Tnpsc

16th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. எந்த நடுவண் அமைச்சகத்தின்கீழ், ‘APEDA’ நிறுவப்பட்டது?

அ) வேளாண் அமைச்சகம்

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஈ) உணவுப்பதனிடும் தொழிற்சாலைகள் அமைச்சகம்

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (APEDA) 1985ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட APEDA சட்டத்தின்கீழ் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இது வணிகம் & தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, APEDA, அண்மையில் தனது முதல் மெய்நிகர் வர்த்தக கண்காட்சியைத் தொடங்கியது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற ககிர்மாதா கடற்கரை அமைந்துள்ள மாநிலம் எது?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) ஒடிஸா

இ) மகாராஷ்டிரா

ஈ) குஜராத்

  • அழிவின் விளிம்பிலிருக்கும் ஆலிவ் ரிட்லி பெண் ஆமைகள் ஒடிஸா மாநிலத்தில் உள்ள ககிர்மாதா கடற்கரைக்கு வரத்தொடங்கியுள்ளன. இந்த இடம், இவ்வினங்கள் முட்டையிட பயன்படும் உலகின் மிகப்பெரிய முட்டையிடும் தளம் எனக்கூறப்படுகிறது. இந்த நிகழ்வு ஸ்பானிஷ் மொழியில் “அரிபாடா” என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, சுமார் 4.50 இலட்சம் ஆமைகள் இந்தக்கடற்கரைக்கு வருகை புரிந்தன.

3. ஓர் அண்மைய ஆய்வின்படி, கடல்களில் வெப்பமயமாதலால், எவ்வுயிரினத்தின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பேற்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது?

அ) கடலாமைகள்

ஆ) திமிங்கலங்கள்

இ) சுறாக்கள்

ஈ) ஓங்கில்கள்

  • சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் என்னும் இதழில் அண்மையில் வெளியான ஓர் ஆய்வின்படி, கடல்களின் வெப்பமயமாதல் சுறாக்களின் வளர்சிதை மாற் -றத்தை பாதித்ததாகக் கூறப்படுகிறது. மிகுந்த வெப்பநிலையில் வளரும் சுறாக்கள் சராசரி வெப்பநிலையில் வளரும் சுறாக்களைவிட குறைவான எடைகொண்டதாக உள்ளன. குட்டிசுறாக்கள், உயிர்வாழத்தேவையான ஆற்றல் இல்லாமல், மிகச்சிறியதாக பிறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

4. இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

அ) லக்னோ

ஆ) தஞ்சாவூர்

இ) வாரணாசி

ஈ) சிவகங்கை

  • ICAR – இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் அமைந்துள்ளது. உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்ச -கமும் உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகமும் ட்ரோன்களைப் பயன்படுத்த IISR’க்கு நிபந்தனை விலக்கு அளித்துள்ளன.
  • ட்ரோன்களைப் பயன்படுத்தி பூச்சி மற்றும் கரும்பு பயிரின் நோய்களைக் கட்டுப்படுத்த, ட்ரோன் முறையிலான தெளித்தல் தீர்வை மதிப்பீடு செய்யும் சோதனைகளை இந்நிறுவனம் நடத்தும்.

5. தெலுங்கானா மாநிலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கவுள்ள அமைப்பு எது?

அ) NHPC

ஆ) NTPC

இ) REC

ஈ) BHEL

  • NTPC (தென் மண்டலம்) தெலுங்கானாவின் இராமகுண்டத்தில் இந்தி
    -யாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையத்தை அமைக்க உள்ளது. இது, 100 MW திறன்கொண்ட திட்டமாகும். இது, தற்போது நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி ஆலையாக இருக்கு -ம். NTPC, சுமார் 450 MW சூரிய சக்தி மற்றும் 217 MW மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி ஆகியவற்றை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

6. பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) தாமஸ் பேச்

ஆ) ஜார்ஜ் மெக்னேகர்

இ) மேரி கோம்

ஈ) ரிச்சர்ட் கேரியன்

  • ஜெர்மன் வழக்குரைஞர் தாமஸ் பேச், பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டு காலத்திற் -கு அவர் இப்பதவியிலிருப்பார். டோக்கியோ ஒலிம்பிக்கை வெற்றிகரமா -க நடத்துவதே அவரது உடனடி பணியாகும். 93-1 என்ற பெரும்பான் -மை வாக்குகளை அவர் அந்தத்தேர்தலில் பெற்றார்.

7. இந்தியாவில் சூரிய மின்னுற்பத்தி தொகுதிகளை இறக்குமதி செய்வதற்கு, எவ்வளவு சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது?

அ) 5%

ஆ) 10%

இ) 15%

ஈ) 40%

  • சூரிய மின்னுற்பத்தி தொகுதிகளை இறக்குமதி செய்வதற்கு 40% சுங்க வரியும் சூரிய மின்கலங்களை இறக்குமதி செய்வதற்கு 25% சுங்க வரியு -ம் விதிக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இறக்குமதியைக் குறைப்பதற்கும், சூரிய மின்னுற்பதிக்கூறுகளின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதிய சுங்க வரி, 2022 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும்.

8. கீழ்காணும் எந்த அமைச்சகம் ESI திட்டத்தை PM-JAY உடன் ஒருங்கிணைக்கவுள்ளது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) நலவாழ்வு & குடும்பநலத்துறை அமைச்சகம்

இ) தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ) சமூக நீதி அமைச்சகம்

  • சத்தீஸ்கர், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள 113 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய (PM-JAY) திட்டத்துடன் ESI திட்டத்தை ஒன்றி -ணைக்க மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த ஒருங்கிணைப்பின்மூலம், 1.35 கோடி ESI பய
    -னாளிகள் PM-JAY திட்டத்தின்கீழ் இலவச சிகிச்சையின் பலன்களைப் பெறமுடியும்.

9. சமீபத்தில், அரசர் பூமிபால் பன்னாட்டு உலக மண் நாள் விருது – 2020’ஐ வென்ற இந்திய ஆராய்ச்சி நிறுவனம் எது?

அ) NHPC

ஆ) NTPC

இ) ICAR

ஈ) HAL

  • புது தில்லியில் உள்ள ICAR (இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில்) சமீபத்தில் அரசர் பூமிபால் பன்னாட்டு உலக மண் நாள் விருது-2020’ஐ வென்றது. நலம்மிக்க எண்ணெய்களின் முக்கியத்துவம்குறித்து விழிப்பு -ணர்வை ஏற்படுத்துவதற்கான அவ்வமைப்பின் அர்ப்பணிப்புக்காக இது வழங்கப்பட்டுள்ளது.

10. செயற்கைக்கோள் தரவைப்பயன்படுத்தி காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்காக, எந்த நாட்டின் விண்வெளி நிறுவனத்துடன் ISRO கூட்டிணைந்துள்ளது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஜப்பான்

இ) பிரான்ஸ்

ஈ) இரஷ்யா

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை (JAXA) ஆகியவை செயற்கைக்கோள் தரவுகளைப்பயன்படுத்தி, நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு மற்றும் காற்றின் தரத் -தைக் கண்காணிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பங்குதாரர்களாக இருக்க முடிவுசெய்துள்ளன.
  • புவி கண்காணிப்பு, நிலவு திட்டத்தில் ஒத்துழைப்பு மற்றும் செயற்கைக் கோள் வழிசெலுத்தல் ஆகியவற்றில் நடைபெற்றுகொண்டிருக்கும் ஒத்து -ழைப்பையும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். விண்வெளிச்சூழல் விழிப்பு -ணர்வு மற்றும் தொழிற்முறை பரிமாற்றத் திட்டத்தை கொண்டுவரவும் இருநாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தஞ்சாவூர் உள்பட இரண்டு உணவு தொழில்நுட்ப நிறுவனங்களை தேசியமயமாக்கும் மசோதா: மாநிலங்களவை ஒப்புதல்

தஞ்சாவூர் உள்பட இரு உணவு தொழில்நுட்ப நிறுவனங்களை தேசிய நிறுவனங்களாக அறிவிக்கும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்ததுதல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹரியானா மாநிலம் குண்ட் -லியில் உள்ள தேசிய உணவு தொழினுட்ப தொழில்முனைவோர் பயிற்சி நிறுவனம் ஆகிய இந்த 2 நிறுவனங்களையும் தேசிய நிறுவனங்களாக அறிவிக்கும் ‘தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் மேலாண்மை மசோதா, 2019’ என்ற மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்மூலம், இந்த இரண்டு நிறுவனங்களும் முழு சுதந்திரத்துடன், IIT, IIM நிறுவனங்களுக்கு இணையாக செயல்படமுடியும். மத்திய அரசின் ‘கிசான் சம்பதா யோஜனா’ திட்டத்தின்கீழ் 107 இலட்சம் டன் உணவுப்பொருள்கள் பதப்படுத்தப்பட்டிருப்பதோடு, 444 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க -ப்பட்டுள்ளன. மேலும், 147 இலட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின்மூலம் பயனடைந்துள்ளனர்.

2. மாணவர்கள் கல்விக்கடன்பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா முன்னிலை: நிர்மலா சீதாராமன்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகளவு மாணவர்கள் கல்விக்கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, கேரளா முன்னிலையில் உள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

2020, டிசம்பர் வரை நாடு முழுவதும் 24,84,397 பேருக்கு `89,883.57 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் `8,587.10 கோடி (9.55%) திரும்பிவராத கடனாகவும், தவணை தவறிய கடனாகவும் உள்ளது. ஆனால், இந்தக் கல்விக்கடனை அதிக அளவில் பெற்ற மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவை உள்ளன.

