TnpscTnpsc Current Affairs

14th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

14th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 14th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

14th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. இந்தியாவில் 2022–நவம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக்குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்க சதவீதம் என்ன?

அ. 5.22%

ஆ. 5.88%

இ. 6.22%

ஈ. 8.88%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 5.88%

  • நுகர்வோர் விலைக்குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படும் இந்தியாவின் சில்லறை பணவீக்கம், 2022 நவம்பர் மாதத்தில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.88%ஆகக் குறைந்துள்ளது. 2022 அக்டோபரில் பணவீக்க சதவீதம் 6.77%ஆக இருந்தது. உலகளாவிய பண்டங்களின் விலைவீழ்ச்சி மற்றும் அதீத கடன் செலவுகள் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. பணவீக்க சதவீதம் இந்த ஆண்டில் முதன்முறையாக இந்திய ரிசர்வ் வங்கியின் 2–6% சகிப்புத்தன்மை வரம்பிற்குள் வந்தது. தொழிற்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படையில் அளவிடப்படுகிற தொழிற்சாலை உற்பத்தியானது அக்டோபரில் 4% என இருந்தது.

2. 2022 ஹுருன் குளோபல் பட்டியலில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 3

ஆ. 5

இ. 7

ஈ. 10

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 5

  • 2022–ஹுருன் குளோபல் பட்டியலின்படி, உலகின் மிகவும் மதிப்புமிக்க ஐந்நூறு நிறுவனங்களில் இருபது இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதை அடுத்து, இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் 20 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியா 9ஆமிடத்திலிருந்து 5ஆமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • $202 பில்லியன் டாலர்களுடன் ரிலையன்ஸ் தொழிற்துறைகள் இந்தியா அளவில் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து TATA கன்சல்டன்சி சர்வீசஸும், HDFC வங்கியும் உள்ளன. ரிலையன்ஸ் தொழிற்துறைகள் (34) மற்றும் TATA கன்சல்டன்சி சர்வீசஸ் (65) ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்கள் மட்டுமே பட்டியலின் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. 260 நிறுவனங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

3. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்த மாநிலம் எது?

அ. ஹரியானா

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. கோவா

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கோவா

  • கோவாவில் நிறுவப்பட்டுள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காசியாபாத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் தில்லியில் நிறுவப்பட்டுள்ள தேசிய ஓமியோபதி நிறுவனம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோதி மெய்நிகராக தொடங்கி வைத்தார். 9ஆவது உலக ஆயுர்வேத மாநாடு மற்றும் ஆரோக்கியா கண்காட்சியிலும் அவர் உரையாற்றினார். கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தர்காலில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத கல்வி நிறுவனத்தில் கோவா மக்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறினார்.

4. ஒருநாள் இன்னிங்ஸில் விரைவாக 200 இரன்கள் எடுத்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. ரோஹித் சர்மா

ஆ. இரவீந்திர ஜடேஜா

இ. இஷான் கிஷன்

ஈ. K L இராகுல்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இஷான் கிஷன்

  • வங்காளதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷான் பல்வேறு சாதனைகளைப் படைத்தார். சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்த உலகின் ஏழாவது கிரிக்கெட் வீரர் ஆனார் அவர். 126 பந்துகளில் அவர் இரட்டைச்சதம் அடித்தார். ஒரு நாள் இன்னிங்ஸில் வேகமாக 200 ரன்களைக் கடந்த கிறிஸ் கெயிலின் சாதனையையும் இஷான் கிஷன் முறியடித்தார்.

5. 2022 – சர்வதேச கடன் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. ADB

ஈ. AIIB

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. உலக வங்கி

  • உலக வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச கடன் அறிக்கையின்படி, சஹாராவடி ஆப்பிரிக்காவில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம்கொண்ட நாடுகளின் கடன் கடந்த 2021ஆம் ஆண்டில் $789 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அந்தப் பிராந்தியத்தின் தற்போதைய கடன் சுமையானது அதன் திருப்பிச்செலுத்தும் திறனுக்கு அப்பாற்பட்டு உள்ளது.

