TnpscTnpsc Current Affairs

17th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

17th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. தாயின் சான்றிதழ்களின் அடிப்படையில் சாதிச்சான்றை வழங்கும் முதல் மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) தில்லி 

ஈ) அஸ்ஸாம்

 • தில்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தாயின் சான்றிதழ்களின் அடிப்படையில் முதல் சாதிச்சான்றிதழை வழங்கினார். இதற்குமுன்னர், SC/ST சாதிச்சான்றிதழ்கள் தந்தையின் சாதிச்சான்றுகள் (அ) தந்தைவழி சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டன. எனவே, இது ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

2. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் எத்தனை வங்கிகள் அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?

அ) 2

ஆ) 3 

இ) 4

ஈ) 5

 • எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக தொடர்ந்து அடையாளம் காணப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இவ்வங்கிகள் திவாலானால் நாட்டிற்கு பேரிடர் ஏற்படும். எனவே அவை மூலதனப் பாதுகாப்பு இடையகத்துடன் கூடுதலாக பொது ஈக்விட்டி அடுக்கு-1 மூலதனத்தையும் பராமரிக்க வேண்டும்.
 • 2021 மார்ச் 31 அன்று வங்கிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

3. நலபானா பறவைகள் சரணாலயம் உள்ள மாநிலம் (அ) யூனியன் பிரதேசம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஒடிஸா 

இ) கேரளா

ஈ) கர்நாடகா

 • நலபானா பறவைகள் சரணாலயம் என்பது ஒடிஸாவின் சிலிகா ஏரி ராம்சார் ஈரநிலங்களின் மையப்பகுதியாகும். சிலிகா ஏரி இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரியாகும். சிலிகாவில் நடத்தப்பட்ட நீர்ப்பறவை நிலை கணக்கெடுப்பு – 2022’இன்படி, 107 நீர்ப்பறவை இனங்களில் மொத்தம் 10,74,173 பறவைகளும், ஈரநிலத்தைச் சார்ந்த 76 இனங்களில் 37,953 பறவைகளும் கணக்கிடப்பட்டன.
 • நலபானா பறவைகள் சரணாலயத்தில் மொத்தம் 97 வகையான 3,58,889 பறவைகள் கணக்கிடப்பட்டன.

4. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற ‘Plan Bee’ உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) இரயில்வே அமைச்சகம் 

ஆ) சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

இ) உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஈ) MSME அமைச்சகம்

 • ‘Plan Bee’ முதன்முதலில் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயால் யானைகளை ரயில் பாதைகளிலிருந்து விலக்கிவைக்க ஒரு தனித்துவமான முறையாக செயல்ப -டுத்தப்பட்டது. நாடு முழுவதும் ‘Plan Bee’ திட்டத்தை ரயில்வே அமல்படுத்தவுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். தேனீக் கூட்டத்தின் சலசலப்பு ஒலியை ஒலிக்கும் ஓர் ஒலிபெருக்கி அமைப்பை இது பயன்படுத்துகிறது.

5. செப்டம்பரில் நடத்தப்பட்ட முதல் சோதனைக்குப் பிறகு, அண்மையில் “ஹைப்பர்சோனிக் ஏவுகணையை” ஏவிய நாடு எது?

அ) இஸ்ரேல்

ஆ) வட கொரியா 

இ) ஈரான்

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

 • அண்மையில் ‘ஹைப்பர்சோனிக் ஏவுகணை’யை வட கொரியா பரிசோதித்தது. அந்த ஏவுகணை தன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியது. இச்சோதனை பிராந்தியத்தில் உள்ள பல இராணுவங்களால் கண்டறியப்பட்டது. மேலும் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து விமர்சனங்களை அது ஈர்த்தது.
 • வடகொரியா முதன்முதலில் ஹைப்பர்சோனிக் ஏவுக
  -ணையை செப்டம்பரில் சோதித்தது. ஹைப்பர்சோனிக் ஆயுதங்களால் ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் (மணிக்கு சுமார் 6,200 கிமீ) இலக்கை அடைய முடியும்.

