TnpscTnpsc Current Affairs

16th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

16th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 16th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022 – ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. கஜகஸ்தான்

இ. வங்காளதேசம்

ஈ. உஸ்பெகிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கஜகஸ்தான்

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்று வருகிறது. ஈராண்டுகளுக்குப்பிறகு நேரடியாக நடைபெறும் முதல் SCO உச்சிமாநாடு இதுவாகும். இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இக் கூட்டம் பிராந்திய பாதுகாப்பு சவால்கள், வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தை மேம்படுத்துதல் போன்றவற்றைப்பற்றி விவாதிப்பதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘ஷூன்யா பரப்புரை’ என்பது எந்தச் செயல்முறையை நோக்கமாகக் கொண்டது?

அ. பட்டாசுகளைத் தடைசெய்வதன்மூலம் வளிமாசைக் குறைப்பது

ஆ. EVக்களைப் பயன்படுத்தி வளிமாசைக் குறைப்பது

இ. மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்பது

ஈ. காடு வளர்ப்பை ஊக்குவிப்பது

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. EVக்களைப் பயன்படுத்தி வளிமாசைக் குறைப்பது

  • ‘ஷூன்யா’ என்பது வளிமாசைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பரப்புரையாகும்; இது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை (EV) பயணம் மற்றும் விநியோகச் செயல்முறைகளுக்கு பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாகும். இந்தியாவின் சுழிய மாசுபாட்டை வலியுறுத்தி தொடங்கப்பட்ட, ‘ஷூன்யா’வின் ஓராண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் NITI ஆயோக் ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்த நிகழ்வின்போது, மேம்பட்ட வேதியியல் மின்கல (ACC) ஆற்றல் சேமிப்பு அறிக்கை பற்றிய தேசிய திட்டம் தொடங்கப்பட்டது.

3. நடுவண் உயிரியல் பூங்கா ஆணையத்தின் சமீபத்திய தரவரிசையில், முதலிடம் பிடித்துள்ள இந்திய விலங்கியல் பூங்கா எது?

அ. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னை

ஆ. பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா, டார்ஜிலிங்

இ. சாமராஜேந்திரா விலங்கியல் பூங்கா, மைசூரு

ஈ. திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா, டார்ஜிலிங்

  • மேலாண்மை & செயல்திறன் அடிப்படையில் நடுவண் உயிரியல் பூங்கா ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி, டார்ஜிலிங்கில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவிற்கு அதிகபட்சமாக 83 சதவீத மதிப்பெண் வழங்கப்பட்டது. இமயமலை கருங்கரடி, பனிச்சிறுத்தை, கோரல் மற்றும் இமயமலை வரையாடு தவிர, இம்மிருகக்காட்சிசாலையின் முதன்மை ஈர்ப்புகளில் சிவப்புப்பாண்டாவும் ஒன்றாக உள்ளது. சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இரண்டாவது இடத்தையும், மைசூருவில் உள்ள ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

4. 2022 – FIFA 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்துகிற நாடு எது?

அ. இலங்கை

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. இந்தியா

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • இந்தியாவில் பதினேழு வயதுக்குட்பட்டவர்களுக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை (2022) நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு பிரதமர் தலைமையிலான நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி (2022) இந்தியாவில் அக்.11–30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இளையோர்கள் பங்கேற்கும் இப்போட்டியின் ஏழாவது பகுதி முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.
  • இந்தியா, இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டில், FIFA 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக்கோப்பையை நடத்தியது. கோவா, நவி மும்பை மற்றும் புவனேசுவரத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், 16 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

5. 2022 – உலக நீர் மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்தும் நாடு எது?

அ. ஸ்பெயின்

ஆ. ஜெர்மனி

இ. டென்மார்க்

ஈ. ஹங்கேரி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. டென்மார்க்

  • பன்னாட்டு நீர் சங்கமானது 2022 – உலக நீர் மாநாடு மற்றும் கண்காட்சியை டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடத்துகிறது. இந்தப் பன்னாட்டு கண்காட்சியில், ‘இந்தியாவில் நகர்ப்புற கழிவுநீர் சூழல்’ என்ற தலைப்பில் இந்தியப் பிரதிநிதிகள் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர். அடல் புத்தாக்க இயக்கம் (AIM), NITI ஆயோக், ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய தூய்மை கங்கை இயக்கம் (NMCG), பன்னாட்டு முகமையான டென்மார்க் புத்தாக்க மையம் (ICDK) மற்றும் கல்விச்சாலையான பாம்பே – இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT–B) ஆகியவை இந்த வெள்ளை அறிக்கையைத் தயாரித்தன.

6. எந்த இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசமானது பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கடன் திட்டத்தை, ‘மகிளா நிதி’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. மேற்கு வங்கம்

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இராஜஸ்தான்

  • இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கடன் திட்டத்தை, ‘மகிளா நிதி’ என்ற பெயரில் தொடங்கி வைத்தார். பெண்கள் சமத்துவ நாளை முன்னிட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், புதிய தொழில் தொடங்குவதற்கும், தொழிலை விரிவுபடுத்துவதற்கும் பெண்களுக்கு எளிதாக கடன் வழங்கப்படும். 2022–23 மாநில பட்ஜெட்டில், இராஜஸ்தான் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டுக் கவுன்சில்மூலம், ‘மகிளா நிதி’ அமைப்பதாக அவ்வரசாங்கம் அறிவித்தது.

7. கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கு எதிராக இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட qHPVஐ அறிமுகப்படுத்திய மருந்து நிறுவனம் எது?

அ. Dr ரெட்டி ஆய்வகம்

ஆ. சீரம் இந்தியா நிறுவனம்

இ. பயோகான்

ஈ. பாரத் பயோடெக்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சீரம் இந்தியா நிறுவனம்

  • சீரம் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து உயிரித்தொழில்நுட்பத்துறை, கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கு எதிராக இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குவாட்ரிவலன்ட் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை (qHPV) அறிமுகப்படுத்தவுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கான உலகளாவிய பாதிப்புகளில் 1/5 பங்கை இந்தியா கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 1.23 இலட்சம் பாதிப்புகளும் சுமார் 67,000 இறப்புகளும் இதன்மூலம் நிகழ்கிறது.

8. ‘இராஷ்ட்ரிய போஷன் மா’ அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ. ஜூலை

ஆ. ஆகஸ்ட்

இ. செப்டம்பர்

ஈ. டிசம்பர்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. செப்டம்பர்

  • சத்தான உணவை உட்கொள்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் செப்.1 முதல் செப்.7 வரை ‘தேசிய ஊட்டச்சத்து வாரமாக’ இந்தியா கடைப்பிடிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 5ஆவது ‘இராஷ்ட்ரிய போஷன் மா’வை நாடு முழுவதும் செப்.1 முதல் 30 வரை கொண்டாடுகிறது. ‘மகிளா ஔர் ஸ்வஸ்த்யா’ மற்றும் ‘பச்சா ஔர் ஷிக்ஷா’ ஆகிய கருப்பொருள்களில் முதன்மை கவனம் செலுத்தி, கிராமப் பஞ்சாயத்துகள்மூலம் போஷான் பஞ்சாயத்துகளாக, ‘போஷான் மா’ கொண்டாடுவதே இந்த ஆண்டு (2020), ‘போஷன் மா’ நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

9. “Indian Banking in Retrospect – 75 years of Independence” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. K V காமத்

ஆ. உர்ஜித் படேல்

இ. அசுதோஷ் இராரவிகர்

ஈ. அருந்ததி பட்டாச்சார்யா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அசுதோஷ் இராரவிகர்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் DEPRஇன் இயக்குநர் Dr அசுதோஷ் இராரவிகர், “Indian Banking in Retrospect – 75 years of Independence” என்ற நூலை எழுதியுள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் இந்திய வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இந்நூல் பட்டியலிடுகிறது. 1990–களின் பிற்பகுதியில் ஏற்பட்ட தென்கிழக்காசிய நெருக்கடி, கடந்த 2008ஆம் ஆண்டின் உலகளாவிய சரிவு, 2013–14இன் பிற நெருக்கடிகள் ஆகியவற்றின்போது வங்கித் துறை எவ்வாறு சிறந்த நெகிழ்திறனைக் காட்டியது என்பதை இந்நூல் சிறப்புற விவரிக்கிறது.

