TnpscTnpsc Current Affairs

16th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

16th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘விஸ்வகர்மா ராஷ்ட்ரிய புரஸ்கர்’ விருதை வழங்குகிற மத்திய அமைச்சகம் எது?

அ) கல்வி அமைச்சகம்

ஆ) பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 

இ) MSME அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது கடந்த 1965ஆம் ஆண்டு முதல் ‘விஸ்வகர்மா ராஷ்ட்ரிய புரஸ்கர் (VRP)’ மற்றும் ‘தேசிய பாதுகாப்பு விருதுகளையும் (NSA)’, கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு விருதுகளையும் (சுரங்கங்கள்) வழங்கி வருகிறது.
  • பணிச்சூழலில் முன்னேற்றம் விளைவிக்கும் ஒரு பணியாள் அல்லது பணியாளர்கள் குழு வழங்கிய பரிந்து -ரைகளை அங்கீகரிப்பதற்காக VRP வழங்கப்படுகிறது. தொழிற்துறை நிறுவனங்களின் பாதுகாப்பு செயல் திறனை அங்கீகரிப்பதற்காக NSA வழங்கப்படுகிறது.

2. கல்லாலான மிகப்பெரிய புத்தர் சிலை கண்டறியப்பட்டு உள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா 

இ) நேபாளம்

ஈ) இலங்கை

  • 233 அடி உயரமுள்ள கல்லால் ஆன சீனாவின் லேஷான் புத்தர் சிலை, உலகின் மிகப்பெரியதும் உயரமானதுமான புத்தர் சிலை ஆகும். 1996ஆம் ஆண்டு முதல் UNESCO உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ள இச்சிலை, எமி மலையை எதிர்நோக்கி உள்ளது.
  • புத்த கயாவில் பௌத்தர் பன்னாட்டு பொதுநல இயக்கம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சாய்ந்தநிலை புத்தர் சிலை கட்டப்படுகிறது. 100 அடி நீளமும், 30 அடி உயரமும் கொண்ட இந்தச் சிலை கண்ணாடியிழையால் செய்யப்பட உள்ளது.

3. முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்தியாவி -ன் முதல், ‘தொழிற்பூங்கா’ அமைந்துள்ள நகரம் எது?

அ) மும்பை

ஆ) சென்னை

இ) ஐதராபாத் 

ஈ) புது தில்லி

  • முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் முதல், ‘தொழிற்பூங்கா’ ஐதராபாத்தில் இருபத்தைந்து பசுமைத் திட்டங்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
  • தெலுங்கானா மாநில அரசாங்கத்துடன் இணைந்து FICCI பெண்கள் கூட்டமைப்புமூலம் ‘FLO தொழிற்பூங்கா’ ஊக்கு -விக்கப்படுகிறது. இத்தொழிற்பூங்காவிற்கு `250 கோடி முதலீட்டையும் FLO தந்துள்ளது.

4. உர உற்பத்தியாளர் ‘SPIC’, சமீபத்தில் எம்மாநிலத்தில் மிதவி சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தது?

அ) தமிழ்நாடு 

ஆ) இராஜஸ்தான்

இ) குஜராத்

ஈ) பஞ்சாப்

  • முன்னணி உர உற்பத்தி நிறுவனமான சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (SPIC) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதவை சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை நிறுவியுள்ளது. இந்த ஆலை, ஆண்டுக்கு 42 மில்லியன் அலகு தூய ஆற்றலை உற்பத்தி செய்யும் மற்றும் அந்த நீர்த்தேக்கத்தில் நீர் ஆவியாதல் குறைப்பைக் கட்டுப்படுத்த உதவும். `150 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

5. “மருந்துத்தொழிற்துறையை வலுப்படுத்துதல்” திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம்

ஆ) வேதிகள் & உரங்கள் அமைச்சகம் 

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) கனரக தொழிற்துறை அமைச்சகம்

  • வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின்கீழியங்கும் மருந்துத்துறை, “மருந்துத்தொழிற்துறை வலுப்படுத்துதல்” திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
  • 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் `500 கோடி மொத்த நிதிச் செலவீனத்துடன், “மருந்துத் தொழிலை வலுப்படுத்துதல்” திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை அத்துறை வெளியிட் -டுள்ளது. மருந்துத்துறையில் தற்போதுள்ள உட்கட்டமை -ப்பு வசதிகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற பாண்ட்ரேதன் கோவில் அமைந்துள்ள மாநிலம் / UT எது?

