Tnpsc

15th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. உலகின் முதல் ஆற்றல் தீவை உருவாக்கவுள்ள நாடு எது?

அ) நெதர்லாந்து

ஆ) டென்மார்க்

இ) ஆஸ்திரேலியா

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

 • உலகின் முதல் ஆற்றல் தீவை வட கடலில் உருவாக்கும் திட்டத்திற்கு டென்மார்க் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் செயற்கை தீவு, கடல் காற்றில் இயங்கும் விசையாழிகளுடன் இணைக்கப்படும். இத்தீவு வீடுகளுக்கு மின்சாரமும் கப்பல் மற்றும் வானூர்தி தொழிற்துறைகளுக்கு தூய ஹைட்ரஜனையும் வழங்கும். இப்பூங்காவில், 3 மில்லியன் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பசுமை ஆற்றலாக உற்பத்திசெய்து சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

2. பின்வருவனவற்றுள் இந்தியப்பெருங்கடலில் நடைபெற்றுவரும் இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர்ப்பயிற்சி எது?

அ) INDRA

ஆ) MALABAR

இ) TROPEX

ஈ) MILAN

 • இந்திய கடற்படை, ஈராண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் மிகப் பெரிய போர் பயிற்சியான ‘TROPEX 21’இல் (Theatre Level Operational Readiness Exercise) ஈடுபட்டுள்ளது. கடற்படையின் தயார்நிலையை மதிப்பீடு செய்வதற்காக இது நடத்தப்படுகிறது. இதில் கடற்படையின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், விமானங்கள் உட்பட அனைத்து பிரிவுகளும், தரைப்படை, விமானப்படை, இந்திய கடலோர காவல் படையின் சில பிரிவுகளும் ஈடுபடுகின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

3. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்படி, நாடு முழுவதும், எத்தனை மனித கழிவுகளை அகற்றுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்?

அ) 22,292

ஆ) 44,492

இ) 66,692

ஈ) 88,892

 • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அளித்த தரவுகளின்படி, நாடு முழுவதும் 66,692 மனித கழிவுகளை அகற்றுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2021 பிப்ரவரி நிலவரப்படி, உத்தர பிரதேச மாநிலத் -தில் அதிகமாக 37,379 மனித கழிவுகளை அகற்றுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, உத்தரகண்ட் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த்தொட்டிகளை தூய்மைப்படுத்தும்போது 340 பேர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4. உலக பருப்புகள் நாளைக்கொண்டாட முன்மொழிந்த நாடு எது?

அ) சிலி

ஆ) புர்கினா பாசோ

இ) நைஜர்

ஈ) பெனின்

 • ஐநா பொது அவை, கடந்த 2016’ஐ பன்னாட்டு பருப்பு ஆண்டாக ஏற்றுக் கொண்டது. மேலை ஆபிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட புர்கினா பாசோ உலக பருப்பு நாளை அனுசரிக்க முன்மொழிந்தது. பிப்.10 உலக பருப்பு நாளாக 2019’இல் அறிவிக்கப்பட்டது.
 • இது, உலகம் முழுவதும் பருப்பு வகைககள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும், பருப்பு வகைகளை உலகளாவிய உணவாக அங்கீக -ரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “I Love Pulses” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

5. பின்வரும் எத்திட்டத்தை செயல்படுத்துதற்காக, ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கான வடிவமைப்பை அரசு மேற்கொள்ளவுள்ளது?

அ) PM KISAN யோஜனா

ஆ) PM மத்ஸ்ய சம்பதா யோஜனா

இ) PM மீன் விவசாயிகள் யோஜனா

ஈ) PM மச்சிலி விகாஸ் யோஜனா

 • அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களின் வடிவமைப்பை மேற்கொள்வதற்காக அரசு ஓர் ஆணையத்தை அமைத் -துள்ளது. இந்த நடவடிக்கை, பிரதமர் மத்ஸ்ய சம்பதா திட்டம் செயல்படு -த்தப்படுவதை விரைவாக கண்காணிக்க, மாநிலத்திலுள்ள மீன்வளத் துறைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • கப்பல் அமைச்சகத்துடன் இணக்கமாக கட்டப்பட்ட அந்தக் கப்பல்கள் PMSSY திட்டத்தின் கீழ் மானியத்திற்கு தகுதியுடையவையாகும்.

6. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், கீழ்க்காணும் எந்த வகை எஃகு சேர்க்கப்பட்டுள்ளது?

