TnpscTnpsc Current Affairs

13th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவில் ESG அறிக்கையை வெளியிட்ட முதல் வானூர்தி சேவை நிறுவனம் எது?

அ) ஏர் இந்தியா

ஆ) ஸ்பைஸ் ஜெட்

இ) இண்டிகோ 

ஈ) விஸ்தாரா

  • ESG அறிக்கையை வெளியிட்ட இந்தியாவின் முதல் விமான நிறுவனம் இண்டிகோ ஆகும். இந்தியாவிலும் உலகெங்கிலும் நிலையான விமான எரிபொருளை பயன்படுத்துவதில் கைகோர்ப்பதற்காக டேராடூனின் CSIR-இந்திய பெட்ரோலிய நிறுவனத்துடனான (CSIR-IIP) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக IndiGo அறிவித்துள்ளது.
  • இந்தக் கூட்டாண்மையின்கீழ், IndiGo மற்றும் CSIR-IIP ஆகியவை தொழில்நுட்ப-வணிக சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் SAF’க்கான திட்டங்களுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கும். சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றிலும் அவர்கள் கவனஞ்செலுத்துவார்கள்.

2. 2021ஆம் ஆண்டு நிலவரப்படி உலகின் மிகவும் மதிப்புமிக்க கல்வி தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ) டியோலிங்கோ

ஆ) பைஜூ’ஸ் 

இ) டிரைபல்-லேனிங்

ஈ) கோர்ஸெரா

  • பெங்களூரைச்சார்ந்த பைஜூ’ஸ் ஒரு இந்திய பன்னாட்டு கல்வி தொழில் நுட்ப (ed-tech) நிறுவனமாகும். இது $18 பில்லியன் சந்தை முதலீட்டுடன் உலகின் மிகவும் மதிப்புமிக்க கல்வி தொழில் நுட்ப நிறுவனமாக உள்ளது. பைஜூ’ஸ் ஆஸ்திரியாவை தலைமையிடமாகக் கொண்ட ஜியோஜிப்ராவை சுமார் $100 மில்லியன் மதிப்பிற்கு வாங்கியது. Geo Gebra என்பது ஒரு அளவளாவும் கணிதக் கற்றல் கருவியாகும். இது பைஜூஸின் ஒன்பதாவது பெரிய கையகப்படுத்தல் ஆகும்.

3. கீழ்காணும் எந்த நகரத்தில், டிசம்பர் 8, 1985 அன்று சார்க் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ) புது தில்லி

ஆ) டாக்கா 

இ) காத்மாண்டு

ஈ) கொழும்பு

  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) பட்டய நாள் ஒவ்வோர் ஆண்டும் டிச.8 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1985’இல் இதே நாளில், அக்குழுவின் முதல் உச்சிமாநாட்டின்போது, டாக்காவில் ‘சார்க் சாசனம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு, மண்டலக் குழுவின் 37ஆவது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. 1985 முதல் 18 உச்சி மாநாடுகளை சார்க் ஏற்பாடு செய்துள்ளது.

4. பிரதமர் ஆவாஸ் யோஜனா (கிராமப்புறம்) திட்டத்தை 2021 முதல் எந்த ஆண்டு வரை தொடருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) 2023

ஆ) 2024 

இ) 2025

ஈ) 2030

  • மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கருத்துருவான பிரதமர் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை (PMAY-G) 2021 மார்ச்சுக்கு பின்னர் 2024 மார்ச் வரை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப் -பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முடிக்கப்பட வேண்டிய 2.95 கோடி வீடுகள் இலக்கை எட்டுவதற்கு ஏற்றவகையில் இந்தத்திட்டம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் வீட்டுவசதியை உறுதி செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

5. குனோ தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ) உத்தரப்பிரதேசம்

ஆ) அருணாச்சல பிரதேசம்

இ) ஹரியானா

ஈ) மத்திய பிரதேசம் 

  • உலகின் மிகப்பெரிய கண்டங்களுக்கு இடையேயான விலங்கு இட மாற்றம் ஒன்றில், மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசியப்பூங்கா 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 13 ஆப்பிரிக்க சிறுத்தைகளைப் பெறவுள்ளது. கடந்த 1952ஆம் ஆண்டில் கடைசியாக எஞ்சியிருந்த ஒரு சிறுத்தையும் சத்தீஸ்கரில் வேட்டையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

6. மெரியம்-வெப்ஸ்டரால் “நடப்பு 2021ஆம் ஆண்டின் சொல்லாக” தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் எது?

