13th March 2020 Current Affairs in Tamil & English

13th March 2020 Current Affairs in Tamil & English

13th March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

13th March 2020 Current Affairs Tamil

13th March 2020 Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்திய, “Cova Punjab” என்ற அலைபேசி செயலி, எந்த நோய்குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. கால் மற்றும் வாய் நோய்

ஆ. கொரோனா வைரஸ்

இ. பன்றிக் காய்ச்சல்

ஈ. மலேரியா

 • கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து விழிப்புணர்வைப் பரப்புவதற்காக பஞ்சாப் மாநில அரசாங்கம், அண்மையில், “Cova Punjab” என்ற அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது. இந்தச்செயலியை, மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறையுடன் இணைந்து அம்மாநிலத்தின் அரசு சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர் துறை உருவாக்கியுள்ளது.
 • இந்தச்செயலியில், அரசால் வழங்கப்பட்ட நோய்த்தொற்று அறிகுறிகளை சரிபார்த்துக்கொள்வதற்கான வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலுள்ள மருத்துவமனையையும் இது பரிந்துரைக்கிறது.

2. Lt.Gen KJS தில்லான், அண்மையில் எந்த அமைப்பின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்?

அ. புலனாய்வுப் பணியகம்

ஆ. பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு

இ. மத்திய புலனாய்வுப் பிரிவு

ஈ. ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு

 • Lt.Gen KJS தில்லான், முப்படைக்கும் தகவல் சேகரிக்கும் பாதுகாப்புப்புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநராகவும், ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகளின் (புலனாய்வு) துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இராணுவத்தின் 15ஆவது பிரிவின் முன்னாள் தலைவராக இருந்தார். இந்நியமனத்தின்மூலம், Lt. General AS பேடியை அடுத்து KJS தில்லான் இப்பதவிக்கு வந்துள்ளார். முப்படைகளிலிருந்தும் உளவுத்துறை தகவல்களை கையாளுவதே இப்பதவிக்கான பொறுப்பாகும்.

3. ‘ஷாதி பாக்யா திட்டம்’ என்பது எந்த மாநிலத்தின் திட்டமாக இருந்தது?

அ. பீகார்

ஆ. ஒடிசா

இ. கர்நாடகம்

ஈ. மகாராஷ்டிரா

 • கர்நாடக மாநில அரசு, அண்மையில், கடந்த 2013ஆம் ஆண்டில் அம்மாநிலத்தில் தொடங்கப்பட்ட, ‘ஷாதி பாக்யா திட்டத்தை’ நிறுத்தியது. இந்தத்திட்டத்தின்கீழ், இசுலாமிய மணப்பெண்களுக்கு, ஆதார் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கான அட்டைகளைச் சமர்ப்பிக்கும்போது திருமணச் செலவுகளுக்காக `50,000 நிதியுதவி வழங்கப்பட்டுவந்தது. இந்தத்திட்டத்திற்காக, முந்தைய கூட்டணி அரசு, `60 கோடி நிதி ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

4.இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இ-வித்யபாரதி & இ-ஆரோக்கிய பாரதி (e-VBAB) நெட்வொர்க் திட்டத்தில், அண்மையில் பதினாறாவது உறுப்பினராக இணைந்த நாடு எது?

அ. செனகல்

ஆ. தி காம்பியா

இ. கானா

ஈ. சாம்பியா

 • தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (TCIL) ஆனது, அண்மையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இ-வித்யபாரதி மற்றும் இ-ஆரோக்கியபாரதி (e-VBAB) வலையமைப்புத் திட்டத்தில் காம்பியாவை பங்கேற்கச் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
 • இத்திட்டத்தில் பங்கேற்கும் பதினாறாம் நாடு காம்பியா ஆகும். TCIL என்பது e-VBAB வலையமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனமாகும். இது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தொலைமருத்துவம் மற்றும் தொலைதூர கல்விச்சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5.தாராமதி & பிரேமாமதியின் கல்லறைகள், எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் உள்ளன?

அ. புது தில்லி

ஆ. உத்தரபிரதேசம்

இ. தெலுங்கானா

ஈ. மகாராஷ்டிரா

 • குதுப் ஷாகி கல்லறை வளாகத்திற்குள் உள்ள தாராமதி & பிரேமாமதி ஆகியோரின் கல்லறைகளுக்கு அமெரிக்கா வழங்கிய நிதியுதவித்திட்டம் நிறைவடைந்ததாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் கென்னத் ஜஸ்டர் அறிவித்தார்.
 • இவ்விரு கல்லறைகளும், தெலுங்கானாவின் தலைநகரமான ஹைதராபாத்தில் அமைந்துள்ள 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்லறைகளாகும். கடந்த 2019 பிப்ரவரியில், அகா கான் அறக்கட்டளையுடன் கூட்டிணைந்து கலாசார பாதுகாப்பிற்கான தூதர்கள் நிதியத்தின்மூலம் அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், $103,000 மானியத்தை அறிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டில், கல்லறை கட்டமைப்புகளை வரைபடமாக்குவதற்கும் ஆவணப்படுத்துவதற்கும் இதேபோன்ற மானியத்தை அவை பெற்றன.