அ) சிறப்பு எஃகு

ஆ) துருவேறா எஃகு

இ) கரிம எஃகு

ஈ) உலோகக்கலவை எஃகு

 • எஃகு துறையில் மூலதன முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் தரமுயர்த்தலை ஊக்குவிப்பதன்மூலம் ‘சிறப்பு எஃகின்’ உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 5 வருட காலத்தில் `6322 கோடி நிதி ஒதுக்கீட்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ‘சிறப்பு எஃகை’ சேர்ப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
 • உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘சிறப்பு எஃகின்’ இருப்பை உறுதிசெய்து, நாட்டை தற்சார்பு அடையச்செய்ய இந்நடவடிக் -கை உதவிகரமாக இருக்கும்.

7. டிஜிட்டல் பொருளாதார திட்டத்திற்கு அலுவலகத்தை திறந்துள்ள மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) கர்நாடகா

இ) மகாராஷ்டிரா

ஈ) பீகார்

 • அண்மையில், கர்நாடகா டிஜிட்டல் பொருளாதார திட்டத்திற்கான அலுவலகத்தை கர்நாடக மாநிலம் திறந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP), டிஜிட்டல் பொருளாதார பங்களிப்பை 30%ஆக உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய “Beyond Bengaluru” என்றவொன்றையும் அம்மாநிலம் தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் 51 சதவீத பங்குகள் தொழிற்சங்கங்களின் வசமும், மீதமுள்ளவை மாநில அரசின் வசமும் உள்ளன.

8. ‘BioAsia’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தால் நடத்தப்படும் ஒரு முதன்மை உச்சிமாநாடாகும்?

அ) கேரளா

ஆ) தெலங்கானா

இ) மகாராஷ்டிரா

ஈ) பீகார்

 • ‘பயோ ஆசியா’ என்பது தெலங்கானா மாநிலத்தால் நடத்தப்படும் ஒரு முதன்மை உச்சிமாநாடு ஆகும். இது, பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவியலாளர்களையும் வணிகங்களையும் ஒருங்கிணைக்கும் ஓர் உலகளாவிய உச்சிமாநாடாகும்.
 • வாழ்க்கை அறிவியலில் சிறப்பு கவனம் செலுத்தும் இந்த மாநாட்டின் 18ஆவது பதிப்பு பிப்ரவரி 22-23, 2021’இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. “Move the Needle” என்பது இந்த உச்சிமாநா -ட்டின் கருப்பொருளாகும்.

9. இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்.10 & ஆக.10 ஆகிய தேதிகளில், பின்வரும் எந்தச் சிறப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ) தேசிய குடற்புழுநீக்க நாள்

ஆ) தேசிய குருதிச்சோகை நாள்

இ) தேசிய நீரழிவு நாள்

ஈ) தேசிய புற்றுநோய் நாள்

 • இந்தியாவில், ஆண்டுதோறும் பிப்.10 மற்றும் ஆக.10 ஆகிய தேதிகளில் தேசிய குடற்புழுநீக்க நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. 1-19 வயதிற்குள் இருப்போருக்கு குடற்புழுக்களை ஒழிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை மண்வழியாக பரவும் புழுக்களாகும்.
 • உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில், 1-14 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 241 மில்லியன் குழந்தைகள், ஒட்டுண்ணி குடற் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10. நடப்பாண்டில் (2021) உலக எறும்புண்ணிகள் நாள் கடைப்பிடி -க்கப்படவுள்ள தேதி எது?

அ) பிப்ரவரி 10

ஆ) பிப்ரவரி 15

இ) பிப்ரவரி 18

ஈ) பிப்ரவரி 20

 • உலக எறும்புண்ணிகள் நாளானது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வரும் மூன்றாம் சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
 • எறும்புண்ணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்தத் தனித்துவம்மிக்க உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்குமாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. 10ஆவது உலக எறும்புண்ணிகள் நாளானது, 2021 பிப்.20 அன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

 • சென்னையை அடுத்து அமைந்துள்ள தையூரில் உலகத்தரத்திலான ஆய்வு வசதிகளுடன் உருவாகும் சென்னை IIT புத்தாக்க வளாகத்தை (Discovery Campus) பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
 • சென்னையில் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள், காணாமல் போன சிறார்கள், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் சிறார்களுக்கு உதவும் வகையில் சமூக-பாதுகாப்பு துறையுடன் இணைந்து ‘ஆபரேஷ -ன் ஸ்மைல்’ என்ற திட்டத்தை காவல்துறை பிப்.1 அன்று தொடங்கியது. அந்தத் திட்டம் இன்று (பிப்.15) நிறைவடைந்தது.

