TnpscTnpsc Current Affairs

13th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

13th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 13th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘தேசிய பாதுகாப்பு MSME மாநாடு மற்றும் கண்காட்சி’யை நடத்துகிற இந்திய நகரம் எது?

அ. காந்தி நகர்

ஆ. பெங்களூரு

இ. கோட்டா

ஈ. விசாகப்பட்டினம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கோட்டா

  • இரண்டு நாள் நடைபெறும் தேசிய பாதுகாப்பு MSME மாநாடு மற்றும் கண்காட்சியானது சமீபத்தில் இராஜஸ்தானின் கோட்டாவில் தொடங்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதன்முறையாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. T–90 மற்றும் BMP–2 டாங்கிகள், பீரங்கி துப்பாக்கிகள், கனரக துப்பாக்கிகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு துளிர் நிறுவல்கள் மற்றும் MSMEகள் தங்கள் தயாரிப்புகளை இதில் காட்சிப்படுத்துகின்றன.

2. 2022 – அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் யார்?

அ. காஸ்பர் ரூட்

ஆ. கார்லோஸ் அல்கராஸ்

இ. நோவக் ஜோகோவிச்

ஈ. ரஃபேல் நடால்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கார்லோஸ் அல்கராஸ்

  • ஸ்பானிய டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட் என்பவரை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் தோன்றிய முதன்முறையிலேயே, உலக தரவரிசையில் முதலிடத்திற்கு அவர் உயர்ந்துள்ளார். 19 வயதான கார்லோஸ் அல்கராஸ், ஆறு ATP சுற்றுகள் ஒற்றையர் பட்டங்களையும் இரண்டு மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களையும் வென்றுள்ளார்.

3. ‘பர்வத் பிரஹார்’ என்ற பயிற்சியை நடத்திய இந்திய ஆயுதப்படை எது?

அ. இந்திய விமானப்படை

ஆ. இந்திய இராணுவம்

இ. இந்திய கடற்படை

ஈ. இந்தோ–திபெத்திய எல்லைக் காவல்படை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்திய இராணுவம்

  • இந்திய இராணுவம், ‘பர்வத் பிரஹார்’ என்ற பெயரில் 20 நாள் பயிற்சியை நடத்தி வருகிறது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒப்பந்த விடுவிப்பு செயல்முறைக்கு இடையே, கோக்ரா–ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் மெய்யெல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) நடத்தப்படுகிறது. இந்திய இராணுவத்தளபதி மனோஜ் பாண்டே, ‘பர்வத் பிரஹார்’ பயிற்சியை ஆய்வுசெய்தார். இந்தியா மற்றும் சீனாவின் கார்ப்ஸ் கமாண்டர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்த விடுவிப்பு செயல்முறை நடைபெறுகிறது.

4. 2022 – சர்வதேச பால்வளக் கூட்டமைப்பின் உலக பால் உச்சிமாநாடு (IDF WDS) நடைபெற்ற இடம் எது?

அ. வாரணாசி

ஆ. நொய்டா பெருநகரம்

இ. அமிர்தசரஸ்

ஈ. நைனிடால்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நொய்டா பெருநகரம்

  • பிரதமர் மோடி, நொய்டா பெருநகரத்தில் நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச பால்வளக் கூட்டமைப்பின் உலக பால் உச்சிமாநாட்டைத் தொடங்கிவைத்தார். உலகத்தின் பாலுற்பத்தியில் 23 சதவீதம் இந்தியாவின் பால் உற்பத்தித் தொழிற்துறையின்மூலம் பெறப்படுகிறது. இந்தியா, கடந்த 2014ஆம் ஆண்டில் 146 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது. இது தற்போது 210 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 44 சதவீதம் அதிகரிப்பாகும்.

5. இந்தோ–பசிபிக் பொருளாதாரக்கட்டமைப்பின் எந்தப் பிரிவிலிருந்து இந்தியா அண்மையில் வெளியேறியது?

