TnpscTnpsc Current Affairs

17th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

17th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 17th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. SARS–CoV–2 வைரஸுக்கு எதிரான இந்தியாவின் முதல் மாற்று மருந்தின் பெயர் என்ன?

அ. VINCOV–19

ஆ. ANTICOV–19

இ. COVEX–19

ஈ. NOCOV–19

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. VINCOV–19

  • VINCOV–19 என்னும் SARS–CoV–2 வைரஸுக்கு எதிரான இந்தியாவின் முதல் மாற்று மருந்தானது தற்போது சந்தை அங்கீகாரம் பெறவும் கட்டம்–3 மருத்துவ பரிசோதனைகளுக்கும் தயார்நிலையில் உள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழகம், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனமான VINS பயோப்ராடக்ட்ஸ் லிட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இந்த மருந்து அண்மையில் கட்டம்–2 சோதனைகளை நிறைவேற்றியது. இந்தியாவில் உள்ள பல்வேறு மையங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இடையே இது ரீதியான சோதனை நடத்தப்பட்டது.

2. நெய்பியு ரியோ என்பவர் கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார்?

அ. நாகாலாந்து

ஆ. மணிப்பூர்

இ. மேகாலயா

ஈ. மிசோரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நாகாலாந்து

  • நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ 2022 அக்டோபர்.14 அன்று மாநில மக்களுக்கான உலகளாவிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கினார். நடுவணரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்து முதலமைச்சரின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் நோக்கம், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் காரணமாக ஏற்படும் நிதிக் கஷ்டங்களைத் தணிப்பதாகும். இந்தத் திட்டம் CMHIS ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், மற்றும் CMHIS (பொது) என மூவகைப்படுத்தப்பட்டுள்ளது.

3. 2022 அக்டோபரில் நடைபெற்ற ஆறாவது கிழக்காசிய உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்ற நகரம் எது?

அ. காத்மாண்டு, நேபாளம்

ஆ. ஹனோய், வியட்நாம்

இ. சிங்கப்பூர்

ஈ. கோலாலம்பூர், மலேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹனோய், வியட்நாம்

  • 2022 அக்.14 அன்று வியட்நாமின் ஹனோயில் நடைபெற்ற 6ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டின் கல்வியமைச்சர் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது. கல்வியமைச்சகத்தின் இணைச்செயலர் (பன்னாட்டு ஒத்துழைப்பு) நீதா பிரசாத் அவர்கள் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், தேசிய கல்விக் கொள்கை – 2020இன் முகன்மை முனைவுகள் மற்றும் உறுப்புநாடுகளுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவின் கூட்டு முனைவுகள் குறித்து விளக்கமுற தெரிவித்தார்.

4. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் யார்?

அ. இந்தியக்குடியரசுத்தலைவர்

ஆ. இந்தியப்பிரதமர்

இ. அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சர்

ஈ. செயலர், அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியப்பிரதமர்

  • அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகமானது கடந்த 1942 செப்டம்பரில் இந்திய அரசாங்கத்தால் ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்தியப்பிரதமர் அதன் தலைவராகப் பணியாற்றுகிறார். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோதி, 2022 அக்டோபர்.15 அன்று புது தில்லியில் நடந்தேறிய அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழக (CSIR) சங்கத்தின் கூட்டத்திற்கு தலைமைதாங்கினார்.

5. ஆசிய கடலோரக் காவல் முகமைகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்ற நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. மும்பை

இ. கொல்கத்தா

ஈ. சென்னை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. புது தில்லி

  • 2022 அக்டோபர்.15 அன்று புது தில்லியில் நடைபெற்ற ஆசிய கடலோரக் காவல்படை முகமைகளின் 18ஆவது தலைவர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜநாத் சிங் உரையாற்றினார். இந்திய கடலோரக் காவற் படை, ஆசிய கடலோரக் காவல்படை முகமைகளின் செயலகத்துடன் இணைந்து 18ஆவது கூட்டத்தை வரும் 18ஆம் தேதி வரை நடத்துகிறது. பதினெட்டு நாடுகள் மற்றும் இரண்டு சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 55 பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற போகிபீல் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. அஸ்ஸாம்