அ) Vaccine (தடுப்பூசி) 

ஆ) Quarantine (தனிமைப்படுத்துதல்)

இ) Infection (தொற்று)

ஈ) Isolation (தனித்திருத்தல்)

  • மெரியம்-வெப்ஸ்டர் என்பது பார்வையங்களை குறிப்பாக அகராதிகளை வெளியிடுகிற ஓர் அமெரிக்க நிறுவனமாகும். இந்நிறுவனம் அமெரிக்க நாட்டின் பழமையான அகராதி வெளியீட்டாளர்களுள் ஒன்றாகும்.
  • மெரியம்-வெப்ஸ்டர் ‘Vaccine’ என்ற சொல்லை 2021ஆம் ஆண்டின் சொல்லாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தச்சொல், 2021ஆம் ஆண்டில் மிக அதிகமாக தேடப்பட்ட சொல்லாகும்.

7. ‘டிரேட் எமர்ஜ்’ என்பது எந்த வங்கியின் ஆன்லைன் தளமாகும்?

அ) எஸ் பி ஐ

ஆ) ஐசிஐசிஐ 

இ) ஆக்சிஸ் வங்கி

ஈ) யூனியன் பேங்க் ஆப் இந்தியா

  • ஐசிஐசிஐ வங்கி ‘டிரேட் எமர்ஜ்’ என்ற ஆன்லைன் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியா முழுவதுமுள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வங்கி மற்றும் பிற டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது. இந்த இயங்குதளமானது எல்லைதாண்டிய வர்த்தகத்தை தொந்தரவு இல்லாததாகவும் வசதியாகவும் ஆக்குகிறது மற்றும் பல்வேறு ஏற்றுமதி – இறக்குமதி சேவைகளுக்கான ஒரு தொடர்புப் புள்ளியாக செயல்படுகிறது.

8. அதன் புகழ்பெற்ற செர்ரிப்பூக்கள் விழாவை சமீபத்தில் நடத்திய இந்திய மாநிலம் எது?

அ) அருணாச்சல பிரதேசம்

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) மேகாலயா 

ஈ) மேற்கு வங்காளம்

  • ஷில்லாங்கின் புகழ்பெற்ற செர்ரிப்பூக்கள் திருவிழா இவ்வாண்டு நவ.25 -27 வரை நடைபெற்றது. கடந்த ஆண்டு COVID தொற்று காரணமாக இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. மேகாலயா முதல்வர் கார்னாட் சங்மா டுவிட்டரில் இந்தத் திருவிழா குறித்து அறிவித்தார். மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங்கில் பல செர்ரிப்பூக்கள் காணப்படுகின்றன. இத்திருவிழாவில் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் மற்றும் பிற கலை நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.

9. ‘சர்ச்சைக்குரிய தீர்ப்பின் எதிர்காலத்தை வடிவமைத்தல்’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) NALSA

ஆ) NITI ஆயோக் 

இ) NHRC

ஈ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

  • “Designing the future of dispute Resolution: the ODR Policy Plan for India” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை NITI ஆயோக் வெளியிட்டது. ODR’ஐ ஏற்றுக்கொள்வதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள மூன்று நிலைகளிலான நடவடிக்கைகளை NITI ஆயோக் முன்மொழிந்தது.
  • டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கட்டட திறன், ஒழுங்குமுறை கட்டமைப்பு, ஆன்லைன் ஆவண எழுத்துப்பதிவு அனுமதி உள்ளிட்டவற்றை அதிகரி -ப்பதை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற APICA திட்டத்துடன் தொடர்புடை -ய துறை எது?

