TnpscTnpsc Current Affairs

13th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

13th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 13th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ஆண்டுதோறும் UNICEF நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர்.10

ஆ. டிசம்பர்.11

இ. டிசம்பர்.14

ஈ. டிசம்பர்.15

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. டிசம்பர்.11

  • ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.11 அன்று UNICEF நாள் கொண்டாடப்படுகிறது. UNICEF முதலில் ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு குழந்தைகளுக்கான அவசரகால நிதியம் என்று அழைக்கப்பட்டது; தற்போது அது அதிகாரப்பூர்வமாக ஐநா குழந்தைகள் நிதியம் என்று அழைக்கப்படுகிறது. ஐநா பொதுச்சபையால் இரண்டாம் உலகப்போரில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு & சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் இது ஆரம்பிக்கப்பட்டது. இது குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கிறது மற்றும் அவர்களின் திறனை நிறைவேற்ற உதவுகிறது.

2. அதன் பிரத்யேக காலநிலை மாற்ற இயக்கத்தைத் தொடங்கிய முதல் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. தெலுங்கானா

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதையும், அவற்றை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக்கொண்ட தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தால் (TNGCC) மாநிலத்தின் காலநிலை செயல்திட்டம் செயல்படுத்தப்படும். 2030–க்குள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள்மூலம் சரிபாதியளவு மின்சாரத்தை உற்பத்திசெய்ய திட்டமிட்டுள்ளதால், தற்போதுள்ள நிலக்கரி மின்னுற்பத்தி வசதிகளுடன் மேற்கொண்டு எதையும் சேர்ப்பதில்லை எனத் தமிழ்நாடு முடிவு செய்துள்ளது.

3. 2022 – உலக மலைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Climate Change and Mountains

ஆ. Women move mountains

இ. Protect Mountains

ஈ. Mountains are Monuments

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Women move mountains

  • ஐநா பொதுச்சபையானது 2002ஆம் ஆண்டை ஐநா சர்வதேச மலைகள் ஆண்டாக அறிவித்தது. கடந்த 2003ஆம் ஆண்டில் டிச.11ஆம் தேதியை, ‘உலக மலைகள் நாள்’ என ஐநா அறிவித்தது. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) இந்நாளது கொண்டாட்டத்திற்கான ஒருங்கிணைப்பு நிறுவனமாக உள்ளது. “Women move mountains” என்பது இந்த ஆண்டு (2022) உலக மலைகள் நாளுக்கானக் கருப்பொருளாகும். 2022 – உலக மலைகள் நாளானது மலைவாழ் பெண்டிர்க்கு அதிகாரமளிப்பதன் அவசியம்குறித்த விழிப்பை ஏற்படுத்துகிறது.

4. ‘அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு குறித்த தேசிய மாநாட்டை’ நடத்திய நகரம் எது?

அ. புனே

ஆ. வாரணாசி

இ. காந்தி நகர்

ஈ. மைசூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வாரணாசி

  • அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை வாரணாசியில் நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சம் ஏற்பாடு செய்தது. நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, AB–HWCs, Tele–MANAS ஆகியவற்றுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களுடன், CHO–களுக்கான பயிற்சித்தொகுதிகள் & SASHAKT இணையதளம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினார். சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களையும் அவர் அப்போது பாராட்டினார்.

5. G20இன் முதலாவது நிதிசார் கூட்டத்தை நடத்தும் நகரம் எது?

அ. மும்பை

ஆ. பெங்களூரு

இ. சென்னை

ஈ. கொல்கத்தா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பெங்களூரு

  • டிச.13–15 வரை நடைபெறும் G20இன் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டத்தை பெங்களூரு நடத்துகிறது. G20இன் நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டத்தை நிதியமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இணைந்து நடத்துகிறது. இந்திய G20 தலைமையின்கீழ் நிதிசார் நிகழ்ச்சிநிரல் குறித்த விவாதங்களின் தொடக்கத்தை இந்தச் சந்திப்பு குறிக்கின்றது. 2023 பிப்ரவரி 23–25 தேதிகளில் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும்.

6. நாட்டின் முதல் ஒட்டி (sticker) அடிப்படையிலான பற்றட்டையான ‘FIRSTAP’ஐ அறிமுகப்படுத்திய வங்கி எது?