6. ‘எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம்’ என்பது எந்த இந்திய மாநிலம் / UT’இன் முன்முயற்சியாகும்?

அ) தமிழ்நாடு

ஆ) ஒடிஸா

இ) கர்நாடகா 

ஈ) கேரளா

 • 6 மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தில், ‘கர்நாடகா எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம்’ தொடங்கப்பட்டது.
 • பெங்களூரில் எலக்ட்ரிக் பைக் டாக்சிகளை இயக்குதற்கு தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை இது அனுமதித்தது. குடிமக்கள் அதிகபட்சமாக 10 கிமீட்டர் தூரத்திற்கு இந்தச் சேவையைப்பெறலாம். ஆனால், போக்குவரத்து துறைக்கு உரிமம் கோரி, இதுவரை ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்துள்ளது. பைக் டாக்ஸிக்கான கட்டணத்தை கர்நாடக அரசு இன்னும் நிர்ணயம் செய்யாமல் உள்ளது.

7. ஓமிக்ரான் திரிபைக் கண்டறியும் இந்தியாவின் முதல் RT-PCR கருவியான ‘Omisure’ஐ உருவாக்கிய நிறுவனம் எது?

அ) TATA MD 

ஆ) பிரமல்

இ) சன் பார்மா

ஈ) அபெக்ஸ் பார்மா

 • இந்தியா அண்மையில் ஒரு புதிய RT-PCR சோதனைக் கருவியை அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் ஓமிக்ரான் திரிபைக் கண்டறிய முடியும். ‘Omisure’ எனப்படும் இந்தக் கருவியை ICMR உடன் இணைந்து Tata MD நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது ‘Sars-CoV-2’ஐக் கண்டறிகிறது. மேலும் ஓமிக்ரானில் உள்ள S மரபணு வேறுபாட்டையும் அதில் கண்டறிகிறது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பரத் சுப்ரமணியம் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டென்னிஸ்

ஆ) சதுரங்கம் 

இ) டேபிள்-டென்னிஸ்

ஈ) பளு தூக்குதல்

 • 14 வயதான பரத் சுப்ரமணியம், இத்தாலியில் நடந்த ஒரு நிகழ்வில் மூன்றாவது மற்றும் இறுதி GM நெறியைப் பெற்றபிறகு, இந்தியாவின் 73ஆவது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆனார். அவர் இதற்கு தேவையான 2,500 (Elo) மதிப்பெண்ணையும் எட்டினார்.
 • இப்போட்டியில் சக இந்திய வீரர் M R லலித் பாபு வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். கடந்த நவம்பரில் சங்கல்ப் குப்தா 71ஆவது GM ஆன இரண்டு நாட்களுக்குப் பிறகு, மித்ரபா குஹா நாட்டின் 72ஆவது GM ஆனார்.

9. இந்தியாவின் UNESCO உலக பாரம்பரிய தளங்களின் விளக்கங்களை எம்மொழியில் அதன் இணையதளத்தில் வெளியிட UNESCO ஒப்புக்கொண்டது?

அ) தமிழ்

ஆ) ஹிந்தி 

இ) சமற்கிருதம்

ஈ) தெலுங்கு

 • UNESCO’இன் உலக பாரம்பரிய மையம் இந்தியாவில் உள்ள UNESCO உலக பாரம்பரிய தளங்கள் குறித்த விளக்கங்களை ஹிந்தியில் அதன் இணையதளத்தில் வெளியிட ஒப்புக்கொண்டுள்ளது.
 • UNESCO’க்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதிகள் குழு இந்தத் தகவலைப்பகிர்ந்துகொண்டது. இது உலக ஹிந்தி நாள் முதல் செயல்பாட்டுக்கு வரும். உலக ஹிந்தி நாள் ஜன.10 அன்று அனுசரிக்கப்படுகிறது.

