Tnpsc

16th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. உலகளாவிய துளிர் நிறுவன சுற்றுச்சூழல் குறியீடு – 2021’இல் அதிக தரநிலை பெற்றுள்ள இந்திய நகரம் எது?

அ) புது தில்லி

ஆ) பெங்களூரு

இ) புனே

ஈ) நொய்டா

  • ஸ்டார்ட்அப் பிளிங்க் வெளியிட்ட உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு குறியீடு – 2021’இல், பெங்களூரு, இந்தியாவிலேயே அதிக தரநிலை பெற்றுள்ளது. இது, உலகளவில் 10ஆவது இடத்திலும், இந்தியாவில் 1ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியா 20ஆவது இடத்தில் உள்ளது. புது தில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் முறையே 14 மற்றும் 16ஆவது இடத்தில் (உலகளவில்) உள்ளன.
  • 100 நாடுகளின் பட்டியலில் 43 இந்திய நகரங்கள் இடம்பெற்றன. முதல் ஐந்து நாடுகள் – அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், கனடா மற்றும் ஜெர்மனி. இக்குறியீட்டின் முதல் ஐந்து நகரங்கள் – சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், பெய்ஜிங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இலண்டன்.

2. டோக்கியோ பாராலிம்பிக்ஸ் – 2021’இல் இந்திய அணியின் கொடியை ஏந்தவுள்ளவர் யார்?

அ) மாரியப்பன் தங்கவேலு

ஆ) சுந்தர் சிங் குர்ஜார்

இ) வருண் சிங் பாட்டீ

ஈ) தேவேந்திர ஜஜாரியா

  • டோக்கியோ பாராலிம்பிக்ஸ் – 2021 இல் இந்திய அணியின் கொடியை ஏந்தவுள்ளவராக மாரியப்பன் தங்கவேலு அறிவிக்கப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பாராலிம்பிய தங்கப்பதக்கம் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் மாரியப்பன் தங்கவேலு. உயரம் தாண்டுதலில், கடந்த 2016 – கோடைகால பாராலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பாரா-தடகள இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருதும், பாரா-தடகள அர்ஜுனா விருதும், ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

3. 2021 கோல்ட்மனி ஆசிய ரேபிட் ஆன்லைன் செஸ் பட்டத்தை வென்றவர் யார்?

அ) விளாடிமிர் ஆர்ட்டெமிவ்

ஆ) மேக்னஸ் கார்ல்சன்

இ) டிங் லிரன்

ஈ) லெவன் அரோனியன்

  • 2021 கோல்ட்மனி ஆசிய ரேபிட் ஆன்லைன் செஸ் பட்டத்தை லெவன் அரோனியன் வென்றார். லெவன் கிரிகோரி அரோனியன் ஒரு ஆர்மீனிய-அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவார். விளாடிமிர் ஆர்ட்டெமீவை தோற்கடித்து அவர் இப்பட்டத்தை வென்றார்.
  • தற்போதைய உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் மூன்றாவது இடத்திலிருந்தார். கோல்ட்மனி ஆசிய ரேபிட் என்பது சாம்பியன்ஸ் செஸ் டூர் 2021 (அ) மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் ஏழாவது போட்டியாகும்.

4. விளையாட்டு அமைச்சகத்தால் சமீபத்தில் தேசிய விளையாட்டு கூட்டமைப்பாக அங்கீகாரமளிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்பு எது?

அ) WAKO இந்தியா கிக்பாக்ஸிங் கூட்டமைப்பு

ஆ) டேக்வாண்டோ இந்தியா கூட்டமைப்பு

இ) பிரீஸ்டைல் குத்துச்சண்டை கூட்டமைப்பு

ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

  • வாகோ இந்தியா கிக்பாக்ஸிங் கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் தேசிய விளையாட்டு கூட்டமைப்பாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. “வாகோ இந்தியா” என்று பிரபலமாக அழைக்கப்படும் இது 1993’இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பரிதாபாத்தில் உள்ளது. இது, கிக்பாக்ஸிங் அமைப்பின் உலக சங்கத்துடன் (WAKO) இணைக்கப்பட்டுள்ளது.

