TnpscTnpsc Current Affairs

14th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

14th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கேத்தரின் ரஸ்ஸல், எந்த உலகளாவிய நிறுவனத்தின் புதிய தலைவராக உள்ளார்?

அ) உலக வங்கி

ஆ) உலக பொருளாதார மன்றம்

இ) UNICEF 

ஈ) IMF

  • ஐநா அவையின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF’இன் அடுத்த தலைவராக அமெரிக்க அதிபர் ஜோபிடனின் உதவியாளரான கேத்தரின் ரஸல் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதம் பதவி விலகிய ஹென்ரிட்டா ஃபோர்க்கு அடுத்தபடியாக ரஸ்ஸல் வருவார் என்று பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவித்தார்.

2. மர்மோசாவின் (mouse opossums) பூர்வீகம் எது?

அ) அமெரிக்கா 

ஆ) அண்டார்டிகா

இ) ஐரோப்பா

ஈ) ஆசியா

  • மௌஸ் ஓபோஸம்கள் நியோட்ரோபிகல் மார்சுபியல் குடும்பமான டிடெல்பிடேயிலேயே ஒப்பீட்டளவில் மிகச்சிறிய உறுப்பினர்களாகும். அவை அமெரிக்காவை, குறிப்பாக தென்னமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவையாகும். அண்மையில் புதிதாக இனங்காணப்பட்ட இனம்,
  • அட்லரின் மவுஸ் ஓபோசம் (மர்மோசா அட்லெரி) என்று பெயரிடப்பட்டது. அது மிகச்சிறிய துணைப்பிரிவான மைகோரியஸில் ஒன்றாகும். இது ஆராய்ச்சியாளர் கிரெக் அட்லரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

3. COVID-19 மற்றும் டெங்கு ஆகிய இரண்டின் கலவையான கோவிடெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) தெலுங்கானா 

இ) மத்திய பிரதேசம்

ஈ) குஜராத்

  • கோவிட்-19 நோயாளி டெங்கு வைரஸால் பாதிக்கப்படும்போது ஏற்படும் கோவிடெங்குக் காய்ச்சல் பாதிப்பை தற்போது தெலுங்கானா மாநிலம் கண்டுவருகிறது. தெலுங்கானாவில் 8க்கும் மேற்பட்டோர் கோவிடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கலவை நோய்த்தொற்றின் அறிகுறிகளில் “உடல் அழுத்தம், மூச்சுத்திணறல், குளிர், உடல் வலிகள் மற்றும் மூட்டு வலிகள்” ஆகியவை அடங்கும். COVID-19 மற்றும் டெங்குவுக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் உள்ளன.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற “பிரைட்’ஸ் திமிங்கலத்தின்” நிலை என்ன?

அ) அற்றுவிட்ட இனம்

ஆ) அருகிவிட்ட இனம் 

இ) தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்

ஈ) அச்சுறு நிலையை அண்மித்த இனம்

  • மெக்சிகோ வளைகுடா “பிரைட்’ஸ் திமிங்கலங்கள்” அருகிவிட்ட உயிரி -னங்கள் சட்டத்தின்கீழ் “அருகிவிட்ட இனம்” என வகைப்படுத்தப்பட்டுள் -ளன. அவை, மெக்ஸிகோ வளைகுடாவில் வசிக்கும் ஒரே பல்லற்ற திமிங்கலங்ளாகும். நூற்றுக்கும் குறைவான திமிங்கலங்கள் மட்டுமே தற்போதுள்ளன. ஒடிஸாவின் பூரி மற்றும் கஞ்சம் மாவட்ட எல்லைக்கு அருகே அழிந்துவரும் பிரைட் திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது.

5. காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற ஜில்லி தலபெஹெராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) வில்வித்தை

ஆ) துப்பாக்கிச்சுடுதல்

இ) பளு தூக்குதல் 

ஈ) குத்துச்சண்டை

  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜில்லி தலபெஹெரா தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக, ஆண்களுக்கான 55 கிலோ ‘ஸ்னாட்ச்’ பிரிவில் சங்கேத் மகாதேவ் சர்கார் தங்கப்பதக்கம் வென்றதோடு, புதிய ‘ஸ்னாட்ச்’ தேசிய சாதனையையும் படைத்தார். காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் மற்றும் உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டிலும் இந்தியா போட்டியிடுகிறது.

