TnpscTnpsc Current Affairs

14th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

14th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 14th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

14th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022 – பொறியாளர்கள் மாநாடு நடத்தப்பட்ட மாநிலம் எது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு

இ. திருவனந்தபுரம்

ஈ. ஹைதராபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. திருவனந்தபுரம்

  • இந்திய நேஷனல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங்கின் பொறியாளர்கள் மாநாடு–2022 ஆனது (EC–2022) இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் (ISRO) இணைந்து திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தில் நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) நாட்டின் விவசாயத் துறையை ஆதரிப்பதற்காக பிரத்யேக செயற்கைக்கோள்களை முன்மொழிந்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள, ‘பாரத் கிரிஷி செயற்கைக்கோள்’ திட்டம் குறித்து ISRO வேளாண் துறையுடன் விவாதித்து வருகிறது.

2. ‘HAWK வான் பாதுகாப்பு உபகரணங்கள்’ என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் முதன்மைக் கருவியாகும்?

அ. ரஷ்யா

ஆ. உக்ரைன்

இ. இஸ்ரேல்

ஈ. அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. அமெரிக்கா

  • ரஷ்யாவின் ஆளில்லா விமானம் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அமெரிக்கா தனது பழைய HAWK வான் பாதுகாப்பு உபகரணங்களை மீட்டெடுக்க உள்ளது. ‘Homing All the Way Killer’ என்பதன் சுருக்கமான HAWK, 1959இல் வியட்நாம் போரின்போது அமெரிக்க இராணுவத்தில் சேவையில் சேர்ந்தது. HAWK இடைமறிக்கும் ஏவுகணைகள் ஸ்டிங்கர் ஏவுகணை அமைப்புக்கு மேம்படுத்தப்படும். போரின் ஆரம்பத்தில் தோளில் வைத்து ஏவப்பட்ட விமான எதிர்ப்பு ஸ்டிங்கர்களை அமெரிக்கா உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.

3. 2022இல் UNSCஇன் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்தை நடத்தும் நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இந்தியா

இ. சீனா

ஈ. ஜப்பான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • UNSCஇன் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டம் அக்டோபர் மாதம் மும்பை மற்றும் தில்லியில் நடத்தப்படும். “பயங்கரவாத நோக்கங்களுக்காக புதிய மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை எதிர்ப்பது” என்பது இந்தக் கூட்டத்தின் முதன்மை கருப்பொருளாக விளங்கியது. 1) இணையம், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட, 2) புதிய கொடுப்பனவு தொழில்நுட்பங்கள் மற்றும் நிதி திரட்டும் முறைகள், 3) டிரோன்கள் உட்பட ஆளில்லா வான்வழி அமைப்புகள் ஆகிய மூன்று தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்துகிறது.

4. LiFE திட்டத்தின்கீழ் இந்திய நடுவணரசால் எத்தனை வாழ்க்கைமுறை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன?

அ. 50

ஆ. 75

இ. 100

ஈ. 200

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 75

  • LiFE (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை – Lifestyle for Environment) திட்டத்தின்கீழ் காலநிலைக்கேற்ற பழக்க வழக்கங்களாக எடுத்துக்கொள்ளக்கூடிய எழுபத்தைந்து வாழ்க்கைமுறை நடைமுறைகளின் பட்டியலை நடுவண அரசு வெளியிட்டது. 75 வாழ்க்கைமுறை நடைமுறைகளின் பட்டியல் ஆற்றல், நீர்சேமிப்பு, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி, நிலையான உணவு முறைகள், கழிவுக்குறைப்பு, நலமிகு வாழ்க்கை முறை மற்றும் மின்னணு–கழிவு ஆகிய ஏழு வகைகளின் கீழ் உள்ளது. பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஆகியோர் இணைந்து LiFE என்ற திட்டத்தைத் தொடங்கினர்.

5. மனித மற்றும் விலங்குகளின் நலத்திற்கு ஆபத்தென அஞ்சி, இந்திய அரசாங்கத்தால் சமீபத்தில் தடைசெய்யப்பட்ட களைக்கொல்லி எது?

அ. கிளைபோசேட்

ஆ. அட்ராசின்

இ. குளுஃபோசினேட்

ஈ. கார்போஃபுரான்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கிளைபோசேட்

  • மனிதர்கள் & விலங்குகளின் நலத்திற்கு ஆபத்தென அஞ்சி, பரவலாகப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லியான கிளைபோசேட்டின் பயன்பாட்டை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக கட்டுப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, பூச்சிக்கட்டுப்பாட்டு இயக்கிகள்மூலம் மட்டுமே ‘கிளைபோசேட்’ பயன்படுத்தப்படும் இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களில், ‘கிளைபோசேட்’ அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கொறித்துண்ணிகள் போன்றவற்றை கொல்வதற்கான கொடிய வேதிகளையும் அது கொண்டுள்ளது.