5. ‘Under2Coalition’இல் இணைந்த 5ஆவது இந்திய மாநிலமாகவும் 125ஆவது உலக மாநிலமாகவும் ஆன மாநிலம் எது?

அ) ஹரியானா

ஆ) கோவா

இ) பீகார்

ஈ) மகாராஷ்டிரா

  • காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் ஐந்தாவது மாநிலமாகவும், 125ஆவது உலக மாநிலமாகவும் ‘Under2 Coalition’இல் இணைந்துள்ளது. மற்ற நான்கு மாநிலங்கள்: சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம். ‘Under2 Coalition’ என்பது பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்க காலநிலை நடவடிக்கைக்கு உறுதியளித்த மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்களின் உலகளாவிய சமூகமாகும்.
  • ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக தொடங்கப்பட்ட இது, கலிபோர்னியாவின் சேக்ரமெண்டோவில், 2015’ஆம் ஆண்டில் 12 நிறுவு அதிகாரங்களால் கையெழுத்திடப்பட்டது.

6. ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் – 2021’ஐ வென்ற பந்தய ஓட்டுநர் யார்?

அ) வால்டேரி போடாஸ்

ஆ) லூயிஸ் ஹாமில்டன்

இ) மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

ஈ) லாண்டோ நோரிஸ்

  • மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் 2021’ஐ வென்றார். பெல்ஜிய-டச்சு பந்தய ஓட்டுநரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், தற்போது பார்முலா ஒன்னில் டச்சு கொடியின் கீழ், ரெட் புல் ரேசிங்கில் போட்டி இடுகிறார். இந்தப் பந்தயம், 2021 பார்முலா-1 உலக சாம்பியன்ஷிப்பின் ஒன்பதாவது சுற்றாகும். மெர்சிடிஸின் வால்டேரி போடாஸ் இரண்டாம் இடத்தைப்பிடித்தார். மெக்லாரனின் லாண்டோ நோரிஸ் மற்றும் மெர்சிடிஸின் லூயிஸ் ஹாமில்டன் முறையே மூன்று மற்றும் 4ஆவது இடங்களில் இருந்தனர்.

7. இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் நிறுவப்படவுள்ள நகரம் எது?

அ) புனே

ஆ) சென்னை

இ) மும்பை

ஈ) திருவனந்தபுரம்

  • இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் புனேவில் நிறுவப்பட்டுள்ளது. வேளாண்துறைசார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு மையமாக செயல்படும். மகராட்டா வர்த்தக தொழிற்துறைகள் அவை மற்றும் வேளாண்மை ஆனது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைந்து இந்த மையம் நிறுவப்பட்டது.

8. பின்வரும் எந்த நகரத்தில், தேசிய தோட்டக்கலை வாரியத்தின் புதிய மையம் திறக்கப்பட்டது?

அ) குவாலியர்

ஆ) போபால்

இ) கொல்கத்தா

ஈ) லக்னோ

  • தேசிய தோட்டக்கலை வாரியத்தின் புதிய மையத்தை ம. பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார். Dr M S சுவாமிநாதன் தலைமையிலான “அழுகக்கூடிய வேளாண் பொருட்களின் குழு” பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய தோட்டக்கலை வாரியம் 1984 ஏப்ரல் மாதம் இந்திய அரசால் அமைக்கப்பட்டது.

9. 2021 BRICS கல்வியமைச்சர்கள் மாநாட்டை நடத்திய நாடு எது?

அ) இந்தியா

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) பிரேசில்

  • 2021 – BRICS கல்வியமைச்சர்கள் மாநாட்டை இந்தியா நடத்தியது. இந்த ஆண்டு இந்தியா நடத்தும் 13ஆவது BRICS உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தக்கூட்டம் நடைபெற்றது.
  • மெய்நிகராக நடந்த 8ஆவது BRICS கல்வியமைச்சர்களின் கூட்டத்திற்கு கல்வித்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தலைமைதாங்கினார். ஐந்து பிரிக்ஸ் உறுப்புநாடுகளைச்சேர்ந்த கல்வியமைச்சர்கள், உயர்கல்வியில் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக தீர்மானித்துள்ளனர்.

10. சமீபத்தில் காலமான பழங்குடிகள் உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமி மீது எந்தச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது?

அ) சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்

ஆ) பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்

இ) பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்

ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

  • இயேசு சபை பாதிரியாரும் பழங்குடி உரிமை ஆர்வலருமான ஸ்டேன் சுவாமி, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஒன்பது மாதங்கள் காவலில் இருந்தார்.
  • சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) என்பது இந்தியாவில் முதன்மை பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாகும். இது முதலில் 1967’இல் இயற்றப்பட்ட போதிலும், இந்தச் சட்டம் 6 முறை திருத்தப்பட்டு இறுதியாக 2019ஆம் ஆண்டில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. பீமா கோரேகான் வன்முறைச்சம்பவம் தொடர்பாக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட 16 ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுள் ஸ்டேன் சுவாமியும் ஒருவராவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கீழடி அகழாய்வில் மற்றொரு உறை கிணறும், அகரத்தில் சுடுமண் பெண் பொம்மையும் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் மற்றொரு உறை கிணறும், அகரத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கலைநயமிக்க பெண் பொம்மையும் கண்டறியப்பட்டன. கீழடியில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல், அகழாய்வு இயக்குநர் இரா சிவானந்தம் மேற்பார்வையில் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் விரிவாக்கமாக, அருகே உள்ள மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அகரத்தில் முதல்முறையாக சுடுமண் உறைகிணறு கண்டறியப்பட்டது. அதேபோல், கீழடியில் ஏற்கெனவே உறை கிணறு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு அகழாய்வுக் குழியில் 411 செ மீ ஆழத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இந்த உறை கிணற்றின் விளிம்புப் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. உறையின் விட்டம் கிழக்கு மேற்காக 58 செ.மீ. கொண்டுள்ளது. இதன் தெற்கு பகுதி மண்ணில் புதைந்துள்ளது. இதன் தடிமன் 3 செ மீட்டராக உள்ளது. அகழாய்வுக் குழி ஒய்.பி. சதுரப் பகுதியில் 1.26 மீட்டர் ஆழத்தில் ஏற்கெனவே சுடுமண் உறை கிணற்றின் மேல்பகுதி தென்பட்டது. அதன் விட்டம் 77 செ மீட்டரும், பக்கவாட்டு பகுதி 44 செ.மீ. உயரமும், தடிமன் 3 செமீட்டருடன் வெளிப்புறத்தில் கயிறு வடிவ புடைப்பு வேலைப்பாடுகள் இரண்டு வரிகளாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுடுமண் உறைக்கு கீழ், மற்றொரு சுடுமண் உறை உள்ளடங்கிய நிலையில் காணப்பட்டது. இந்த மேல் சுடுமண் உறையின் வெளிப்புறத்தில் கயிறு போன்ற அலங்கார வடிவமைப்பு இருப்பதால், சுடுமண் உறை கிணறாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

தொடர்ந்து அகழாய்வு நடந்தபோது, மேலும் 2 உறைகள் வெளிப்பட்டன. அதன் உயரம் 84 செ மீ இவற்றில் 2 உறைகள் 19 செ மீட்டரும், மூன்றாம் உறை 18 செ மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளன. இந்த உறைகள் ஒன்றோடொன்று இணைந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து அகழாய்வு நடைபெறும்போது, இவற்றின் அடுத்த உறைகளை கண்டறிய முடியும் என, தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில், 3 ஆவது குழியில் 65 செ.மீ. ஆழத்தில் பண்டையகால தமிழா்கள் பயன்படுத்திய சுடுமண்ணாலான பெண் பொம்மை கண்டறியப்பட்டுள்ளது. இது, அழகிய வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

2.கடல்சார் பாதுகாப்பு முத்தரப்புக் கூட்டம்: இந்தியா, இலங்கை, மாலத்தீவு பங்கேற்பு

கடல்சார் பாதுகாப்பு குறித்த முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இருநாள்கள் காணொலி வழியாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தை மும்பையில் உள்ள கடல்சார் நல மையம் ஒருங்கிணைத்ததாக கொழும்பில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: போதைப் பொருள் தடுப்பு, கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுதல் போன்ற அம்சங்களை மையமாக வைத்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடல்சார் குற்றங்களைத் தடுக்க சிறந்த பயிற்சி நடைமுறைகளை பரஸ்பரம் புரிந்துகொள்வது, பரிமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் கலந்துரையாடினர். அண்மையில் சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் 1,486 கன்டெய்னர்களில் ரசாயனங்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது கொழும்பு துறைமுகம் அருகே தீப்பிடித்தது. இலங்கை கடற்படை, விமானப்படை, இந்திய கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து கப்பலில் தீயை அணைத்தன. இருப்பினும் கப்பல் கடலில் மூழ்கிவிட்டது. கப்பலில் தீயை அணைக்கும் ‘சாகர் ஆரக்ஷா 2’ என்ற அத்திட்டம் வெற்றியடைந்த பின்னணியில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனை பொருத்தமாக அமைந்தது.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு, வளர்ச்சி (சாகர்) என்ற கொள்கைகளுக்கு இணங்க இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த மூன்று நாடுகள் இடையேயான கலந்துரையாடல் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் முத்தரப்புக் கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கை, மாலத்தீவுகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

3. நியூஸ் ஆன் ஏர் செயலியின் தரவரிசையில் கொடைக்கானல் அகில இந்திய வானொலி முன்னேற்றம்

நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நேரலை ஒலிபரப்புகள் பிரபலமாக உள்ள இந்திய நகரங்களின் தரவரிசையில் சென்னையை பின் தள்ளி ஐதராபாத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. புனே, பெங்களூரு ஆகியவை தொடர்ந்து நான்காவது வாரமாக முறையே 1 மற்றும் 2ஆம் இடம் வகிக்கின்றன. ஜெய்ப்பூர் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், போபால் 9ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. அகில இந்திய வானொலியின் தரவரிசையில் மிகப்பெரும் மாற்றமாக கொடைக்கானல் வானொலி, 10ஆவது இடத்திலிருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

ரெயின்போ கன்னடா காமன்பிலு, 4ஆவது இடத்திலும், புனே வானொலி, 5ஆவது இடத்திலும் உள்ளன. பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர்’இல் அகில இந்திய வானொலியின் சுமார் 240 சேவைகள் நேரலையாக ஒலிபரப்பப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8000 நகரங்களில் வசிக்கும் மக்கள் இந்த செயலியின் வாயிலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகின்றனர்.

ஜூன் 16-30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை அமைந்துள்ளது.

4. ஒலிம்பிக்ஸ் நினைவலைகள்…

1896 கிரீஸ் ஒலிம்பிக்ஸ் (நவீன ஒலிம்பிக்ஸின் தொடக்கம்)

ரோமானிய அரசர் முதலாம் தியோடோசியஸ் விதித்த தடைகாரணமாக நடத்தப்படாமல் இருந்த ஒலிம்பிக்ஸ், 1,500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நவீன ஒலிம்பிக்ஸாக தொடங்கியது. ஏப்ரல் 6 முதல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த ஒலிம்பிக்கில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தடகளம், சைக்கிளிங், நீச்சல், உள்பட 43 வகையான விளையாட்டுகள் இருந்தன.

இந்த ஒலிம்பிக்ஸில்தான் முதல் முறையாக பதக்கங்கள் அறிமுகமாகின. அதிலும் தங்கம் கிடையாது. முதலிடதுக்கு வெள்ளிப்பதக்கத்துடன் ஆலிவ் மரத் துண்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன. 2ஆம் இடத்துக்கு வெண்கலம் அல்லது பித்தளை பதக்கத்துடன் லௌரெல் மரத்துண்டு, சான்றிதழ் அளிக்கப்பட்டன. 3ஆம் இடம்பிடித்தோருக்கு பதக்க அறிவிப்பு மட்டுமே கிடைத்தது.

நவீன ஒலிம்பிக்ஸில் முதல் பதக்கத்தை அமெரிக்க மும்முறை தாண்டுதல் வீரர் ஜேம்ஸ் கானலி ஏப்ரல் 6-இல் வென்றார். ஒழுங்குபடுத்தப்பட்ட மாரத்தான் இதில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் கிரீஸ் வீரர் ஸ்பைரிடன் லூயிஸ் சாம்பியன் ஆனார்.

