TnpscTnpsc Current Affairs

13th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

13th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 13th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. “பெண்குழந்தைகள் திறமையானவர்கள் – மரபுசாரா வாழ்வாதார வழிகளில் பெண்களுக்கான திறன்கள்” என்பது கீழ்க்காணும் எந்த முதன்மைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது?

அ. பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ

ஆ. இராஷ்டிரிய மகிளா கோஷ்

இ. போஷான் அபியான்

ஈ. பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ

  • நடுவணரசானது, ‘பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற அதன் முதன்மை திட்டத்தில், “பெண்குழந்தைகள் திறமையானவர்கள்–மரபுசாரா வாழ்வாதார வழிகளில் பெண்டிர்க்கான திறன்கள்” என்பதை சேர்ப்பதாக அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் தரமான கல்வியை வழங்குவதற்கு பல்வேறு துறைகளுக்கு இடையே தேவைப்படும் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

2. ‘ஒரே நாடு, ஒரே கட்டமைப்பு, ஒரே அதிர்வெண் மற்றும் ஒரே தேசிய சுமை அனுப்பும் மையத்துடன்’ தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. தகவல் தொடர்பு அமைச்சகம்

ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. எரிசக்தி அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. எரிசக்தி அமைச்சகம்

  • புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்களை தேசிய மின்சார கட்டமைப்புடன் ஒருங்கிணைக்க, நடப்பு ஆண்டில் 66.5 கிகாவாட் திறன்கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்களுக்கான பரிமாற்ற அமைப்புகளை அமைக்கும் செயல்முறையை நடுவண் எரிசக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது தலைமுறையின் மாறுபாட்டை நிவர்த்தி செய்ய 13 RE மேலாண்மை மையங்களையும் (REMC) நிறுவும். 2026–27க்குள் கூடுதலாக 52 GW திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்களை ஒருங்கிணைப்பதற்காக ஒரு செலுத்துகை அமைப்பும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே கட்டமைப்பு, ஒரே அதிர்வெண் மற்றும் ஒரே தேசிய சுமை அனுப்பும் மையம்’ (NLDC) உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து எரிசக்தித் துறை அமைச்சர் விளக்கினார்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘PM–DevINE’ திட்டம் என்பது கீழ்க்காணும் எந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டதாகும்?

அ. கடலோரப் பகுதிகள்

ஆ. மலையகங்கள்

இ. வடகிழக்குப்பகுதி

ஈ. எல்லைப்புறப் பகுதிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. வடகிழக்குப்பகுதி

  • 2022–23 முதல் 2025–26 வரையிலான பதினைந்தாவது நிதி ஆணையத்தின் எஞ்சிய நான்கு ஆண்டுகளுக்கு “பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முனைவு” என்ற புதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவணமைச்சரவைக் கூட்டம் ஒப்புதலளித்துள்ளது. 100 சதவீதம் நடுவணரசின் நிதியிலான இப்புதிய திட்டத்தை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் அமலாக்கும். இந்த நான்காண்டு காலத்திற்கான திட்ட ஒதுக்கீடு `6600 கோடியாக இருக்கும்.

4. சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட CPI அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் என்ன?

அ. 6.25%

ஆ. 7.2%

இ. 7.41%

ஈ. 7.91%

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 7.41%

  • தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், நுகர்வோர் விலைக்குறியீட்டின் (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 7 சதவீதமாக இருந்தது. விலையுயர்ந்த உணவுப் பொருட்களால் சில்லறை பணவீக்கம் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக சில்லறை பண வீக்கம் இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

5. ‘உலகளாவிய கிரிப்டோ ஏற்றுக்கொளல் குறியீடு – 2022’இல் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. இரண்டாவது

ஆ. நான்காவது

இ. ஆறாவது

ஈ. எட்டாவது

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நான்காவது

  • சைனாலிஸிஸின்  2022 – உலகளாவிய கிரிப்டோ ஏற்றுக்கொளல் அறிக்கையின்படி, ‘உலகளாவிய கிரிப்டோ ஏற்றுக்கொளல் குறியீடு – 2022’இல் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, கிரிப்டோகரன்சி ஏற்றுக்கொளலில் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது. 0.663 குறியீட்டு மதிப்பெண்ணுடன் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. அனைத்து கிரிப்டோ கரன்சி வர்த்தகத்திற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