6. “பயங்கரவாதத்திற்கு நிதி இல்லை” என்ற தலைப்பிலான மாநாட்டை நடத்தும் நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இந்தியா

இ. இலங்கை

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • பன்னாட்டு காவலகம் மற்றும் ஐநா பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, “பயங்கரவாதத்திற்கு நிதி இல்லை” என்ற மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள உள்துறை அமைச்சகம், “பயங்கரவாதத்திற்கு நிதி இல்லை” என்ற தலைப்பில் மூன்றாவது மாநாட்டை புது தில்லியில் நடத்துகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவது தொடர்பான விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். கடந்த இரண்டு மாநாடுகளிலும் இதனையே நோக்கமாகக் கொண்டு மாநாடு நடத்தப்பட்டது.

7. இந்தியாவின் பன்மாதிரி சரக்குப் போக்குவரத்துப் பூங்கா உருவாக்கப்படவுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • ரிலையன்ஸ் தொழிற்துறைகள் நிறுவனத்திற்கு (RIL), தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள மப்பேட்டில் முதல் பன் மாதிரி சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை உருவாக்குவதற்கான பணி வழங்கப்பட்டுள்ளது. ‘பிரதமர் கதிசக்தி தேசிய பெருந்திட்டத்தின்கீழ், நடுவண் சாலைப்போக்குவரத்து அமைச்சகம் 35 பன்மாதிரி சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை உருவாக்கி வருகிறது. சென்னையில் சுமார் 184.27 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய பன்மாதிரி சரக்குப் போக்குவரத்துப் பூங்கா உருவாகி வருகிறது.

8. இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ஏவுகணையின் பெயர் என்ன?

அ. ஆகாஷ்

ஆ. விக்ரம் – S

இ. விக்ராந்த் – S

ஈ. சூர்யா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. விக்ரம் – S

  • இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ஏவுகணையான, ‘விக்ரம்–S’ மூன்று தாங்குசுமைகளுடன் துணை சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படவுள்ளது. ஹைதராபாத்தைச் சார்ந்த விண்வெளி துளிர் நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’, இதன்மூலம் இந்தியாவில் ஏவுகணையை விண்ணில் செலுத்தும் முதல் தனியார் விண்வெளி நிறுவனமாக மாறும். ‘பிரரம்ப்’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டமானது இரண்டு இந்திய மற்றும் ஒரு வெளிநாட்டு தாங்குசுமைகளைச் சுமந்துசெல்லும். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ISROஇன் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது.

9. ONGC–இன் U–கள கரையோர மையத்தை கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் பிரதமர் திறந்து வைத்தார்?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. மேற்கு வங்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆந்திர பிரதேசம்

  • ஆந்திர பிரதேச மாநிலத்தின் B R அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனத்தின் U–கள கரையோர மையத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். வங்காள விரிகுடாவில் கிருஷ்ணா–கோதாவரி ஆற்றுப்படுகையில் இந்த ‘U–field’ அமைந்துள்ளது. இவ்வயலிலிருந்து இயற்கை எரிவாயு பயனர்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக, கடலுக்கடியில் குழாய்கள்மூலம் கரையோர மையத்திற்குக் கொண்டு வரப்படும்.

10. உலகின் மிகவுயரமான வாக்குச்சாவடியான தாஷிகாங் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. சிக்கிம்

ஈ. பீகார்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஹிமாச்சல பிரதேசம்

  • ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தாஷிகாங்கில் உள்ள உலகின் மிகவுயரமான வாக்குச் சாவடியில் சுமார் 98.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வாக்குச்சாவடியின் மொத்த பதிவுசெய்யப்பட்ட 52 வாக்காளர்களில், 51 பேர் வாக்களித்தனர். தாஷிகாங் 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ள ஓர் இடமாகும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. T20 உலகக்கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்ஸ்!

T20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து கோப்பையை வென்றது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக T20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளை வென்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண். உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு `1.6 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் `12.98 கோடி. 2ஆமிடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு இந்தத் தொகையில் பாதி கிடைத்துள்ளது. அதாவது `6.49 கோடி. அரையிறுதியில் தோற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் தலா `3.24 கோடி பெற்றுள்ளன. T20 உலகக்கோப்பைப்போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை `45.40 கோடியாகும்.

14th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which city is the host of the Engineers Conclave–2022 (EC–2022)?

A. Chennai

B. Bengaluru

C. Thiruvananthapuram

D. Hyderabad

Answer & Explanation

Answer: C. Thiruvananthapuram

  • Engineers Conclave–2022 (EC–2022) of the Indian National Academy of Engineering was organized jointly with Indian Space Research Organization (ISRO) at Liquid Propulsion Systems Centre (LPSC–ISRO), Thiruvananthapuram. The Indian Space Research Organisation (ISRO) has proposed dedicated satellites for supporting the country’s agriculture sector. ISRO is also discussing with Department of Agriculture on the proposed ‘Bharat Krishi Satellite’ programme.

