TnpscTnpsc Current Affairs

16th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

16th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 குடியரசு நாளில் பங்கேற்ற எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி ‘பிரபலமான தேர்வு’ப் பிரிவில் ‘சிறந்ததென’ தேர்ந்தெடுக்கப்பட்டது?

அ) மகாராஷ்டிரா 

ஆ) அஸ்ஸாம்

இ) மேகாலயா

ஈ) உத்தர பிரதேசம்

  • ‘பிரபலமான தேர்வு’ப்பிரிவில் மகாராஷ்டிர மாநிலத்தின் அலங்கார ஊர்தி சிறந்ததென தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் அலங்கார ஊர்தியானது ‘மகாராஷ்டிராவின் பல்-உயிர் மற்றும் மாநிலத்தின் உயிரிச்சின்னங்கள்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
  • உத்தர பிரதேச மாநிலத்தின் அலங்கார ஊர்தி, ‘ODOP மற்றும் காசி விஸ்வநாத் தாம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக்கொண்டு, பன்னிரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறந்ததெனத் தேர்ந்தெடுக்கப்ப -ட்டது. மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், கடற்படையின் அணிவகுப்பு குழு மற்றும் CISF ஆகியவை அந்தந்தப் பிரிவுகளில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன.

2. ஆயிரம் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் அணி எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) இந்தியா 

இ) மேற்கிந்தியத் தீவுகள்

ஈ) இங்கிலாந்து

  • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின்போது 1000ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் அணி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்தது. இதற்கு முன்னர், இந்தியா, 999 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 518 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் 1000ஆவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்தார்.
  • இந்தியாவின் 100ஆவது ஒருநாள் போட்டியில் கபில்தேவ் கேப்டனாக இருந்தார். அதே சமயம் சௌரவ் கங்குலி இந்திய அணியின் 500ஆவது ஒருநாள் போட்டியில் கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலிய அணி 958 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. பாகிஸ்தான் அணி 936 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது.

3. JNU துணைவேந்தர் மமிதாலா ஜெகதேஷ் குமார், எந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) என்சிஇஆர்டி

ஆ) யுஜிசி 

இ) யுபிஎஸ்சி

ஈ) எஸ்எஸ்சி

  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) துணை வேந்தர் மமிதாலா ஜெகதேஷ் குமார் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • ஐந்து வருட காலத்திற்கு அல்லது அவருக்கு 65 வயதாகும் வரையில் அவர் இந்தப் பதவியில் இருப்பார் எனக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 1000 விரைவு மின்னேற்ற நிலையங்களை அமைக்க ஏதர் எனர்ஜி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா

இ) கேரளா

ஈ) கர்நாடகா 

  • கர்நாடகா மாநில அரசுக்கும் ஏதர் எனர்ஜிக்கும் இடையே மாநிலம் முழுவதும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு 1000 விரைவு மின்னேற்ற நிலையங்களை அமைப்பதற் -கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ஏதர் எனர்ஜி மற்றும் எலக்ட்ரிக் சப்ளை நிறுவனங்கள் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு ஏதர் நிறுவனம் இலவச மின்னேற்ற சேவைகளை வழங்கும்.

5. அண்மையில் எந்த உயிரினத்தை ‘அருகிவிட்ட இனம் – Endangered’ என ஆஸ்திரேலியா அறிவித்தது?

அ) பாண்டா கரடி

ஆ) கோலா கரடி 

இ) கங்காரு

ஈ) சோம்பல் கரடி

  • ஆஸ்திரேலியா அண்மையில் கோலாவை ‘அருகிவிட்ட இனம்’ என நியமித்துள்ளது. இது பத்து ஆண்டுகளுக்கு முன், ‘அழிவாய்ப்பிலுள்ள இனம்’ என வகைப்படுத்தப்பட்ட -து. நீடித்த வறட்சியின் தாக்கம், கோடைகால காட்டுத்தீ மற்றும் கடந்த 20 ஆண்டுகளில் நோய், நகரமயமாக்கல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்த தாக்கங்கள் இதற்கு காரணமாகியுள்ளன. இனிமேல், ஆஸ்திரேலியாவின் தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்கீழ் கோலா கரடிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்படும்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற ஒன் உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) பிரான்ஸ் 

இ) ரஷ்யா

ஈ) சீனா

  • ‘ஒன் ஓஷன் உச்சிமாநாடு’, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் பிரான்ஸால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘தேசிய அதிகாரவரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் பெருக்கத்தின் உயர் இலட்சியக்கூட்டணி’ என்ற பிரெஞ்சு முன்னெடுப்பை இந்தியா ஆதரித்தது.
  • இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழியை ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றார்.