இ. உத்தரகாண்ட்

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அஸ்ஸாம்

  • இந்தியாவின் மிகநீளமான 4,000 கிமீ நீளமான ஆற்றுவழி கப்பல் சேவையானது 2023ஆம் ஆண்டில் தொடங்கும் என நடுவண் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அண்மையில் அறிவித்தார். உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் அஸ்ஸாமில் உள்ள போகிபீல் இடையே ஆற்று வழி கப்பல் சேவை இயக்கப்படும். இந்த நீர்வழி கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளை இந்தோ–வங்கதேச புரோட்டோகால் வழித்தடத்தின் ஊடாக இணைக்கும். வடகிழக்கு எல்லைப்புற இரயில்வேயால் (NFR) கட்டப்பட்ட போகிபீல் பயணிகள் படகுப் போக்குவரத்துச் சேவையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

7. எந்தக்கோளின் நிலவுகள், ‘கலீலிய நிலவுகள்’ என்று அழைக்கப்படுகின்றன?

அ. சனி

ஆ. வியாழன்

இ. வெள்ளி

ஈ. புதன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வியாழன்

  • ‘கலீலிய நிலவுகள்’ அல்லது ‘கலீலிய செயற்கைக்கோள்கள்’ வியாழனின் நான்கு பெரிய நிலவுகளான ஐயோ, யூரோபா, கனிமீடு மற்றும் கேலிஸ்டோ ஆகும். இவை நான்கும் முதலில் 1609–1610இல் கலீலியோ கலீலியால் கண்டறியப்பட்டது. NASAஇன் கூற்றுப்படி, செப்.26 அன்று, வியாழன் கடந்த 59 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வந்தது. பைனாகுலர்மூலம் பார்க்கும்போது வியாழன் கோளின் வளையமும் மூன்று அல்லது நான்கு கலீலிய நிலவுகளும் தெரியும்.

8. 2022ஆம் ஆண்டு உலக நிதியியல் மையங்கள் குறியீட்டில் முதலிடம் பிடித்த நகரம் எது?

அ. ஹாங்காங்

ஆ. லண்டன்

இ. நியூயார்க்

ஈ. ஷாங்காய்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நியூயார்க்

  • உலகளாவிய நிதியியல் மையங்கள் குறியீட்டின் (GFCI) சமீபத்திய தரவரிசையில் நியூயார்க் முதலிடத்தைப்பிடித்தது மற்றும் நான்காவது ஆண்டாக உலகின் மிகவும் விரும்பப்படும் நிதியியல் மையமாக அது உள்ளது. லண்டன் இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது; சிங்கப்பூர் ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. டோக்கியோவிற்கு பதிலாக பாரிஸ் முதல் 10 இடங்களுக்குள் வந்தது. இருப்பினும் உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் மேற்கத்திய நாடுகளின் உறவுகளைத் துண்டித்ததன் விளைவாக மாஸ்கோ 22 இடங்கள் கீழே தள்ளப்பட்டு 73ஆவது இடத்தில் உள்ளது. GFCI லண்டனைச் சார்ந்த மதியுரையகமாகும். இந்தக் குறியீடு சீன மேம்பாட்டு நிறுவனமான Z/Yenஆல் தொகுக்கப்பட்டது.

9. 2022 – உலக காண்டாமிருக நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Conservation of Rhinos

ஆ. Sustainability and Awareness

இ. Five Rhino Species Forever

ஈ. Say No to Poaching

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. Five Rhino Species Forever

  • பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், சுமத்ரா காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் உள்ளிட்ட 5 காண்டாமிருகங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் செப்.22 அன்று உலக காண்டாமிருக நாள் கொண்டாடப்படுகிறது. “Five Rhino Species Forever” என்பது இந்த ஆண்டு (2022) உலக காண்டாமிருக நாளுக்கானக்கருப்பொருளாகும். வேட்டையாடுதல், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை வாழ்விடங்களில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக காண்டாமிருக இனம் அழிவின் விளிம்பில் உள்ளது.

10. எந்தப் பொதுத்துறை நிறுவனத்திற்கு, அண்மையில், ‘மகாரத்னா’ அந்தஸ்து வழங்கப்பட்டது?

அ. பாரத் மின்னணு நிறுவனம்

ஆ. இந்திய எண்ணெய் நிறுவனம்

இ. REC லிட்

ஈ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. REC லிட்

  • முன்னர் கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் என்று அழைக்கப்பட்ட நடுவண் பொதுத்துறை நிறுவனமான REC லிட், நிறுவனத்திற்கு, ‘மகாரத்னா’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை, நிதியமைச்சகத்தின்கீழுள்ள, பொதுத்துறை நிறுவனங்கள் துறை வெளியிட்டுள்ளது. REC என்பது வங்கி சாரா நிதி நிறுவனமாகும்; இது இந்தியா முழுவதும் மின்துறை நிதி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. ‘மகாரத்னா’ அந்தஸ்து வழங்குவதன்மூலம், REC நிறுவனமானது தொழில்நுட்ப கூட்டு முனைவுகள் அல்லது பிற உத்திசார் கூட்டணிகளில் இணைய முடியும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அலுமினியம் சரக்கு ரயில்: இரயில்வேயில் இணைப்பு

முதல்முறையாக உள்நாட்டிலேயே அலுமினியம்கொண்டு உருவாக்கப்பட்ட இரயில்பெட்டிகளைக்கொண்ட சரக்கு இரயில் இந்திய இரயில்வேயில் இணைக்கப்பட்டது. ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் இந்த இரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டன. இந்த இரயில் பெட்டிகளால் 14,500 டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த இரயிலால் அதிக பாரத்தை சுமந்துசெல்ல முடியும். துருப்பிடிக்காமல் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கும். 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை.

2. ‘ஸ்மார்ட் காவலர்’ புதிய செயலி அறிமுகம்

தமிழ்நாட்டுக் காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதியசெயலி மூலம் மின்னணு ரோந்துப்பணி என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி, காவல்துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அவர்களது களப்பணிகளின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் இந்தச் செயலிமூலம் பதிவு செய்வதற்கும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டால், அதுகுறித்த தகவலை உடனடியாக உயரலுவலர்களுக்கு அவர்கள் தெரிவிக்க ஏதுவாக இந்தச் செயலி அமையும்.

17th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is name of India’s first antidote against SARS–CoV–2 virus?

A. VINCOV–19

B. ANTICOV–19

C. COVEX–19

D. NOCOV–19

Answer & Explanation

Answer: A. VINCOV–19

  • VINCOV–19, India’s first antidote and a projected cure against SARS–CoV–2 virus is now ready for market authorisation and simultaneous phase–3 clinical trials. The drug, a joint effort of the University of Hyderabad (UoH), the Centre for Cellular and Molecular Biology (CCMB) and immunological company VINS Bioproducts Limited, recently passed the phase–2 trials. It was conducted in over 200 participants across multiple centres in India.

2. Neiphiu Rio is the chief minister of which state?

A. Nagaland

B. Manipur

C. Meghalaya

D. Mizoram

Answer & Explanation

Answer: A. Nagaland

  • Chief Minister Neiphiu Rio on October 14, 2022 launched a universal health insurance scheme for the people of the state. The Chief Minister’s Health Insurance Scheme (CHIS) will be implemented in convergence with the Ayushman Bharat scheme of the Centre. The aim of the scheme is to alleviate financial hardships due to hospitalisation expenses and prevent accessibility to healthcare on account of inability to afford it. The scheme has been categorised into CMHIS Employees and Pensioners (EP), and CMHIS (General).

3. Which city was host of 6th East Asia Summit Education Minister’s Meeting held in October, 2022?

A. Kathmandu, Nepal

B. Hanoi, Vietnam

C. Singapore

D. Kuala Lumpur, Malaysia

Answer & Explanation

Answer: A. Kathmandu, Nepal

  • India participates at the 6th East Asia Summit Education Minister’s Meeting held on October 14, 2022 in Hanoi, Vietnam. Neeta Prasad, Joint Secretary (International Cooperation) Ministry of Education virtually addressed the gathering and informed about the key initiatives of National Education Policy 2020 and India’s collaborative efforts in education and research with partner EAS countries.

4. Who is the president of Council of Scientific and Industrial Research?

A. President of India

B. Prime Minister of India

C. Minister of Science & Technology

D. Secretary, Ministry of Science & Technology

Answer & Explanation

Answer: B. Prime Minister of India

  • Council of Scientific and Industrial Research was established by the Government of India in September 1942 as an autonomous body that has emerged as the largest research and development organisation in India. Prime minister of India serves as its President. Recently, Prime Minister Narendra Modi chaired a meeting of the Council of Scientific and Industrial Research (CSIR) Society in New Delhi on October 15, 2022.

5. Which city was the venue of Heads of Asian Coast Guard Agencies Meeting (HACGAM)?

A. New Delhi

B. Mumbai

C. Kolkata

D. Chennai

Answer & Explanation

Answer: A. New Delhi

  • Defence Minister delivered the inaugural address at 18th Heads of Asian Coast Guard Agencies Meeting (HACGAM) in New Delhi on October 15, 2022. Indian Coast Guard (ICG) is hosting 18th HACGAM in coordination with HACGAM secretariat from October 14 to 18, 2022. A total of 55 representatives from 18 countries and two International Organisations are participating in the meeting.

6. Bogibeel, which was seen in the news, is a place situated in which state?

A. Sikkim

B. Assam

C. Uttarakhand

D. West Bengal

Answer & Explanation

Answer: B. Assam

  • The Union Minister of Ports, Shipping and Waterways Sarbananda Sonowal announced recently that India’s longest river cruise service for over 4,000 km will start in 2023. The river cruise service will be operated between Varanasi in Uttar Pradesh and Bogibeel in Assam. The route will connect rivers Ganga and Brahmaputra via Indo–Bangladesh Protocol Route (IBRP). The Union Minister also inaugurated Bogibeel Riverfront Passenger Jetty built by Northeast Frontier Railways (NFR).

7. Which planet’s natural satellites are called as ‘Galilean Moons’?

A. Saturn

B. Jupiter

C. Venus

D. Mercury

Answer & Explanation

Answer: B. Jupiter

  • The Galilean moons or Galilean satellites are the four largest moons of Jupiter namely Io, Europa, Ganymede, and Callisto. They were first identified by Galileo Galilei in 1609–1610. On September 26, Jupiter is set to make its closest approach to Earth in the last 59 years according to NASA. The planet’s banding and three or four of the Galilean moons will be visible when seen with binoculars.

8. Which city topped the Global Financial Centres Index (GFCI) in 2022?

A. Hong Kong

B. London

C. New York

D. Shanghai

Answer & Explanation

Answer: C. New York

  • New York topped latest rankings from the Global Financial Centres Index (GFCI) and remained as the world’s most favoured financial centre for fourth year. London retains its second position while Singapore overtook Hong Kong to come in third. Paris returned to the top 10 to replace Tokyo. However, Moscow was pushed down 22 places to 73rd after its invasion of Ukraine and resultant severing of ties from Western countries. GFCI is compiled by Z/Yen, a London–based think tank and China Development Institute.

9. What is the theme of ‘World Rhino Day 2022’?

A. Conservation of Rhinos

B. Sustainability and Awareness

C. Five Rhino Species Forever

D. Say No to Poaching

Answer & Explanation

Answer: C. Five Rhino Species Forever

  • Union Jal Shakti Minister Gajendra Singh Shekhawat declared Andaman and Nicobar Islands as India’s first Swachh Sujal Pradesh. The Minister handed over the certificate to Lieutenant Governor Admiral DK Joshi declaring the UT as India’s first “Clean and Sujal Pradesh”. All the villages of the union territory have been certified as Har Ghar Jal and ODF (Open defecation free) Plus.

10. Which public sector enterprise was recently accorded the ‘Maharatna’ status?

A. Bharat Electronics Ltd

B. Oil India Ltd

C. REC Ltd

D. Hindustan Aeronautics Ltd

Answer & Explanation

Answer: C. REC Ltd

  • Central Public Sector Enterprise– REC Limited, formerly called as the Rural Electrification Corporation has been accorded the ‘Maharatna’ status.
  • An order to this effect was issued by the Department of Public Enterprises, under the Ministry of Finance. REC is a Non–banking Finance Company which focuses on Power Sector Financing and Development across India. With the grant of ‘Maharatna’ status, REC can also enter into technology Joint Ventures or other strategic alliances.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!