Tnpsc

17th & 18th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th & 18th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th & 18th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th & 18th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. BEPS’இல் OECD / G20 உள்ளடக்கிய கட்டமைப்பில் இந்தியா இணைந்தது. BEPS’இன் விரிவாக்கம் என்ன?

அ) Base Erosion and Profit Shifting

ஆ) Business Erosion and Profit Shifting

இ) Business Expansion and Profit Shifting

ஈ) Base Expansion and Profit Shifting

  • Base Erosion மற்றும் Profit Shifting’கான ஜி20-ஓஇசிடி உள்ளடக்கிய கட்டமைப்பின்கீழ், உலகளாவிய வரி ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்தது. இது சர்வதேச வரி விதிகளை சீர்திருத்தவும், பன்னாட்டு நிறுவனங்கள் எங்கு இயங்கினாலும் அவற்றின் நியாயமான பங்கை செலுத்துவதை உறுதிசெய்யவும் முயற்சி செய்கிறது.
  • இருப்பினும், உலகளாவிய வரி விதிமுறை அமல்படுத்தப்படும்போது கூகிள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற MNC’களுக்கு விதிக்கும் சமன்பாட்டு வரியை இந்தியா திரும்பப்பெறவேண்டும்.

2. ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, நுண் நிறுவனங்களுக்கான முன்னுரிமைத்துறை கடன் இலக்கு என்ன?

அ) 5%

ஆ) 7.5%

இ) 10%

ஈ) 12%

  • வங்கியின் மொத்த கடனில் 7.5% (ANBC அல்லது CEOBE) நுண் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. சமீபத்தில், MSME’களின் (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) கீழ் சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தை சேர்ப்பதாக மத்திய MSME அமைச்சகம் அறிவித்தது.
  • இந்த வகைப்படுத்தலின்படி, வர்த்தகர்கள் இப்போது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்கீழ் முன்னுரிமைத் துறை கடன் வழங்கலின் பலனைப் பெறுவார்கள். ‘ஆத்மனிர்பர் பாரத்’கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக உடனடி நிதி பெறவும் அவர்கள் தகுதிபெறுவார்கள்.

3. இந்தியாவில் ‘சேட்டிலைட் டிவி வகுப்பறைகளை’ செயல்படுத்த ஒப்புதல் அளித்த நிறுவனம் எது?

அ) DRDO

ஆ) ISRO

இ) CDAC

ஈ) NASSCOM

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) இந்தியாவில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி வகுப்பறைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க கல்விதொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஒப்புதல் அளித்தது. COVID பொது முடக்கம்காரணமாக கற்றல் இடைவெளியைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாணவர்களுக்கான முன்மொழியப்பட்ட செயற்கைக்கோள் தொலைக் காட்சி வகுப்பறை குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கல்வி, MEITY மற்றும் தூர்தர்ஷன் நாடாளுமன்ற நிலைக்குழு முன் விளக்கக்காட்சி அளித்தனர்.

4. பின்வரும் எந்த நாட்டின் முதலீட்டு நிறுவனம், OCO குளோபல் நிறுவனத்தின் உலகின் மிகப் புதுமையான முதலீட்டு ஊக்குவிப்பு முகமை – 2021’ஐ வென்றது?

அ) அமெரிக்கா

ஆ) வங்கதேசம்

இ) சீனா

ஈ) இந்தியா

  • இன்வெஸ்ட் இந்தியா முகமையானது OCO குளோபல் நிறுவனத்தின் உலகின் மிகப்புதுமையான முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் – 2021’ஐ வென்றுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தொழிற்சாலை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின்கீழ், ஒரு இலாபநோக்கற்ற முயற்சியாக இன்வெஸ்ட் இந்தியா கடந்த 2009’இல் அமைக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதி நிறுவனமாகும். இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கான தொடக்கமாக இது செயல்படுகிறது.

