TnpscTnpsc Current Affairs

15th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

15th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘உலகளாவிய பாலின இடைவெளி’ அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. ஐநா பெண்கள் அமைப்பு

ஆ. உலகப் பொருளாதார மன்றம் 

இ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ. உலக வங்கி

  • 2022ஆம் ஆண்டிற்கான ‘உலகளாவிய பாலின இடைவெளி’ அறிக்கையினை உலகப் பொருளாதார மன்றம் (WEF) சமீபத்தில் வெளியிட்டது. ஐஸ்லாந்து (90.8%) உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 146 நாடுகளில் 135ஆவது இடத்திலுள்ளது. கடந்த ஆண்டு, 156 நாடுகளில் இந்தியா 140ஆவது இடத்திலிருந்தது. அறிக்கையின்படி, உலகளாவிய பாலின இடைவெளியை சுழியத்திற்குக் கொண்டு வார இன்னும் 132 ஆண்டுகள் ஆகும்.

2. ‘I2U2’ குழுமத்துடன் தொடர்புடைய நாடுகள் எவை?

அ. இந்தியா–இஸ்ரேல்–ஐக்கிய அரபு அமீரகம்–அமெரிக்கா 

ஆ. இந்தியா–இஸ்ரேல்–ஐக்கிய பேரரசு–அமெரிக்கா

இ. இந்தியா–ஈரான்–ஐக்கிய அரபு அமீரகம்–அமெரிக்கா

ஈ. இந்தியா–ஈரான்– ஐக்கிய பேரரசு–அமெரிக்கா

  • 2021 அக்டோபரில், நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பின்போது ‘I2U2’ (இந்தியா–இஸ்ரேல்–ஐக்கிய அரபு அமீரகம்–அமெரிக்க ஐக்கிய நாடுகள்) குழுவானது கருத்தாக்கப்பட்டது. பிரதமர் மோடி தனக்கு நிகரான இஸ்ரேலிய பிரதிநிதி யாயர் லாபிட், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோருடன் முதல் ‘I2U2’ தலைவர்களின் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.

3. நடுவண் கலாச்சார அமைச்சகமானது 2022 – ’தம்மசக்கா நாள்’ கொண்டாட்டங்களை கீழ்க்காணும் எந்த நகரத்தில் நடத்தியது?

அ. வாரணாசி

ஆ. சாரநாத் 

இ. பாட்னா

ஈ. பெங்களூரு

  • உத்தரபிரதேச மாநிலம் சாரநாத்தில், 2022ஆம் ஆண்டு தம்மசக்கா நாள் கொண்டாட்டத்தில் இந்தியக்குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பன்னாட்டு பௌத்த கூட்டமைப்புடன் இணைந்து இந்தியாவின் கலாசார அமைச்சகம், ‘அமுதப்பெருவிழாவின்’ ஒருபகுதியாக ‘ஆஷாத பூர்ணிமா’ நாளைக் கொண்டாடுகிறது.

4. தரங்கா மலையில் அமைந்துள்ள புனித சமணத் தீர்த்தங்கரர்களுள் ஒருவரான சமணர் அஜித்நாத்தின் கோவில், கீழ்க்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத் 

இ. பீகார்

ஈ. உத்தரப்பிரதேசம்

  • புனித சமணத் தீர்த்தங்கரர்களுள் ஒருவரான சமணர் அஜித்நாத்தின் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள தரங்கா மலையில் அமைந்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான நடுவண் அமைச்சரவைக்குழு கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தால் `2798.16 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தரங்கா மாலை–அம்பாஜி–அபுசாலை புதிய இரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதலளிக்கப்பட்டது. 116.65 கிமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படவுள்ள இந்தப் புதிய இரயில்பாதை பணிகள் 2026–27–க்குள் நிறைவேற்றி முடிக்கப்படும்.

5. ‘பாதுகாப்பான புகலிட மறுப்பு மீதான முனைவு’ மற்றும் ‘ஊழல் எதிர்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த பயிலரங்கம்’ முதலியவற்றுடன் தொடர்புடைய கூட்டமைப்பு எது?

அ. G20

ஆ. ஐரோப்பிய ஒன்றியம்

இ. BRICS 

ஈ. ASEAN

  • நடுவண் அமைச்சர் Dr ஜிதேந்திர சிங் சமீபத்தில் BRICS ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது FATFஇன் பணமோசடிக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிதியியல் தரங்களை அமல்படு –த்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். டாக்டர் ஜிதேந்திர சிங், ‘பாதுகாப்பான புகலிட மறுப்பு மீதான முனைவின்’ இறுதி வடிவங்குறித்து திருப்தி தெரிவித்ததோடு, ‘ஊழல் எதிர்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த BRICS பயிலரங்கில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

6. DRDOஆல் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட High–speed Expendable Aerial Target (HEAT)இன் பெயர் என்ன?

அ. ஆகாஷ்

ஆ. அப்யாஸ் 

இ. அக்ஷரா

ஈ. அப்சரா

  • இந்தியா, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘அப்யாஸ்’ என்னும் High–speed Expendable Aerial Target (HEAT)ஐ வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பில் இராணுவ ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) இந்தச் சோதனையை நடத்தியது. முன்னதாக, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை DRDOஉம் இராணுவமும் வெற்றிகரமாக பரிசோதித்தன.

7. இந்தியாவில், ‘பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி (GST) நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. பிப்ரவரி.01

ஆ. ஜூன்.01

இ. ஜூலை.01 

ஈ. ஆகஸ்ட்.01

  • பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி விதித்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஜூலை.1 அன்று GST நாள் கொண்டாடப்படுகிறது. இது 2017–இல் “ஒரு நாடு– ஒரு சந்தை– ஒரு வரி” என்ற கருத்துருவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. GST என்பது பலகட்ட, மறைமுக நுகர்வு அடிப்படையிலான வரி அமைப்பாகும். இது சேவை வரி, மதிப்பு கூட்டப்பட்ட உள்நாட்டு மறைமுக வரிகளின் தொகுப்பை உள்ளடக்கியது.

8. U23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022–இல் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யார்?

அ. தீபக் புனியா 

ஆ. இரவி குமார் தஹியா

இ. பஜ்ரங் புனியா

ஈ. அன்ஷு மாலிக்

  • கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெற்ற U23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்–2022–இல் 86 கிலோ ‘பிரீஸ்டைல்’ எடைப்பிரிவில் தீபக் புனியா வெண்கலம் வென்றார். 23 வயதான தீபக் புனியா, உஸ்பெகிஸ்தானின் அசிஸ்பெக் பைசுல்லயேவ் மற்றும் கிர்கிஸ்தானின் நூர்திலெக் கரிப்பேவ் ஆகியோரிடம் வீழ்ந்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் இந்தியா 10 தங்கப்பதக்கங்கள் உட்பட மொத்தம் 25 பதக்கங்களை வென்றது.

9. ஆசிய பசிபிக் நிலைத்தன்மை குறியீடு–2021–இல் ‘தங்கம்’ தரநிலைப்பிரிவை எட்டிய ஒரே இந்திய நகரம் எது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு 

இ. மும்பை

ஈ. ஹைதராபாத்

  • ஆசிய பசிபிக் நிலைத்தன்மை குறியீடு–2021இன்படி, பெங்களூரு, தில்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய 4 இந்திய நகரங்கள் முதல் இருபது நிலையான நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. நைட் பிராங்கின் APAC நிலையான நகரங்களின் குறியீடு நகரமயமாக்கல் அழுத்தம், காலநிலை இடர், CO2 உமிழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் முப்பத்தாறு நகரங்களை மதிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர், சிட்னி, வெலிங்டன், பெர்த் மற்றும் மெல்போர்ன் ஆகியவை பசுமைத் தரப்படுத்தப்பட்ட முதல் ஐந்து நகரங்கள் ஆகும். பிராந்தியத்தில் 14ஆம் இடத்தில் உள்ள பெங்களூரு, ‘தங்கம்’ என்ற தரநிலையை எட்டிய ஒரே இந்திய நகரமாகும்.

10. இந்தியாவின் நல்வாழ்வுத்துறைக்கு உதவும் நோக்கில் தலா $500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இரண்டு கடன்களை அறிவித்துள்ள நிறுவனம் எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி

இ. உலக வங்கி 

ஈ. HDFC வங்கி

  • இந்தியாவின் நலவாழ்வுத்துறைக்கு உதவும் நோக்கில் தலா $500 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய இரண்டு கூடுதல் கடன்களை வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த $1 பில்லியன் டாலர் நிதியுதவியின் மூலம், இந்தியாவின் முதன்மையான பிரதம மந்திரி–ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு இயக்கத்திற்கு (PM–ABHIM) உதவ இயலும். இவ்விரு கடன்களுள் ஒன்று தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா, மேகாலயா, ஒடிஸா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு அளிக்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. வேதி உரங்களுக்குப் பதிலாக ‘நானோ உரங்கள்’ பயன்பாடு: மன்சுக் மாண்டவியா வலியுறுத்தல்

‘வேதி உரங்களுக்குப் பதிலாக முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘நானோ உரங்கள்’ பயன்பாட்டை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேண்டும்’ என்று மத்திய வேதி மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டார்.

மாநில வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

உலக அளவிலான உரப்பயன்பாட்டில் இந்தியாவின் பங்கு மட்டும் 35 சதவீதமாகும். ஒவ்வோர் ஆண்டும் 70 லட்சம் முதல் 100 லட்சம் மெட்ரிக் டன் உரங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.

`350 கோடி நானோ உர ஆலைக்கு அடிக்கல்: பெங்களூரில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் `350 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் நானோ உர (திரவம்) ஆலைக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அடிக்கல் நாட்டினார். தென்னிந்தியாவில் அமைக்கப்படும் முதல் நானோ உர ஆலை இதுவாகும்.

ஆண்டுக்கு தலா 500 மில்லி லிட்டர் அளவுகொண்ட 34 கோடி நானோ உர பாட்டில்களை தயாரிக்கும் திறனுடன் அமைக்கப்படும் இந்த ஆலை அமைக்கும் திட்டம் 15 மாதங்களில் நிறைவடையும் என இஃப்கோ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற மேலும் 8 ஆலைகளை அமைக்கவும் இஃப்கோ திட்டமிட்டுள்ளது.

2. துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்

தென் கொரியாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது.

தென்கொரியா, செர்பியா அணிகள் முறையே அடுத்த இரு இடங்களைப்பிடித்தன. முன்னதாக புதன்கிழமை முடிவில் இந்தியா, 2 தங்கம், 1 வெண்கலத்துடன் 2-ஆவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், கடைசி நாளான வியாழக்கிழமை ஆடவருக்கான 10 மீ ஏர் ரைபிள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் அர்ஜுன் பபுதா/சாஹு துஷார் மனே/பார்த் மகிஜா அடங்கிய இந்திய அணி 17-15 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் சியுங்கோ பாங்/சங்டோ கிம்/ஹாஜுன் பார்க் கூட்டணியை வீழ்த்தி தங்கம்வென்றது. இதில் அர்ஜுன், சாஹுவுக்கு இப்போட்டியில் இது 2-ஆவது தங்கப்பதக்கமாகும்.

அடுத்ததாக, மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் இளவேனில் வாலரிவன் / மெஹுலி கோஷ்/ரமிதா கூட்டணி 10-16 என்ற கணக்கில் தென்கொரியாவின் ஜிஹியோன் கியும்/யுன்சியோ லீ / டேயோஹ் குவோனிடம் தங்கத்தை இழந்து வெள்ளி பெற்றனர்.

10 மீ ஏர் பிஸ்டல் அணிகளில், ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஷிவா நர்வால்/நவீன்/சாகர் தாங்கி ஆகியோர் 15-17 என்ற கணக்கில் இத்தாலியின் பாவ்லோ மோனா/அலெசியோ டொராச்சி/லுகா டெஸ்கோனியிடம் வெற்றியை இழந்து வெள்ளிப்பதக்கம் பெற்றனர். மகளிர் பிரிவிலும் ரிதம் சங்வான்/யுவிகா தோமர்/பாலக் ஆகியோர் கூட்டணி 2-10 என தென்கொரிய அணியிடம் தோற்று வெள்ளிபெற்றனர்.

இதுதவிர, ஆடவருக்கான டிராப் அணிகள் பிரிவில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான்/விவான் கபூர்/ போவ்னீஷ் மெந்திராட்டா கூட்டணியும் வெள்ளிப்பதக்கம் பெற்றது.

1. Which institution releases the ‘Global Gender Gap Report’?

A. UN Women

B. World Economic Forum 

C. International Monetary Fund

D. World Bank

  • The Global Gender Gap Index for 2022 was recently released by the World Economic Forum (WEF). Iceland (90.8%) led the global ranking in the first place while India is ranked at 135 out of 146 countries. Last year, India was ranked 140 out of 156 countries. As per the report, it will take another 132 years to close the global gender gap.

2. Which countries are associated with the ‘I2U2 Grouping’?

A. India–Israel–UAE–USA 

B. India–Israel–UK–USA

C. India–Iran–UAE–USA

D. India–Iran–UK–USA

  • The I2U2 (India–Israel–UAE–USA) Grouping was conceptualized during the meeting of the Foreign Ministers of the four countries in October 2021. Prime Minister Narendra Modi participated in the First I2U2 Leaders’ Virtual Summit along with his Israeli counterpart Yair Lapid, UAE President Mohammed bin Zayed Al Nahyan and US President Joe Biden.

3. In which city, Ministry of Culture hosted the ‘Dhammacakka Day 2022 celebration’?

A. Varanasi

B. Sarnath 

C. Patna

D. Bengaluru

  • The President of India, Ram Nath Kovind addressed the Dhammacakka Day 2022 celebrations at Sarnath, Uttar Pradesh. The Ministry of Culture in association with the International Buddhist Confederation is celebrating the Ashadha Purnima Divas, as part of Azadi Ka Amrit Mahotsav.

4. Ajitnath Jain Temple, one of the holy Jain Tirthankaras, at Taranga Hill, is located in which state/UT?

A. Maharashtra

B. Gujarat 

C. Bihar

D. Uttar Pradesh

  • Ajitnath Jain Temple, one of the holy Jain Tirthankaras, at Taranga Hill, is located in the state of Gujarat. The Cabinet Committee on Economic Affairs (CCEA) approved Taranga Hill–Ambaji–Abu Road new rail line to provide connectivity and improve mobility. The estimated cost of this project is Rs 2798.16 crores and will be completed by 2026–27.

5. ‘Denial of Safe Haven initiative’ and ‘Workshop on Anti–Corruption and Economic Development’ are associated with which bloc?

A. G–20

B. European Union

C. BRICS 

D. ASEAN

  • Union Minister Dr Jitendra Singh recently addressed the BRICS Anti–Corruption Ministerial Meet and reiterated India’s commitment to implement the FATF Anti–Money Laundering and Counter Terrorism financing standards. Dr Jitendra Singh expressed satisfaction over the finalization of the BRICS Denial of Safe Haven initiative and shared experiences at the BRICS Workshop on Anti–Corruption and Economic Development.

6. What is the name of the High–speed Expendable Aerial Target (HEAT), which was recently tested by DRDO?

A. Akash

B. Abhyas 

C. Akshara

D. Apsara

  • India successfully tested the indigenously–designed Abhyas – a High–speed Expendable Aerial Target (HEAT). The trial was carried out by the Defence Research and Development Organisation (DRDO) from the Integrated Test Range (ITR) in Odisha’s Chandipur. Earlier, DRDO and the Army successfully tested an indigenously–developed anti–tank guided missile in Maharashtra.

7. When is the ‘Goods and Services Tax (GST) Day’ celebrated in India?

A. February.01

B. June.01

C. July.01 

D. August.01

  • GST Day is celebrated on July 1 to mark completion of five years of Goods & Services Tax. It was introduced in 2017, with the idea of “One Nation– One Market– One Tax”. GST is a multi–stage, indirect consumption–based tax system that subsumed a set of domestic indirect taxes such as service tax, value–added tax, purchase tax, excise duty among others.

8. Which Indian wrestler won a bronze medal at the U23 Asian wrestling championships 2022?

A. Deepak Punia 

B. Ravi Kumar Dahiya

C. Bajrang Punia

D. Anshu Malik

  • Deepak Punia won a bronze medal in the 86kg freestyle weight category at the U23 Asian wrestling championships 2022 in Bishkek, Kyrgyzstan. The 23–year–old wrestler after losing to Azizbek Fayzullaev of Uzbekistan and Nurtilek Karypbaev of Kyrgyzstan, settled for the bronze. India won 25 medals in all in the U23 meet in the event, including 10 gold medals.

9. Which is the only Indian city to achieve the ‘Gold’ standard category in Asia Pacific Sustainability Index 2021?

A. Chennai

B. Bengaluru 

C. Mumbai

D. Hyderabad

  • Four Indian cities namely Bengaluru, Delhi, Hyderabad and Mumbai appeared in the list of top 20 sustainable cities, as per the Asia Pacific Sustainability Index 2021. Knight Frank’s APAC Sustainably Led Cities Index rated 36 cities based on urbanisation pressure, climate risk, carbon emissions and government initiatives.
  • Singapore, Sydney, Wellington, Perth, and Melbourne were the top five green–rated cities. Bengaluru at 14th rank in the region, was the only Indian city to achieve the ‘Gold’ standard category.

10. Which institution approved two loans of USD 500 million each to support India’s health sector?

A. ADB

B. AIIB

C. World Bank 

D. HDFC Bank

  • The World Bank approved two complementary loans of USD 500 million each to support India’s health sector. Through this financing of USD 1 billion, the Bank will support India’s flagship Pradhan Mantri–Ayushman Bharat Health Infrastructure Mission (PM–ABHIM). One of the loans will prioritize seven states including Andhra Pradesh, Kerala, Meghalaya, Odisha, Punjab, Tamil Nadu, and Uttar Pradesh.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!