அ. நியாயமான பொருளாதாரப் பிரிவு

ஆ. வர்த்தகப் பிரிவு

இ. தூய பொருளாதாரப் பிரிவு

ஈ. விநியோகச் சங்கிலிப் பிரிவு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வர்த்தகப் பிரிவு

  • அமெரிக்கா தலைமையிலான இந்தோ–பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (IPEF) வர்த்தகம் தொடர்பான பேச்சுவா –ர்த்தைகளிலிருந்து இந்தியா வெளியேறியது. நடுவண் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், IPEF–இன் வர்த்தகப் பிரிவில் இணையாத இந்தியாவின் முடிவை உறுதிப்படுத்தினார். IPEF அமைச்சர்கள் சந்திப்பு ஆனது அண்மையில் அமெரிக்காவால் நடத்தப்பட்டது.

6. அண்மைய தரவுகளின்படி, உணவு தானிய உற்பத்தியில் நாட்டில் முதலிடம் வகிக்கின்ற மாநிலங்கள் எவை?

அ. பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம்

ஆ. பஞ்சாப் மற்றும் ஹரியானா

இ. ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம்

ஈ. பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பஞ்சாப் மற்றும் ஹரியானா

  • சமீபத்திய தரவுகளின்படி, உணவு தானிய உற்பத்தி மற்றும் விளைச்சலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா முதலிடத்தில் உள்ளன. உத்தர பிரதேசம் மற்றும் சில மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் உணவு அல்லாத தானியங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன். உணவு தானியத்தில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் பிற தானியங்கள் அடங்கும்; அதே சமயம் உணவு அல்லாத தானியங்களுள் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு மற்றும் சணல் ஆகியவை அடங்கும். ஒடிஸா, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் நிகர விதைப்புப் பகுதி குறைந்துள்ள நிலையில், இராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அது அதிகரித்துள்ளது.

7. இந்தியாவின் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக UNESCOஉடன் கூட்டு சேர்ந்துள்ள இந்திய நிறுவனம் எது?

அ. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

ஆ. இராயல் என்ஃபீல்டு

இ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஈ. மஹிந்திரா மற்றும் மஹிந்திரா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இராயல் என்ஃபீல்டு

  • ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பும் (UNESCO) இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமுமான இராயல் என்ஃபீல்டும் இணைந்து இமயமலையில் தொடங்கி இந்தியாவின் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமாக கூட்டிணைந்துள்ளன. கடந்த 2003ஆம் ஆண்டில், தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான UNESCOஇன் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட 178 நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும்.

8. பிரதமர் நரேந்திர மோடி, கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், ‘ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை’த் திறந்து வைத்தார்?

அ. குஜராத்

ஆ. பஞ்சாப்

இ. மகாராஷ்டிரா

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பஞ்சாப்

  • பஞ்சாபின் மொகாலி மாவட்டத்தில், ‘ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் நிறுவப்பட்டு உள்ளது. டாடா நினைவு மையத்தால் `660 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

9. இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பலின் (IAC–1) பெயரென்ன?

அ. விக்ரம்

ஆ. விக்ராந்த்

இ. கரிகாலன்

ஈ. இராஜேந்திரன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. விக்ராந்த்

  • இந்தியாவின் முதலாவது உள்நாட்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பல் (IAC–1) செப்டம்பர்.2ஆம் தேதியன்று பணியில் சேர்க்கப்பட்டதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது. கடற்படையின் கூற்றுப்படி, இப்போர்க்கப்பலுக்கு, ‘விக்ராந்த்’ என்று பெயர்சூட்டப்படும்; மேலும் இது, தேசத்தின் சுய உறுதிப்பாட்டின் சாதனையைக் குறிக்கும். முதன்முதலில் கடந்த 2013 ஆகஸ்டில் அறிவிக்கப்பட்ட இந்தக் கப்பலின், கடல் சோதனைகள் 2021 ஆகஸ்டில் தொடங்கின.

10. காசநோயை ஒழிப்பதற்காக, எத்தனை பழங்குடி மாவட்டங்கள், மையப்படுத்தப்பட்ட தலையீடுகளுக்காக (focused interventions) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன?

