TnpscTnpsc Current Affairs

17th & 18th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

17th & 18th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 17th & 18th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th & 18th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘Youth Co: Lab’ என்ற இளையோர் புத்தாக்க இயக்கம் என்பது அடல் புத்தாக்க இயக்கம் (AIM) மற்றும் கீழ்க்காணும் எந்த நிறுவனத்தின் முனைவு ஆகும்?

அ. WEF

ஆ. UNDP

இ. UNICEF

ஈ. UNESCO

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. UNDP

  • ஆசிய பசிபிக்கின் மிகப்பெரிய இளையோர் புத்தாக்க இயக்கமான Youth Co: Lab’இன் ஐந்தாம் பதிப்பானது சமீபத்தில் அடல் புத்தாக்க இயக்கம் (AIM), NITI ஆயோக் மற்றும் UNDP இந்தியா ஆகியவற்றால் தொடங்கப்பட்டது. இது அடல் புத்தாக்க இயக்கம், NITI ஆயோக் ஆகியவற்றுடன் இணைந்து UNDP இந்தியாவால் 2019இல் தொடங்கப்பட்ட ஒரு முனைவாகும். தலைமைத்துவம், சமூக–புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின்மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்த இளையோர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ஆசிய–பசிபிக் நாடுகளுக்கான பொதுவான நிகழ்ச்சி நிரலை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டில் COP15ஆல் அங்கீகரிக்கப்பட்ட இந்திய முனைவு எது?

அ. தூய்மை இந்தியா இயக்கம்

ஆ. நமாமி கங்கை

இ. பசுமை இந்தியாவுக்கான தேசிய இயக்கம்

ஈ. உலக நீர் திட்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நமாமி கங்கை

  • உலக மறுசீரமைப்பு நாளன்று கனடாவின் மாண்ட்ரீலில் நடந்த பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டில் COP15ஆல் இந்தியாவின், ‘நமாமி கங்கை’ முன்முனைவு அங்கீகரிக்கப்பட்டது. கங்கையாற்றுக்குப் புத்துயிரளிப்பதற்கான ‘நமாமி கங்கை’ முன்முனைவானது, இயலுலகிற்கு புத்துயிரளிக்கும் நோக்கில் செயல்படும் சிறந்த 10 உலக மறுசீரமைப்பு திட்டங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புக்கான ஐநா தசாப்தத்தின்கீழ் இந்த முனைவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

3. ‘பிரதமர் கௌஷல் கோ காம் காரியகிராம் (PMKKK)’ திட்டத்தின் புதிய பெயர் என்ன?

அ. பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS)

ஆ. மிஷன் கர்மயோகி

இ. சமர்த் திட்டம்

ஈ. பிரதமர் ஸ்வாநிதி திட்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS)

  • பிரதம மந்திரி கௌஷல் கோ காம் காரியகிராம் (PMKKK) திட்டத்திற்கு தற்போது பிரதமர் விராசத் கா சம்வர்தன் (PM விகாஸ்) திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக நடுவண் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி தெரிவித்தார். ஒருங்கிணைந்த இத்திட்டம் அமைச்சகத்தின் ஐந்து பழைய திட்டங்களை ஒன்றிணைக்கிறது: சீகோ ஔர் கமாவோ, USTTAD, ஹமாரி தரோஹர், நை ரோஷ்னி மற்றும் நை மன்சில். 15வது நிதிக்குழுமத்தின் காலத்திற்கு இந்தத் திட்டத்திற்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4. FIH ஒடிஸா ஆடவர் உலகக்கோப்பை–2023இன் அதிகாரப்பூர்வ பங்குதாரராக ஆன நிறுவனம் எது?