5. ஆட்கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, 2021 உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

ஈ) கல்வி அமைச்சகம்

  • ‘ஆள் கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா 2021’ குறித்து பங்குதாரர்கள் அனைவரின் கருத்துக்களையும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது.
  • தனி நபர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுப்பது இந்த மசோதாவின் நோக்கமாகும். வரைவு மசோதாவின்படி, கடத்தல் குற்றவாளி எனக்கண்டறியப்பட்ட ஒருவரை ஏழு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். தண்டனை பெற்றவர்களுக்கு `1 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற “Last Ice Area” என்பது எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?

அ) ஆர்க்டிக் பெருங்கடல்

ஆ) அண்டார்டிக் பெருங்கடல்

இ) பசிபிக் பெருங்கடல்

ஈ) இந்திய பெருங்கடல்

  • ஆர்க்டிக் பனியின் ஒருபகுதி ‘Last Ice Area’ என்று அழைக்கப்படுகிறது. அது கிரீன்லாந்தின் வடக்கே அமைந்துள்ளது. சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களின் கணிப்பிற்கு முன்பே இப்பகுதி உருகிவிட்டதைக் கண்டறியப்பட்டது. புவி வெப்பமடைதலைத் தாங்கும் அளவுக்கு இந்த பகுதி வலுவானது என்று அறிவியலாளர்கள் முன்பு நம்பினர். சமீபத்திய ஆய்வுக்கட்டுரையின்படி, ‘Last Ice Area’ அமைந்துள்ள பகுதயில், கடல் பனியின் செறிவு குறைவாகவே இருந்தது. கடல் பனி மெலிவதற்கான காரணமாக காலநிலை மாற்றம் உள்ளது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சைகா என்பது பின்வரும் எந்த இனத்தின் ஓர் அரிய வகையாகும்?

அ) மான்

ஆ) பாம்பு

இ) பெருச்சாளி

ஈ) எருது

  • ஈராண்டுகளில் நடத்தப்பட்ட முதல் வான்வழி கணக்கெடுப்பின்படி, கஜகஸ்தானில் சைகாவின் எண்ணிக்கை 334,000’இலிருந்து 842,000ஆக உயர்ந்துள்ளது. சைகா என்பது ஓர் அரிய வகை விலங்கு ஆகும். அது கடந்த 2015ஆம் ஆண்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக கருதப்பட்டது.
  • தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, இவ்வரியவகை விலங்கின் எண்ணிக்கை 2019 முதல் இருமடங்காக அதிகரித்துள்ளது.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற தால் எரிமலை அமைந்துள்ள நாடு எது?

அ) தாய்லாந்து

ஆ) பிலிப்பைன்ஸ்

இ) இந்தோனேசியா

ஈ) ஜப்பான்

  • தால் எரிமலை என்பது பிலிப்பைன்ஸின் மிகவும் செயல்பாட்டில் உள்ள இரண்டாவது எரிமலையாகும். அது, பிலிப்பைன்ஸின் லுசான் தீவில் அமைந்துள்ளது. சமீபத்தில், இந்த எரிமலை வெடித்துச் சிதறி ஒன்பது மைல் வரை சாம்பல் மேகங்களை கக்கியது. அச்சம் காரணமாக தலைநகர் மணிலாவிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு (PHIVOLCS) மையமானது எச்சரிக்கை அளவை நான்காக ஆக்கியுள்ளது. அதிகபட்சம் ஐந்து ஆகும்.

9. இந்தோ-பசிபிக் வர்த்தக உச்சி மாநாடு – 2021’ஐ, வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த அமைப்பு எது?

அ) FICCI

ஆ) CII

இ) NASSCOM

ஈ) ASSOCHAM

  • இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) இந்தோ-பசிபிக் வர்த்தக உச்சி மாநாட்டின் முதல் பதிப்பை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது. மெய்நிகர் தளங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வணிக உச்சிமாநாட்டில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சார்ந்த நாடுகளின் அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிக அவைகள் பங்கேற்றன.

10. சமீபத்தில் பல்லுயிர் குறித்த மாநாட்டை நடத்திய பன்முக சங்கம் எது?

