TnpscTnpsc Current Affairs

16th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

16th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 16th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. இந்திய நீர் விளைவு உச்சிமாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. புது தில்லி

இ. பெங்களூரு

ஈ. ஜெய்ப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், புது தில்லியில் இந்திய நீர் விளைவு உச்சிமாநாட்டின் 7ஆவது பதிப்பை தொடக்கிவைத்தார். “Restoration and Conservation of Small Rivers in a Large Basin” என்பது இந்த ஆண்டு நடைபெறும் உச்சிமாநாட்டிற்கானக் கருப்பொருளாகும். ‘5P–க்களை – People (மக்கள்), Policy (கொள்கை), Plan (வரைவு), Programme (திட்டநிரல்) மற்றும் Project (திட்டம்) வரைபடமாக்குதல் மற்றும் ஒருங்கிணைத்தலின் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.

2. கிருஷி–தீர்மான ஆதரவு அமைப்பை (கிருஷி–DSS) உருவாக்குவதற்காக கீழ்க்காணும் எந்தத் துறையுடன் வேளாண் அமைச்சகம் கூட்டிணைந்துள்ளது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

ஆ. விண்வெளித் துறை

இ. வணிகவியல் துறை

ஈ. இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. விண்வெளித் துறை

  • வேளாண் அமைச்சகமும் விண்வெளித் துறையும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி கிருஷி–தீர்மான ஆதரவு அமைப்பை (கிருஷி–DSS) உருவாக்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது விண்வெளித் துறையின், ‘RISAT–1A’ மற்றும் ‘VEDAS’ ஆகியவற்றைப் பயன்படுத்தி செயல்படும் ஒரு தீர்மான ஆதரவமைப்பாகும். வேளாண் துறையிலுள்ள அனைவரும் ஆதார அடிப்படையில் தீர்மானிப்பதை மேம்படுத்துதற்கு புவிசார் தொழில்நுட்பங்கள் மற்றும் அது தொடர்புடைய தரவுத்தளங்களை இது பயன்படுத்துகிறது.

3. இந்திய தலைமை நீதியரசர் D Y சந்திரசூட் அவர்கள் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் பத்து மாவட்ட நீதிமன்ற எண்ணிமப்படுத்தல் மையங்களைத் திறந்து வைத்தார்?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. ஒடிஸா

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஒடிஸா

  • இந்திய தலைமை நீதிபதி D Y சந்திரசூட் ஒடிஸா மாநிலத்தில் பத்து மாவட்ட நீதிமன்ற எண்ணிமப்படுத்தல் மையங்களை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார். இதன்மூலம், ஒடிஸாவில் 30 மாவட்ட நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய மொத்தம் பதினைந்து மாவட்ட நீதிமன்ற எண்ணிமப்படுத்தல் மையங்கள் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளன. தொடக்கத்தில், கட்டாக், கஞ்சம், சம்பல்பூர் மற்றும் பாலசோர் ஆகிய இடங்களில் நான்கு மாவட்ட நீதிமன்ற எண்ணிமப்படுத்தல் மையங்கள் மட்டும் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டன.

4. உள்ளார்ந்த சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ‘Airbnb’ ஆனது கீழ்க்காணும் எந்த மாநில அரசாங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. கேரளா

ஆ. கோவா

இ. சிக்கிம்

ஈ. பஞ்சாப்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கோவா

  • Airbnb ஆனது சமீபத்தில் கோவா சுற்றுலாத் துறையுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, உள்ளார்ந்த சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தமாக்கும் இது. கோவா மாநிலத்தின் பரந்துபட்ட கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் 1 வார காலம் நீளும், ‘ரீடிஸ்கவர் கோவா’வின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின் ஒரு பகுதியாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது கோவாவை உள்ளூர் / வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடையே மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக மாற்ற விழைகிறது.