6. அண்மையில் காலமான பேராசிரியர் ரபிகுல் இஸ்லாம், எந்த நாட்டின் அறிஞர் மற்றும் கலாச்சார ஆர்வலராவார்?

அ) இந்தியா

ஆ) வங்காளதேசம் 

இ) பாகிஸ்தான்

ஈ) ஆப்கானிஸ்தான்

  • தேசிய பேராசிரியர் ரபிகுல் இஸ்லாம், வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் அறிஞர் மற்றும் கலாச்சார ஆர்வலர் ஆவார். அவர் சமீபத்தில் தனது 87 ஆம் வயதில் காலமானார். மொழியியலாளரான இவர் 1952’இல் மொழி இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். மேலும் 2018’இல் அரசாங்கத்தால் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் சுதந்திர விருது, எகுஷே பதக் மற்றும் பங்களா அகாடமி இலக்கிய விருது ஆகியவற்றைப் பெற்றார். அவருக்கு சர்வதேச தாய்மொழி விருதும் வழங்கப்பட்டது.

7. உலகின் புதிய குடியரசாக மாறிய பார்படாஸின் முதல் குடியரசுத் தலைவர் யார்?

அ) டேம் சாண்ட்ரா மேசன் 

ஆ) மக்டலேனா ஆண்டர்சன்

இ) கேட்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர்

ஈ) சன்னா மரின்

  • பிரிட்டிஷ் காலனியாக மாறி 396 ஆண்டுகளுக்குப் பிறகு, கரீபியன் தீவு நாடான பார்படாஸ் சமீபத்தில் உலகின் புதிய குடியரசாக மாறியுள்ளது. அந்நாடு, இராணி இரண்டாம் எலிசபெத்தை அரச தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. நாட்டின் தலைமை நீதிபதி, டேம் சாண்ட்ரா மேசனை குடியரசுத் தலைவராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பார்பேடியன் பாடகி ரிஹானா தேசிய வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார்.

8. 2021 நவம்பரில் வசூல் செய்யப்பட்ட மொத்த GST எவ்வளவு?

அ) `0.75 லட்சம் கோடி

ஆ) `0.95 லட்சம் கோடி

இ) `1 லட்சம் கோடி

ஈ) `1.3 லட்சம் கோடி 

  • மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, GST வருவாய் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ₹1,31,526 கோடியாக உலாளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தின் GST வருவாயைவிட 25% அதிகமாகும். மேலும், 2019ஐ ஒப்பிடும்போது 27% அதிகமாகும். இதுவரை இல்லாத அளவுக்கு GST வசூல், ஏப்ரலில் ₹1,41,384 கோடியாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 5ஆம் மாதமாக வசூல் ₹1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

9. இந்திய ஆயுதப்படைகளுக்கு அதிநவீன ஹெரான் டிரோன்களை வழங்கிய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இஸ்ரேல் 

இ) பிரான்ஸ்

ஈ) ரஷ்யா

  • அதிநவீன ஹெரான் டிரோன்களை இந்திய ஆயுதப்படைகளுக்கு இஸ்ரேல் வழங்கியுள்ளது. அவை தற்போதுள்ள ஹெரான்களை விடவும் அதிநவீன ஆண்டி-ஜாமிங் திறன்கொண்டவை. இந்திய அரசாங்கம் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கிய அவசரகால நிதி அதிகாரத்தின்கீழ் இந்த டிரோன்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
  • இதன்கீழ் அவர்கள் தங்கள் இராணுவத் திறனை மேம்படுத்துவதற்காக `500 கோடி மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை வாங்கவியலும்.

10. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை யானைகள் கொல்லப்பட்டுள்ளன?

