TnpscTnpsc Current Affairs

16th & 17th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

16th & 17th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th & 17th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘மிஷன் சக்தி’ திட்டத்தைச் செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

  • ‘மிஷன் சக்தி’ திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்களை நடுவண் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மகளிரின் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைந்த ஒரு திட்டமாக பதினைந்தாவது நிதி ஆணையத்தின் காலமான 2021-2022 முதல் 2025-26இல் செயல்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. ‘மிஷன் சக்தி’ திட்டம் ‘சம்பால்’ மற்றும் ‘சாமர்த்தியா’ என இரண்டு துணைத் திட்டங்களைக் கொண்டுள்ளது.

2. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பைப் பதிவுசெய்துள்ள மாநிலம்/UT எது?

அ. உத்தரப்பிரதேசம்

ஆ. கேரளா 

இ. சிக்கிம்

ஈ. பஞ்சாப்

  • இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு கேரள மாநிலத்தில் முதன்முறையாக பதிவாகியுள்ளது. புனேவில் உள்ள தேசிய தீநுண்மவியல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட 35 வயது ஆணின் மாதிரி பரிசோதனையில் நோய் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்நபர் 3 நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை என்பது வைரஸ்மூலம் பரவும் ஒரு நோயாகும். இது பெரியம்மை போன்றது.

3. 2022 ஜூனில் அகில இந்திய மொத்த விலைக்குறியீட்டின் அடிப்படையில் பணவீக்க விகிதம் என்ன?

அ. 11.18%

ஆ. 13.18%

இ. 15.18% 

ஈ. 17.18%

  • 2022ஆம் ஆண்டு ஜூன் (2021 ஜூனுக்குப்பிறகு) மாதத்திற்கான அகில இந்திய மொத்த விலைக்குறியீட்டெண்ணின் அடிப்படையில் பணவீக்க விகிதம் 15.18% ஆகும். இது 2022 மேயில் உள்ள WPI சதவீதமான 15.88%-ஐவிடக் குறைவு. இந்த மாதத்தில் ஏற்பட்டுள்ள அதிக பணவீக்க விகிதம் கனிம எண்ணெய்கள், உணவுப்பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், வேதிகள் மற்றும் வேதிப்பொருட்கள், உணவு ஆகியவற்றின் விலை உயர்வுகாரணமாக உள்ளது.

4. மாநில மற்றும் ஒன்றிய வரிகள் மற்றும் தீர்வைகள் தள்ளுபடி (RoSCTL) திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 

ஈ. நிதி அமைச்சகம்

  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது மாநில மற்றும் ஒன்றிய வரிகள் மற்றும் தீர்வைகள் (RoSCTL) தள்ளுபடிக்கான திட்டத்தைத் தொடர்வதற்கு, ஜவுளி அமைச்சகம் அறிவித்த அதே விகிதங்களுடன், ஆடைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு 2024 மார்ச்.31 வரை அங்கீகாரம் அளித்துள்ளது. ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் ஜவுளித் தொழிலில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. டைம் இதழின், ‘2022-இன் உலகின் 50 சிறந்த இடங்கள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா 

ஈ. இராஜஸ்தான்

  • ‘கடவுளின் சொந்த நாடு’ என்றழைக்கப்படும் கேரளா, டைம் இதழின், “2022ஆம் ஆண்டின் உலகின் 50 சிறந்த இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. டைம், கேரளாவை இந்தியாவின் மிகவழகான மாநிலங்களுள் ஒன்று என விவரித்துள்ளது. இந்தியாவின் முதல் UNESCO உலகப் பாரம்பரிய நகரமான ஆமதாபாத், 2022ஆம் ஆண்டின் உலகின் 50 சிறந்த இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

6. இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரிய மின்னுற்பத்தி ஆலை செயல்படுத்தப்பட்ட இடம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா 

இ. இராஜஸ்தான்

ஈ. மேகாலயா

  • இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரிய மின்னுற்பத்தி ஆலை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமகுண்டத்தில் முழுமையாக செயல்படத்தொடங்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் இராமகுண்டத்தில் உள்ள 100 MW ராமகுண்டம் மிதவை சூரிய மின்னுற்பத்தி ஆலையின் இறுதிக்கட்டத்தை NTPC வணிக ரீதியாக இயக்குவதாக அறிவித்தது. இத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன்மூலம், தென் பிராந்தியத்தில் மிதவை சூரிய மின்னுற்பத்தி ஆலைகளின் மொத்த உற்பத்தி 217 MWஆக உயர்ந்தது. முன்னதாக, காயங்குளம் (கேரளா) மற்றும் சிம்மாத்திரி (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் மிதவை சூரிய மின்னுற்பத்தி ஆலைகள் செயல்படுவதை NTPC அறிவித்தது.