அ) மேற்கு வங்காளம்

ஆ) ஜம்மு-காஷ்மீர் 

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) குஜராத்

  • பாண்ட்ரேதன் கோவில் ஸ்ரீநகர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பதாமிபாக் பகுதியில் அமைந்துள்ள 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய தளமாகும். இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் சமீபத்தில் இதனை புதுப்பித்துள்ளது. இது சம்பந்தமாக, இவ்வலகு, கலாசார அமைச்சகத்தின் தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. இந்தத் தளத்தில் இரண்டு பெரிய ஒற்றைக்கல் பாறை சிவலிங்கங்கள், ஏழு காந்தார பாணி சிற்பங்கள் போன்ற வடிவங்களில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு சிலைகள் உள்ளன.

7. எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் உருவாக்கப்பட்ட எரிசக்தி மற்றும் அதுதொடர்பான துறைகளுக்கான, ‘கொள்கை வாதிடும் பிரிவின்’ பெயர் என்ன?

அ) எரிசக்தி அறக்கட்டளை 🗹

ஆ) ஆற்றல் அறக்கட்டளை

இ) பசுமை எரிசக்தி அறக்கட்டளை

ஈ) மத்திய எரிசக்தி சங்கம்

  • NTPC, பவர் கிரிட், REC, PFC, NHPC, THDC, NEEPCO மற்றும் SJVN உள்ளிட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு சமூகமாக ‘பவர் ஃபவுண்டேஷனை’ பதிவுசெய்தன. இது எரிசக்தி மற்றும் அதுதொடர்புடைய துறைகளுக்கான முதன்மைக் கொள்கை வாதிடும் பிரிவாக செயல்படும்.
  • இது மாநிலங்கள் & தொழிற்துறைகளுக்கு ஆராய்ச்சியில் உதவுவதையும் இந்தியாவின் ஆற்றல் மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்டு உள்ளது. எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சரான R K சிங், இந்தச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

8. தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையத்தின் (NFRA) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) அஜய் பூஷன் பாண்டே 

ஆ) நந்தன் நிலேகனி

இ) அஸிம் பிரேம்ஜி

ஈ) கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

  • தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நிதிச்செயலாளர் அஜய் பூஷன் பாண்டேவை அரசாங்கம் நியமித்துள்ளது. அமைச்சரவையின் நியமனக் குழு மூன்றாண்டு காலத்திற்கு அவரை நியமித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வருவாய்த்துறை செயலாளராக இருந்து ஓய்வுபெற்றார்.

9. 2022 மார்ச் மாத நிலவரப்படி, சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகளாவிய பட்டியலில் இந்தியா பிடித்து உள்ள இடம் என்ன?

அ) மூன்றாவது

ஆ) ஐந்தாவது 

இ) ஆறாவது

ஈ) ஏழாவது

  • சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்திய பங்குச் சந்தை முதன்முறையாக உலகளவில் பட்டியலின் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. நாட்டின் மொத்த சந்தை மதிப்பு $3.21 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. முதல் 4 இடங்களை அமெரிக்கா ($47.32 டிரில்லியன்), சீனா ($11.52 டிரில்லியன்), ஜப்பான் ($6 டிரில்லியன்) மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
  • இந்தியாவுக்கு அடுத்தபடியாக UK, சௌதி அரபியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.

10. ‘Smart Event Tracking System (SETS)’ என்பது எந்த அமைச்சகம்/முகமையின் சொந்த மென்பொருளாகும்?

அ) இரயில்வே அமைச்சகம் 

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) MSME அமைச்சகம்

ஈ) AIIMS

  • ‘Smart Event Tracking System (SETS)’ என்பது இரயில்வே அமைச்சகத்தின் சொந்த மென்பொருளாகும். இது கூகுள் மேப்ஸ் அடிப்படையிலான திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வில் ஒரு புதிய கருவியாகும்; இது கால்நடைகள் ரயில்களில் சிக்குவதைக் கையாள பயன்படுத்தப்பட்டது.
  • ஆக்ரா பிரிவில் செயல்பட்டு வரும் இம்மென்பொருள் எதிர்காலத்தில் மற்ற பிரிவுகளிலும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச்சமுதாய உயர்வுக்கும், தொண்டாற்றி பெருமைசேர்த்த தமிழறிஞர்கள், தமிழமைப்புக்கு விருதுகள் வழங்கப்பட்டது

யார்- யாருக்கு விருது?

முதல்வர் கணினித் தமிழ் விருது (2020) – முனைவர் வ தனலட்சுமி

திருவள்ளுவர் விருது (2022) – மறைந்த மு மீனாட்சி சுந்தரம்.

2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள்:

அண்ணா விருது – சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்

அம்பேத்கர் விருது – ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

பெரியார் விருது – எழுத்தாளர் க. திருநாவுக்கரசு

காமராசர் விருது – காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன்

பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கௌதமன்

பாரதியார் விருது – ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ண குமார்

தேவநேயப்பாவாணர் விருது – முனைவர் கு அரசேந்திரன்

கி ஆ பெ விசுவநாதம் விருது – முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம இராசேந்திரன்

கம்பர் விருது – பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்

சொல்லின் செல்வர் விருது – சூர்யா சேவியர்

ஜி யு போப் விருது – இதழாளர் அ சு பன்னீர்செல்வன்

உமறுப்புலவர் விருது- மதுரை நா மம்மது

இளங்கோவடிகள் விருது – சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன்

சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்

மறைமலையடிகள் விருது – சொற்பொழிவாளர் சுகி சிவம்

வள்ளலார் விருது – முனைவர் இரா சஞ்சீவிராயர்

அயோத்திதாசப் பண்டிதர் விருது – ஞான அலாய்சியஸ்

சி பா ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை திங்களிதழ்

தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

விருதுத்தொகை எவ்வளவு?

விருதுபெறும் விருதாளர்களுக்கு தலா `2 லட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையால் வழங்கப்படும் பெரியார்விருது பெறுபவருக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படும் அம்பேத்கர் விருதினைப் பெறுபவருக்கும் விருதுத்தொகையாக தலா `5 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

சி பா ஆதித்தனார் திங்களிதழ் விருது பெற்ற உயிர்மை திங்களிதழுக்கு விருதுத்தொகையான `2 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை வழங்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருதுபெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு `5 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

2. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்குப் பிரதமர் பாராட்டு

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்ர் திரைப்படத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வரி விலக்கு: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகம், ஹரியானா, உத்தர பிரதேச மாநில அரசுகள் கேளிக்கை வரியில் விலக்கு அளித்துள்ளன.

3. ஆசிய இளையோர், ஜூனியர் குத்துச்சண்டையில் சென்னை வீரருக்கு தங்கம்: 39 பதக்கங்களை அள்ளியது இந்தியா

ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 39 பதக்கங்களை வென்றது. கடைசி நாளில் சென்னையைச் சேர்ந்த விஷ்வநாத் சுரேஷ் தங்கப்பதக்கம் வென்றார்.

ஜோர்டானின் அம்மான் நகரில் ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்றுமுன்தினம் இளையோருக்கான 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த விஷ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் எர்கெஷோவ்பெக்ஸாட்டை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அதேவேளையில் 63.5கிலோ எடைப் பிரிவில் சோனிப்பட்டைச் சேர்ந்த வன்ஷாஜ் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானில் ஜாவோகிர் உம்மாத லீவ்வை தோற்கடித்து தங்கம் வென்றார்.

92 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமன் சிங் பிஷ்த் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இறுதிசுற்றில் அவர், 1-4 என்றகணக்கில்ஜோர்டானின் சைஃப்அல்-ரவாஷ்தேவிடம் தோல்வியடைந்தார். மகளிர் பிரிவில் நிவேதிதா கார்கி (48 கிலோ), தமன்னா (50 கிலோ), ஷாஹீன் கில் (60 கிலோ), ரவீனா (63 கிலோ), முஸ்கான் (75 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

51 கிலோ எடைப் பிரிவில் ராமன், 54 கிலோ எடைப் பிரிவில்ஆனந்த் யாதவ், 75 கிலோ எடைப்பிரிவில் தீபக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர். இளையோர் பிரிவில் மட்டும் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் 23 பதக்கங்களுடன் முதலிடமும், கஜகஸ்தான் 22 பதக்கங்களுடன் 2-வது இடமும் பிடித்தன.

ஜூனியர் பிரிவில் வினி (50 கிலோ), யாஷிகா (52 கிலோ), நிகிதா சந்த் (60 கிலோ), வைதி (57 கிலோ), ஷிருஷ்டி சாத்தே (63 கிலோ), ருத்ரிகா (75 கிலோ), கிரிஷ் பால் (46 கிலோ), யஷ்வர்தன் சிங் (60 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். ஜூனியர் பிரிவில் இந்தியா 8 தங்கம், 7 வெள்ளி,6 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 2-வது இடம்பிடித்தது. ஒட்டுமொத்தமாக இந்தியா இந்தத் தொடரில் 15 தங்கம், 10 வெள்ளி, 14 வெண்கலம் என 39 பதக்கங்கள் வென்று குவித்தது.

