TnpscTnpsc Current Affairs

15th & 16th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

15th & 16th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 15th & 16th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th & 16th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. தற்போது செயல்பாட்டில் உள்ள PSLV ஏவுகல அமைப்பிற்கு மாற்றாக ISROஆல் முன்மொழியப்பட்டுள்ள NGLV ஏவுகல அமைப்பில், ‘N’ என்பது எதைக் குறிக்கிறது?

அ. New

ஆ. Next

இ. Novel

ஈ. Node

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Next

  • NGLV (Next–Gen Launch Vehicle) என்பது தற்போது செயல்பாட்டில் உள்ள PSLV (Polar Satellite Launch Vehicle) ஏவுகல அமைப்பிற்கு மாற்றாக எதிர்காலத்தில் வரவுள்ள ஏவுகல அமைப்பாகும். NGLV என்பது முந்நிலைகொண்ட மிககனச்சுமையைத் தாங்கக்கூடிய மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஏவுகலமாகும். இது, 10,000 கிகிராம் வரை புவிநிலை இடைப்பாதைக்கும் (GTO) 20,000 கிகிராம் வரை தாழ் புவி சுற்றுப்பாதைக்குக்கும் (LEO) கொண்டு செல்லும் திறன்கொண்டதாகும். இது அரை–கிரையோஜெனிக் உந்துவிசையைக் கொண்டு இயங்கும்.

2. ‘The most incredible world cup stories – Anecdotes from Football World Cup, From Uruguay in 1930 to today’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. லூசியானோ வெர்னிக்கே

ஆ. இராபர்ட் லெவன்டோவ்ஸ்கி

இ. டியாகோ மரடோனா

ஈ. கிறிஸ்டியானோ ரொனால்டோ

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. லூசியானோ வெர்னிக்கே

  • ‘The most incredible world cup stories – Anecdotes from Football World Cup, From Uruguay in 1930 to today’ என்பது அர்ஜென்டினாவைச் சேர்ந்த லூசியானோ வெர்னிக்கே என்பவர் எழுதிய நூலாகும். ‘நியோகி புக்ஸ்’ என்ற நிறுவனத்தால் இந்நூல் வெளியிடப்பட்டது. கால்பந்தாட்டத்தின் வேடிக்கையான, ஈர்ப்புமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. FIFA உலகக்கோப்பையின் 22ஆம் பதிப்பானது, இந்த ஆண்டு (2022) கத்தாரால் நடத்தப்படவுள்ளது.

3. ‘பாரத் கிருஷி செயற்கைக்கோள் திட்டத்தின்’கீழ், இந்தியாவின் முழு வேளாண் பகுதியையும் உள்ளடக்குவதற்கு குறைந்தபட்சம் எத்தனை செயற்கைக்கோள்கள் தேவைப்படும்?

அ. 2

ஆ. 3

இ. 4

ஈ. 5

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2

  • ‘பாரத் கிருஷி செயற்கைக்கோள் திட்டம்’ என்பது வேளாண் துறையில் ISRO மேற்கொள்ளும் ஓர் அர்ப்பணிப்பு மிகுந்த திட்டமாகும். இது வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசனம், பயிர் தரவு, வறட்சி புள்ளிவிவரங்கள் போன்றவற்றை உள்ளடக்கும். நாட்டின் முழு வேளாண் பகுதியையும் உள்ளடக்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு செயற்கைக்கோளாவது தேவைப்படும்.

4. உலக வனவுயிரி நிதியத்தால் வெளியிடப்பட்ட, ‘Living Planet’ என்ற அறிக்கையின்படி, கடந்த 50 ஆண்டுகளில் கண்காணிப்பின் கீழிருந்த வனவுயிரிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு சதவீதம் என்ன?

அ. 34%

ஆ. 46%

இ. 69%

ஈ. 72%

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 69%

  • WWF வெளியிட்ட, ‘Living Planet’ என்ற அறிக்கையின்படி, 1970 – 2018–க்கு இடையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கண்காணிப்பின் கீழிருந்த வனவுயிரிகளின் எண்ணிக்கை (பாலூட்டிகள், இருவாழ்விகள், மீன், ஊர்வன உட்பட) 69% குறைந்துள்ளது. இத்தகைய வீழ்ச்சிக்கான காரணம் கடுமையான மற்றும் அழிவுகரமான காலநிலை மாற்றம், மாசுபாடு, நிலம் மற்றும் வாழ்விட சீரழிவு, நோய்கள், ஆக்கிரமிப்பு இனங்கள் மற்றும் பல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. பன்னாட்டு குற்றவியல் காவலமைப்பின் (INTERPOL) பொதுச்சபை நடைபெற்ற நகரம் எது?