6. ‘2022– இந்திய பாகுபாடு’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ. UNICEF

ஆ. WEF

இ. NITI ஆயோக்

ஈ. ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்

  • ஆக்ஸ்பாம் இந்தியா, ‘2022 – இந்திய பாகுபாடு அறிக்கை’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான 98 சதவீத வேலைவாய்ப்பு இடைவெளிக்கு பாலின பாகுபாடுதான் காரணமாக உள்ளது. தொழிலாளர் சந்தையில் கிராமப்புறங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் 100% வேலைவாய்ப்பு சமத்துவமின்மையையும் நகர்ப்புறங்களில் 98 சதவீதத்தையும் இப்பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பதையும் இது காட்டுகிறது. சுயதொழில் செய்யும் ஆண்கள் பெண்களைவிட 2.5 மடங்கு அதிகமாக ஈட்டுகிறார்கள்; இதில் 83 சதவீதம் பாலின அடிப்படையிலான பாகுபாடு காரணமாக அமைகிறது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘SOVA வைரஸ்’ என்றால் என்ன?

அ. COVID–19 திரிபு

ஆ. இன்புளூயன்ஸா வைரஸ் திரிபு

இ. தீம்பொருள்

ஈ. கிரிப்டோகரன்ஸி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தீம்பொருள்

  • SOVA வைரஸ் என்பது புதிய அலைபேசி வங்கிச்சேவை ஊடாக வரும் டிரோஜன் வைரஸாகும்; இது ஆண்ட்ராய்டு அலைபேசி வழியாகப் பரவுகிறது. இந்தியாவில் ஜூலை மாதம் முதன்முதலில் இவ்வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர் அது அதன் ஐந்தாவது பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் நடுவண் இணைய பாதுகாப்பு நிறுவனம் ஓர் ஆலோசனையை வெளியிட்டது. 2022 ஜூலையில், இந்தியா உட்பட பல நாடுகளை அவ்வைரஸ் அதன் இலக்கு பட்டியலில் சேர்த்தது. கீ லாக்கிங், குக்கீகளைத் திருடுதல் மற்றும் பல செயலிகளில் தவறான மேலடுக்குகளைச் சேர்ப்பதன்மூலம் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை சேகரம் செய்யும் திறனை இது கொண்டுள்ளது.

8. ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு சம ஊதிய நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.12

ஆ. செப்டம்பர்.14

இ. செப்டம்பர்.18

ஈ. செப்டம்பர்.20

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. செப்டம்பர்.18

  • பாலின ஊதிய இடைவெளியை முன்னிலைப்படுத்தி ஆண்டுதோறும் உலக சம ஊதிய நாள் அனுசரிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வாகும்; இது செப்டம்பர்.18 அன்று வருகிறது. பன்னாட்டு சம ஊதிய நாள் முதன்முதலில் 1996இல் பே ஈக்விட்டிக்கான தேசியக் குழுவால் அனுசரிக்கப்பட்டது. உலகெங்கிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாட்டை முடிவுக்குக்கொண்டுவருவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராம்குமார் இராமநாதன் & பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. டென்னிஸ்

ஆ. பூப்பந்து

இ. ஸ்குவாஷ்

ஈ. சதுரங்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. டென்னிஸ்

  • டேவிஸ் கோப்பை உலக குரூப்–1 டையில், நார்வேயின் லில்லிஹாமரில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 0–3 என்ற கோல் கணக்கில் நார்வேயிடம் தோல்வியடைந்தது. இந்திய டென்னிஸ் வீரர் இராம்குமார் இராமநாதன் அவரைவிட குறைவான தரவரிசையிலிருந்த துராசோவிச்சிடம் வீழ்ந்தார். மற்றொரு ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் 2ஆவது இடத்தில் உள்ள காஸ்பர் ரூடிடம் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வீழ்ந்தார். இரட்டையர் ஆட்டத்தில், உலகின் நம்பர் 2ஆவது இடத்தில் உள்ள காஸ்பர் ரூட் மற்றும் விக்டர் துராசோவிக் அடங்கிய நார்வே ஜோடி, இந்திய ஜோடியான யூகி பாம்ப்ரி–சாகேத் மைனேனியை தோற்கடித்தது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘The Fabelmans’ என்ற திரைப்படத்தின் இயக்குநர் யார்?

