TnpscTnpsc Current Affairs

18th & 19th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

18th & 19th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 18th & 19th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

18th & 19th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. எந்த நிறுவனத்தின் MD & CEOஆக திலிப் அஸ்பே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. ஏர் இந்தியா

ஆ. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்

இ. பாரத வங்கி

ஈ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்

  • இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) திலீப் அஸ்பேவை ஐந்தாண்டு காலத்திற்கு அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் (MD & CEO) மீண்டும் நியமித்துள்ளது. திலீப் அஸ்பே கடந்த 2018 ஜனவரியில் NPCIஇன் MD மற்றும் CEOஆக பொறுப்பேற்றார். NPCI என்பது இந்தியாவில் சில்லறை கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு அமைப்புகளை இயக்குவதற்கான ஓர் அமைப்பாகும்.

2. ‘ஒருங்கிணைந்த உயிரி சுத்திகரிப்பு ஆலை இயக்கத்தின் புத்தாக்க செயல்திட்டத்தை’ அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இந்தியா

இ. வங்காளதேசம்

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்கில் நடைபெற்ற உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் மன்றத்தில், பிரேசில், கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து தயாரித்த ஒருங்கிணைந்த உயிரி சுத்திகரிப்பு ஆலை இயக்கத்தின் புத்தாக்க செயல்திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது.
  • உலக நாடுகளின் ஒத்துழைப்பை இந்தத்திட்டம் இலட்சியமாக கொண்டிருப்பதாகவும், இதனை அடைவதற்கும், அரசு மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எரிசக்தி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் செயல்திறனிற்கு நிதி உதவியை அதிகரிப்பது அவசியம் என்றும் இந்தியா அப்போது தெரிவித்தது.

3. அண்மையில் இந்திய கடற்படையால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘நிஸ்தார் மற்றும் நிபுன்’ என்றால் என்ன?

அ. நீர்மூழ்கிக்கப்பல்கள்

ஆ. நீர்மூழ்குதலுக்கு உதவும் கப்பல்கள்

இ. ரோந்துக்கப்பல்கள்

ஈ. மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நீர்மூழ்குதலுக்கு உதவும் கப்பல்கள்

  • இந்திய கடற்படையானது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட நீர்மூழ்குதலுக்குதவும் கப்பல்களை (Diving Support Vessels) விசாகப்பட்டினத்தில் வைத்து அறிமுகப்படுத்தியது. ‘Nistar’ & ‘Nipun’ என்று அழைக்கப்பெறும் இக்கப்பல்களை ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் நிறுவனம் கட்டியுள்ளது. இந்தக் கப்பல்கள் சிக்கலான நீர்மூழ்குதலுக்கு உதவும் அமைப்பு மற்றும் ஆழ்கடல் மீட்பு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவை ஆழ்கடல் நீர்மூழ்குதல் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் மீட்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

4. இந்தியா மற்றும் இன்னும் பிற நான்கு ஆசிய நாடுகளால் நிறுவப்பட்ட APOA ஆனது கீழ்க்காணும் எந்தப் பொருளின் வர்த்தகத்துடன் தொடர்புடையது?

அ. பருப்பு வகைகள்

ஆ. பனையெண்ணெய்

இ. இரப்பர்

ஈ. பருத்தி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பனையெண்ணெய்

  • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச்சார்ந்த சமையல் எண்ணெய் வர்த்தக சங்கங்கள் ஆசிய பனையெண்ணெய் கூட்டணியை (APOA) அமைப்பதாக அறிவித்தன. தெற்காசியாவில் பனையெண்ணெயை இறக்குமதி செய்யும் ஐந்து முக்கிய நாடுகள் இவை.
  • சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் அதுல் சதுர்வேதி, APOAஇன் முதல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேரம் பேசும் ஆற்றலைப் பெறுவதும், இறக்குமதியை நிலையானதாக மாற்றுவதும் இந்தச் சங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

5. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக நுரையீரல் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.25

ஆ. அக்டோபர்.05

இ. அக்டோபர்.10

ஈ. அக்டோபர்.15

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. செப்டம்பர்.25

  • நுரையீரல் நலம் குறித்த அண்மைய சாதனைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்.25 அன்று உலக நுரையீரல் நாள் கொண்டாடப்படுகிறது. அனைத்து வகையான புற்றுநோய்களிலும், நுரையீரல் புற்றுநோயின் சதவீதம் 12.8 சதவீதமாக உள்ளது. புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில், நுரையீரல் புற்று நோயின் பங்கு 17.8% ஆகும். நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு 94% அளவுக்குப் புகைபிடித்தல் காரணமாக அமைகிறது. நுரையீரல் புற்றுநோயின் ஆபத்து புகைபிடிக்காதவர்களைவிட புகைப்பிடிப்பவர்களுக்கு 24 முதல் 36 மடங்கு அதிகமாக உள்ளது. “Lung Health for All” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப் பொருளாகும்.