அ. ஆக்சிஸ் வங்கி

ஆ. IDFC ஃபர்ஸ்ட் வங்கி

இ. பந்தன் வங்கி

ஈ. HDFC வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. IDFC ஃபர்ஸ்ட் வங்கி

  • IDFC ஃபர்ஸ்ட் வங்கி ‘FIRSTAP’ஐ அறிமுகப்படுத்தியது. நாட்டின் முதல் ஸ்டிக்கர் அடிப்படையிலான இப்பற்றட்டையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (NPCI) இணைந்து IDFC ஃபர்ஸ்ட் வங்கி அறிமுகப்படுத்தியது. ஸ்டிக்கர் அடிப்படையிலான இந்தப் பற்றட்டை வழக்கமான பற்றட்டையைவிட 1/3 பங்கு அளவே இருக்கும். அண்மைப் புலத் தொடர்பு (NFC)–செயல்படுத்தப்பட்ட விற்பனை முகத்தில் ஸ்டிக்கரைத் தட்டுவதன்மூலம் இதைப் பயன்படுத்தலாம்.

7. “Illegal Wildlife Trade and Climate Change: Joining the Dots” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNFCCC

ஆ. UNODC

இ. FAO

ஈ. UNEP

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. UNODC

  • போதைப்பொருள் & குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகமானது (UNODC) “Illegal Wildlife Trade and Climate Change: Joining the Dots” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. சட்டத்துக்குப்புறம்பான வனவிலங்கு வர்த்தகத்தைக் ஒழிப்பதற்கான முயற்சிகள் என்பது இயற்கைப் பாதுகாப்பு பிரச்சனை மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தைத் தணிப்பது மற்றும் மிக நிலையான மற்றும் நெகிழ்வான எதிர்கால காலநிலையை உறுதிசெய்வது ஆகிய இரண்டின் முக்கிய பகுதியாகும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

8. ‘eGramSwaraj மற்றும் Audit Online’ என்பது கீழ்க்காணும் எந்த நடுவண் அமைச்சகத்தின் முனைவுகளாகும்?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

இ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின், ‘eGramSwaraj’ மற்றும் ‘இணையவழி தணிக்கை’ ஆகிய இரு முனைவுகளும் மின்னாளுகைக்கான தேசிய விருதுகளின்கீழ் ‘தங்க’ விருதை வென்றுள்ளன. ‘e–Panchayat Mission Mode’ திட்டம், மின்னாளுகைக்கான தேசிய விருதுகளின் “டிஜிட்டல் உருமாற்றத்திற்கான அரசு செயல்முறை மறு–வடிவமைப்பில் சிறப்பானது” என்ற பிரிவின்கீழ் விருது வென்றுள்ளது.

9. ‘எக்குவடோரியல் கினியா’ என்ற நாடு அமைந்துள்ள பகுதி எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஆசியா

இ. அமெரிக்கா

ஈ. ஆப்பிரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஆப்பிரிக்கா

  • எக்குவடோரியல் கினியாவின் அதிபர் தியோடோரோ ஒபியாங் நுகுமா எம்பாசோகோ மத்திய ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்ற மறுதேர்தலில் வெற்றிபெற்று 6ஆவது முறையாக பதவியேற்றுள்ளார். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அதிபராக பதவி வகித்து உலகின் மிகநீண்ட அதிபராக பதவி வகித்த நபராக அவர் உள்ளார். ஒபியாங் தனது 43 ஆண்டுகால ஆட்சியை நீட்டித்து மேலும் ஏழு ஆண்டுகள் அதிபராக இருக்கவுள்ளார்.

10. டர்ஃப்–2022 நிகழ்வில், ‘ஆண்டின் சிறந்த பாரா விளையாட்டு ஆளுமை’ என்ற விருதை வென்றவர் யார்?

அ. அவனி லெகரா

ஆ. தீபா மாலிக்

இ. மாரியப்பன் தங்கவேலு

ஈ. தேவேந்திர ஜஜாரியா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அவனி லெகரா

  • பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகாரா, FICCIஇன் டர்ஃப்–2022 மற்றும் இந்திய விளையாட்டு விருதுகளில் ‘ஆண்டின் சிறந்த பாரா விளையாட்டு ஆளுமை’ என்ற விருதைப்பெற்றார். முன்னாள் இரஞ்சி கிரிக்கெட் வீரர் சர்கார் தல்வாருக்கு இவ்வாண்டின் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது. இவ்வாண்டின் ‘சிறப்பு விளையாட்டு வீரர்’ என ஷ்ரே காத்யன் அங்கீகரிக்கப்பட்டார். விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம் என ஒடிஸா மாநிலம் அங்கீகரிக்கப்பட்டது. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்த ஆண்டின் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு விருதை வென்றது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நேரடி வரி வசூல் 24% அதிகரிப்பு. 

நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் 24% அதிகரித்து `8.77 இலட்சம் கோடியாகி உள்ளதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடுவண் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: நடப்பு 2022-23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் நேரடி வரியாக `8.77 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 24.26% அதிகம். நடப்பு நிதியாண்டில் நேரடி வரியாக மொத்தம் `14.2 இலட்சம் கோடி வசூலாகும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 61.79% வசூலாகியுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் நேரடி வரியாக `14.1 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் வருவாய் & பெருநிறுவனங்களின் வருவாய்மீது விதிக்கப்படும் வரி நேரடி வரி என அழைக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை, கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு `2.15 இலட்சம் கோடி நிதி திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 67% அதிகமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரியாக (GST) மாதந்தோறும் `1.45 இலட்சம் கோடி முதல் `1.5 இலட்சம் கோடி வரை வசூலாகி வருகிறது. இது மறைமுக வரி என அழைக்கப்படுகிறது.

2. பசுமை தொழில்நுட்பம்மூலமாக புதிய வேலைவாய்ப்புகள்: பருவநிலை மாற்ற இயக்க அறிக்கையில் இலக்கு.

பசுமை தொழில்நுட்பம்மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்துக்கான திட்ட அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின், அண்மையில் தொடக்கி வைத்தார். அப்போது, அவர் அதற்கான திட்ட அறிக்கையையும் வெளியிட்டார். மேலும், அதில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாற்றமானது, இயற்கைச்சூழல், மனித உயிர்கள், பொருளாதார வளம் போன்றவற்றில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மிகநீண்ட தெளிவான தொலைநோக்கு, சிறந்த தலைமை, நல்ல புரிதல்போன்ற அம்சங்களே பருவநிலை மாற்ற எதிர்கொள்ளலுக்குத் தேவையாக இருக்கின்றன.

இதனை மனதில் கொண்டே தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சில இலக்குகளை முன்வைத்து இயங்கவுள்ளது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி முகமைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியன பருவநிலை மாற்றம், பேரிடர் தணிப்பு போன்ற பிரிவுகளில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. இந்த அனுபவங்கள், பருவநிலை மாற்றக் கொள்கைகளை வகுக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வழிசெய்யப்படும். பல்வேறு விதமான பருவநிலை மாற்ற பிரச்னைகள், கடல்நீர்மட்டம் உயர்வது போன்றவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

பைங்குடில் வாயுக்களால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனைக் குறைப்பதற்குத் தேவையான பணிகளை பருவநிலை மாற்ற இயக்கம் மேற்கொள்ளும். தூய மற்றும் பசுமை எரிசக்தியை பயன்படுத்தச் செய்வது, சூழலைப் பாதிக்காத பொதுப்போக்குவரத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது, மரபுசாரா எரிசக்திகளை அதிகம் பயன்படுத்தச் செய்வது போன்ற அம்சங்களை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் மரங்களின் அளவை 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் போன்றவற்றுடன், பருவநிலை மாறுபாடு இயக்கம் இணைந்து பணியாற்றும். பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் ஆராயப்படும். இதுதொடர்பான நிபுணத்துவம்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பருவநிலை மாற்ற இயக்கம் தொடர்ந்து பணியாற்றும் என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு: நடுவண் அரசு

கடந்த 2005-2021 வரை 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என மாநிலங்களவையில் நடுவண் அரசு தெரிவித்தது.

மாநிலங்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது நடுவண் திட்ட அமைச்சகத்தின் இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு மற்றும் ஐநாஇன் மேம்பாட்டுத் திட்டம் வெளியிட்ட, ‘உலக பலபரிமாண வறுமைக் குறியீடு 2022’இன்படி, இந்தியாவில் 2005-06 முதல் 2019-21 வரையிலான கால அளவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். NITI ஆயோக் வெளியிட்ட ‘பலபரிமாண வறுமைக் குறியீடு-2021’ தரவுகள்படி, இந்திய மக்கள்தொகையில் 25.01 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர். இது ஊரகங்களில் 32.75 சதவீதமாகவும் நகரங்களில் 8.81 சதவீதமாகவும் உள்ளது. இத்தரவுகள் 2019-2021 வரையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்பநல சுகாதரக் கணக்கெடுப்பு-5இலிருந்து பெறப்பட்டது.

13th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. When is the UNICEF Day observed every year?

A. December.10

B. December.11

C. December.14

D. December.15

Answer & Explanation

Answer: B. December.11

  • Every year UNICEF Day is celebrated on December 11. UNICEF was originally called the United Nations International Children’s Emergency Fund and now officially called as United Nations Children’s Fund. After World War II, the United Nations formed the International Children’s Emergency Fund to provide with humanitarian aid for the well–being of the children whose future was at risk. It also defends children’s rights and helps them fulfil their potential.

2. Which is the first state to launch its dedicated climate change mission?

A. Tamil Nadu

B. Kerala

C. Telangana

D. Odisha

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu Chief Minister M K Stalin launched the Tamil Nadu Climate Change Mission to protect the natural resources in the state as well as to restore them. The State’s Climate Action Plan will be implemented by the Tamil Nadu Green Climate Company (TNGCC). Tamil Nadu has decided to stop any additions to its existing coal power capacity as the mission sought to generate half of electricity through renewable sources by 2030.

