Tnpsc

17th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. குஜராத்தின் முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?

அ) பூபேந்திர படேல் 

ஆ) ஆச்சார்யா தேவ்ரத்

இ) ஆனந்திபென் படேல்

ஈ) புஷ்கர் சிங் டாமி

 • குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். காந்தி நகரிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவர் குஜராத் மாநிலத்தின் கட்லோடியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். செப்.13 அன்று விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு, பூபேந்திர படேல் குஜராத்தின் முதலமைச்சரானார்.

2. மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கத் -தில் பணிபுரிந்த முதல் பெண் அகழ்வாய்வுப் பொறியாளர் யார்?

அ) அகன்க்ஷா குமாரி

ஆ) சிவாங்கி சிங்

இ) பாவனா காந்த்

ஈ) ஷிவானி மீனா 

 • ஜோத்பூர் ஐஐடி’இன் முன்னாள் மாணவரான ஷிவானி மீனா, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பிரிவான (CCL) மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கத்தில் பணிபுரிந்த முதல் பெண் அகழ்வாய்வு பொறியாளர் ஆவார்.
 • நிலக்கரி சுரங்கத்தின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றான CCL’இன் ராஜ்ரப்பா திட்டத்தில் அவர் நியமிக்கப்படுவார். தற்போது வரை இந்தப் பதவியை ஆண்களே வகித்து வருகின்றனர். ஜார்க்கண்டில் உள்ள வடக்கு கரன்புரா பகுதியிலுள்ள CCL’இன் சூரியில் நிலத்தடி சுரங்கத்தில் பணிபுரியும் நிலக்கரி இந்தியாவின் முதல் பெண் சுரங்கப்பொறியாளராக அகன்க்ஷா குமாரி ஆனார்.

3. லெபனானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) ஹசன் டையப்

ஆ) அஜீஸ் அகன்னூச்

இ) நஜிப் மிகடி 

ஈ) மைக்கேல் ஔன்

 • பேரழிவு தந்த பெய்ரூட் துறைமுக வெடிவிபத்தை தொடர்ந்து, முந்தைய நிர்வாகம் பதவி விலகிய ஓர் ஆண்டுக்குப் பிறகு லெபனானில் புதிய அரசாங்கம் அறிவிக்கப்பட்டது. லெபனானின் மிகப்பெரிய பணக்காரரான நஜிப் மிகடி பிரதமராகிறார். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை பிரதமர் பதவிவகித்துள்ளார்.

4. மொராக்கோவின் பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) மௌலே ஹாபித் எலலாமி

ஆ) அஜீஸ் அகன்னூச் 

இ) நிசார் பரகா

ஈ) அஜீஸ் ரப்பா

 • மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது, தேசிய விடுதலைப் பேரணியின் அஜீஸ் அகன்னோச்சை பிரதமராக நியமித்து, அவரை அரசாங்கத்தை அமைக்கவும் கூறினார். செப்டம்பர்.8 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. மொராக்கோ -வில், அரசியல்வாதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ளன; முக்கிய முடிவுகள் அனைத்தும் மன்னரிடமே உள்ளன.

5. ‘Human Rights and Terrorism in India’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) அஜித் தோவல்

ஆ) சுப்பிரமணியன் சுவாமி 

இ) பிபின் ராவத்

ஈ) சசி தரூர்

 • கடந்த 1999ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப்பயணிகளுக்கு ஈடாக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது, இந்தியாவின் நவீனகால வரலாற்றில் பயங்கரவாதிகளிடம் “மோசமாக சரணடைதல்” என்று பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
 • அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்ட மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியாயப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள், பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை விளக்கும் “Human Rights and Terrorism in India” என்ற நூலை அவர் வெளியிட்டுள்ளார்.

6. உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளவர் யார்?

அ) ஆச்சார்யா தேவ்ரத்

ஆ) பேபி ராணி மௌரியா

இ) பண்டாரு தத்தாத்ரேயா

ஈ) குர்மித் சிங் 

 • ராணுவ துணைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்ற Lt.ஜெனரல் குர்மித் சிங், உத்தரகண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குமுன் அந்தப் பதவியை வகித்து வந்த பேபி இராணி மௌரியா பதவி விலகியதிலிருந்து அப்பதவி காலியாகவே இருந்தது.

7. மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கக் குழுவின் தலைவர் யார்?

அ) பல்ராம் பார்கவா

ஆ) ரன்தீப் குலேரியா

இ) V G சோமனி 

ஈ) ககன்தீப் காங்

 • மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக் -கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இக்குழுவிற்கு இந்திய தலைமை மருந்துக்கட்டுப்பாட்டாளர் டாக்டர் V G சோமனி தலைமை தாங்குகிறார். 1940ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் ஒப்பனை சட்டமானது மருந்துகள், ஒப்பனை மற்றும் மருத்துவ சாதனங்களின் இறக்குமதி, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துகிறது. இந்தச் சட்டம் அவ்வப்போது திருத்தப்படுகிறது. கடைசியாக 2008’இல் இந்தச் சட்டம் திருத்தஞ்செய்யப்பட்டது.

8. 13ஆவது BRICS உச்சிமாநாட்டிற்கு தலைமைதாங்கியவர் யார்?

அ) ஜி ஜின்பிங்

ஆ) நரேந்திர மோடி 

இ) விளாடிமிர் புதின்

ஈ) சிரில் ராமபோசா

 • 13ஆவது BRICS உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமைவகித்தார். “BRICS@15: Intra BRICS Cooperation for Continuity, Consolidation and Consensus” என்பதை இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளாக இந்தியா தேர்ந்தெடுத்தது. BRICS தலைவர்களான பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.
 • இந்தியாவின் BRICS தலைமை பொறுப்பின் போது பல்வேறு புதிய முன் முயற்சிகள் சாத்தியமாகின. BRICS டிஜிட்டல் நலவாழ்வு மாநாடு, பல்முனை சீர்திருத்தங்கள் குறித்த BRICS அமைச்சர்களின் முதல் கூட்டறிக்கை, BRICS பயங்கரவாத எதிர்ப்பு திட்டம், தொலைதூர திறனறி செயற்கைக்கோள்கள் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், BRICS மெய்நிகர் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பசுமை சுற்றுலாவுக்கான BRICS கூட்டணி ஆகியவை இவற்றில் அடங்கும்.

9. ‘bob World’ என்ற பெயரில் தனது டிஜிட்டல் வங்கி தளத்தை தொடங்கியுள்ள வங்கி எது?

அ) இந்தியன் வங்கி

ஆ) பந்தன் வங்கி

இ) பரோடா வங்கி 

ஈ) பாசிம் பங்கா கிராமின் வங்கி

 • அனைத்து வங்கியியல் சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் வழங்கும் நோக்கில் பரோடா வங்கி தனது டிஜிட்டல் வங்கி தளத்தை ‘bob World’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. சேமிப்பு, முதலீடு, கடன் மற்றும் வாங்கு ஆகிய நான்கு முக்கிய தூண்களின்கீழ், வங்கித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பரந்த வசதியை இது வழங்கும்.

10. இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் (EXIM வங்கி) நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) ஹர்ஷ பூபேந்திர பங்காரி 

ஆ) டேவிட் ரஸ்கின்ஹா

இ) சக்திகாந்த தாஸ்

ஈ) நிருபேந்திர மிஸ்ரா

 • இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் நிர்வாக இயக்குநராக ஹர்ஷ பூபேந்திர பங்காரியை அரசாங்கம் நியமித்துள்ளது. தற்போது EXIM வங்கியின் துணை நிர்வாக இயக்குநராக இருந்து வரும் பங்காரி, 3 ஆண்டு காலத்திற்கோ அல்லது அரசாங்கத்தின் அடுத்த உத்தரவு வரும் வரையோ இந்தப் பொறுப்பில் இருப்பார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோவில்களில் முழுநேர அன்னதானம் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களி -ல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடக்கிவைத்தார்.