அ. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

ஆ. ஜார்ஜ் லூகாஸ்

இ. மார்ட்டின் ஸ்கோர்செஸி

ஈ. குவென்டின் டரான்டினோ

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

  • ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின், ‘தி ஃபேபல்மேன்ஸ்’ என்ற திரைப்படம் டொராண்டோ பன்னாட்டு திரைப்பட விழாவில் (TIFF) 2022ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க, ‘மக்கள் தேர்வு’ விருதை வென்றது. இது மிகவும் பிரபலமான மற்றும் ஓரளவு சுயசரிதை சார்ந்த திரைப்படமாகும். TIFF பீப்பிள்ஸ் சாய்ஸ் ஆவணப்பட விருதை ஹூபர்ட் டேவிஸ் இயக்கிய ‘பிளாக் ஐஸ்’ வென்றது. TIFF பீப்பிள்ஸ் சாய்ஸ் மிட்நைட் மேட்னஸ் விருதை எரிக் அப்பல் இயக்கிய ‘வியர்ட்: தி அல் யான்கோவிக் ஸ்டோரி’ வென்றது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. திண்டுக்கல், கரூரில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயங்கள் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பில் அமைக்கப்படுகிறது எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேவாங்கு, இரவுநேர பாலூட்டி வகையைச் சேர்ந்தது. அளவில் சிறியதாக இருக்கும் அவை, மரவகை இனத்தைச் சேர்ந்தது. இந்த இனம் பயிர்களுக்குச் சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மைபயக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் தேவாங்குகள் முக்கியப்பங்கை வகிக்கின்றன.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச மையமானது தேவாங்கை அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் இணைத் -துள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் அவைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தணித்தல் ஆகியவற்றின்மூலம் தேவாங்கு இனத்தின் எண்ணிக்கையை பெருக்கவியலும்.

கரூர்-திண்டுக்கல்: அழிந்துவரும் தேவாங்குகள் இனத்தைப் பாதுகாக்கும் வகையில், கரூர், திண்டுக்கல் மாவட்டங் -களில் 11,806 ஹெக்டேர் பரப்பிலான வனப்பகுதிகள் அவற்றின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட் -டுள்ளன. இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழ்நாடு அரசு, இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவுயிரி சரணாலயம் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்ப -டும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11 ஆயிரத்து 806.56 ஹெக்டேர் பரப்பிலான நிலத்தைக் கடவூர் தேவாங்கு சரணாலயமாக அறிவித்து அறிவிக்கை செய்துள்ளது.

புதிய வாழ்விடங்கள்: தேவாங்கைப்போன்று, வேறு பல அழிந்துவரும் உயிரினங்களைக் காக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடற்பசு பாதுகாப்பகம், கழுவேலி பறவைகள் சரணாலயம், அகத்தியர் மலை யானைகள் பாதுகாப்பகம், திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம், 13 ஈரநிலப்பகுதிகளை இராம்சர் சாசனப்பகுதிகளில் இடம்பெறச்செய்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

2. 4ஆவது, ‘வந்தே பாரத்’ இரயிலைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோதி.

ஹிமாசல பிரதேசத்தில், ‘வந்தே பாரத்’ விரைவு இரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி தொடக்கிவைத்தார். நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமார் 160 கிமீ வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த இரயில் சேவை கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வந்தே பாரத் விரைவு ரயிலின் 3ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமர் மோதி தொடக்கி வைத்தார்.

இந்நிலையில், 4ஆவது இரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா இரயில் நிலையத்திலிருந்து தில்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

3. ‘குட்டி காவலர்’ மாணவர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

‘குட்டி காவலர்’ என்ற மாணவர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இளம் பள்ளிச்சிறார்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுபற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்மூலம் சாலைப்பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப்பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே, ‘குட்டி காவலர்’ திட்டத்தின் நோக்கமாகும்.