நீச்சல் போட்டிகள் ஜியா கடல் பகுதியில் நடத்தப்பட்டன. போட்டியாளர்கள் சிறிய மரக்கலத்தில் சென்று அங்கிருந்து கரையை இலக்காகக் கொண்டு நீந்தினர். ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் ஆகியவற்றில் 4 பிரிவுகளில் முதலிடம் பிடித்த ஜெர்மனி வீரர் கார்ல் ஷுமான் மிகச்சிறந்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 10 வயது, 218 நாள்களே ஆன கிரீஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் டிமிட்ரியஸ் லௌன்ட்ராஸ் மிக இள வயது போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். பளுதூக்குதல் போட்டியில், போட்டியாளர்கள் எடை ரீதியாகப் பிரிக்கப்படவில்லை.

1900 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் (முதல் முறையாக பெண்கள் பங்கேற்பு)

5 மாதங்கள் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்ஸில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்றனர். இதில் தொடக்க, நிறைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. படகுப்போட்டியில் ஸ்விட்சர்லாந்து அணியில் இடம்பெற்றிருந்த அமெரிக்கர் ஹெலென் டி போர்டேல்ஸ், ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் பெண் ஆனார்.

தனிநபர் பிரிவில் முதல் பெண் சாம்பியனாக இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை சார்லட் கூப்பர் பெற்றார். தடகள போட்டிகள் சமதளமில்லாத புல்வெளிகளில் நடத்தப்பட்டன. தடைதாண்டும் ஓட்டத்துக்கு முறிந்து போன தொலைபேசி கம்பங்கள் பயன்படுத்தப்பட்டன. பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகியவை நீக்கப்பட்டு புதிதாக 13 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. ஒலிம்பிக் வரலாற்றில் கிரிக்கெட் விளையாடப்பட்டது இந்த சீசனில் மட்டும் தான். அதில் இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும் பங்கேற்றன.

டென்னிஸ், கால்பந்து, போலோ, துடுப்புப்படகு, டக் ஆப் வார் போட்டிகளில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஒரே அணியில் இருந்தனர். துப்பாக்கி சுடுதலில் புறாக்கள் இலக்காக வைத்து சுடப்பட்டன. இந்த சீசனில் மட்டும் தான் அவ்வாறு உயிரினங்கள் கொல்லப்பட்டன. ரக்பி போட்டியில் சாம்பியன் ஆன பிரான்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த கான்ஸ்டன்டின் ஹென்ரிக்ஸே, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் கருப்பினத்தவர். ஹைட்டி வம்சாவளியான அவர், ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் கருப்பினத்தவர் என்றும் நம்பப்படுகிறார்.

1904 சென்ட் லூயிஸ் ஒலிம்பிக்ஸ் (அதிகபட்ச பதக்கம் வென்ற அமெரிக்கா)

ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே உலகளாவிய அளவில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக்ஸ். இதில் தான் தங்கப் பதக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. குத்துச்சண்டை, டம்பள்ஸ், பிரீஸ்டைல் மல்யுத்தம், டெக்கத்லான் போட்டிகள் அறிமுகமாகின. விபத்தில் இடது காலை இழந்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் ஜார்ஜ் ஐசர், செயற்கை காலுடன் பங்கேற்று 3 தங்கம் உள்பட 6 பதக்கங்கள் வென்றார். சென்ட் லூயிஸுக்கு வருவதில் இருந்த சிரமம், ரஷியா-ஜப்பான் போரால் ஐரோப்பியாவில் பதற்றம் ஆகிய காரணங்களால் இந்த சீசனில் உள்நாட்டு போட்டியாளர்களே அதிகமாக இருந்தனர். மொத்தம் பங்கேற்ற 630 பேரில் 523 பேர் அமெரிக்கர்கள். பாதிக்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் முழுவதும் அமெரிக்க போட்டியாளர்களே இருந்தனர். இதில் அமெரிக்கா 239 பதக்கங்கள் வென்றதே ஒலிம்பிக்ஸில் ஒரு நாடு வென்ற அதிகபட்ச பதக்கமாக உள்ளது.