10. கல்வி வாரியங்களின் அனைத்து மதிப்பீடு தொடர்பான தகவல்களுக்கான தேசிய ஒற்றைச்சாளரமூலத்தின் பெயரென்ன?

அ. NIPUN

ஆ. STARS

இ. PARAKH

ஈ. KALAM

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. PARAKH

  • PARAKH (Performance Assessment, Review and Analysis of Knowledge for Holistic Development) என்பது தேசிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) மற்றும் மாநில கல்வி வாரியங்கள் இணைந்து மாநில மற்றும் நடுவண் வாரியங்களில் ஒரே சீரான தன்மையைக்கொண்டு வருவதற்காக ஒரு ‘சிறந்த கட்டமைப்பை’ உருவாக்குகின்றன. அனைத்து மதிப்பீடு தொடர்பான தகவல்களுக்கும், ‘PARAKH’ என்ற தேசிய ஒற்றைச்சாளரம் மூலமாக விளங்கும். இது தேசிய சாதனை ஆய்வு (NAS) மற்றும் மாநில சாதனை ஆய்வு போன்ற காலமுறை சோதனைகளையும் மேற்பார்வையிடும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘தூய்மையே சேவை’ இருவார இயக்கம் தொடங்கியது

ஊரக இந்தியாவில் முழுமையான தூய்மையை நோக்கிய முனைவுகளை விரைவுப்படுத்துவதற்காக ‘தூய்மையே சேவை’ என்ற இருவார இயக்கத்தை ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை தொடங்கியுள்ளது. குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்றுவது, திடக்கழிவு மேலாண்மைக்கான செயல்பாடு ஆகியவற்றுக்கு இது மாபெரும் சமூக திரட்சியான இயக்கமாகும். இதன் ஒருபகுதியாக (i) கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்காத மக்கள் இயக்கத்தில் சமூக திரட்சியையும் பங்கேற்பையும் உறுதிசெய்தல், (ii) கிராமங்களில் முழுமையான துப்புரவுக்கு முக்கியத்துவமளித்தல், (iii) அனைவரின் பணியாக தூய்மை என்ற கோட்பாட்டை மறுவலியுறுத்துதல், (iv) தூய்மை இந்தியா நாளை (அக்.2) கிராம அளவில் கொண்டாடுதல் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. செப்.15 அன்று தொடங்கிய இந்த இயக்கம், அக்.2 அன்று நிறைவடையும்.

இந்த இயக்கத்தின்கீழ் கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய செயல்கள்:

  • கழிவுப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் பிரித்தலுக்கான கூடங்கள் / மையங்கள் கட்டுதல்.
  • நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் தூய்மையாகப் பராமரித்தல், அவற்றைச்சுற்றி மரக்கன்றுகள் நடுதல்.
  • குப்பைகளை சேகரிப்பதற்கு அரசு இ-சந்தைமூலம் மின்கலத்தால் இயக்கப்படுகின்ற மூன்று சக்கர வாகனங்கள் / மின்சார வாகனங்கள் வாங்குதல்.
  • நெகிழிபோன்ற மக்காத குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்தல்.
  • ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப்பொருட்களால் ஏற்படும் தீமைகள்குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • குப்பைகள் போடாமைக்கான முழக்கம் எழுதுதல் / உறுதிமொழி எடுத்தல்.

2. சிறந்த உயிரியல் பூங்காவாக டார்ஜீலிங் உயிரியல் பூங்கா தேர்வு: வண்டலூர் பூங்காவுக்கு 2ஆவது இடம்

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் இமயமலைப்பகுதியில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமாலய உயிரியில் பூங்கா, நாட்டின் சிறந்த உயிரியல் பூங்காவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 150க்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்கள் உள்ளன. பூங்காக்களின் இயக்குநர்களுக்கான மாநாடு ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் கடந்த செப்.10 அன்று நடைபெற்றது. மத்திய உயிரியல் பூங்காக்களுக்கான ஆணையம் பூங்காக்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தரப்பட்டியலை அம்மாநாட்டில் வெளியிட்டது. அந்தப்பட்டியலில், மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங் பகுதியில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமாலய உயிரியல் பூங்கா முதலிடத்தைப் பெற்றது.

சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா 2ஆவது இடத்தையும், கர்நாடகத்தின் மைசூருவில் அமைந்துள்ள ஸ்ரீ சாமாராஜேந்திரா உயிரியல் தோட்டம் 3ஆவது இடத்தையும் பெற்றன. கொல்காத்தாவில் அமைந்து உள்ள அலிப்பூர் உயிரியல் தோட்டம் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

சர்வதேச அங்கீகாரம்: நடுவண் உயிரியல் பூங்காவுக்கான ஆணையம், உயிரியல் பூங்காக்களின் நிர்வாகம், செயல்திறன் போன்ற பல்வேறு நிலைகளில் மேற்கொண்ட மதிப்பீட்டில் டார்ஜீலிங் உயிரியல் பூங்கா 83 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தது. கடந்த 1958ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டார்ஜீலிங் உயிரியல் பூங்கா, கிழக்கு இமய மலையில் காணப்படும் பனிச்சிறுத்தை, சிவப்புப் பாண்டா கரடி போன்ற அழிவுநிலையை எதிர்நோக்கியுள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which country is the host of Shanghai Cooperation Organization (SCO) Summit 2022?

A. India

B. Kazakhstan

C. Bangladesh

D. Uzbekistan

Answer & Explanation

Answer: B. Kazakhstan

  • The Shanghai Cooperation Organisation (SCO) summit is being held in Samarkand in Uzbekistan. It is SCO’s first in–person summit in after two years. The summit will also see the participation of Russian President Vladimir Putin, Chinese President Xi Jinping and Indian Prime Minister Narendra Modi. The meeting aims to deliberate on regional security challenges, boosting trade and energy supplies among other issues.

2. Shoonya Campaign, which was seen in the news, is aimed at which process?

A. Reduce Air Pollution by banning crackers

B. Reduce Air Pollution by using Evs

C. Promote Rain Water Harvesting

D. Promote Afforestation

Answer & Explanation

Answer: B. Reduce Air Pollution by using Evs

  • Shoonya is an awareness campaign to reduce air pollution by promoting the use of electric vehicles (EVs) for ride–hailing and deliveries.  NITI Aayog held a forum to commemorate the one–year anniversary of Shoonya, India’s zero pollution e–mobility campaign. During the event, the National Programme on Advanced Chemistry Cell (ACC) Energy Storage report was also launched.

3. Which Indian zoological park tops the Central Zoo Authority’s recent rankings?

A. Arignar Anna Zoological Park, Chennai

B. Padmaja Naidu Himalayan Zoological Park, Darjeeling

C. Chamarajendra Zoological Gardens, Mysuru

D. Thiruvananthapuram Zoo

Answer & Explanation

Answer: B. Padmaja Naidu Himalayan Zoological Park, Darjeeling

  • As per the list released by the Central Zoo Authority based on management and effectiveness, the Padmaja Naidu Himalayan Zoological Park, Darjeeling was given the highest percentage of 83. The Red Panda is one of the top attractions of the Zoo, besides Himalayan Black Bear, Snow Leopard, Goral and Himalayan Thar. The Arignar Anna Zoological Park in Chennai has secured the second position, followed by the Sri Chamarajendra Zoological Gardens in Mysore.

4. Which country is the host of FIFA Under–17 Women’s World Cup 2022?

A. Sri Lanka

B. UAE

C. India

D. Bangladesh

Answer & Explanation

Answer: C. India

  • The Union Cabinet of India approved the Signing of Guarantees for hosting Federation Internationale de Football Association (FIFA) Under 17 Women’s World Cup 2022 in India.
  • The prestigious FIFA Under–17 Women’s World Cup will be held for the first time in India between 11 and 30 October, 2022. India had earlier hosted the FIFA Under–17 Men’s World Cup 2017. The matches will be played in Navi Mumbai, Goa and Bhubaneswar while teams from 16 countries will participate in the event.

5. Which country is the host of the World Water Congress and Exhibition 2022?

A. Spain

B. Germany

C. Denmark

D. Hungary

Answer & Explanation

Answer: C. Denmark

  • International Water Association (IWA) World Water Congress and Exhibition 2022 is hosted by Copenhagen, Denmark. The Indian Delegation launched a Whitepaper on ‘Urban Wastewater Scenario in India’ at the International Exhibition. Atal Innovation Mission (AIM), NITI Aayog, Ministry of Jal Shakti and National Mission for Clean Ganga (NMCG), international agency Innovation Centre Denmark (ICDK) and academia Indian Institute of Technology Bombay (IITB) prepared the whitepaper.

6. Which Indian state/UT launched the ‘Mahila Nidhi’, loan scheme for social and economic development of women through loans?

A. Uttar Pradesh

B. Rajasthan

C. West Bengal

D. Odisha

Answer & Explanation

Answer: B. Rajasthan

  • Rajasthan Chief Minister Ashok Gehlot launched ‘Mahila Nidhi’, a loan scheme for the social and economic development of women through loans. The scheme was launched on the occasion of Women’s Equality Day. Under the scheme, easy credit will be available to women for starting new businesses and expanding their business. In the state budget 2022–23, the government announced to set up ‘Mahila Nidhi’ through Rajasthan Rural Livelihood Development Council.

7. Which pharma company launched India’s first indigenously developed qHPV against cervical cancer?

A. Dr Reddy’s Lab

B. Serum Institute of India

C. Biocon

D. Bharat Biotech

Answer & Explanation

Answer: B. Serum Institute of India

  • The Department of Biotechnology in partnership with the Serum Institute of India is set to launch India’s first indigenously developed Quadrivalent Human Papillomavirus vaccine (qHPV) against cervical cancer. According to the World Health Organisation (WHO), India accounts for about a fifth of the global burden for cervical cancer with 1.23 lakh cases and around 67,000 deaths every year.

8. ‘Rashtriya Poshan Maah’ is observed every year during which month?

A. July

B. August

C. September

D. December

Answer & Explanation

Answer: C. September

  • India observes National Nutrition Week from September 1 to September 7 every year to raise awareness about the importance of consuming nutritious food.
  • Ministry of Women and Child Development is celebrating the 5th Rashtriya Poshan Maah 2022 across the nation from 1st to 30th September. This year, the objective of the ‘Poshan Maah’ is to celebrate ‘Poshan Maah’ through Gram Panchayats as Poshan Panchayats with key focus on ‘Mahila aur Swasthya’ and ‘Bacha aur Shiksha’.

9. Who is the author of the book “Indian Banking in Retrospect – 75 years of Independence”?

A. K V Kamath

B. Urjit Patel

C. Ashutosh Raravikar

D. Arundhati Bhattacharya

Answer & Explanation

Answer: C. Ashutosh Raravikar

  • Dr Ashutosh Raravikar, Director in the DEPR of RBI has authored a book titled “Indian Banking in Retrospect – 75 years of Independence”. The books attempt to capture developments in the Indian banking sector over the last 75 years. It describes how the banking sector displayed great resilience during South–East Asian crisis of the late ’90s, global meltdown of 2008, the taper–tantrums of 2013–14 among other crises.

10. What is the name of the national single–window source for all assessment–related information of education boards?

A. NIPUN

B. STARS

C. PARAKH

D. KALAM

Answer & Explanation

Answer: C. PARAKH

  • PARAKH (Performance Assessment, Review and Analysis of Knowledge for Holistic Development) was announced in the National Educational Policy (NEP). The National Council of Educational Research and Training (NCERT) and the state education boards are collaborating to draw up a ‘benchmark framework’ to bring uniformity across state and central boards. PARAKH will be the national single–window source for all assessment–related information. It will oversee the periodic tests like the National Achievement Survey (NAS) and State Achievement Survey.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!