TnpscTnpsc Current Affairs

15th & 16th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

15th & 16th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th & 16th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. IHU (B.1.640.2) என்ற புதிய COVID திரிபு கண்டறியப்ப -ட்ட நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா

இ) பிரான்ஸ் 

ஈ) இத்தாலி

 • IHU (B.1.640.2) எனப் பெயரிடப்பட்ட புதிய COVID திரிபு பிரான்ஸில் அமைந்துள்ள IHU மெடிட்டரேனி தொற்று நிறுவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய மாறுபாடு ஒமிக்ரானைவிட 46 பிறழ்வுகளைக் கூடுதலாக கொண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
 • இதன் முதல் பாதிப்பு ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த ஒருவரிடம் கண்டறியப்பட்டது. அறிவியலா -ளர்களின் கூற்றுப்படி, இப்புதிய திரிபு E484K பிறழ்வைக் கொண்டுள்ளது. அது தடுப்பூசி-எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது.

2. ‘KABIL’ என்பது பின்வரும் எம்மத்திய அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும்?

அ) சுரங்க அமைச்சகம் 

ஆ) எஃகு அமைச்சகம்

இ) MSME அமைச்சகம்

ஈ) எரிசக்தி அமைச்சகம்

 • சுரங்க அமைச்சகம் ‘கனிஜ் பிதேஷ் இந்தியா (கபில்)’ என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO), ஹிந்துஸ்தான் காப்பர் (HCL) மற்றும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் (MECL) ஆகியவற்றின் பங்கு இதில் 40:30:30 ஆகும்.
 • ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி போன்ற நாடுகளில் லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற முக்கிய கனிமங்களின் சுரங்கங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

3. எந்த மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக அல்கா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) ONGC 

ஆ) SAIL

இ) PFC

ஈ) NTPC

 • எண்ணெய் & இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) முதல் பெண் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக அல்கா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். ONGC இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர் ஆகும். இந்நியமனத்திற்கான பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

4. இந்தியாவின் முதல் நடமாடும் தேன் பதப்படுத்தும் வாகனம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம் 

ஆ) குஜராத்

இ) கர்நாடகா

ஈ) கேரளா

 • இந்தியாவின் முதல் நடமாடும் தேன் பதப்படுத்தும் வேன் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள சிரோரா கிராமத்தில் தொடங்கப்பட்டது. இதனை KVIC’இன் தலைவர் வினய் குமார் சக்சேனா தொடங்கி வைத்தார்.
 • இந்நடமாடும் வாகனம் KVICஆல் அதன் பஞ்சோகெராவில் உள்ள பல்துறை பயிற்சி மையத்தில் 15 இலட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது. இதால் 8 மணி நேரத்தில் 300 கிகி தேனைச் செயலாக்க முடியும். மேலும் தேனின் தரத்தை ஆராயும் ஒரு பரிசோதனை ஆய்வகத்தையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.

5. ‘Ecowrap’ என்பது எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முதன்மை அறிக்கையாகும்?

அ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ) NITI ஆயோக்

இ) இந்திய ரிசர்வ் வங்கி

ஈ) பாரத ஸ்டேட் வங்கி 

 • ‘Ecowrap’ என்பது பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) ஆய்வுக் குழுவால் வெளியிடப்படுகிற அறிக்கையாகும்.
 • இந்த அறிக்கையின் சமீபத்திய பதிப்பின்படி, இந்தியாவின் மெய்யான GDP 2021-22’இல் 9.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டிற்கான தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை NSO வெளியிட்டது. இது 2021-22’இல் GDP வளர்ச்சியை 9.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

6. NPCIஇன்படி, ஒரு வாடிக்கையாளருக்கு, ஒரு நாளுக்கு ஒரு டெர்மினலுக்கு, ஆதார் அடிப்படையிலான ரொக்கம் பெறும் பரிவர்த்தனைகளின் அதிகபட்ச வரம்பு என்ன?

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து 

ஈ) ஏழு

 • நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பணம் எடுப்பதற்கும் மினி ஸ்டேட்மெண்ட்களுக்கும் அதிகபட்ச வரம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு, ஒரு நாளுக்கு, ஒரு டெர்மினலுக்கு, ஆதார் அடிப்படையிலான பணம் எடுக்கும் பரிவர்த்தனை -களின் அதிகபட்ச வரம்பை ஐந்து என அது நிர்ணயம் செய்துள்ளது. இது 2022 ஜன.15 முதல் அமலுக்கு வரும்.