4. ஸ்ரீபெரும்புதூரில் `1,588 கோடியில் சாம்சங் கம்ப்ரசர் ஆலை

திருப்பெரும்புதூரில் `1,588 கோடியில் சாம்சங் நிறுவனத்தின் கம்ப்ரசர் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

5. காவிரி, யமுனை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 நதிக் கரைகளில் `19,000 கோடியில் காடு வளர்ப்புத் திட்டம்: மத்திய அரசு தொடங்கியது

காவிரி, யமுனை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆற்றங் கரைகளில் `19 ஆயிரம் கோடி செலவில் ஆற்றோர காடு வளர்ப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் துறையும், ஜல் சக்தி துறையும் இணைந்து செயல்படுத்தவுள்ளன. `19,000 கோடி செலவில் 13 பெரிய ஆறுகளையொட்டி காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன்மூலம் சுமார் 7,417.36 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு நாட்டில் காடுகளின் பரப்பளவு அதிகரிக்கப்படும்.

காடு வளர்க்கும் திட்டம்மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும். மேலும் வண்டல் மண் பிரதேசங்கள் குறைக்கப்படும். அது மட்டுமல்லாமல் `449.01 கோடி மதிப்பிலான மரமல்லாத, வனப்பொருட்கள் கிடைக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. மேலும் 34.4 கோடி மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சுற்றுச் சூழல் துறை தெரிவித்துள்ளது.

காவிரி, ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், யமுனை, பிரம்மபுத்ரா, லுனி, நர்மதா, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா ஆகிய 13 ஆறுகளையொட்டி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்துக்கான நிதியை தேசிய காடு வளர்ப்பு & சூழல் மேம்பாட்டு வாரியம் வழங்கவுள்ளது.

18,90,110 சதுர கிலோ மீட்டருக்கு…

இந்த 13 நதிகளும் 18,90,110 ச கிலோ மீட்டர் அளவுக்கான பாசன வசதியைக் கொண்டுள்ளன அல்லது புவியியல் பகுதியில் சுமார் 57.45% சதவீதத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் நீளம் 42,830 கிலோ மீட்டர் ஆகும்.

இந்த ஆறுகளையொட்டி பல்வேறு மரவகைகள், மருத்துவ குணம் நிறைந்த செடிகள், புற்கள், புதர்கள், பழமரங்கள் ஆகியவை நடப்படவுள்ளன. இந்தத் திட்டத்தில் 667 மருத்துவச் செடிகள் மற்றும் தோட்ட மரங்களை நடலாம் என முன்மொழியப்பட்டுள்ளது.

அவற்றில் 283 மருத்துவச் செடிகள் இயற்கை நிலப் பரப்புகளுக்கும், 97 மருத்துவச் செடிகள் விவசாய நிலப் பரப்புகளுக்கும் மற்றும் 116 மரங்கள் நகர்ப்புற நிலப் பரப்புகளுக்கும் முன்மொழியப்பட்டுள்ளன.

இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் 2030ஆம் ஆண்டுக்குள் 2.6 கோடி ஹெக்டேர் பாழ்நிலங்கள் மீட்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடந்த கூட்டத்தில், இந்தியா தனது திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வை 2030-க்குள் 100 கோடி டன்கள் குறைப்பதாக உறுதியளித்திருந்தது. மேலும் 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்மூலம் நாட்டின் 50 சதவீதம் மின்னாற்றல் தேவைகளைப்பூர்த்தி செய்துகொள்வோம் என்றும் இந்தியா உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1. Which Union Ministry awards ‘Vishwakarma Rashtriya Puraskar’?

A) Ministry of Education

B) Ministry of Labour & Employment 

C) Ministry of MSME

D) Ministry of Home Affairs

  • The Ministry of Labour & Employment has been awarding the Vishwakarma Rashtriya Puraskar and “National Safety Awards (NSA)” since 1965 and National Safety Awards (Mines) [NSA (Mines)] since 1983.
  • VRP is awarded in recognition of suggestions given by a worker or group of workers resulting in improvement in working conditions. The NSA is given in recognition of safety performance of industrial establishments.

2. In which country, is the largest stone Buddha statue found?

A) India

B) China 

C) Nepal

D) Sri Lanka

  • China’s Leshan Giant Buddha, a 233 feet tall stone statue, is the largest and tallest stone Buddha statue in the world. The statue faces Mount Emei, which has been listed as a UNESCO World Heritage Site since 1996.
  • India’s largest reclining Buddha statue is being built in Bodh Gaya, by Buddha International Welfare Mission. The statue will be 100 feet long and 30 feet high and being made with fiberglass.