5. பேப்பூர் உரு என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முதன்மை தயாரிப்பாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கேரளா

  • கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் புகழ்பெற்ற பேப்பூர் உருவிற்கு (படகு) புவிசார் குறியீடு (GI) பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளது. இது கேரள மாநிலத்தின் பேப்பூரில் உள்ள திறன்மிகு கைவினைஞர்கள் மற்றும் தச்சர்களால் கையால் செய்யப்படுகிற ஒரு மரக்கலம் அல்லது பாய்மரக்கலமாகும். பேப்பூர் படகுகள் கேரள மாநிலத்திற்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையில் இருக்கும் வர்த்தக உறவுகள் மற்றும் நட்பின் அடையாளமாக திகழ்கிறது.

6. SEBIஆல் அண்மையில் உருவாக்கப்பட்ட FPI ஆலோசனைக் குழுமத்தின் தலைவர் யார்?

அ. அஜை தியாகி

ஆ. S C கார்க்

இ. ஹஸ்முக் அதியா

ஈ. மாதபி பூரி புச்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஹஸ்முக் அதியா

  • இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (SEBI) முன்னாள் நிதிச் செயலாளர் ஹஸ்முக் அதியா தலைமையில் பதினாறுபேர்கொண்ட FPI ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இதில் ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் துணை ஆளுநர் H R கான் மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் R சுப்ரமணியன் ஆகியோரும் இடம்பெறுவார்கள். கையகப்படுத்துதல் விதிமுறைகளை மறுஆய்வு செய்வதற்கான இருபதுபேர்கொண்ட மற்றொரு குழு ஓய்வுபெற்ற நீதியரசர் ஷியாவக்ஸ் ஜல் வசிப்தார் தலைமையில் செயல்படும். சமூக பங்குச் சந்தை (SSEs) ஆலோசனைக் குழுமமானது கிராஸ்ரூட்ஸ் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை இயக்கத்தின் (Graam) தலைவர் R பாலசுப்ரமணியம் தலைமையில் இருக்கும்.

7. ‘Re–Hab (Reducing Human Attacks using Honey Bees)’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

ஆ. காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்துறை ஆணையம்

இ. NITI ஆயோக்

ஈ. இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்துறை ஆணையம்

  • ‘Re–Hab (Reducing Human Attacks using Honey Bees)’ என்பது காதி & கிராமப்புறத் தொழிற்துறை ஆணையத்தின் (குறு, சிறு & நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம்) ஒரு முதன்மை திட்டமாகும். நைனிடால் மாவட்டத்தில் உள்ள சௌஸ்லா கிராமத்தில் KVIC தலைவர் மனோஜ் குமார் இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தார். காதி & கிராமப் புறத் தொழிற்துறைகள் ஆணையமானது (KVIC) நாட்டின் ஏழு மாநிலங்களில் அதாவது கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் ஒடிஸாவில் Re–Hab என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை நடத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கிச்செல்லும் பகுதிகளில் தேனீப் பெட்டிகள் கொண்டு வேலி அமைக்கப்படுகிறது.

8. உலக மருந்தாளுநர் நாள் அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ. ஜனவரி

ஆ. மார்ச்

இ. செப்டம்பர்

ஈ. டிசம்பர்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. செப்டம்பர்

  • மருந்தாளுநர்களின் பங்கை எடுத்துரைத்து, அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் செப்.25 அன்று உலக மருந்தாளுநர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Pharmacy united in action for a healthier world” என்பது 2022ஆம் ஆண்டில் வரும் உலக மருந்தாளுநர் நாளுக்கானக் கருப்பொருளாகும். இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு கவுன்சிலால் கடந்த 2009ஆம் ஆண்டில் இந்த நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1912ஆம் ஆண்டு இதே நாளில், சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.

9. முதுகலை பட்டப்படிப்புகளில் பயிலும் பெண்களுக்கு ஆண்டுக்கு `10,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. குஜராத்

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அஸ்ஸாம்

  • அஸ்ஸாம் மாநில அரசு, மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடரும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு `10,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இவ்வுதவித்தொகை மாணவிகளின் கல்வி மற்றும் அது தொடர்புடைய செலவுகளுக்கு உதவியாக இருக்கும்.

10. அண்மையில் UNESCOஇன் பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்ற பிரெஞ்சு உணவுப்பொருள் எது?