1. Which country is set to build the world’s first energy island?

A) Netherlands

B) Denmark

C) Australia

D) United States of America

 • Denmark has recently approved a plan to build the world’s first energy island in the North Sea. The artificial island will be linked to offshore wind turbines. The island would provide power to households and green hydrogen to shipping and aviation industries.
 • It is claimed that the park can produce and store green energy to cover the electricity needs of 3 million households.

2. Which is the largest combat exercise of the Indian Navy, which is being held in the Indian Ocean Region (IOR)

A) INDRA

B) MALABAR

C) TROPEX

D) MILAN

 • Theatre Level Operational Readiness Exercise (TROPEX–21) is the Indian Navy’s largest exercise. It is being held in the Indian Ocean Region (IOR). This month–long drill also includes joint exercises by ships and aircraft and other assets of the Indian Air Force, Army and the Indian Coast Guard in the IOR and the waters in the adjacent regions.

3. As per the Social Justice and Empowerment Ministry, how many manual scavengers have been identified across country?

A) 22,292

B) 44,492

C) 66,692

D) 88,892

 • As per the data given by the Social Justice and Empowerment Ministry, as many as 66,692 manual scavengers have been identified across the country. As of February 2021, the highest number of manual scavengers have been identified in Uttar Pradesh at 37,379. It is followed by Maharashtra, Uttarakhand and Assam. It was also announced that 340 people have died while cleaning sewers and tanks in the last five years.

4. Which country proposed the observance of the World Pulses Day?

A) Chile

B) Burkina Faso

C) Niger

D) Benin

 • The UN General Assembly adopted 2016 as the International Year of Pulses (IYP). Burkina Faso, a landlocked country in West Africa proposed the observance of World Pulses Day.
 • February 10 was announced as the World Pulses Day in 2019. It aims to increase awareness and access to pulses across the world and to recognise Pulses as a global food. The theme of the year is I love pulses.

5. Government is to frame design for Deep–Sea Fishing Vessels (DSFV), to implement which scheme?

A) PM Kisan Yojana

B) PM Matsya Sampada Yojana

C) PM Fishery Kisan Scheme

D) PM Machili Vikas Yojana

 • The Government has set up a Nodal Authority to frame Approved Standardised Deep–Sea Fishing Vessels Design and Specifications (ASDDS).
 • This step aims to help state fisheries departments to fast track the implementation of the Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY). Those vessels constructed in compliance with Shipping Ministry shall be eligible for subsidy under PMSSY scheme.

6. Which type of Steel has been included under the Production Linked Scheme (PLI)?

A) Speciality Steel

B) Stainless Steel

C) Carbon Steel

D) Alloy Steel

 • The Government has approved inclusion of ‘Specialty Steel’ under the Production Linked Incentive (PLI) Scheme.
 • A financial outlay of Rs 6322 Cr has been made to promote the domestic manufacturing of ‘Specialty Steel’. It aims to attract capital investment, generate employment and enhance technology up–gradation in the steel sector.

7. Which state has inaugurated the office for Digital Economy Mission office?

A) Kerala

B) Karnataka

C) Maharashtra

D) Bihar

 • Karnataka recently launched the office of the Karnataka Digital Economy Mission (KDEM). It aims to increase the digital economy contribution to Gross State Domestic Product (GSDP) to 30 percent.
 • The state also launched the “Beyond Bengaluru” to achieve this target. 51 percent stakes of the mission are given to industry associations and the remaining is kept by the state government.

8. ‘BioAsia’ is a flagship summit hosted by which Indian state?

A) Kerala

B) Telangana

C) Maharashtra

D) Bihar

 • ‘BioAsia’ is a flagship summit hosted by the state of Telangana. It is a global summit which unites the scientists and businesses in various fields with special focus on Life Science.
 • The 18th edition of BioAsia is scheduled to be held during February 22–23, 2021. The theme of the summit is ‘Move the Needle’, with focus on Covid–19, global health, pharma and medtech.

9. Which day is observed on February 10 and August 10 every year in India?

A) National Deworming Day

B) National Anemia Day

C) National Diabetes Day

D) National Cancer Day

 • In India, every year February 10 and August 10 are observed as the National Deworming Day (NDD). The day aims to eradicate intestinal worms within the age bracket of 1–19 years, which are also referred to as Soil–Transmitted Helminths (STH).
 • As per the World Health Organisation, about 241 million children in India between 1–14 years are at risk of parasitic intestinal worms.

10. World Pangolin Day 2021 was observed on ______?

A) February 10

B) February 15

C) February 18

D) February 20

 • World Pangolin Day is observed annually on the third Saturday in February. This day is observed to create awareness about Pangolin and to protect these unique creatures from extinction. The 10th World Pangolin Day will be observed on Feb.20, 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content