தமிழ்நாட்டில் 6,97,066 மாணவர்கள் `17,193.58 கோடி கல்விக்கடன் பெற்றுள்ளனர். இதில் 1,68,410 மாணவர்கள் பெற்ற `3,490.75 கோடி (20.30%) வாராக்கடனாக உள்ளது. நாட்டிலேயே கல்விக்கடன் அதிகம் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதேமாதிரி புதுச்சேரி மாநிலத்தில் 18,311 மாணவர்களுக்கு `481.80 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4,307 மாணவர்களின் `93.31 கோடி (19.3 7%) வாராக்கடனாக உள்ளது. தேசிய அளவில் வாராக் கடனில் புதுச்சேரி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

கல்விக் கடன் குறைவாகப் பெற்ற மாநிலம் பிகார் ஆகும். ஆனால், வாராக் கடன் விகிதத்தில் (25.76 சதவீதம்) நாட்டிலேயே பிகார் முதல் மாநிலமாக உள்ளது. இது தவிர 2020, மார்ச் நிலவரப்படி விவசாயம் (10.33%), தொழிற் துறை (13.60%) ஆகியவற்றிலும் வாராக்கடன் அதிகளவில் உள்ளது.

1. ‘APEDA’ was established under which Union Ministry?

A) Ministry of Agriculture

B) Ministry of Rural Development

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Food Processing

  • The Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) was established by the Government of India under the APEDA Act passed by the Parliament in December, 1985. It was set up under the Ministry of Commerce and Industry. APEDA recently launched its first virtual trade fair to boost export of agricultural and processed food products.

2. Gahirmatha beach, which was seen in the news recently, is located in which state?

A) Andhra Pradesh

B) Odisha

C) Maharashtra

D) Gujarat

  • The endangered Olive Ridley female turtles have started arriving at the Gahirmatha beach in Odisha state. It is said to be the world’s largest known rookery of these species to lay eggs.
  • This phenomenon of converging on the nesting ground for mass laying of eggs is otherwise called ”Arribada” in Spanish. Last year, around 4.50 lakh turtles turned up in the beach for mass nesting.

3. As per a recent study, the warming of oceans is proved to have affected the metabolism of which species?

A) Sea Turtles

B) Whales

C) Sharks

D) Dolphins

  • As per a recent study published in the journal Scientific Reports, the warming of oceans is said to have affected the metabolism of sharks. The sharks reared in the warmest temperatures weighed less than those raised in average temperatures. The baby sharks are at risk of being born smaller, without the energy needed to survive.

4. Where is the Indian Institute of Sugarcane Research (llSR) located?

A) Lucknow

B) Thanjavur

C) Varanasi

D) Sivagangai

  • The ICAR – Indian Institute of Sugarcane Research (llSR) is located in Lucknow, in the state of Uttar Pradesh. Ministry of Civil Aviation and Directorate General of Civil Aviation (DGCA) have granted a conditional exemption to IISR to use drones.
  • The institute would conduct trials to evaluate drone spraying solution for controlling pest and diseases of sugarcane crop using drones.

5. Which organisation is to commission India’s largest floating solar power plant at Telangana?

A) NHPC

B) NTPC

C) REC

D) BHEL

  • NTPC (Southern Region) is set to commission India’s largest floating solar power plant at Ramagundam, Telangana. It is a 100 MW project and will be the single location largest floating solar plant in the country as of now. NTPC is in the process of implementing about 450 MW of solar capacity and 217 MW floating solar capacity.

6. Who has been re–elected as president of the International Olympic Committee?

A) Thomas Bach

B) George Mcnager

C) Mary Kom

D) Richard Carrion

  • The German lawyer Thomas Bach has been re–elected as president of the International Olympic Committee. He has been re–elected for a four–year term with the committee. His immediate task would be to successfully conduct the Tokyo Olympics. He won the elections with a majority vote of 93–1.

7. What percentage of customs duty would be levied on import of solar modules in India?

A) 5%

B) 10%

C) 15%

D) 40%

  • The Government of India has decided to impose a 40% customs duty for import of solar modules and 25% customs duty for import of solar cells to India. This measure has been made to reduce imports and boost the local manufacturing of solar components. The new customs duty would come to force from April 2022.

8. Which Ministry has launched the convergence of the ESI scheme with PM JAY?

A) Ministry of Home Affairs

B) Ministry of Health & Family Welfare

C) Ministry of Labor & Employment

D) Ministry of Social Justice

  • The Union Ministry of Labour and Employment has launched the convergence of ESI Scheme with Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PM JAY) in 113 districts of Chhattisgarh, Karnataka, Madhya Pradesh and Maharashtra.
  • With this convergence, 1.35 crore ESI beneficiaries can avail the benefits of cashless treatments under PM JAY scheme.

9. Which Indian Research Institute has recently won the International King Bhumibol World Soil Day Award 2020?

A) NHPC

B) NTPC

C) ICAR

D) HAL

  • ICAR (Indian Council of Agriculture Research), New Delhi has recently won the International King Bhumibol World Soil Day Award 2020. It has been awarded for its commitment to raise awareness about importance of healthy oils.

10. ISRO has partnered with which country’s space agency for air quality monitoring using satellite data?

A) USA B) Japan

C) France D) Russia

  • Indian Space Research Organisation (ISRO) and Japan Aerospace Exploration Agency (JAXA) have decided to partner to undertake activities on rice crop area and air quality monitoring using satellite data. The authorities also reviewed on–going cooperation in earth observation, lunar cooperation, and satellite navigation.
  • The countries agreed to explore space situational awareness and professional exchange programme.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!