ஏற்கனவே, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பட்டுவருகிறது. தற்போதைய 3 கோவில்களையு -ம் சேர்த்து மொத்தம் 5 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 754 கோவில்களில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

2. அரசுப்பணிகளுக்கான நேரடி நியமன வயது 32ஆக உயர்வு

அரசுப்பணிகளுக்கான நேரடி நியமன வயது வரம்பை 32ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிக -ளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்சவரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி அரசுப்பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பை 30லிருந்து 32ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணை அடிப்படை பணி நியமன வயது உச்சவரம்பில் எந்தவித மாற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு:

மேலும் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டை உறுதிசெய்வதற்காக அனைத்துத் துறைகளிலும் கண் -காணிப்பு அதிகாரிகளை நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3. 17-09-2021 – ஈ வெ ரா பெரியாரின் 143ஆவது பிறந்தநாள்.

4. எல்லோர்க்கும் எல்லாம்; சமூக நீதிக் கண்காணிப்புக் குழு அமைக்க முடிவு: முதல்வர் ஸ்டாலின்

சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி உள்ளது. ஆனால் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும். சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள்.

1916ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியானது அன்றைய சென்னை மாகாணத்தில் சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்தது. 1920ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி ஆட்சியானது இதனைப் பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது.

அதில் மிக மிக முக்கியமான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. அதுதான் தமிழ்ச் சமுதாயத்தின் பல தலைமுறைகளை மாற்றிய சமூக நீதி அரசாணை ஆகும்.

16.9.1921 அன்று நீதிக்கட்சி ஆட்சியின் முதல்வரான பனகல் அரசர் காலத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “அரசுப் பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்” என்ற அடித்தளத்தில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது. இதுதான் சமூக நீதிக்கான அடித் தளம் ஆகும். அதிலிருந்துதான் சமூக நீதி வரலாற்றின் மாபெரும் பயணம் தொடங்கியது.

நூறு ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 16ஆம் நாளான இன்று வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சமுதாய சீர்திருத்த மருத்துவர்களான நடேசனார், TM நாயர், கடலூர் ஏ சுப்பராயலு, பனகல் அரசர், அமைச்சர் S முத்தையா, பி டி இராஜன் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் அன்று தொடங்கிவைத்த சமூக நீதிப்புரட்சிதான் தமிழ்ச்சமுதாயத்தின் லட்சக்கணக்கானவர்கள் இல்லங்களில் விளக்கே -ற்றக் காரணமாக அமைந்தது. இந்த உத்தரவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற தரவரிசைப் பட்டியலைப் போட்டுக் கொடுத்தார் அன்றைய அமைச்சர் எஸ் முத்தையா. அதனால்தான், “இனிப்பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டுங்கள்” என்றார் தந்தை பெரியார்.

1. Who has been sworn in as the Chief Minister of Gujarat?

A) Bhupendra Patel 

B) Acharya Devvrat

C) Anandiben Patel

D) Pushkar Singh Dhami

 • Bhupendra Patel has been sworn in as the Chief Minister of Gujarat. He was sworn in by Governor Acharya Devvrat at the Raj Bhavan, Gandhinagar. He is also a member of Gujarat Legislative Assembly and represents Ghatlodia constituency. Bhupendra Patel became chief minister of Gujarat on September 13 after Vijay Rupani resigned from the post.

2. Who has become the first woman excavation engineer to work in an open cast mine at Central Coalfields Ltd?

A) Akanksha Kumari

B) Shivangi Singh

C) Bhawana Kanth

D) Shivani Meena 

 • Shivani Meena, an IIT Jodhpur alumna, has become the first woman excavation engineer to work in an open cast mine at Coal India arm CCL (Central Coalfields Ltd). She will be posted at CCL’s Rajrappa project, one of the important enterprises of the coal mining behemoth.
 • Until now the position belonged to men. The feat follows another milestone when Akanksha Kumari became Coal India’s first woman mining engineer to work in an underground mine at CCL’s Churi facility in North Karanpura area in Jharkhand.

3. Who has been appointed as the new Prime Minister of Lebanon?

A) Hassan Diab

B) Aziz Akhannouch

C) Najib Mikati 

D) Michel Aoun

 • A new government has been announced in Lebanon over a year after the previous administration quit following the devastating Beirut port explosion. Najib Mikati – Lebanon’s richest man – becomes Prime Minister, a position he has held twice before.

4. Who has been appointed as Prime Minister of Morocco?

A) Moulay Hafid Elalamy

B) Aziz Akhannouch 

C) Nizar Baraka

D) Aziz Rabbah

 • King Mohammed VI of Morocco has appointed Aziz Akhannouch of the liberal National Rally of Independents (RNI) party as Prime Minister and asked him to form a government.
 • RNI emerged as the biggest party in Parliamentary election held on September 8. Elected politicians in Morocco have only limited powers, as key decisions remain in the hands of the monarch.

5. Who is the author of the book ‘Human Rights and Terrorism in India?’

A) Ajit Doval

B) Subramanian Swamy 

C) Bipin Rawat

D) Shashi Tharoor

 • The release of three dreaded terrorists in exchange of hijacked Indian Airlines passengers in Afghanistan’s Kandahar in 1999 is the “worst capitulation” to terrorists in India’s modern history, says BJP MP Subramanian Swamy.
 • He has come out with a book ‘Human Rights and Terrorism in India’ which traces how the combating of terrorism can be harmonised with human and fundamental rights within reasonable restrictions that is permitted by the Constitution and upheld by the Supreme Court.

6. Who has been appointed as the new governor of Uttarakhand?

A) Acharya Devvrat

B) Baby Rani Maurya

C) Bandaru Dattatreya

D) Gurmit Singh 

 • Lieutenant General Gurmit Singh, who retired as the Deputy Chief of Army, was appointed the Governor of Uttarakhand, a post which fell vacant after Baby Rani Maurya resigned from the post.

7. Who is heading the newly formed government panel for framing new law for drugs, cosmetics and medical devices?

A) Balram Bhargava

B) Randeep Guleria

C) V G Somani 

D) Gagandeep Kang

 • The government has constituted an eight–member panel for framing a new law for drugs, cosmetics and medical devices.
 • The panel is being headed by Drugs Controller General of India (DCGI) Dr V G Somani. The Drugs and Cosmetics Act, 1940, regulates the import, manufacture, distribution and sale of drugs, cosmetics and medical devices. This Act is amended from time to time. The last amendment in the Act was made in 2008.

8. Who has chaired the 13th BRICS Summit?

A) Xi Jinping

B) Narendra Modi 

C) Vladimir Putin

D) Cyril Ramaphosa

 • Prime Minister, Narendra Modi, chaired the 13th BRICS Summit virtually on September 9, 2021. India chose the theme of the Summit as “BRICS@15: Intra–BRICS Cooperation for Continuity, Consolidation and Consensus”.
 • The Summit was participated by all other BRICS Leaders namely, President of Brazil Jair Bolsonaro, President of Russia Vladimir Putin President of China Xi Jinping and President of South Africa Cyril Ramaphosa. Under India’s chair ship, BRICS took several new initiatives, which includes First BRICS Digital Health Summit, First BRICS Ministerial Joint Statement on multilateral reforms, BRICS Counter–Terrorism Action Plan, Agreement on cooperation in field of remote–sensing satellites, Virtual BRICS vaccine Research & Development Centre, BRICS Alliance on Green Tourism etc.

9. Which bank has launched its digital banking platform named ‘bob World?’

A) Indian Bank

B) Bandhan Bank

C) Bank of Baroda 

D) Paschim Banga Gramin Bank

 • Bank of Baroda has launched its digital banking platform ‘bob World’, aimed at providing all banking services under one roof. bob World’ will offer a wide gamut of banking products and services, to be rolled out in phases, under four key pillars – Save, Invest, Borrow and Shop.

10. Who has been appointed as the managing director of Export–Import Bank of India (EXIM Bank)?

A) Harsha Bhupendra Bangari 

B) David Rasquinha

C) Shaktikanta Das

D) Nripendra Misra

 • The government has appointed Harsha Bhupendra Bangari as the managing director of Export–Import Bank of India (EXIM Bank). Bangari, who is presently the deputy managing director at EXIM Bank, would be at the helm for a period of three years or until further orders of the government.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button