அ) பனி ஆய்வு 

ஆ) விண்வெளி ஆய்வு

இ) செயற்கை நுண்ணறிவு

ஈ) கிரிப்டோகரன்சி

  • European Project for Ice Coring in Antarctica (EPICA) என்பது ஐரோப்பிய ஆணையத்தால் நிதியளிக்கப்பட்ட மிகப்பழமையான பனி ஆய்வு திட்டம் ஆகும். இது Cnrஇன் துருவ அறிவியல் நிறுவனம் (இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில்) & பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.
  • அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழைமையான தொடர்ச்சியான பனிக் கட்டியை சேகரிப்பதை இந்தத்திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது. இது, 1.5 மில்லியன் ஆண்டு காலநிலை குறித்த பதிவை வழங்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பாரதி ஆய்வாளா்கள் ஆறு பேருக்கு விருதுகள்:

பாரதி ஆய்வாளா் சீனி.விசுவநாதன் உள்பட பாரதியாா் குறித்த ஆய்வுப் பணிகளைச் செய்த 6 பேருக்கு விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதி ஆய்வாளா்களுக்கு விருதுகளை அவா் அளித்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் பற்றியும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளா்களான சீனி.விசுவநாதன், பேராசிரியா் ய.மணிகண்டன் ஆகியோருக்கும், மறைந்த ஆய்வாளா்கள் பெரியசாமித் தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவரது குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சமும், விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சீனி விசுவநாதன், ய.மணிகண்டன் ஆகியோா் தலா ரூ.3 லட்சம் காசோலை மற்றும் பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகளைப் பெற்றனா்.

2. 11 டிசம்பர் 2021 – ‘மகாகவி’ பாரதியாரின் 140 ஆவது பிறந்தநாள்.

3. ரூ.20 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“முதல்வர் ஸ்டாலின் இன்று (10.12.2021) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை, பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சதுப்புநில சூழலியல் பூங்காவைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

சதுப்பு நிலம் என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு குறு தாவரங்களும், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் வசிக்கக்கூடிய பகுதியாகும். இச்சதுப்பு நிலம் வெள்ளத்தைத் தணித்தல், நிலத்தடி நீர் சேமிப்பை மேம்படுத்துதல், கரிபொருள் வரிசைப்படுத்துதலுக்கு உதவுதல், உயரிய பல்லுயிர்களை ஆதரித்தல், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்கு உதவுகிறது.

தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் 700 ஹெக்டர் பரப்பளவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி சென்னை மாநகரின் இடையே இயற்கை அழகுடன் காணப்படுகிறது. சென்னை மாநகரத்தில் பெருமழைக் காலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வெள்ளநீர் வடிகால் பகுதியாக இருந்து வருகிறது. இச்சதுப்புநிலம் சுமார் 231 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நீரை ஒக்கியமடுவு மற்றும் கோவளம் ஆகிய இரண்டு நீர் வெளியேற்றும் கால்வாய் மூலம் வங்காள விரிகுடாவில் கலக்க உதவுகிறது.

இச்சதுப்பு நிலப் பகுதியில் 176 வகையான பறவையினங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நிலநீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தையினங்கள், 5 வகையான ஒட்டுமீன் இனங்கள் மற்றும் 14 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆகிய உயிரினங்களின் வாழ்விடமாகவும், ஒட்டுமொத்தமாக 459 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரவலுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.