அ. குரோசண்ட்

ஆ. பாகுட்

இ. ரட்டடூயில்

ஈ. எஸ்கார்கோட்ஸ் டே போர்காக்னி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பாகுட்

  • பிரெஞ்சு உணவான பாகுட்டுக்கு அண்மையில் UNESCOஇன் “தொட்டறிய முடியாத கலாச்சார பாரம்பரிய அந்தஸ்து” வழங்கப்பட்டது. தேசிய பிரெஞ்சு அடுமனைகள் கூட்டமைப்பின்படி, பிரான்சில் ஒவ்வோராண்டும் 6 பில்லியனுக்கும் அதிகமான பாகுட்டுகள் சுடப்படுகின்றன. இது மிருதுவான வெளிப்புறத்தையும் மென்மையான நடுப்புறத்தையும் கொண்ட ரொட்டியாகும். இது பிரெஞ்சு மக்களின் வாழ்க்கையில் ஓர் இன்றியமையாத பகுதியாக உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘அக்னி-5’ ஏவுகணை சோதனை வெற்றி!

அணுவாயுதத்தை தாங்கிச்செல்லும் திறன்கொண்ட ‘அக்னி-5’ பாலிஸ்டிக் எறிகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. அக்னி-5 ஏவுகணையானது 5,000 கிமீ தொலைவு வரை சென்று இலக்கைத் தாக்கக் கூடியதாகும். கடந்த ஜூன் மாதம் அக்னி-4 ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அது, 4,000 கிமீ தொலைவு வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன்கொண்டது.

2. சிறந்த மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் தமிழ்நாடு முதலிடம். 

ஆங்கில இதழான ‘இந்தியா டுடே’ வெளியிட்ட சிறந்த மாநிலங்கள் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. ‘இந்தியா டுடே’ ஆங்கில இதழ் ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் மாநிலங்களின் செயல்பாடுகுறித்து ‘ஸ்டேட் ஆப் தி ஸ்டேட்ஸ்’ என்ற பெயரில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொருளாதாரம், மருத்துவம், உழவு, கல்வி, உள்கட்டமைப்பு வசதி, சட்டம் ஒழுங்கு, சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளின்கீழ் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும்.

ஒட்டுமொத்தமாக சிறந்த செயல்பாடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் 2ஆம் இடத்திலும், கேரளா 3ஆம் இடத்திலும் உள்ளன.

16th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which city is the host of India Water Impact Summit (IWIS 2022)?

A. Varanasi

B. New Delhi

C. Bengaluru

D. Jaipur

Answer & Explanation

Answer: B. New Delhi

  • Union Minister for Jal Shakti Gajendra Singh Shekhawat inaugurated the 7th Edition of the India Water Impact Summit (IWIS) at New Delhi. The theme of this year’s Summit is ‘Restoration and Conservation of Small Rivers in a Large Basin’ with focus on the select aspects of ‘Mapping and Convergence of 5Ps’ – People, Policy, Plan, Programme and Project.

2. Ministry of Agriculture partnered with which department to develop Krishi–Decision Support System (Krishi–DSS)?

A. Department of Science and Technology

B. Department of Space

C. ‎ Department of Commerce

D. Indian Computer Emergency Response Team

Answer & Explanation

Answer: B. Department of Space

  • The Ministry of Agriculture and Department of Space signed a Memorandum of Understanding (MoU) to develop a Krishi–Decision Support System (Krishi–DSS) using satellite data. It is a decision support system using RISAT–1A and VEDAS of Department of Space.  It uses geospatial technologies and related databases for enhancing evidence–based decision making of all stakeholders in the agriculture sector.

3. Chief Justice of India D Y Chandrachud inaugurated 10 district court digitization hubs in which state?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Odisha

D. Kerala

Answer & Explanation

Answer: C. Odisha

  • Chief Justice of India D Y Chandrachud virtually inaugurated 10 district court digitisation hubs (DCDH) in Odisha. With this, a total of 15 DCDHs have now become functional in the state covering all 30 district courts. Initially, 4 District Court Digitization Centres (DCDCs) were set up on a pilot basis in Cuttack, Ganjam, Sambalpur and Balasore.