6. ‘கங்கை நீர் வழங்கல் திட்டத்தைத்’ தொடங்கிய மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. பீகார்

இ. உத்தரகாண்ட்

ஈ. மேற்கு வங்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பீகார்

  • பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தில் திட்டமொன்றைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தின் தெற்குப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்குவதற்காக வெள்ளநீர் சுத்திகரிக்கப்படும். கங்கை நீர் வழங்கல் திட்டத்தின்கீழ், திட்டத்தின்மூலம் ஒரு நபருக்கு மொத்தம் 135 லிட்டர் நீர் வழங்கப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு `4500 கோடியாகும்.

7. ஹரிமௌ சக்தி–2022 என்பது இந்தியாவிற்கும் கீழ்க்காணும் எந்நாட்டிற்கும் இடையே நடைபெறும் இருதரப்புப் பயிற்சியாகும்?

அ. ஆஸ்திரேலியா

ஆ. மலேசியா

இ. சிங்கப்பூர்

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மலேசியா

  • இந்தியா–மலேசியா கூட்டு இராணுவப்பயிற்சியான ஹரிமௌ சக்தி–2022 சமீபத்தில் மலேசியாவில் உள்ள புலாய் கிளாங்கில் தொடங்கியது. இந்தப் பயிற்சியில் இந்திய இராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவும் மலேசிய இராணுவத்தின் இராயல் மலாய் படைப்பிரிவும் கலந்துகொண்டது. ஹரிமௌ சக்தி என்பது கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்படுகிற இந்திய மற்றும் மலேசிய இராணுவங்களுக்கு இடையிலான ஒரு வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும்.

8. மும்பை பங்குச்சந்தையின் (BSE) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரியாக அங்கீகரிக்கப்பட்டவர் யார்?

அ. சுந்தரராமன் இராமமூர்த்தி

ஆ. உர்ஜித் படேல்

இ. அரவிந்த் சுப்ரமணியம்

ஈ. சித்ரா இராமகிருஷ்ணன்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சுந்தரராமன் இராமமூர்த்தி

  • மும்பை பங்குச் சந்தையின் (BSE) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தரராமன் இராமமூர்த்தியை நியமிக்க இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஒப்புதலளித்துள்ளது. சுந்தரராமன் இராமமூர்த்தி தற்போது பாங்க் ஆஃப் அமெரிக்காவில் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரியாக உள்ளார். அவர் 2014 வரை இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையில் (NSE) பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

9. இந்திய கடற்படையின் ஆய்வுக்கலமான, ‘இக்ஷாக்’ஐ கட்டிய நிறுவனம் எது?

அ. DRDO

ஆ. HAL

இ. GRSE

ஈ. BEL

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. GRSE

  • இந்திய கடற்படையானது GRSE/L&T நிறுவனத்தால் கட்டப்பட்ட நான்கு ஆய்வுக் கலங்களுள் (பெரிய) மூன்றாவது கலமான, ‘இக்ஷாக்’ஐ தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள காட்டுப்பள்ளியில் வைத்து அறிமுகப்படுத்தியது. நான்கு ஆய்வுக்கலங்களை உருவாக்குவதற்கான இந்த ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டில் கொல்கத்தாவின் கார்டன் ரீச் கப்பல்கட்டும் நிறுவனம் (GRSE) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இடையே கையெழுத்தானது. இதன் மொத்த மதிப்பு `2,435 கோடியாகும்.

10. குரங்கம்மை நோய்க்கு உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) பரிந்துரைக்கப்பட்ட புதிய பெயர் யாது?

