TnpscTnpsc Current Affairs

14th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

14th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 14th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

14th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. LEADS (Logistics Ease Across Different States) – 2022 என்ற அறிக்கையில் சரக்குப் போக்குவரத்து ரீதியில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆந்திர பிரதேசம்

  • நடுவண் வணிகம் & தொழிற்துறை அமைச்சகம் LEADS (பல்வேறு மாநிலங்களிடையே சரக்குப் போக்குவரத்தை எளிதாக்குதல்) – 2022 என்ற அறிக்கையை வெளியிட்டது. 2022 – சரக்குப் போக்குவரத்திற்கான குறியீட்டில் சாதனையாளர்களாக வகைப்படுத்தப்பட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் குஜராத் ஆகியவை அடங்கும். இந்தக் குறியீடு ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்குத் தேவையான சரக்குப் போக்குவரத்துச் சேவைகளின் செயல்திறனைக் குறிக்கிறது.

2. ‘2022 – Living Planet’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. இயற்கைக்கான உலகளாவிய நிதியம்

ஆ. UNEP

இ. UNESCO

ஈ. FAO

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இயற்கைக்கான உலகளாவிய நிதியம்

  • இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (WWF) அண்மைய ‘Living Planet’ என்ற அறிக்கையின்படி, கடந்த 50 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பாலூட்டிகள், பறவைகள், அருவிகள், ஊர்வனங்கள் மற்றும் மீன்களின் வன உயிரிகளின் எண்ணிக்கையில் 69% சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்ச சரிவு (94%) இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் காணப்படுகிறது. பல்லுயிர் இழப்பு மற்றும் காலநிலை நெருக்கடி ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. ஆப்பிரிக்கா 1970–2018 வரை அதன் வனவுயிரி எண்ணிக்கையில் 66% வீழ்ச்சியையும் ஆசியா பசிபிக் 55 சதவீத வீழ்ச்சியையும் பதிவுசெய்துள்ளது.

3. நூற்றுக்கணக்கான வலவம் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய பிட் தீவு அமைந்துள்ள நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. நியூசிலாந்து

இ. ஜப்பான்

ஈ. இந்தோனேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நியூசிலாந்து

  • நியூசிலாந்தின் பசிபிக் பெருங்கடலில் உள்ள பிட் தீவில் 240 வலவம் திமிங்கலங்கள் இறந்து கரையொதுங்கின. மனித நடமாட்டம் வெகு குறைவாக உள்ள பிட் தீவு மற்றும் சாதம் தீவுகள் தீவுக்கூட்டத்தில் இந்தத் திமிங்கலங்களின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கெனவே, அந்நாட்டின் கடற்கரையில் நிகழ்ந்த சில மர்மமான நிகழ்வுகளைத் தொடர்ந்து 215 திமிங்கலங்கள் இறந்தன.

4. அழிந்துவரும் உயிரினமான தேவாங்கிற்கு (Slender Loris) இந்தியாவிலேயே முதன்முறையாக சரணாலயம் அமைக்கவுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. கோவா

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • அழிந்துவரும் உயிரினமான தேவாங்கிற்கு (Slender Loris) இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதிகளில் 11,806 ஹெக்டேர் பரப்பை இணைத்து கடவூரில் தேவாங்கு சரணாலயம் உருவாக்கப்படும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின்படி, தேவாங்கு அழிந்துவரும் உயிரினமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இரவுநேரத்தில் உணவைத்தேடும் பாலூட்டியான இது தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் செலவிடுகிறது. வேளாண் பயிர்களுக்கு தீங்குவிளைவிக்கும் பூச்சிகளை வேட்டையாடி இயற்கை வேட்டையாடியாகத் திகழ்வதன்மூலம் அவை உழவர்களுக்கு உதவுகின்றன.

5. CSIR–NITI ஆயோக் அறிக்கையின்படி, ஈய நச்சுத்தன்மையால் அதீத சுகாதார மற்றும் பொருளாதாரச் சுமையைத் தாங்குகிற நாடு எது?

அ. ஆப்கானிஸ்தான்

ஆ. நேபாளம்

இ. இந்தியா

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • NITI ஆயோக் மற்றும் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR) ஆகியவை இணைந்து தயாரித்த ஓரறிக்கையின்படி, ஈய நச்சுத்தன்மையால் உலகிலேயே அதிக சுகாதார மற்றும் பொருளாதாரச் சுமையை இந்தியா தாங்கி வருகிறது. பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதீத சராசரி குருதி ஈய அளவைக் (Blood Lead Levels) கொண்டுள்ளன.
  • UNICEF மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனமான பியூர் எர்த்தின் கடந்த 2020ஆம் ஆண்டைய அறிக்கையின்படி, உலகளவில் ஈய நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட எண்ணூறு மில்லியன் குழந்தைகளுள் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்ளனர். இதன் பொருள் இந்தியாவின் குழந்தைகளில் பாதிபேர் ஈய நச்சுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது புலனாகிறது.

6. 2022ஆம் ஆண்டில் துரந்த் கோப்பையை வென்ற கால்பந்தணி எது?

அ. மும்பை சிட்டி FC

ஆ. பெங்களூரு FC

இ. சென்னையின் FC

ஈ. கேரளா பிளாஸ்டர்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பெங்களூரு FC

  • பெங்களூரு FC–உம் அதன் அணித்தலைவர் சுனில் சேத்ரியும் இறுதிப்போட்டியில் மும்பை சிட்டி FC அணியை வீழ்த்தி தங்கள் முதல் துரந்த் கோப்பைக்கான கால்பந்து போட்டி பட்டத்தை வென்றனர். இதன்மூலம் 38 வயதான சுனில் சேத்ரி தனது முதல் துரந்த் கோப்பையை வென்றார். பெங்களூரு FC அணி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் துரந்த் கோப்பை வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

7. அண்மையில் எந்த நாட்டின் அதிபராக, ஜோனோ லோரென்சோ என்பவர் பதவியேற்றார்?

அ. துருக்கி

ஆ. ஹங்கேரி

இ. அங்கோலா

ஈ. மாலத்தீவுகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அங்கோலா

  • மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரமான லுவாண்டாவில் அங்கோலா நாட்டு அதிபராக ஜோனோ லோரென்சோ என்பார் இரண்டாம் முறையாக பதவியேற்றார். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளால் கடுமையாக சர்ச்சைக்குள்ளானது. 1975ஆம் ஆண்டில் போர்ச்சுகலில் இருந்து விடுதலை அடைந்ததிலிருந்து ஆட்சியிலிருந்து வரும் அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம் தற்போதைய தேர்தலிலும் வெற்றி பெற்றது.

8. 32 ஆண்டு சேவைக்குப் பிறகு அண்மையில் சேவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட கடற்படைக்கப்பல் எது?

அ. INS அம்ரித்

ஆ. INS அஜை

இ. INS அக்ஷய்

ஈ. INS அபையா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. INS அஜை

  • இந்தியக் கடற்படைக் கப்பல் அஜை (P34) நாட்டிற்கு 32 ஆண்டுகால சிறப்பான சேவையாற்றிய பிறகு சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டது. அதன் பணி நீக்க விழா மும்பையில் உள்ள கடற்படைக் கப்பல் தளத்தில் நடைபெற்றது. INS அஜை என்பது மேற்குக் கடற்படைக் கட்டளையின் அபை வகை நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பலாகும். இந்தக் கப்பல் 1990 ஜனவரி.24இல் பணிக்குச் சேர்க்கப்பட்டது. இது 1999ஆம் ஆண்டு கார்கில் போரின்போது, ‘ஆபரேஷன் தல்வார்’ மற்றும் 2001இல், ‘ஆபரேஷன் பராக்கிரமம்’ உட்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டது.

9. “A watershed moment: transformative solutions to interlocking challenges” என்பது 2022இல் நடைபெற்ற எந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்?

அ. SCO உச்சிமாநாடு – 2022

ஆ. WHO உலக சுகாதார அவை

இ. G20 உச்சிமாநாடு

ஈ. ஐநா பொதுச்சபை அமர்வு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஐநா பொதுச்சபை அமர்வு

  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77ஆவது அமர்வு (UNGA–77) அண்மையில் நியூயார்க்கில் தொடங்கியது. ஐநா பொதுச்சபை என்பது ஐநா அவையின் முதன்மையான கொள்கை உருவாக்கும் ஓர் அமைப்பாகும். COVID–19, கால நிலை மாற்றம் மற்றும் மோதல்கள் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் நெகிழ்திறனைக் கட்டியெழுப்புவ –தற்கான தீர்வுகளின் தேவைபோன்ற நெருக்கடிகளை மையமாகக்கொண்டு, “A Watershed Moment: Transformative Solutions to Interlocking Challenges” இந்த ஆண்டு உச்சிமாநாட்டிற்கான கருப்பொருள் உள்ளது.

10. சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் செயற்கைக்கோள் வழியான அகலக்கற்றை அடிப்படையிலான இணைய சேவையைக் கொண்டுவருவதற்காக, இந்திய இராணுவம், கீழ்க்காணும் எந்நிறுவனத்துடன் கூட்டிணைந்தது?