4. Airbnb signed MoU with which state government to promote inclusive tourism?

A. Kerala

B. Goa

C. Sikkim

D. Punjab

Answer & Explanation

Answer: B. Goa

  • Airbnb recently signed a Memorandum of Understanding (MoU) with the Goa Tourism Department, to promote inclusive tourism. The MoU was signed on the sidelines of the official launch of ‘Rediscover Goa’, a week–long celebration of Goa’s vast cultural diversity. The MoU seeks to make Goa as one of the most sought–after tourism destinations among local and foreign tourists.

5. Beypore Uru is a flagship product of which state?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. Gujarat

Answer & Explanation

Answer: B. Kerala

  • The Kozhikode District Tourism Promotion Council of Kerala has applied for a Geographical Indication (GI) tag for the famous Beypore Uru (boat). It is a wooden ship or a sailing vessel handcrafted by skilled artisans and carpenters in Beypore, Kerala. The Beypore boats are a symbol of Kerala’s trade relations and friendship with the Gulf countries.

6. Who is the head of the FPI Advisory Committee (FAC), recently formed by SEBI?

A. Ajay Tyagi

B. S C Karg

C. Hasmukh Adhia

D. Madhabi Puri Buch

Answer & Explanation

Answer: C. Hasmukh Adhia

  • The Securities and Exchange Board of India (SEBI) has set up a 16–member FPI Advisory Committee (FAC) chaired by Hasmukh Adhia, Former Finance Secretary. It will also include H R Khan, former deputy governor, RBI and R Subramanian, Executive Director, RBI. The 20–member committee on Review of Takeover Regulations will be headed by retired Justice Shiavax Jal Vazifdar. The social stock exchange (SSEs) advisory committee will be headed by R Balasubramaniam, Chairman, Grassroots Research and Advocacy Movement (Graam).

7. Which institution launched the ‘Re–Hab (Reducing Human Attacks using Honey Bees) Project’?

A. Ministry of Environment, Forest and Climate Change

B. Khadi and Village Industries Commission

C. NITI Aayog

D. Indian Council of Forestry Research and Education

Answer & Explanation

Answer: B. Khadi and Village Industries Commission

  • Re–Hab (Reducing Human Attacks using Honey Bees) is an ambitious project of Khadi and Village Industries Commission (Ministry of Micro, Small and Medium Enterprises). KVIC Chairman Manoj Kumar inaugurated the project at village Chausla in District Nainital.
  • Khadi & Village Industries Commission (KVIC) is running this project called Re–Hab in 7 states of the country, namely in Karnataka, Maharashtra, West Bengal, Assam and Orissa. Under this project, fencing of bee boxes is installed in such areas from where elephants move towards the human settlements.

8. ‘World Pharmacist Day’ is observed during which month?

A. January

B. March

C. September

D. December

Answer & Explanation

Answer: C. September

  • ‘World Pharmacist Day’ is observed on September 25, every year, to highlight the role of pharmacists and pay tribute to them. This year’s theme is ‘Pharmacy united in action for a healthier world’. The Day is introduced in 2009 by the International Pharmaceutical Federation (FIP) council in Istanbul. On the same day in 1912, the International Pharmaceutical Federation was established.

9. Which state launched a scheme to provide Rs 10,000 stipend per annum for females pursuing post–graduate programmes?

A. Tamil Nadu

B. Assam

C. Gujarat

D. Kerala

Answer & Explanation

Answer: B. Assam

  • Assam state government launched a scheme to provide stipend of Rs 10,000 per annum to female students pursuing post–graduate programmes in educational institutions of the State. This stipend would be helpful in covering their commutation and other related expenses of the students.

10. Which French food product has been recently awarded the UNESCO heritage status?

A. Croissant

B. Baguette

C. Ratatouille

D. Escargots de Bourgogne

Answer & Explanation

Answer: B. Baguette

  • The French baguette has been recently awarded the UNESCO “intangible cultural heritage status”. As per the National Federation of French Bakeries, more than six billion baguettes are baked every year in France. It is a bread with crusty exterior and soft middle and is an essential part of French life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!