அ. mpox

ஆ. Movid

இ. H1M1

ஈ. Mon–52

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. mpox

  • உலக சுகாதார நிறுவனமானது குரங்கம்மை நோய்க்கு ‘mpox’ எனப் பெயர்மாற்றம் செய்துள்ளது. இந்த நோயின் உண்மையான பெயர் பாகுபாடு மற்றும் இனவெறியைக் குறிப்பிடும் விதத்தில் உள்ளதால் இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. குரங்கம்மை நோய்க்கான புதிய பெயர் ‘mpox’ என்று ஐநா சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குரங்கம்மை மற்றும் ‘mpox’ ஆகிய இரண்டு பெயர்களும் அடுத்த ஆண்டு பயன்படுத்தப்படும்.  பழைய பெயர் படிப்படியாக நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம்.

புதிதாக ஒப்புதல் பெறப்பட்ட ‘மிஷன் சக்தி’ திட்டத்தின்கீழ் தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம், ‘பல்னா திட்டம்’ என பெயர் சேர்க்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது பணிபுரியும் தாய்மார்களின் 6 மாதம் முதல் 6 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு தினசரி பராமரிப்பு வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டு, குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நிலவரத்தை மேம்படுத்தி வருகிறது. 2020-21ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்காக பட்ஜெட் ஒதுக்கீடு `75 கோடியாக இருந்தது. 2021-22ஆம் நிதியாண்டில் `53 கோடியாக இருந்தது.

2. 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு.

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு அதிரடியாக தடைவிதித்தது.

ஆணை விவரம்: மோனோக்ரோபாஸ், புரோபினோபாஸ், செப்கேட், சைபர்மெத்ரின் கலந்த புரோபினோபாஸ், சைபர் மெத்ரின் கலந்த குளோர்பிரிபாஸ் மற்றும் குளோர்பிரிபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாள்களுக்கு தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் பாஸ்பரஸ் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுவதால், தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

3. நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு நிதியுதவி: தமிழக திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் பரிமாற்றம்.

நீடித்த நகர்ப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ், தமிழக திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

நீடித்த நகர்ப்புற உள்கட்டமைப்புக்கான நிதியுதவித் திட்டத்தை, ஜெர்மன் மேம்பாட்டு வங்கியும், தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, அதன் மூலம் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் முதல் நிலை `1969.47 கோடி மதிப்பைக் கொண்டது. திட்டத்தின் இரண்டு கட்ட பணிகளும் இந்த மாதத்தில் நிறைவடையும். இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி `4,250 கோடி மதிப்பில் மூன்றாம்கட்ட நீடித்த நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

14th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the Consumer Price Index based retail inflation for November in India?

A. 5.22%

B. 5.88%

C. 6.22%

D. 8.88%

Answer & Explanation

Answer: B. 5.88%

  • India’s retail inflation, which is measured by the Consumer Price Index (CPI), eased to 11–month low of 5.88% on an annual basis in November. The inflation was 6.77% in October, 2022. The sharp rise is due to the dipping global commodity prices and higher borrowing costs. The inflation figure came within the Reserve Bank of India’s (RBI) tolerance band of 2–6% for the first time this year. The factory output, measured in terms of the Index of Industrial Production (IIP), contracted 4% in October.

2. What is the position of India in the 2022 Hurun Global list?

A. 3

B. 5

C. 7

D. 10

Answer & Explanation

Answer: B. 5

  • India ranks at Number 5 as 20 Indian companies feature in 500 most valuable ones in the world, as per the 2022 Hurun Global list. India rose from the 9th rank to 5th rank with 20 companies featured in the list. With USD 202 billion, Reliance Industries is the most valuable company ranked at followed by Tata Consultancy Services and HDFC Bank. Reliance Industries (34) and Tata Consultancy Services (65) are the only two Indian companies to feature in the top 100 list. US tops the list with 260 companies.

3. Prime Minister Narendra Modi inaugurated the All–India Institute of Ayurveda in which state?

A. Haryana

B. Himachal Pradesh

C. Goa

D. Telangana

Answer & Explanation

Answer: C. Goa

  • The Prime Minister virtually inaugurated the Goa–based All India Institute of Ayurveda, Ghaziabad–based National Institute of Unani Medicine, and Delhi–based National Institute of Homeopathy from Goa. He addressed the 9th World Ayurveda Congress (WAC) and Arogya Expo. Goa Chief Minister Pramod Sawant said the All–India Institute of Ayurveda at Dhargal will have 50 per cent reservation in seats for Goans.