7. பின்வரும் எக்கடலின் எல்லையில் பெலாரசு உள்ளது?

அ) பால்டிக் கடல்

ஆ) வட கடல்

இ) கருங்கடல்

ஈ) கடல் எல்லை இல்லை 

  • பெலாரஸ் என்பது கீழை ஐரோப்பிய பகுதியில் நிலத்தால் சூழப்பட்ட ஒருநாடாகும். இது கிழக்கு மற்றும் வடகிழக்கில் ரஷ்யா, தெற்கில் உக்ரைன், மேற்கில் போலந்து மற்றும் வடமேற்கில் லித்துவேனியா மற்றும் லத்துவியா ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது.
  • உக்ரைனுடனான பெலாருஷிய எல்லைக்கு அருகே ரஷ்யாவும் பெலாரஸும் கூட்டு இஇராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளன. ரஷ்யா, ஏற்கனவே உக்ரைனுடனான தனது சொந்த எல்லையிலும், இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திலும் படைகளைக் குவித்துள்ளது.

8. 2022-23ஆம் ஆண்டுக்கான அதிகாரபூர்வ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணவாட்ட சதவீதம் என்ன?

அ) 1.5-2%

ஆ) 3-3.5% 

இ) 4.5-5%

ஈ) 10%

  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், 2022-23ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பணவாட்ட முன்கணிப்பானது 3-3.5% ஆகும். GDP பணவாட்டி என்பது பணவீக்கத்தின் அளவீடு மற்றும் பெயரளவு GDP மற்றும் உண்மையான GDP ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசமாகும். மத்திய பட்ஜெட் 2022-23’க்கு பெயரளவு GDP வளர்ச்சி விகிதத்தை 11.1 சதவீதமாக கருதுகிறது.

9.சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற MUSE & HelioSwarm ஆகியவையுடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?

அ) இஸ்ரோ

ஆ) ஜாக்ஸா

இ) நாசா 

ஈ) இஎஸ்ஏ

  • Multi-slit Solar Explorer (MUSE) மற்றும் HelioSwarm ஆகிய 2 புதிய அறிவியல் திட்டங்களை நாசா அறிவித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் சூரியனின் கரோனாவை ஆய்வதையும் சூரியக்காற்றின் காந்தப்புலத்தை அளவிடு -வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • சூரியனை நோக்கிசெல்லும் பாதையில் பார்க்கர் சோலார் ஆய்வுசெய்த சமீபத்திய தகவல்களை நாசா முன்னதாக அறிவித்தது.

10. உலகின் மிகப்பெரிய ‘இக்லூ கபே’ திறக்கப்பட்டுள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா 

இ) சீனா

ஈ) ஜெர்மனி

  • ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில், உலகின் மிகப் பெரியதாகக் கூறப்படும் ‘இக்லூ கபே’ திறக்கப்பட்டுள்ளது. 37.5 அடி உயரமும் 44.5 அடி விட்டமும்கொண்ட இதுவே உலகின் மிகப்பெரிய கபே ஆகும். கின்னஸ் நூலின்படி, மிகப்பெரிய ‘இக்லூ கபே’ சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ளது. அதன் உயரம் 33.8 அடி மற்றும் விட்டம் 42.4 அடி ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாட்டின் ஏற்றுமதி 3,450 கோடி டாலராக அதிகரிப்பு

நவரத்தினங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடு சிறப்பாக இருந்ததையடுத்து நடப்பாண்டு ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி 3,450 கோடி டாலராக அதிகரித்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியதாவது:

கடந்த ஜனவரி மாதத்தில், பொறியியல், பெட்ரோலியம், நவ ரத்தினங்கள் – தங்க ஆபரணங்கள் துறைகளின் செயல்பாடு சிறப்பான வகையில் அமைந்திருந்தது. அதன் காரணமாக, அந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி `3,450 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் `2.59 லட்சம் கோடி ஆகும்.