7. அகர்தலா மற்றும் ஜிரிபாம் இடையே தொடங்கப்பட்ட புதிய ஜன் சதாப்தி விரைவு இரயிலானது திரிபுராவை பின்வரும் எந்த மாநிலத்துடன் இணைக்கிறது?

அ) மேற்கு வங்கம்

ஆ) மணிப்பூர் 

இ) சிக்கிம்

ஈ) அஸ்ஸாம்

 • இரு வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா & மணிப்பூரை இணைக்கும் அகர்தலா மற்றும் ஜிரிபாம் இடையேயான ஜன் சதாப்தி விரைவு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து தொடங்கினார்.
 • ஜன் சதாப்தி விரைவு இரயில் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும். இதன் பயணம் 6 மணி நேரம். இது தவிர, திரிபுராவில் இராஜ்தானி விரைவு இரயில், கஞ்சன்ஜங்கா விரைவு இரயில், ஹம்சாபர் விரைவு இரயில் உள்ளிட்டவை ஏற்கனவே இயக்கத்தில் உள்ளன.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஓநாய் எரிமலை, எந்தத் தீவுக்கூட்டத்தின் மிகவுயரமான சிகரமாகும்?

அ) ஹவாய் தீவுகள்

ஆ) கலபகோஸ் தீவுகள் 

இ) மரியானா தீவுகள்

ஈ) கரோலின் தீவுகள்

 • வைட்டன் மலை என்றுமழைக்கப்படும் ஓநாய் எரிமலை, கலபகோஸ் தீவுகளின் மிக உயரமான சிகரமாகும். இது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு எரிமலைத்தீவுக்கூட்டம் ஆகும். இந்த எரிமலை சமீபத்தில் வெடித்துச்சிதறி, பசிபிக் பெருங்கடலில் புகை மண்டலத்தை உருவாக்கியது. இந்தத்தீவுகள் ஈக்வடார் மாகாணத்தின் ஒருபகுதியாகும்.

9. நந்தூர் மத்மேஷ்வர் பறவைகள் சரணாலயம் உள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) மகாராஷ்டிரா 

 • நந்தூர் மத்மேஷ்வர் பறவைகள் சரணாலயம் மகாராட்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள நிபாத் என்ற இடத்தில் அமைந்துள்ள ஈரநிலமாகும். குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இப்பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான புலம்பெயர் பறவைகள் குவிந்துள்ளன.
 • வனத்துறையினர் கூறுகையில் பூநாரைகள், கொக்குகள், கல்பொறுக்கிகள், நீலக்குஞ்சுகள் உள்ளிட்ட முப்பது (30) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் அங்கு வந்துள்ளன. கடுமையான குளிர்காலத்திலிருந்து தற்காத்துக்கொள்வத -ற்காக சைபீரியா, ஐரோப்பாவிலிருந்து அந்தப்பறவைகள் இங்கு இடம்பெயர்கின்றன.

10. 2022’இல் 25ஆவது தேசிய இளையோர் விழாவை நடத்திய மாநிலம்/யூடி எது?

அ) தமிழ்நாடு

ஆ) புதுச்சேரி 

இ) கோவா

ஈ) கர்நாடகா

 • புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு, 25ஆவது தேசிய இளையோர் விழாவை ஜன.12 அன்று நடத்தியது. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஜன.12 அன்று நடத்தப்பட்டது.
 • மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்பெற்ற இந்நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து 7,000 இளைஞயோர் பங்கேற்ற -னர். விழாவின் சின்னமான, “சக்ஷம் யுவ-ஷஷக்த் யுவா” ஆகியவற்றையும் அமைச்சர் வெளியிட்டார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கணிதப்பாடத்தை எளிதாகக் கற்க புதுமையான திட்டம்: 25,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சி

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் கணிதப்பாடத்தை நன்கு புரிந்துகொண்டு ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதற்
-காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ரசிக்ஷா) சார்பில் ‘மகிழ் கணிதம்’ என்ற புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கற்பிக்கும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களுக்கு ‘மகிழ் கணிதம்’ தொடர்பான பயிற்சி முதற்கட்டமாக ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய இருநாள்கள் வழங்கப்படவுள்ளது.