6. முதன்முறையாக, ‘இராணி எலிசபெத் II ஆண்டின் சிறந்த பெண்மணி’ விருதை வென்றவர் யார்?

அ. சுயெல்லா பிரேவர்மேன்

ஆ. கரஞ்சீத் கௌர்

இ. நாக மூஞ்செட்டி

ஈ. ஹர்பிரீத் சண்டி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சுயெல்லா பிரேவர்மேன்

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன், முதன்முறையாக வழங்கப்படும் ‘இராணி எலிசபெத் II ஆண்டின் சிறந்த பெண்மணி’ விருதை வென்றார். 42 வயதான அவர் இம்மாத தொடக்கத்தில் பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸால் இங்கிலாந்து அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டார். இந்த விருதுகள் பிரிட்டனின் தெற்காசிய சமூகம் முழுவதுமுள்ள தனிநபர்களின் சாதனைகளை பரிந்துரைகள்மூலம் அங்கீகரிக்கின்றன.

7. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்டங்களைத் திருத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. நீதியரசர் L நாகேஸ்வர இராவ்

ஆ. நீதியரசர் A K சிக்ரி

இ. நீதியரசர் இரஞ்சன் கோகாய்

ஈ. நீதியரசர் சதாசிவன்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நீதியரசர் L நாகேஸ்வர இராவ்

  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்டங்களைத் திருத்துவதற்கும் தேர்தல் குழுமத்தை உருவாக்குதற்குமாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் L நாகேஸ்வர இராவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம் அதன் நிர்வாகச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, வரும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அவ்வாறு நடத்த தவறினால், இந்தியா, பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்திலிருந்து விலக்கி வைக்கப்படும் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

8. ஜெர்மனியைச் சார்ந்த PEN மையத்தின், “ஹெர்மன் கெஸ்டன் பரிசு” பெற்ற இந்திய எழுத்தாளர் மற்றும் கவிஞர் யார்?

அ. அருந்ததி இராய்

ஆ. மீனா கந்தசாமி

இ. ஓம் பிரகாஷ் வால்மீகி

ஈ. இராஜ் கௌதமன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மீனா கந்தசாமி

  • இந்திய எழுத்தாளரும், கவியுமான மீனா கந்தசாமி இந்த ஆண்டுக்கான, ‘ஹெர்மன் கெஸ்டன் பரிசைப்’ பெறுவார் என ஜெர்மனியில் உள்ள PEN மையம் அறிவித்துள்ளது. துன்புறுத்தப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் இதழாளர்களின் உரிமைகளுக்காக நிற்கும் ஆளுமைகளை, ‘ஹெர்மன் கெஸ்டன் பரிசு’ கௌரவிக்கிறது. தி ஜிப்சி காடஸ், வென் ஐ ஹிட் யூ: ஆர், எ போர்ட்ரைட் ஆஃப் தி ரைட்டர் ஆஸ் எ யங் வைஃப், ஐயன்காளி, தமிழ்ப்புலிகள் மற்றும் டச் மற்றும் Ms மிலிட்டன்சி போன்ற கவிதைகள் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாம்.

9. அண்மையில் நடைபெற்ற துலீப் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஹாக்கி

ஆ. கிரிக்கெட்

இ. டென்னிஸ்

ஈ. பூப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கிரிக்கெட்

  • மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் இடையேயான துலீப் கோப்பைக்கான இறுதிப்போட்டி அண்மையில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரத்தில் நடைபெற்றது. இது இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டளவிலான முதல்தர கிரிக்கெட் போட்டியாகும். இந்த ஆண்டு நடந்த போட்டியில் மேற்கு மண்டலம் 294 ரன்கள் வித்தியாசத்தில் தெற்கு மண்டலத்தை வீழ்த்தி பட்டத்தை வென்றது. மேற்கு மண்டல கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஜிங்க்யா இரஹானே விளங்கினார்.

10. 2022 – தேசிய சுற்றுலா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Rethinking Tourism

ஆ. Rural and Community Centric Tourism

இ. Accessible Tourism

ஈ. Anti–Racism Tourism

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Rethinking Tourism

  • சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் அதன் விளைவுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக ஒவ்வோர் ஆண்டும் செப்.27 அன்று நாடு முழுவதும் உலக சுற்றுலா நாள் கொண்டாடப்படுகிறது. “Rethinking Tourism” என்பது இந்த ஆண்டு (2022) உலக சுற்றுலா நாளுக்கானக் கருப்பொருளாகும். கடந்த 1980ஆம் ஆண்டு முதல், ஐநா உலக சுற்றுலா அமைப்பு செப்.27ஆம் தேதியை உலக சுற்றுலா நாளாக அனுசரித்து வருகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளதாக நடுவண் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக நவ.9 அன்று DY சந்திரசூட் பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பார்.

2. விடைபெற்றது மங்கள்யான்: மங்கள்யானின் பயண நிறைவு குறித்த தலையங்கம்

தேசம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கிடையில் உலகளவில் இந்தியாவைத் தலைநிமிர்ந்து பெருமைப்பட வைக்கும் சாதனைகளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. செவ்வாய் கிரகத்துக்கான தனது எட்டாண்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வரலாறாகி இருக்கிறது மங்கள்யான். இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) மற்றொரு சாதனையாக நிலைபெறுகிறது ‘மங்கள்யானின்’ பயண நிறைவு.

2013 நவ.5 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV ஏவுகணையின்மூலம் விண்வெளியில் செலுத்தப்பட்டது ‘மங்கள்யான்’ விண்கலம். அடுத்த ஓர் ஆண்டுக்குள் செவ்வாயின் புவியீர்ப்பு எல்லையைச் சென்றடைந்தது. `450 கோடி செலவில் விண்வெளியில் இஸ்ரோவால் செலுத்தப்பட்ட ‘மங்கள்யான்’, செவ்வாய் கிரகத்தை சென்றடைந்ததே கூட வல்லரசு நாடுகளை வியந்து நோக்க வைத்தது.

மனித இன விண்வெளி ஆய்வின் முதல்படியாக கருதப்படுகிறது செவ்வாய் கிரகத்துக்கான பயணம். செவ்வாயில் நிலவும் சூழல், அந்தக்கிரகத்தின் நீராதாரம், அதன் பூகோள அமைப்பு உள்ளிட்டவை குறித்து தெரிந்துகொள்வதுதான் ‘மங்கள்யானின்’ நோக்கம்.

செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான தட்பவெப்ப நிலை, தேவையான நீராதாரம் போன்றவை காணப்படுகிா என்பதைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சியில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வந்த நிலையில், இந்தியாவும் தனது பங்குக்கு, எந்தவொரு அந்நிய சக்தியின் உதவியும் இல்லாமல் செலுத்திய விண்கலம்தான் அது. பல முயற்சிகள் தோல்வியடைந்த பின்தான் அமெரிக்கா, ரஷ்யா தொடங்கிய வல்லரசு நாடுகளால் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடிந்தது. ஆனால், முதல் முயற்சியிலேயே இந்தியாவால் இலக்கை எட்ட முடிந்தது என்பது மிகப் பெரிய வெற்றி. அதன் பிறகுதான் உலக நாடுகள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியை வியந்து பாராட்டத் தலைப்பட்டன.

‘சிவப்புக்கோள்’ என்றழைக்கப்படும் செவ்வாயை ஒருமுறை சுற்றிவர ‘மங்கள்யானுக்கு’ 76.72 மநேரம் பிடித்தது. ஆறு மாதங்கள்தான் ‘மங்கள்யான்’ தாக்குப்பிடிக்கும் என்றுதான் ஆரம்பத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கணித்தனர். ஆனால், ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் சற்றும் சளைக்காமலும், எந்தவிதப் பின்னடைவையும் சந்திக்காமலும் செவ்வாய் கிரகத்தில், ‘மங்கள்யான்’ தன்னுடைய பணியைத் தொடர்ந்ததை மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடுவதில் நியாயம் உள்ளது. அவ்வப்போது ஏற்பட்ட கிரகணங்களால் ‘மங்கள்யானின்’ மின்கலன்களின் வீரியம் குறையாமல் இருந்திருந்தால், மேலும் சில ஆண்டுகள்கூட தனது ஆய்வை அந்த விண்கலம் மேற்கொண்டிருக்கக்கூடும்.

