bronze medals.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!