அ. பைஜூவின்

ஆ. டாடா ஸ்டீல்

இ. ரிலையன்ஸ் தொழிற்துறைகள்

ஈ. ஜியோ

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. டாடா ஸ்டீல்

  • FIH ஒடிசா ஆடவர் உலகக்கோப்பை–2023இன் அதிகாரப்பூர்வ பங்காளராக ஆவதற்காக ஹாக்கி இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் கையெழுத்திட்டது. FIH ஆடவர் உலகக்கோப்பைப் போட்டிகள் என்பது ஆண்களுக்கான முதன்மை போட்டியாகும். இது இப்போட்டியின் பதினைந்தாவது பதிப்பாகும். 2023ஆம் ஆண்டுக்கானப் போட்டி புவனேசுவர் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களின் நடைபெறுகிறது.

5. ‘சூர்ய கிரண்’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் கூட்டுப்பயிற்சியாகும்?

அ. நேபாளம்

ஆ. இலங்கை

இ. பிரான்ஸ்

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நேபாளம்

  • இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சியான ‘சூர்ய கிரண்’ 16ஆவது முறையாக நேபாள இராணுவப் போர்ப்பள்ளி அமைந்துள்ள சல்ஜாண்டியில் நடைபெறவுள்ளது. ‘சூர்ய கிரண்’ பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவும் நேபாளமும் காடு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து இந்தப் பயிற்சியை மேற்கொள்கின்றன. கடந்த ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் 15ஆவது ‘சூர்ய கிரண்’ இராணுவப் பயிற்சி நடந்தேறியது.

6. ‘Carbon Capture, Utilisation, and Storage Policy Framework’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. NITI ஆயோக்

ஈ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. NITI ஆயோக்

  • NITI ஆயோக், ‘Carbon Capture, Utilisation, and Storage Policy Framework and its Deployment Mechanism in India’ என்ற தலைப்பிலான ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. கரிமத்தைக் கவர்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இவ்வறிக்கை ஆராய்கிறது. கரிமநீக்கத்தை அடைதற்கான ஓர் உமிழ்வு குறைப்பு உத்தியாக இது உள்ளது. அதன் பயன்பாட்டிற்கு பல்வேறு துறைகளில் தேவைப்படும் பரந்த அளவிலான கொள்கை தலையீடுகளை இந்த அறிக்கை சிறப்பித்துக் காட்டுகிறது.

7. கொள்கை பகுப்பாய்வு மையம் வெளியிட்ட, ‘உலக சிறுபான்மை குறியீட்டில்’ முதலிடம் வகிக்கிற நாடு எது?

அ. இலங்கை

ஆ. இந்தியா

இ. பாகிஸ்தான்

ஈ. ஆப்கானிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • பாட்னாவைச் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமான கொள்கை பகுப்பாய்வு மையம் இந்தியாவை ‘உலக சிறுபான்மை குறியீட்டில்’ முதலிடத்தில் வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான், பனாமா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. உலக சிறுபான்மையினர் அறிக்கையில் மொத்தம் 110 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகியவை இப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. இந்த அறிக்கையை முன்னாள் துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா வெளியிட்டார்.

8. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகபட்சமாக எத்தனை உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம்?

அ. 05

ஆ. 10

இ. 15

ஈ. 25

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 10

  • ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (UPSC) ஒரு தலைவரின் தலைமையில் அதிகபட்சமாக பத்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக முன்னாள் சுகாதார செயலாளர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020 ஜூலையில் அவர் சுகாதாரச் செயலாளராக பதவியேற்றார். இந்த நியமனத்திற்குப் பின்னும், ஆணையத்தில் 4 உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ளது.

9. ‘அக்னி வாரியர்’ என்பது இந்தியாவிற்கும் கீழ்க்காணும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் ஓர் இருதரப்பு பாதுகாப்பு பயிற்சி ஆகும்?

அ. அமெரிக்கா

ஆ. பிரான்ஸ்

இ. சிங்கப்பூர்

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சிங்கப்பூர்

  • சிங்கப்பூர் மற்றும் இந்திய இராணுவம் இடையேயான இருதரப்புப் பயிற்சியான ‘அக்னி வாரியர்’ பயிற்சியின் 12ஆம் பதிப்பு மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாலியில் நிறைவடைந்தது. ‘அக்னி வாரியர்’ பயிற்சி, கூட்டு சுடுதிறன் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் புதிய தலைமுறை பீரங்கி உபகரணங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. இதன் இறுதிக்கட்டப்பயிற்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.