எட்டு ஆண்டுகளில், ‘மங்கள்யான்’ எத்தனையோ புதிய தகவல்களை செவ்வாய் கிரகம் குறித்து உலகுக்கு வழங்கி இருக்கிறது. 2015 ஜூலை.14-ஆம் தேதி செவ்வாய் குறித்த முதல் நிழற்படம், ‘மங்கள்யான்’மூலம் பெறப்பட்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து 1,100-க்கும் அதிகமான படங்களை, ‘மங்கள்யான்’ அனுப்பித்தந்தது.

அந்தப்படங்களின் அடிப்படையில் செவ்வாய் குறித்த புரிதல் மட்டுமல்லாமல், அந்தக் கிரகத்தின் உருவம் குறித்தும் இஸ்ரோ பல கணிப்புகளையும், உண்மைகளையும் அறிந்துகொள்ள முடிந்தது. செவ்வாயின் துணைக் கிரகமான ‘டிமோஸ்’ கிரகத்தின் நிழற்படத்தை முதன்முதலாக எடுத்ததும், உலகுக்களித்ததும் நமது விஞ்ஞானிகள் அனுப்பிய ‘மங்கள்யான்’ என்னும்போது நாம் பெருமிதம் அடையலாம்.

2023இல் சந்திரனை இலக்காக்கி ‘சந்திரயான்’ மூன்று விண்கலத்தை ஏவத்திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதலாவது ‘சந்திரயான்’ 2008இல் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தது அந்த முயற்சி. 2019இல், ‘சந்திரயான்-2’ செலுத்தப்பட்டது. ஆனால், சந்திரனில் இறங்கும்போது சில கோளாறுகள் ஏற்பட்டு அம்முயற்சி தோல்வி அடைந்தது.

அந்தத்தவறுகளை எல்லாம் திருத்தி மீண்டும் ஒருமுறை விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுமூச்சில் செயல்படுகின்றனர். ‘சந்திரயான்-3’ வெற்றி அடைந்தால், அதைத் தொடர்ந்து மனிதனைச் சந்திரனுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ முயற்சிக்கு இப்போதே திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் விண்வெளிக் கனவுகளுக்கு நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் வழங்கியுள்ளது ‘மங்கள்யான்’ வெற்றி. ‘சந்திரயான்-3’, ‘ககன்யான்’ என்று விண்ணை வசப்படுத்தக் காத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி செலுத்த தேசம் கடமைப்பட்டிருக்கிறது!

3. இந்தியாவில் 41.5 கோடி பேர் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டனர்

இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமார் 41.5 கோடி பேர் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டுள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்முக ஏழ்மை குறியீட்டை ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது. இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமார் 41.5 கோடி பேர் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005-06 முதல் 2015-16 வரையிலான காலகட்டத்தில் சுமார் 27.5 கோடி பேரும், 2015-16 முதல் 2019-2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் 14 கோடி பேரும் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டனர்.

2030ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள ஏழை மக்களின் எண்ணிக்கையைக் குறைந்தபட்சம் பாதியளவு குறைக்க வேண்டும் என்ற நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எளிதில் எட்டிவிட முடியும் என ஐநா நம்பிக்கை தெரிவித்துள்ளது. பன்னாட்டளவில் 111 நாடுகளில் சுமார் 120 கோடி பேர் ஏழ்மை நிலையிலுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள -து. அவர்களில் சுமார் 59.3 கோடி பேர் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் (22.89 கோடி) உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 9.7 கோடி பேர் சிறார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து நைசீரியாவில் 9.67 கோடி ஏழைகள் உள்ளனர். இந்தியாவில் பிகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. பிரபல மருத்துவர் மஹாலனோபிஸ் காலமானார்

“ORS” எனப்பரவலாக அறியப்படும் உப்பு-சர்க்கரை கரைசலைக் கண்டறிந்ததில் முக்கியப் பங்கு வகித்த மருத்துவர் திலீப் மஹாலனோபிஸ் (88) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார். காலரா உள்ளிட்ட நோய்களால் வயிற்றுப்போக்கு அதிகரிக்கும்போது உடலில் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும். அதன்காரணமாக நோயாளிகள் உயிரிழப்பதற்கும் வாய்ப்புள்ளது. காலரா பரவலின்போது அதிக அளவிலான நோயாளிகளின் உயிரிழப்புக்கும் இதுவே காரணமாக அமைந்தது.

அதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார் திலீப் மஹாலனோபிஸ். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர், உப்பு-சர்க்கரை கரைசலைக் கண்டறிந்தார்.  அதன்மூலமாக உடலின் ஆற்றலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை விரைவில் வழங்க முடியும் என அவர் ஆராய்ச்சியின்மூலமாக உறுதிசெய்தார். ‘உப்பு-சர்க்கரை கரைசலின் தந்தை’ என இவர் அறியப்படுகிறார்.

5. BCCI தலைவராக ரோஜர் பின்னி நியமனம்

BCCI அமைப்பின் தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். 2019 அக்டோபரில் BCCI தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் BCCI விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள BCCI-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று ஆண்டு காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனினும் BCCIஇன் தலைமைப்பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 1983இல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியைச் சேர்ந்த ரோஜர் பின்னி (67), BCCI தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல்செய்தார். இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற BCCI ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் BCCI தலைவராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

6. பென்ஸிமா, புடெலாஸுக்கு ‘பேலோன் தோர்’ விருது

கால்பந்து விளையாட்டு உலகில் மதிப்புமிக்கதாக இருக்கும் ‘பேலோன் தோர்’ விருதை 2022ஆம் ஆண்டில் ஆடவர் பிரிவில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமாவும், மகளிர் பிரிவில் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் வென்றனர். இதில் பென்ஸிமா முதல் முறையாக இந்த விருதை வென்றிருக்கும் நிலையில், புடெலாஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக அதை கைப்பற்றியிருக்கிறார். மகளிர் பிரிவில் இருமுறை இந்த விருதை வென்ற முதல் வீராங்கனை புடெலாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக சிறப்பாக விளையாடி 44 கோல்கள் அடித்ததன் அடிப்படையில் பென்ஸிமாவும், பார்சிலோனா FC அணியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 கோல்கள் ஸ்கோர் செய்ததன் பேரில் புடெலாஸும் இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளனர். கடந்த 1956-க்குப் பிறகு இந்த விருதைப்பெறும் மூத்த வீரர் (34) வீரர் என்ற பெருமையை பென்ஸிமா பெற்றுள்ளார். மேலும், இந்த விருதைப் பெறும் 5ஆவது பிரான்ஸ் வீரர் அவர்.

இந்த விருதானது, ‘பிரான்ஸ் புட்பால்’ என்ற பிரான்ஸ் செய்தி நிறுவனத்தால் கடந்த 1956 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கால்பந்து செய்தியாளர்கள், பயிற்சியாளர்கள், தேசிய அணிகளின் கேப்டன்கள் ஆகியோர் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர்.

18th & 19th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Dilip Asbe’ has been reappointed as the MD & CEO of which institution?

A. Air India

B. National Payments Corporation of India

C. State Bank of India

D. Hindustan Aeronautics Ltd

Answer & Explanation

Answer: B. National Payments Corporation of India

  • The National Payments Corporation of India (NPCI) has reappointed Dilip Asbe as the Managing Director and Chief Executive Officer (MD & CEO) of the company for a period of five years. Dilip Asbe took over as MD&CEO of NPCI in January 2018. NPCI is an umbrella organisation for operating retail payments and settlement systems in India.

2. Which country launched the ‘Innovation Roadmap of the Mission Integrated Bio–refineries’?

A. USA

B. India

C. Bangladesh

D. UAE

Answer & Explanation

Answer: B. India

  • India launched the ‘Innovation Roadmap of the Mission Integrated Bio–refineries’ on the sidelines of the Global Clean Energy Action Forum–2022 at Pittsburgh, US The Roadmap has been developed by co–leads with active inputs from Brazil, Canada, EC and the UK. The Mission aims at greater collaboration and the need for increased financing for Energy Research, Development, and Demonstration (RD&D) during the next five years through public–private investment.

3. What are ‘Nistar and Nipun’, which were released by the Indian Navy recently?

A. Submarines

B. Diving Support Vessels

C. Patrol Craft

D. Pollution Control Vessels

Answer & Explanation

Answer: B. Diving Support Vessels

  • The Indian Navy launched two indigenously designed and built Diving Support Vessels (DSVs) – Nistar and Nipun in Visakhapatnam. The vessels were built by Hindustan Shipyard Ltd. The vessels have complex diving support systems and a Deep Submergence Rescue Vessel (DSRV), which will be deployed for deep sea diving and submarine rescue operations.