4. குவைத்துக்கான புதிய இந்திய தூதர் நியமனம் 

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக வெளியுறவுப்பணி மூத்த அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா நியமிக்கப்பட்டார். கடந்த 2002ஆம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப்பணி அதிகாரியான ஆதர்ஷ் ஸ்வைகா, தில்லியிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக தலைமையகத்தில் இணைச்செயலராக தற்போது பணியாற்றி வருகிறார். அவர் விரைவில் தனது புதிய பொறுப்பை ஏற்பார் என்று அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்துக்கான தற்போதைய இந்திய தூதராக சிபி ஜார்ஜ் உள்ளார்.

வளைகுடா நாடுகளில் இந்தியாவின் முக்கிய கூட்டுறவு நாடாக குவைத் கருதப்படுகிறது. இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது. இதேபோல், கினியா குடியரசுக்கான அடுத்த இந்திய தூதராக ஔதார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

5. சர்வீசஸ் சாம்பியன்; தமிழ்நாடு 5ஆம் இடம்

குஜராத்தில் நடைபெற்று வந்த 36ஆவது தேசிய விளையாட்டுப்போட்டிகள் நிறைவடைந்தன. இந்தப் போட்டியில் தொடர்ந்து 4ஆவது முறையாக சர்வீசஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு 5ஆம் இடம் பிடித்தது. போட்டியின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த சர்வீசஸ் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரம், ஹரியானா முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. போட்டி முழுவதுமாக சிறப்பாகச் செயல்பட்ட அணியாக மகாராஷ்டிரம் தேர்வானது.

வெள்ளியுடன் நிறைவுசெய்த தமிழ்நாடு: கடைசி நாளான புதன்கிழமை, வாலிபால் ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில் தமிழ்நாடு 0-3 என்ற கணக்கில் கேரளத்திடம் வெற்றியை இழந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது. போட்டியில் தமிழகம் மொத்தமாக 20 விளையாட்டுகளில் 74 பதக்கங்கள் வென்றுள்ளது. இதில் அதிகபட்சமாக தடகளத்தில் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

சிறந்த வீரர், வீராங்கனை…

கேரளத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ், இப்போட்டியில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தமாக 8 பதக்கங்கள் வென்று சிறந்த வீரராகத் தேர்வானார். கர்நாடக நீச்சல் வீராங்கனை ஹாஷிகா இராமச்சந்திரா 6 தங்கம், 1 வெண்கலத்துடன் போட்டியிலேயே சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

13th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Skilling of girls in non–traditional livelihood (NTL)’ has been included in which flagship scheme?

A. Beti Bachao Beti Padhao

B. Rashtriya Mahila Kosh

C. POSHAN Abhiyaan

D. Pradhan Mantri Matru Vandana Yojana

Answer & Explanation

Answer: A. Beti Bachao Beti Padhao

  • The Union government announced the inclusion of skilling of girls in non–traditional livelihood (NTL) options in its flagship programme of ‘Beti Bachao Beti Padao’. Minister for Women and Child Development Smriti Irani emphasised the importance of convergence between various departments for providing quality education to empower girls.

2. Which Union Ministry is associated with ‘One Nation, One Grid, One Frequency and One National Load Dispatch Centre (NLDC)’?

A. Ministry of Communications

B. Ministry of Electronics and IT

C. Ministry of Power

D. Ministry of Science and Technology

Answer & Explanation

Answer: C. Ministry of Power

  • The Union Power Ministry has started the process setting up transmission systems for renewable energy zones (REZ) with 66.5 GW capacity by the current year to integrate non–fossil fuel energy sources with the national grid. It will also establish 13 RE management centres (REMC) to address the variability of generation. A transmission system to integrate an additional 52 GW potential REZ by 2026–27 is also being planned. The Power Minister briefed the steps being taken towards creating a ‘One Nation, One Grid, One Frequency and One National Load Dispatch Centre (NLDC)’.

3. ‘PM–DevINE’ Scheme, which was seen in the news, aimed at development of which region?

A. Coastal regions

B. Hilly regions

C. North–Eastern region

D. Border areas

Answer & Explanation

Answer: C. North–Eastern region

  • The Union Cabinet approved projects worth over ₹13,000 crore, including a Rs 6,600 crore–scheme for developing physical and social infrastructure in the North–East. The ‘Prime Minister’s Development Initiative for North East Region (PM–DevINE)’ will be implemented during the remaining four years of the 15th Finance Commission from 2022–23 to 2025–26. It is a Central sector scheme and will be administered by the Ministry of Development of North Eastern Region (DoNER).

