Tnpsc

18th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

18th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

18th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1.தேசிய கல்விக்கொள்கை-2020’ஐ அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) கர்நாடகா 

இ) குஜராத்

ஈ) மத்திய பிரதேசம்

  • தேசிய கல்விக்கொள்கை-2020’இன் அமலாக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது என்று மாநில உயர்கல்வி அமைச்சர் CN அஸ்வத் நாராயண் கூறினார். நடப்பு கல்வியாண்டு 2021-2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய கல்விக்கொள்கை-2020 அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2. செயற்கை நுண்ணறிவின்மூலமான கண்டுபிடிப்பு ஒன்றுக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடு எது?

அ) தென்னாப்பிரிக்கா 

ஆ) இங்கிலாந்து

இ) ஆஸ்திரேலியா

ஈ) சுவீடன்

  • செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடாக தென்னாப்பிரிக்கா மாறி உள்ளது. பிராக்டல் வடிவவியலை அடிப்படையாகக் கொண்ட உணவு கொள்கலன் அமைப்புக்கு அந்நாடு காப்புரிமை வழங்கியுள்ளது. DABUS (Device for Autonomous Bootstrapping of Unified Sentience) எனப்படும் AI அமைப்பால் அவ்வமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  • இந்த DABUS’ஐ ஸ்டீபன் தாலர் என்பவர் உருவாக்கியுள்ளார். இது சிக்கலான செயல்பாடுகளைச் செய்யக்கூடியது என்பதால் படைப்பாற்றல் எந்திரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. கெட்டுப்போன உணவுகள் குறித்த எச்சரிக்கைகள், அவசர எச்சரிக்கை அமைப்பு போன்றவை DABUS’இன் முக்கிய செயல்பாடுகளாகும்.

3. உஜ்வாலா 2.0 திட்டத்தை, பிரதமர் மோடி, எம்மாநிலத்திலிருந்து தொடங்கினார்?

அ) இராஜஸ்தான்

ஆ) உத்தர பிரதேசம் 

இ) மேற்கு வங்கம்

ஈ) அஸ்ஸாம்

  • உத்தர பிரதேசத்தின் மகோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.
  • முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வை உஜ்வாலா திட்டம் ஒளிமயமாக்கியுள்ளதாக பிரதமர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான மங்கள் பாண்டேவின் சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் பாலியாவிலிருந்து கடந்த 2016ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

4. வேளாண் தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவிய நிறுவனம் எது?

அ) இந்திய வானிலை மையம் 

ஆ) DRDO

இ) CSIR

ஈ) NDMA

  • நாட்டு மக்களுக்கு, குறிப்பாக உழவர்களுக்கு துல்லியமான வானிலை முன்னறிவிப்பை வழங்குவதற்காக இந்திய வானிலை ஆய்வு மையம் வேளாண் தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவியுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழுள்ள கிரிஷி விக்யான் மையங்களில் அமைந்துள்ள மாவட்ட அக்ரோமெட் அலகுகளில் அவை நிறுவப்பட்டுள்ளன.

5. ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘பிந்தவாஸ்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) இராஜஸ்தான்

இ) ஒடிஸா

ஈ) ஹரியானா 

  • சமீபத்தில், இந்தியாவிலிருந்து மேலும் நான்கு ஈரநிலங்கள் ராம்சார் செயலகத்திலிருந்து ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத் தளங்கள், குஜராத்தைச் சார்ந்த ‘வாத்வானா’ மற்றும் ‘தோல்’ மற்றும் ஹரியானாவைச் சார்ந்த ‘சுல்தான்பூர்’ மற்றும் ‘பிந்தவாஸ்’. இதன்மூலம் இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 46 ஆக மாறி உள்ளது. மேலும், இந்தத் தளங்களின் பரப்பளவு தற்போது 1,083,322 ஹெக்டேர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
  • இந்த அங்கீகரிப்பின்மூலம் ஹரியானா மாநிலம் அதன் முதல் ராம்சார் தளத்தையும், 2012’இல் அறிவிக்கப்பட்ட நால்சரோவருக்குப்பின் குஜராத் மேலும் மூன்று ராம்சார் தளத்தையும் பெறுகிறது.

6. எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், நடப்பாண்டின் (2021) முதலீட்டாளர் உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது?

அ) மகாராஷ்டிரா

ஆ) குஜராத் 

இ) கர்நாடகா

ஈ) தில்லி

  • முதலீட்டாளர் உச்சிமாநாடு குஜராத் அரசால் சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இம்முதலீட்டாளர் உச்சிமாநாடு, அலங்காவில் உள்ள கப்பல் உடைக்கும் தொழிலகம் வழங்கும் ஒருங்கிணைந்த ஸ்கிராப்பிங் மையத்தின் வளர்ச்சியில் கவனஞ்செலுத்தும். குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் இது நடத்தப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சகங்களின் பங்கேற்பு இருக்கும். தேசிய வாகன அழிப்புக் கொள்கையானது 2021 ஆக.13 அன்று பிரதமரால் அறிவிக்கப்பட்டது.

7. COVID தொற்றுக்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தற்போதைய தலைமை அறிவியலாளர் யார்?

அ) ககன்தீப் காங்

ஆ) மரியா வான் கெர்கோவ்

இ) Dr சௌமியா சுவாமிநாதன் 

ஈ) நார்மன் போர்லாக்

  • உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் Dr சௌமியா சுவாமிநாதன், COVID தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நாடுகளை வலியுறுத்தினார்.
  • COVID-19 மறைமுகமாக கல்வியை பெரிதும் பாதித்துள்ளது. எனவே, சரியான உடல்நலத்தை பராமரிக்கும் அதேவேளையில் பள்ளி திறப்புக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். COVID-19 தொற்றுநோய் காரணமாக, 1.5 பில்லியன் சிறார்களின் கல்வி பாதிப்பு அடைந்துள்ளது. 2021 ஜனவரி மாதத்தில், கல்வி உரிமை மன்றம் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில், COVID தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில், 10 மில்லியன் பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கல்வியை விட்டு வெளியேறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

8. எந்த நிறுவனத்துடன் இணைந்து, அரசு மின்னணு சந்தை தளமானது தேசிய பொது கொள்முதல் மாநாட்டின் 5ஆவது பதிப்பை ஏற்பாடு செய்துள்ளது?

அ) இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு

ஆ) ASSOCHAM

இ) NASSCOM

ஈ) இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு 

  • அரசு மின்னணு சந்தை தளம், இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து தேசிய பொது கொள்முதல் கூட்டத்தின் ஐந்தாவது பதிப்பை ஆக.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், “தொழில்நுட்பத்துடன் கூடிய அரசு கொள்முதல்-தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் நடைபெற்றது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், ஆக.9 அன்று காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

9. நடப்பாண்டில் (2021) 7 TRIFED வான் தன் விருதுகளை வென்ற மாநிலம் எது?

அ) அருணாச்சல பிரதேசம்

ஆ) நாகாலாந்து 

இ) சிக்கிம்

ஈ) இமாச்சல பிரதேசம்

  • பல்வேறு பிரிவுகளில் முன்மாதிரியான செயல்திறனுக்காக வான் தன் விகாஸ் யோஜனா (VDVY) மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) திட்டங்களில் ஏழு மதிப்புமிக்க தேசிய விருதுகளை நாகாலாந்து மாநிலம் வென்றுள்ளது.
  • VDVY மற்றும் MSP’க்கான சிறு வன உற்பத்திப்பொருட்கள் திட்டமானது விவசாயிகளின் தொழில்முனைவுத் திட்டங்களில் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களின் செயலாக்கம், கட்டுதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனஞ்செலுத்துகிறது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வு, சிறந்த பயிற்சி மற்றும் அதிக எண்ணிக்கையிலான வான் தன் விகாஸ் கொத்துகளை நிறுவியது ஆகிய மூன்று பிரிவுகளில் நாகாலாந்து முதலிடத்தில் உள்ளது.

10. ஸ்கைட்ராக்ஸ் உலக வானூர்தி நிலைய விருதுகள் – 2021’இல், உலகின் முதல் 50 சிறந்த வானூர்தி நிலையங்களுள் ஒன்றென இடம்பெற்றுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?

அ) சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம், மும்பை

ஆ) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தில்லி 

இ) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம், கொல்கத்தா

ஈ) இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத்

  • நடப்பாண்டின் (2021) ஸ்கைட்ராக்ஸ் உலக வானூர்தி நிலைய விருது தரவரிசை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், 2021’இல் உலகின் சிறந்த 50 விமான நிலையங்களில் ஒன்றென இடம்பெற்றுள்ளது. தில்லி விமான நிலையமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக இடம்பெறுகிறது. மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகியவை உலகின் 100 சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளன.
  • ஸ்கைட்ராக்ஸ்-2021 உலக விமான நிலையத்தின் விருது பட்டியலில், தில்லி, 45ஆவது இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டில் 50ஆவது இடத்தில் அது இருந்தது. இந்த நிலையை அடைந்த முதல் இந்திய விமான நிலையம் தில்லி விமான நிலையம் ஆகும். ஹைதராபாத், 64 ஆவது இடத்தில் உள்ளது. மும்பை, 65ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூரு, 71ஆவது இடத்தில் உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சேதி தெரியுமா?

ஜூலை.24: டோக்கியோ ஒலிம்பிக் 49 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2000 சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்கும் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு இந்தியா வென்றுள்ள பதக்கம் இது.

ஜூலை.24: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும் முத்துக்கலிங்கன் கிருஷ்ணனை நியமித்து மத்தியக் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.

ஜூலை.25: ரஷ்யாவில் நடைபெற்ற ‘சர்வதேச கணித ஒலிம்பியாட் 2021’ போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களை இந்திய மாணவர்கள் வென்றனர். இது உலகின் பழமையான அறிவியல் போட்டி.

ஜூலை.26: ஹங்கேரியில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

ஜூலை.26, 29: தெலங்கானாவில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள 13-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த ராமப்பா கோயில், குஜராத்தில் கட்ச் பகுதியில் உள்ள தொன்மையான ஹரப்பா நகரான தோலாவீரா ஆகியவற்றை உலகப் பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்தது.

ஜூலை.27: தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைக் கவுரவிக்க ‘தகைசால் தமிழர்’ என்கிற புதிய விருதைத் தமிழக அரசு உருவாக்கியது. இதன் முதல் விருதுக்குச் சுதந்திரப் போராட்ட வீரரும் நூற்றாண்டு கண்ட இடதுசாரி தலைவருமான என் சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.

ஜூலை.27: கல்விச் சேர்க்கையில் வன்னியர் களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதர பிற்படுத்தபட்டோருக்கு 2.5 சதவீதம் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது.

ஜூலை.29: கேரளத்தில் ஆண் அரசு ஊழியர்கள் திருமணத்தின்போது உயரதிகாரிகளிடம் வரதட்சணை மறுப்புச் சான்றிதழ் சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

ஜூலை.30: புதுக்கோட்டையில் சங்ககால பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

ஆக.1: டோக்கியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் இந்தியாவின் P V சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2016-இல் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இப்போது வெண்கலம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனையாகியிருக்கிறார்.

1. Which state has become the first state in the country to implement National Education Policy–2020?

A) Uttar Pradesh

B) Karnataka 

C) Gujarat

D) Madhya Pradesh

  • Karnataka has become the first state in the country to issue the order with regard to the implementation of National Education Policy–2020, State Higher Education Minister CN Ashwath Narayan claimed. The state government has issued an order on Saturday on the implementation of NEP–2020 with effect from the current academic year 2021–2022.

2. Which country has become the first country in the world to grant patent for an invention by Artificial intelligence?

A) South Africa 

B) England

C) Australia

D) Sweden

  • South Africa has become the first country in the world to grant patent for an invention made by Artificial intelligence (AI). The country has granted a patent to a food container system which is based on Fractal Geometry and was invented by an AI system known as DABUS (Device for Autonomous Bootstrapping of Unified Sentience).
  • Stephen Thaler has created DABUS and it is a type of AI which is referred to as creativity machines as they are capable of complex functions. DABUS’ main function are spoiled food alerts, emergency warning system, etc.

3. From which state, PM Modi launched Ujjwala 2.0 scheme?

A) Rajasthan

B) Uttar Pradesh 

C) West Bengal

D) Assam

  • Prime Minister Narendra Modi launched Ujjwala 2.0 (Pradhan Mantri Ujjwala Yojana – PMUY) by handing over LPG connections, at Mahoba, Uttar Pradesh on 10th August, 2021, via video conferencing. During the event, the Prime Minister interacted with beneficiaries of the Ujjwala.
  • Addressing the event, the Prime Minister said the number of people, especially women whose lives have been illuminated by the Ujjwala Yojana is unprecedented. This scheme was launched in 2016 from Ballia in UP.

4. Which organization has undertaken the installation of Agro–Automatic Weather Stations?

A) Indian Meteorological Department 

B) DRDO

C) CSIR

D) NDMA

  • The Indian Meteorological Department has undertaken installation of Agro–Automatic Weather Stations to provide exact weather forecast to the people, especially the farmers. The installation was done at District Agromet Units located in the Krishi Vigyan Kendras under the Indian Council of Agriculture Research network.

5. Bhindawas has been recognized as a Ramsar site. In which state is it located?

A) Gujarat

B) Rajasthan

C) Odisha

D) Haryana 

  • Recently, four more wetlands from India have been recognized from the Ramsar Secretariat as Ramsar sites. These sites are Wadhwana and Thol from Gujarat and Sultanpur and Bhindawas from Haryana.
  • The number of Ramsar sites in India is 46 and the surface area covered by these sites is now 1,083,322 hectares. While Haryana gets its first Ramsar sites, Gujarat gets three more after Nalsarovar which was declared in 2012.

6. In which state/UT, Investor Summit 2021 is being organized?

A) Maharashtra

B) Gujarat 

C) Karnataka

D) Delhi

  • The Investor Summit is being organized by the Gujarat government in collaboration with the Ministry of Road Transport and Highways.
  • The Investor Summit will focus on the synergies presented by the ship–breaking industry at Alang, for the development of an integrated scrapping hub. It is being conducted in Gandhinagar, Gujarat. This summit will see participation from various potential investors, industry experts and the concerned central and state government ministries. The National Vehicle Scrappage Policy was announced by the PM on 13th August, 2021.

7. Chief Scientist of World Health Organization has urged the nations to prioritize reopening of schools amid the COVID pandemic. Who is the current Chief Scientist of World Health Organization?

A) Gagandeep Kang

B) Maria Van Kerkhove

C) Dr Soumya Swaminathan 

D) Norman Borlaug

  • Chief Scientist of World Health Organization, Dr Soumya Swaminathan, urged the nations to prioritize reopening of schools amid the COVID pandemic. Chief scientist highlighted that; COVID has indirectly affected the education greatly by shutting down schools globally. So, she asked to prioritize school opening while maintaining proper health and hygiene.
  • Amid the COVID pandemic, 1.5 billion children were suddenly out of school and affected their education. In January 2021, Right to Education Forum published its report highlighting that, ten million girls in India could drop out of secondary school amid COVID pandemic.

8. In association with which organization, Government e–Marketplace has organized the 5th edition of the National Public Procurement Conclave?

A) Federation of Indian Chambers of Commerce & Industry

B) ASSOCHAM

C) NASSCOM

D) Confederation of Indian Industry 

  • The 5th edition of the National Public Procurement Conclave (NPPC) was organized by Government e–Marketplace (GeM) in association with the Confederation of Indian Industry [CII] on the theme “Technology enabled Government Procurement – Towards Efficiency, Transparency, and Inclusiveness”.
  • The conclave was inaugurated virtually by Minister of State for Commerce and Industry, Smt. Anupriya Patel.

9. Which state/UT has won 7 TRIFED Van Dhan Awards 2021?

A) Arunachal Pradesh

B) Nagaland 

C) Sikkim

D) Himachal Pradesh

  • Nagaland has bagged seven prestigious national awards in the Van Dhan Vikas Yojana (VDVY) and Minimum Support Price (MSP) schemes for exemplary performance in various categories.
  • The VDVY and MSP for Minor Forest Produce (MFP) scheme focus on farmers’ entrepreneurship programmes through processing, packaging, branding and marketing of locally available products, according to an official statement issued on Monday. Nagaland topped in three categories – Best Survey, Best Training and the greatest number of Van Dhan Vikas Clusters (VDVKCs) established.

10. Which Indian airport has ranked among world’s top–50 best airports in Skytrax World Airport Award ranking 2021?

A) Chhatrapati Shivaji Maharaj International Airport, Mumbai

B) Indira Gandhi International Airport, Delhi 

C) Netaji Subhas Chandra Bose International Airport, Kolkata

D) Rajiv Gandhi International Airport, Hyderabad

  • The Skytrax World Airport Award ranking 2021 was recently published in which Indira Gandhi International Airport, Delhi has emerged among world’s top–50 best airports in the 2021.
  • Delhi Airport emerged as best airport in India for the third consecutive year. Mumbai, Hyderabad, and Bengaluru have also found a rank among world’s 100 best airports. According to Skytrax 2021 world airport’s awards list, Delhi has been ranked at 45th position. Ranking has improved by five places as compared to number 50 in 2020. Delhi airport is first Indian airport to achieve this mark. Hyderabad has been ranked at 64th. Mumbai is at 65th number. Bengaluru is at 71st number.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!