அ) 160

ஆ) 360

இ) 660

ஈ) 1160 

  • காட்டு யானைகள் இறப்பு தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் தகவல் கோரியிருந்ததை அடுத்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் ‘யானைகள் திட்ட’ பிரிவால் அளிக்கப்பட்ட பதிலில் கடந்த பத்து ஆண்டுகளில் 1160 காட்டு யானைகள் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
  • 2020 டிசம்பர் மாதம் வரை கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் இரயில்களில் அடிபட்டு, மின்சாரம் தாக்கி, வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் 1160 காட்டு யானைகள் இறந்துள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பாரதி பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர்

‘காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ –

இது ‘பாரத தேசம்’ என்ற தலைப்பில் மகாகவி பாரதியார் எழுதிய பாடலில் வரும் வரிகள். வாராணசியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பாரதியின் மேற்கண்ட பாடலை தமிழிலேயே மேற்கோள்காட்டி ஹிந்தியில் விளக்கமளித்தார் பிரதமர் மோடி.

2. பிரிட்டனில் ஒமைக்ரானுக்கு முதல் உயிரிழப்பு

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை பிரதமர் போரிஸ்ஜான்சன் உறுதி செய்துள்ளார்.

3. சென்னையில் 7500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்

சென்னையில் 7,500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்படுகின்றன.

சென்னையில் மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த 2017-இல் ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அப்போதைய சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ கே விசுவநாதன், தனியாா் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கேமராக்களை பொருத்தும் பணியை தீவிரப்படுத்தினாா். மூன்றாவது கண் திட்டத்துக்கு முன்பு வரை சில ஆயிரம் கேமராக்கள் மட்டும் இருந்த சென்னையில் இப்போது 50 மீட்டருக்கு ஒன்று வீதம் சுமாா் 2.80 லட்சம் கேமராக்கள் உள்ளன.

80 சதவீத வழக்குகளில் துப்பு:

சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் மட்டுமே குற்ற வழக்குகள் துப்பு துலக்கப்பட்டன. இதனால் எப்போதும் போலீஸாருக்கு சவாலாகவே இருந்தது.

ஆனால் மூன்றாவது கண் திட்டத்துக்கு பின்னா், கேமராக்களின் உதவியோடு குற்ற வழக்குகளில் போலீஸாா் எளிதாக துப்பு துலக்குகின்றனா்.

சுமாா் 80 சதவீத வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு கண்காணிப்பு கேமராக்களே காவல்துறைக்கு உதவுகின்றன. சென்னையில் கடந்த காலங்களை விட தங்கச் சங்கிலி பறிப்பு 50 சதவீதம், கொள்ளை 24 சதவீதம், அடிதடி மற்றும் மோதல் 11 சதவீதம் குறைந்திருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல பிற குற்றங்களும் கணிசமாக குறைந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு கேமரா:

தற்போது கண்காணிப்பு கேமராக்களை விட அதிக திறன் கொண்ட ஏஎன்பிஆா் கேமரா, முக அடையாளம் காணும் கேமரா ஆகியவை நகரின் முக்கியமான பகுதிகளில் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் சென்னையில் பொருத்தப்பட உள்ளன.

சென்னை காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.150 கோடி நிா்பயா நிதி இதற்காக பயன்படுத்தப்படுகிறது. சாதாரண கேமராக்களை விட பல்வேறு புதிய திறன்களையும், காட்சிகளின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கும் வசதியும் கொண்ட இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டால், பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும்.

ஏனெனில் இந்த கேமராக்கள் வெறும் காட்சிகளை மட்டுமல்லாது ஒருவரது உணா்வுகளையும் அறியும் வசதி கொண்டது. குற்றச் சம்பவம் நிகழ்வதற்குரிய சூழல் ஓரிடத்தில் ஏற்பட்டால், அதை முன்னரே கண்டறிந்து எச்சரிக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு.

