15th & 16th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. டிஜிட்டல் செய்தி இணையதளங்கள், ஆன்லைன் திரைப்படங்கள் மற்றும் உள்ளடக்க வழங்குநர்களை கண்காணிக்கும் மத்திய அமைச்சகம் எது?

அ. தகவல்தொடர்பு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஈ. கலாச்சார அமைச்சகம்

 • நடுவணரசின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, டிஜிட்டல் அல்லது ஆன்லைன் மீடியா, திரைப்படங்கள் மற்றும் ஒளி-ஒலி நிகழ்ச்சிகள், செய்தி & நடப்பு நிகழ்வுகளின் உள்ளடக்கம் ஆகிய அனைத்தும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரப்படும். தற்போது நாட்டில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை நிர்வகிக்கும் எந்தவொரு சட்டமோ (அ) தன்னாட்சி அமைப்போ கிடையாது. இந்த உத்தரவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

2. நடப்பாண்டில் (2020) வரும் உலக நகரங்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Designed to Live Together

ஆ. Valuing Our Communities and Cities

இ. Changing the world

ஈ. Promoting a better urban future

 • உலகளாவிய நகரமயமாக்கலில் ஆர்வங்கொண்ட பன்னாட்டுச் சமூகங்ககளை ஊக்குவிப்பதற்காகவும் நகரமயமாக்கலில் சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.31 அன்று உலக நகரங்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Valuing Our Communities and Cities” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். “Better City, Better Life” என்பது இந்நாளுக்கு வழங்கப்பெறும் பொதுவான கருப்பொருளாகும்.

3. நடப்பாண்டில் (2020) வரும் உலக நிமோனியா நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Healthy Lungs for All

ஆ. Every Breath Counts

இ. Innovate to End Child Pneumonia

ஈ. Universal Access to Pneumonia Prevention and Care

 • பொதுநலவாழ்வு பிரச்சனையான நுரையீரல் அழற்சியின் தீவிரத்தன்மையை எடுத்துரைக்கவும், மேலும் அந்நோயை எதிர்த்துப்போராடுவதற்கு அமைப்புகள் & நாடுகளை ஊக்கப்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12 அன்று உலக நுரையீரல் அழற்சி நாள் (Pneumonia Day) கடைப்பிடிக்கப்படுகிறது. “Every Breath Counts” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

4. ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வென்ற விளையாட்டு ஆளுமை யார்?

அ. மணிகா பத்ரா

ஆ. சென் மெங்

இ. ஜு யூலிங்

ஈ. லியு ஷெவின்

 • உலகின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீராங்கனையான சென் மெங் (26), இந்த ஆண்டு (2020) ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வென்றார். சீன நாட்டைச்சேர்ந்த சன் யிங்ஷாவை வீழ்த்தி சென் மெங் தனது முதல் ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வெய்ஹாயில் வென்றார். ITTF’இன் #RESTART தொடரின் முதல் வெற்றியாளராகவும் அவர் மாறியுள்ளார்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘உள்ளக சந்தை மசோதா’வுடன் தொடர்புடைய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இரஷ்யா

இ. பிரிட்டன்

ஈ. இந்தியா

 • BREXIT செயல்முறைக்குப் பிறகு பிரிட்டனின் 4 நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை பாதுகாக்க ‘உள்ளக சந்தை மசோதா’ வடிவமைக்கப்பட்டது. அண்மையில், பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஒப்பந்தத்தை மீறுவதற்காக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி தரும் மசோதாவில் உள்ள உட்பிரிவுகளுக்கு எதிராக பிரபுக்கள் அவை வாக்களித்தது. இது மேலவையில் ஆளும் பழமைவாத கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

6. இந்தியா-ASEAN உச்சிமாநாட்டை, எந்த நாட்டின் தலைவருடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கவுள்ளார்?