7. 2022 நிலவரப்படி, இந்தியாவின் அரசுத் தலைமை வழக்கறிஞர் யார்?

அ. K K வேணுகோபால் 

ஆ. முகுல் ரோகத்கி

இ. துஷார் மேத்தா

ஈ. கபில் சிபல்

  • நடுவண் சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்திய அரசுத்தலைமை வழக்கறிஞர் K K வேணு கோபாலின் பதவிக்காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து நடுவணரசு உத்தரவிட்டுள்ளது. 91 வயதான வேணு கோபால், இந்திய அரசுத்தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றும் 15ஆவது நபராக, 2017 ஜூலை.1ஆம் தேதியன்று நியமிக்கப்பட்டார். 2014 ஜூன் முதல் 2017 ஜூன் வரை இந்திய அரசுத்தலைமை வழக்கறிஞராக முகுல் ரோகத்கி இருந்தார்.

8. மெர்சரின் 2022ஆம் ஆண்டுக்கான, நகரங்களில் வாழ்க்கைச்செலவினம் குறித்த தரவரிசையின்படி, அயல்நாட்டு ஊழியர்களுக்கு இந்தியாவில் மிகவும் செலவுமிகு நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. மும்பை 

இ. பெங்களூரு

ஈ. சென்னை

  • மெர்சரின் 2022ஆம் ஆண்டுக்கான, நகரங்களில் வாழ்க்கைச்செலவினம் குறித்த தரவரிசையின்படி, அயல்நாட்டு ஊழியர்களுக்கு இந்தியாவில் மிகவும் செலவுமிகுந்த நகரமாக மும்பை உலகளவில் 127ஆவது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து புது தில்லி 155ஆவது இடத்தில் உள்ளது. புனே மற்றும் கொல்கத்தா ஆகியவை முறையே 201 மற்றும் 203 ஆகிய இடங்களில் உள்ளன.

9. பாஷ் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் வளாகத்தை, பிரதமர் மோடி, கீழ்க்காணும் எந்த நகரத்தில் திறந்து வைத்தார்?

அ. சென்னை

ஆ. பெங்களூரு 

இ. நொய்டா

ஈ. ஹைதராபாத்

  • 800 கோடி செலவில் கட்டப்பட்ட பெங்களூரு நகரத்தில், பாஷ் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தியா மற்றும் உலகத்திற்கான எதிர்கால தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்க இவ்வளாகம் பயன்படுத்தப்படும். பாஷ் இந்தியாவின் ‘Spark.NXT’ வளாகத்தின் திறப்பு விழா இந்திய விடுதலையின் 75ஆவது ஆண்டு விழாவுடன் ஒத்திணைந்து வருகிறது.

10. 2022-இல் இந்திய ஒலிம்பிக் சங்கம் நடத்தும் தேசிய விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் மாநிலம் எது?

அ. கோவா

ஆ. உத்தரகாண்ட்

இ. குஜராத் 

ஈ. சிக்கிம்

  • இந்த ஆண்டு செப்-அக் மாதங்களில், குஜராத்தின் பல நகரங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) அறிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடந்த தேசிய விளையாட்டுப்போட்டிகள் 2016ஆம் ஆண்டு நவம்பரில் கோவாவில் நடைபெறவிருந்தன. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டின் காலதாமதங்களுக்குப்பிறகு, கோவாவால் போதுமான உட்கட்டமைப்புகளை உருவாக்க முடியவில்லை. எனவே விளையாட்டுகள் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. தேசிய விளையாட்டுகள் காரணமாக மேலும் அது ஒத்திவைக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய தரவரிசை: சென்னை ஐஐடி நான்காவது ஆண்டாக முதலிடம்

தேசிய அளவிலான ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து நான்காவது ஆண்டாக 2022-ஆம் ஆண்டிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாமிடமும், மும்பை ஐஐடி மூன்றாமிடமும் பிடித்துள்ளன.

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் சர்வதேச அளவிலான தரத்தைப் பெறுவதையும், சர்வதேச அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசைகளில் முன்னிலை வகிப்பதையும் ஊக்குவிக்கும் வகையில், தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசை திட்டம் (NIRF) என்ற நடைமுறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2015-ஆம் ஆண்டு செப்.29-ஆம் தேதி அறிமுகஞ்செய்து, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

