TnpscTnpsc Current Affairs

19th & 20th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

19th & 20th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th & 20th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. கஞ்சா சாகுபடியை ஒழிக்க ‘ஆபரேஷன் பரிவர்தன்’ என்றவொன்றைத் தொடங்கிய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம் 

ஈ) கோவா

  • கஞ்சா சாகுபடியை ஒழித்தற்காக ஆந்திர பிரதேச மாநிலக் காவல்துறை ‘ஆபரேஷன் பரிவர்தன்’ என்றவொரு சிறப்பு நடவடிக்கையைத்தொடங்கியுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள சிறப்பு அமலாக்கப் பணியகத்துடன் இணைந்து ஆந்திர பிரதேச காவல்துறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அண்மையில், சுமார் 2 லட்சம் கிகி பதப்படுத்தப்பட்ட கஞ்சா அம்மாநிலத்தில் கைப்பற்றப்பட்டது.

2. எந்த நாட்டுக்கு கோதுமை விநியோகம் செய்வதற்காக ஐநா உலக உணவு திட்டத்துடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

அ) மாலத்தீவுகள்

ஆ) ஆப்கானிஸ்தான் 

இ) சிரியா

ஈ) இலங்கை

  • 50,000 மெட்ரிக் டன் கோதுமையை விநியோகம் செய்வதற்காக ஐநா உலக உணவுத் திட்டத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்தியா உறுதி அளித்துள்ளது. சாலை வழியாக பாகிஸ்தானூடே சரக்கு உந்துகளில் அவை கொண்டு செல்லப்படவுள்ளன.

3. ஆளுநரால் மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்ட NEET எதிர்ப்பு மசோதாவை மீண்டும் நிறைவேற்றிய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கர்நாடகா

இ) பஞ்சாப்

ஈ) மேற்கு வங்காளம்

  • தமிழ்நாட்டின் ஆளுநர் RN இரவியால் மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்ட NEET எதிர்ப்பு மசோதா, தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, அதை மீண்டும் ஆளுநருக்கு அனுப்புவதன் மூலம், அவர் அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மருத்துவ மாணவர் சேர்க்கையில் NEET தாக்கம்குறித்து ஆராய நீதிபதி AK ராஜன் கமிட்டியை அரசு அமைத்தது.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற குனோ பால்பூர் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) உத்தரகாண்ட்

இ) அஸ்ஸாம்

ஈ) மத்திய பிரதேசம் 

  • சுமார் 8-12 சிறுத்தைகள், தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானாவிலிருந்து மத்தியபிரதேச மாநிலம் குனோ பால்பூர் தேசியப்பூங்காவிற்கு கொண்டு வரப்பட உள்ளன. 1950களுக்குப் பிறகு விடுதலை இந்தியாவில் இவ்வினம் முற்றாக அழிந்தது.
  • இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலைமாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘இந்தியாவில் சிறுத்தையை அறிமுகப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை’ வெளியிட்டுள்ளார்.

5. ‘ஒற்றை டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை’ச் செயல்ப -டுத்துவதற்காக பின்வரும் எந்த நாட்டிற்கு மானியம் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது?

அ) நேபாளம்

ஆ) இலங்கை 

இ) ஆஸ்திரேலியா

ஈ) பங்களாதேஷ்

  • ‘ஒற்றை டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை’ நடைமுறைப்படுத்துதற்கு இலங்கைக்கு மானியம் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்தியாவின் ஆதார் அட்டையைப்போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இக்கட்டமைப்பை தேசிய அளவிலான வேலைத்திட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமையளிப்பதாக இலங்கையின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

6. ‘மேடாரம் ஜாதரா’ கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ) மத்திய பிரதேசம்

ஆ) தெலுங்கானா 

இ) குஜராத்

ஈ) பீகார்

  • தெலுங்கானாவின் கோயா பழங்குடியினர் சமூகத்தால் நான்கு நாட்கள் கொண்டாடப்படும், ‘மேடாரம் ஜாதரா’ கும்பமேளாவிற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய திருவிழாவாகும். பழங்குடியினர் விவகார அமைச்சகம், நடப்பு 2022ஆம் ஆண்டு ‘மேடாரம் ஜாதரா’ தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்காக `2.26 கோடி நிதியை வழங்கியுள்ளது.

7. முன்னாள் துருக்கிய ஏர்லைன்சு தலைவரான இல்கர் ஐசி, எந்த இந்தியன் ஏர்லைன்ஸின் MD மற்றும் CEOஆக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) ஸ்பைஸ் ஜெட்

ஆ) இண்டிகோ

இ) ஏர் இந்தியா 

ஈ) விஸ்தாரா

  • TATA குழுமம், துருக்கிய ஏர்லைன்சு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இல்கர் ஐசியை ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரியாக நியமித்துள்ளது. அண்மையில் இந்திய அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்துவதற்கு ஒரு வெளிநாட்டு தலைவரை நியமிக்கும் TATA குழுமத்தின் திட்டங்களுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

8. அமுதப்பெருவிழாவின் ஒருபகுதியாக, ‘புதிய எல்லைகள்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ) புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 

ஆ) எரிசக்தி அமைச்சகம்

இ) நிலக்கரி அமைச்சகம்

ஈ) வெளியுறவு அமைச்சகம்

  • அமுதப்பெருவிழாக் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த ‘புதிய எல்லைகள்’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. 2070ஆம் ஆண்டிற்குள் நிகர-சுழிய அளவிலான கார்பன் உமிழ்வை அடைவதற்கான வழிமுறைகள் குறித்த சிந்தனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

9. தேசிய ஆறுகள் இணைப்புக் கொள்கையின்கீழ் அமைக்கப்பட்ட முதல் நிறுவனம் எது?

அ) கென்-பெட்வா இணைப்புத் திட்ட ஆணையம் 

ஆ) காவிரி-கோதாவரி இணைப்புத் திட்ட ஆணையம்

இ) கோதாவரி-கிருஷ்ணா இணைப்புத் திட்ட ஆணையம்

ஈ) நர்மதை-தபதி இணைப்புத் திட்ட ஆணையம்

  • தேசிய ஆறுகள் இணைப்புக் கொள்கையின் கீழ் முதல் முன்னெடுப்பைச்செயல்படுத்துதற்காக நடுவணரசு கென் -பெட்வா இணைப்புத் திட்ட ஆணையத்தை அமைத்து உள்ளது. இக்கொள்கை உத்தர பிரதேச மாநிலம் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இடையே உள்ள புந்தேல்கண்ட் பகுதியில் கிட்டத்தட்ட 11 இலட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத்தின்கீழ் கொண்டுவர எண்ணுகிறது.

10. 2022 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய ஆவணப்படம் எது?

அ) India Untouched

ஆ) Writing with Fire 

இ) Period. End of Sentence

ஈ) Jai Bhim

  • திரைப்பட தயாரிப்பாளர்களான ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இயக்கிய ‘ரைட்டிங் வித் பையர்’ என்ற இந்திய ஆவணப்படம் 94ஆவது அகாதமி விருதுகளில் ‘சிறந்த ஆவணப்படம்’ பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய ஆவணப்படம் இதுவாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. செயல்பாட்டுக்கு வந்தது தேசிய அணை பாதுகாப்பு ஆணையம்

நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வழி வகுப்பதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் கடந்த டிச.8ஆம் தேதி ஒப்புதலளித்தது. இந்நிலையில், ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில், “தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு நிறுவுகிறது.

தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை அந்த ஆணையம் இனி நிறைவேற்றும். அந்த ஆணையத்துக்கு ஒரு தலைவரும், 5 உறுப்பினர்க -ளும் நியமிக்கப்படவுள்ளனர். ஐந்து உறுப்பினர்களும் கொள்கை-ஆராய்ச்சி, தொழில்நுட்பம், ஒழுங்குமுறை, பேரிடர், நிர்வாகம்-நிதி ஆகிய பிரிவுகளை நிர்வகிக்க உள்ளனர்.

ஆணையத்தின் தலைமையகம் தில்லியில் இடம்பெறும். 4 இடங்களில் ஆணையத்தின் பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பணிகளை தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ளும். அணைசார்ந்த பேரிடர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆணையம் மேற்கொள்ளும்.

தேசிய அணை பாதுகாப்பு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. 22 உறுப்பினர்களைக்கொண்ட அந்தக் குழுவின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தலைவர் செயல்படுவார். நாட்டில் 5,264 பெரிய அணைகள் உள்ளதாக தேசிய அணைகள் பதிவேடு குறிப்பிடுகிறது. மேலும் 437 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

2. நுகர்வோர் குறியீட்டு எண்: தமிழகம் முதலிடம்

வேளாண் மற்றும் ஊரகத்தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய குறியீட்டு எண் தரவரிசையில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் முறையே 2 மற்றும் 1 புள்ளிகள் குறைந்து, வேளாண் தொழிலாளர்களுக்கு 1095-ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு 1105 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண் வரிசையில் 1,292 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 869 புள்ளிகளுடன் இமாசலபிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது. ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1,278 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 917 புள்ளிகளுடன் இமாசல பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களில் அதிகபட்ச சரிவு உத்தர பிரதேசத்தில் (தலா 9 புள்ளிகள்) ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோதுமை, தானியங்கள், காய்கறிகள் & பழங்க -ள் உள்ளிட்டவற்றின் விலைவீழ்ச்சி இதற்கு காரணமாகும்.

அரிசி, சோளம், காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை உயர்வு காரணமாக, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களில் அதிகபட்சமான உயர்வை இமாசல பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியன சந்தித்துள்ளன.

3. விவசாய ட்ரோன் திட்டம்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

நாடு முழுவதும் 100 இடங்களில் விளைநிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருள்களைத் தெளிப்பதற்கான விவசாய ட்ரோன் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

அடுத்த 2 ஆண்டுகளில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ், கருடா ஏர்ஸ்பேஸ் நிறுவனம் ஒரு லட்சம் ட்ரோன்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ‘ஸ்வாமிதா’ திட்டத்தின்கீழ் ட்ரோன்கள்மூலம் கிராமங்களின் நிலம் மற்றும் வீடுகளின் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. ட்ரோன்கள் மூலம் மருந்துகள் அனுப்பப்படுகின்றன. தொலைவில் உள்ள பகுதிகளுக்கு தடுப்பூசிகள் சென்று சேருகின்றன. வயல்களில் பூச்சிமருந்து தெளிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

4. இந்திய-ஐக்கிய அரபு அமீரக வர்த்தக ஒப்பந்தம்: ஆபரணத் துறையின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்

இந்திய-ஐக்கிய அரபு அமீரக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்நாட்டில் ஆபரண துறையின் ஏற்றுமதியை பெரிதும் ஊக்குவிக்கும் என மத்திய வர்த்தக செயலர் பி.வி.ஆர். சுப்ரமணியம் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 800 டன் தங்கத்தை நம்நாடு இறக்குமதி செய்து கொள்கிறது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய-ஐக்கிய அரபு அமீரக வா்த்தக ஒப்பந்தம் நாட்டின் ஆபரண துறையை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். ஏனெனில், இந்த ஒப்பந்தத்தில் யுஏஇ சந்தையை இந்திய ஆபரண துறை வரி விதிப்பின்றி அணுகுவதற்கு வழிகோலப்பட்டுள்ளது.

அதேபோன்று, கடந்த 2020-21-ஆம் ஆண்டில் இந்தியா யுஏஇ-விலிருந்து 70 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இந்த நிலையில், 200 டன் தங்கம் வரையிலான இறக்குமதிக்கு வரிச் சலுகை அளிக்க இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு ஆபரண தயாரிப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரக சந்தையை வரி விதிப்பின்றி பயன்படுத்திக் கொள்வது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆதாயத்தை அளிக்கும்.