4. As per the recent data, what is the CPI–based retail inflation recorded in India?

A. 6.25%

B. 7.2%

C. 7.41%

D. 7.91%

Answer & Explanation

Answer: C. 7.41%

  • Official data released by National Statistical Office (NSO) showed that the retail inflation based on Consumer Price Index (CPI) was at 7.41 per cent in September. The figure was at 7 per cent in August. Retail inflation rose to a five–month high of 7.41 per cent in September due to costlier food items. It is for the ninth month in a row that retail inflation remained above the Reserve Bank of India’s upper band of 6 per cent.

5. What is the rank of India in the ‘Global Crypto Adoption Index 2022’?

A. Second

B. Fourth

C. Sixth

D. Eighth

Answer & Explanation

Answer: B. Fourth

  • As per the Chainalysis 2022 Global Crypto Adoption report, India stands fourth in Global Crypto Adoption Index 2022. For the second consecutive year, Vietnam is ranked first in cryptocurrency adoption and India stood at 4th place with an index score of 0.663.  United States (US) has moved up to fifth while China re–entered the top ten of the index despite its ban on all crypto currency trading.

6. Which institution has released a report titled ‘India Discrimination Report 2022’?

A. UNICEF

B. WEF

C. NITI Aayog

D. Oxfam International

Answer & Explanation

Answer: D. Oxfam International

  • The Oxfam India has released a new report titled ‘India Discrimination Report 2022’. As per the report, Gender discrimination is the reason for 98 percent of employment gap between males and females in India. It also shows that discrimination causes 100 percent of employment inequality faced by women in rural areas in labour market and 98 percent in urban areas. Self–employed males earn 2.5 times more than females, 83 percent of which is attributed to gender–based discrimination.

7. What is ‘SOVA Virus’ which was seen in the news recently?

A. COVID–19 Variant

B. Influenza Virus Variant

C. Malware

D. Cryptocurrency

Answer & Explanation

Answer: C. Malware

  • SOVA Virus is the new mobile banking Trojan virus, which can encrypt an Android phone for ransom. India’s federal cyber security agency issued an advisory saying that the virus has upgraded to its fifth version after it was first detected in the India in July. In July 2022 it added several countries, including India, to its list of targets. It has the ability to harvest user names and passwords by key logging, stealing cookies and adding false overlays to many apps.

8. When is the ‘UN International Equal Pay Day’ observed?

A. September.12

B. September.14

C. September.18

D. September.20

Answer & Explanation

Answer: C. September.18

  • The International Equal Pay Day is observed annually to highlight gender pay gap. It is a United Nations–recognized event that falls on September 18. International Equal Pay Day was first observed back in 1996 by the National Committee on Pay Equity. The main aim of the event is to end the history of gender discrimination that women are facing across the world.

9. Ramkumar Ramanathan and Prajnesh Gunneswaran, who were seen in the news, are associated with which sports?

A. Tennis

B. Badminton

C. Squash

D. Chess

Answer & Explanation

Answer: A. Tennis

  • In the Davis Cup World Group–I tie, India was defeated 0–3 by Norway at Lillehammer, Norway. Indian Tennis player Ramkumar Ramanathan was defeated by his lower–ranked opponent Durasovic. In another singles, Prajnesh Gunneswaran went down to world no. 2 Casper Ruud. In the doubles match, the Norwegian pair comprising world No.2 Casper Ruud and Viktor Durasovic defeated Indian pair of Yuki Bhambri and Saketh Myneni.

10. Who is the director of the movie ‘The Fabelmans’, which was seen in the news?

A. Steven Spielberg

B. George Lucas

C. Martin Scorsese

D. Quentin Tarantino

Answer & Explanation

Answer: A. Steven Spielberg

  • Steven Spielberg’s film The Fabelmans won the prestigious People’s Choice Award at the Toronto International Film Festival (TIFF) 2022. It is one of the most celebrated and semi–autobiographical film. TIFF People’s Choice Documentary Award was won by ‘Black Ice’ directed by Hubert Davis. TIFF People’s Choice Midnight Madness Award was won by ‘Weird: The Al Yankovic Story’, directed by Eric Appel.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!