2019-20ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 2,65,313 பறவைகள் இச்சதுப்பு நிலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடமேற்குப் பகுதியில் பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்கா அமைத்திட தமிழக அரசால் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இச்சதுப்பு நிலத்தினைப் பாதுகாத்திட சுமார் 1,700 மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டதுடன், பொதுமக்கள் பார்வைக்காகவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதின் நோக்கத்திற்காகவும் பசுமையான பொது இடம் (PUBLIC GREEN SPACE) அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், பார்வையாளர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை, சதுப்பு நிலத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் விவரம், மீன் இனங்கள் பட்டாம்பூச்சி வகை, பறவையினங்கள், பல்லுயிர்ப் பரவல் மற்றும் அதன் வளம் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் கருத்தியல் அடையாளங்கள் மற்றும் மாதிரிகள், சூழலியல் பூங்காவில் அழகியலை மேம்படுத்த வேங்கை, அரசு, செஞ்சந்தனம், சந்தனம், குமிழ், மகாகனி, வேம்பு, நீர்மருது இலுப்பை போன்ற மண்சார்ந்த 5,000 மரக்கன்றுகள் நடைப்பாதையின் இருபுறமும் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளத் தடுப்புப் பணிக்காக தற்போது சுமார் 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை “ராம்சார் சாசனத்தின்”படி ஈரநிலமாக அறிவிக்கை செய்ய மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகை தரும் வெளிநாடு மற்றும் உள்ளூர் வலசை பறவையினங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினைப் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4. வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கியது.

சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு பார்வையாளர் அந்தஸ்தை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்சாரத் தொகுப்பு”- கொள்கைக்கு இது ஊக்கம் தரும். சமமான எரிசக்தி தீர்வுகளை உலகத்திற்கு வழங்க இது உதவும்.

சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு பார்வையாளர் அந்தஸ்தை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க முடிவு மாண்புமிகு பிரதமரின் ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்சார தொகுப்பு எனும் லட்சியத்தை நோக்கிய படிக்கல்லாக இருக்கும் என்று மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் தமது வாழ்த்து டிவிட்டர் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.

சூரிய சக்தி பயன்பாட்டின் மூலம் நியாயமான மற்றும் சமமான எரிசக்தி தீர்வுகளை வழங்குவதற்கான முன்முயற்சிக்கு மிகப்பெரும் உத்வேகத்தை இது வழங்கும் என்று திரு சிங் கூறியுள்ளார்.

சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் நிகர பூஜ்ஜிய கரிம உமிழ்வு எனும் இலக்கை எட்டுவதற்கும் இது பெரியளவில் உதவும் என்று கூறியுள்ள அவர், இந்த லட்சியத்திற்கு இந்தியா பெரிதும் பங்காற்றி வருவதாக கூறினார்.

5. இந்தியாவில் 37% ரயில்கள் மட்டுமே டீசலில் இயக்கம்: அமைச்சா் தகவல்

இந்தியாவில் 37 சதவீத ரயில்கள் மட்டுமே டீசல் என்ஜினில் இயக்கப்படுகின்றன; மீதி 63 சதவீதம் மின்சாரத்தில் இயங்குகின்றன என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியதாவது:

2019-20 ஆண்டு அறிக்கைப்படி டீசல் ரயில் என்ஜின்களுக்கு 23,706 லிட்டா் டீசல் செலவிடப்பட்டுள்ளது. நாள்தோறும் சராசரியாக 64.9 லட்சம் லிட்டா் செலவாகியுள்ளது.

அதே ஆண்டில் 1,38,547 லட்சம் கிலோ வாட் மின்சாரம், ரயில்களை இயக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தினசரி சராசரியாக 379 லட்சம் கிலோ வாட் மின்சாரம் செலவாகியுள்ளது. சராசரியாக தினமும் 13,555 பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், ‘ரயில்வேயை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாரம்பரியமாக இயக்கப்படும் ரயில் பெட்டிகளுக்குப் பதிலாக, தொழில்நுட்ப ரீதியில் அதிநவீன, பாதுகாப்பு மிகுந்த பெட்டிகளை மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் இத்தகைய நவீனரகப் பெட்டிகளை இந்திய ரயில்வே தயாரித்து வருகிறது. 2021 நவம்பா் வரை 575 ஜோடி ரயில்களில் இந்தப்பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன.