அ. சிங்கப்பூர்

ஆ. தாய்லாந்து

இ. வியட்நாம்

ஈ. மியான்மர்

 • மெய்நிகராக நடைபெறவுள்ள 17ஆவது இந்தியா-ASEAN உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாமிய பிரதமர் நுயேன் ஜுவான் புக் உடன் இணைந்து தலைமை வகிப்பார். ASEAN-இந்தியா செயல்திட்டத்தை (2021-2025) ஏற்றுக்கொள்வதில் இருநாட்டு தலைவர்களும் தங்களது கவனத்தை செலுத்துவார்கள். கடந்த ஆண்டு நவம்பரில், பாங்காக்கில் நடந்த 16ஆவது ASEAN-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

7. நடப்பாண்டில் (2020) வரும் உலக நீரழிவு நோய் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Go Blue for Breakfast

ஆ. Eyes on Diabetes

இ. The Nurse and Diabetes

ஈ. Women and diabetes

 • நீரழிவு நோயை கண்டறிவது தடுப்பது மற்றும் நிர்வகிப்பது குறித்து குடும்பங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.16 அன்று உலக நீரழிவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “The Nurse and Diabetes” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். உலக நாடுகளை நீரழிவு நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டமொன்றை இந்நாளின்போது உலக நலவாழ்வு அமைப்பு (WHO) அறிவித்தது.

8. எத்தனை துறைகளுக்கான `1.46 இலட்சம் கோடி வரை மதிப்புள்ள ‘உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?

அ. ஐந்து

ஆ. பத்து

இ. பதினைந்து

ஈ. பதினாறு

 • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பத்து முக்கிய துறைகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தி ‘தற்சார்பு இந்தியா’ இலட்சியத்தை அடையும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 • (1) மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் மின்கலம்; (2) மின்னணு மற்றும் தொழில்நுட்பப் பொருட்கள்; (3) வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள்; (4) மருந்துகள்; (6) தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் பொருட்கள்; (7) ஜவுளிப் பொருட்கள்; (8) உணவுப் பொருட்கள்; (9) அதிக திறன்கொண்ட சூரிய ஆற்றல் ஒளி மின்னழுத்தப் பொருட்கள் மற்றும் (10) சிறப்பு எஃகு ஆகிய துறைகள் இதில் அடங்கும்.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ORF3d’ என்றால் என்ன?

அ. COVID-19 தடுப்பூசி

ஆ. கொரோனா வைரஸ் மரபணு

இ. ஏவுகணை

ஈ. செயற்கைக்கோள்

 • கொரோனா வைரஸில், ‘ORF3d’ என்றவொரு புதிய மறைந்திருந்த மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். ஒன்றுக்கு மேல் ஒன்றாக அமைந்துள்ள இந்தப் புதிய ‘ORF3d’ மரபணு, தனித்துவமான உயிரியல் துறைக்கும் அதேவேளையில் தொற்றுநோய்க்கும் இது பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. COVID-19 வைரசுக்கு எதிரான புதிய தடுப்பூசிகளின் உருவாக்கத்திற்கும் இது வழிவகுக்கும். இதுகுறித்த ஆய்வுக்கட்டுரை, ‘eLife’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

10. ‘வேம்கோ’ சூறாவளியானது கீழ்க்காணும் எந்த நாட்டைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது?

அ. இந்தியா

ஆ. ஜப்பான்

இ. அமெரிக்கா

ஈ. பிலிப்பைன்ஸ்

 • ‘வேம்கோ’ சூறாவளியானது பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரைகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்ப -டுகிறது. எனவே, கிழக்கு கடலோரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை அப்பகுதியை காலி செய்துவிட்டு பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு செல்ல அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச் சூறாவளி, பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டில் (2020) வரும் 21ஆவது வெப்பமண்டல சூறாவளியாகும்.

1. Which Union Ministry would monitor Digital news portals, online films and content providers?

[A] Ministry of Communication

[B] Ministry of Home Affairs

[C] Ministry of Information and Broadcasting

[D] Ministry of Culture

 • As per the recent announcement of the Central Government, digital or online Media, films and audio–visual programmes, news and current affairs content would be brought under the Ministry of Information and Broadcasting. At present, there is no law or autonomous body governing the digital content in the country. The President is said to have signed the order.

