TnpscTnpsc Current Affairs

17th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

17th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. கர்நாடக மாநிலத்தின் எத்தனை பல்கலைக்கழகங்கள் அண்மையில், “உயர்புகழ்கொண்ட பல்கலைக்கழகம்” என்னும் அங்கீகாரத்தைப் பெற்றன?

அ) 2

ஆ) 4

இ) 6 

ஈ) 8

  • கர்நாடகா மாநில அரசால் நடத்தப்படும் ஆறு கல்லூரிகள் “உயர்புகழ்கொண்ட (eminence) பல்கலைக்கழகம்” என்னும் அங்கீகாரத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் புதுப்பிக்கப்பட்டு, தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக ஊக்குவிக்கப்படும்.

2. ‘நூர்–2’ என்னும் இராணுவ செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) ஈரான் 

இ) இஸ்ரேல்

ஈ) ஓமான்

  • ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தனது இரண்டாவது ராணுவ செயற்கைக்கோளான ‘நூர்–2’ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இது 500 கிமீ உயரத்தில் புவியைச்சுற்றி வருகிறது. முதல் ராணுவ செயற்கைக்கோளான நூர் (பாரசீக மொழியில் ‘ஒளி’), கடந்த 2020 ஏப்ரலில் ஏவப்பட்டது.

3. கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கீழ்காணும் எந்தத் தேதியில் உருவாக்கப்பட்டன?

அ) மார்ச் 25

ஆ) ஏப்ரல் 01

இ) மே 05

ஈ) நவம்பர் 01 

  • நவ.1 அன்று தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா போன்ற பல்வேறு இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நாள் மாநில நாளாக அல்லது மாநில உருவாக்க நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை 1956இல் உருவாக்கப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஹரியானா 1966இல் உருவாக்கப்பட்டன.

4. ரேணுகாஜி அணை பல்நோக்கு திட்டத்திற்கான ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக உள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) குஜராத்

ஈ) பஞ்சாப்

  • ரேணுகாஜி அணை பல்நோக்கு திட்டத்திற்கான ஒப்பந்தம் உத்தர பிரதேசம், ஹரியானா, இமாச்சல பிரதேசம், இராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் தில்லி ஆகிய ஆறு மாநிலங்களுக்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி யமுனை ஆறு மற்றும் அதன் இரண்டு கிளையாறுகளில் 3 திட்டங்கள் கட்ட முன்மொழியப்பட்டது.

5. ‘சாகித்யோத்சவ்’ இலக்கிய விழாவை நடத்தும் நகரம் எது?

அ) ஜெய்ப்பூர்

ஆ) புது தில்லி 

இ) புனே

ஈ) கொல்கத்தா

  • சாகித்திய அகாதெமியின் இலக்கிய விழாவான ‘சாகித்யோத்சவ்’ சமீபத்தில் புது தில்லியில் தொடங்கியது. இந்தியாவின் 75ஆம் விடுதலை ஆண்டை நினைவுகூரும் வகையில், ‘2022 அஞ்சல்களின் திருவிழா’ கொண்டாடப்படுகிறது.

6. ‘அனைத்து மகளிர் இரயில் நிலையம்’ என்று அறிவிக்கப்பட்ட குண்ட்லா போச்சம்பள்ளி ரயில் நிலையம், அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) தெலுங்கானா 

இ) கர்நாடகா

ஈ) ஒடிஸா

  • தெலுங்கானாவில் செகந்திராபாத்–மேட்சல் பிரிவிலுள்ள புறநகர் நிலையங்களுள் ஒன்றான குண்ட்லா போச்சம் பள்ளி இரயில் நிலையம், ‘அனைத்து மகளிர் இரயில் நிலையம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இரயில் இயக்கிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பயணச் சீட்டு, பாதுகாப்பு மற்றும் தெற்கு மத்திய ரயில்வேயின் பிற தொடர்புடைய பணிகள் உட்பட அன்றாட நடவடிக்கைகளைக் கையாள அங்கு மகளிரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) உத்தரகாண்ட் 

இ) இமாச்சல பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • இந்தியாவின் மிகப்பழமையான இராணுவப் பள்ளியான ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி (RIMC) சமீபத்தில் தனது நூறாண்டை நிறைவுசெய்தது. இது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் அமைந்துள்ளது.
  • இந்த இராணுவப் பயிற்சி நிறுவனம் 1922ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய வேல்ஸ் இளவரசரால் திறந்து வைக்கப்பட்டது. RIMC என்பது எழிமலையில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் கடற்படை அகாதெமி ஆகியவற்றிற்கான முதன்மை நிறுவனம் ஆகும்.

8. ‘கேல் மகாகும்பம்’ என்பது எம்மாநிலத்தில் நடைபெறும் ஒரு விளையாட்டு நிகழ்வாகும்?

அ) குஜராத் 

ஆ) உத்தர பிரதேசம்

இ) இராஜஸ்தான்

ஈ) மத்திய பிரதேசம்

  • குஜராத்தின் ஆமதாபாத்தில் 11ஆவது கேல் மகாகும்பத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு 2010 இல் பதினாறு விளையாட்டுகள் மற்றும் பதிமூன்று லட்சம் பங்கேற்பாளர்களுடன் தொடங்கியது; பின்னர் 2019ஆம் ஆண்டில் 36 பொது விளையாட்டுகளாகவும் 26 பாரா விளையாட்டுகளாகவும் உயர்த்தப்பட்டது.
  • COVID–19 காரணமாக, 2020இல் ‘கேல் மகாகும்பம்’ ஏற்பாடு செய்யப்படவில்லை.

9. ‘தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை – 2022’ வரைவை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம்

ஆ) வேதிகள் & உரங்கள் அமைச்சகம் 

இ) வர்த்தகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஈ) வெளியுறவு அமைச்சகம்

  • வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறை, ‘தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை–2022’ என்ற வரைவை வெளியிட்டது. தற்போது, நாட்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனங்களில் கிட்டத்தட்ட 80% இறக்குமதி செய்யப்படுகின்றன.
  • மருத்துவ சாதனங்களுக்கான மதிப்பு மற்றும் தொழில்நுட் –பத்தின் அடிப்படையில், ஐந்து உலகளாவிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியாவை வைப்பதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘எதிர்கால அருங்காட்சியகம்’ அமைந்துள்ள நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம் 

ஆ) சௌதி அரேபியா

இ) குவைத்

ஈ) ஓமன்

  • துபையில் உள்ள ‘எதிர்கால அருங்காட்சியகம் – Museum of the Future’ பொதுமக்களின் பார்வைக்காக சமீபத்தில் திறக்கப்பட்டது. இதை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமர் திறந்து வைத்தனர்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, பார்வையாளர்களை 2071ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்வதாக இந்த அருங்காட்சியகம் கூறுகிறது. இது 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஏழு மாடிகள் கொண்ட தூண்கள் இல்லாத அமைப்பாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் 2,900 MW மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) நிறுவனமானது 800 MW மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மூன்று அலகுகள் ஒடிஸா மாநிலம் தலபிரா என்ற இடத்தில் அமைக்கப்பட உள்ளது. அதில், 1,500 MW மின்சாரம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது 2026-27ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு `3.06 ஆகும்.

1,000 மெகாவாட்: 1000 MW மின்சாரத்தை கொள்முதல் செய்ய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மின்சார யூனிட் ஒன்றின் விலை `2.61 ஆகும்.

2022-2023ஆம் நிதியாண்டின் இறுதியிலிருந்து மின்சாரம் கிடைத்திடும். இதேபோன்று, பவர் டிரேடிங் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் 400 MW மின்சாரத்துக்கான கொள்முதல் செய்யப்பட்டது. இதனுடைய யூனிட் ஒன்றின் விலை `3.26 ஆகும்.

மின்சார கொள்முதலுக்கான நான்கு நடுத்தர கால ஒப்பந்தங்கள் முதல்வ மு க ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.