இருப்பினும், வர்த்தக பற்றாக்குறையானது நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் `1,742 கோடி டாலராக மிகவும் உயர்ந்துள்ளது. இறக்குமதி 23.54 சதவீதம் உயர்ந்து 5,193 கோடி டாலரானது. ஏப்ரல் 2021-ஜனவரி 2022 வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 22,892 கோடி டாலரிலிருந்து 46.73 சதவீதம் அதிகரித்து 33,588 கோடி டாலரைத் தொட்டது.

இதே காலகட்டத்தில் இறக்குமதி 62.65 சதவீதம் அதிகரித்து 49,575 கோடி டாலரானது. இந்தப் பத்துமாத காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை `7,587 கோடி டாலரிலிருந்து 15,987 கோடி டாலராக உயர்ந்துள்ளது என வர்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

2. சென்னை-விசாகப்பட்டினம் இடையே பெண் இராணுவ அதிகாரிகள் கடல்வழி சாகசப் பயணம்

சென்னை-விசாகப்பட்டினம் இடையே பெண் இராணுவ அதிகாரிகள் மட்டும் பங்கேற்கும் கடல்வழி சாகசப் பயணத்தை தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் சென்னையில் தொடக்கிவைத்தார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செகந்திராபாதில் உள்ள இராணுவக்கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல் துறை, இஎம்இ கடல் பயண சங்கம், தெற்கு பிராந்திய இராணுவப்பிரிவு உள்ளிட்டவை இணைந்து முற்றிலுமாக பெண் ராணுவ அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கும் கடல்வழி சாகசப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வரை செல்லும் இந்த அணியினர் மீண்டும் கடல்வழியாகவே சென்னை திரும்புகின்றனர். இராணுவ பெண் அதிகாரிகள் மட்டும் கடல்வழி சாகசப் பயணத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.

3. ஜி-20 தலைமையை இந்தியா ஏற்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஜி-20 செயலகத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜி-20 அமைப்புக்கு செயலகம் உருவாக்குவதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ள நிலையில் அதன் செயலகத்தை அமைப்பது மற்றும் ஒட்டுமொத்த கொள்கை முடிவுகளை செயலாக்கும் அமைப்புகளை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை 2022 டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30 வரை இந்தியா ஏற்கவுள்ளது. இது 2023இல் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டுடன் நிறைவடையும். உலகப் பொருளாதார நிர்வாகத்தில் முக்கிய பங்குவகிக்கும் சர்வதேச பொருளாதார ஒத்துழை -ப்புக்கான முக்கிய அமைப்பாக ஜி-20 விளங்குகிறது.

ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாட்டில், செயலகம் அமைப்பது அதற்கான ஏற்பாடுகளை அந்நாடு மேற்கொள் -வது வழக்கமாகும். வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் பொருத்தமான மற்ற அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலிருந்து இதுகுறித்த நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 2024 பிப்ரவரி வரை இந்தச் செயலகம் செயல்படும்.

பிரதமர் தலைமையிலான உயர்மட்டக்குழு செயலக செயல்பாட்டுக்கு வழிகாட்டும். இந்தக்குழுவில் இடம்பெறும் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், ஜி-20 ஷெர்பா அமைப்பு (வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர்) ஆகியோர் இந்தியாவின் ஜி-20 தலைமைப்பொறுப்புக்கு ஒட்டு மொத்த வழிகாட்டுதலை வழங்குவார்கள்.

மேலும் ஜி-20 தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட ஒருங்கிணைப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும். இக்குழு உயர்மட்ட குழுவுக்கு ஏற்பாடுகள் குறித்து தகவல்களை அளிக்கும். பன்னோக்கு அமைப்புக -ளில் உலக விஷயங்கள் குறித்த இந்தியாவின் தலைமைப்பொறுப்புக்கு ஜி-20 செயலகம் உதவிகரமாக இருக்கும்.

1. Which state tableau was voted as the best among the States/UTs in the ‘popular choice’ category in Republic Day 2022?

A) Maharashtra 

B) Assam

C) Meghalaya

D) Uttar Pradesh

  • Maharashtra was voted as the best tableau among the States/UTs in the popular choice category. Its tableau was based on theme ‘Biodiversity and State Bio-symbols of Maharashtra’. Uttar Pradesh’s tableau, based on the theme ‘ODOP and Kashi Vishwanath Dham’, was adjudged the best among 12 States and UTs.
  • Ministry of Education and Ministry of Civil Aviation, Marching contingent of the Navy and CISF were named winners in respective categories.