2. Which sportsperson has clinched the ITTF Women’s World Cup title?

[A] Manika Batra

[B] Chen Meng

[C] Zhu Yuling

[D] Liu Shewin

 • World number one Table tennis player Chen Meng clinched the ITTF Women’s World Cup title of this year. The 26–year old player beat Chinese compatriot Sun Yingsha to win her maiden ITTF Women’s World Cup title in Weihai. She also became the first winner of the ITTF’s #RESTART series.

3. What is the theme of 2020 edition of World Cities Day?

[A] Designed to Live Together

[B] Valuing Our Communities and Cities

[C] Changing the world

[D] Promoting a better urban future

 • The World Cities Day is observed on October.31 to promote the international community’s interest in global urbanization, push forward cooperation among countries in meeting opportunities and addressing challenges of urbanization, and contributing to sustainable urban development around the world.

4. What is the theme of 2020 edition of World Pneumonia Day?

[A] Healthy Lungs for All

[B] Every Breath Counts

[C] Innovate to End Child Pneumonia

[D] Universal Access to Pneumonia Prevention and Care

 • The World Pneumonia Day is observed every year on 12th of November to promote interventions to protect against, prevent, and treat pneumonia and to highlight proven approaches and solutions in need of additional resources and attention. The 2020 theme is “Every Breath Counts”.

5. ‘Internal Market Bill’, which was seen in the news recently, is associated with which country?

[A] United States

[B] Russia

[C] Britain

[D] India

 • The Internal Market Bill is designed to protect the trade between Britain’s four nations after the process of Brexit. Recently, the House of Lords voted against the clauses in the bill which would allow the British Prime Minister Boris Johnson to breach Britain’s EU exit treaty. This is seen as a defeat to the ruling Conservative Party in the upper chamber.

6. Prime Minister Narendra Modi is to co–chair the India–ASEAN summit along with the head of which country?

[A] Singapore

[B] Thailand

[C] Vietnam

[D] Myanmar

 • Prime Minister Narendra Modi will co–chair the virtual 17th India–ASEAN summit, along with the Vietnamese Prime Minister Nguyen Xuan Phuc. The leaders are expected to note the adoption of ASEAN–India Plan of Action (2021–2025). The Prime Minister attended the 16th ASEAN–India Summit in Bangkok in November last year.

7. The Union Cabinet approved ‘Production Linked Incentive’ (PLI) scheme worth up to Rs 1.46 lakh crore for how many sectors?

[A] 5

[B] 10

[C] 15

[D] 16

 • The Union Cabinet has recently approved Production Linked Incentive (PLI) scheme worth up to Rs 1.46 lakh crore for 10 key sectors. This move is expected to boost India’s manufacturing sector and exports. The ten sectors include white goods manufacturing, pharmaceutical, specialised steel, automobiles, telecom, textile, food products, solar photovoltaic and cell battery.

8. What is ‘ORF3d’, that was seen in the news recently?

[A] COVID–19 Vaccine

[B] Corona Virus Gene

[C] Missile

[D] Satellite

 • Researchers have recently discovered a new hidden gene in the novel coronavirus named ORF3d. The new overlapping gene is expected to contribute to the unique biology and pandemic potential. This may also lead to the development of new vaccines against the virus. The study has been published in the journal ‘eLife’.

9. What is the theme of 2020 edition of World Diabetes Day?

[A] Go Blue for Breakfast

[B] Eyes on Diabetes

[C] The Nurse and Diabetes

[D] Women and diabetes

 • The World Diabetes Day is observed every year on November 14 to raise awareness among families to discover, prevent and manage diabetes. It is the primary global awareness campaign focusing on diabetes mellitus. The theme for World Diabetes Day 2020 is “The Nurse and Diabetes”.

10. Typhoon ‘Vamco’ is expected to hit which country?

[A] India

[B] Japan

[C] United States

[D] Philippines

 • Typhoon Vamco is expected to hit the eastern coasts of Philippines. Hence, the state authorities have ordered thousands of residents in eastern coastal communities to evacuate the area and move to safe shelters. This cyclone is the 21st tropical cyclone of this year in Philippines.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *