TnpscTnpsc Current Affairs

18th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜெருசலேம் பிரகடனம்’ என்பது இஸ்ரேலுக்கும் கீழ்க்காணும் எந்த நாட்டுக்கும் இடையிலான ஓர் உத்திசார் ஒப்பந்தமாகும்?

அ. ஐக்கிய பேரரசு

ஆ. அமெரிக்கா

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • அமெரிக்க–இஸ்ரேலிய உத்திசார் கூட்டாண்மைக்கான கூட்டுப் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாபிட் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த அறிக்கை அமெரிக்க–இஸ்ரேல் உத்திசார் கூட்டாண்மை மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீதில் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. ‘ஜெருசலேம் பிரகடனம்’ என்பது இஸ்ரேல் –பாலஸ்தீன உறவுகளையும் குறிக்கிறது.

2. 2022–23ஆம் ஆண்டிற்கான SCOஇன் முதல் கலாசார மற்றும் சுற்றுலா தலைநகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய நகரம் எது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. கொச்சி

இ. வாரணாசி 

ஈ. கொல்கத்தா

  • வாரணாசி நகரம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதலாவது கலாசார மற்றும் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்படும். எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அவ்வமைப்பின் புதிய சுழற்சி முயற்சியின்கீழ் 2022–23ஆம் ஆண்டிற்கான SCO–இன் சுற்றுலாத் தலைநகரமாக வாரணாசி ஆகும். இது உறுப்புநாடுகளிடையே மக்கள்–மக்கள் தகவல் தொடர்புகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜாக்ரிதி’ என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடைய சின்னமாகும்?

அ. வருமான வரி

ஆ. பருவநிலை மாற்றம்

இ. நுகர்வோர் விழிப்புணர்வு 

ஈ. கிரிப்டோ நாணயம்

  • நுகர்வோர் விவகாரங்கள் துறையானது நுகர்வோரை மேம்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக ‘ஜாக்ரிதி’ என்றவொரு சின்னத்தைத் தொடங்கியுள்ளது. இந்தச் சின்னம் அதன் அனைத்து ஊடக விளம்பரங்களிலும், ‘ஜாகோ கிரஹக் ஜாகோ’ என்ற முழக்க வரியுடன் ஒளிபரப்பப்படும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், ஹால்மார்க்கிங் மற்றும் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் 1915 போன்ற நுகர்வோர் விவகாரங்கள் துறையின் பல்வேறு கருப்பொருள்கள் குறித்து நுகர்வோரிடையே விழிப்புணர்வை உருவாக்க இது பயன்படுத்தப்படும்.

4. 2022 – தேசிய நிறுவனத் தரவரிசை கட்டமைப்பில் (NIRF) முதலிடத்தைப் பிடித்த நிறுவனம் எது?

அ. ஐஐடி தில்லி

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி மெட்ராஸ் 

ஈ. ஐஐடி பாம்பே

  • மத்திய கல்வி அமைச்சகமானது நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவனத் தரவரிசை கட்டமைப்பை (NIRF) வெளியிட்டுள்ளது. மெட்ராஸில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமானது (IIT) தொடர்ந்து நான்காமாண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து ஏழாமாண்டாகவும் தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி இரண்டாமிடத்தையும், மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

5. ‘e–FIR சேவை’ மற்றும் ஒரு ‘காவல்துறை செயலி’யை அறிமுகப்படுத்திய இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. உத்தரகாண்ட் 

ஈ. இராஜஸ்தான்

  • உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ‘e–FIR’ வசதி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கெனத் தனி காவல்துறை செயலியையும் அறிமுகம் செய்துவைத்தார். ‘e–FIR’ வசதி தொடங்கப்பட்டதன்மூலம் மக்கள் திருட்டு தொடர்பான புகார்களை இணையவழியில் அளிக்கவியலும். பொதுமக்களுக்கு உத்தரகாண்ட் மாநிலக் காவல்துறை வழங்கும் அனைத்து இணையவழி சேவைகளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ‘காவல்துறை செயலி’யில் ஒருங்கே இணைக்கப்பட்டுள்ளன. இதில் கௌரா சக்தி, டிராஃபிக் ஐ, பப்ளிக் ஐ, மேரி யாத்ரா மற்றும் லக்ஷ்ய நாஷா முக்த் உத்தரகாண்ட் உள்ளிட்ட சேவைகள் அடங்கும்.

6. ‘பன்னாட்டு நாடாளுமன்ற முறை நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.27

ஆ. ஜூன்.30 

இ. ஜூலை.15

ஈ. ஜூலை.18

  • நவீன சமூகங்களை வடிவமைப்பதில் நாடாளுமன்ற அரசாங்க அமைப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் நோக்கோடு ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.30ஆம் தேதியன்று பன்னாட்டு நாடாளுமன்ற நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ‘நாடாளுமன்றத்தின் பணிகளில் பொதுமக்கள் ஈடுபாடுகுறித்த உலகளாவிய நாடாளுமன்ற அறிக்கை’ அண்மையில் வெளியிடப்பட்டதால், நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பினர்கள் ‘Public Engagement – பொது ஈடுபாடு’ என்ற கருப்பொருளின்கீழ் இந்நாளை கடைபிடித்தனர்.

7. ‘உலக சிறுகோள்கள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.30 

ஆ. ஜூலை.05

இ. ஜூலை.18

ஈ. ஆகஸ்ட்.25

  • சிறுகோள்களின் அபாயகரமான விளைவைப்பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலக சிறுகோள்கள் நாள் உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.30 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 2016 டிசம்பரில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஜூன்.30ஆம் தேதியை பன்னாட்டு சிறுகோள்கள் நாளாக அறிவித்து தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. கடந்த 1908ஆம் ஆண்டு இதே நாளில் சைபீரியாமீது நிகழ்ந்த துங்குஸ்கா நிகழ்வின் ஆண்டு நிறைவை ரஷ்ய கூட்டமைப்பு ஒவ்வோர் ஆண்டும் இந்நாளின்போது அனுசரிக்கிறது.

8. 2023 – ‘QS மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசையில்’ முதலிடம் பிடித்த நகரம் எது?

அ. துபாய்

ஆ. சிங்கப்பூர்

இ. லண்டன்

ஈ. நியூயார்க்

  • 2023 – QS மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசையில், அயல்நாட்டில் படிக்க விழையும் மாணவர்க –ளுக்கான சிறந்த நகரமாக லண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சியோல் மற்றும் முனிச் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த அறிக்கை உலகின் 140 நகரங்களை தாங்குமை (affordability), மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை மாணவர்களுக்கான மிகச்சிறந்த நகரமாக மும்பை – 103ஆம் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பெங்களூரு – 114ஆம் இடத்தில் உள்ளது.

9. இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் ‘ஆயுர்வேத இரத்னா’ விருது வழங்கப்பெற்ற இந்தியர் யார்?

அ. தனுஜா நேசரி 

ஆ. அபிமன்யு குமார்

இ. இராஜேஷ் பூஷன்

ஈ. சஞ்சை ஜைன்

  • அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (AIIA) இயக்குநர் தனுஜா நேசரிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் ‘ஆயுர்வேத இரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்தியாவிலும் அயல்நாட்டிலும் ஆயுர்வேதத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அவராற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, இந்திய பாரம்பரிய அறிவியலுக்கான இங்கிலாந்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (ITSappg) இந்த விருதை வழங்கியுள்ளது.

10. ‘பெஞ்ச்மார்க்கிங் இந்தியாஸ் பேமென்ட் சிஸ்டம்ஸ்’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 

இ. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்

ஈ. பன்னாட்டு செலவாணி நிதியம்

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ‘பெஞ்ச்மார்க்கிங் இந்தியாஸ் பேமென்ட் சிஸ்டம்ஸ்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது பிற பெரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள கொடுப்பனவு சூழலின் நிலைகுறித்த தகவலை அளிக்கிறது. இவ்வறிக்கையின்படி, இந்தியா கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும், பெரிய மதிப்புள்ள டிஜிட்டல் கொடுப்பனவு (payment) முறைமைகளில் தலைமை நிலைக்கு நகர்ந்துள்ளது. ஆனால் ATM–கள் மற்றும் பணவட்டை வழியிலான கொடுப்பனவுகள் தொடர்பான சில அளவுருக்களில் இந்தியா இன்னும் பலவீனமான நிலையிலேயே உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. குடியரசுத்தலைவர் தேர்தல்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100% வாக்குப்பதிவு

புதிய இந்தியக்குடியரசுத்தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை செயலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 31 இடங்களில் நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவை மீறியதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951, 8ஆவது பிரிவின்படி தகுதிநீக்கஞ்செய்யப்பட்ட இரண்டு சட்டபேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவையில் உள்ள 5 காலியிடம், மாநில சட்டப்பேரவையில் உள்ள 6 காலியிங்கள் தவிர்த்து மொத்தம் 4796 பேர் (771 நா. உ-க்கள் & 4025 ச. ம. உ-க்கள்) வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், கேரளா கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் 100% வாக்கு பதிவாகியுள்ளது.

2. பொலிவுறு நகரங்கள் திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு `48,000 கோடி நிதியுதவியை நடுவணரசு அளிக்கிறது

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன்.25ஆம் தேதி பொலிவுறு நகரங்கள் திட்டத்தை நடுவணரசு தொடங்கியது. 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 4 சுற்று போட்டியின் மூலம் 100 பொலிவுறு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.  பொலிவுறு நகரங்கள் திட்ட வழிகாட்டுதலின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு `48,000 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கும். சராசரியாக வருடத்திற்கு `100 கோடி அளிக்கும்.

2022ஆம் ஆண்டு ஜூலை.8ஆம் தேதியின்படி, 100 நவீன நகரங்களுக்காக `30,751.41 கோடியை நடுவணரசு விடுவித்துள்ளது.  இதில், 90% அளவாக `27,610.34 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு `4,333.87 கோடி வழங்கப்பட்டதில் `3,932.06 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் திரு கவுஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

3. இன்று தமிழ்நாடு திருநாள் விழா

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு திருநாள் சிறப்பு விழா ஜூலை.18 அன்று நடைபெறுகிறது. அன்றைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று முன்னாள் முதலமைச்சர் ‘பேரறிஞர்’ கா. ந அண்ணாதுரை அவர்களால், கடந்த 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பெயர்சூட்டப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழ்நாடு நாளையொட்டி பல்வேறு சான்றோர்களுக்கு ‘இலக்கிய மாமணி’, ‘தமிழ்த்தென்றல்’, ‘அம்மா இலக்கிய விருது’, ‘காரைக்கால் அம்மையார்’ விருது போன்றவை விழாவில் அளிக்கப்படவுள்ளன.

4. வர்த்தகம், முதலீடுகளை ஈர்க்கும் இந்திய – ஆப்பிரிக்க வளர்ச்சி கூட்டுறவு மாநாடு: நாளை தொடக்கம்

இந்தியா-ஆப்பிரிக்க நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இரு நாடுகளிடையே ஆன இரண்டு நாள் வளர்ச்சி கூட்டுறவு மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை.19) தொடங்கவுள்ளது. இந்திய-ஆப்பிரிக்க வளர்ச்சி கூட்டுறவுக்கான இந்த CII (இந்திய தொழிலக கூட்டமைப்பு) EXIM வங்கி மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மத்திய வணிக, தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

5. கடற்படையிலிருந்து விடைபெற்றது INS சிந்துத்வஜ்

கடற்படையில் கடந்த 35 ஆண்டுகளாக சேவையாற்றிய INS சிந்துத்வஜ் நீர்மூழ்கிக்கப்பல் விடைபெற்றது. இதை ஒட்டிய நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. கடற்படையில் சிந்துத்வஜ் நீர்மூழ்கிக்கப்பல் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ரஷியாவில் கட்டமைக்கப்பட்ட சிந்துகோஷ் இரக நீர்மூழ்கிக்கப்பலின் வரிசையில், INS சிந்துத்வஜ் நீர்மூழ்கிக்கப்பல், ‘தற்சார்பு இந்தியா’ திட்ட முயற்சிக்கு உதாரணமாக விளங்குகிறது.

கடலின் ஆழத்தை அளவிட உதவும் சோனார் கருவி, முற்றிலும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு அமைப்பு, திசைகாட்டும் கருவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இக்கப்பலில் இடம்பெற்றிருந்தன. புத்தாக்க முயற்சிக்காக CNS ரோலிங் கோப்பையை வென்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் INS சிந்துத்வஜ் ஆகும்.

6. சாம்பியன் பி.வி. சிந்து

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் சூப்பர் 500 போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து முதன் முதலாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச்சுற்றில் சீனாவின் வாங் ஸியியை 21-9, 11-21, 21-15 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினார்.

முதன்முதலாக சிங்கப்பூர் ஓபனில் பட்டம்வென்ற சிந்துவுக்கு நிகழாண்டில் சையத் மோடி, சுவிஸ் ஓபன் பட்டத்துடன் இது மூன்றாவது பட்டமாகும். மேலும் சூப்பர் 500 போட்டியில் நிகழாண்டு முதல் பட்டம் இதுவாகும். பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் ஆடவுள்ள சிந்துவுக்கு இந்த வெற்றி ஊக்கமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

1. ‘Jerusalem Declaration’ which was seen in the news, is a strategic agreement between Israel and which country?

A. UK

B. USA 

C. Australia

D. UAE

  • A joint declaration on US–Israeli strategic cooperation has been signed by President Joe Biden and Israeli Prime Minister Yair Lapid. The statement has been claimed as historic in the strategic US–Israel partnership and the commitment of the United States to Israel’s security. The Jerusalem Declaration also refers to the Israeli–Palestinian relations.

2. Which Indian city has been selected as the first Cultural and Tourism Capital of SCO for 2022–23?

A. Jaipur

B. Kochi

C. Varanasi 

D. Kolkata

  • The city of Varanasi will be declared the first Cultural and Tourism Capital of the Shanghai Cooperation Organisation (SCO). Varanasi will become the Capital of SCO for 2022–23 under a new rotating initiative by the eight–member organisation, which aims to promote people–to–people contacts and tourism among the member states.

3. ‘Jagriti’, which was seen in the news recently, is a mascot related to which field?

A. Income Tax

B. Climate Change

C. Consumer Awareness 

D. Cryptocurrency

  • The Department of Consumer Affairs has launched “Jagriti”, a mascot for empowering consumers and generating awareness of their rights. Jagriti mascot will be shown along with tagline ‘Jago Grahak Jago’ in all its media campaigns. It will be used to generate consumer awareness about various themes of the Department like provisions of Consumer Protection Act, Hallmarking, and National Consumer Helpline 1915 among others.

4. Which institution was ranked first in the National Institutional Ranking Framework (NIRF) 2022?

A. IIT Delhi

B. IIT Kanpur

C. IIT Madras

D. IIT Bombay

  • The Ministry of Education has released the National Institutional Ranking Framework (NIRF) for the year 2022. Indian Institute of Technology Madras has retained its first position for the fourth consecutive year in the overall category and for the seventh consecutive year in Engineering. Indian Institute of Technology, Delhi was ranked second while Indian Institute of Technology, Bombay, is ranked third.

5. Which Indian state launched the ‘e–FIR service and a Police app’?

A. Tamil Nadu

B. Karnataka

C. Uttarakhand 

D. Rajasthan

  • The Chief Minister of Uttarakhand Pushkar Singh Dhami launched the e–FIR facility and Uttarakhand Police App. The launch of the e–FIR facility will help people file an online FIR in cases related to the theft among others. All online services provided by the State police to the public have been integrated in the Uttarakhand police app. These include Gaura Shakti, Traffic Eye, Public Eye, Meri Yatra and Lakshya Nasha Mukt Uttarakhand.

6. When is the ‘International Day of Parliamentarism’ observed?

A. June.27

B. June.30 

C. July.15

D. July.18

  • The International Day of Parliamentarism is observed every year on 30 June, to recognise the importance of parliamentary systems of government in shaping modern societies. This year, the Inter–Parliamentary Union (IPU) and its members will observe the day under the theme of ‘Public engagement’ as the ‘Global Parliamentary Report on Public engagement in the work of parliament’ was recently released.

7. When is the ‘World Asteroid Day’ observed?

A. June.30 

B. July.05

C. July.18

D. August.25

  • World Asteroid Day 2022 is marked and celebrated globally on June 30 every year, in order to raise public awareness about asteroid’s hazardous effect. In December 2016, the United Nations General Assembly passed a resolution that declared 30 June as International Asteroid Day. It observes the anniversary of the Tunguska impact over Siberia, Russian Federation on the same day in 1908.

8. Which is the top ranked city in the ‘QS Best Student Cities Ranking 2023’?

A. Dubai

B. Singapore

C. London 

D. New York

  • In the QS Best Student Cities Ranking 2023, London has been ranked as the best city for students looking to study abroad. Seoul and Munich are at the second place. The report ranks 140 cities in terms of affordability, student facilities, and university standard among other factors. India’s highest–ranked student city is Mumbai at 103rd spot. It is followed by Bengaluru at 114th rank.

9. Which Indian has been awarded the Ayurveda Ratna Award by the UK Parliament?

A. Tanuja Nesari 

B. Abhimanyu Kumar

C. Rajesh Bushan

D. Sanjay Jain

  • Tanuja Nesari, Director of All India Institute of Ayurveda (AIIA) was awarded with the Ayurveda Ratna Award by the UK Parliament. The UK’s All–Party Parliamentary Group on Indian Traditional Sciences (ITSappg) conferred the award recognising her contribution to prmoting the growth of Ayurveda in India and abroad.

10. Which institution released the report titled ‘Benchmarking India’s Payment Systems’?

A. World Bank

B. Reserve Bank of India 

C. National Payment Corporation of India

D. International Monetary Fund

  • The Reserve Bank of India (RBI) released the report titled ‘Benchmarking India’s Payment Systems’. It provides a position of the payment’s ecosystem in India relative to other major countries. As per the report, India has made significant progress and moved to a leadership position in large–value digital payment systems. But India is still weak in certain parameters relating to ATMs and card payments.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!