ஆட்சியர்மூலம் சான்றிதழ்: அனைத்து கணித ஆசிரியர்க -ளும் பயிற்சியில் கலந்துகொள்வதை அந்தந்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிசெய்ய அறிவுறுத்தப் -பட்டுள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

2. இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது பெரும் முயற்சியால் கட்டினார்.

பென்னிகுவிக் லண்டனில் உள்ள தனது சொத்துக்களை விற்று தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கவும், வறண்டு கிடந்த நிலங்கள் வளம் பெறவும் இந்த அணையை கட்டினார். இதனால், ‘முல்லைப்பெரியாறு அணையின் தந்தை’ என பென்னிகுவிக் அழைக்கப்படுகிறார்.

தேனி மாவட்ட மக்கள் சாதி, மதம் கடந்து பென்னி குவிக்கை கடவுள்போல் வணங்கிவருகின்றனர்.

பென்னிகுவிக் பிறந்தநாளான இன்று (ஜனவரி 15) தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ‘பென்னிகுவிக்’ பொங்கல் என்ற பெயரில் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுகின்றனர். மேலும் பென்னிகுவிக் பிறந்தநாளை அரசு விழாவாகவும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் சிலை அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்லியில் நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.

3. திருவள்ளுவர் விருது பெங்களுர் மீனாட்சி சுந்தரத்துக்கும் காமராஜர் விருது குமரி அனந்தனுக்கும் அறிவிப்பு

2022ஆம் ஆண்டிற்கான “ஐயன் திருவள்ளுவர் விருது” பெங்களுர் மு மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும், 2021ஆம் ஆண்டிற்கான “பெருந்தலைவர் காமராசர் விருது” முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

விருதுபெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக `1 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள்.

4. ஜன.16 தேசிய ஸ்டார்ட் அப் தினம்: பிரதமர் மோடி அறிவிப்பு

ஜன.16ஆம் தேதி “தேசிய ஸ்டார்ட் அப்” தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் ஜனவரி.16 தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் கூறினார்.

5. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார் விராட் கோலி

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகியுள்ளார்.

டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியிலிருந்து கேப்டன்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டும் நீடித்த விராட் கோலி, இப்போது டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகியுள்ளார்.

2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்தது. கோலி தலைமையிலான இந்திய அணி தான் வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் கோலி தலைமையில் முதல் முறையாக 2018-2019 சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவந்தது. முதல் முறையாக நடத்தப்பட்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்ற இந்திய அணி, ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது.

டெஸ்ட் அணியை சிறப்பாக வழிநடத்திவந்தார் கோலி. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றது. இந்த தொடரில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பிருந்தும், அனுபவமற்ற தென்னாப்பிரிக்க அணியிடம் இந்திய அணி தோற்றது. அதற்கு மோசமான பேட்டிங் தான் காரணம்.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ஸ்டம்ப் மைக்கில் கோலி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, கோலி மீது கடும் விமர்சனங்களையும் எழுப்பியது.

இந்நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக கோலி திடீரென அறிவித்துள்ளார். கோலியின் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த கோலி, டெஸ்ட் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

1. The new COVID variant named IHU (B.1.640.2), has been discovered in which country?

A) USA

B) India

C) France 

D) Italy

 • The new COVID variant named IHU (B.1.640.2) has been discovered at the IHU Mediterranee Infection institute in France. The new variant is said to have 46 mutations more than Omicron. The first case was reported from a person who had come from the African country of Cameroon. As per the Scientists, the new strain carries E484K mutation making it vaccine–resistant.

2. ‘KABIL’ is a joint venture company created by which Union Ministry?

A) Ministry of Mines 

B) Ministry of Steel

C) Ministry of MSME

D) Ministry of Power

 • The Mines Ministry has created a joint venture company called ‘Khanij Bidesh India (KABIL)’. The equity participation of National Aluminium Company (NALCO), Hindustan Copper (HCL) and Mineral Exploration Corporation (MECL) is 40:30:30. India is working to acquire mines of strategic minerals such as lithium and cobalt in countries like Australia, Argentina, Bolivia and Chile.