அ. ஏர்டெல்

ஆ. ஜியோ

இ. BBNL

ஈ. வி!

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. BBNL

  • இந்திய இராணுவம், பாரத அகலக்கற்றை வலையமைப்பு நிறுவனத்துடன் (BBNL) இணைந்து சியாச்சின் பனிப் பாறைப்பகுதியில் செயற்கைக்கோள் வழியான அகலக்கற்றை (broadband) அடிப்படையிலான இணைய சேவையைக் கொண்டுவந்துள்ளது. இமயமலையின் கிழக்குக் காரகோரம் மலைத்தொடரில் 19,061 அடி உயரத்தில் சியாச்சின் பனிப்பாறை அமைந்துள்ளது. BBNL என்பது முற்றிலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான அகலக்கற்றை அடிப்படையிலான இணைய சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாகும். தொலைதூர கிராமங்களுக்குச் செயற்கைக்கோள்கள்மூலம் இணைய இணைப்பு வழங்கும், ‘பாரத் நெட்’ என்ற திட்டத்தின்கீழ் இது செயல்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. முதல் தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சி தில்லியில் 2022 அக்.16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது

நடுவண் நிலக்கரி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய தேசிய குழு, “தற்சார்பு இந்தியாவை நோக்கி இந்திய நிலக்கரித்துறை” என்ற கருப்பொருளில் இரண்டு நாள் தேசிய மாநாட்டை, புது தில்லியில் அக்டோபர்.16, 17 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரண்டு நாள் மாநாடு, கொள்கை இயற்றுவோர், பொது மற்றும் தனியார் சுரங்க நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் கலந்துரையாடவும், தற்சார்பு இந்தியா திட்டத்துடன் இந்திய நிலக்கரி துறையை இணைப்பதற்கு தேவையான திட்டங்களை வகுக்கவும் சரியான தளத்தை வழங்கும். மின்சார தயாரிப்பில் எரிபொருளில் தன்னிறைவு பெறுதல், தற்சார்பு இந்தியாவில் நிலக்கரிக்கான எஃகு தயாரிப்பு, தொழில்நுட்பம் & நிலைத்தன்மை ஆகியவை மாநாட்டின் கருப்பொருளாக இருக்கும்.

2. ஏழாவது இந்தியா-பிரேசில் –தென்னாப்பிரிக்கா கடற்படை பயிற்சியில் INS தர்காஷ் பங்கேற்றது

ஏழாவது இந்தியா-பிரேசில்–தென்னாப்பிரிக்கா கடற்படை பயிற்சி தென்னாப்பிரிக்காவின் எலிசபெத் துறைமுகத்தில் 2022 அக்.10 முதல் 12 வரை நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் ஏவுகணையை தாங்கிச்செல்லும் INS தர்காஷ், சேதக் ஹெலிகாப்படர் மற்றும் மார்கோஸ் சிறப்புப்படைகள் இந்திய கப்பற்படை சார்பில் பங்கேற்றன. கடல்சார் உறவுகளை வலுப்படுத்துதல், கூட்டு இராணுவ பயிற்சியை மேம்படுத்துதல், கடல்சார் குற்றங்களை முறியடித்தல், கடல் வழியான தொடர்புகளைப் பாதுகாத்தல் உள்ளிட்டவை இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

14th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which state topped the Logistics Index in LEADS (Logistics Ease Across Different States) 2022 report?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Maharashtra

D. Gujarat

Answer & Explanation

Answer: B. Andhra Pradesh

  • The Union Commerce and Industry Ministry launched the LEADS (Logistics Ease Across Different States) 2022 report. Andhra Pradesh, Assam and Gujarat are among the 15 States and UTs categorised as achievers in the logistics index chart 2022. The index is an indicator of efficiency of logistical services necessary for promoting exports and economic growth.

2. Which institution released the ‘Living Planet Report 2022’?

A. World Wide Fund for Nature

B. UNEP

C. UNESCO

D. FAO

Answer & Explanation

Answer: A. World Wide Fund for Nature

  • According to the latest Living Planet Report by World Wide Fund for Nature (WWF), there has been a 69 per cent decline in the wildlife populations of mammals, birds, amphibians, reptiles and fish, across the globe in the last 50 years.
  • The highest decline (94 per cent) was in the Latin America and the Caribbean region. The report also emphasised that Biodiversity loss and climate crisis are intertwined. Africa recorded a 66 per cent fall in its wildlife populations from 1970–2018 and the Asia Pacific 55 per cent.

