Tnpsc

15th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மன்னார் வளைகுடாவில் ஆற்றல் தீவை உருவாக்குவதற்காக, தமிழ்நாடு, எந்த நாட்டோடு கூட்டிணைந்துள்ளது?

அ) ஜெர்மனி

ஆ) டென்மார்க் 

இ) ஜப்பான்

ஈ) தென் கொரியா

  • தமிழ்நாடும் டென்மார்க்கும் இலங்கையின் மேற்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையே அமைந்துள்ள மன்னார் வளைகுடாவில் ஆற்றல் தீவொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளன. பசுமை ஆற்றல் துறையில் தமிழ்நாடு தனது தடத்ததை விரிவாக்க விழைவதால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
  • இந்த இலக்கை அடைய, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் $5-10 பில்லியன் நிதியை தமிழ்நாட்டில் டென்மார்க் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த முதலீட்டின்மூலம், 4-10 GW ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்.

2. எம்மாநிலத்தின் கிராமப்புற இணைப்பை விரிவுபடுத்துவதற்காக இந்திய அரசாங்கமும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $300 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?

அ) அஸ்ஸாம்

ஆ) மகாராஷ்டிரா 

இ) ஒடிஸா

ஈ) ஜார்க்கண்ட்

  • ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்திய அரசும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் கிராமப்புற இணைப்புகளை மேம்படுத்துவதற்காக கூடுதல் நிதியுதவியாக $300 மில்லியன் கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தற்போதைய மகாராஷ்டிர கிராமப்புற இணைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கான கூடுதல் நிதி, 1100 கிராமப்புற சாலைகள் மற்றும் 230 பாலங்களை மேம்படுத்த உதவும்.

3. CII தேசிய ஆற்றல் தலைவர் மற்றும் சிறப்பு ஆற்றல் திறன் அலகு ஆகிய மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?

அ) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்

ஆ) தில்லி சர்வதேச விமான நிலைய லிட் 

இ) சென்னை சர்வதேச விமான நிலைய லிட்

ஈ) சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்

  • இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த 22ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், தில்லி சர்வதேச விமான நிலைய லிட் CII ‘தேசிய ஆற்றல் தலைவர்’ மற்றும் ‘சிறந்த ஆற்றல் திறன் அலகு’ ஆகிய மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.

4. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு திட்டங்களுக்கான புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், பின்வரும் எந்த நிறுவனத்துடன் கையெழுத்திட்டது?

அ) தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் 

ஆ) குஜராத் மாநில மின்சாரக் கழகம்

இ) மேற்கு வங்க மாநில மின்சார விநியோகக் கழகம்

ஈ) தெற்கு பீகார் மின் விநியோக நிறுவனம்

  • இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனமானது தமிழ்நாடு மின்னுற்பத்தி & விநியோகக்கழகத்துடனான (TANGEDCO) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், IREDA, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டமேம்பாட்டுக்காக TANGEDCO’ க்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் ஆதரவையும் விரிவுபடுத்தும்.
  • IREDA, TANGEDCO’க்கு நிதிசார் மாதிரிகளை உருவாக்குதல், சந்தை கருவியைப் புரிந்துகொள்வது, முன்மொழியப்பட்ட கடன் தேவைக்கான காப்பீட்டு சேவைகள், சந்தைக்கு முந்தைய கணக்கெடுப்புகள் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களிடையே ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் கடன் திரட்டுவதில் உதவி செய்யும்.

5. அண்மையில், 2 நாள் நடைபெற்ற, ‘நிலவு அறிவியல் பயிலரங்கம் 2021’ஐ தொடங்கிய நிறுவனம் எது?

அ) இஸ்ரோ 

ஆ) நாசா

இ) ஐஐஎஸ்சி

ஈ) பிர்லா கோளரங்கம்

  • இந்திய விண்வெளி ஆய்வுமையமானது (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கத்தின் ஈராண்டுகால செயல்பாட்டின் நிறைவை நினைவுகூரும் வகையில் 2 நாள் ‘நிலவு அறிவியல் பயிலரங்கத்தைத்’ தொடங்கியது.
  • சந்திரயான்-2 ஆனது நிலவை 9,000’க்கும் மேற்பட்ட முறை சுற்றி முடித்துள்ளது. ISRO தலைவர், சந்திரயான்-2 தரவின் அடிப்படையில் ஆவணங்களையும், விண்கலத்தின் தரவுகளையும் வெளியிட்டார்.