ரயில் பெட்டிகள் கிடைப்பதற்கு ஏற்ற வகையில், படிப்படியாக இந்தப் பெட்டிகள் ரயில்களில் சோ்க்கப்படும். மேலும், வந்தே பாரத் நவீன பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சோ்க்கப்பட்டு வருகின்றன’ என்று அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

6. தேசிய துப்பாக்கி சுடுதல்: அங்குா் மிட்டலுக்கு பட்டம்

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஷாட் கன் பிரிவில் ஓஎன்ஜிசி வீரா் அங்குா் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றாா்.

அந்தப் பிரிவில் அவா் 43 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ராஜஸ்தான் வீரா் ஆதித்யா பரத்வாஜ் 40 புள்ளிகளுடன் வெள்ளியும், உத்தர பிரதேசத்தின் ரயான் ரிஸ்வி 33 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

இதனிடையே, போபாலில் நடைபெறும் ரைஃபிள் பிரிவு போட்டியில் மத்திய பிரதேசத்தின் பாந்த்வி சிங் 50 மீட்டா் புரோன் பிரிவில் 626 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். அவா் சீனியா், ஜூனியா் என இரு பிரிவுகளிலுமே முதலிடம் பிடித்தாா்.

அதே போட்டியில் ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் திவ்யான்ஷ் பன்வாா் 250 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். மகாராஷ்டிரத்தின் ருத்ராங்க்ஷ் பாலாசாஹேப் 249.3 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், அஸ்ஸாமின் ஹிருதய் ஹஸாரிகா 228.2 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா். ஜூனியா் பிரிவிலும் திவ்யான்ஷ் முதலிடமும், ருத்ராங்க்ஷ் 2-ஆம் இடமும், தில்லியின் பாா்த் மகிஜா 3-ஆம் இடமும் பிடித்தனா்.

கலப்பு அணிகள் டிராப் பிரிவில் மத்திய பிரதேசம் தங்கமும், ஹரியாணா வெள்ளியும், தமிழகம் வெண்கலமும் வென்றது.

7. மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு வெற்றிகரமாக சோதனை

தொலைவு நீட்டிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட பினாகா பல்முனை ராக்கெட்டுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) அளித்த தொழில்நுட்ப பரிமாற்ற உதவியுடன் ஒரு தனியாா் நிறுவனம் இந்த பினாகா ராக்கெட்டுகளை தயாரித்துள்ளது.

இந்த ராக்கெட்டுகள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் சோதனை மையத்தில் கடந்த 3 தினங்களாக பரிசோதிக்கப்பட்டன. ராணுவ உயரதிகாரிகளுடன் இணைந்து டிஆா்டிஓ அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினா். வெவ்வேறு தொலைவுகளை நிா்ணயித்து, வெவ்வேறு ராக்கெட்டுகள் 24 முறை பரிசோதிக்கப்பட்டன. அனைத்துச் சோதனைகளிலும் ராக்கெட்டுகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்த என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினாகா எம்.கே.-1 ராக்கெட் அமைப்பு 40 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும், பினாகா எம்.கே.-2 ராக்கெட் அமைப்பு 60 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கும் திறன் கொண்டவை. பினாகா எம்.கே.-3 ராக்கெட் அமைப்பின் இலக்கு அறிவிக்கப்படவில்லை.

இந்த ராக்கெட் அமைப்புகளை டிஆா்டிஓவின் ஆய்வகங்களான புணேயில் உள்ள கனரக ஆயுதங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (ஏஆா்டிஈ), உயா் ஆற்றல் பொருள்கள் ஆராய்ச்சி ஆய்வகம் (எச்ஈஎம்ஆா்எல்) ஆகியவை இணைந்து வடிவமைத்துள்ளன.

பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடிய ‘சந்த்’ எனப்படும் தொலைவில் இருந்து தாக்கும் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணையை டிஆா்டிஓ, இந்திய விமானப் படை இணைந்து பொக்ரானில் சனிக்கிழமை பரிசோதித்துள்ளன. அதிநவீன மில்லி மீட்டா் அலை ரேடாா் தேடும் கருவி பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை, அதிக துல்லியமான தாக்கும் திறனை கொண்டுள்ளது. 10 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை இந்த ஆயுதம் தாக்கும்.

டிஆா்டிஓவின் இதர ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து ஹைதராபாதைச் சோ்ந்த ஆராய்ச்சி மையம் இமாரத், இந்த ஏவுகணையை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. தற்சாா்பு இந்தியாவை நோக்கிய முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது. இந்தப் பணிகளுடன் தொடா்புடைய குழுவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

8. உலகத் தமிழா் பொருளாதார மாநாடு: சென்னையில் டிச.27-இல் தொடக்கம்

எட்டாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு சென்னையில் வரும் டிச.27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

இது குறித்து உலகத் தமிழா் பொருளாதார மையத்தின் தலைவரும் மாநாட்டு அமைப்பாளருமான வி.ஆா்.எஸ்.சம்பத், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் வி.ஜி.சந்தோஷம், ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், பேராசிரியா் உலகநாயகி பழனி ஆகியோா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: உலகெங்கும் உள்ள தமிழ் தொழிலதிபா்கள், தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் வகையில் துபை, தென்னாப்பிரிக்கா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் 7 இதுவரை ஏழு முறை உலகத் தமிழா் பொருளாதார மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தற்போது எட்டாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோ ட்டலில் டிச.27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலதிபா்களும், தொழில்முனைவோா்களும் பங்கேற்கவுள்ளனா்.

தமிழகத்தில் விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன், பாரத் நிகா்நிலை பல்கலை. வேந்தா் ஜெகத்ரட்சகன், தொழிலதிபா்கள் ஜெம் ஆா்.வீரமணி, விஜிபி குழுமங்களின் தலைவா் வி.ஜி.சந்தோஷம், பழனி ஜி.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனா். தமிழக அரசின் சாா்பில் அமைச்சா்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு செயலா்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனா்.

வெளிநாடுகளிலிருந்து கயானா நாட்டின் முன்னாள் பிரதமா் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மோரீஷஸ் முன்னாள் குடியரசுத் தலைவா் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இலங்கை முன்னாள் அமைச்சா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் இணையவழியில் உரையாற்றவுள்ளனா். தமிழகத்தில் தொழில் தொடங்கவும், வணிக வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும் தனி அமா்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலை வேளையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த மாநாடு உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் பொருளாதாரம், பண்பாடு, கலை, சமூக நலன், திறன் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்க ஊக்குவிப்பாக அமையும். மாநாட்டின் இறுதி நாளில் சிறந்த 10 தமிழாா்வலா்களுக்கு ‘உலகத் தமிழ் மாமணி விருது’ வழங்கப்படவுள்ளது.

1. Which is the first airline in India to have launched an ESG report?

A) Air India

B) Spice Jet

C) IndiGo 

D) Vistara

  • IndiGo was the first airline in India to have launched an ESG report. IndiGo announced that it has signed an agreement with CSIR–Indian Institute of Petroleum (CSIR–IIP), Dehradun to join hands in deploying sustainable aviation fuel (SAF) in India and across the world.
  • Under this partnership, IndiGo and CSIR–IIP will enter into arrangements for projects for SAF based on techno–commercial feasibility. They will also focus on Environment, Social, and Governance (ESG) value creation.

2. Which is the world’s most valuable edtech company, as of 2021?

A) Duolingo

B) Byju’s 

C) Tribal–learning

D) Coursera

  • Bangalore–based Byju’s is an Indian multinational educational technology (ed–tech) company. It is the world’s most valuable ed–tech company with the m–cap of $18 billion. Byju’s has acquired Austria–headquartered GeoGebra and the value of the transaction is about $100 million. GeoGebra is an interactive mathematics learning tool. This is also the ninth major acquisition of Byju’s.