3. Pitt Island, where hundreds of pilot whales were stranded dead, is located in which country?

A. USA

B. New Zealand

C. Japan

D. Indonesia

Answer & Explanation

Answer: B. New Zealand

  • A pod of 240 pilot whales has lost their lives after being stranded on New Zealand’s Pitt Island in the Pacific Ocean. The pod of whales has been found on the Chatham Islands archipelago, which consists of Pitt Island and Chatham Island with minimal human presence. Earlier, 215 whales died following a mysterious beaching event in the country.

4. India’s first sanctuary for endangered ‘Slender Loris’ is to be set up in which state/UT?

A. Tamil Nadu

B. Assam

C. Goa

D. Karnataka

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • India’s first ever sanctuary for the endangered Slender Loris will be set up in Tamil Nadu. The Kadavur Slender Loris Sanctuary will be formed by merging 11,806 hectares in the forest areas of Karur and Dindigul districts.
  • Slender Loris is listed as an endangered species according to the International Union for the Conservation of Nature (IUCN).  It is a small nocturnal mammal that spends most of its life on trees. They help farmers by acting as biological predators of pests that harm agricultural crops.

5. As per the CSIR–NITI Aayog Report, which country bears the highest health and economic burden due to lead poisoning?

A. Afghanistan

B. Nepal

C. India

D. Sri Lanka

Answer & Explanation

Answer: C. India

  • As per the report prepared jointly by Niti Aayog and the Council of Scientific & Industrial Research (CSIR), India bears the world’s highest health and economic burden due to lead poisoning. Bihar, Uttar Pradesh, Madhya Pradesh, Jharkhand, Chhattisgarh and Andhra Pradesh had the highest average blood lead levels (BLL). A 2020 report by UNICEF and non–profit Pure Earth had found India had major number of the 800 million children poisoned by lead globally. It meant that half of India’s children were poisoned by lead.

6. Which football team won the Durand Cup in 2022?

A. Mumbai City FC

B. Bengaluru FC

C. Chennaiyin FC

D. Kerala Blasters

Answer & Explanation

Answer: B. Bengaluru FC

  • Bengaluru FC and their captain Sunil Chhetri won their maiden Durand Cup football tournament title after beating Mumbai City FC in the final clash. The 38–year–old Sunil Chhetri clinched his first Durand Cup. Bengaluru FC has achieved first Durand Cup victory since coming into existence in 2013.

7. ‘João Lourenço’ has sworn in as the President of which country?

A. Turkey

B. Hungary

C. Angola

D. Maldives

Answer & Explanation

Answer: C. Angola

  • ‘João Lourenço’ has sworn in as the President of Angolan for a second term in the Central African country’s capital– Luanda. The results of the Elections were heavily disputed by the opposition. The Popular Movement for the Liberation of Angola (MPLA), which was in power since independence from Portugal in 1975, won the elections.

8. Which Naval ship has been decommissioned recently after 32 years of its service?

A. INS Amrit

B. INS Ajay

C. INS Akshay

D. INS Abhaya

Answer & Explanation

Answer: B. INS Ajay

  • Indian Naval Ship Ajay (P34) was decommissioned recently after 32 years of distinguished services to the nation. The decommissioning ceremony was held at Mumbai’s Naval Dockyard. INS Ajay was an Abhay class anti–submarine warfare corvette of Western Naval Command. The ship was commissioned on January 24, 1990. It was posted on various deployments including Operation Talwar during the Kargil War in 1999 and Operation Parakram in 2001.

9. ‘A watershed moment: transformative solutions to interlocking challenges’ is the theme of which summit held in 2022?

A. SCO Summit – 2022

B. WHO World Health Assembly

C. G20 Summit

D. UN General Assembly Session

Answer & Explanation

Answer: D. UN General Assembly Session

  • The 77th session of the United Nations General Assembly (UNGA–77) was inaugurated recently in New York followed by the High–Level Week. The UN General Assembly (UNGA) is the main policy–making organ of the United Nations. This year’s theme is ‘A watershed moment: transformative solutions to interlocking challenges’ with focus on crises such as COVID–19, climate change and conflict and need for solutions to build global sustainability and resilience.

10. The Indian Army has collaborated with which institution for activating satellite broadband-based internet service on the Siachen Glacier?

A. Airtel

B. Jio

C. BBNL

D. Vi

Answer & Explanation

Answer: C. BBNL

  • The Indian Army, in collaboration with Bharat Broadband Network Limited (BBNL), has activated satellite broadband–based internet service on the Siachen Glacier. The glacier is located in the eastern Karakoram range of the Himalayas at a height of 19,061 feet. The BBNL is a wholly government–owned broadband infrastructure provider company. It is working under Bharat Net scheme to provide internet connectivity through satellites to rural remote areas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!