அ. பாரிஸ்

ஆ. திருநெல்வேலி

இ. தில்லி

ஈ. சிங்கப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தில்லி

  • பன்னாட்டு குற்றவியல் காவலமைப்பு (INTERPOL) என்பது பிரான்ஸின் லியோனைத் தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இது 1923ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுபோன்ற மாநாட்டை இந்தியா நடத்துவது 1997ஆம் ஆண்டிற்குப்பின் இது 2ஆம் முறையாகும். INTERPOLஇன் பொதுச்சபையானது 4 ஆண்டு பதவிக்காலம் கொண்ட ஒரு தலைவரின் கீழ் உள்ளது. அதன் தற்போதைய தலைவராக ஐக்கிய அரபு அமீரகத்தின் அகமது நசீர் அல்–ரைசி உள்ளார்.

6. 2022ஆம் ஆண்டில் வந்த, ‘பன்னாட்டு காதுகேளாதோர் வாரத்திற்கான’ கருப்பொருள் என்ன?

அ. Leaving No One Behind

ஆ. Building Inclusive Communities for All

இ. Sustainability and Inclusivity

ஈ. Accessible Technologies

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Building Inclusive Communities for All

  • செப்டம்பர் மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அம்மாதம் முடிவடையும் முழு வாரமும் ஒவ்வோர் ஆண்டும் பன்னாட்டு காது கேளாதோர் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. 2022இல், செப்டம்பர்.19 முதல் செப்டம்பர்.25 வரை பன்னாட்டு காது கேளாதோர் வாரம் அனுசரிக்கப்பட்டது. “Building Inclusive Communities for All” என்பது நடப்பு 2022இல் வரும் பன்னாட்டு காது கேளாதோர் வாரத்திற்கான கருப்பொருளாகும். இந்த அனுசரிப்பு என்பது உலக காதுகேளாதோர் கூட்டமைப்பின் ஒரு முனைவாகும்; இது முதன்முதலில் கடந்த 1958இல் ரோமில் தொடங்கப்பட்டது.

7. ஆசிய பசிபிக் கருத்துக்களத்தின் நிர்வாகக்குழுவின் உறுப்பினராக இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. நீதியரசர் இரஞ்சன் கோகோய்

ஆ. நீதியரசர் சதாசிவன்

இ. நீதியரசர் அருண் குமார் மிஸ்ரா

ஈ. நீதியரசர் N V இரமணா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நீதியரசர் அருண் குமார் மிஸ்ரா

  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைவரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான அருண் குமார் மிஸ்ரா, ஆசிய பசிபிக் கருத்துக்களத்தின் நிர்வாகக்குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின் (GANHRI) பணியகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடு –க்கப்பட்டுள்ளார். GANHRI என்பது உலகின் மிகப்பெரிய மனித உரிமை வலையமைப்புகளுள் ஒன்றாகும்.

8. உலகின் முதல் சிவிங்கிப்புலி மறுவாழ்வு திட்டத்தைத் தொடங்கியுள்ள நாடு எது?

அ. வங்காளதேசம்

ஆ. இந்தியா

இ. ஜப்பான்

ஈ. ஹங்கேரி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • ‘மீண்டும் சிவிங்கிப்புலி’ திட்டத்தின்கீழ் நமீபியாவில் இருந்து எட்டுச்சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரு வெவ்வேறு கண்டங்களுக்கு இடையே ஒரு மாமிச உண்ணியை இடமாற்றம் செய்யும் உலகின் முதல் மறுவாழ்வுத் திட்டமாகும் இது. சிவிங்கிப்புலி மித்ராஸ் மற்றும் சிவிங்கிப்புலிகள் புனர்வாழ்வு மேலாண்மை குழுவின்படி, எட்டுச்சிறுத்தைகளில் ஐந்து பெண்ணும் மூன்று ஆணும் ஆகும்.

9. ‘இந்தியாவின் முதல் ஸ்வச் சுஜல் பிரதேசம்’ என அறிவிக்கப்பட்டுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கேரளா

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. அஸ்ஸாம்

ஈ. அந்தமான் மற்றும் நிக்கோபார்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. அந்தமான் மற்றும் நிக்கோபார்

  • நடுவண் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை இந்தியாவின் முதல் ஸ்வச் சுஜல் பிரதேசமாக அறிவித்தார். இந்தியாவின் முதல் “தூய மற்றும் சுஜல் பிரதேசம்” என்பதற்கான சான்றிதழை துணைநிலை ஆளுநர் அட்மிரல் DK ஜோஷியிடம் நடுவண் ஜல் சக்தி அமைச்சர் வழங்கினார். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தின் அனைத்து கிராமங்களும் ஹர் கர் ஜல் மற்றும் ODF (திறந்தவெளி மலங்கழித்தலற்ற) பிளஸ் எனச் சான்று பெற்றுள்ளன.