10. தாமதமான தேர்தல்களால், பின்வரும் எந்த ஆப்பிரிக்க நாட்டுடனான தங்கள் உறவை துண்டிக்கப்போவதாக மேலை ஆப்பிரிக்க நாடுகள் அறிவித்தன?

அ) மாலி 

ஆ) எகிப்து

இ) பெரு

ஈ) தென்னாப்பிரிக்கா

 • தேர்தலை நடத்துவதில் மிகவும் தாமதம் ஏற்படுத்துவதால் மாலியுடனான தங்கள் எல்லைகளை மூடுவதோடு, அரசியல் ரீதியான உறவுகளை துண்டித்துக் கொள்ளவும் மேலை ஆப்பிரிக்க நாடுகள் முடிவு செய்துள்ளன.
 • கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பும் இதில் அடங்கும். 15 உறுப்பு நாடுகளை உடைய மேலை ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS), இந்த நிலைப்பாட்டை அறிவித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கரோனா பரவல் விகிதம்: தேசிய அளவில் புதுச்சேரி முதலிடம்

கடந்த ஒரு வாரத்தில் வெளியான புள்ளிவிவரங்கள்படி, நாட்டிலேயே கரோனா தொற்று அதிகம் பரவும் மாநிலம் / யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. புதுச்சேரியில் 100 கரோனா பரிசோதனைகளுக்கு 51.75 சதவீதம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

2. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பாதை, நிலையங்கள் அமைக்க ஆரம்ப கட்டப் பணிகள் தீவிரம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், பாதை, நிலையங்கள் கட்டுவதற்காக, 12 இடங்களில் ஆரம்பக்கட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இதுதவிர, 3 வழித்தடங்களில் 48 சுரங்க ரயில் நிலையங் -கள் அமைக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இரண்டாம் கட்ட திட்டம்: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, `63,246 கோடியில் 118.9 கிமீ தூரத்துக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 26.1 கிமீ தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கிமீ தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிமீ தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இரண்டாம் கட்ட திட்டத்தில், முதலில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மாதவரம் – தரமணி இணைப்பு சாலை வரை, 30 சுரங்க நிலையங்கள் அமையவுள்ளன. இதுதவிர, பூந்தமல்லி புறவழிச்சாலை – கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் பாதையில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் – கலங்கரை விளக்கம் இடையே சுரங்கத்தில் 12 நிலையங்களும், மாதவரம் – சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதையில் 6 நிலையங்களும் என்று 3 வழித்தடங்களில் 48 சுரங்க நிலைங்கள் அமையவுள்ளன.

3. உலகப் பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்று தொடக்கம்: முதல் நாளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உரை

சர்வதேச அளவில் சக்திவாய்ந்த அமைப்பாகத் திகழும் உலகப்பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் உச்சிமாநாடு திங்கள்கிழமை (ஜன. 17) தொடங்கவுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக இந்த உச்சிமாநாட்டை உலகப் பொருளாதார கூட்டமைப்பு நடத்தி வரும் நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான உச்சிமாநாட்டை காணொலி வழியில் 5 நாள்களுக்கு அந்த அமைப்பு நடத்த உள்ளது. இதில் ‘கரோனா பாதிப்பு’ என்ற தலைப்பிலும், அடுத்ததாக ‘நான்காவது தொழில் புரட்சியில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு’ என்ற தலைப்பிலும் இரண்டு அமர்வுகள் நடைபெறவுள்ளன.

‘உலகின் நிலை’ என்ற கருப்பொருளில் கூட்டப்படும் நிகழாண்டுக்கான உச்சிமாநாடு, உலகின் மிக முக்கியத் தலைவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான தங்களின் தொலைநோக்குத் திட்டங்களை பகிர்ந்துகொள்ளும் தளமாக இருக்கும் என்று உலகப் பொருளாதார கூட்டமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. அரபிக்கடலில் இந்திய- ரஷிய கடற்படைகள் கூட்டுப் பயிற்சி

அரபிக்கடலில் இந்திய-ரஷிய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை தெரிவித்தது.

இந்தப் பயிற்சியில் ஈடுபடும் இருநாட்டுக் கடற்படைகளும் இயற்கைப்பேரிடர் அல்லது போர்போன்ற சூழ்நிலையில், சுமுகமான ஒத்துழைப்பையும், தகவல் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS கொச்சி போர்க் கப்பலும், ரஷியாவின் அட்மிரல் ட்ரிபியூட்ஸ் போர்க்கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன.

5. இந்தியாவின் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல்தலையை Dr மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

இந்தியாவின் தேசிய COVID-19 தடுப்பூசி திட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல்தலையை மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

கோவாக்சின் ஊசியுடன், சுகாதாரப் பணியாளர் மூத்த குடி மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதைப் போன்று அஞ்சல் தலை வடிவமைக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு ஜன.16ஆம் தேதி தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கியது. இந்த ஓராண்டு காலத்தில் 156 கோடிக்கும் அதிகமாக டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

6. இந்தியா ஓபன்: வாகை சூடினார் லக்ஷயா சென்; உலக சாம்பியனை வீழ்த்தினார்

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லஷயா சென், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி சாம்பியன் ஆகி அசத்தினர்.

இப்போட்டியில் இவர்கள் பட்டம் வெல்வது இது முதல் முறையாகும். அதிலும், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் பட்டம் கிடைப்பதும் இது முதல்முறையே. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3ஆவது இடத்திலிருந்த லக்ஷயா சென், நடப்பு உலக சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருந்தவருமான சிங்கப்பூரின் லோ கீன் யீவை எதிர்கொண்டார்.

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 54 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் லக்ஷயா சென் 24-22, 21-17 என்ற கேம்களில் லோ கீன் யீவை வீழ்த்தி அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தார்.

இதர வெற்றியாளர்கள்: இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பான் சாம்பியன் ஆனார்.

மகளிர் இரட்டையரில் தாய்லாந்தின் பென்யபா எய்ம்சார்ட் / நந்தாகரன் எய்ம்சார்ட் இணையும், கலப்பு இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் ஹீ யோங் காய் டெரி / தான் வெய் ஹான் ஜோடியும் வாகை சூடின.

7. 17-01-2022 – ‘இந்திய மாமணி’ டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் 105ஆவது பிறந்தநாள்.

8. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபனின்: பள்ளிகொண்டபுரம் நாவல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். ‘இலை உதிர் காலம்’ என்னும் நாவலுக்காக கடந்த 2007ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரின் பள்ளிகொண்டபுரம் என்னும் நாவல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 1970ஆம் ஆண்டு வெளிவந்த பள்ளிகொண்டபுரம் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதேபோல் நேஷ்னல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் ஆதான் பிரதான் திட்டத்தின்கீழ் ஹிந்தி, மலையாளம், உருது, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, ஒரியா, வங்கம், அஸ்ஸாமி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

திருவனந்தபுரத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்நாவலை டாக்டர்லூபா பைச்சினா என்பவர் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

1. Which is the first state/UT to provide the caste certificate based on the mother’s credentials?

A) Tamil Nadu

B) Kerala

C) Delhi 

D) Assam

 • Delhi’s Deputy Chief Minister Manish Sisodia handed over the first caste certificate based on the mother’s credentials to a single mother. Earlier, SC/ST caste certificates were issued only based on the fathers’ caste certificates or paternal side certificates. Hence, this is considered as a landmark move

2. As of 2022, how many banks are classified as Systemically Important Banks (D–SIBs) in India?

A) 2

B) 3 

C) 4

D) 5

 • The Reserve Bank of India announced that SBI, ICICI Bank and HDFC Bank continue to be identified as Domestic Systemically Important Banks (D–SIBs). These banks are Too big to fail and they need to maintain an additional Common Equity Tier 1 (CET1) capital, in addition to the capital conservation buffer. The update is based on the data collected from banks as on March 31, 2021.

3. Nalabana Bird Sanctuary is located in which state/UT?

A) West Bengal

B) Odisha 

C) Kerala

D) Karnataka

 • Nalabana Bird Sanctuary is the core area of the Ramsar designated wetlands of Chilika Lake, Odisha. Chilika Lake is the largest brackish water lake in India. As per the water bird status survey–2022 conducted in the Chilika, a total of 10,74,173 birds of the 107 water bird species and 37,953 individuals of 76 wetland dependent species were counted.
 • A total of 3,58,889 birds of 97 species were counted in Nalabana Bird Sanctuary.

4. ‘Plan Bee’, which was seen in the news recently, is associated with which Union Ministry?

A) Ministry of Railways 

B) Ministry of Environment, Forest and Climate Change

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of MSME

 • ‘Plan Bee’ was first implemented by the Northeast Frontier Railway (NFR) as a unique method to keep elephants away from railway tracks. Union Minister for Railways Ashwini Vaishnaw informed that the Railways is set to implement ‘Plan Bee’ throughout the country. It uses an amplifying system to imitate the buzz of a swarm of honey bees.

5. Which country recently fired a “hypersonic missile”, after its first test in September?

A) Israel

B) North Korea 

C) Iran

D) UAE

 • North Korea recently fired a “hypersonic missile” that successfully hit a target. The test–fire was detected by several militaries in the region, and drew criticism from the United States, South Korea, and Japan.
 • North Korea first tested a hypersonic missile in September. Hypersonic weapons can achieve more than five times the speed of sound – or about 6,200 km per hour.

6. ‘Electric Bike Taxi Scheme’ is the initiative of which Indian state/UT?

A) Tamil Nadu

B) Odisha

C) Karnataka 

D) Kerala

 • The ‘Karnataka Electric Bike Taxi Scheme’ was launched in Karnataka six months ago. It allowed private players, individuals, firms, and aggregators to run electric bike taxis in Bengaluru. Citizens can avail of the service for a maximum distance of 10 km.
 • However, the Transport Department has received only one application for a licence. The state has not yet fixed the bike taxi fares.

7. India’s first RT–PCR kit to detect the Omicron variant, named ‘Omisure’ is developed by which company?

A) TATA MD 

B) Piramal

C) Sun Pharma

D) Apex Pharma

 • India has recently approved a new RT–PCR test kit that can detect whether a sample is Covid–19 positive and if the variant is Omicron. The kit, called Omisure has been developed by TataMD, in partnership with ICMR. It detects Sars–CoV–2, and it has two specific targets for the S gene that are Omicron–specific.

8. Bharath Subramaniyam, who was seen in the news, is associated with which sports?

A) Tennis

B) Chess 

C) Table–Tennis

D) Weightlifting

 • Fourteen–year–old Bharath Subramaniyam became India’s 73rd chess Grandmaster, after he secured the third and final GM norm at an event in Italy. He also touched the requisite 2,500 (Elo) mark. Fellow Indian player M R Lalith Babu emerged winner in the tournament, winning the title. Mitrabha Guha had become the country’s 72nd GM in November last, two days after Sankalp Gupta became the 71st GM.

9. UNESCO agreed to publish descriptions of India’s UNESCO World Heritage Sites on its website in which language?

A) Tamil

B) Hindi 

C) Sanskrit

D) Telugu

 • The UNESCO’s World Heritage Centre (WHC) has agreed to publish Hindi descriptions of India’s UNESCO World Heritage Sites on the WHC website.
 • The information was shared by the Permanent Delegation of India to UNESCO announced this news, to be implemented on the occasion of World Hindi Day. It is observed on January 10 across the world.

10. West African Countries announced to cut their ties with which African country, over delayed elections?

A) Mali 

B) Egypt

C) Peru

D) South Africa

 • West African nations will close their borders with Mali, cut diplomatic ties and impose tough economic sanctions in response to delay in holding elections. Economic Community of West African States (ECOWAS), the 15–state regional bloc announced this stance.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button