2. Which is the first cricket team to play 1000 ODI matches?

A) Australia

B) India 

C) West Indies

D) England

  • Indian cricket team created history by becoming the first team to play the 1000th ODI during their game against the West Indies. Before this game, India had played 999 ODIs and recorded 518 victories. Rohit Sharma led the Indian Team in their 1000th ODI.
  • Kapil Dev was the captain in India’s 100th ODI, while Sourav Ganguly led the Indian team in its 500th ODI. Australia has played 958 ODIs while Pakistan has played 936 ODI matches.

3. JNU Vice-Chancellor Mamidala Jagadesh Kumar has been appointed as the Chairperson of which institution?

A) NCERT

B) UGC 

C) UPSC

D) SSC

  • Jawaharlal Nehru University (JNU) Vice-Chancellor Mamidala Jagadesh Kumar was appointed chairperson of the University Grants Commission (UGC). Ministry of Education said the appointment has been made for a period of five years, or until he turns 65, whichever is earlier.

4. Which State signed MoU with Ather Energy to set up 1,000 fast charging stations for Electric two-wheelers?

A) Tamil Nadu

B) Maharashtra 

C) Kerala

D) Karnataka

  • A Memorandum of Understanding (MoU) was signed between the Karnataka State Government and Ather Energy to set up 1,000 fast charging stations for electric two-wheelers across the state.
  • The agreement was signed between Ather Energy and Electric supply companies (ESCOMs). Ather Energy will provide free charging services for electric two-wheeler vehicles.

5. Australia has recently designated which species as ‘Endangered’?

A) Panda

B) Koala 

C) Kangaroo

D) Sloth bear

  • Australia has recently designated the koala an endangered species, which was classified as vulnerable only 10 years ago. The impact of prolonged drought, summer bushfires, and the cumulative impacts of disease, urbanisation and habitat loss over the last twenty years have led to the decision. From now, Koalas will be provided with greater protection under Australia’s national environment law.

6. Which country is the host of One Summit, which was seen in the news recently?

A) USA

B) France 

C) Russia

D) China

  • ‘One Ocean Summit’ is being organised by France in cooperation with the United Nations and the World Bank. India supported the French initiative of a ‘High Ambition Coalition on Biodiversity Beyond National Jurisdiction’. Prime Minister Narendra Modi attended the conference and said that India is committed to eliminating single-use plastic.

7. Belarus is bordered by which Sea?

A) Baltic Sea

B) North Sea

C) Black Sea

D) No Sea Border 

  • Belarus is a landlocked country in Eastern Europe. It is bordered by Russia to the east and northeast, Ukraine to the south, Poland to the west, and Lithuania and Latvia to the northwest. Russia and Belarus have started joint military exercises close to the Belarusian border with Ukraine. Russia has already amassed forces along its own border with Ukraine, and in the annexed Crimean Peninsula.

8. What is the official Gross domestic product (GDP) deflator projection for 2022-23?

A) 1.5-2%

B) 3-3.5% 

C) 4.5-5%

D) 10%

  • Finance Minister Nirmala Sitharaman said that the Centre’s Gross domestic product (GDP) deflator projection for 2022-23 is 3 to 3.5 percent. GDP deflator is a measure of inflation and is the difference between nominal GDP and real GDP. Union Budget assumes a nominal GDP growth rate of 11.1 percent for FY23.

9. MUSE and HelioSwarm, which were seen in the news recently, are associated with which space agency?

A) ISRO

B) JAXA

C) NASA 

D) ESA

  • NASA has announced two new science missions namely Multi-slit Solar Explorer (MUSE) and HelioSwarm. These two missions aim to study the sun’s corona and also measuring the magnetic field of the solar wind. NASA earlier announced the latest observations done by the Parker Solar probe on its way to the sun.

10. The World’s largest Igloo Cafe has been inaugurated in which country?

A) USA

B) India 

C) China

D) Germany

  • An igloo cafe, claimed to be the world’s largest, has been opened at Gulmarg in Jammu and Kashmir. With a height of 37.5 feet and a diameter of 44.5 feet, this was the world’s largest cafe of its kind. According to the Guinness Book of World Records, the biggest igloo cafe is in Switzerland, and its height is 33.8 feet and diameter 42.4 feet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!