Tnpsc

15th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. நிலக்கரி உற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலம் எது?

அ) ஜார்க்கண்ட்

ஆ) சத்தீஸ்கர்

இ) ஒடிஸா

ஈ) தெலுங்கானா

  • மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் 2020-21ஆம் ஆண்டுக்கான தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியானது 2020-21ஆம் ஆண்டில் 2.02% அளவுக்கு சரிந்து 716.084 மில்லியன் டன்னாக பதிவாகியுள்ளது. மொத்த உற்பத்தியில், 671.297 மெட்ரிக் டன் கற்கரியாக்கம் செய்யப்படாத நிலக்கரியும், 44.787 மெட்ரிக் டன் கற்கரியாக்கம் செய்யப்பட்ட நிலக்கரியும் ஆகும்.
  • சத்தீஸ்கர் மாநிலம் நிலக்கரி உற்பத்தியில் (158.409 மெட்ரிக் டன்) இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. ஒடிஸா மற்றும் ம பி ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கற்கரியாக்கம் செய்யப்பட்ட நிலக்கரி உற்பத்தியில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

2. ஈராண்டு பணிநீட்டிப்பு செய்யப்பட்ட NEOWISE என்பது பின்வரும் எந்த விண்வெளி நிறுவனத்தின் தொலைநோக்கியாகும்?

அ) இஸ்ரோ

ஆ) நாசா

இ) ரோஸ்கோஸ்மோஸ்

ஈ) ஜாக்ஸா

  • நாசாவின் Near-Earth Object Wide-field Infrared Survey Explorer (NEO WISE) தொலைநோக்கிக்கு அண்மையில் ஈராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இது பொதுவாக புவிக்கருகிலுள்ள ஒரு பொருள்களைத் (விண்கற்கள் மற்றும் வால்மீன்கள்) தேடுகிறது. இது புவிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் உட்பட தேடுகிறது. இத்தொலைநோக்கி புவிக்கருகிலுள்ள 1,850’க்கும் மேற்பட்ட பொருட்கள் குறித்த மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

3. உலகின் மிகப்பெரிய ஆயுதத்திட்டமான கூட்டு ஸ்ட்ரைக் பைட்டர் திட்டத்தின் ஒருபகுதியாக சமீபத்தில் 15ஆவது நாடாக இணைந்த நாடு எது?

அ) தென்னாப்பிரிக்கா

ஆ) நெதர்லாந்து

இ) சுவிச்சர்லாந்து

ஈ) ஜெர்மனி

  • F-35 லைட்னிங் II என்பது அமெரிக்காவைச்சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் உருவாக்கிய அடுத்த தலைமுறை போர் வானூர்தியாகும். இந்த வானூர்தி வான்வழித் தாக்குதல்கள், உளவுப்பணிகள் மற்றும் வான் வழிப்போர் ஆகியவற்றை நடத்தவல்லது. இதன் உருவாக்கத்திற்கு அமெரிக்கா மற்றும் அதன் சில NATO நட்பு நாடுகள் நிதியளித்தன.
  • சுவிச்சர்லாந்து இப்போர் வானூர்திகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய ஆயுதத்திட்டமான கூட்டு ஸ்ட்ரைக் பைட்டர் திட்டத்தின் ஒருபகுதியாக சமீபத்தில் 15ஆவது நாடாக இணைந்த நாடாக சுவிச்சர்லாந்து மாறியுள்ளது.

4. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் எது?

அ) இந்தியா

ஆ) அமெரிக்கா

இ) சீனா

ஈ) டென்மார்க்

  • உலகளவில் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் 208 மில்லியன் டன் பாலை உற்பத்தி செய்துள்ளது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற விராச்சி தேசிய பூங்கா அமைந்துள்ள நாடு எது?

அ) தாய்லாந்து

ஆ) மலேசியா

இ) கம்போடியா

ஈ) சிங்கப்பூர்

  • விராச்சி தேசியபூங்காவானது கம்போடிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் 3,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இரு கம்போடிய ஆசியான் பாரம்பரிய பூங்காக்களுள் ஒன்றாகும். இது ரத்தனகிரி மற்றும் ஸ்டங் ட்ரெங் மாகாணங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கிறது.
  • இந்தத் தேசிய காட்டில், கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோத உள்நுழைவுகள் நிகழ்ந்து வருகின்றன. அது காடுகளின் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த நிலைமை சீர்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்மைய மாதங்களில் பேராசிய மான்கள் அங்கு தென்பட்டன.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற வால்மீகி தேசிய பூங்கா ஆனது பின்வரும் எந்த மாநிலத்தின் ஒரே தேசிய பூங்காவாகும்?