3. Alka Mittal has been appointed as the first female Chairman and MD of which Central Public Sector Enterprise (CPSE)?

A) ONGC 

B) SAIL

C) PFC

D) NTPC

 • Alka Mittal has been appointed as the first female Chairman and MD of Oil and Natural Gas Corporation (ONGC). ONGC is the country’s largest oil and gas producer. The Appointments Committee of the Cabinet (ACC) has approved the proposal of the Ministry of Petroleum and Natural Gas for this appointment.

4. India’s first Mobile Honey Processing Van was launched in which state?

A) Uttar Pradesh 

B) Gujarat

C) Karnataka

D) Kerala

 • India’s first Mobile Honey Processing Van was launched at Village Sirora in Ghaziabad, Uttar Pradesh. It was inaugurated by the Chairman of KVIC, Vinai Kumar Saxena. The Mobile Van has been designed by KVIC at its Multi–disciplinary Training Centre, Panjokehra, at a cost of INR 15 lakh. It can process up to 300 KG of honey in 8 hours and also comprises of with a testing laboratory, which would examine the quality of honey.

5. ‘Ecowrap’ is the flagship report released by which institution?

A) Asian Development Bank

B) NITI Aayog

C) Reserve Bank of India

D) State Bank of India 

 • ‘Ecowrap’ is the report released by the Research Team of the State Bank of India. As per the latest edition of the report, India’s real GDP is expected to grow at around 9.5 per cent in 2021–22. The NSO released the First Advance Estimates of National Income for financial year 2021–22. It estimated the GDP Growth in 2021–22 as 9.2 per cent.

6. What is the maximum limit of Aadhaar–enabled cash withdrawal transactions, per customer, per terminal per day, as per NPCI?

A) Two

B) Three

C) Five 

D) Seven

 • National Payments Corporation of India has introduced limits for cash withdrawals and mini statements. It states that the maximum limit of five Aadhaar enabled cash withdrawal transactions, per customer, per terminal per day. The issuers will also implement a limit of a minimum of five mini statement transactions per customer per month. This has to be implemented by January 15, 2022.

7. The New Jan Shatabdi Express inaugurated between Agartala and Jiribam connects Tripura with which state?

A) West Bengal

B) Manipur 

C) Sikkim

D) Assam

 • Union Railway minister Ashwini Vaishnaw flagged off the Jan Shatabdi Express between Agartala and Jiribam connecting two northeastern states, Tripura and Manipur. The Jan Shatabdi Express will run thrice a week and the journey will take six hours.
 • Besides this, Tripura has Rajdhani Express, Kanchanjungha Express, Humsafar Express among others.

8. Wolf Volcano, which was seen in the news, is the highest peak in which island group?

A) Hawaiian Islands

B) Galápagos Islands 

C) Mariana Islands

D) Caroline Islands

 • Wolf Volcano, also known as Mount Whiton, is the highest peak in the Galápagos Islands. It is a volcanic archipelago in the Pacific Ocean. The volcanic mountain recently erupted, spewing lava and clouds of ash over the Pacific Ocean. The islands are part of the province of Ecuador.

9. Nandur Madhmeshwar bird sanctuary is situated in which state/UT?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Maharashtra 

 • Nandur Madhmeshwar bird sanctuary is a wetland situated in Niphad in Maharashtra’s Nashik. With the beginning of winter, a large number of migratory birds have flocked to the bird sanctuary.
 • As per the Forest Department, more than 30,000 birds including flamingos, cranes, golden flowers, blue chicks and many others have come to the place. Birds from Siberia, Europe migrate here to escape the harsh winter conditions.

10. Which state/UT is set to host the 25th National Youth Festival in 2022?

A) Tamil Nadu

B) Puducherry 

C) Goa

D) Karnataka

 • Puducherry Union Territory government is making arrangements to host the 25th National Youth Festival on January 12. The Day marks the birth anniversary of Swami Vivekananda.
 • Over 7,000 youth from across the country will take part in the events, held in association with the Union Ministry of Youth Affairs and Sports. The Minister also unveiled the festival logo and mascot, “Saksham Yuva–Shashakt Yuva”.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button