TnpscTnpsc Current Affairs

15th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

15th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகக் கொள்கையுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) வெளியுறவு அமைச்சகம்

ஆ) MSME அமைச்சகம்

இ) வணிகம் & தொழிற்துறை அமைச்சகம் 

ஈ) உள்துறை அமைச்சகம்

  • மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம், இந்திய நாட்டின் அயல்நாட்டு வர்த்தகக் கொள்கைக்கு பொறுப்பு ஆகும். தற்போதுள்ள அயல்நாட்டு வர்த்தகக் கொள்கை 2015–20, மார்ச் 31, 2022 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது 2022 செப்.30 வரை நீட்டிக்கப்படும் என DGFT அறிவித்தது.

2. குறைகடத்தி திட்டத்தின் வழிகாட்டும் ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?

அ) நந்தன் நிலேகனி

ஆ) அஸ்வினி வைஷ்ணவ் 

இ) சுந்தர் பிச்சை

ஈ) சத்யா நாதெல்லா

  • `76,000 கோடி மதிப்பிலான குறைகடத்தி திட்டத்திற்கு வழிகாட்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழினுட்ப அமைச்சகம் பதினேழு உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் தலைவராக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இருப்பார்.
  • NITI ஆயோக் உறுப்பினர் வி கே சரஸ்வத், முதன்மை அறிவியல் ஆலோசகர் மற்றும் வெளியுறவு அமைச்சகம், செலவினம், பொருளாதார விவகாரங்கள் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகிய துறைகளின் செயலாளர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

3. மின்சார வாகனக் கொள்கையில் இ–மிதிவண்டிகளை சேர்க்கவுள்ள முதல் மாநிலம்/UT எது?

அ) தெலுங்கானா

ஆ) புது தில்லி 

இ) குஜராத்

ஈ) ஒடிஸா

  • தில்லி அரசாங்கம் அதன் மின்சார வாகனங்களுக்கானக் கொள்கையின்கீழ் இ–மிதிவண்டிகளைச் சேர்த்துள்ளது. மேலும், இ–மிதிவண்டிகளை வாங்கும் முதல் 10,000 நபர்களுக்கு தலா `5,500 மானியம் வழங்குவதாகவும் தில்லி அரசு அறிவித்துள்ளது.

4. சமீபத்தில் கண்டறியப்பட்ட, ‘K2–2016–BLG–0005Lb’ என்ற புறக்கோள், எந்தக் கோளைப் போலவே உள்ளது?

அ) சனி

ஆ) வியாழன் 

இ) செவ்வாய்

ஈ) நெப்டியூன்

  • நமது வியாழன் கோளைப் போன்ற ஒரு புறக்கோளை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். “K2–2016–BLG–0005Lb” எனப் பெயரிடப்பட்ட இந்தக் கோள், பூமியிலிருந்து 17,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. NASAஇன் கெப்ளர் விண்வெளி தொலை நோக்கிமூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வானியற்பியலாளர்கள் குழு இதனைக்கண்டறிந்துள்ளது.

5. CEEW–இன் அண்மைய ஆய்வின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ நிகழ்வுகளைக் கண்ட மாநிலம் எது?

அ) இராஜஸ்தான்

ஆ) மிசோரம் 

இ) மேற்கு வங்காளம்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) வெளியிட்ட ஆய்வின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் காட்டுத்தீயின் நிகழ்வும் அதன் தீவிரமும் அதிகரித்துள்ளது.
  • ‘மாறும் காலநிலையில் காட்டுத்தீயை நிர்வகித்தல்’ என்ற ஆய்வில், கடந்த இருபதாண்டுகளில் காட்டுத்தீ 10 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய மாநிலங்களில் 62 சதவீதத்திற் –கும் அதிகமானவை அதிதீவிரங்கொண்ட காட்டுத்தீக்கு ஆளாகியுள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் மிசோரம் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

6. 2022 ஏப்ரலில் நடைபெற்ற பணவியல் கொள்கைக் குழு கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ விகிதம் என்ன?

அ) 4.50%

ஆ) 4.25%

இ) 4.00% 

ஈ) 3.75%

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழு தொடர்ந்து 11ஆவது முறையாக ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக மாற்றாமல் வைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இணக்கமான நிலைப்பாட்டை பராமரிக்க, குழு ஒருமனதாக வாக்களித்ததாக அறிவித்தார். மேலும் தலைகீழ் ரெப்போ விகிதமும் மாறாமல் 3.35 சதவீதமாக இருக்கும் என்றும் கூறினார்.

