19th & 20th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

19th & 20th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th & 20th December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, T-பைபர் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. திரிபுரா

ஈ. ஆந்திர பிரதேசம்

 • T-பைபர், தெலுங்கானா பைபர் வலையமைப்புத் திட்டம் என்பது மாநில அளவிலான திட்டமாகும்; அது, ஒளியிழை வலையமைப்பை நிறுவுவதையும், தெலுங்கானாவில் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்குவதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது. அண்மையில், தெலுங்கானா மாநில அரசு, T-பைபர் திட்டத்தை, ‘முக்கிய பொது நோக்கமுடைய திட்டம்’ என்று அறிவித்தது. இதன்பொருள், இந்தத்திட்டத்தை செயல்படுத்த மாநிலத்தின் பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதிபெறவேண்டியதில்லை.

2. மின்சாரத் துறையில் தகவல்கள் பரிமாற்றத்திற்காக இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?

அ. பிரான்ஸ்

ஆ. அமெரிக்கா

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. ஜெர்மனி

 • இந்தியாவும், அமெரிக்காவும் (USA) மின்சாரத்துறையில் இருதரப்பு நலன்குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், அமெரிக்காவின் எரிசக்தி ஒழுங்கு முறை ஆணையமும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள்.
 • மொத்த விலை மின்சார சந்தையை ஊக்குவிப்பதற்காகவும், மின்சார தொகுப்பின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவுமான ஒழுங்குமுறை மற்றும் கொள்கைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

3. கருப்பு மெல்லோட்டு ஆமைகளின் IUCN நிலை என்ன?

அ. மிகவும் அருகிவிட்ட இனம்

ஆ. காடுகளில் முற்றழிவுற்ற இனம்

இ. தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்

ஈ. அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்

 • அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் வளர்க்கப்பட்ட 22 கருப்பு மெல்லலோட்டு ஆமைகளின் குஞ்சுகள் அண்மையில் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தின் அருகே ஈரநிலங்களில் விடப்பட்டன. இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (IUCN) கூற்றுப்படி, இந்த ஆமைகள் ‘காடுகளில் முற்றழிந்த இனம்’ எனக்கருதப்படுகின்றன. அவற்றில் மிகக்குறைந்த எண்ணிக்கையானது சில கோவில் குளங்களில் (பெரும்பாலும் அஸ்ஸாமில்) உள்ளன.

4. நாட்டின் கரும்பு விவசாயிகளுக்கு எவ்வளவு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?

அ. ரூ.1000 கோடி

ஆ. ரூ.2000 கோடி

இ. ரூ.3000 கோடி

ஈ. ரூ.3500 கோடி

 • கரும்பு விவசாயிகளுக்கு `3500 கோடி நிதியுதவி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் தற்போது, ஐந்து கோடி கரும்பு விவசாயிகளும், அவர்களைச்சார்ந்தவர்களும் உள்ளனர். இந்நிதி, சர்க்கரை ஆலைகள் சார்பில், கரும்பு உழவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நடுவணரசின் இம்முடிவு, 5 கோடி கரும்பு உழவர்கட்கும், அவர்களைச்சார்ந்துள்ளவர்களுக்கும், சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கும் பயனளிக்கும்.

5. 2020 நிலவரப்படி, இந்தியாவில் மிக சமீபத்திய அலைக்கற்றை ஏலம் எப்போது நடைபெற்றது?

அ. 2015

ஆ. 2016

இ. 2017

ஈ. 2018

 • மத்திய தொலைத்தொடர்புத்துறையின் அலைக்கற்றை (spectrum) ஏலத்திட்டத்துக்கு, நடுவண் அமைச்ச -ரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 2251.25 MHz அலைவரிசை `3,92,332.70 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் மிக சமீபத்திய அலைக்கற்றை ஏலமானது கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்றது; அதில், `65,789.12 கோடி வருவாயை இந்திய அரசாங்கம் திரட்டியது.

6. 2020 மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் கீழ்க்காணும் எந்தப்புதிய அளவுரு இணைக்கப்பட்டுள்ளது?