அ. 25

ஆ. 50

இ. 75 

ஈ. 100

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 75

  • நடுவண் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் நடுவண் காசநோய் பிரிவும் இணைந்து, காசநோயை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தும் தலையீடுகளுக்காக, 75 பழங்குடியின மாவட்டங்களைத் தெரிவுசெய்துள்ளன. கடந்த 6 மாதங்களாக பழங்குடியின மாவட்டங்களில் உள்ள 68,000–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுவீடாகச்சென்று நடத்தப்பட்ட காசநோய் பரிசோதனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜப்பான்-இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சி – ஜிமெக்ஸ் 2022

ஜப்பான்-இந்தியா கடல்சார் பயிற்சி – ஜிமெக்ஸ் 2022-இன் 6ஆவது பயிற்சி செப்டம்பர்.11ஆம் தேதி வங்கக்கடலில் மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படை நடத்தும் இப்பயிற்சியில் ஜப்பானின் எஸ்கார்ட் புளோடில்லா ஃபோர்-இன் கமாண்டர் ரியர் அட்மிரல் ஹிராட்டா டோஷியுக்கி தலைமையில் ஜப்பான் பாதுகாப்பு கப்பல்களும், இந்திய கடற்படையின் கிழக்குப்பிராந்திய கொடி அதிகாரி கமாண்டிங் ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையில் இந்திய கடற்படை கப்பல்களும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன.

இந்தியத்தரப்பில் சகயாத்ரி, ரன்விஜய், ஜோதி ஆகிய உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கப்பல்கள் இடம்பெற்றன. கடலோர ரோந்துக்கப்பல் சுகன்யா, நீர்மூழ்கிக்கப்பல்கள், எம்ஐஜி 29கே போர் விமானம், மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன. ஜிமெக்ஸ்-22 கடலிலும், விசாகப்பட்டினம் துறைமுகத்திலும் இரண்டு கட்டங்களாக நடைபெறும். கடந்த 2012ஆம் ஆண்டு ஜப்பானில் தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் பயிற்சியின் இந்த அத்தியாயம் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

2. அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல்களை டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

அனைத்து மட்டங்களிலும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தப் பட்டியலில் கூடுதலாக 34 மருந்துகளுடன் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. முந்தைய பட்டியலிலிருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன. 27 சிகிச்சைப்பிரிவுகளுக்கென இந்த மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பட்டியல் 1996ஆம் ஆண்டு முதன்முதலாக வகுக்கப்பட்டது. அதன்பின்னர் 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் இதற்குமுன்பு மும்முறை திருத்தப்பட்டது.

3. வரும் 15-இல் ‘காலை சிற்றுண்டித் திட்டம்’ தொடக்கம்: முதல்வர் மு க ஸ்டாலின் தகவல்

தமிழ்நாட்டில் வரும் 15-ஆம் தேதியன்று ‘காலை சிற்றுண்டித் திட்டம்’ தொடங்கப்படவுள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காலை உணவுத் திட்டம்: முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர்.15-ஆம் தேதியன்று, அரசு தொடக்கப்பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குகிற புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளது.

13th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which Indian city is the host of ‘National Defence MSME Conclave and Exhibition’?

A. Gandhi Nagar

B. Bengaluru

C. Kota

D. Visakhapatnam

Answer & Explanation

Answer: C. Kota

  • The two–day National Defence MSME Conclave and Exhibition was recently inaugurated in Kota, Rajasthan. The Conclave is being organized for the first time in the state. Several defence equipment including T–90 and BMP–2 tanks, artillery guns, sniper and machine guns and military bridges are displayed in the exhibition. Many start–ups and MSMEs are displaying their products.

2. Who is the winner of the US Open Tennis Tournament 2022?

A. Casper Ruud

B. Carlos Alcaraz

C. Novak Djokovic

D. Rafael Nadal

Answer & Explanation

Answer: B. Carlos Alcaraz

  • Spanish teenage Tennis player Carlos Alcaraz beat Norway’s Casper Ruud in the US Open final to claim his maiden Grand Slam title. After his first ever appearance at major final, the young player rose to the top of the world rankings. The 19–year–old player has won six ATP Tour singles titles and two Masters 1000 titles.

3. Which Indian Armed Force conducted the ‘Parvat Prahar’ Exercise?

A. Indian Air Force

B. Indian Army

C. Indian Navy

D. Indo–Tibetan Border Police

Answer & Explanation

Answer: B. Indian Army

  • The Indian Army is conducting a 20–day long exercise named Parvat Prahar. It is conducted amid the disengagement process between India and China in the Gogra–Hot Springs area on the Line of Actual Control (LAC). Indian Army Chief General Manoj Pande reviewed exercise Parvat Prahar. The disengagement process follows the talks between the corps commanders of India and China.

4. Where was the International Dairy Federation World Dairy Summit (IDF WDS) 2022 held?

A. Varanasi

B. Greater Noida

C. Amritsar

D. Nainital

Answer & Explanation

Answer: B. Greater Noida

  • Prime Minister Narendra Modi inaugurated the International Dairy Federation World Dairy Summit (IDF WDS) 2022 in Greater Noida. Indian dairy industry accounts for about 23% of global milk, producing around 210 million tonnes annually. Various schemes have led to an increase of milk production by more than 44% in the last eight years.

5. India recently pulled out of which pillar of the Indo–Pacific Economic Framework (IPEF)?

A. Fair Economy Pillar

B. Trade Pillar

C. Clean Economy Pillar

D. Supply Chains Pillar

Answer & Explanation

Answer: B. Trade Pillar

  • India pulled out of the trade–related negotiations of the United States–led Indo–Pacific Economic Framework (IPEF). Union Commerce and Industry Minister Piyush Goyal confirmed India’s decision of not joining the trade pillar of IPEF. The IPEF Ministerial Meet was recently hosted by the United States.

6. Which states top the country in terms of food–grain production, as per recent data?

A. Punjab and Uttar Pradesh

B. Punjab and Haryana

C. Andhra Pradesh and West Bengal

D. Punjab and West Bengal

Answer & Explanation

Answer: B. Punjab and Haryana

  • As per recent data, Punjab and Haryana are among the top States in terms of food–grain production and yield. Uttar Pradesh and some western and southern States have the highest production of non–food grains. Foodgrain includes rice, wheat, pulses and coarse cereals while non–foodgrains include oilseeds, cotton, sugarcane and jute. The net sown area has reduced in Odisha, Maharashtra and Bihar, while it has gone up in Rajasthan, Gujarat and Uttar Pradesh.

7. Which Indian company has partnered with UNESCO to promote the Intangible Cultural Heritage of India?

A. Tata Consultancy Services

B. Royal Enfield

C. Reliance Industries

D. Mahindra and Mahindra

Answer & Explanation

Answer: B. Royal Enfield

  • The United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO) and India’s leading Motorcycle brand Royal Enfield have partnered to promote and safeguard the Intangible Cultural Heritage of India, starting with the Himalayas. India is one of the 178 countries to have adopted the 2003 UNESCO Convention for the Safeguarding of the Intangible Cultural Heritage.

8. Prime Minister Narendra Modi inaugurated ‘Homi Bhabha Cancer Hospital and Research Centre’ in which state?

A. Gujarat

B. Punjab

C. Maharashtra

D. Telangana

Answer & Explanation

Answer: B. Punjab

  • Prime Minister Narendra Modi inaugurated ‘Homi Bhabha Cancer Hospital and Research Centre’ in Punjab’s Mohali district. Homi Bhabha Cancer Hospital and Research Centre is equipped with state–of–the–art facilities to treat all types of cancers. The hospital has been built at a cost of over ₹660 crore by Tata Memorial Centre.

9. What is the name of India’s first Indigenous Aircraft Carrier (IAC–1)?

A. Vikram

B. Vikrant

C. Karikalan

D. Rajendran

Answer & Explanation

Answer: B. Vikrant

  • The Indian Navy has announced that India’s first Indigenous Aircraft Carrier (IAC–1) will be commissioned on September 2. As per the Navy, the warship will be christened ‘Vikrant’ and it will mark a milestone of realisation of Nation’s commitment towards self–reliance. The ship was first launched in August 2013 while the sea trials began in August 2021.

10. How many tribal districts have been selected for focused interventions to eradicate TB?

A. 25

B. 50

C. 75

D. 100

Answer & Explanation

Answer: C. 75

  • The Ministry of Tribal Affairs and the Central TB Division of the Ministry of Health and Family Welfare have now selected 75 tribal districts, for focused interventions to eradicate Tuberculosis. This decision has been taken after door–to–door TB screening of over 68,000 villages in tribal districts held over the past six months.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!