TnpscTnpsc Current Affairs

15th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

15th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 15th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. இந்தியா, அண்மையில் எந்த அமைப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதியத்துக்கு $5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்தது?

அ. சார்க்

ஆ. ஆசியான்

இ. G20

ஈ. ஐஎஸ்ஏ

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆசியான்

  • ஆசியான்–இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதியத்துக்கு $5 மில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதலாக வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்தது. பொது சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் திறன்மிகு விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்தப் பங்களிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசியான்–இந்தியா அறிவியல் & தொழில்நுட்ப கூட்டாண்மையானது கடந்த 1996ஆம் ஆண்டில் ASEAN India S&T பணிக்குழு (AIWGST) நிறுவப்பட்டபோது அதனுடன் சேர்ந்து நிறுவப்பட்டது.

2. ‘தேசிய ஹைட்ரஜன் மிஷன்’ தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2002

ஆ. 2007

இ. 2010

ஈ. 2021

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 2021

  • இந்தியா அண்மையில் COP–27இல் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் (UNFCCC) நீண்டகால குறைந்த கரியமில வாயு (CO2) உமிழ்வு மேம்பாட்டு உத்தியை சமர்ப்பித்தது. கடந்த 2021ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட, ‘தேசிய ஹைட்ரஜன் திட்டம்’, இந்தியாவை பசுமையான ஹைட்ரஜன் மையமாக மாற்றுவதை நோக்கமெனக் கொண்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் சதவீதத்தை 20%ஆகவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்தியா விரும்புகிறது.

3. வன்முறையைப் போற்றும் ஆயுதங்கள் மற்றும் பாடல்களை பொதுவில் காட்சிப்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதித்து உத்தரவிட்டுள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. பஞ்சாப்

இ. ஜார்கண்ட்

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பஞ்சாப்

  • பஞ்சாபின் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையின் கீழுள்ள அரசாங்கம் வன்முறையைப் போற்றும் ஆயுதங்கள் மற்றும் பாடல்களை பொதுவில் காட்சிப்படுத்துவதற்கு முற்றிலும் தடைவிதித்து ஆணையிட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், விழாக்கள் அல்லது பிற நிகழ்ச்சிகளில் ஆயுதங்களை எடுத்துச்செல்லவோ அல்லது காட்டவோ முழுமையான தடை விதிக்கப்படும் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. 2022 – டுவென்டி 20 உலகக்கோப்பை பட்டத்தை வென்ற அணி எது?

அ. இங்கிலாந்து

ஆ. ஆஸ்திரேலியா

இ. இந்தியா

ஈ. பாகிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இங்கிலாந்து

  • மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து இரண்டாம் முறையாக டுவென்டி 20 உலகக்கோப்பை சாம்பியன்சிப்பை வென்றது. பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வெள்வதற்கு உதவினார். போட்டியின் ஆட்ட நாயகனாகவும், போட்டியின் நாயகனாகவும் சாம் குர்ரன் தெரிவானார்.

5. 53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் மாநிலம் எது?

அ. மேற்கு வங்கம்

ஆ. கோவா

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கோவா

  • 53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவானது 2022 நவம்பரில் கோவா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது ஸ்பானிஷ் திரைப்பட இயக்குநர் கார்லோஸ் சௌராவுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வின், ‘சிறப்புக் கவனம் பெறும் நாடாக’ பிரான்ஸ் உள்ளது. நடுவண் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முனைவான, ‘75 கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆஃப் டுமாரோ’வின் இரண்டாவது பதிப்பும் இந்தத் திருவிழாவின்போது ஏற்பாடு செய்யப்படும்.

6. SIMBEX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் கடல்சார் இருதரப்புப் பயிற்சியாகும்?

அ. இலங்கை

ஆ. ஸ்வீடன்

இ. சுவிட்சர்லாந்து

ஈ. சிங்கப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. சிங்கப்பூர்

  • விசாகப்பட்டினத்தில் நடந்த சிங்கப்பூர்–இந்திய கடல்சார் இருதரப்புப்பயிற்சியில் (SIMBEX) இந்தியா மற்றும் சிங்கப்பூர் கடற்படைகள் பங்கேற்றன. இந்திய கடற்படையானது SIMBEX–2022இன் 29ஆம் பதிப்பை இரண்டு கட்டங்களாக நடத்துகிறது. விசாகப்பட்டினத்தில் துறைமுகம் சார்ந்த பயிற்சிகளும் வங்காள விரிகுடாவில் கடல்சார் பயிற்சிகளும் நடைபெறும். SIMBEX பயிற்சிகள் கடந்த 1994ஆம் ஆண்டில் தொடங்கின. இந்தப் பயிற்சி தொடக்கத்தில், ‘லயன் கிங்’ என்று அழைக்கப்பட்டது.

7. ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் 100% குழாய்வழி குடிநீர் இணைப்புகளை வழங்கிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. குஜராத்

  • ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் 100% குழாய்வழி குடிநீர் இணைப்புகளை குஜராத் மாநில அரசு வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2024ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய்வழி இணைப்புகள்மூலம் ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தண்ணீர் கிடைக்க இலக்கு வைத்துள்ளது. ஹரியானா, கோவா, தெலுங்கானா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஏற்கனவே 100% இலக்கை எட்டியுள்ளன.

8. இந்தியாவில், ‘சௌர்ய திவாஸ்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர்.27

ஆ. அக்டோபர்.28

இ. அக்டோபர்.29

ஈ. அக்டோபர்.30

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அக்டோபர்.27

  • ஜம்மு–காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், ‘சௌர்ய திவாஸ்’ அக்டோபர்.27 அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1947ஆம் ஆண்டு புட்காம் வானூர்தி நிலையத்தில் இந்திய இராணுவத்தின் விமானம் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய இராணுவமும் அக்.27ஆம் தேதியன்று காலாட்படை நாளைக் கொண்டாடுகிறது. 1947 அக்.27 அன்று, ஜம்மு–காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானின் படைகளை வெளியேற்றுவதற்காக இந்திய வான்படை புட்காம் விமான நிலையத்தில் வைகது இந்திய இராணுவத்துடன் கைகோர்த்தது.

9. ‘லக்ஷ்மீர் பந்தர் திட்டம்’ என்பது கீழ்க்காணும் எந்த மாநில அரசின் முனைவாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. மேற்கு வங்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. மேற்கு வங்கம்

  • மேற்கு வங்க மாநில அரசின், ‘லக்ஷ்மீர் பந்தர் திட்டம்’, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுப்பிரிவில் ‘ஸ்கோச் விருதைப்’ பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநில அரசானது 25–60 வயதுக்குட்பட்ட குடும்பத்தலைவிக்கு நிதியுதவி வழங்கும் இந்தத் திட்டத்தை 2021 ஆகஸ்டில் தொடங்கியது. இந்தத் திட்டத்தின்கீழ், பொதுப்பிரிவுப் பெண்களுக்கு மாதந்தோறும் `500உம், SC மற்றும் ST பிரிவினருக்கு மாதந்தோறும் சுமார் `1,000உம் வழங்கப்படுகிறது.

10. அண்மையில் எந்த நாட்டுடன் இணைந்து 2022 அக்டோபரில், ‘புத்தாக்க நாளை’ இந்தியா அனுசரித்தது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஸ்வீடன்

இ. சுவிட்சர்லாந்து

ஈ. பிரான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஸ்வீடன்

  • ஒன்பதாம் ஆண்டு இந்தியா–ஸ்வீடன் புத்தாக்க நாளானது வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. ஸ்வீடன் மற்றும் இலத்துவியாவிற்கான இந்திய தூதரகம், சுவீடன்–இந்தியா வணிக கவுன்சில் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியானது, ‘இந்தியா ஸ்வீடனின் பசுமை மாற்றத்தை துரிதப்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 1,000–க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். இந்தியா ஸ்வீடன் புத்தாக்க நாள் – 2022 ஆனது இந்தியா அன்லிமிடெட் மூலம் நடத்தப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய–அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியான, “யுத் அப்யாஸ் – 2022” உத்தராகண்டில் தொடங்கவுள்ளது.

இந்திய–அமெரிக்க 18ஆவது கூட்டு இராணுவப் பயிற்சியான, “யுத் அப்யாஸ் – 2022” உத்தராகண்டில் இம்மாதம் தொடங்கவுள்ளது. சிறந்த நடைமுறைகள், உத்திகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளும் நோக்கத்துடன் இருநாடுகளின் இராணுவங்களுக்கிடையே இத்தகைய பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. முந்தைய பயிற்சி 2021 அக்டோபரில் அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்றது.

இப்பயிற்சியின்போது, அமைதிக்காப்பு, அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவை தொடர்பான செயல்பாடுகளும் இடம் பெறும். இந்தக் கூட்டுப்பயிற்சியின்போது மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும். இயற்கைச்சீற்றத்தின்போது, நிவாரண நடவடிக்கைகளை விரைவாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படுத்துவதற்கான பயிற்சியை இருநாடுகளும் பெறவுள்ளன.

2. ஜி20 மாநாடு இன்று தொடக்கம்

பெரும் பொருளாதார மதிப்புகொண்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவில் நவ.15 அன்று தொடங்குகிறது.