செயற்கை ஏரிகளில் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டன. மோசமான சாலையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில், பங்கேற்பாளர்களுக்காக ஒரே ஒரு குடிநீர் நிலையம் மட்டுமே இருந்தது. தென் ஆப்பிரிக்கா ஒலிம்பிக்ஸில் பங்கேற்றது முதல் முறையாக இதில் தான். அதன் ஓட்டப் பந்தய போட்டியாளரான லென் டௌவை ஒரு பந்தயத்தின்போது நாய்கள் பாதி தூரம் துரத்தி வந்தன.

1908 லண்டன் ஒலிம்பிக்ஸ் (ஒலிம்பிக்கிற்காக முதல் மைதானம்)

ரோமில் நடத்த திட்டமிடப்பட்டு, நிதிச் சிக்கல்கள் காரணமாக லண்டனில் நடைபெற்றது. ஏப்ரல் 27-இல் டென்னிஸ் போட்டியில் தொடங்கி, அக்.31இல் ஹாக்கி போட்டியுடன் நிறைவடைந்தது. ஆனால், ஜூலை 13-ஆம் தேதி தான் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. முதல்முறையாக ஒலிம்பிக்கிற்கென மைதானம் கட்டப்பட்டிருந்தது. அதில் தடகளம், நீச்சல் குளம், மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸுக்கான இடங்கள் இருந்தன. இந்த ஒலிம்பிக்ஸில்தான் நீச்சல் போட்டிகள் முதல் முறையாக நீச்சல் குளங்களில் நடைபெற்றது.

இதிலிருந்து தான் தொடக்க நிகழ்ச்சியில் அனைத்து நாடுகளின் போட்டியாளர்களும் தங்களது தேசியக்கொடியுடன் அணிவகுக்கத் தொடங்கினர். மாரத்தான் போட்டியின் அதிகாரப்பூர்வதொலைவு (42.195 கிமீ) இதில் தான் முதல் முறையாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 1924 ஒலிம்பிக்ஸ் முதல் அது வழக்கமானது.

ஆடவருக்கான ரிலே ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க அணியில் இடம்பிடித்திருந்த ஜான் டெய்லரே, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கருப்பின வீரர் ஆனார். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து சார்பில் ஒரே அணி ‘ஆஸ்ட்ராலாசியா’ என்ற பெயரில் பங்கேற்றது. ஒலிம்பிக் ரிலே என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு, அதில் போட்டியாளர்கள் 200 மீ, 400 மீ, 800 மீ தொலைவு ஓடினர்.

1. Which is the highest ranked Indian city in Global Startup Ecosystem Index – 2021?

A) New Delhi

B) Bengaluru

C) Pune

D) Noida

  • Bengaluru is the highest ranked Indian city in Global Startup Ecosystem Index 2021, released by StartupBlink. It is on the 10th position worldwide and on 1st position in India. India was placed at 20th place. New Delhi and Mumbai were at 14th and 16th position (worldwide).
  • 43 Indian cities got placed in the list of 100 countries. The top five countries are USA, UK, Israel, Canada and Germany. The top five cities in the Index are San Francisco, New York, Beijing, Los Angeles and London.

2. Who has been named the flag bearer of the Indian contingent in Tokyo Paralympics 2021?

A) Mariyappan Thangavelu

B) Sundar Singh Gurjar

C) Varun Singh Bhati

D) Devendra Jhajharia

  • Mariyappan Thangavelu is announced as the flag bearer of the Indian contingent in Tokyo Paralympics 2021. Mariyappan Thangavelu is India’s first Paralympian gold medallist since 2004.
  • He won gold medal in the 2016 Summer Paralympic games in High jump. He was awarded Rajiv Gandhi Khel Ratna award for Para–Atheletics, Arjuna Award for Para–Atheletics and Padma Shri.