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்:

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறும் இடங்கள், பாலியல் தொந்தரவு சம்பவங்கள் ஏற்பட்ட இடங்கள், பெண்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் கோயில்கள், கடற்கரைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களை அடையாளம் கண்டு, அங்கு இக்கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

இவற்றுக்கான கட்டுப்பாட்டு அறை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் புதிதாக ரூ.60 கோடியில் கட்டப்படும் கட்டடத்தில் இரு தளங்களில் அமைக்கப்படுகிறது. இந்த கேமராக்களை கையாளுவது தொடா்பாக கட்டுப்பாட்டு அறை காவலா்களுக்கு பிரத்யேகமான பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏற்கெனவே இந்த வகை கேமராக்கள், நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றம் நடைபெறும் நகரங்களான தில்லி, மும்பை, லக்னௌ, பெங்களூரு ஆகிய நகரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் இக்கேமராக்களை பொருத்துவதற்குரிய ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டு, பணி தொடங்கியுள்ளது. இந்த கேமராக்கள் பொருத்தும் பணி 2022 ஜூன் மாதம் முடிவடைந்து, முழுமையாக இயங்கத் தொடங்கும் என சென்னை காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கேமராக்கள் மூலம் போலீஸாரின் பணி எளிமைப்படுத்தப்படுவதோடு, காவல் பணி இன்னும் திறனுடனும், வலிமையுடனும் இருக்கும் என கூறப்படுகிறது. அதோடு குற்றவாளிகளின் மீதான காவல்துறையின் பாா்வை இன்னும் ஆழமாக பதியும்.

எப்படி செயல்படும்?

சாதாரண கேமராக்கள் பதிவு செய்யும் காட்சிகளை நேரலையில் காண மட்டும் முடியும். ஆனால் செயற்கை நுண்ணறிவு கேமரா, ஒரு காட்சியை பதிவு செய்வது மட்டும் இல்லாமல் கேமராவின் காட்சியில் ஒருவரது நடவடிக்கையையும் கண்காணிக்கும். அவரது நடவடிக்கையில் வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாகத் தோன்றினால், உடனடியாக அது குறித்து எச்சரிக்கும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில் உடனடியாக அந்தக் காட்சி ஒளிரும்.

முக்கியமாக ஒரு குற்றம் நடைபெறுவதற்கு முன்னேரே ஒரு இடத்தில் உள்ள மனிதா்களின் நடவடிக்கையையும், அவரது உணா்வுகளை அடிப்படையாகக் கொண்டு அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறிந்து எச்சரிக்கும். ஒருவரது அச்ச உணா்வு, கோபம், ஆத்திரம் உள்ளிட்ட உணா்வுகளையும் கண்டறியும். அதேபோல ஒரு நபா், துப்பாக்கி, கத்தி,அரிவாள், வெடிபொருள் போன்ற ஆயுதங்களுடன் இருந்தால் அதையும் அறிந்து எச்சரிக்கும்.

இதைத் தவிா்த்து இந்த கேமராவில் ஒரு இடத்தில் எத்தனை போ் உள்ளனா், பாதுகாப்புப் பகுதியில் வைக்கப்பட்ட பொருள் திருடப்பட்டால் எச்சரிப்பது, வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் காண்பது, குரல் மூலம் ஒருவரை கண்டறிவது, முகம் அடையாளம் மூலம் ஒருவரை கண்டறிவது, வெடி பொருளை கண்டறிந்து எச்சரிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

சாதாரண கேமராவில் ஒரு மனிதனின் முக அடையாளத்தை வைத்து மட்டுமே குற்றவாளியை அடையாளம் காண முடியும். ஆனால் இந்த கேமராவில் ஒருவரது நடவடிக்கை, உணா்வுகளை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை அடையாளம் கண்டு எச்சரிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இதற்காக அந்த கேமராவிலும், அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் சா்வரிலும் அதற்குரிய பிரத்யேக மென்பொருள் பொருத்தப்பட்டிருக்கும்.

நகா் முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் இத்தகைய கேமராக்களில் குற்றத் தொடா்புடைய மற்றும் வழக்கத்துக்கு மாறான காட்சிகளை தோ்வு செய்து, அதை மட்டும் கட்டுப்பாட்டு அறை திரையில் ஒளிபரப்பி, எச்சரிக்கை விடுக்கும்.

