TnpscTnpsc Current Affairs

15th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

15th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 15th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் வரலாற்றுச்சிறப்புமிக்க மிகப்பெரிய திருப்புமுனையை அறிவித்துள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. அமெரிக்கா

இ. ரஷ்யா

ஈ. இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • அணுக்கரு இணைவு ஆற்றலைப் பயன்படுத்துதற்கான ஆராய்ச்சியில் பேரளவிளான அறிவியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அமெரிக்க அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இது நிகர ஆற்றல் ஆதாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சாதனை பாதுகாப்பிற்கும் எதிர்காலத்தில் தூய்மையான ஆற்றலை உற்பத்தி செய்வதற்கும் வழிவகுக்கும்.

2. சமீபத்தில் அதன் முதல் தொகுப்புப் பரிந்துரைகளை அனுப்பிய உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் தலைவர் யார்?

அ. நரேந்திர மோதி

ஆ. D Y சந்திரசூட்

இ. இராஜீவ் குமார்

ஈ. அமிதாப் காந்த்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. D Y சந்திரசூட்

  • இந்திய உச்சநீதிமன்ற கொலீஜியம் ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. கொலீஜியத்தின் முதல் தொகுப்புப் பரிந்துரை இதுவாகும். அதில், நீதிபதி தீபங்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையும் அடங்கும். ஜார்கண்ட், ஜம்மு–காஷ்மீர் மற்றும் லடாக் மற்றும் கௌகாத்தி ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்ற நீதிபதிகளை உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவி உயர்த்தவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

3. அனைத்து குடும்பங்களுக்கும் தனித்துவமான எழுத்தெண்கொண்ட (alpha–numeric) அடையாள எண்ணை தர முன்மொழிந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. ஜம்மு–காஷ்மீர்

இ. மேகாலயா

ஈ. கொல்கத்தா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜம்மு–காஷ்மீர்

  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதன் நிர்வாகம் 8 இலக்கமுடைய தனித்துவமான எழுத்தெண்கொண்ட அடையாள எண்ணை அறிமுகப்படுத்தும் என்றார். சமூக–பாதுகாப்புத் திட்டங்களை வேகமாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்துவதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளின் தகுதியைத் தீர்மானிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் இந்த அடையாள எண்ணைப் பயன்படுத்தப்படும்.

4. ‘சர்வதேச காலநிலை சங்கத்தை’ தொடங்கிய நிறுவனம் எது?

அ. ஜி20

ஆ. ஜி7

இ. ஆசியான்

ஈ. சார்க்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜி7

  • புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் ஒத்துழைப்பதற்காக, ஜி7 கூட்டமைப்பு ஒரு திறந்த, சர்வதேச காலநிலை சங்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிவரை ஜி7 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெர்மானிய அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இந்த முடிவை அறிவித்தார். ஜெர்மனிக்குப் பிறகு ஜப்பான் தலைமைப் பொறுப்பை வகிக்கும். தூய்மையான ஆற்றல் வடிவங்களுக்கு தொழிற்துறைகள் மாறுவதை விரைவுபடுத்தவும், உமிழ்வு–குறைப்பு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தவும் இந்தச் சங்கம் செயல்படும்.

5. மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரை நீக்கும் மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கேரளா

  • கேரள மாநிலத்தில் உள்ள 14 பல்கலைகழகங்களின் பதவிவழி வேந்தர் பதவியிலிருந்து மாநில ஆளுநரை நீக்கும் மசோதாவை கேரள மாநில சட்டப்பேரவை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்தப் பல்கலைக்கழகங்களில் நிர்வாகம் மற்றும் நியமனங்கள்குறித்து ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே பலமுறை சிக்கல்கள் எழுந்ததையடுத்து, சிபிஐ (எம்) தலைமையிலான கேரள மாநில அரசு, பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தங்கள்) மசோதாவை சட்டசபையில் அறிமுகப்படுத்தியது. இம்மசோதா சட்டமாகும்முன் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

6. 2022ஆம் ஆண்டில், ‘டேவிஸ் கோப்பை’ பட்டத்தை வென்ற நாடு எது?

அ. கனடா

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. ஐக்கிய இராச்சியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கனடா

  • டேவிஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 2–0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி கனடா சாம்பியன் பட்டத்தை வென்றது. பெலிக்ஸ் ஆகர்–அலியாசிம் 6–3, 6–4 என்ற கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கனடா 2–0 என முன்னிலை பெற உதவினார். உலகின் ஆறாம்நிலை வீரரான இவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் வென்றார். கடந்த 2019ஆம் ஆண்டில் டேவிஸ் கோப்பை பட்டத்திற்கான ஆட்டத்தில் கனடா முதன் முதலாக விளையாடியது.

7. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. மேரி கோம்

ஆ. P T உஷா

இ. கர்ணம் மல்லேஸ்வரி

ஈ. அஞ்சு ஜார்ஜ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. P T உஷா

  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக மூத்த தடகள வீராங்கனை PT உஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பலமுறை தங்கம் வென்ற அவர் மற்றும் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் 400 மீ தடையோட்டம் இறுதிப்போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார். 58 வயதான அவர் வாக்கெடுப்பில் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி L நாகேஸ்வர இராவ் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது. 95 ஆண்டுகால வரலாற்றில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு தலைமைதாங்கிய முதல் ஒலிம்பியன் மற்றும் முதல் சர்வதேச பதக்கம் வென்றவர் இவராவார்.

8. உலக வேங்கைகள் (jaguar) நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.29

ஆ. டிசம்பர்.01

இ. டிசம்பர்.05

ஈ. டிசம்பர்.09

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நவம்பர்.29

  • உலக வேங்கைகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.29 அன்று கொண்டாடப்படுகிறது. வேங்கைப்புலிகள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பூனையினமாகும். வேட்டையாடிகளான இவை அமேசான் மழைக்காடுகளில் முதன்மையாக காணப்படுகிறன. வேங்கைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் அதன் உயிர்வாழ்விற்கான முதன்மையான பாதுகாப்பு முனைவுகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு உலக வேங்கைப்புலிகள் உருவாக்கப்பட்டது.

9. ஐக்கிய நாடுகளின் குழுமமானது கீழ்க்காணும் எந்தத் தளத்தை, ‘ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய தளமாக’ பட்டியலிட பரிந்துரைத்துள்ளது?

அ. ஆஸ்திரேலியாவின் பெருந்தடுப்புப் பவளத்திட்டு

ஆ. லேடி எலியட் தீவு

இ. ஹெரான் தீவு

ஈ. அந்தமான் நிக்கோபார் தீவுகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஆஸ்திரேலியாவின் பெருந்தடுப்புப் பவளத்திட்டு

  • ஆஸ்திரேலியாவில் உள்ள பெருந்தடுப்புப் பவளத்திட்டு, ‘ஆபத்திலுள்ள உலக பாரம்பரிய தளமாக’ பட்டியலிடப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் குழு பரிந்துரைத்தது. காலநிலை மாற்றம் மற்றும் கடல்களின் வெப்பமயமாதல் ஆகியவற்றால் உலகின் பெரும் பவளப்பாறை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் நான்கு முறை நிகழ்ந்த வெளிர்த்தல் நிகழ்வுகள் அப்பாறைகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றன. முதல் வெளிர்த்தல் நிகழ்வானது லா நினா நிகழ்வின் போது நடந்தது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்டெஃபனி ஃப்ராபார்ட் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. மட்டைப்பந்து

ஆ. கால்பந்து

இ. ஹாக்கி

ஈ. ஸ்குவாஷ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கால்பந்து

  • ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா அணிகளுக்கு இடையிலான குரூப் ஈ போட்டிக்கு நடுவராக ஸ்டெபானி ஃப்ராபார்ட் பொறுப்பேற்பதாக FIFA அறிவித்ததையடுத்து, ஆடவர் உலகக்கோப்பை போட்டி ஒன்றுக்கு நடுவராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ருவாண்டாவின் சலிமா முகன்சங்கா மற்றும் ஜப்பானின் யோஷிமி யமாஷிதா ஆகியோருடன் கத்தாரில் நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரில் மூன்று பெண் நடுவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் 38 வயதான இவரும் ஒருவராவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. திருமதிகார்ட் செயலிமூலம் பெண்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தல்.

திருமதிகார்ட், திருமதிகார்ட் விற்பனையாளர், திருமதிகார்ட் வாங்குபவர் மற்றும் திருமதிகார்ட் லாஜிஸ்டிக்ஸ் போன்ற மின்னணு வணிக கைப்பேசி செயலிகளின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை NIT திருச்சிராப்பள்ளி உருவாக்கியுள்ளது. இதன் முக்கிய நோக்கம் வாடிக்கையாளரை சுய உதவிக்குழுக்கள் (SHG’s) மற்றும் பெண் தொழில்முனைவோர்களுடன் இணைப்பதாகும். தனிப்பயனாக்கப்பட்ட கைப்பேசி செயலி, கைவினைப்பொருட்கள், ஆடைகள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் போன்ற தயாரிப்புகளை வாடிக்கையாளருக்கு எளிதாக வழங்குகிறது. மேலும், திருமதிகார்ட் டெலிவரி செயலிமூலம், சுய உதவிக்குழுப் பெண்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளை வழங்குவதற்கான வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

2. இந்தியா-நேபாளம் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான, “சூர்ய கிரண்-XVI” நேபாளத்தில் உள்ள சல்ஜாண்டியில் நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சியான, “சூர்ய கிரண்” 16ஆம் முறையாக நேபாள இராணுவப் போர்ப்பள்ளி அமைந்துள்ள சல்ஜாண்டியில் நடைபெறவுள்ளது. “சூர்ய கிரண்” பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவும் நேபாளமும் காடு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சியை மேற்கொள்கின்றன. நேபாளத்தின் ஸ்ரீ பவானி பக்ஷ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும், இந்தியாவின் 5ஆவது கோர்க்கா ரைபிள் படைப்பிரிவினரும் இந்தக் கூட்டுப்போர் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

இரண்டு இராணுவங்களும் தங்களது அனுபவங்களை இந்தப் பயிற்சியின்போது பகிர்ந்துகொள்ளும். தீவிரவாதத் தடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகளின்போது மனிதாபிமான நடவடிவக்கைகள் போன்றவற்றில் இருநாடுகளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், இணைந்து செயல்படும் நோக்கில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

3. சைபர் கிரைம் காவல் நிலையங்கள்: தமிழ்நாடு முதலிடம்.

நாட்டில் அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 46, மகாராஷ்டிர மாநிலத்தில் 43 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் உள்ளதாக நடுவணரசு தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்க cybercrime.gov.in இணையதளம்மூலம் பதிவுசெய்யலாம் எனவும் நடுவணரசு தெரிவித்துள்ளது. மேலும், 2022 ஜனவரி முதல் டிச.07 வரை இணையதளத்தில் பதினாறு இலட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நடுவணரசு தெரிவித்துள்ளது.

4. தமிழ்நாட்டில் கிராம, வட்டார, மாவட்ட ஊராட்சிகளுக்கு முறையே `5 இலட்சம், `25 இலட்சம், `50 இலட்சமாக நிதி அதிகாரம் உயர்வு.

உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கிராம ஊராட்சிகளுக்கு `5 இலட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு `25 இலட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு `50 இலட்சம் வரையிலும் பணிகளை தாமாகவே உரிய தீர்மானம் நிறைவேற்றி மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு செய்யப்பட்டுள்ளது. இந்த வழிவகை நடவடிக்கையானது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளாட்சியில் நல்லாட்சியை கிராமப்புற மக்களுக்கு வழங்க வழிவகை ஏற்படுத்தும்.

15th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which country has announced the historic Nuclear Fusion Breakthrough?

A. China

B. USA

C. Russia

D. India

Answer & Explanation

Answer: B. USA

  • US scientists announced a major scientific breakthrough in the research to harness nuclear fusion energy. Researchers at the Lawrence Livermore National Laboratory in California for the 1st time produced more energy in a fusion reaction that was used to ignite it, which is also called net energy gain. This achievement will pave the way for developments in defence and future of clean power.

2. Who is the head of the Supreme Court Collegium, which recently sent its first set of recommendations?

A. Narendra Modi

B. DY Chandrachud

C. ‎Rajiv Kumar

D. Amitabh Kant

Answer & Explanation

Answer: B. DY Chandrachud

  • The Supreme Court Collegium recommended five High Court judges for appointment as judges of the top court. This is the first set of recommendations by the Collegium. It includes the recommendation of appointment of Justice Dipankar Datta as a judge of the Supreme Court. The Supreme Court Collegium also recommended the elevation of three high court judges as chief justices of the high Courts of Jharkhand, Jammu and Kashmir and Ladakh and Gauhati.

3. Which state/UT has proposed to launch a unique alpha–numeric identification number for all families?

A. Jharkhand

B. Jammu and Kashmir

C. Meghalaya

D. Kolkata

Answer & Explanation

Answer: B. Jammu and Kashmir

  • Jammu & Kashmir Lieutenant–Governor Manoj Sinha said the administration will launch an eight–digit unique alpha–numeric identification number for families in the Union Territory. The Unique Family ID aims for speedy and transparent implementation of social security schemes. The JK Family ID will also be used to determine eligibility of beneficiaries of various social welfare schemes.

4. Which institution launched the ‘International Climate Club’?

A. G20

B. G7

C. ASEAN

D. SAARC

Answer & Explanation

Answer: B. G7

  • The Group of Seven economies have created an open, international climate club for countries to cooperate in the fight against global warming. German Chancellor Olaf Scholz, who holds the presidency of the G–7 until the end of the year, announced the decision. Germany will pass the Presidency to Japan. The club will work to help accelerate the industrial transition to cleaner forms of energy and to further develop emission–reduction measures.

5. Which state recently passed a bill to remove Governor as Chancellor of state’s universities?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. Gujarat

Answer & Explanation

Answer: B. Kerala

  • Kerala Assembly recently passed a Bill to remove the Governor as the ex–officio Chancellor of 14 universities in the state. The CPI(M) government introduced the University Laws (Amendments) Bill in the Assembly after repeated issues with Governor Arif Mohammed Khan on administration and appointments at these universities. The Bill will now be sent for the governor’s consent before it becomes a law.

6. Which country won the ‘Davis Cup title’ in 2022?

A. Canada

B. Australia

C. France

D. United Kingdom

Answer & Explanation

Answer: A. Canada

  • Canada wins Davis Cup title by defeating Australia 2–0 in final match. Felix Auger–Aliassime gave Canada a 2–0 lead against Australia by defeating Alex de Minaur 6–3, 6–4. The World No. 6 won both of his singles and doubles matches. Canada made its debut in the Davis Cup title game in 2019.

7. Who has been selected as the first woman president of Indian Olympic Association (IOA)?

A. Mary Kom

B. P T Usha

C. Karnam Malleswari

D. Anju George

Answer & Explanation

Answer: B. P T Usha

  • Legendary athlete PT Usha was elected as the first woman president of Indian Olympic Association (IOA). She is a multiple Asian Games gold medalist and fourth place finisher in the 1984 Los Angeles Olympics 400m hurdles final. The 58–year–old athlete was declared elected unopposed for the top post in the polls. The elections were held under the supervision of Supreme Court–appointed retired SC judge L Nageswara Rao. She became the first Olympian and first international medallist to head the IOA in its 95–year history.

8. When is the ‘International Jaguar Day’ celebrated?

A. November.29

B. December.01

C. December.05

D. December.09

Answer & Explanation

Answer: A. November.29

  • International Jaguar Day is celebrated on November 29 every year. Jaguar is the third largest Cat Predator in the World and an important species of the Amazon Rainforest. International Jaguar Day was created to raise awareness about the increasing threats facing the jaguar and the critical conservation efforts for its survival.

9. The UN panel has recommended which site to be listed as ‘world heritage site in danger’?

A. Australia’s Great Barrier Reef

B. Lady Elliot Island

C. Heron Island

D. Andaman and Nicobar Islands

Answer & Explanation

Answer: A. Australia’s Great Barrier Reef

  • A UN panel recommended Australia’s Great Barrier Reef should be listed as ‘world heritage site in danger’. The UN panel said that the world’s biggest coral reef ecosystem was significantly impacted by climate change and warming of oceans. Frequent bleaching events are threatening the reef, including four over the last seven years and the first during a La Nina phenomenon.

10. Stephanie Frappart, who was seen in the news, is associated with which game?

A. Cricket

B. Football

C. Hockey

D. Squash

Answer & Explanation

Answer: B. Football

  • Stephanie Frappart is set to become the first woman to referee a men’s World Cup match after FIFA announced that she will take charge of Group E match between Germany and Costa Rica. The 38–year–old is one of three women referees among the 36 selected for the tournament in Qatar, alongside Rwandan official Salima Mukansanga and Japan’s Yoshimi Yamashita.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!