அ) கர்நாடகா

ஆ) உத்தர பிரதேசம்

இ) பீகார்

ஈ) மகாராஷ்டிரா

  • வால்மீகி தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் மற்றும் வனவுயிரி சரணாலயமானது பீகார் மாநிலத்தில் இந்தியா-நேபாள எல்லையில், கந்தக் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரே தேசிய பூங்கா இதுவாகும். பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகத்தின் அதிகாரிகள், அங்கு 150 கழுகுகளை அடையாளம் கண்டுள்ளனர்.
  • கழுகு பாதுகாப்பிற்கான முன்மொழியப்பட்ட திட்டம், வனவுயிரி வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

7. அண்மையில் கியூபாவை தாக்கிய வெப்பமண்டல புயலின் பெயர் என்ன?

அ) எல்சா

ஆ) பில்

இ) டேனி

ஈ) எரின்

  • வெப்பமண்டல புயலான எல்சா அண்மையில் கியூபாவை தாக்கியது. அந்தப் புயல் பின்னர் ஹவானா நகரின் கிழக்கே கியூபாவிலிருந்து வெளியேறி புளோரிடாவை நோக்கிச்சென்றது. புயல் காரணமாக கியூபா பலத்தமழையை எதிர்கொண்டது, இதனால் தலைநகரத்தில், தாழ்வான கடலோரப்பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

8. CTRI தளத்தில் ஆயுர்வேத தரவுத்தொகுப்பை அறிமுகப்படுத்திய மருத்துவ அமைச்சகம் எது?

அ) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஆ) ஆயுஷ் அமைச்சகம்

இ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • CTRI இணையதளத்தில் ஆயுர்வேத தரவுத்தொகுப்பை மத்திய ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியது. இந்த ஆயுர்வேத தரவு தொகுப்பை ஐசிஎம்ஆர் மற்றும் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழுமம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. AMAR, SAHI, e-MEDHA & RMIS ஆகிய மேலும் 4 இணையதளங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

9. உலகளாவிய கோவின் மாநாட்டை நடத்திய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா

இ) கனடா

ஈ) ஆஸ்திரேலியா

  • இந்தியா சமீபத்தில் கோவின் உலகளாவிய கோவின் மாநாட்டை நடத்தியது. மெய்நிகராக நடத்தப்பட்ட இம்மாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கிவைத்தார்.
  • தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி Dr R S சர்மாவின் கூற்றுப்படி, சுமார் ஐம்பது நாடுகள் கோவின்னை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளன. இத்தளத்தின் திறந்த மூல பதிப்பை ஆர்வமுள்ள நாடுகளுக்கு வழங்க இந்தியா தயாராகவுள்ளது. இந்தியாவால் உருவாக்கப்பட்ட CoWIN என்பது ஒரு டிஜிட்டல் வலைத் தளமாகும். அது நாட்டின் தடுப்பூசி இயக்கத்தை திறம்பட இயக்குகிறது.

10. 2021’இல் இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கத்தின் (IONS) 7ஆவது பதிப்பை நடத்திய நாடு எது?

அ) இந்தியா

ஆ) பிரான்ஸ்

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) ஆஸ்திரேலியா

  • பிரெஞ்சு கடற்படை இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கத்தின் (IONS) 7ஆவது பதிப்பை நடத்தியது. இது இந்தியப்பெருங்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு துறையான ரியூனியன் தீவில் நடத்தி முடிக்கப்பட்டது.
  • இந்தியப்பெருங்கடல் கடற்படை கருத்தரங்கம் என்பது ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிகழ்வாகும். அது 2008ஆம் ஆண்டில் இந்திய கடற்படையால் கருத்தாக்கம் செய்யப்பட்டது. IONS’இல் இந்தியப் பெருங் கடல் பிராந்தியத்திற்குள் வரும் 24 உறுப்புநாடுகளும் 8 பார்வையாளர் நாடுகளும் அடங்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 15-07-2021 – கல்விக்கண் திறந்த ‘கர்மவீரர்’ ‘பெருந்தலைவர்’
கு. காமராசரின் 119ஆவது பிறந்தநாள்.

2. 15-07-2021 – ‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ மறைமலை அடிகளின் 145ஆவது பிறந்தநாள்.