6. இமயமலை வெற்றி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர் 9 

ஆ) செப்டம்பர் 10

இ) செப்டம்பர் 11

ஈ) செப்டம்பர் 12

  • 2021 செப்.9 அன்று நௌலா அறக்கட்டளையுடன் இணைந்து தேசிய தூய்மை கங்கை திட்டம், இமயமலை வெற்றி நாளை ஏற்பாடு செய்தது. “Contribution of Himalayas and our responsibilities” என்பது நடப்பு (2021) ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். இமயமலை வெற்றி நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர்.9ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. இமயமலை சுற்றுச்சூழல் மற்றும் பிராந்தியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இது கொண்டாடப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரால் அதிகாரப்பூர்வமாக இமயமலை வெற்றி நாள் அறிவிக்கப்பட்டது.

7. கரைநீங்குங்காற்று (Offshore Wind) குறித்த சிறப்பு மையத்தைத் தொடங்குவதற்காக, எந்த நாட்டோடு, இந்தியா, கூட்டுசேர்ந்துள்ளது?

அ) கனடா

ஆ) பிரான்ஸ்

இ) டென்மார்க் 

ஈ) ஜப்பான்

  • மத்திய மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் R K சிங், டென்மார்க்கின் காலநிலை, எரிசக்தி மற்றும் பயன்பாட்டுத் துறை அமைச்சர் டான் ஜோர்கென்சனை புதுதில்லியில் சந்தித்தார். பசுமையை நோக்கிய ஆற்றல்மாற்றம் இந்தியாவின் கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்பது சிறப்பிக்கப்பட்டது.
  • 2030’க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்தித்திறனை 450 GW அளவுக்கு அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 146 GW ஆக உள்ளது, மேலும் லடாக், அந்தமான் & நிக்கோபார் தீவு மற்றும் இலட்சத்தீவு தீவை எரிசக்தி மற்றும் போக்குவரவில் பசுமையாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு அமைச்சர்களும் கூட்டாக இணைந்து பசுமை உத்தி கூட்டாண்மையின்கீழ், ‘கரைநீங்குங்காற்று குறித்த சிறப்பு மையத்தைத்’ தொடங்கினர்.

8. ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன்-2021’ஐ தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) சிறுபான்மை விவகார அமைச்சகம்

ஈ) ஜல் சக்தி அமைச்சகம் 

  • ஜல் சக்தி அமைச்சகத்தின் இணையமைச்சர், ஸ்ரீ பிரகலாத் சிங் பட்டேல், தூய்மை இந்தியா இயக்கம் (கிராமீன்) கட்டம் – II’இன்கீழ் ‘ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன் – 2021’ஐ தொடங்கிவைத்தார். 2021 செப்டம்பர்.9 அன்று குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்த நிகழ்வில் இது தொடங்கப்பட்டது. ‘ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன் – 2021’, நாடு முழுவதும் குடிநீர் & சுகாதாரத்துறையால் மேற்கொள்ளப்படும்.

9. புனைவுநாவலான பிரனேசிக்காக புனைகதைக்கான பெண்கள் பரிசை வென்றவர் யார்?

அ) J K ரோலிங்

ஆ) சுசன்னா கிளார்க் 

இ) சுதா மூர்த்தி

ஈ) மைக்கேல் ஒபாமா

  • பிரிட்டிஷ் எழுத்தாளர் சுசன்னா கிளார்க் தனது மனதைவருடும் புனைவு நாவலான ‘பிரனேசி’க்காக புகழ்பெற்ற பெண்கள் பரிசை வென்றார். 61 வயதான கிளார்க்கின் இந்நாவலுக்காக 30,000 பவுண்டுகள் ($41,000) பரிசு வழங்கப்பட்டது.

10. உலக தற்கொலை தடுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர் 11

ஆ) செப்டம்பர் 10 

இ) செப்டம்பர் 9

ஈ) செப்டம்பர் 12

  • உலக தற்கொலை தடுப்பு நாளானது ஆண்டுதோறும் செப்.10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. “Creating hope through action” என்பது நடப்பு (2021) ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். உலக தற்கொலை தடுப்பு நாள் என்பது ஆண்டுதோறும் செப்டம்பர்.10 அன்று ஒரு விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்தநாள், சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 15-09-2021 – ‘பேரறிஞர்’ அண்ணா அவர்களின் 113ஆவது பிறந்தநாள்.