இதனால் போலீஸாா், 7,500 கேமராக்களில் பதிவாகும் காட்சிகளையும் காண வேண்டிய தேவையில்லை. செயற்கை நுண்ணறிவு கேமரா தோ்வு செய்து அளிக்கும் காட்சிகளை மட்டும் பாா்த்தாலே போதுமானது என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

4. தமிழகத்தில் 22% பெண்களுக்கு மனஅழுத்த நோய்: அமைச்சர் அதிர்ச்சி தகவல்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், முதியோர் மற்றும் மன நலம் குன்றியோருக்கான பிரத்யேக ஐந்து சிகிச்சை பிரிவுகளை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதன்பின்பு, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், இந்த மருத்துவமனையில், மனநலம் குன்றிய நோயாளிகளுக்கான மீட்பு சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இதேபோல், 22 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் துவங்கப்படும்.

இதற்காக, தலா 10 படுக்கைகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை மற்றும் உணவு, உடை இலவசமாக வழங்கப்படும். பிரசவித்த பெண்களில் 22 சதவீதம் பேருக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டு, மன அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, உடல் பலவீனம், பசியின்மை, துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி, தங்களையும், குடும்பத்தினரையும் எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

5. நீதிபதிகள் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா…நிறைவேறியது!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தும் நோக்கில் நீதிபதிகளுக்கான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது. அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஆதரவு அளித்தன.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேறியது. இந்நிலையில் இந்த மசோதா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

கோரிக்கை

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது:சில வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளோம். இது, நீதிபதிகளின் ஊதியத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியத்தை கணிசமாக அதிகரிக்கவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.மசோதா மீது விவாதம் நடத்த ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அழைப்புவிடுத்தார்.’சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட 12 எம்.பி.,க்கள் விவகாரத்தில் முதலில் முடிவை அறிவிக்கும்படி, காங்., எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார். இதற்கு தி.மு.க., உறுப்பினர்கள் சிவா உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்., – எம்.பி., அமீ யாஜ்னிக் பேசுகையில், ”உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.”இதனால் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்புவதில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளதா?” என கேள்வி எழுப்பினார்.தி.மு.க., உறுப்பினர் வில்சன் பேசியதாவது:உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது தற்போது முறையே 62 மற்றும் 65 ஆக உள்ளன. இவற்றை 65 மற்றும் 70 ஆக உயர்த்த வேண்டும். இந்த வயதில் நீதித்துறையில் அவர்கள் பெற்றுள்ள அனுபவம், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க உதவும்.

75 ஆயிரம் வழக்குகள்

உயர் நீதிமன்றங்களில் 57 லட்சம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 75 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. நீதிபதிகள் நியமனம் போதுமான அளவில் இல்லை. உயர் நீதிமன்றங்களில் 402 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அமெரிக்காவில் நீதிபதிகள் தங்கள் வாழ்நாள் முழுக்க பணியாற்ற சட்டம் இடம் அளிக்கிறது. பிரிட்டனில் நீதிபதிகளின் ஓய்வு வயது 70 ஆக உள்ளது. அதை 75 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். நம் நாட்டில் நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்னும் வழக்கறிஞர்களாக பணியாற்றுகின்றனர். மத்தியஸ்தங்களில் ஈடுபடுகின்றனர். ஓய்வூதியத்தை மட்டும் நம்பியே வாழ்கின்றனர். அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஒரு மாத சம்பளம், அவர் விசாரிக்கும் வழக்கில் ஆஜராகும் முன்னணி வழக்கறிஞர்களின் ஒரு நாள் கட்டணத்தை விட குறைவு. நீதிபதிகளின் சம்பளத்தை மறுவரையறை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்தனர். விவாதத்தின் இறுதியில், அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.”அரசியல் பாரபட்சம் இன்றி மசோதா நிறைவேற ஒத்துழைப்பு அளித்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி,” என, அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

6. தமிழகத்தில் பழங்குடியினர் கல்வியறிவு விகிதம் தேசிய சராசரிக்கும்கீழ் சரிவு!