10. ஐஐடி–மெட்ராஸ் நிறுவனமானது ஐநா–நீடித்த வளர்ச்சி இலக்குகளில் செயலாற்றுவதற்காக, “எரிசக்தி மையம்” தொடங்க கீழ்க்காணும் எந்த நாட்டுடன் கூட்டிணைந்துள்ளது?

அ. அமெரிக்கா

ஆ. சிங்கப்பூர்

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆஸ்திரேலியா

  • மெட்ராஸ்–இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ‘ஆஸ்திரேலியா–இந்தியா எரிசக்தி மையத்தை தொடங்கவுள்ளது. மெட்ராஸ் ஐஐடிஉம் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள டீக்கின் பல்கலைக்கழகமும் இணைந்து இம்மையத்தை வழிநடத்துகின்றன. இருநாடுகளைச்சேர்ந்த பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறையினரிடையே ஐக்கிய நாடுகளின் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. ஆசிரியருக்கு தமிழ்ச்செம்மல் விருது

ஓய்வு பெற்ற தமிழாசிரியர் நாகை மு சொக்கப்பன் தமிழ்ச்செம்மல் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவர், தமிழ் வளர்ச்சித்துறையின் 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்விருதை வழங்குகிறார். ‘அழுவதற்காக பிறந்தோம்’, ‘யார் நமக்கு சொந்தம்’, ‘சொக்கப்பன் கவிதைகள்’ ஆகிய மூன்று நூல்களை மு சொக்கப்பன் எழுதி வெளியிட்டுள்ளார்.

17th & 18th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Youth Co: Lab’ youth innovation movement is an initiative of Atal Innovation Mission (AIM) and which institution?

A. WEF

B. UNDP

C. UNICEF

D. UNESCO

Answer & Explanation

Answer: B. UNDP

  • The 5th edition of Youth Co: Lab, Asia Pacific’s largest youth innovation movement was recently launched by Atal Innovation Mission (AIM), NITI Aayog and UNDP India. It is an initiative launched in 2019 by UNDP India in partnership with Atal Innovation Mission, NITI Aayog. It aims to establish a common agenda for Asia–Pacific countries to empower youth to accelerate implementation of the Sustainable Development Goals through leadership, social innovation, and entrepreneurship.

2. Which Indian initiative has been recognised by the Conference of Parties (COP15) to the Convention on Biodiversity?

A. Swachh Bharat Mission

B. Namami Gange

C. ‎National Mission for Green India

D. Global Water Project

Answer & Explanation

Answer: B. Namami Gange

  • The Namami Gange initiative was recognised during the 15th Conference of Parties (COP15) to the Convention on Biodiversity (CBD) in Montreal, Canada on World Restoration Day. Namami Gange initiative to rejuvenate river Ganga was recognised as one of the top 10 World Restoration Flagships aimed at reviving the natural world. The initiatives were selected under the United Nations Decade on Ecosystem Restoration.

3. What is the new name of ‘Pradhan Mantri Kaushal Ko Kaam Karyakram (PMKKK)’?

A. Pradhan Mantri Virasat Ka Samvardhan (PM VIKAS)

B. Mission Karmayogi

C. Samarth Scheme

D. Pradhan Mantri SVANidhi Scheme

Answer & Explanation

Answer: A. Pradhan Mantri Virasat Ka Samvardhan (PM VIKAS)

  • The Minister of Minority Affairs, Smriti Zubin Irani informed that the Pradhan Mantri Kaushal Ko Kaam Karyakram (PMKKK) has now been named as Pradhan Mantri Virasat Ka Samvardhan (PM VIKAS) Scheme. The integrated scheme merges five erstwhile schemes of the Ministry: Seekho aur Kamao, USTTAD, Hamari Dharohar, Nai Roshni and Nai Manzil. The scheme has been approved by the Cabinet for the period of 15th Finance Commission.