4. Which Indian cricketer broke Chris Gayle’s record for the fastest to 200 in an ODI innings?

A. Rohit Sharma

B. Ravindra Jadeja

C. Ishan Kishan

D. K L Rahul

Answer & Explanation

Answer: C. Ishan Kishan

  • Young Indian cricketer Ishan Kishan created many records in the third and final ODI match of the series against Bangladesh. He became the seventh batter in the world to score a double century in ODIs and fourth from India after Sachin Tendulkar, Rohit Sharma and Virender Sehwag. He scored a double century off just 126 balls. Ishan also broke Chris Gayle’s record for the fastest to 200 in an ODI innings.

5. Which institution released the ‘International Debt Report 2022’?

A. World Bank

B. World Economic Forum

C. ADB

D. AIIB

Answer & Explanation

Answer: A. World Bank

  • According to the International Debt Report 2022 by the World Bank, debt of low and middle–income countries in Sub–Saharan Africa (SSA) rose to a record high of 789 billion USD in 2021. This is the region’s highest debt burden since 2010 and the region’s current debt burden is beyond its repayment capacity.

6. Which state launched the ‘Ganga Water Supply Scheme (GWSS)’?

A. Uttar Pradesh

B. Bihar

C. Uttarakhand

D. West Bengal

Answer & Explanation

Answer: B. Bihar

  • Bihar Chief Minister Nitish Kumar inaugurated a scheme in Bihar, under which flood waters will be treated for supply to households in the southern part of the state. Under the Ganga Water Supply Scheme (GWSS), a total of 135 litres per person will be provided through the project. The estimated cost of the project is ₹4500 crore.

7. Harimau Shakti–2022 is a bilateral exercise held between India and which country?

A. Australia

B. Malaysia

C. Singapore

D. UAE

Answer & Explanation

Answer: B. Malaysia

  • India–Malaysia joint military Exercise Harimau Shakti–2022 has recently started at Pulai Klang in Malaysia. Combat troops of the Garhwal Rifles Regiment of the Indian Army and the Royal Malay Regiment of the Malaysian Army are participating in the exercise. HARIMAU SHAKTI is an annual training event between Indian and Malaysian armies which has been organised since 2012.

8. Who has been approved as the Managing Director & Chief Executive Officer of Bombay Stock Exchange (BSE)?

A. Sundararaman Ramamurthy

B. Urjit Patel

C. Arvind Subramaniam

D. Chitra Ramakrishnan

Answer & Explanation

Answer: A. Sundararaman Ramamurthy

  • The Securities and Exchange Board of India (SEBI) has approved the appointment of Sundararaman Ramamurthy as the Managing Director & Chief Executive Officer of Bombay Stock Exchange (BSE). Ramamurthy is currently the Chief Operating Officer–India at Bank of America. He was associated with the National Stock Exchange of India (NSE) in various roles till 2014.

9. Which company built the Indian Navy’s survey vessel ‘Ikshak’?

A. DRDO

B. HAL

C. GRSE

D. BEL

Answer & Explanation

Answer: C. GRSE

  • The Indian Navy launched ‘Ikshak’ the third of the four survey vessels (Large) project, being built by GRSE/L&T was launched at Kattupalli, Chennai. Contract for building four SVL ships was signed between Ministry of Defence and Garden Reach Shipbuilders and Engineers (GRSE), Kolkata in 2018 for a total cost of Rs 2435 crore.

10. What is the new name of monkeypox, as recommended by the World Health Organisation?

A. mpox

B. Movid

C. H1M1

D. Mon–52

Answer & Explanation

Answer: A. mpox

  • The World Health Organisation has renamed monkeypox as mpox. It cited concerns that the original name of the animal disease could be construed as discriminatory and racist. The UN health agency said in a statement that mpox was its new preferred name for monkeypox. Both monkeypox and mpox would be used for the next year while the old name is phased out.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!