3. வாராணசியில் சர்வதேச மாநாட்டு மையம்: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் கட்டப்பட்டுள்ள “ருத்ராக்ஷா” எனப் பெயர்சூட்டப்பட்ட சர்வதேச மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: போஸ் சிகரா பகுதியில் 2.87 ஹெக்டேர் நிலத்தில் இரண்டு தளங்கள் கொண்ட மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 108’க்கும் மேல் ருத்ராக்ஷங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் கூரை சிவலிங்க வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் அனைத்து இடங்களும் இரவில் ஒளிரும் வகையில் LED பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

அரங்கில் 1,200 பேர் அமர்ந்து நிகழ்ச்சியைக் காணும் வசதியுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சமூக மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த மையம் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுலாத் தலம் வளர்ச்சியடைவதோடு வாராணசியில் தொழில் வளமும் அதிகரிக்கும். சர்வதேச மாநாடு, கண்காட்சி, இசை கச்சேரிகள், பிற நிகழ்ச்சிகளை நடத்த இது ஏற்ற மையமாக இருக்கும். அத்துடன் வாராணசி பற்றிய கலை, கலாசாரம், இசை தொடர்பான கலைக் காட்சிக் கூடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த வாராணசி சர்வதேச மாநாட்டு மையத்தின் பிரதான மண்டபம் தேவைப்பட்டால் சிறுசிறு பகுதிகளாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தரப்படும். இது முற்றிலும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புடன் கூடிய கட்டடமாக இருக்கும். மையத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மையமானது ஒரு பொது நுழைவுப் பகுதி, ஒரு சேவை நுழைவுப் பகுதி, முக்கிய பிரமுகர்கள் நுழைவுப் பகுதி ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். அனைத்து வகையான சர்வதேச நிகழ்ச்சிக்கு ஏற்ற இடமாக இந்த மையம் இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

4. கீழடி அகழாய்வில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் உறைகிணறு புதையுண்டு இருப்பது கண்டறியப்பட்டது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் இந்த அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் 6ஆவது குழியில் 20 முதல் 25 செமீ உயரமுள்ள உறைகள் கொண்ட 3 அடுக்குகளுடன் உறைகிணறு கண்டறியப்பட்டது. கீழடி தொழில்நகரமாகவும், கொந்தகை பண்டைய கால மக்களின் இடுகாடாகவும், அகரம் அன்னச்சத்திரமாகவும் விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. 4 அகழாய்வு தளங்களில் அகரத்தில் மட்டுமே சமையல் சம்பந்தமான பொருள்கள் அதிகளவில் கிடைக்கின்றன.

இங்கு இதுவரை மண் பாத்திரங்கள், தண்ணீர் எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் ஜாடி உள்ளிட்டவைகள் கிடைத்துள்ள. மேலும் 6ஆம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் வெவ்வேறு காலகட்டத்தைச் சோ்ந்த 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டன. தற்போது 7ஆம் கட்ட அகழாய்விலும் இங்கு முதல்முறையாக உறைகிணறு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த உறைகிணறுகள் வறட்சிக்காலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தோண்டப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த உறைகிணறுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட விளிம்புகளில் பள்ளமான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் உறைகள் சரிந்து விழாமலும், சேதமடையாமலும் உள்ளன. உறைகிணறுகள் அதிகளவில் கிடைத்தாலும் அவற்றிலிருந்து தண்ணீரை எடுக்க எந்த வகையான பொருள்களை பயன்படுத்தி இருந்தனர் என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உறைகிணறுகளின் உள்ளே எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. ஆனால் உறை கிணறுகளின் அருகே மண் பாத்திரங்கள் கிடைத்துள்ளன.

அதனை வைத்து உறைகிணறுகளில் தண்ணீர் எடுத்து இருக்க கூடும் எனத் தெரிகிறது. 6ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த 28 அடுக்குகள் கொண்ட உறைகிணற்றின் அருகே தற்போது அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலிருந்து 10 மீட்டர் தூரத்தில் தற்போது உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. 20 முதல் 25 செமீ உயரம் கொண்டதாக இந்த அடுக்குகள் உள்ளன. மேலும் அகழாய்வு தொடரும் நிலையில் கூடுதலாக உறைகள் கிடைக்க வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டைய காலத்தில் அகரம் வழியாக நீரோடை, ஆறு உள்ளிட்டவைகள் சென்றிருக்ககூடும் என்பதால் இங்கு அதிக அளவில் உறைகிணறுகள் கிடைத்துவருகின்றன எனவும் கூறப்படுகிறது.

1. Which is the top state of India in production of Coal?

A) Jharkhand

B) Chhattisgarh

C) Odisha

D) Telangana

  • As per the provisional statistics of 2020–21 of the Coal Ministry, India’s total coal production registered a decline of 2.02 per cent to 716.084 million tonnes during 2020–21. Of the total production, 671.297 MT was non–coking coal and 44.787 MT was coking coal. Chhattisgarh registered highest coal production of 158.409 MT, followed by Odisha and Madhya Pradesh. Jharkhand was the top producer of coking coal.

2. NEOWISE, which got for two–year mission extension, is the telescope of which space agency?

A) ISRO

B) NASA

C) Roscosmos

D) JAXA

  • NASA’s Near–Earth Object Wide–field Infrared Survey Explorer (NEOWISE) was recently given a two–year mission extension.
  • It is a near–Earth object (NEO) hunting space telescope, which searches for asteroids and comets – including objects that could pose a hazard to Earth. The telescope has provided an estimate of the size of over 1,850 near–Earth objects.

3. Which country has recently become 15th nation to be part of the world’s largest weapons project, Joint Strike Fighter program?

A) South Africa

B) Netherlands

C) Switzerland

D) Germany

  • F–35 Lightning II is a next generation fighter jet developed by the US–based Lockheed Martin. This stealth multirole aircraft is capable of conducting airstrikes, reconnaissance missions and air–to–air combats. Its development was funded by the US and several of its NATO allies.
  • Switzerland has ordered these fighter jets, making it the 15th nation to be part of the world’s largest weapons project, Joint Strike Fighter program.

4. Which is the largest milk producing country in the world?

A) India

B) United States

C) China

D) Denmark

  • India is the largest producer of milk globally, with an estimated production of 208 million tonnes in FY2021.

5. Virachey National Park, that was recently making news, is located in which country?

A) Thailand

B) Malaysia

C) Cambodia

D) Singapore

  • Virachey National Park is one of the two Cambodian ASEAN Heritage Parks located at the northeastern part of the country and spanning across more than 3,000 square kilometres. It overlaps Ratanakiri and Stung Treng Provinces.
  • Illegal logging is a major concern in this national forest since the 2000s, leading to a vast expanse of forest being degraded at an exponential scale. However, this situation has improved over the recent years. The rare sighting of giant muntjac in the recent months is the outcome of this progress.

6. Valmiki National Park, which was seen in the news recently, is the only National Park of which state?

A) Karnataka

B) Uttar Pradesh

C) Bihar

D) Maharashtra

  • Valmiki National Park and Tiger Reserve and Wildlife Sanctuary is located at the India–Nepal border in Bihar, on the bank of river Gandak. It is the only National Park in the state of Bihar.
  • The Authorities of the Bihar’s Valmiki Tiger Reserve (VTR) have identified 150 vultures in different ranges of the protected area. A proposed plan for vulture conservation is sent to the Integrated Development of Wildlife Habitats (IDWH).

7. What is the name of the tropical storm that has hit Cuba recently?

A) Elsa

B) Bill

C) Danny

D) Erin

  • Tropical storm Elsa recently hit Cuba. It subsequently exited Cuba, east of the city of Havana, towards Florida. Cuba faced heavy rains due to the storm, causing light flooding in the capital in lower lying coastal areas.

8. Which Ministry launched ‘Ayurveda dataset on Clinical Trials Registry– India CTRI Portal’?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of AYUSH

C) Ministry of Science and Technology

D) Ministry of Electronics and IT

  • Union AYUSH Ministry recently launched Ayurveda dataset on The Clinical Trials Registry– India CTRI Portal. The Ayurveda Dataset of CTRI has been jointly developed by Indian Council of Medical Research (ICMR) and Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) under the Ministry of AYUSH. Union AYUSH Minister also launched four more portals namely AMAR, SAHI, e–MEDHA and RMIS.

9. Which country hosted the CoWIN Global Conclave?

A) USA

B) India

C) Canada

D) Australia

  • India recently hosted the CoWIN Global Conclave. Union Health Minister Harsh Vardhan inaugurated the virtual conclave. As per the CEO of the National Health Authority (NHA), Dr RS Sharma, about 50 countries have shown interest in adopting CoWIN.
  • India is set to provide the open–source version of the platform to the interested countries. CoWIN is a digital platform, developed by India, to efficiently run its vaccination drive.

10. Which country hosted the 7th edition of Indian Ocean Naval Symposium (IONS) in 2021?

A) India

B) France

C) South Africa

D) Australia

  • The French Navy hosted the 7th edition of Indian Ocean Naval Symposium (IONS). It was concluded at Réunion island, a French department in the Indian Ocean. Indian Ocean Naval Symposium is a biennial event, which was conceived by the Indian navy in 2008. IONS includes 24 member nations that touch or lie within the Indian Ocean Region and 8 observer nations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!