4. Which company became the official partner of FIH Odisha Hockey Men’s World Cup 2023?

A. Byju’s

B. Tata Steel

C. Reliance Industries

D. Jio

Answer & Explanation

Answer: B. Tata Steel

  • Tata Steel Limited signed a Memorandum of Understanding with Hockey India to become an official partner of the FIH Odisha Hockey Men’s World Cup 2023. The FIH Men’s World Cup is the 15th edition of the top tournament for men, and will take place in Bhubaneswar and Rourkela during 2023.

5. ‘SURYA KIRAN’ is a joint training Exercise conducted between India and which country?

A. Nepal

B. Sri Lanka

C. France

D. Australia

Answer & Explanation

Answer: A. Nepal

  • The 16th Edition of Indo–Nepal joint training Exercise ‘SURYA KIRAN–XVI’ between India and Nepal commenced at Nepal Army Battle School, Saljhandi. Exercise SURYA KIRAN is conducted annually between India and Nepal. Last year, the 15th India–Nepal combined ‘Surya Kiran’ military training exercise took place in Pithoragarh, Uttarakhand.

6. Which institution released a report titled ‘Carbon Capture, Utilisation, and Storage Policy Framework’?

A. ISRO

B. DRDO

C. NITI Aayog

D. Ministry of Environment, Forest and Climate Change

Answer & Explanation

Answer: C. NITI Aayog

  • NITI Aayog released a study report, titled ‘Carbon Capture, Utilisation, and Storage Policy Framework and its Deployment Mechanism in India’. The report explores the importance of Carbon Capture, Utilisation, and Storage as an emission reduction strategy to achieve deep decarbonisation. The report outlines broad level policy interventions needed across various sectors for its application.

7. Which country tops the ‘Global minority index’ published by Centre for Policy Analysis (CPA)?

A. Sri Lanka

B. India

C. Pakistan

D. Afghanistan

Answer & Explanation

Answer: B. India

  • Patna–based research institute Centre for Policy Analysis (CPA) placed India on top of the ‘Global minority index’. It is followed by South Korea, Japan, Panama and the US, in the Global Minority Report listing 110 countries. Maldives, Afghanistan and Somalia are placed at the bottom of the list. The report was released by former vice president of India M Venkaiah Naidu.

8. The Union Public Service Commission can have a maximum of how many members?

A. 05

B. 10

C. 15

D. 25

Answer & Explanation

Answer: B. 10

  • The Union Public Service Commission (UPSC) is headed by a chairperson and can have a maximum of 10 members. Former Health Secretary Preeti Sudan has been appointed as a member of Union Public Service Commission (UPSC). She superannuated as the health secretary in July 2020. With the appointment, there is a vacancy of four members in the Commission.

9. Agni Warrior is a bilateral defence exercise held between India and which country?

A. USA

B. France

C. Singapore

D. Sri Lanka

Answer & Explanation

Answer: C. Singapore

  • The 12th Edition of Exercise Agni Warrior, a bilateral exercise between the Singapore and Indian Army concluded at Devlali (Maharashtra). Exercise Agni Warrior, involved joint firepower planning, execution and use of New Generation Artillery Equipment. Indigenously manufactured Artillery guns and howitzers also participated in the final phase of the exercise.

10. IIT–Madras has partnered with which country to launch “Centre for Energy” to work on UN–SDGs?

A. USA

B. Singapore

C. Australia

D. Germany

Answer & Explanation

Answer: C. Australia

  • The Indian Institute of Technology (IIT), Madras is partnering with Australian Universities to launch ‘Australia–India Centre for Energy (AICE). IIT Madras and Deakin University in Australia are leading the Centre, which aims to work on UN Sustainable Development Goals (SDGs). It also aims to promote collaboration among universities, research institutes and industry from both countries in energy domain.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!