3. What is the theme of ‘International Mountain Day 2022’?

A. Climate Change and Mountains

B. Women move mountains

C. Protect Mountains

D. Mountains are Monuments

Answer & Explanation

Answer: B. Women move mountains

  • UN General Assembly declared 2002 as the UN International Year of Mountains and designated 11 December, as “International Mountain Day” from 2003 onwards. The Food and Agriculture Organization of the United Nations (FAO) is the coordinating agency for this celebration (IMD). ‘Women Move Mountains’ is the theme of this year’s International Mountain Day. International Mountain Day 2022 raises awareness about the need to empower mountain women.

4. Which city hosted the ‘National Conclave of Universal Health Coverage’?

A. Pune

B. Varanasi

C. Gandhi Nagar

D. Mysuru

Answer & Explanation

Answer: B. Varanasi

  • The two–day–long National conclave of Universal Health Coverage was organised in Varanasi, by the Union Ministry of Health and Family Welfare. Union Minister of Health & Family Welfare, Dr. Mansukh Mandaviya launched operational guidelines for AB–HWCs, Tele–MANAS along with training modules for CHOs and SASHAKT portal at the inaugural ceremony. He also felicitated Best Performing States/UTs.

5. Which city is the host of the first G20 Finance and Central Bank Deputies (FCBD) meeting?

A. Mumbai

B. Bengaluru

C. Chennai

D. Kolkata

Answer & Explanation

Answer: B. Bengaluru

  • Bengaluru is the host of the first G20 Finance and Central Bank Deputies (FCBD) meeting from December 13 to 15. The G20 Finance and Central Bank Deputies (FCBD) meeting is jointly hosted by the Finance Ministry and the Reserve Bank of India (RBI). The meeting will mark the start of discussions on the Finance Track agenda under the Indian G20 presidency. The Finance Ministers and Central Bank Governors Meeting will be held in Bengaluru during February 23–25 2023.

6. Which bank launched FIRSTAP, the country’s first sticker–based debit card?

A. Axis Bank

B. IDFC First Bank

C. Bandhan Bank

D. HDFC Bank

Answer & Explanation

Answer: B. IDFC First Bank

  • IDFC First Bank launched FIRSTAP, the country’s first sticker–based debit card, in association with National Payments Corporation of India (NPCI). The sticker–based debit card was one–third the size of a regular debit card.  It can be used by tapping the sticker on a near field communication (NFC)–enabled point–of–sale terminal.

7. Which institution released a report titled ‘Illegal Wildlife Trade and Climate Change: Joining the Dots’?

A. UNFCCC

B. UNODC

C. FAO

D. UNEP

Answer & Explanation

Answer: B. UNODC

  • UN Office on Drugs and Crime (UNODC) released a report titled ‘Illegal Wildlife Trade and Climate Change: Joining the Dots’. The report states that efforts to reduce illegal wildlife trade (IWT) are not only a nature conservation issue, but an important part of both mitigating climate change and ensuring a more stable and resilient future climate.

8. ‘eGramSwaraj and Audit Online’ are the initiatives of which Union Ministry?

A. Ministry of Rural Development

B. Ministry of Panchayati Raj

C. Ministry of Agriculture and Farmers Welfare

D. Ministry of MSME

Answer & Explanation

Answer: B. Ministry of Panchayati Raj

  • eGramSwaraj and Audit Online initiatives of Ministry of Panchayati Raj wins GOLD AWARD under the National Awards for e–Governance. e–Panchayat Mission Mode Project has won the under the category “Excellence in Government Process Re–engineering for Digital Transformation” of the National Awards for e–Governance.

9. ‘Equatorial Guinea’ is a country located in which region?

A. Australia

B. Asia

C. America

D. Africa

Answer & Explanation

Answer: D. Africa

  • Equatorial Guinea’s President Teodoro Obiang Nguema Mbasogo has won the re–election bid in the central African country making this his sixth term in office. He is the world’s longest–serving president for over four decades. Obiang will serve another seven years as the president, extending his 43–year rule.

10. Who won the ‘Para Sports Person of Year award’ at the Turf 2022 event?

A. Avani Lekhara

B. Deepa Malik

C. Mariyappan Thangavelu

D. Devendra Jhajharia

Answer & Explanation

Answer: A. Avani Lekhara

  • Paralympic medallist Avani Lekhara received the ‘Para Sports Person of Year’ award at the Turf 2022 and India Sports Awards of FICCI. Former Ranji cricketer Sarkar Talwar was honoured with the Lifetime Achievement of the Year award. Shrey Kadyan was recognized as the Special Sportsperson of the Year. Odisha was recognized as the best state for promoting sports. The All–India Chess Federation won the National Sports Federation of the Year Award.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!