3. The SAARC Charter was adopted in which city on December 8, 1985?

A) New Delhi

B) Dhaka 

C) Kathmandu

D) Colombo

  • The South Asian Association for Regional Cooperation (SAARC) Charter Day is observed every year on 8th December. On this day in 1985, SAARC Charter was adopted in Dhaka, during the first summit of the group. This year also marks the 37th Anniversary of the regional group. SAARC has organised 18 summits since 1985.

4. The Union Cabinet approved the continuation of Pradhan Mantri Awaas Yojana (Rural) till which year, from 2021?

A) 2023

B) 2024 

C) 2025

D) 2030

  • The Union Cabinet approved the continuation of Pradhan Mantri Awaas Yojana (Rural) for another three years till March 2024. The extension of the scheme will help in the construction of the remaining 155.75 lakh houses. It will help achieve the target of 2.95 crore ‘pucca’ houses.

5. Kuno National Park is located in which state?

A) Uttar Pradesh

B) Arunachal Pradesh

C) Haryana

D) Madhya Pradesh 

  • In one of the world’s largest intercontinental animal translocation, Madhya Pradesh’s Kuno National Park is set to receive and inhabit 13 African cheetahs by early 2022. Cheetah – the fastest animal on earth was described as extinct in India in 1952 since the last surviving cheetah in India was hunted down in Chhattisgarh.

6. Which word has been chosen as the “2021 word of the year” by Merriam–Webster?

A) Vaccine 

B) Quarantine

C) Infection

D) Isolation

  • Merriam–Webster is an American company which publishes reference, especially dictionaries and is one of the oldest dictionary publishers in the USA. Merriam–Webster has chosen the word “vaccine” as the 2021 word of the year, since it was the word that was extremely high in its data every single day in 2021.

7. ‘Trade Emerge’ is an online platform of which Bank?

A) SBI

B) ICICI 

C) Axis Bank

D) Union Bank of India

  • Leading Indian Private Bank – ICICI Bank has launched an online platform named Trade Emerge, which offers banking and other digital services to exporters and importers across India. The platform makes cross border trade hassle–free and convenient and acts as a single point of contact for various Export – Import services.

8. Which Indian state held its famous Cherry Blossom Festival recently?

A) Arunachal Pradesh

B) Himachal Pradesh

C) Meghalaya 

D) West Bengal

  • Shillong’s famous Cherry Blossom Festival was held between November 25 and 27, this year. The festival was cancelled due to COVID outbreak last year. Meghalaya’s Chief Minister Cornad Sangma announced about the festival in Twitter. Several cherry blossoms are seen across Meghalaya’s capital city, Shillong. The festival includes various competitions, programmes and other art events.

9. Which institution released a report titled ‘Designing the future of dispute Resolution’?

A) NALSA

B) NITI Aayog 

C) NHRC

D) Law and Justice Ministry

  • The NITI Aayog released a report titled “Designing the future of dispute Resolution: the ODR Policy Plan for India”. It proposed measures at three levels to address the challenges in adopting ODR.
  • The report recommends increasing digital infrastructure, building capacity, regulatory framework, including permission for online notarisation, etc.

10. Beyond APICA Project, which was sometimes seen in the news recently, is associated with which field?

A) Ice Exploration 

B) Space Exploration

C) Artificial Intelligence

D) Cryptocurrency

  • The Beyond European Project for Ice Coring in Antarctica (EPICA) is the Oldest Ice project funded by the European Commission. It is being carried out by the Institute of Polar Sciences of the Cnr (National Research Council of Italy) and The British Antarctic Survey (BAS). The project aims to collect the oldest continuous ice core in Antarctica, providing a record of the climate spanning 1.5 million years.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!