2. சிறு-குறு நிறுவனங்களுக்கு கடன்பெற தனி இணைய தளம்: தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனி இணையதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உற்பத்தி அலகுகளுக்காக தமிழ்நாடு கடன் உத்தரவாதத்திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. `40 லட்சத்துக்கு குறைவான வங்கி கடன்களு -க்கு 90 சதவீத உத்தரவாதமும், அதற்கு மேல் `2 கோடி வரையிலான கடன்களுக்கு 80 சதவீத உத்தரவாதமும் மத்திய அரசின் கடன் உத்தரவாத நிதியத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கும்.

இந்தக் கடன் உத்தரவாத திட்டத்துடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரிவான மதிப்பீட்டு திட்டமும் ஒருங்கிணைந்து வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு `100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆறுமாதங்களில் தொடங்கப்படும் வகையில் முழுவதுமாக கணினிமயமாக்கப்பட்ட இணையதளம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை மற்றும் கடன் உத்தரவாத நிதியம் ஆகியவற்றுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டது.

புதிய வசதிகள் தொடக்கம்: புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வினைத் தொடர்ந்து, புதிய வசதிகளை முதல்வர் தொடக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் செங்கிப்பட்டி கிராமத்தில் தென்னைநார் உற்பத்திக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை காணொலிக் காட்சி வழியாக முதல்வர் தொடக்கி வைத்தார்.

3. இல்லம் தேடி வரும் தமிழரசு இதழ்: இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம்

அரசு இணைய சேவை மையங்களில் பதிவுசெய்தால் தமிழ்நாடு அரசின் மாதாந்திர இதழான ‘தமிழரசு’, இல்லம் தேடி வரும். இதற்கான அறிவிப்பை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.

அந்த அறிவிப்பு விவரம்: ‘தமிழரசு’ இதழானது தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதன் ஒரு மாத இதழ் விலை `20. ஆண்டுச் சந்தா `240-ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கான ஆயுள் சந்தா `2 ஆயிரமாக உள்ளது.

4. முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் R திருநாவுக்கரசு, இகாப., அவர்களின் மகள் தி ஹேம மீனாட்சி எழுதிய, “The Secret of Smile” நூலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

5. 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்; கரோனா தடுப்பூசி பணியில் முக்கியமான நாள்: மோடி பெருமிதம்

நாட்டில் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 2022 மார்ச்.16 தொடங்கியது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், “நாட்டின் குடிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இது முக்கிய நாள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நம் நாட்டில் கடந்த ஆண்டு ஜன.16ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு வயது அடிப்படையில் படிப்படியாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

இந்நிலையில் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. கோர்பிவேக்ஸ் என்ற இந்தத் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘பயலாஜிகல்-இ’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை 28 நாள் இடைவெளியில் இரு டோஸ்கள் செலுத்திக்கொள்ளவேண்டும்.

தொடக்கத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு தடுப்பூசி முகாம்களில் மட்டும் இத்தடுப்பூசி செலுத்தப்படுகி -றது. தனியார் மருத்துவமனைகளுக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. விலை நிர்ணயிக்கப் -பட்ட பிறகு தனியார் மருத்துவமனைகளிலும் இதனை செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. `100 கோடி செலவில் மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் `100 கோடி செலவில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வரும் ஜுலை இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ரஷ்யா, உக்ரைன் போர் சூழ்நிலை காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி மாஸ்கோவில் நடைபெறாது எனச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து போட்டியை நடத்தும் உரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகளில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டது. இதற்கான ஏலத்தில் போட்டியை நடத்துவதற்கான இடமாக சென்னை நகரை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தேர்வு செய்தது. இதன்படி மாமல்லபுரத்தில் வரும் ஜூலை இறுதியில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

1. How many universities of Karnataka State have successfully achieved the ” University of Eminence” recognition recently?

A) 2

B) 4

C) 6

D) 8

  • Karnataka state government run 6 colleges have been selected for the recognition of ” University of Eminence”. These colleges shall be revamped and development shall be promoted to further improve standards at these selected institutions.

2. Which country successfully launched military satellite ‘Noor–2’, into the orbit?

A) UAE

B) Iran 

C) Israel

D) Oman

  • Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) has successfully launched its second military satellite, the Noor 2, into orbit. It is orbiting at an altitude of 500 kilometres. The first military satellite– Noor, or “light” in Persian, was launched in April 2020.

3. On which date, the states of Kerala, Haryana, Madhya Pradesh, Chhattisgarh and Karnataka were formed?

A) March 25

B) April 01

C) May 05

D) November 01 

  • On November 1, several Indian states like Tamil Nadu, Kerala, Haryana, Madhya Pradesh, Chhattisgarh and Karnataka were formed. The day is recognised as Statehood Day or State Formation Day. Andhra Pradesh, Tamil Nadu, Karnataka, Madhya Pradesh and Kerala were formed in 1956. Punjab and Haryana were formed in 1966.

4. Which state is part of the agreement for the Renukaji Dam Multipurpose Project?

A) Uttar Pradesh 

B) Andhra Pradesh

C) Gujarat

D) Punjab

  • The agreement for Renukaji Dam Multipurpose Project was signed among six states i.e., Uttar Pradesh, Haryana, Himachal Pradesh, Rajasthan, Uttarakhand, and Delhi.
  • As per the agreement three projects were proposed to be constructed on the river Yamuna and two of its tributaries.

5. Which city is the host of ‘Sahityotsav’ Literature festival?

A) Jaipur

B) New Delhi 

C) Pune

D) Kolkata

  • Sahityotsav, the literature festival of Sahitya Akademi recently commenced at New Delhi. The Festival of Letters 2022 is being celebrated to commemorate 75th anniversary of India’s Independence.

6. Gundla Pochampally Railway Station, declared ‘All Women Employees Railway Station’, is in which state?

A) Tamil Nadu

B) Telangana 

C) Karnataka

D) Odisha

  • The Gundla Pochampally railway station, one of the suburban stations in the Secunderabad–Medchal section in Telangana, was declared an ‘All Women Employees Railway Station’.
  • It has only female staff to handle the day–to–day activities, including train operations, technicians, ticketing, security and other relevant duties by South Central Railway (SCR). With this addition, the Zone will have five such Railway stations.

7. Rashtriya Indian Military College (RIMC), seen in the news recently, is located in which Indian state?

A) Kerala

B) Uttarakhand 

C) Himachal Pradesh

D) Maharashtra

  • India’s oldest military school, Rashtriya Indian Military College (RIMC), turned a hundred years old recently. It is located in the Dehradun, Uttarakhand. The military training institution was inaugurated in March 1922 by the then Prince of Wales.
  • RIMC is the premier feeder institute for the National Defence Academy and Naval Academy, Ezhimala.

8. ‘Khel Mahakumbh’ is a Sports Event held in which Indian state?

A) Gujarat 

B) Uttar Pradesh

C) Rajasthan

D) Madhya Pradesh

  • Prime Minister Narendra Modi inaugurated the 11th edition of Khel Mahakumbh in Ahmedabad, Gujarat. The event started with 16 sports and 13 lakh participants in 2010, and was later increased to 36 general sports and 26 para sports in the year 2019. Due to COVID–19, the Khel Mahakumbh was not organised in 2020.

9. Which Union Ministry released the draft ‘National Medical Devices Policy 2022’?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of Chemicals and Fertilizers 

C) Ministry of Commerce and Industry

D) Ministry of External Affairs

  • The Department of Pharmaceuticals (DoP), Ministry of Chemicals and Fertilisers released the draft ‘National Medical Devices Policy 2022’.
  • At present, nearly 80% of the medical devices used in the country are imported. The policy aims to place India as one among the five global manufacturing hubs in terms of value and technology for medical devices.

10. ‘The Museum of the Future’, which was seen in the news, is situated in which country?

A) UAE 

B) Saudi Arabia

C) Kuwait

D) Oman

  • The Museum of the Future in Dubai was recently opened for the public view. It was inaugurated by the Vice President and Prime Minister of the UAE. The museum claims to transport the visitors to the year 2071, to coincide with the centenary of the founding of the UAE. It is a seven–storey, pillar–less structure, spanning an area of 30,000 sq m.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!