7. 2022 நிலவரப்படி, சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி எது?

அ) ஐசிஐசிஐ வங்கி

ஆ) HDFC வங்கி 

இ) ஆக்சிஸ் வங்கி

ஈ) கோடக் மஹிந்திரா வங்கி

  • HDFC வங்கி மற்றும் HDFC லிட் ஆகியன சமீபத்தில் அதன் இணைவை அறிவித்தன. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கியின் சொத்து மதிப்பு `8.35 டிரில்லியன் ஆகும்.
  • `5.26 டிரில்லியன் மதிப்புள்ள சொத்துகள் மேலாண்மை மற்றும் `4.44 டிரில்லியன் சந்தை மூலதனங்கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு நிதி நிறுவனமான HDFC லிட், HDFC வங்கியுடன் இணையும். HDFC லிமிடெட்டின் துணை அல்லது இணைகளும் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்குப் பிறகு HDFC வங்கிக்கு மாற்றப்படும்.

8. NASA’இன் SpaceX Crew–4 வானூர்தியின் புதிய பெயர் என்ன?

அ) Inspire

ஆ) Freedom 

இ) Aspiration

ஈ) Triumph

  • NASAஇன் வணிகக்குழு திட்டத்தின் ஒருபகுதியாக NASA மற்றும் SpaceX ஆகியவை பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளன.
  • இந்தப் பணி ஒரு புதிய டிராகன் விண்கலத்தை ஏவும். இந்த விண்கலத்திற்கு குழு–4 விண்வெளி வீரர்களால் ‘Freedom’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

9. ‘Neu’ என்பது பின்வரும் எந்த இந்தியக் குழுமத்தின் சூப்பர் செயலியின் பெயராகும்?

அ) ரிலையன்ஸ் ஜியோ

ஆ) அமேசான்

இ) ITC லிட்

ஈ) TATA குழுமம் 

  • ‘TATA Neu’ என்பது இந்தியாவின் முன்னணி நிறுவனமான TATA குழுமத்தின் சூப்பர் செயலியாகும். இது TATA’இன் அனைத்து டிஜிட்டல் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை ஒரே இடத்தில் கொண்டுவருகிறது.
  • AirAsia India, Air India, Taj Group, BigBasket, 1mg, Croma மற்றும் Westside போன்ற TATA குழுமத்தின் பல்வேறு டிஜிட்டல் சேவைகள் ‘Tata Neu’ செயலியில் இடம்பெறும்.

10. பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்காக, ‘She Auto’ நிலையங்களை அறிமுகப்படுத்திய இந்திய மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) ஆந்திர பிரதேசம் 

இ) புது தில்லி

ஈ) ஒடிஸா

  • ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரின் காவல்துறையானது மாநிலத்திலேயே முதன்முறையாக ‘She Auto’ நிலையங் –களை அமைத்துள்ளது. இது பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநிலத்திலேயே பெண்களுக்கென பிரத்யேக ஆட்டோ நிலையங்கள் அமைக்கப்பட்ட முதலிடம் திருப்பதியாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்: பொது சுகாதாரத் துறைமூலம் செயல்படுத்த முடிவு

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை இனி தமிழ்நாட்டில் பொது சுகாதாரத் துறை செயல்படுத்தவுள்ளது. இதற்கான அரசாணையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை பிறப்பித்துள்ளது.

இதுவரை காசநோய் ஒழிப்புத் திட்டமானது மாநில மருத்துவம் மற்றும் ஊரக சேவைகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வந்த நிலையில், தேசிய நல்வாழ்வுக் குழுமத் திட்ட இயக்குநர் அளித்த பரிந்துரை மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1. Which Union Ministry is associated with the Foreign Trade Policy of India?

A) Ministry of External Affairs

B) Ministry of MSME

C) Ministry of Commerce and Industries 

D) Ministry of Home Affairs

  • Directorate General of Foreign Trade, under the aegis of the Ministry of Commerce and Industries is responsible for the Foreign Trade Policy (DGFT) of India.
  • Recently, the DGFT announced that the existing Foreign Trade Policy 2015–20, which is valid upto March 31, 2022 is extended up to September 30, 2022.