3. India’s first ‘Women–owned Industrial Park’ is located in which city?

A) Mumbai

B) Chennai

C) Hyderabad 

D) New Delhi

  • India’s first ‘Women–owned Industrial Park’ has begun operations with 25 Green Projects in Hyderabad. The ‘FLO Industrial Park’ is promoted by FICCI Ladies Organization (FLO) in partnership with the Telangana government. FLO has also brought in 250 crores of investment for the Industrial Park.

4. Fertiliser manufacturer ‘SPIC’ recently set up a Floating Solar power plant in which state?

A) Tamil Nadu 

B) Rajasthan

C) Gujarat

D) Punjab

  • Leading fertiliser manufacturer Southern Petrochemical Industries Corporation Ltd (SPIC) has set up a floating solar project at Thoothukudi in Tamil Nadu. The plant will generate 42 million units of clean energy per year and will help curbing water evaporation reduction on its reservoir. The plant has been set up at an estimated cost of ₹150 crore.

5. Which Union Ministry implements the “Strengthening of Pharmaceutical Industry (SPI)” scheme?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of Chemicals and Fertilizers 

C) Ministry of Home Affairs

D) Ministry of Heavy Industries

  • Department of Pharmaceuticals, Ministry of Chemicals and Fertilizers implements the “Strengthening of Pharmaceutical Industry (SPI)” scheme. The Department has released guidelines for the scheme “Strengthening of Pharmaceutical Industry (SPI)”, with a total financial outlay of Rs.500 Cr for the period from FY 21–22 to FY 25–26.
  • The objectives of the scheme are to strengthen the existing infrastructure facilities in Pharma Sector.

6. Pandrethan temple, which was seen in the news recently, is located in which Indian state/UT?

A) West Bengal

B) Jammu and Kashmir 

C) Himachal Pradesh

D) Gujarat

  • Pandrethan temple is an 8th century heritage site situated in Badamibagh, Srinagar (Jammu and Kashmir). The Chinar Corps of the Indian Army has rejuvenated the site recently.
  • In this regard, the unit was accorded recognition by the National Monuments Authority (NMA) of the Ministry of Culture. The site hosts several figurines of2nd century in the form of two large monolithic rock shiva lingams, seven Gandhara–style sculptures among others.

7. What is the name of the ‘Policy advocacy arm’ for the power and related sectors, formed under the Power Ministry?

A) Power Foundation 

B) Energy Foundation

C) Green Power Foundation

D) Central Power Society

  • Central Public Sector Enterprises (CPSEs) including NTPC, Powergrid, REC, PFC, NHPC, THDC, NEEPCO, and SJVN registered the ‘Power Foundation’, as a society. It serves as the primary policy advocacy arm for the power and related sectors.
  • It aims to assist states and industries with research and to develop solutions for India’s energy transformation. RK Singh, the Minister of Power and New and Renewable Energy, is the society’s chair.

8. Who has been appointed as the Chairman of the National Financial Reporting Authority (NFRA)?

A) Ajay Bhushan Pandey 

B) Nandan Nilekani

C) Azim Premji

D) Kris Gopalakrishnan

  • The Government has appointed former Finance Secretary Ajay Bhushan Pandey as Chairman of the National Financial Reporting Authority (NFRA). The Appointments Committee of the Cabinet (ACC) has been appointed for a period of three years. He retired as Revenue Secretary in February last year.

9. As of March 2022, what is India’s place in the Global List in terms of market capitalisation?

A) Third

B) Fifth 

C) Sixth

D) Seventh

  • India’s equity market has entered into the world’s top–five list, in terms of market capitalisation, for the first time. The country’s total market cap stands at USD 3.21 trillion.
  • The first four places are occupied by the US (USD 47.32 trillion), China (USD 11.52 trillion), Japan (USD 6 trillion) and Hong Kong. India is followed by UK, Saudi Arabia, Canada, France and Germany.

10. ‘Smart Event Tracking System (SETS)’ is the in–house software of which Ministry/Agency?

A) Ministry of Railways 

B) Ministry of Home Affairs

C) Ministry of MSME

D) AIIMS

  • Smart Event Tracking System (SETS) is the in–house software of Ministry of Railways. It is a new tool on Google Maps–based planning and analysis, which has been deployed to tackle the problem of cattle getting run over by trains. The software is made functional in Agra Division and will be adopted by other divisions in the future.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!