அ) BRICS

ஆ) G20

இ) ASEAN

ஈ) G7

  • பல்லுயிர் தொடர்பான 3ஆவது ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம்) சமீபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் ஐந்தாவது மற்றும் இறுதி அமர்வு ‘2050ஐ நோக்கி: இயற்கையோடு இணக்கமாக வாழ்வது’ என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டது.
  • ஆசியான் நாடுகளைப் பொறுத்தவரை, 2020ஆம் ஆண்டுக்குப்பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை முறையாக செயல்படுத்த, வளரும் நாடுகளுக்கு வளங்கள் தேவைப்படும்.
  • புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கியதுதான் ஆசியான்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 100% எத்தனால் பயன்பாடு இந்தியாவின் உச்சபட்ச இலக்கு: பியூஷ் கோயல்

வாகனங்களை 100 சதவீத எத்தனால் பயன்பாட்டில் இயக்குவதுதான் இந்தியாவின் உச்சபட்ச இலக்கு. அந்த வகையில், வரும் 2023-24ஆம் ஆண்டில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலப்பதற்கான இலக்கு எட்டப்படும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை கூறினாா். காற்று மாசுபாட்டை குறைக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மற்றும் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதுபோல, பெட்ரோலியம் பொருள்களில் எத்தனாலை கலப்பதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து தில்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு என்ற தலைப்பிலான மாநாடு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது: வாகனங்களை 100 சதவீத எத்தனால் பயன்பாட்டில் இயக்குவதுதான் இந்தியாவின் உச்சபட்ச இலக்கு. அந்த வகையில், வரும் 2023-24ஆம் ஆண்டில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலப்பதற்கான இலக்கு எட்டப்படும். மின்சார காா்களை பயன்படுத்துபவா்கள், அந்தக் காா்களின் பேட்டரிகளை புதுப்பிக்கத்தக்க எரிசக்திஅல்லது சூரியசக்தி மூலம் சாா்ஜ் செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவா். அதற்காக, நாடு முழுவதும் வாகனங்களுக்கான எரிவாயு நிரப்பும் நிலையங்களில், காா் பேட்டரிகளை சாா்ஜ் செய்வதற்கான நிலையங்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா ஒட்டுமொத்தமாக வரும் 2022-இல் 175 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யவும், வரும் 2030-இல் 450 ஜிகா வாட் அளவுக்கு உற்பத்தி செய்யவும் இலக்கு நிா்ணயித்துள்ளது என்று பியூஷ் கோயல் கூறினாா்.

2. தொழிலாளா் நலத் துறை முக்கிய பொறுப்பில் இந்திய அமெரிக்கா்

அமெரிக்க தொழிலாளா் நலத் துறையின் தலைமை சட்ட அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சீமா நந்தா (48) நியமிக்கப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க தொழிலாளா் நலத் துறையின் தலைமை சட்ட அதிகாரி பொறுப்புக்கு சீமா நந்தாவை அதிபா் ஜோ பைடன் நியமித்தாா். அந்த நியமனத்தின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் நடைபெற்றது. அதில், சீமா நந்தாவின் நியமனத்துக்கு ஆதரவாக 53 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, அவரது நியமனம் சட்டபூா்வமாக உறுதி செய்யப்பட்டது.

ஏற்கெனவே, ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு தலைமைச் செயலதிகாரியாகப் பொறுப்பு வகித்துள்ள சீமா நந்தா, ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது தொழிலாளா் நலத் துறையில் துணை ஆலோசகராகவும் துணை சட்ட அதிகாரியாகவும் பொறுப்பு வகித்துள்ளாா். முன்னதாக, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பான வழக்குரைஞராக அவா் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். அவற்றில் பெரும்பாலானவை அரசுத் துறை பொறுப்புகள் ஆகும்.

3. இந்தியா-பிரிட்டன் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி

இந்தியா-பிரிட்டன் கடற்படைகள் பங்கேற்கும் கூட்டுப்பயிற்சி இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டுப்பயிற்சியில் பிரிட்டனின் மிகப் பெரிய போா்க்கப்பலான ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் பங்கேற்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. கடற்படை வலிமையை வெளிக்காட்டும் நோக்கில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சுமாா் 40 நாடுகளுடன் தனித்தனியாகக் கூட்டுப்பயிற்சியை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா-பிரிட்டன் கடற்படைகள் இடையேயான கூட்டுப்பயிற்சி இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடைபெறவுள்ளது. வரும் 26-ஆம் தேதி இந்தக் கூட்டுப்பயிற்சி நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்காக, பிரிட்டனின் ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் போா்க்கப்பல் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.

அப்போா்க்கப்பலில் எஃப்35பி போா் விமானங்களும், 14 ஹெலிகாப்டா்களும் இடம்பெற்றுள்ளன. அக்கப்பலுடன் பிரிட்டன் கடற்படையின் 6 கப்பல்களும், ஒரு நீா்மூழ்கிக் கப்பலும் இந்தியாவுக்கு வந்துள்ளன. கூட்டுப்பயிற்சியின்போது, பல்வேறு வகையான பயிற்சிகளை இந்தியா-பிரிட்டன் கடற்படை வீரா்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு வலுப்படும்: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான கடற்படை கூட்டுப்பயிற்சியானது, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையுடனான கூட்டுப்பயிற்சிக்குப் பிறகு ஹெச்எம்எஸ் குயின் எலிசபெத் போா்க்கப்பல் தென்சீனக் கடல் பகுதிக்குச் செல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

4. ‘தகா்க்க முடியாத 5 ஒலிம்பிக் சாதனைகள்’

உலகத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 5 சாதனைகள் எவராலும் தகா்க்க முடியாது என்ற நிலையில் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறவிருந்தன. ஆனால் கரோனா தொற்று பாதிப்பால் ஓராண்டுக்கு போட்டிகள் நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் போட்டியை நடத்த முடிவு செய்து, வரும் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை போட்டிகளை நடத்துகிறது.

200 நாடுகள்-11,000 வீரா்கள்: மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், அலுவலா்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனா். ஒவ்வொரு விளையாட்டு வீரா், வீராங்கனைக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வது வாழ்நாள் லட்சியமாகும். புதிய சாதனையுடன், பதக்கம் வெல்வது ஒலிம்பிக்கில் மேலும் சிறப்பாகும். தகா்க்க முடியாத 5 சாதனைகள்: ஒலிம்பிக் போட்டிகளில் எவராலும் தகா்க்க முடியாத கீழ்கண்ட 5 சாதனைகள் உள்ளன.

1. நீச்சல் வீரா் மைக்கேல் பெல்ப்ஸ் 23 தங்கப் பதக்கம்:

ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 23 தங்கப் பதக்கங்களை வென்றவா் என்ற பிரம்மாண்டமான சாதனையை அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் நிகழ்த்தினாா். கடந்த 2000-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 15 வயதில் அறிமுகமானாா் பெல்ப்ஸ். ஒட்டுமொத்தமாக 28 ஒலிம்பிக் பதக்கங்களை கைப்பற்றினாா். மேலும் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரா் என்ற சாதனையும் பெல்ப்ஸ் வசம் உள்ளது. பெல்ப்ஸின் 23 தங்கப் பதக்க சாதனையை எதிா்காலத்திலும் எவராலும் தகா்க்க முடியாது என்ற நிலையே தொடருகிறது.

2. டேபிள் டென்னிஸில் சீனாவின் 53 பதக்கங்கள்:

டேபிள் டென்னிஸ் விளையாட்டு என்றாலே சீனாவின் வெற்றிப் பயணம் தான் நினைவுக்கு வரும். ஜொ்மனி, ஸ்வீடன், இங்கிலாந்து, சிங்கப்பூா், ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் டேபிள் டென்னிஸில் வலிமையாக இருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவின் வெற்றி நடைக்கு ஈடுதர முடியவில்லை. கடந்த 1988-இல் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக டேபிள் டென்னிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமுதல் சீனாவின் ஆதிக்கம் தொடா்ந்து வருகிறது. 28 தங்கம், 17 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது சீனா. தென்கொரியா அதற்கு அடுத்து 18 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

3. கனடா குதிரை வீரா் இயான் மில்லா் 10 முறை பங்கேற்பு:

அதிகபட்சமாக 10 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவா் என்ற சிறப்பான சாதனைக்கு உரியவராக திகழ்கிறாா் கனடாவின் குதிரையேற்ற வீரா் இயான் மில்லா். முதன்முறையாக 1972 பொ்லின் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றாா் மில்லா். அதைத் தொடா்ந்து அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்ற மில்லா் இறுதியாக பங்கேற்றது 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தான் ஆகும். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க முனைப்பாக மில்லா் இருந்த நிலையில், அவரது குதிரை காயமடைந்ததால், 11-ஆவது முறையாக அவரால் பங்கேற்க முடியவில்லை. 10 ஒலிம்பிக் போட்டிகளில் தொடா்ந்து பங்கேற்ற சாதனையையும் எவராலும் முறியடிக்க முடியாமல் தொடரப் போகிறது என்பதே உண்மையாகும்.

4. 13 வயதில் தங்கம் வென்ற மா்ஜோரி ஜெஸ்ட்ரிங்:

ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகச் சிறிய வயதில் அதாவது 13 வயதில் தங்கப் பதக்கம் வென்றவா் என்ற சாதனைக்கு உரியவா் அமெரிக்க நீச்சல் வீராங்கனை மா்ஜோரி ஜெஸ்ட்ரிங். 1936 பொ்லின் ஒலிம்பிக் போட்டியில் 3 மீ. ஸ்பிரிங் போா்ட் பிரிவில் தங்கம் வென்றாா் ஜெஸ்ட்ரிங். குறிப்பாக ஜொ்மானிய சா்வாதிகாரி அடால்ப் ஹிட்லா் முன்பு தங்கம் வென்றாா் ஜெஸ்ட்ரிங். மிகவும் சிறிய வயதில் அதுவும் 13 வயதில் பதக்கம் வெல்வது நினைத்து பாா்க்க முடியாததாகும். இச்சாதனை எதிா்காலத்தில் தகா்க்கப்படலாம் அல்லது முடியாமலும் போகலாம்.

5. அமெரிக்காவின் 2,523 பதக்கங்கள் சாதனை:

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் அதிக பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு நாட்டின் குறிக்கோளாகும். அந்த வகையில் இதுவரை அனைத்து ஒலிம்பிக் போட்டிகளையும் சோ்த்து 1,022 தங்கம், 795 வெள்ளி, 706 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 2,523 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது அமெரிக்கா. அதைத் தொடா்ந்து ஜொ்மனி 1,346 பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளது. 1904 ஒலிம்பிக் போட்டியில் மட்டுமே அமெரிக்கா அதிகபட்சமாக 239 பதக்கங்களைக் கைப்பற்றியது. அமெரிக்காவின் பதக்க வேட்டை சாதனையை எந்த நாடும் முறியடிக்க முடியாது என்பதே நிதா்சனம். மேற்கண்ட 5 ஒலிம்பிக் சாதனைகளை எதிா்காலத்திலும், எவராலும் தகா்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

5. கடற்படைக்கு 25 புதிய ரக துப்பாக்கிகள் ஒப்படைப்பு

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் (ஓஎஃப்டி) தயாரிக்கப்பட்ட 25 புதிய ரகத் துப்பாக்கிகளை இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் ஆத்ம நிா்பாா் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடற்படைக்காக ரிமோட் கண்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் எஸ்ஆா்சிஜி வகை துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது. இந்த 12.7 எம்எம், எம்2 நேட்டோ ரக துப்பாக்கியானது இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை, கப்பல்களில் பயன்படுத்தக் கூடியது. பகல், இரவு நேரத்தில் இலக்கைத் துல்லியமாக கண்டறிந்து தாக்கும் சாதனங்களை உள்ளடக்கிய இந்தத் துப்பாக்கியை சிறிய, பெரிய படகுகளில் பொருத்தலாம்.