சர்வதேச அளவில் ஜி20 கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. உலகின் சுமார் 85 சதவீத பொருளாதார மதிப்பையும், சுமார் 75% வர்த்தகத்தையும், சுமார் 65 சதவீத மக்கள்தொகையையும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. அந்நாடுகள் எடுக்கும் முக்கிய முடிவுகள், சர்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

உணவு, எரிசக்தி பாதுகாப்பு: சர்வதேச பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. முக்கியமாக, சர்வதேச அளவில் உணவுப் பாதுகாப்பையும் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.

ஜி20 தலைமை: பாலி மாநாடு முடிவடையும்போது, ஜி20 கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளார். கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பை டிசம்பர் 1-ஆம் தேதியிலிருந்து இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்கவுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுக்கு வருகைதருமாறு உறுப்புநாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளேன். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி20 கூட்டமைப்பை இந்தியா தலைமையேற்று வழிநடத்தும்.

முக்கிய விவகாரங்கள்: இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பு அடுத்த ஆண்டு நவம்பர் வரை நீடிக்கவுள்ளது. அந்தக் காலகட்டத்தில், பொருளாதாரப் பிரச்னைகள், பருவநிலை மாற்றம், பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பு, சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து வருவது, வளர்ந்துவரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்குத் தீர்வுகாண இந்தியா முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. சரத் கமலுக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா

நடுவணரசு சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு மூத்த டேபிள் டென்னிஸ் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சரத் கமல் தேர்வாகி உள்ளார். தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்பட 25 பேருக்கு அர்ஜுனா விருதுகளும், 4 பேருக்கு துரோணச்சார்யா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கேல் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

துரோணாச்சார்யா விருதுகள்: ஜீவன் ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி (குத்துச்சண்டை), சுமா சித்தார்த் (துப்பாக்கி சுடுதல்), சுஜித் மான் (மல்யுத்தம்).

வாழ்நாள் சாதனையாளர்: தினேஷ் ஜவஹர் (கிரிக்கெட்), பிமால் பிரபுல்லா (கால்பந்து), ராஜ் சிங் (மல்யுத்தம்).

தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது: அஸ்வினி அக்குன்ஜி (தடகளம்), தரம்வீர் சிங் (ஹாக்கி), சுரேஷ் (கபடி), நிர் பகதூர் குருங் (பாரா தடகளம்).

மௌலானா அபுல் கலாம் ஆஸாத் விருது: குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ்.

4. 20-இல் FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் வரும் நவ.20-ஆம் தேதி தொடங்கி டிச.18 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள உருகுவேயில் முதல் உலகக்கோப்பை போட்டி 1930-இல் நடத்தப்பட்டது. 13 நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றன.

முதல் சாம்பியன் உருகுவே, நடப்புச் சாம்பியன் பிரான்ஸ்:

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் ஒருபகுதியாக மாண்டெவிடோ நகரில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் 93,000 ரசிகர்கள் முன்னிலையில் ஆர்ஜென்டீனாவை 4-2 என வீழ்த்தி முதல் உலகச்சாம்பியன் ஆனது உருகுவே. 2018-இல் பிரான்ஸ் அணி கோப்பையை வென்றது.

தகுதிச்சுற்று ஆட்டங்கள்:

ஆப்பிரிக்கா, ஆசியா, வடக்கு, மத்திய, தென் அமெரிக்கா, கரீபியன், ஓசேனியா, ஐரோப்பா என 6 கண்டங்கள் அளவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டு, உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு 2 ஆண்டுகள் வரை தகுதிச் சுற்று நடைபெறும். போட்டியை நடத்தும் நாடு நேரடியாக தகுதி பெற்று விடும். ஆனால் 2006 முதல் நடப்பு சாம்பியன் அணியும் தகுதிச் சுற்றில் பங்கேற்குமாறு விதிகள் திருத்தப்பட்டன.

இத்தாலிய வடிவமைப்பாளர் சில்வியோ கஸனிகா வடிவமைத்த உலகக்கோப்பைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

32 அணிகள் பங்கேற்பு:

8 குரூப்களாக 32 அணிகள் பிரிக்கப்பட்டு தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

எட்டு மைதானங்கள்:

கத்தாரில் மொத்தம் 8 மைதானங்களில் உலகக்கோப்பை ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

முதல் ஆட்டம்:

நவ.20: கத்தார்-ஈக்குவடார்.

15th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. India recently announced a contribution of USD 5 million to the Science and Technology fund of which bloc?

A. SAARC

B. ASEAN

C. G20

D. ISA

Answer & Explanation

Answer: B. ASEAN

  • India announced an additional contribution of USD 5 million to the ASEAN–India science and technology fund. The contribution aims to enhance cooperation in sectors of public health, renewable energy and smart agriculture. ASEAN–India Science & Technology Collaboration started in 1996 with the establishment of the ASEAN India S&T working group (AIWGST).