6.நடப்பாண்டு (2020) சர்வதேச பெண்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Think Equal, Build Smart, Innovate for Change

ஆ. I am Generation Equality: Realizing Women’s Rights

இ. Time is now: Rural and Urban Activists Transforming Women’s Lives

ஈ. Role of Women in Addressing Climate Change

 • ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “I am Generation Equality: Realizing Women’s Rights” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான, கருப்பொருளாகும். இக்கருப்பொருள், ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பின், “Generation Equality” என்ற பரப்புரைக் கருப்பொருளுக்கு இணங்க உள்ளது.
 • இந்நாள், பெய்ஜிங்கில், பெண்கள் பற்றிய நான்காவது உலக மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டுக்கான தளத்தின் 25ஆவது ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. “Each For Equal” என்பது இந்நாளில் மேற்கொள்ளப்படும் பரப்புரைக்கான கருப்பொருளாகும்.

7.அங்கிதா ரெய்னா தொடர்புடைய விளையாட்டு எது?

அ. பூப்பந்து

ஆ. டென்னிஸ்

இ. ஸ்குவாஷ்

ஈ. டேபிள் டென்னிஸ்

 • அங்கிதா ரெய்னாவின் அபார இரட்டை வெற்றியால் முதன்முறையாக பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக சுற்றுக்கு இந்தியா தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது. துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் சீனா, இந்தியா, தென்கொரியா, இந்தோனேசியா, தைவான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மகளிர் அணிகள் கலந்துகொண்டன. இதில் சீனாவிடம் மட்டும் இந்தியா தோல்விகண்டது. உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, சீனதைபே உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியது. இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

8. ICC பெண்கள் T20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை யார்?

அ. ஹர்மன்பிரீத் கெளர்

ஆ. ஷபாலி வர்மா

இ. பூனம் யாதவ்

ஈ. ஸ்மிருதி மந்தனா

 • T20 உலகக்கோப்பை தொடருக்கான ICC-XI அணியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் மட்டும் இடம்பிடித்துள்ளார். 12ஆவது வீராங்கனையாக இந்தியாவின் ஷபாலி வர்மா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பூனம் யாதவ், மொத்தம் 10 விக்கெட் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் தொடங்க உதவினார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷபாலி வர்மா, மொத்தம் 163 ரன்கள் குவித்து, ICC T20 தரவரிசையில் முதலிடத்தை எட்டினார்.

9. “மிஷன் சக்தி” என்றழைக்கப்படும் சுயவுதவிக்குழுவுக்கு, பிரத்யேகத் துறையொன்றை அமைப்பதற்கு முடிவுசெய்துள்ள மாநிலம் எது?

அ. மேற்கு வங்கம்

ஆ. கேரளா

இ. ஒடிசா

ஈ. ஆந்திர பிரதேசம்

 • ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், அண்மையில், “மிஷன் சக்தி” என்றழைக்கப்படும் சுய உதவிக்குழுவுக்கு பிரத்யேகத் துறையொன்றை அமைக்கும் முதல் மாநிலமாக ஒடிசா இருக்கும் என்று அறிவித்தார். இந்தப்பிரத்யேகத் துறையுடன் கூடுதலாக, மாநிலத்தின் அனைத்து தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பாட்டை மையமாகக்கொண்ட ஓர் ஊட்டச்சத்துத்திட்டத்தையும் அந்த மாநில அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.

10.தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கான, ‘NIGHA’ என்னும் அலைபேசி செயலி (app) என்பது எந்த மாநிலத்தின் முன்னெடுப்பாகும்?

அ. பஞ்சாப்

ஆ. இராஜஸ்தான்

இ. குஜராத்

ஈ. ஆந்திர பிரதேசம்

 • ஆந்திர பிரதேச மாநில அரசு, அண்மையில், ‘NIGHA’ என்னும் ஓர் செயலியை அறிமுகப்படுத்தியது. இது, தேர்தலின்போது ஏற்படும் முறைகேடுகளைத் தடுப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இச்செயலியின் மூலம், எந்தவொரு நபரும், பரப்புரையின்போதான ஊழல் அல்லது முறைகேடுகள் குறித்து புகார்களை பதிவுசெய்யலாம். பொதுமக்களால் அனுப்பப்படும் நிழற்படங்கள், ஒலிக்கோப்பு அல்லது காணொளிப் பதிவுகளுடன், அதற்குரிய நடவடிக்கைகள் அரசாங்கத்தால் எடுக்கப்படும்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

 • சென்னையில் மாநகர பேருந்துகள் வருவதை பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில், ‘சலோ’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள், பேருந்துகளின் வருகை, வழித்தட நிறுத்தங்கள், எவ்வளவு நேரத்துக்குள் வரும் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளமுடியும்.
 • உலகளாவிய சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் QS தரவரிசைப்பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டைவிட 24 இடங்கள் முன்னேறி 373ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. இதேபோல், மெட்ராஸ் IIT’உம் 7 இடங்கள் முன்னேறி, 88ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *