TnpscTnpsc Current Affairs

18th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. நான்காவது இந்தியா-அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை நடத்தும் நகரம் எது?

அ) புது தில்லி

ஆ) வாஷிங்டன் 

இ) காந்தி நகரம்

ஈ) நியூயார்க்

  • பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் தனது ஐந்து நாள் அமெரிக்க பயணத்தின் ஒருபகுதியாக வாஷிங்டன் DC சென்றடைந்தார். இதில் இந்தியா-அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை அடங்கும்.
  • 2+2 உரையாடலில் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர் இடையேயான சந்திப்புகள் அடங்கும்.

2. ‘மாதவ்பூர் மேளா’ கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) குஜராத் 

இ) இராஜஸ்தான்

ஈ) பஞ்சாப்

  • குஜராத் மாநிலத்தின் கடற்கரை கிராமமான மாதவ்பூரில் ஆண்டுதோறும் ஐந்து நாள் நடக்கும் ‘மாதவ்பூர் மேளா’ என்னும் கலாச்சார கண்காட்சியை இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
  • இந்துக்கடவுளான கிருஷ்ணருக்கு ருக்மிணியுடன் நடந்த திருமணத்தை இது கொண்டாடுகிறது.

3. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப்பின் பாகிஸ்தானின் 23ஆவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ) ஷாபாஸ் ஷெரீப் 

ஆ) ஷா மஹ்மூத் குரேஷி

இ) நவாஸ் ஷெரிப்

ஈ) ஆசிப் அலி சர்தாரி

  • பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (N) தலைவர் ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றார். அவருக்கு முன் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அடுத்து ஷாபாஸ் பிரதமரானார்.
  • மூன்று முறை முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ், பாகிஸ்தானின் 23ஆவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4. உலகில் தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா 

இ) அமெரிக்கா

ஈ) ஆஸ்திரேலியா

  • சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய தங்க பயன்பாட்டை இந்தியா கொண்டுள்ளது.
  • அதிக தேவை காரணமாக 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 33.34% அதிகரித்து `46.14 பில்லியனாக உள்ளது. முந்தைய நிதியாண்டில், தங்கம் இறக்குமதி மதிப்பு `34.62 பில்லியனாக இருந்தது.

5. காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு அதன் சமீபத்திய மதிப்பீட்டறிக்கையில் நிலையான போக்குவரத்துக்கான இந்திய நகரமாகக் குறிப்பிட்டுள்ள நகரம் எது?

அ) சென்னை

ஆ) புது தில்லி

இ) கொல்கத்தா 

ஈ) மும்பை

  • காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவானது (IPCC) சமீபத்தில் தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் பகுதி C-ஐ வெளியிட்டது.
  • சமீபத்திய IPCC அறிக்கையின் முக்கிய கண்டறிவு என்ன -வெனில், புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்வதில் உலகம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். கொல்கத்தாவின் போக்குவரவை முற்றிலுமாக பொதுப் போக்குவரத்திற்கு மாற்றுவது குறித்து இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

6. “ஒருங்கிணைந்த உயிரி-சுத்திகரிப்பு நிலையங்கள்” திட்டம் என்பது பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்?

அ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம் 

ஆ) புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ) MSME அமைச்சகம்

ஈ) எரிசக்தி அமைச்சகம்

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘ஒருங்கிணைந்த உயிரி-சுத்திகரிப்பு நிலையங்களை’த் தொடங்கினார்.
  • இது புதுப்பிக்கத்தக்க எரிபொருள்கள் மற்றும் குறைந்த அளவிலான கரிமத்தை வெளியிடும் எதிர்காலத்திற்கான இரசாயனங்களின் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும். இது, ‘தூய ஆற்றல்’ என்ற அடிப்படையில், ஒரு PPP (பொது தனியார் பங்கேற்பு) மாதிரி முன்முயற்சியாக உள்ளது.

7. பங்குச்சந்தைகளில் நிருவாக விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கான SEBI குழுவின் தலைவர் யார்?

அ) UK சின்ஹா

ஆ) அஜய் தியாகி

இ) G மகாலிங்கம் 

ஈ) உர்ஜித் படேல்

  • பங்குச்சந்தைகள் மற்றும் பிற சந்தை உட்கட்டமைப்பு நிறுவனங்களில் (MIIs) நிருவாக விதிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்வதற்கும் பரிந்துரை செய்வதற்கும் ஒரு குழுவை மூலதனச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான SEBI அமைத்தது.
  • அறுவர்கொண்ட இக்குழுவிற்கு SEBIஇன் முன்னாள் முழு நேர உறுப்பினரான G மகாலிங்கம் தலைமைதாங்குவார்.

8. கனடாவின் பெரும் கட்டண அமைப்பான ‘Payments Canada’ உடன் கூட்டிணைந்துள்ள இந்திய நிறுவனம் எது?

அ) இன்போசிஸ்

ஆ) TATA கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 

இ) விப்ரோ

ஈ) NPCl

  • TATA கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆனது கனடாவின் மிகப்பெரிய கட்டண அமைப்பான, ‘Payments Canada’ உடன் கூட்டிணைந்துள்ளது.
  • இக்கூட்டாண்மை அதன் கட்டண முறைச்செயல்பாடுக
    -ளை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதையும், Real-Time Rail (RTR)-ஐச் செயல்படுத்துவதில் உதவுவதையும் நோக்கமெனக் கொண்டுள்ளது. RTR என்பது ஒரு புதிய நிகழ்நேர கட்டண முறைமையாகும்.

9. அரசாங்கப்பள்ளிகளில், ‘ஹாபி ஹப்ஸ்’ அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம்/UT எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) புது தில்லி 

ஈ) பஞ்சாப்

  • தில்லி அரசுப்பள்ளிகளில், ‘ஹாபி ஹப்ஸ்’ அமைக்கும் திட்டம் உள்ளது. இது பள்ளிவேளைக்குப் பிறகு நடனம், இசை, கலை மற்றும் கைவினை பயிற்சிகளைக் கற்றுத் தரும். 2022-2023 கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும்.

10. ‘டெம்பிள் 360’ இணையதளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) கலாச்சார அமைச்சகம் 

இ) ஜவுளி அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • மத்திய கலாச்சார அமைச்சகமானது ‘டெம்பிள் 360’ என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் முதன்மையான யாத்திரை தலங்களின் பூசைகளை இணையவழியில் மேற்கொள்ளலாம்.
  • இந்தியாவில் உள்ள அனைத்துக் கோவில்களின் முழு நேரலையும் இந்த இணையதளத்தில் கிடைக்கப்பெறும். தற்போது, சோமநாத் (குஜராத்), காசி விஸ்வநாதர் (உபி), திரிம்பகேஷ்வர் மற்றும் கிரிஷ்னேஷ்வர் (இரண்டும் மகாராஷ்டிரா) ஆகிய 4 கோவில்களின் பூசைகளின் நேரடி ஒளிபரப்பை இதில் காணலாம்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையத்தைப் பிரதமர் நாளை தொடங்கி வைப்பார்

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலகிலேயே இந்த வகையில் முதலாவதாக பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையம் 2022 ஏப்.19 அன்று தொடங்கப்படவுள்ளது. இந்த மையத்தின் தொடக்க விழா நிகழ்வுடன் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு உச்சிமாநாடும் நடக்கவுள்ளது.

2. இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்

இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக, இராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மனோஜ் சி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

மனோஜ் சி பாண்டே 1982 டிசம்பர் 24ஆம் தேதி இராணுவத்தின் பொறியாளர் பிரிவில் இணைந்தார். தனது 39 வருட பணி அனுபவத்தில், பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். மேலும், அந்தமான் நிகோபார் தீவுகள் ராணுவக் கமாண்டர் ஆகவும், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு பிராந்திய ராணுவத் தலைமையகத்தின் தலைமைக் கமாண்டர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

3. தமிழ்நாட்டில் மேலும் ஐந்து இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படவுள்ளன: தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா தகவல்

தமிழ்நாட்டில் சிவகளை, வெம்பக்கோட்டை, வைகை ஆற்றங்கரை உட்பட 5 இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என்று தென்னிந்திய கோயில் ஆய்வுத் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா தெரிவித்தார்.

4. பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ இஇரயில் திட்டம்: 78 பெட்டிகள் தயாரிக்க அல்ஸ்ட்ராம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தில், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ இரயில் சேவைக்கு 78 இரயில் பெட்டிகள் தயாரிக்க அல்ஸ்ட்ராம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டம்:

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டப் பணி `63,246 கோடியில் 118.9 கிமீ தூரத்துக்கு நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வரை 26.1 கிமீ தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கிமீ தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிமீ தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ இரயில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

78 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம்:

இந்த நிலையில், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ இரயில் திட்டப்பணி முடிந்து, இங்கு மெட்ரோ இரயில் சேவைக்கு 78 பெட்டிகள் அல்ஸ்ட்ராம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. இராணுவத் தளபதிகளின் ஐந்துநாள் மாநாடு இன்று தொடக்கம்

இராணுவத் தளபதிகள் பங்கேற்கும் ஐந்து நாள் மாநாடு ஏப்ரல்.18 தில்லியில் தொடங்குகிறது. ரஷியா – உக்ரைன் போருக்கிடையே நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய எல்லைகளின் சவால்கள் குறித்தும் விவாதித்து மதிப்பிடப்படும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டன.

இந்த மாநாடு ராணுவத் தலைமைத் தளபதி எம் எம் நரவணே தலைமையில் தில்லியில் ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் இராணுவத் தளபதிகள் மாநாடு என்பது பாதுகாப்புத் துறையின் உயர் நிலை மாநாடாகும்.

6. தேசிய ஹாக்கி: தமிழ்நாட்டுக்கு வெள்ளி

12-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் -பில் தமிழக அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இப்போட்டியில் தமிழக அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருந்தது.

அதில் ஹரியானா அணியிடம் வீழ்ந்து இரண்டாமிடம் பிடித்தது. கர்நாடக அணி வெண்கலம் வென்றது.

7. 17-04-2022: ‘தீரன்’ சின்னமலை அவர்களின் 266ஆவது பிறந்தநாள்.

1. Which city is the host of the fourth India–US 2+2 Ministerial Dialogue?

A) New Delhi

B) Washington 

C) Gandhi Nagar

D) New York

  • Defence Minister Rajnath Singh arrived in Washington DC as part of his five–day US visit which includes the India–US 2+2 Ministerial Dialogue. 2+2 dialogue involves meetings between Defence Minister Rajnath Singh, External Affairs Minister (EAM) S Jaishankar and their respective American counterparts.

2. ‘Madhavpur Mela’ is a cultural fair celebrated in which state?

A) Karnataka

B) Gujarat 

C) Rajasthan

D) Punjab

  • President Ramnath Kovind inaugurated the annual Madhavpur Mela, the five–day cultural fair, in the coastal village of Madhavpur in Gujarat. The fair celebrates the marriage of Hindu deity Lord Krishna with Rukmini.

3. Who has been elected as the 23rd Prime Minister of Pakistan, after the no–confidence motion?

A) Shehbaz Sharif 

B) Shah Mahmood Qureshi

C) Nawaz Sherif

D) Asif Ali Zardari

  • Pakistan Muslim League (N) Leader Shehbaz Sharif was sworn–in as the new Prime Minister of Pakistan, after a no–confidence motion was introduced against his predecessor Imran Khan.
  • Shehbaz, the younger brother of former three–time Prime Minister Nawaz Sharif, was elected as the country’s 23rd PM.

4. Which country is the world’s largest consumer of Gold?

A) India

B) China 

C) USA

D) Australia

  • India is the world’s second largest consumer of Gold, only after China. India’s gold imports rose by 33.34 per cent to ₹46.14 billion during the 2021–22 fiscal, due to high demand. In the previous fiscal, gold imports were worth ₹34.62 billion.

5. The Intergovernmental Panel on Climate Change (IPCC) in its recent assessment report mentioned which Indian city for sustainable transportation?

A) Chennai

B) New Delhi

C) Kolkata 

D) Mumbai

  • The Inter–governmental Panel on Climate Change (IPCC) recently released the Part C of its sixth assessment report.
  • The main finding of the latest IPCC report is that the world must focus on reducing dependency on fossil fuel. The report mentioned Kolkata in respect of shifting from private to public transport.

6. “Mission Integrated Bio–refineries” is an initiative of which Union Ministry?

A) Ministry of Science and Technology 

B) Ministry of New and Renewable Energy

C) Ministry of MSME

D) Ministry of Power

  • Union Minister for Science and Technology Dr Jitendra Singh launched the “Mission Integrated Bio–refineries”, to accelerate innovation for renewable fuels, and chemicals for a low–carbon future. It is a PPP (Public Private Participation) model initiative for ‘Clean Energy’.

7. Who is the head of the SEBI Committee on strengthening of governance norms at Stock exchanges?

A) UK Sinha

B) Ajay Tyagi

C) G Mahalingam 

D) Urjit Patel

  • Capital markets regulator SEBI constituted a committee for reviewing and making recommendations for further strengthening of governance norms at stock exchanges and other market infrastructure institutions (MIIs).
  • The six–member committee will be chaired by G Mahalingam, former whole–time member of SEBI.

8. Which Indian company has partnered with Canada’s largest payment organisation – ‘Payments Canada’?

A) Infosys

B) Tata Consultancy Services (TCS) 

C) Wipro

D) NPCl

  • Tata Consultancy Services (TCS) has entered into a partnership with Canada’s largest payment organisation, Payments Canada. The partnership aims to transform its payment system operations and help in the implementation of the Real–Time Rail (RTR). RTR is a new real–time payments system.

9. Which Indian state/UT has launched a project to set up ‘Hobby Hubs’ in government schools?

A) Tamil Nadu

B) Kerala

C) New Delhi 

D) Punjab

  • The Delhi Government has project to set up ‘Hobby Hubs’ in government schools.
  • It includes after–school dance, music, arts and crafts activities. For the 2022–2023 academic session, this project will be implemented in single shift government schools.

10. Which Union Ministry of India launched ‘Temple 360’ portal?

A) Ministry of MSME

B) Ministry of Culture 

C) Ministry of Textiles

D) Ministry of Home Affairs

  • The Union Culture ministry launched a new portal named Temple 360, through which devotees can perform online rituals of prominent pilgrimage sites. Live camera feeds across temples of India will be made available on the website.
  • At present, live streaming of rituals from four temples: Somnath (Gujarat), Kashi Vishwanath (UP), Trimbakeshwar and Ghrishneshwar (both in Maharashtra) can be viewed on the portal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!