2. When was the ‘National Hydrogen Mission’ launched?

A. 2002

B. 2007

C. 2010

D. 2021

Answer & Explanation

Answer: D. 2021

  • India recently submitted its Long–Term Low Emission Development Strategy to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) at COP 27. The National Hydrogen Mission, which was launched in 2021, aims to make India a green hydrogen hub. India also aspires to maximize the use of electric vehicles, ethanol blending to reach 20% by 2025.

3. Which state has ordered complete ban on public display of weapons and songs glorifying violence?

A. Kerala

B. Punjab

C. Jharkhand

D. West Bengal

Answer & Explanation

Answer: B. Punjab

  • Punjab’s Aam Aadmi Party (AAP) government ordered a complete ban on public display of weapons and songs glorifying violence. The order also directed that a complete ban will be imposed in carrying or showing off weapons in public gatherings, religious places, functions or other events.

4. Which team won the ‘Twenty20 World Cup title 2022’?

A. England

B. Australia

C. India

D. Pakistan

Answer & Explanation

Answer: A. England

  • England claimed their second Twenty20 World Cup title with a five–wicket win over Pakistan at the Melbourne Cricket Ground. Ben Stokes scored an unbeaten half–century as the country won the title. Sam Curran was named the player of the match and the player of the tournament.

5. Which state is the host of the ‘53rd edition of the International Film Festival of India’?

A. West Bengal

B. Goa

C. Karnataka

D. Odisha

Answer & Explanation

Answer: B. Goa

  • The ‘53rd edition of the International Film Festival of India’ will be hosted in the state of Goa in November 2022. Satyajit Ray Lifetime Achievement award is to be given to Spanish film director Carlos Saura. France is the ‘Spotlight’ country of the event. The second edition of ‘75 Creative Minds of Tomorrow’, an initiative by the Ministry of Broadcasting and Information will also be organised.

6. SIMBEX is a Maritime Bilateral Exercise held between India and which country?

A. Sri Lanka

B. Sweden

C. Switzerland

D. Singapore

Answer & Explanation

Answer: D. Singapore

  • The Navies of India and Singapore are participating in the Singapore–India Maritime Bilateral Exercise (SIMBEX) at Visakhapatnam. The Indian Navy is hosting the 29th edition of SIMBEX–2022 in two phases – Harbour Phase at Visakhapatnam followed by the Sea Phase in Bay of Bengal. SIMBEX series of exercises began in 1994 and were initially known as Exercise Lion King.

7. Which state recently achieved 100% tap water connections in rural areas under the Jal Jeevan Mission?

A. Tamil Nadu

B. Gujarat

C. Karnataka

D. Maharashtra

Answer & Explanation

Answer: B. Gujarat

  • The Gujarat government has achieved 100% tap water connections in rural areas under the Jal Jeevan Mission. The Mission, which was launched by Prime Minister Modi in 2019, targets to make available 55 litres of water per person every day to each rural household through household tap connections by 2024. Haryana, Goa, Telangana, Dadra and Nagar Haveli, Daman and Diu, Puducherry, Andaman, and Nicobar Island have already achieved 100 per cent tap water in households.

8. When is the ‘Shaurya Diwas’ celebrated in India?

A. October.27

B. October.28

C. October.29

D. October.30

Answer & Explanation

Answer: A. October.27

  • ‘Shaurya Diwas’ is being celebrated in Srinagar, Jammu and Kashmir on October 27. The day aims to commemorate the 75th year of air landed operations of Indian Army at Budgam Airport in 1947. Indian Army also celebrates the Infantry Day on October 27. On October 27, 1947, the Indian Army was inducted by the Indian Air Force at Budgam Airport to evict Pakistan’s forces from Jammu and Kahmir, after the ‘Instrument of Accession’ was signed.

9. ‘Lakshmir Bhandar scheme’ is an initiative of which state government?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Karnataka

D. West Bengal

Answer & Explanation

Answer: D. West Bengal

  • The West Bengal government’s Lakshmir Bhandar scheme has bagged the SKOCH award in the women and child development category. The West Bengal government launched the scheme in August 2021 to provide financial support to a woman head of a family in the age group of 25–60 years. Under the scheme, Rs 500 is given every month to women in the general caste category and around Rs 1,000 per month to women in the SC and ST categories.

10. India recently observed ‘Innovation Day 2022’ with which country in October 2022?

A. Australia

B. Sweden

C. Switzerland

D. France

Answer & Explanation

Answer: B. Sweden

  • The 9th annual India–Sweden Innovation Day 2022 concluded successfully. The event was organised in association with the Embassy of India to Sweden and Latvia, Sweden–India Business Council (SIBC), and Confederation of Indian Industry (CII). The event was themed ‘Accelerating India Sweden’s Green Transition’ and it was attended by over 1,000 participants from across the globe. India Sweden Innovation Day 2022 was hosted by India Unlimited.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!