4. APOA, which was set up by India and 4 other Asian countries, is associated with trade of which product?

A. Pulses

B. Palm Oil

C. Rubber

D. Cotton

Answer & Explanation

Answer: B. Palm Oil

  • Edible oil trade associations from India, Pakistan, Sri Lanka, Bangladesh and Nepal announced the setting up of Asian Palm Oil Alliance (APOA). These are the five major palm oil importing countries in South Asia. Atul Chaturvedi, President, Solvent Extractors’ Association of India (SEA) has been named the first chairman of APOA. The aim of the association is to gain bargaining power and make imports sustainable.

5. When is the ‘World Lung Day’ observed every year?

A. September.25

B. October.05

C. October.10

D. October.15

Answer & Explanation

Answer: A. September.25

  • World Lung Day is celebrated on September 25, which aims to recognise the latest achievements in lung health. Out of all the cancer cases, lung cancer accounts for 12.8%. Out of all the mortalities due to cancer, lung cancer accounts for 17.8%. Smoking is responsible for developing lung cancer by 94%. The risk of lung cancer is 24 to 36 times higher in smokers than in people who do not smoke. The theme for the day is, “Lung Health for All”.

6. Who has been named winner of the first–ever Queen Elizabeth II Woman of the Year award?

A. Suella Braverman

B. Karanjeet Kaur

C. Naga Munchetty

D. Harpreet Chandi

Answer & Explanation

Answer: A. Suella Braverman

  • Indian–origin Home Secretary Suella Braverman has been named winner of the first–ever Queen Elizabeth II Woman of the Year award. The 42–year–old barrister was appointed to the Cabinet earlier this month by British Prime Minister Liz Truss. The awards recognise the achievements of individuals from across Britain’s South Asian community via public nominations.

7. Who has been appointed for amending constitution of Indian Olympic Association (IOA)?

A. Justice L Nageswara Rao

B. Justice A K Sikri

C. Justice Ranjan Gogoi

D. Justice Sadasivan

Answer & Explanation

Answer: A. Justice L Nageswara Rao

  • The Supreme Court appointed former Supreme Court Judge Justice L Nageswara Rao for amending constitution of Indian Olympic Association and preparing Electoral College. The International Olympic Committee (IOC) issued a warning to IOA to resolve its governance issues and hold elections by December, failing which the world sports body will ban India.

8. Which Indian author and poet is the recipient of “Hermann Kesten Prize” by Germany–based PEN Centre?

A. Arundhati Roy

B. Meena Kandasamy

C. Om Prakash Valmiki

D. Raj Gowthaman

Answer & Explanation

Answer: B. Meena Kandasamy

  • Indian author and poet Meena Kandasamy has been announced as this year’s recipient of the Hermann Kesten Prize by the PEN Centre in Germany. The Hermann Kesten Prize honours personalities who stand up for the rights of persecuted authors and journalists. Her notable works include The Gypsy Goddess, When I Hit You: Or, A Portrait of the Writer as a Young Wife, Ayaankali, Tamil Tigresses and poems such as Touch, and Ms Militancy.

9. Duleep Trophy, which was held recently, is associated with which sports?

A. Hockey

B. Cricket

C. Tennis

D. Badminton

Answer & Explanation

Answer: B. Cricket

  • The Duleep Trophy final between the West Zone and South Zone was recently held in the city of Coimbatore, Tamil Nadu. It is a domestic first–class cricket competition played in India. In this year’s edition, West Zone defeated South Zone by 294 runs, and won the title. Ajinkya Rahane was the skipper of the West Zone cricket team.

10. What is the theme of the ‘National Tourism Day’ 2022?

A. Rethinking Tourism

B. Rural and Community Centric Tourism

C. Accessible Tourism

D. Anti–Racism Tourism

Answer & Explanation

Answer: A. Rethinking Tourism

  • World Tourism Day is celebrated across the country on September 25 every year to spread awareness about the importance of tourism and its impact on the economy. This year’s theme for World Tourism Day is “Rethinking Tourism”. Since 1980, the United Nations World Tourism Organization has celebrated World Tourism Day as international observances on September 27.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!