பழங்குடியின மக்களின் கல்வி நிலையில் இந்திய சராசரியை விட, தமிழ்நாட்டின் சராசரி குறைவாக இருப்பதாக இன்று (டிச. 13) நாடாளுமன்றத்தில் விசிக உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு பதிலளித்தது. இன்று ரவிக்குமார் இதுகுறித்து எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய பழங்குடியினர் நலத் துறை இணை அமைச்சர் ரேணுகா சிங் சருட்டா எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

​​பழங்குடியினப் பெண்களின் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?, 2020-ம் ஆண்டில் பழங்குடியின (ST ) கல்வியறிவு குறித்த மாநில வாரியான தரவு விவரம் என்ன?, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டிலும் பழங்குடி மக்களின் மொத்த சேர்க்கை விகிதம் (GER) என்ன?, GER-ஐ அதிகரிக்க அரசாங்கம் ஏதேனும் சிறப்பு முயற்சிகளை எடுக்கிறதா?, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? என்ற கேள்விகளை ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விகளுக்கு, பழங்குடியினர் நலத் துறை இணை அமைச்சர் ரேணுகா சிங் சருட்டா அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில், ‘அட்டவணையில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அனைத்திந்திய அளவில் பழங்குடியின ஆண்களின் படிப்பறிவு 59% ஆக இருக்கிறது, பெண்களின் படிப்பறிவு 49.4% ஆக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பழங்குடியின ஆண்களின் கல்வியறிவு 54.3% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 46.8% ஆகவும் இருக்கிறது. அதாவது, ஆண் கல்வியில் 4.7 சதவீதமும் பெண் கல்வியில் 2.6 சதவீதமும் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி காமதேனு இணையதள செய்திப் பிரிவிடம் பேசிய ரவிக்குமார், “பொதுவாக படிப்பறிவு பெற்றோர் சதவீதத்தில் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில், பழங்குடியினர் கல்வியறிவு நிலை மட்டும் இப்படி பின்னடைவாக இருப்பது வேதனையளிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் பழங்குடியினர் கல்வியறிவு சதவீதத்தை உயர்த்த தமிழக முதல்வர் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

7. பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜய் சிங் ஆடவருக்கான 81 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா். இப்போட்டியில் இந்தியாவுக்கு இது 3-ஆவது தங்கப் பதக்கமாகும்.

அஜய் சிங் தனது எடைப் பிரிவில் ஸ்னாட்ச்சில் 147 கிலோ, கிளீன் & ஜொ்க்கில் 175 கிலோ என மொத்தமாக 322 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தாா். இதில் அவா் ஸ்னாட்ச் பிரிவில் தூக்கிய எடை தேசிய சாதனையாகும்.

ஏற்கெனவே இப்போட்டியில் தங்கம் வென்ற ஜெரிமி லால்ரினுன்கா (67 கிலோ), அசிந்தா ஷியுலி (73 கிலோ) ஆகியோருடன் இணைந்து அஜய் சிங்கும் தற்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றாா்.

இதனிடையே, இந்தப் போட்டியில் மகளிருக்கான 59 கிலோ பிரிவில் இந்தியாவின் பாப்பி ஹஸாரிகா ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 105 கிலோ என மொத்தமாக 189 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றாா்.

8. 20 ஆண்டுகளுக்கு பிறகு ‘பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற’ இந்திய பெண்…!

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார். ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.

இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. Catherine Russell, who has been seen in the news recently, is the new head of which global institution?

A) World Bank

B) World Economic Forum

C) UNICEF 

D) IMF

  • Catherine Russell, an assistant to US President Joe Biden, has been appointed as the next head of the UN children’s agency UNICEF. Secretary–General Antonio Guterres announced that Russell will succeed Henrietta Fore, who resigned in July.

2. Marmosa (mouse opossums) are endemic to which region?

A) America 

B) Antarctica

C) Europe

D) Asia

  • Mouse opossums are relatively small members of the Neotropical marsupial family Didelphidae. They are endemic to Americas, especially to South America. Recently a newly–identified species, named the Adler’s mouse opossum (Marmosa adleri), is among the smallest subgenus Micoureus. It was named after the researcher Greg Adler.