2. வாகனங்களுக்கு 5 ஆண்டு ‘பம்பர் டூ பம்பர்’ காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்

‘பம்பர் டூ பம்பர்’ அடிப்படையில் வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுக்கான காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ் பெற்றுள்ளது. சாலைவிபத்து மரணம்தொடர்பான வழக்கு ஒன்றில், ‘பம்பர் டூ பம்பர்’ அடிப்படையில் வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுக்கான காப்பீடு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. ‘பம்பர் டூ பம்பர்’ அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுநர், வாகனத்தில் பயணிக்கும் அனைவருக்கும் காப்பீடு செய்யப்படுகிறது.

செப்.1ஆம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ‘பம்பர் டூ பம்பர்’ அடிப்படையில் 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வாகனங்களுக்கும் சாத்தியமில்லை என்று எதிர்தரப்பினர் கூறியதை அடுத்து, நீதிமன்றம் கூறிய உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி உரிய சட்டதிருத்தங்கள்கொண்டு வரப்படும் என்று நம்புவதாக இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அமர்வு கூறியுள்ளது.

3. காவல்துறையில் 134 பேருக்கு அண்ணா பதக்கங்கள்: முக ஸ்டாலின் அறிவிப்பு

காவல் துறையில் 134 பேருக்கு நடப்பாண்டில் அண்ணா பதக்கங்கள் அளிக்கப்படும் என முதல்வர் முகஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு, சிறைத்துறை, ஊர்க்காவல், விரல்ரேகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களைப்பாராட்டும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்.15’இல் அண்ணா பிறந்த தினத்தின் போது முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள், தீயணைப்புத் துறையில் எட்டு பேர், சிறைத் துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகைப் பிரிவில் 2 பேர், தடய அறிவியல் துறையில் 2 பேருக்கும் பதக்கங்கள் அளிக்கப்படும். மேலும், மதுரையில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்தில் நடந்த விபத்தில் தீயை அணைக்கப் போராடி உயிரைத் தியாகம் செய்த ஏழு தீயணைப்பு வீரர்களுக்கும் அண்ணா பதக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.

மொத்தமாக 134 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இந்தப் பதக்கங்கள் வேறொரு நாளில் அளிக்கப்படும்.

3. ‘சன்சத் தொலைக்காட்சி’ இன்று தொடக்கம்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ‘சன்சத்’ தொலைக்காட்சியை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து தொடக்கி வைக்கின்றனர். சர்வதேச ஜனநாயக தினமான செப்.15’இல் இந்த தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கூட்டத்தொடர் நடைபெறும்போது மக்களவை நடவடிக்கைகளை ‘லோக் சபா’ தொலைக்காட்சியும், மாநிலங்களவை நடவடிக்கைகளை ‘ராஜ்ய சபா’ தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பிவருகின்றன. அத்தொலை -க்காட்சிகளை ஒன்றாக இணைத்து ‘சன்சத்’ என்ற பெயரில் ஒரே தொ -லைக்காட்சியாக மாற்ற மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் முடிவெடுத்தது.

அதன்படி இப்போது சன்சத் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாகத்தொடக்கி வைக்கப்படுகிறது. இதன்மூலமாக மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகளை மக்கள் நேரடியாக அறிந்துகொள்ளமுடியும். இதுதவிர மற்ற நாள்களில் நாட்டின் ஜனநாயக அமைப்புகள், அரசு நிர்வாகம், திட்டங்கள், கொள்கைகள் அமல்படுத்தப்படும் விதம், இந்தியாவின் கலாசாரம், வரலாற்றுத் தொன்மை, நாட்டுநலன்சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. யுஎஸ் ஓபன்: சக்கர நாற்காலியில் இரு சாதனையாளர்கள்: ‘கோல்டன் ஸ்லாம்’ பெற்றனர் குரூட், அல்காட்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் சாதனை படைப்பாரா என சர்வதேச விளையாட்டு ரசிகர்களும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்த நிலையில், அதே யுஎஸ் ஓபனில் சத்தமின்றி இருவர் சக்கரநாற்காலியில் இருந்தபடியே சாதனை படைத்திருக்கிறார்கள்.

US ஓபன் போட்டியில் ஆடவர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளுடன், ஜூனியர் பிரிவு போட்டிகளும், சக்கர நாற்காலியுட -ன் விளையாடும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளும் நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த முறை சக்கரநாற்காலி வீரர், வீராங்க
-னைகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில் மகளிர்பிரிவில் நெதர்லாந்தின் டைடே டி குரூட் (24), ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் டைலன் அல்காட் (30) சாம்பியனாகியுள்ளனர். சிறப்பு என்னவென்றால், இவர்கள் இருவமே இந்த சாம்பியன்ஷிப் பட்டம்மூலம் ‘கோல்டன் ஸ்லாம்’ சாதனையை எட்டியிருக்கிறார்கள்.

ஒரே டென்னிஸ் காலண்டரில் வரும் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியனாகி, அதே ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் சாம்பியன் ஆவதே ‘கோல்டன் ஸ்லாம்’ எனப்படுகிறது.

குரூட் மற்றும் அல்காட் இருவருமே தற்போது அத்தகைய சாதனையை எட்டியிருக்கிறார்கள். நடப்பு காலண்டரில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் கோப்பை வென்றிருந்த இருவரும், பின்னர் டோக்கியோ பாராலிம்பிக்கிலும் தங்கம் வென்றிருந்த -னர். கடைசியாக தற்போது நடைபெற்ற யுஎஸ் ஓபனில் இருவருமே சாம்பியனாகி கோல்டன் ஸ்லாம் மைல் கல்லை எட்டியிருக்கிறார்கள்.

இதில் சக்கரநாற்காலி போட்டியாளர்களில் ‘கோல்டன் ஸ்லாம்’ வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை குரூட் எட்ட, அவரைத் தொடர்ந்து அல்காட்டும் அதே சாதனையை படைத்தார்.

கிராண்ட்ஸ்லாமில் இதுவரை சாம்பியன் பட்டம்

டைடே டி குரூட்

ஆஸ்திரேலிய ஓபன் – 2018, 2019, 2021

பிரெஞ்சு ஓபன் – 2019, 2021

விம்பிள்டன் – 2017, 2018, 2021

US ஓபன் – 2018, 2019, 2020, 2021 (இரட்டையர் பிரிவில் 12 பட்டங்கள்) (பாராலிம்பிக் – ஒரு வெள்ளி (2016), ஒரு தங்கம் (2021)

டைலன் அல்காட்

ஆஸ்திரேலிய ஓபன் – 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021

பிரெஞ்சு ஓபன் – 2019, 2020, 2021

விம்பிள்டன் – 2019, 2021

US ஓபன் – 2015, 2018, 2021 (இரட்டையர் பிரிவில் 8 பட்டங்கள்) (பாராலிம்பிக் – இரு தங்கம் (2016, 2021)

5. ஓய்வு பெற்றார் மலிங்கா

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா (38), அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

வேகப்பந்துவீச்சாளரான அவர், உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மிரளும் வகையில் யார்க்கர் பந்துகள் வீசுவதில் வல்லவராக இருந்தார். ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒன்டே கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றிருந்த மலிங்கா, தற்போது டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2004 ஜூலைமாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்மூலம் களம்கண்ட மலிங்கா, கடைசியாக 2020 மார்ச்சில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான T20 தொடரில் விளையாடி -யிருந்தார். IPL கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார்.

1. With which country, Tamil Nadu has partnered to create an energy island in the Gulf of Mannar?

A) Germany

B) Denmark 

C) Japan

D) South Korea

  • Tamil Nadu and Denmark have planned to create an energy island in Gulf of Mannar that lies between the west coast of Sri Lanka and south–eastern tip of India. This plan was made as Tamil Nadu is looking to expand its footprint in the green energy sector.
  • To achieve this target, Denmark is likely to invest $5–10 billion in the renewable energy sector in the state. It also includes investment for an energy island in the Gulf of Mannar. With this investment, island would be able to produce 4–10 GW of energy.

2. Indian government and the Asian Development Bank have signed a 300–million–dollar loan to expand rural connectivity in which state?

A) Assam

B) Maharashtra 

C) Odisha

D) Jharkhand

  • The Asian Development Bank and the Government of India has signed a $300 million loan as additional financing to scale up improvement of rural connectivity to help boost rural economy in the state of Maharashtra. The additional financing for the ongoing Maharashtra Rural Connectivity Improvement Project will help improve an additional 1,100 rural roads and 230 bridges.

3. Which Indian airport has won the prestigious awards of CII National Energy Leader and Excellent Energy Efficient Unit?

A) Netaji Subhash Chandra Bose International Airport

B) Delhi International Airport Limited 

C) Chennai International Airport Limited

D) Sardar Vallabhbhai Patel International Airport

  • Delhi International Airport Limited (DIAL) has won the prestigious awards of CII ‘National Energy Leader’ and ‘Excellent Energy Efficient Unit’ at the 22nd National Award ceremony for ‘Excellence in Energy Management’ organised by the Confederation of Indian Industry (CII).

4. With which organization, Indian Renewable Energy Development Agency Ltd has signed a MoU for Renewable energy development projects?

A) Tamil Nadu Generation & Distribution Corporation Limited 

B) Gujarat State Electricity Corporation Limited

C) West Bengal State Electricity Distribution Corporation Limited

D) South Bihar Power Distribution Company Limited

  • The Indian Renewable Energy Development Agency Ltd. (IREDA) has signed a MoU with Tamil Nadu Generation & Distribution Corporation Limited (TANGEDCO).
  • Under the MoU, IREDA will extend technical expertise & support to TANGEDCO for Renewable energy project development, to bid process management, and provide implementation support. IREDA will also assist TANGEDCO in debt raising by developing financial models, assistance in the understanding market instrument, underwriting services for the proposed debt requirement, conducting pre–market surveys, and road shows to evoke interest amongst potential investors.

5. Which institution recently launched a two–day ‘Lunar Science Workshop 2021’?

A) ISRO 

B) NASA

C) IISc

D) Birla Planetarium

  • The Indian Space Research Organisation (ISRO) opened a two–day Lunar Science Workshop 2021, to commemorate the completion of two years of operation of Chandrayaan–2 spacecraft around the lunar orbit. Chandrayaan–2 has completed more than 9,000 orbits around the Moon. The imaging and scientific instruments on board have been relaying the required data.
  • ISRO Chairperson also released the documents based on data from Chandrayaan–2, along with data from spacecraft’s orbiter payloads.

6. Which date in September is celebrated as Himalayan Diwas?

A) September 9 

B) September 10

C) September 11

D) September 12

  • The National Mission for Clean Ganga organised Himalayan Diwas in association with Naula Foundation on September 9, 2021. This year’s theme is ‘Contribution of Himalayas and our responsibilities’. Himalaya Diwas is celebrated every year on 9th September in the state of Uttarakhand. It is celebrated with the aim to conserve Himalayan ecosystem and region. It was officially declared as Himalaya Day in 2015 by the then Chief Minister.

7. With which country, India has partnered to launch Centre of Excellence on Offshore Wind?

A) Canada

B) France

C) Denmark 

D) Japan

  • Union Minister for Power and New & Renewable Energy, RK Singh met Minister for Climate, Energy & Utilities of Denmark, Dan Jorgensen in New Delhi. It was highlighted that energy transition towards green is an important part of India’s policy. India has set a target of 450 Giga Watt of Renewable Energy capacity by 2030.
  • Currently, India’s whole renewable energy portfolio is at 146 GW. India is also looking towards making Ladakh, Andaman Nicobar Island and Lakshadweep Island green in energy and transport. Both the ministers jointly launched ‘Centre of Excellence on Offshore Wind’ under the Green Strategic Partnership.

8. Which ministry has launched Swachh Survekshan Grameen 2021?

A) Ministry of Housing and Urban Affairs

B) Ministry of Rural Development

C) Ministry of Minority Affairs

D) Ministry of Jal Shakti 

  • Minister of State of Jal Shakti Ministry, Shri Prahlad Singh Patel, launched the “Swachh Survekshan Grameen 2021” under Swachh Bharat Mission (Grameen) Phase–II.
  • It was launched at an event organized by Department of Drinking Water and Sanitation (DDWS) on September 9, 2021. Swachh Survekshan Grameen 2021 will be undertaken by the Department of Drinking Water and Sanitation (DDWS) across the country.

9. Who has won Women’s Prize for Fiction for the fantasy novel Piranesi?

A) JK Rowling

B) Susanna Clarke 

C) Sudha Murty

D) Michelle Obama

  • British writer Susanna Clarke won the prestigious Women’s Prize for Fiction for her mind–tweaking fantasy novel ‘Piranesi’. Clarke, 61, was awarded the 30,000 pounds ($41,000) prize for her novel.

10. Which date in September is observed as World Suicide Prevention Day?

A) September 11

B) September 10 

C) September 9

D) September 12

  • World Suicide Prevention Day is observed annually on September 10. The theme this year is “Creating hope through action.” World Suicide Prevention Day is an awareness day observed on 10 September every year, in order to provide worldwide commitment and action to prevent suicides. World Suicide Prevention Day is organised by the International Association for Suicide Prevention.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!