கற்றல் – கற்பித்தல் மற்றும் அதற்கான வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில் பயிற்சி மேம்பாடு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்கள் அளவிலான தரவரிசை, பல்கலைக்கழகங்கள் அளவிலான தரவரிசை, கல்லூரிகள் அளவிலான தரவரிசை, ஆராய்ச்சி நிறுவனங்கள் அளவிலான தரவரிசை, பொறியியல் கல்லூரிகள் அளவிலான தரவரிசை மற்றும் மேலாண்மை, மருந்தாளுநா் கல்வி நிறுவனம், மருத்துவக் கல்வி நிறுவனம், பல் மருத்துவக் கல்வி நிறுவனம், சட்டம் மற்றும் வேளாண் கல்வி நிறுவனங்கள் அளவில் என 11 பிரிவுகளின் கீழ் தரவரிசைப் பட்டியல்களை என்ஐஆர் ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

2022-ஆம் ஆண்டுக்கான இந்தத் தரவரிசைப் பட்டியல்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

இதில், ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்கள் அளவில் சென்னை ஐஐடி நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, கான்பூர் ஐஐடி, காரக்பூர் ஐஐடி, ரூர்கி ஐஐடி, கௌகாத்தி ஐஐடி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இதில் தில்லி எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) 9-ஆவது இடத்தையும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியல்களில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது.

பொறியியல் கல்வி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியலில் சென்னை, மும்பை, கான்பூர், காரக்பூர், ரூர்கி, கௌகாத்தி, ஹைதராபாத் ஐஐடிக்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் கடந்த முறை 9-ஆம் இடம் பிடித்த திருச்சி என்ஐடி, இம்முறை 8-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சூரத்கல் என்ஐடி தொடர்ந்து 10-ஆவது இடம்வகிக்கிறது.

சென்னை மாநிலக்கல்லூரிக்கு மூன்றாமிடம்: கல்லூரிகள் அளவிலான தரவரிசைப் பட்டியலைப் பொருத்தவரை தில்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த முறை 9-ஆம் இடம்பிடித்திருந்த தில்லி ஹிந்து கல்லூரி, இம்முறை 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த முறை 7-ஆவது இடம் பிடித்திருந்த சென்னை மாநிலக்கல்லூரி இம்முறை 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த முறை 3-ஆவது இடத்திலிருந்து சென்னை லயோலா கல்லூரி, தற்போது 4-ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. அதுபோல, கடந்த முறை 2ஆம் இடம்பிடித்திருந்த தில்லி லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி இம்முறை 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அகமதாபாத் ஐஐஎம், மருத்துவக்கல்வி நிறுவனங்கள் பட்டியில் தில்லி எய்ம்ஸ், பல்மருத்துவக்கல்லூரி தரவரிசைப் பட்டியலில் சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் ஆகியவை முதலிடங்களைப் பிடித்துள்ளன.

2. தேசிய மின்னாளுகை சேவை மதிப்பீடு: உள்துறை அமைச்சகத்திற்கு முதலிடம்

தேசிய மின்னாளுகை சேவைக்கான மதிப்பீட்டில், மத்திய அமைச்சக இணையதளங்களில் உள்துறை விவகார அமைச்சக இணையதளம் சிறப்பாக அமைக்கப்பட்டு முதலிடத்தை பெற்றுள்ளதாக மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், உள்துறை அமைச்சகத்திற்கு கீழேயுள்ள எண்ம (டிஜிட்டல்) காவல் தளத்திற்கு இரண்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. SCO அமைப்பின் கலாசார, சுற்றுலா தலைநகரம் வாராணசி

இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வாராணசி நகரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கலாசார மற்றும் சுற்றுலாத்தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஜங் மிங், பெய்ஜிங்கில் கூறியதாவது:

SCO அமைப்பின் 2022-23ஆம் ஆண்டுக்கான கலாசார, சுற்றுலாத்தலைநகராக வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் நகரங்கள் சுழற்சி முறையில் சுற்றுலாத்தலைநகரமாக அறிவிக்கப்படும். அந்த வரிசையில் முதலாவது சுற்றுலாத் தலைநகரமாக இந்தியாவின் பழைமையான நகரங்களில் ஒன்றான வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது.

SCO நாடுகளின் தலைவர்கள் மாநாடு, வரும் செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டுக்குப் பிறகு SCO அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் மாநாட்டையும் இந்தியா தலைமையேற்று நடத்தும் என்றார் அவர்.

சீனாவின் பெய்ஜிங் நகரைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

1. Which Union Ministry implements the ‘Mission Shakti’ scheme’?

A. Ministry of Women and Child Development 

B. Ministry of Defence

C. Ministry of External Affairs

D. Ministry of MSME

  • Ministry of Women and Child Development has issued detailed guidelines for ‘Mission Shakti’ scheme. ‘Mission Shakti’ was launched as an integrated women empowerment programme as umbrella scheme for the safety, security and empowerment of women for implementation during the 15th Finance Commission period 202l–22 to 2025–26. ‘Mission Shakti’ has two sub–schemes – ‘Sambal’ and ‘Samarthya’.