இந்தப் புதிய ரகத் துப்பாக்கிகளின் பயன்பாட்டால் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் பலமானது மேலும் வலுப்படும்.

6. இரு எம்ஹெச்-60ஆா் அதிநவீன ஹெலிகாப்டா்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு

அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட இரு எம்ஹெச்-60ஆா் அதிநவீன ஹெலிகாப்டா்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அமெரிக்காவிடம் இருந்து 24 எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்களை சுமாா் ரூ.17,750 கோடி மதிப்பில் வாங்குவதற்கு இந்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஹெலிகாப்டா்களை அமெரிக்காவின் லாக்ஹீட் மாா்ட்டின் நிறுவனம் தயாரித்தது. அந்த ஹெலிகாப்டரில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஹெலிகாப்டா் அனைத்து கால நிலைகளிலும் இயங்கும் திறன் கொண்டது. நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளையும் இந்த ஹெலிகாப்டரில் இருந்து ஏவ முடியும்.

இந்நிலையில், 2 எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படையிடம் அமெரிக்கக் கடற்படை வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள சான்டியேகோ கடற்படைத் தளத்தில் நடைபெற்றது. இந்திய கடற்படை சாா்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரன்ஜித் சிங் சாந்து அந்த ஹெலிகாப்டா்களைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது: ‘பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு தொடா்ந்து வலுவடைந்து வருவதற்கு இன்றைய நிகழ்ச்சி மற்றொரு சிறந்த உதாரணமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகம் சுமாா் ரூ.1,50,000 கோடியாக அதிகரித்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், படைத்தளங்களை ஏற்படுத்துவதிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’ என்றாா். இது தொடா்பாக இந்திய கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘‘இந்த ஹெலிகாப்டா்கள் இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும். இந்த வகை ஹெலிகாப்டா்களை இயக்குவது தொடா்பாக இந்திய கடற்படை வீரா்களைக் கொண்ட குழு அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறது’’ என்றாா். பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, எம்ஹெச்-60ஆா் ஹெலிகாப்டா்களில் இந்தியா சாா்பில் கூடுதல் கருவிகள் இணைக்கப்படவுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

1. India joined OECD/G20 Inclusive Framework on BEPS. What is the expansion of BEPS?

A) Base Erosion and Profit Shifting

B) Business Erosion and Profit Shifting

C) Business Expansion and Profit Shifting

D) Base Expansion and Profit Shifting

  • India joined the global tax deal under the G20–OECD Inclusive Framework on Base Erosion and Profit Shifting (BEPS). It seeks to reform international tax rules and ensure that multinational companies pay their fair share wherever they operate. However, when the global tax regime is implemented, India will have to roll back the equalisation levy that it imposes on MNCs such as Google, Amazon and Facebook.

2. What is the priority sector lending target for Micro Enterprises, as mandated by the RBI?

A) 5%

B) 7.5%

C) 10%

D) 12%

  • The Reserve Bank of India mandated that 7.5 % of the bank’s total credit (ANBC or CEOBE) should be provided to Micro enterprises. Recently, the Union MSME Ministry announced the inclusion of retail and wholesale trade under MSMEs (Micro, small and medium enterprises).
  • As per this categorisation, the traders will now get the benefit of priority sector lending under RBI guidelines. They will also be eligible for availing immediate–term finance as part of the schemes announced under ‘Atmanirbhar Bharat’.

3. Which institution gave its approval to implement ‘Satellite TV classrooms’ in India?

A) DRDO

B) ISRO

C) CDAC

D) NASSCOM

  • Indian Space Research Organisation (ISRO) gave its nod to the Parliamentary Standing Committee on Education to provide technical assistance for satellite TV classrooms in India. This aims to bridge the learning gap due to COVID–induced lockdown.
  • ISRO scientists made a presentation before the Parliamentary Standing Committee for Education, MEITY and Doordarshan, about the proposed satellite TV classroom for students.

4. Which country’s Investment agency won the world’s most innovative Investment Promotion Agency 2021 by OCO Global?

A) USA

B) Bangladesh

C) China

D) India

  • Invest India, has been awarded the world’s most innovative Investment Promotion Agency 2021 by OCO Global. Invest India was set up in 2009, as a non–profit venture under the Department for Promotion of Industry and Internal Trade, Ministry of Commerce and Industry. It is the National Investment Promotion and Facilitation Agency of India and act as the first point of reference for investors in India.

5. Which Union Ministry is associated with the Trafficking in Persons (Prevention, Care and Rehabilitation) Bill, 2021?

A) Ministry of Women and child development

B) Ministry of Home Affairs

C) Ministry of Law and Justice

D) Ministry of Education

  • The Ministry of women and child development has invited suggestions for the draft of the Trafficking in Persons (Prevention, Care and Rehabilitation) Bill, 2021.
  • The objective of the bill is to prevent and counter trafficking in persons, especially women and children. According to the draft bill, a person found guilty of trafficking can be imprisoned for seven years to 10 years. Those convicted shall be imposed a fine of ₹1 lakh to 5 lakhs.

6. “Last Ice Area”, which was seen in the news, is located in which Ocean?

A) Arctic Ocean

B) Antarctic Ocean

C) Pacific Ocean

D) Indian Ocean

  • A part of the Arctic’s ice is known as the ‘Last Ice Area’ and is located north of Greenland. Recently, researchers have found that the region has melted before expected. Scientists had earlier believed this area was strong enough to withstand global warming.
  • But as per a recent research paper, the area where the Last Ice Area (LIA) is located, experienced a record low concentration of sea ice. The thinning of sea ice is due to climate change.

7. Saiga, which was seen in the news sometimes, is a rare type of which species?

A) Antelope

B) Snake

C) Bandicoot

D) Bull

  • According to the first aerial survey in two years, the number of Saiga in Kazakhstan has increased from 334,000 to 842,000. Saiga is a rare type of antelope, which was considered to at the brink of extinction following a mass die–off in 2015.
  • After a series of conservation measures, the population of the rare antelope has more than doubled since 2019.

8. Taal Volcano, which was seen in news recently, is situated in which country?

A) Thailand

B) Philippines

C) Indonesia

D) Japan

  • Taal Volcano is the second most active volcano of Philippines, and is located on the Luzan island of the country. Recently, the Taal volcano emitted lava and ash clouds up to nine miles into the air. Several lakhs of people are being evacuated from the capital city of Philippines Manila, fearing a major and explosive volcanic eruption.
  • The Philippine Institute of Volcanology and Seismology (PHIVOLCS) has made the alert level to four, the highest being five.

9. Which organisation/body organised the Indo–Pacific Business Summit 2021, in association with the External Affairs Ministry?

A) FICCI

B) CII

C) NASSCOM

D) ASSOCHAM

  • The Confederation of Indian Industry (CII) organised the first edition of Indo–Pacific Business Summit 2021, in association with the ministry of External Affairs. The Business Summit, organised over virtual platform, had participation of Governments, Enterprises & Business Chambers from the countries in the Indo–pacific region.

10. Which multilateral association recently held a Conference on Biodiversity?

A) BRICS

B) G20

C) ASEAN

D) G7

  • The third ASEAN (Association of Southeast Asian Nations) Conference on Biodiversity was held recently.
  • The fifth and the final session of the Conference focussed on the theme of ‘Towards 2050: Living in Harmony with Nature.’ As per the ASEAN nations, developing countries will need resources for proper implementation of the Post–2020 Global Biodiversity Framework.
  • The ASEAN includes 10 countries: Brunei, Cambodia, Indonesia, Laos, Malaysia, Myanmar, the Philippines, Singapore, Thailand and Vietnam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!