10. 2022 – பன்னாட்டு அமைதி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. End racism; Build peace

ஆ. Anti–casteism for peace

இ. Equality and Inclusivity

ஈ. Humans for Peace

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. End racism; Build peace

  • ‘பன்னாட்டு அமைதி நாளானது’ செப்.21 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இந்த நாள் முழுவதும் 24 மணி நேரமும் அகிம்சை மற்றும் போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்கிறது. “End racism; Build peace – இனவெறிக்கு முற்றுப்புள்ளி; அமைதியைக் கட்டியெழுப்புங்கள்” என்பது 2022ஆம் ஆண்டில் வந்த பன்னாட்டு அமைதி நாளுக்கானக் கருப்பொருளாகும். இனவெறி மற்றும் இனப்பாகுபாடு இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆசிய மகளிர் டி20 சாம்பியன் இந்தியா: 7ஆவது முறையாக பட்டம் வென்றது

ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இந்தியா 7ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. வங்கதேசத்தின் சைலெட் நகரத்தில் ஆசிய மகளிர் டி20 கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதன் இறுதிப்போட்டி இந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற்றது.

ஆட்ட, தொடர் நாயகி:

ரேணுகா சிங் ஆட்ட நாயகியாகவும், தீப்தி சர்மா தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

7ஆவது முறையாக சாம்பியன்: இதுவரை எட்டு முறை நடைபெற்ற ஆசிய டி20 கோப்பை போட்டிகளில் இந்தியா 7ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

2. சர்வதேச பட்டினி குறியீட்டில் இந்தியாவுக்கு 107ஆவது இடம்

சர்வதேச பட்டினி குறியீடு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச, பிராந்திய, தேசிய அளவில் பசியால் வாடும் மக்களின் நிலைகுறித்து கண்டறிவதற்கு இந்த அறிக்கை பெரிதும் உதவுகிறது. தரவுகள் திரட்டப்பட்ட 121 நாடுகளுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 107ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2020இல் இந்தியா 94ஆவது இடத்தில் இருந்தது.

பசி விவகாரத்தில் இந்தியா, ‘தீவிர அபாயம்’கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தெற்காசியாவில் ஆப்கானிஸ்தான் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக, உயரத்துக்குத் தகுந்த எடை இலாத குழந்தைகள் உலகளவில் இந்தியாவில்தான் அதிகம் உள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அறிக்கையின் முக்கிய விவரங்கள்:

பட்டியலில் முதல் 3 நாடுகள்

பெலாரஸ்

போஸ்னியா

சிலி

இந்திய அண்டை நாடுகளின் நிலை

இலங்கை – 64

மியான்மர் – 71

நேபாளம் – 81

வங்கதேசம் – 84

பாகிஸ்தான் – 99

ஆப்கானிஸ்தான் – 109

இந்தியாவின் நிலை

2022 – 107 (121 நாடுகள்)

2021 – 101 (116 நாடுகள்)

2020 – 94 (107 நாடுகள்)

3. உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்று ருத்ராங்ஷ் சாதனை

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் தங்கப்பதக்கம் வென்றார். அந்தப் பிரிவின் இறுதிச்சுற்றில் ருத்ராங்ஷ் 17-13 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியின் டேனிலோ டெனிஸ் சொலாஸோவை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். இது அவரின் முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை ருத்ராங்ஷ் பெற்றுள்ளார். முன்னதாக இதே பிரிவில் அபினவ் பிந்த்ரா 2006ஆம் ஆண்டு குரோஷியாவில் நடைபெற்ற போட்டியில் தங்கத்தை தனதாக்கியிருந்தார்.

15th & 16th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What does N stands for in the proposed NGLV launch vehicle system of ISRO which may replace present operational launch system of PSLV?

A. New

B. Next

C. Novel

D. Node

Answer & Explanation

Answer: B. Next

  • NGLV (Next–Gen Launch Vehicle) is going to replace the current PSLV (Polar Satellite launch Vehicle) in near future. NGLV is a three – staged heavy lift reusable vehicle with the payload capability of 10,000 kg to Geostationary transfer orbit (GTO) and 20,000kg to low earth orbit (LEO). It will have a semi–cryogenic propulsion for booster stages to make it cost efficient.

2. Who is the author of the book titled ‘The most incredible world cup stories –Anecdotes from Football World Cup, From Uruguay in 1930 to the present day’?

A. Luciano Wernicke

B. Robert Lewandowski

C. Diego Maradona

D. Cristiano Ronaldo

Answer & Explanation

Answer: A. Luciano Wernicke

  • ‘The most incredible world cup stories –Anecdotes from Football World Cup, From Uruguay in 1930 to the present day’ is a book written by Luciano Wernicke from Argentina & is published by Niyogi books. The book covers funny, fascinating & controversial anecdotes from football’s greatest spectacle. The 22nd edition of FIFA world cup, 2022 will be hosted by Qatar this year.

3. Under the ‘Bharat Krishi Satellite programme’, a minimum of how many satellites will be required to cover the entire agricultural area of India?

A. 2

B. 3

C. 4

D. 5

Answer & Explanation

Answer: A. 2

  • ‘Bharat Krishi Satellite programme’ is ISRO’s dedicated programme in agriculture sector. It will span agricultural related activities, pesticides, irrigation, crop data, drought statistics etc. A minimum of 2 satellites will be required to cover the entire agricultural area of the country.

4. As per the ‘Living Planet Report’ published by World wildlife Fund, by what percentage the monitored wildlife population has plunged in last 50 years?

A. 34%

B. 46%

C. 69%

D. 72%

Answer & Explanation

Answer: C. 69%

  • The ‘Living Planet Report’ published by WWF stated that the Monitored wildlife population (including mammals, amphibians, fish, reptiles) has seen a drop of 69% in last five decades between 1970 –2018. The cause of such decline can be attributed to drastic & devastating climate change, pollution, land & habitat degradation, diseases, invasive species & more.

5. Which city was host to the General Assembly of International Criminal Police Organisation (INTERPOL)?

A. Paris

B. Tirunelveli

C. Delhi

D. Singapore

Answer & Explanation

Answer: C. Delhi

  • International Criminal Police Organisation (INTERPOL) is an international organisation headquartered at Lyon, France was established in the year 1923. This is a second time for India since 1997 to host such conference. The General Assembly of INTERPOL is headed by the President who holds the office for 4 years, current being Ahmed Naseer Al–Raisi of UAE.

6. What is the theme of 2022 International Week of Deaf People?

A. Leaving No One Behind

B. Building Inclusive Communities for All

C. Sustainability and Inclusivity

D. Accessible Technologies

Answer & Explanation

Answer: B. Building Inclusive Communities for All

  • The full week ending on the last Sunday of September is observed as the International Week of the Deaf (IWD), every year. In 2022, IWD is being observed from September 19 to 25 September 2022. The theme of the 2022 International Week of Deaf People is “Building Inclusive Communities for All”. The IWD is an initiative of the World Federation of the Deaf (WFD) and was first launched in 1958 in Rome.

7. Who has been elected as a member of the Governance Committee of the Asia Pacific Forum (APF), from India?

A. Justice Ranjan Gogoi

B. Justice Sadasivan

C. Justice Arun Kumar Mishra

D. Justice N V Ramana

Answer & Explanation

Answer: C. Justice Arun Kumar Mishra

  • National Human Rights Commission (NHRC) Chairperson, retired Justice Arun Kumar Mishra has been elected as a member of the Governance Committee of the Asia Pacific Forum (APF). He has also been elected as a member of the Global Alliance of National Human Rights Institutions (GANHRI) Bureau. The GANHRI is one of the world’s largest human rights networks.

8. Which country has launched the world’s first Cheetah Rehabilitation Project?

A. Bangladesh

B. India

C. Japan

D. Hungary

Answer & Explanation

Answer: B. India

  • As many as 8 Cheetahs have been brought from Namibia and are being introduced in India under Project Cheetah. It is the world’s first inter–continental large wild carnivore translocation project and Rehabilitation Project. Out of the eight Cheetahs there are five female and three male, as per the Cheetah Mitras and Cheetah Rehabilitation Management Group.

9. Which state/UT has been declared as ‘India’s first Swachh Sujal Pradesh’?

A. Kerala

B. Himachal Pradesh

C. Assam

D. Andaman and Nicobar

Answer & Explanation

Answer: D. Andaman and Nicobar

  • Union Jal Shakti Minister Gajendra Singh Shekhawat declared Andaman and Nicobar Islands as India’s first Swachh Sujal Pradesh. The Minister handed over the certificate to Lieutenant Governor Admiral DK Joshi declaring the UT as India’s first “Clean and Sujal Pradesh”. All the villages of the union territory have been certified as Har Ghar Jal and ODF (Open defecation free) Plus.

10. What is the theme of the ‘International Day of Peace’ 2022?

A. End racism; Build peace

B. Anti–casteism for peace

C. Equality and Inclusivity

D. Humans for Peace

Answer & Explanation

Answer: A. End racism; Build peace

  • ‘International Day of Peace’ is observed on September 21 around the world. United Nations General Assembly observes 24 hours of non–violence and cease–fire on the day. The theme for the International Day of Peace 2022 is ‘End racism. Build peace’. The day will be dedicated to the aim of making a world free of racism and racial discrimination.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!