2. India reported its first monkeypox case in which state/UT?

A. Uttar Pradesh

B. Kerala 

C. Sikkim

D. Punjab

  • India reported its first monkey–pox case in the state of Kerala. The sample of a 35–year–old man, which was sent to the National Virology Institute in Pune, tested positive for the disease. The man is said to have arrived in Kerala from the UAE three days ago. Monkeypox is a viral zoonotic disease with symptoms similar to smallpox.

3. What is the rate of inflation based on All–India Wholesale Price Index in June 2022?

A. 11.18%

B. 13.18%

C. 15.18% 

D. 17.18%

  • The rate of inflation based on All–India Wholesale Price Index (WPI) number is 15.18% for the month of June, 2022 (over June, 2021). This is lower than the WPI number of 15.88% in May 2022. The high rate of inflation this month is primarily due to rise in prices of mineral oils, food articles, crude petroleum & natural gas, basic metals, chemicals & chemical products, food products etc.

4. Rebate of State and Central Taxes and Levies (RoSCTL) Scheme is associated with which Union Ministry?

A. Ministry of External Affairs

B. Ministry of MSME

C. Ministry of Commerce and Industry

D. Ministry of Finance

  • The Ministry of Commerce and Industry authorised the continuation of the Scheme for Rebate of State and Central Taxes and Levies (RoSCTL) with the same rates as announced by the Ministry of Textiles for exports of apparel and made–ups until March 31, 2024. This aims to increase exports and generate employment in the textile industry.

5. Which Indian state is included in the ‘World’s 50 Greatest Places of 2022’ by Time Magazine?

A. Tamil Nadu

B. Karnataka

C. Kerala 

D. Rajasthan

  • Kerala, also called as ‘God’s own country’, has been included in the list of the “World’s 50 Greatest Places of 2022” by Time Magazine. TIME has described Kerala as ‘one of India’s most beautiful states. India’s first UNESCO World Heritage City, Ahmedabad has also been included in the list of the World’s 50 Greatest Places of 2022.

6. Where is India’s largest floating Solar Power Project operationalised recently?

A. Tamil Nadu

B. Telangana 

C. Rajasthan

D. Meghalaya

  • India’s largest floating Solar Power Project is made fully operational at Ramagundam, Telangana. NTPC declared Commercial Operation of the final part capacity out of 100 MW Ramagundam Floating Solar PV Project at Ramagundam, Telangana with the operationalisation the project, the total commercial operation of Floating Solar Capacity in Southern Region rose to 217 MW. Earlier, NTPC declared operation of Floating Solar at Kayamkulam (Kerala) and at Simhadri (Andhra Pradesh).

7. Who is the Attorney General of India, as of 2022?

A. KK Venugopal 

B. Mukul Rohatgi

C. Tushar Mehta

D. Kapil Sibal

  • The Union government extended the tenure of Attorney General KK Venugopal by three months, as per the notification issued by the Union Law Ministry. Venugopal, 91, was initially appointed as Attorney General on July 1, 2017, as the 15th person to serve as Attorney General for India. Mukul Rohatgi was the Attorney General from June 2014 to June 2017.

8. Which is the most expensive city in India for foreign employees as per Mercer’s 2022 cost of living city ranking?

A. New Delhi

B. Mumbai 

C. Bengaluru

D. Chennai

  • The Mercer’s 2022 cost of living city ranking was recently released with the list of the most expensive cities for international employees. Mumbai is the most expensive city in India for foreign employees, at rank 127 globally. It is followed by New Delhi at rank 155. Pune and Kolkata are the least expensive Indian cities in the ranking at 201 and 203 respectively.

9. Prime Minister Narendra Modi inaugurated Bosch India’s first smart campus in which city?

A. Chennai

B. Bengaluru 

C. Noida

D. Hyderabad

  • Prime Minister Narendra Modi virtually inaugurated Bosch India’s first smart campus in the city of Bengaluru built at a cost of Rs 800 crore. This campus will be used in developing futuristic products and solutions for India and for the world. The inauguration of the Spark.NXT Campus of Bosch India coincided with the 75th anniversary of Indian independence.

10. Which state is the host of the National Games conducted by Indian Olympic Association in 2022?

A. Goa

B. Uttarakhand

C. Gujarat 

D. Sikkim

  • The Indian Olympic Association (IOA) announced that the National Games will be held in multiple cities in Gujarat in September–October this year. The last National Games were held in Kerala in 2015 and Goa was to host the 36th edition in November 2016. After two delays in 2018 and 2019 as Goa was not able to create adequate infrastructure, the Games were further postponed to 2020. It was further postponed due to National Games.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!