2. ‘HAWK air defence equipment’ is a flagship equipment of which country?

A. Russia

B. Ukraine

C. Israel

D. USA

Answer & Explanation

Answer: D. USA

  • The United States is set to retrieve its older HAWK air defence equipment to send to Ukraine which is facing a heavy attack from Russian drone–fired and cruise missiles. HAWK, short for ‘Homing All the Way Killer,’ entered service with the US Army in 1959, during the Vietnam war. The HAWK interceptor missiles would be an upgrade to the Stinger missile system. The US sent the shoulder–fired anti–aircraft Stingers to Ukraine early in the war.

3. Which country is the host of the UNSC’s counter–terrorism meeting in 2022?

A. USA

B. India

C. China

D. Japan

Answer & Explanation

Answer: B. India

  • The UNSC’s counter–terrorism meeting will be hosted in Mumbai and Delhi in the month of October. The overarching theme of the meeting would be ‘Countering the use of new and emerging technologies for terrorist purposes.’ The focus is on rapid development and increasing threat of use for terrorist purposes of 3 technologies – 1) internet, including social media, 2) new payment technologies and fundraising methods, 3) unmanned aerial systems, including drones.

4. How many lifestyle practices has been published by the Union government of India under Mission LiFE?

A. 50

B. 75

C. 100

D. 200

Answer & Explanation

Answer: B. 75

  • The Union government published a list of 75 lifestyle practices that can be taken up as climate–friendly behaviour under the Mission LiFE (Lifestyle for Environment). The list of 75 actions are under the seven categories — energy, water saving, single–use plastic, sustainable food systems, waste reduction, healthy lifestyle, and e–waste. Prime Minister Narendra Modi and UN Secretary–General Antonio Guterres launched Mission LiFE (Lifestyle for Environment).

5. Which herbicide has been recently restricted by the Indian Government, fearing risk to human and animal health?

A. Glyphosate

B. Atrazine

C. Glufosinate

D. Carbofuran

Answer & Explanation

Answer: A. Glyphosate

  • The Indian Government has officially restricted the use of the widely used herbicide, glyphosate, fearing risk to human and animal health. After this announcement, glyphosate will be applied only through Pest Control Operators (PCOs). Glyphosate has been majorly used in tea plantations in India. They are also licensed to use deadly chemicals for treating pests such as rodents.

6. Which country is the host of the “No Money for Terror” conference?

A. Russia

B. India

C. Sri Lanka

D. Bangladesh

Answer & Explanation

Answer: B. India

  • India is set to host the “No Money for Terror” conference, after the meeting of Interpol and the UN Counter–Terrorism Committee. The Ministry of Home Affairs under the Indian government is organising the third ministerial conference on ‘No Money for Terror’ in New Delhi. The aim of the conference is to take forward the discussions related to combating the financing of terrorism in the previous two conferences.

7. India’s multi–modal logistics park (MMLP) is set to be developed in which state?

A. Tamil Nadu

B. Gujarat

C. Karnataka

D. Maharashtra

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Reliance Industries Ltd (RIL) has been awarded the work to develop the first multi–modal logistics park (MMLP) at Mappedu, near Chennai in Tamil Nadu. Under the ‘PM GatiShakti National Master Plan (NMP)’, the road transport ministry is developing 35 multi–modal logistics parks. MMLP Chennai is being developed in an area of 184.27 acres.

8. What is the name of India’s first privately developed rocket?

A. Akash

B. Vikram– S

C. Vikrant– S

D. Surya

Answer & Explanation

Answer: B. Vikram– S

  • India’s first privately developed rocket, named Vikram–S is set to be launched on a sub–orbital mission with three payloads. Hyderabad–based space startup Skyroot Aerospace will become the first private space company in India to launch a rocket into space.  The mission named ‘Prarambh’ will carry payloads of two Indian and one foreign customer and is set for launch from ISRO’s launchpad at Sriharikota.

9. Prime Minister inaugurated ONGC’s U–field onshore facilities in which state?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Karnataka

D. West Bengal

Answer & Explanation

Answer: B. Andhra Pradesh

  • Prime Minister Narendra Modi inaugurated Oil and Natural Gas Corporation Limited’s U–field onshore facilities in B R Ambedkar Konaseema district of Andhra Pradesh. U–field is situated in Krishna Godavari basin block in Bay of Bengal. Natural gas from the field will be brought to the onshore facility through undersea pipelines before being dispatched to the users.

10. Tashigang, world’s highest polling booth, is located in which state/ UT?

A. Himachal Pradesh

B. Assam

C. Sikkim

D. Bihar

Answer & Explanation

Answer: A. Himachal Pradesh

  • Around 98.08 per cent voter turnout was recorded in the world’s highest polling station booth in Tashigang, in Himachal Pradesh. Of the 52 registered voters of the station, 51 stepped out to elect a new state government. Tashigang is situated at a height of 15,256 feet and was made a Model Polling station to make voting easy for senior citizens and disabled voters.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!