அ. COVID தயார்நிலை

ஆ. CO2 உமிழ்வு மற்றும் பொருண்ம தடம்

இ. பணவியல் கொள்கை மற்றும் பணவீக்கம்

ஈ. கொள்ளைநோய் தயார்நிலை மற்றும் தடுப்பூசி போட்டிருத்தல்

 • நடப்பாண்டின் (2020) மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டை ஐநா வளர்ச்சித்திட்டம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 189 நாடுகளில் இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா 130ஆவது இடத்திலிருந்தது. ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகிய மூன்று அளவுருக்களைக் கொண்டு இந்தக் குறியீடு அளவிடப்படுகிறது.
 • நடப்பாண்டின் (2020) குறியீடானது CO2 உமிழ்வு மற்றும் பொருண்ம தடம் என்ற புதிய அளவுருவை இணைத்து, உலகுசார் மனிதவள மேம்பாட்டு குறியீடாக (PHDI) அறிமுகப்படுத்தியுள்ளது.

7. இமயமலை குளிர் பாலைவன மண்டலத்தில் முதன்முறையாக காணப்பட்ட விலங்கு எது?

அ. வெளிமான்

ஆ. கானமயில்

இ. இமயமலை வரையாடு

ஈ. சோலைமந்தி

 • இமயமலையின் குளிர்ச்சியான பாலைவன மண்டலத்தில், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஸ்பிதியில் இமயமலை வரையாடு முதன்முறையாக காணப்பட்டுள்ளது. தாவர உண்ணிகளான இவை 2000 மீ – 4000 மீ உயரத்தில் வாழ்கின்றன. நீண்ட காதுகளுடன்கூடிய இவை ஆடுபோன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளன. முன் கால்களை நீட்டிக்கொண்டு நிற்கும் பழக்கமுடையவை இவற்றுக்கு உண்டு.

8. கீழ்க்காணும் எந்த அமைப்பால், “Young Champions of the Earth” பரிசு வழங்கப்படுகிறது?

அ. UNEP

ஆ. UNESCO

இ. UNFCCC

ஈ. NASA

 • “புவியின் இளம் சாம்பியன்கள்” பரிசானது ஒவ்வோர் ஆண்டும் ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP), நீடித்த சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான யோசனைகளை வழங்கும் 7 அறிவியலாளர்கள், தொழில்முனை -வோர், பொறியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசுபெறும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் யோசனைகளின் வளர்ச்சிக்கான தொடக்க நிதியாக $10,000 பரிசுத்தொகை கிடைக்கும்.

9. கீழ்க்காணும் எந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் விதமாக, ‘ஸ்வர்னிம் விஜய் மஷால்’, இந்தியப் பிரதமரால் ஏற்றப்பட்டது?

அ. இந்தியா – பாகிஸ்தான் போர்

ஆ. இரண்டாம் உலகப்போர்

இ. இந்திய விடுதலை

ஈ. இந்தியா – சீனா போர்

 • இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் தொடங்குவதை முன்னிட்டு, தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், பொன்விழா வெற்றிஜோதியை, பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரில், பாகிஸ்தான் இராணுவத்தை வீழ்த்தி, இந்திய இராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. அது, வங்காளதேசம் என்ற நாடு உருவாக வழிவகுத்தது.
 • இந்தியா – பாகிஸ்தான் போரின் ஐம்பதாவது பொன்விழா வெற்றி ஆண்டை, இந்தியா, டிசம்பர் 16 முதல் கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

10. FIFA சிறந்த வீரர் விருதை வென்ற இராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி சார்ந்த நாடு எது?

அ. ஸ்பெயின்

ஆ. குரோஷியா

இ. போலந்து

ஈ. பிரேசில்

 • போலந்து தேசிய கால்பந்து அணியின் அணித் தலைவரான இராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி, FIFA’இன் நடப்பாண்டுக்கான (2020) சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். முந்தைய வெற்றியாளர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரை வீழ்த்தி அவர் இவ்விருதைப் பெற்றுள்ளார். கடந்த அக்டோபரில், 2019-20’க்கான UEFA ஆண்டின் சிறந்த வீரராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த வீராங்கனை விருதை ஆங்கில வீராங்கனை லூசி பிரான்ஸ் வென்றார்.

19th & 20th December 2020 Tnpsc Current Affairs in English

1. T–Fiber project, which was seen in the news recently, is associated with which Indian state?

[A] Tamil Nadu

[B] Telangana

[C] Tripura

[D] Andhra Pradesh

 • T–Fiber, Telangana Fiber Grid Project is a state–wide project, which aims to establish optical fiber network and to provide high–speed broadband service in Telangana. Recently, the Telangana state government has declared the T–Fiber project a ‘Vital Public Purpose Project’. This means, the project need not get permission from several state departments for implementation.

2. Union Cabinet approved MoU between India and which country, for exchange of information in the electricity sector?

[A] France

[B] USA

[C] UAE

[D] Germany

 • The Union Cabinet has approved the Memorandum of Understanding between Indi and United States for exchange of information in areas of mutual interest in the electricity sector. Central Electricity Regulatory Commission (CERC), India and Federal Energy Regulatory Commission (FERC), USA would join hands for this arrangement. The MoU will help to improve regulatory framework in power sector.

3. What is the IUCN Status of black softshell turtles?

[A] Critically Endangered

[B] Extinct in the Wild

[C] Least Concerned

[D] Vulnerable

 • 22 hatchlings of black softshell turtles that were reared at a temple in Assam have been released into the wetlands of Kaziranga National Park and Tiger Reserve recently. These species of turtles are considered ‘Extinct in the wild’, as per the International Union for Conservation of Nature. A very few numbers of them are left in some temple ponds, mostly in Assam.

4. What amount of financial assistance has been approved for sugarcane farmers of the country?

[A] Rs.1000 Cr

[B] Rs.2000 Cr

[C] Rs.3000 Cr

[D] Rs.3500 Cr

 • The Prime Minister headed Cabinet Committee on Economic Affairs (CCEA) has approved a financial assistance amounting Rs.3500 crore to sugarcane farmers of the country. The funds are to be credited directly into the bank accounts of the farmers. The decision is expected to benefit 5 crore sugarcane farmers and 5 lakh workers employed in the sugar mills.

5. As of 2020, When was the most recent Spectrum auction held in India?

[A] 2015

[B] 2016

[C] 2017

[D] 2018

 • The Union Cabinet headed by the Prime Minister has recently approved the next round of auctioning of the telecommunication spectrum. A total of 2251.25 MHz is being offered for auction valued at Rs.3,92,332.70 crore. The most recent Spectrum auction in India was held in the year 2016, with the government raising Rs 65,789.12 crore in revenue.

6. What new parameters have been incorporated into 2020 Human Development Index?

[A] COVID Preparedness

[B] CO2 emission and Material footprint

[C] Monetary Policy and Inflation

[D] Pandemic Preparedness and Vaccination

 • The Human Development Index for the year 2020 has been released by the United Nations Development Programme (UNDP). As per the report, India has been ranked at 131 out of 189 countries. Last year, India was ranked at 130.
 • HDI is measured with three parameters namely life expectancy, education and per capita income. This year’s index has incorporated new parameters namely CO2 emission and Material footprint and introduced Planetary pressures–adjusted Human Development Index (PHDI).

7. Which animal has been sighted for the first time in Himalayan cold desert region?

[A] Black Buck

[B] Great Indian Bustard

[C] Himalayan Serow

[D] Lion–tailed Macaque

 • The Himalayan serow has been spotted for the first time in the Himalayan cold desert region, in Spiti, Himachal Pradesh. These are herbivores animals and are found between 2000 m and 4000 m altitude. They have an appearance similar to that of a goat, but with long ears. They have a habit of standing with fore legs stretched.

8. The Young Champions of the Earth prize is awarded by which organization?

[A] UNEP

[B] UNESCO

[C] UNFCCC

[D] NASA

 • The Young Champions of the Earth prize is given every year by the United Nations Environment Programme (UNEP) to seven scientists, entrepreneurs, engineers and activists, who have contributed ideas for sustainable environment change. Every prize awardee would receive a prize amount of $10,000 as seed fund for development and incubation of their ideas.

9. The ‘Swarnim Vijay Mashaal’ has been lit by the Prime Minister of India to commemorate which historic event?

[A] Indo–Pak War

[B] World War 2

[C] Indian Independence

[D] Indo–China War

 • The Prime Minister of India Narendra Modi lit the ‘Swarnim Vijay Mashaal’ at the National War Memorial in Delhi. This has kick started the 50th anniversary celebrations of the 1971 India–Pakistan war. In December 1971, the Indian Armed Forces won a battle against the Pakistan counterpart, which resulted n creation of a new nation called Bangladesh.

10. Robert Lewandowski, who won the FIFA Best Men’s Player Award, is from which country?

[A] Spain

[B] Croatia

[C] Poland

[D] Brazil

 • Captain of the Poland National Football Team, Robert Lewandowski won The FIFA Best Men’s Player Award 2020. This Poland player beat the previous winners Cristiano Ronaldo and Lionel Messi, who were in the short–list. He was also named the 2019–20 UEFA Men’s Player of the Year in October. English footballer Lucy Bronze won the Best Women’s player award.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *