Tnpsc

15th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘பதிப்புரிமை (திருத்த) விதிகள், 2021’ஐ அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) நிதி அமைச்சகம்

ஆ) வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

  • பதிப்புரிமை (சட்டதிருத்த) விதிகள், 2021’ஐ, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பதிப்புரிமை, பதிப்புரிமை சட்டம், 1957 மற்றும் பதிப்புரிமை விதிமுறைகள், 2013’இன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. பதிப்புரிமை விதிமுறைகள், 2013 கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
  • பதிப்புரிமை இதழை வெளியிடுவது தொடர்பான புதிய விதிமுறை சேர்க் -கப்பட்டுள்ளது. இதன்முலம் அரசிதழில் வெளியிடவேண்டிய தேவை நீக்கப்படுகிறது. இனி அந்த இதழ் பதிப்புரிமை அலுவலகத்தின் இணைய தளத்தில் கிடைக்கும்.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘SARTHAQ’ என்பது பின்வரும் எந்தக் கொள்கை தொடர்பான அமல்படுத்தல் திட்டமாகும்?

அ) வேளாண் சட்டங்கள்

ஆ) புதிய கல்விக்கொள்கை

இ) பொதுத்துறை நிறுவனங்களின் கொள்கை

ஈ) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு

  • தேசிய கல்விக்கொள்கை, 2020’ஐ அமல்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கூட்டத்திற்கு மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் தலைமை தாங்கினார். ‘மாணாக்கர்கள் & ஆசிரியர்கள்’ தரமான கல்வி மூலம் முழுமையான முன்னேற்றம் (SARTHAQ) என்ற பெயரில் பள்ளி கல்விக்கான பரிந்துரைப்பு அமலாக்கத் திட்டமும் வெளியிடப்பட்டது.

3. வானியல்குறித்து, சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘ஒசைரிஸ்’ என்றால் என்ன?

அ) விண்கல்

ஆ) கருந்துளை

இ) புறக்கோள்

ஈ) சிறுகோள்

  • HD 209458 b என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் ‘ஒசைரிஸ்’, புவியின் சூரிய மண்டலத்திற்கு அப்பால் வானியலாளர்கள் கண்டறிந்த முதல் கோளாகும். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, ஒசைரிஸின் வளிமண்டலத்தில் 6 வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறி -யப்பட்டுள்ளது. வேதியியல் பொருட்களின் கலவை, அந்தப் புறக்கோள் அதன் தற்போதைய நிலையை விட 100 மடங்கு தொலைவில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

4. ‘PS சோரோஸ்டர்’ என்ற பெயரில் `100 கோடி மதிப்புள்ள விரைவு ரோந்துக்கப்பலை, இந்தியா, எந்த நாட்டிடம் ஒப்படைத்துள்ளது?

அ) ஜெர்மனி

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) சீஷெல்ஸ்

ஈ) பிரான்ஸ்

  • இந்தியா, ‘PS சோரோஸ்டர்’ என்ற விரைவு ரோந்துக்கப்பலை முறையாக சீஷெல்ஸிடம் ஒப்படைத்தது. சீஷெல்ஸ் அதிபர் வேவெல் ராம்கலவனுடனான மெய்நிகர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
  • இது, 2005ஆம் ஆண்டு முதல் சீஷெல்ஸுக்கு பரிசளிக்கப்படுகிற இந்திய தயாரிப்பினாலான நான்காவது ரோந்துக் கப்பலாகும். இது, கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டப்பட்டது ஆகும். ரோந்து, கடத்தல் மற்றும் வேட்டை எதிர்ப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு ஆகியவற்றிற்கு இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும்.

5. “பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியம்” நிறு -வப்பட்ட ஆண்டு எது?

அ) 1945

ஆ) 1992

இ) 2009

ஈ) 2020

  • பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியம், கடந்த 2009 ஆம் ஆண்டில் அதன் பொதுச்செயலாளரால் நிறுவப்பட்டது. ஐநா பயங்கரவாதத்திற்கு எதிரான மையம் மற்றும் சிறப்பு திட்டங்கள் & புத்தாக்கக் கிளைமூலம் உறுப்பு நாடுகளுக்கு திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்க இந்த நிதியம் பயன்படுத்தப்படுகிறது.
  • பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியத்துக்கு, இந்தியா, அண்மையில் $500,000 டாலர்களை கூடுதலாக வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்த நிதியத்துக்கு இந்தியாவின் மொத்த பங்களிப்பு $1.05 மில்லியன் டாலர்களாக ஆகியுள்ளது.

6.இந்தியாவில், ‘Women will’ என்ற வலைதளத்தை அறிமுகப்படுத் -தியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ) கூகிள்

ஆ) சாம்சங்

இ) மைக்ரோசாப்ட்

ஈ) LG

  • கூகிள், இந்தியாவில் ‘Women will’ என்ற ஒரு புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியது.
  • இத்திட்டம், தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டு -தலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில், ‘கூகிள் ஃபார் இந்தியா’ நிகழ்வில் தொடங்கப்பட்ட இணைய சாதி முயற்சியை நிறுத்துவதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், இந்த முயற்சி, கிராமப்புற இந்தியா முழுவதும் 30 மில்லிய -னுக்கும் அதிகமான பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளது.

7.உயிரி-பல்வகைமையைக்குறித்து, சமீப செய்திகளில் இடம்பெற்ற “ஆர்ரெதெரியம் சென் – Orretherium tzen” என்றால் என்ன?

அ) தாவர இனம்

ஆ) விலங்கினம்

இ) பறவையினம்

ஈ) பாக்டீரியா

  • தொன்மாக்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு பாலூட்டியின் புதைபடிவம் தென் அமெரிக்காவின் சிலியின் படகோனியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘5 பற்களுடைய விலங்கு’ என்று பொருள்படும், “ஆர்ரெதெரியம் சென்” என பெயரிடப்பட்ட இது, 72 முதல் 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
  • இது ஒரு தாவர உண்ணி என்றும், இடையூழியின் முடிவில் தென்னமெரிக்காவில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

8. சமீபசெய்திகளில் இடம்பெற்ற, “அதின்” என்ற பழங்கால நகரம் கண்டுபிடிக்கப்பட்ட நாடு எது?

அ) இத்தாலி

ஆ) எகிப்து

இ) ஆஸ்திரேலியா

ஈ) கிரீஸ்

  • தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுவானது அண்மையில் எகிப்தில் ஒரு மிகப்பெரிய பண்டைய நகரத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த நகரத்திற்கு “தி ரைஸ் ஆப் அதின்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 3,000 ஆண்டுக -ளுக்கு முற்பட்ட நகரம் ஆகும். இது, லக்சரின் மேற்குக்கரையில் மணலடியில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • பொ ஆ மு 1391 மற்றும் 1353’க்கு இடையில் எகிப்தை ஆண்ட மூன்றாம் அமன்ஹோடெப் மன்னரின் ஆட்சிக்காலத்தைச் சார்ந்ததாகும் இந்நகரம். எகிப்திய சாம்ராஜ்யத்தின் காலத்தில் இந்த நகரம் மிகப்பெரிய நிர்வாக மற்றும் தொழில்துறை குடியேற்றமாக இருந்துள்ளது.

9. சமீபத்தில் வெடிப்புக்குள்ளான லா சோபாரியர் எரிமலை அமைந் -துள்ள நாடு எது?

அ) பிலிப்பைன்ஸ்

ஆ) புனித வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்

இ) இந்தோனேசியா

ஈ) ஜப்பான்

  • கிழக்கு கரீபியன் தீவான புனித வின்சென்ட்டில் அமைந்துள்ள லா சோபா -ரியர் எரிமலை பல்லாண்டுகளாக செயலற்றநிலையிலிருந்து தற்போது வெடித்துச் சிதறியுள்ளது. 1979ஆம் ஆண்டு முதல் செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலை, கடந்த ஆண்டு டிசம்பரில் செயல்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டியது. வெடித்துச் சிதறியதை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுமாறு அத்தீவின் பிரதமர் உத்தரவிட்டார்.

10. பெருங்கடல்களில் சுற்றுப்புற மனித ஒலிகள் குறைப்பின் தாக்க -த்தை அளவிடுவதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய பரிசோதனையின் பெயர் என்ன?

அ) International Human-Ocean Experiment

ஆ) International Ocean Sound Experiment

இ) International Ambient Sound Experiment

ஈ) International Quiet Ocean Experiment

  • சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனையானது முதலில் 2011 ஆம் ஆண்டில், வெவ்வேறு பெருங்கடற்புறங்களில் சுற்றுப்புற ஒலியின் அளவீடுகளின் நேர-வரிசையை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட் -டது. சமீபத்தில், சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனையின் அறிவியலாளர்கள் குழு, COVID-19 பொது முடக்கம் காரணமாக பெருங்க -டல்களில், சுற்றுப்புற மனித செயல்பாடுகளின் குறைப்பின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும் அளவிடுவதற்கும் சோதனைகளை மேற்கொண் -டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம்

உழவர்களின் வருவாயை அதிகரிப்பதற்கான மாதிரி திட்டத்தைச் செயல்ப -டுத்துவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

விவசாயத்துக்கான உள்ளீட்டுப் பொருள்களுக்கான செலவை குறைத்தும் அறுவடைக்குப்பிறகான செலவைக்குறைத்தும் விவசாயிகளின் வருவா
-யை அதிகரிக்கும் வகையிலான மாதிரி திட்டத்தைச்செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்தி -ய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த விழாவில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார். இந்த மாதிரி திட்டமானது ஆறு மாநிலங்களில் உள்ள 100 கிராமங்களில் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.

3. இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க பயணம்

இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையிலான நெருக்கமான கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS ரான்விஜய் நீர் மூழ்கிக்கப்பல், இலங்கைக்கு மூன்று நாள்கள் நல்லிணக்க பயணமாக சென்றடைந்தது. இதுகுறித்து இந்திய தூதரகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சிங்கள மற்றும் தமிழ்ப்புத்தாண்டின் புனித நிகழ்வான “அவருடு” தினத்தையொட்டி, இந்திய கடற்படைக் கப்பல் கொழும்புவுக்கு வருவதன் மூலம், இலங்கை மக்களுக்கு ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான செய்தியைத் தாங்கி வருகிறது.

இந்தியாவும் இலங்கையும் பாரம்பரியமாக ராணுவம் மற்றும் பாதுகாப்பில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு, பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவதன்மூலம் பல்வேறு நன்மைக -ளைப் பெற்று வருகின்றன. தற்போது இந்தக் கப்பலின் வருகையால் இரு நாடுகளுக்கிடையிலான நட்பில் மேலும் நெருக்கமும், கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான மற்றொரு படியாகவும் இது விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜபுத்திர வம்சத்தினரின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட இந்தியாவின் ஐந்தாவது நீர்மூழ்கிக்கப்பலான INS ரான்விஜய்யில், ஏவுகணைகளை அழிக்கும் கருவிகளும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை உடன்படிக்கையின் ஒருபகுதியாக 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரில் IPKF பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

1. “Copyright (Amendment) Rules, 2021”, which was seen in the news recently, has been notified by which Union Ministry?

A) Ministry of Finance

B) Ministry of Commerce and Industry

C) Ministry of Home Affairs

D) Ministry of Information and Broadcasting

  • Ministry of Commerce and Industry notifies Copyright (Amendment) Rules, 2021. It also added a new provision regarding publication of a copyrights journal, thereby eliminating the requirement of publication in the Official Gazette. In India, the copyright regime is governed by the Copyright Act, 1957 and the Copyright Rules, 2013.

2. ‘SARTHAQ’, which was seen in the news recently, is an implementation plan related to which policy?

A) Agriculture Laws

B) New Education Policy

C) Public Sector Enterprises Policy

D) Environment Impact Assessment

  • Union Education Minister Ramesh Pokhriyal chaired a high–level meeting on implementation of National Education Policy (NEP) 2020.
  • A suggestive implementation plan for school education named ‘Students & Teachers’ Holistic Advancement through Quality Education (SARTHAQ) was also released.

3. With reference to astronomy, what is ‘Osiris’, that was seen in the news recently?

A) Meteor

B) Black Hole

C) Exo–Planet

D) Asteroid

  • ‘Osiris’, which is officially called HD 209458 b, is the first–ever planet the astronomers have spotted beyond the Earth’s solar system. As per a new study published in Nature, it has been found that six chemicals are present in the atmosphere of Osiris.
  • The composition of the chemicals confirm that the exoplanet is over 100 times farther than its current position, when it came into existence.

4. A ₹100–crore fast patrol vessel (FPV) named ‘PS Zoroaster’, was handed over to which country by India?

A) Germany

B) USA

C) Seychelles

D) France

  • India formally handed over a fast patrol vessel (FPV) named ‘PS Zoroaster’ to Seychelles. PM Modi participated in virtual meeting with President of Seychelles Wavel Ramkalawan. This is the fourth made–in–India patrol boat to be gifted to Seychelles since 2005.
  • It was built by Garden Reach Shipbuilders and Engineering and will be used for patrolling, anti–smuggling and anti–poaching operations, search and rescue.

5. When was the “United Nations Trust Fund for Counter–Terrorism” established?

A) 1945

B) 1992

C) 2009

D) 2020

  • The UN Trust Fund for Counter–Terrorism was established by the Secretary–General in 2009. The fund is used for providing capacity building support to Member States through the UN Counter–Terrorism Centre (UNCCT) and the Special Projects and Innovation Branch (SPIB).
  • India has recently contributed an additional USD 500,000 to the United Nations Trust Fund for Counter–Terrorism. With this, India’s total contribution to the fund so far is USD 1.05 million.

6. Which technology company has launched ‘Women Will’ web platform in India?

A) Google

B) Samsung

C) Microsoft

D) LG

  • Google introduced a new ‘Women Will’ web platform in India. This program aims to provide guidance to women who want to become entrepreneurs. Google also announced to shut down the Internet Saathi initiative inaugurated at the first Google for India event back in 2015. In the last six years, the initiative has trained over 30 million women across rural India.

7. With reference to bio–diversity, what is “Orretherium tzen”, which was making news recently?

A) Plant species

B) Animal species

C) Bird species

D) Bacteria

  • The fossil of a mammal that lived during the age of dinosaurs has been discovered in Patagonia region of Chile, South America. Named as “Orretherium tzen” meaning ‘Beast of Five Teeth’, it is claimed to have lived lived between 72 and 74 million years ago.
  • It is said to have been a herbivore and said to have lived in South America at the end of the Mesozoic era.

8. An ancient city named “Aten”, which was seen in the news recently, has been discovered in which country?

A) Italy

B) Egypt

C) Australia

D) Greece

  • A group of archaeologists has recently found the largest ancient city ever discovered in Egypt. The city is named “The Rise of Aten”, which dates back to 3,000 years.
  • It was discovered under the sand on the western bank of Luxor, and dates to the reign of King Amenhotep III, who ruled Egypt between 1391 and 1353 BCE. The city was the largest administrative and industrial settlement in the period of the Egyptian empire.

9. La Soufriere volcano, which recently erupted is located in which country?

A) Philippines

B) St. Vincent and the Grenadines

C) Indonesia

D) Japan

  • The La Soufriere volcano located on the eastern Caribbean island of St. Vincent erupted after several decades of inactivity.
  • The volcano was dormant since 1979 and it showed signs of activity in December last year. The Prime Minister had earlier ordered for evacuation of people in the area.

10. What is the name of the global experiment which aims to measure the impact of reduction in ambient human sounds in Oceans?

A) International Human–Ocean Experiment

B) International Ocean Sound Experiment

C) International Ambient Sound Experiment

D) International Quiet Ocean Experiment

  • The International Quiet Ocean Experiment was originally formed in 2011 to create a time series of measurements of ambient sound in different ocean locations. Recently, a team of scientists from the International Quiet Ocean Experiment (IQOE), have been undertaking experiments to understand and measure the impact of the reduction in ambient human activity due to the COVID–19 lockdown, in oceans.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!