2. Who is the chairperson of the advisory committee to guide the Semiconductor mission?

A) Nandan Nilekani

B) Ashwini Vaishnaw 

C) Sundar Pichai

D) Satya Nadella

  • The Ministry of Electronics and Information Technology formed a 17–member advisory committee to guide the Rs 76,000 crore–Semiconductor Mission. The Minister of Electronics and Information Technology Ashwini Vaishnaw will be the Chairperson of the committee.
  • NITI Aayog member V K Saraswat, Principal Scientific Advisor, and Secretaries from the Ministry of External affairs, Departments of expenditure, economic affairs, and promotion of industry and internal trade, will be members of the committee.

3. Which is the first state/UT has to include e–Cycles in its Electric Vehicle (EV) Policy?

A) Telangana

B) New Delhi 

C) Gujarat

D) Odisha

  • The Delhi government included electric cycles under its Electric Vehicle (EV) Policy and announced that it will offer a subsidy of 5,500 each to the first 10,000 buyers.

4. ‘Exoplanet K2–2016–BLG–0005Lb’, which has been recently found, is a near–identical twin of which planet?

A) Saturn

B) Jupiter 

C) Mars

D) Neptune

  • Astronomers have recently found a near–identical twin of Jupiter which is located at a similar distance from its star as Jupiter is from our Sun.
  • Named K2–2016–BLG–0005Lb, the exo–planet located 17,000 light–years from Earth, has been detected by a team of astrophysicists using data obtained by NASA’s Kepler space telescope.

5. As per the recent study of CEEW, which state had the highest number of forest fire incidences in the last two decades?

A) Rajasthan

B) Mizoram 

C) West Bengal

D) Arunachal Pradesh

  • According to a study released by the Council on Energy, Environment and Water (CEEW), the frequency and intensity of forest fires have increased in the past two decades.
  • The study, ‘Managing Forest Fires in a Changing Climate’, found that there has been a ten–fold increase in forest fires in the past two decades. More than 62 per cent of Indian states are prone to high–intensity forest fires. Mizoram had the highest number of forest fires in the last two decades.

6. What is the Repo rate after the Monetary Policy Committee (MPC) meeting held in April 2022?

A) 4.50%

B) 4.25%

C) 4.00% 

D) 3.75%

  • The Reserve Bank of India’s (RBI) Monetary Policy Committee (MPC) kept the repo rate unchanged at 4 per cent for the 11th consecutive time.
  • RBI Governor Shaktikanta Das announced that the MPC had voted unanimously to maintain the accommodative stance and added that the reverse repo rate too was kept unchanged at 3.35 per cent.

7. Which is the largest private sector bank of India by assets, as of 2022?

A) ICICI Bank

B) HDFC Bank 

C) Axis Bank

D) Kotak Mahindra Bank

  • HDFC Bank and HDFC Limited recently announced the merger of the two entities. HDFC Bank, India’s largest private sector bank by assets, has a market cap of Rs 8.35 trillion.
  • HDFC Limited, India’s largest housing finance company with Assets Under Management (AUM) worth Rs 5.26 trillion and a market cap of Rs 4.44 trillion will merge with HDFC Bank. The subsidiary or associates of HDFC Limited will also be transferred to HDFC Bank, after regulatory approvals.

8. What is the new name of the NASA’s SpaceX Crew–4 aircraft?

A) Inspire

B) Freedom 

C) Aspiration

D) Triumph

  • NASA and SpaceX are set to launch astronauts to the International Space Station as part of NASA’s Commercial Crew Program. The mission will fly a new Crew Dragon spacecraft.
  • The spacecraft has been named “Freedom” by the Crew–4 astronauts.

9. ‘Neu’ is the name of a super–application of which Indian Conglomerate?

A) Reliance Jio

B) Amazon

C) ITC Limited

D) TATA Group 

  • Tata Neu is the super app of India’s leading conglomerate Tata Group, to bring together all of its digital services and apps on a single platform. Various digital services of the Tata Group from AirAsia India, Air India, Taj Group, BigBasket, 1mg, Croma and Westside will be possible through Tata Neu app.

10. Which Indian state launched ‘She Auto’ stands, to provide safe transport to women and girl students?

A) Kerala

B) Andhra Pradesh 

C) New Delhi

D) Odisha

  • The Police Department in Chittoor of Andhra Pradesh has set up ‘She Auto’ stands, the first of its kind in the state.
  • It aims to provide safe transportation to women and girl students. Tirupati is the first city in the state to set up special auto stands for women.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!