3. Which Indian state has witnessed cases of Covidengue, a combination of both COVID–19 and Dengue?

A) Kerala

B) Telangana 

C) Madhya Pradesh

D) Gujarat

  • Telangana is currently witnessing cases of Covidengue, which occurs when a COVID–19 patient is infected with the Dengue virus. Over 8 cases of Covidengue cases have been recorded in Telangana.
  • The symptoms of this syndemic disease include “distress, shortness of breathing, chills, body pains and joint pains. COVID–19 and Dengue have similar kinds of symptoms.

4. What is the status of “Bryde’s whale”, seen in the news recently?

A) Extinct

B) Endangered 

C) Least Concern

D) Near Threatened

  • Gulf of Mexico Bryde’s whales have been classified as “endangered” under the Endangered Species Act. They are the only known resident baleen whales in the Gulf of Mexico, with less than 100 individuals left in the population. The carcass of an endangered Bryde’s whale was washed ashore near the border of Puri and Ganjam districts of Odisha.

5. Jhilli Dalabehera, who won a gold medal in Commonwealth championship, is associated with which sports?

A) Archery

B) Shooting

C) Weight–Lifting 

D) Boxing

  • Indian weightlifter Jhilli Dalabehera has won the gold medal in the women’s 49kg category at the Commonwealth Weightlifting Championships in Tashkent, Uzbekistan. Earlier, Sanket Mahadev Sargar clinched the gold medal in the men’s 55kg snatch category and also created a new snatch national record.
  • India is competing in both Commonwealth Weightlifting Championships and World Weightlifting Championships.

6. Professor Rafiqul Islam who passed away recently, was a scholar and cultural activist of which country?

A) India

B) Bangladesh 

C) Pakistan

D) Afghanistan

  • National Professor Rafiqul Islam, is a scholar, and cultural activist from Bangladesh. He recently passed away at the age of 87. The linguist actively participated in the Language Movement in 1952 and he was made the national professor by the government in 2018.
  • He received the Independence Award, Ekushey Padak, and the Bangla Academy Literary Award. He was also awarded the International Mother Language Award.

7. Who is the first President of Barbados, which became the world’s newest republic?

A) Dame Sandra Mason 

B) Magdalena Andersson

C) Katrín Jakobsdóttir

D) Sanna Marin

  • After 396 years of becoming a British Colony, the Caribbean Island country Barbados has recently become the world’s newest republic. The country removed Queen Elizabeth II as the head of the state. Dame Sandra Mason was sworn in as the President by the chief justice of the country. Barbadian singer Rihanna was declared a national hero.

8. What is the total GST Collection during the month of November 2021?

A) ₹0.75 lakh crore

B) ₹0.95 lakh crore

C) ₹1 lakh crore

D) ₹1.3 lakh crore 

  • According to data released by the Union finance ministry, the GST Revenue was at ₹1,31,526 crore for the second month in a row. It is 25% higher than the GST revenues in the same month last year and 27% over the 2019 value. The highest ever GST collection of ₹1,41,384 crores was reported in April. This is the fifth consecutive month in which collections have crossed the ₹1 lakh crore benchmark.

9. Which country has delivered advanced Heron drones to Indian Armed Forces?

A) USA

B) Israel 

C) France

D) Russia

  • Israel has delivered advanced Heron drones to Indian Armed Forces, which are far more advanced than the Herons in the existing inventory with better anti–jamming capability.
  • The acquisition of these drones has been done under the emergency financial powers granted by Indian government to the defence forces under which they can buy equipment and systems worth ₹500 crores to upgrade their military capabilities.

10. How many elephants have been killed in last 10 years, as per the recent data from Environment Ministry?

A) 160

B) 360

C) 660

D) 1160 

  • After a Tamilnadu–based RTI activist filed an RTI query over the deaths of wild elephants before the Ministry of Environment and Forests’ ‘Project elephant’ division, it was revealed that as many as 1160 wild elephants have been killed in the last 10 years.
  • The elephants were killed due to various reasons such as being hit by trains, electrocution and poaching, across the country in the last decade till December 2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!