3. Who won the Goldmoney Asian Rapid online chess title 2021?

A) Vladimir Artemiev

B) Magnus Carlsen

C) Ding Liren

D) Levon Aronian

  • Levon Aronian won the Goldmoney Asian Rapid online chess title 2021. Levon Grigori Aronian is an Armenian–American chess grandmaster.
  • He won the title after defeating Vladimir Artemiev. Magnus Carlsen, the current world champion was on the 3rd position. The Goldmoney Asian Rapid is the seventh tournament of the Champions Chess Tour 2021 or Meltwater Champions Tour.

4. Which sports federation has been granted recognition as the National Sports Federation by the Sports Ministry recently?

A) WAKO India Kickboxing Federation

B) Taekwondo India Federation

C) Freestyle Boxing Federation

D) None of the above

  • WAKO India Kickboxing Federation has been granted recognition as the National Sports Federation by the Sports Ministry recently.
  • Popularly known as “WAKO India”, it was formed in 1993 and its Headquarter is in Faridabad. It is affiliated to World Association of Kickboxing Organization (WAKO).

5. Which state recently became the 5th Indian state and 125th global state to join the “Under2 Coalition”?

A) Haryana

B) Goa

C) Bihar

D) Maharashtra

  • Maharashtra has become the 5th state in India and 125th global state to join the “Under2 Coalition” to fight the climate change.
  • The other four states are: Chhattisgarh, Jammu & Kashmir, Telangana and West Bengal. The Under2 Coalition is a global community of state and regional governments committed to ambitious climate action in line with the Paris Agreement. It started as a MoU which was signed by 12 founding jurisdictions in 2015 in Sacramento, California.

6. Which racing driver won the Austrian Grand Prix 2021?

A) Valtteri Bottas

B) Lewis Hamilton

C) Max Verstappen

D) Lando Norris

  • Max Verstappen won the Austrian Grand Prix 2021. Max Verstappen is a Belgian–Dutch racing driver currently competing in Formula One, under the Dutch flag, with Red Bull Racing. The race was the ninth round of the 2021 Formula One World Championship.
  • Mercedes’ Valtteri Bottas was the runner–up. McLaren’s Lando Norris and Mercedes’ Lewis Hamilton were on the 3rd and 4th positions respectively.

7. In which city, India’s first Agriculture Export Facilitation Centre has been established?

A) Pune

B) Chennai

C) Mumbai

D) Thiruvananthapuram

  • India’s first Agriculture Export Facilitation Centre has been established in Pune. It will work as a one–stop centre for the exporters in agricultural sector.
  • The centre was established by the Mahratta Chamber of Commerce Industries and Agriculture (MCCIA) in association with the National Bank for Agriculture and Rural Development (NABARD).

8. In which city, new centre of National Horticulture Board has been recently inaugurated?

A) Gwalior

B) Bhopal

C) Kolkata

D) Lucknow

  • A new centre of National Horticulture Board (NHB) has been inaugurated in Gwalior, Madhya Pradesh by Narendra Singh Tomar, Union Minister of Agriculture and Farmers welfare. National Horticulture Board (NHB) was set up by Government of India in April 1984 on the basis of recommendations of the “Group on Perishable Agricultural Commodities”, headed by Dr M. S. Swaminathan.

9. Which country hosted the BRICS Education Ministers 2021?

A) India

B) Russia

C) China

D) Brazil

  • India hosted the BRICS Education Ministers 2021. This meeting is being held as part of the 13th BRICS Summit being hosted by India this year. Sanjay Dhotre, Minister of State for Education, chaired the meeting of the 8th BRICS Education Ministers in virtual mode.
  • Education Ministers from the five BRICS member states resolved to enhance academic collaboration in higher education.

10. Stan Swamy, the tribal rights activist, who passed away recently, was booked under which act?

A) Unlawful Activities Prevention Act

B) Prevention of Terrorism Act

C) Terrorist and Disruptive Activities (Prevention) Act

D) None of the above

  • Stan Swamy, the Jesuit priest and tribal rights activist spent nine months in custody after being booked under the UAPA, Unlawful Activities Prevention Act. UAPA is the primary counter–terror law in India. Though it was originally enacted in 1967, the law has undergone over 6 amendments, the last one in 2019.
  • Stan Swamy was among the 16 activists, academics, and lawyers booked and arrested for their alleged links to Maoists in connection with the Bhima Koregaon violence.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!