தற்போது இந்திய ஆபரணங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக சந்தையில் 5 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இந்த புதிய ஒப்பந்தத்தில் அது பூஜ்யமாக மாற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.

5. சேதி தெரியுமா?

பிப்.4: சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் 24-வது குளிர்க்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. ஒலிம்பிக் போட்டிகளில் 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பிப்.5: வைணவ மத ஆச்சார்யர்களில் ஒருவரும் இந்துமத சீர்த்திருத்தவாதியுமான ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 216 அடி உயரத்தில் பஞ்சலோக சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிப்.6: இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்றழைக்கப்பட்ட பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் (92) கரோனா தொற்றுப் பாதிப்பால் காலமானார். இவர் பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே எனப் பல விருதுகளை பெற்றவர்.

பிப்.6: பிரிட்டனின் இராணி 2ஆம் எலிசபெத், இராணியாக முடிசூடிய எழுபதாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இவருடைய தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவுக்குப் பிறகு 1952 பிப்.6 அன்று இராணியானார் எலிசபெத்.

பிப்.8: நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரும் சட்ட மசோதாவை சிறப்புச் சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டித் தமிழக அரசு மீண்டும் இயற்றியது. அது ஆளுநர் ஆர்.என். இரவிக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர், தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.

பிப்.9: ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகளில் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்கிற கர்நாடக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்தது.

பிப்.10: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரியை நியமித்துக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

1. Which state initiated ‘Operation Parivartan’ to eliminate the cultivation of cannabis?

A) Tamil Nadu

B) Kerala

C) Andhra Pradesh 

D) Goa

  • The Andhra Pradesh Police has initiated ‘Operation Parivartan’, a special operation to eliminate the cultivation of cannabis. This operation was led by the Andhra Pradesh Police with the Special Enforcement Bureau (SEB) in Visakhapatnam. Recently, around 2 lakh kilograms of processed cannabis was seized while it was being shipped out.

2. India signed agreement with UN World Food Program for distribution of wheat to which country?

A) Maldives

B) Afghanistan 

C) Syria

D) Sri Lanka

  • India signed an agreement with the United Nations World Food Programme for the distribution of 50,000 MT of wheat. India has committed to send relief to Afghanistan as part of a humanitarian assistance, to be sent in truck convoys through Pakistan by road.

3. Which state has re–adopted the anti–NEET Bill, which was returned by the Governor for re–consideration?

A) Tamil Nadu 

B) Karnataka

C) Punjab

D) West Bengal

  • A special Assembly session of Tamil Nadu Assembly unanimously re–adopted the anti–NEET Bill, which Governor R N Ravi had returned to the government. By re–adopting the Bill, and sending it again to the Governor, he is expected to forward it to the President for his assent. The state had set up Justice A K Rajan Committee to look into the impact of NEET in medical admissions.

4. Kuno Palpur National Park, which was seen in the news recently, is located in which state?

A) Bihar

B) Uttarakhand

C) Madhya Pradesh 

D) Assam

  • Around 8 to 12 Cheetahs, which became extinct in independent India since 1950s, are set to be translocated from South Africa, Namibia and Botswana to Kuno Palpur National Park – Madhya Pradesh.
  • In this regard, the union minister for Environment, Forests and Climate Change Bhupender Yadav has released an ‘Action Plan for Introduction of Cheetah in India’.

5. India has agreed to provide a grant to which country to implement ‘Unitary Digital Identity framework’?

A) Nepal

B) Sri Lanka 

C) Australia

D) Bangladesh

  • India has agreed to provide a grant to Sri Lanka to implement a ‘Unitary Digital Identity framework’. It is modelled similar to India’s flagship Aadhaar card.
  • Sri Lanka’s Cabinet decided that the Government will prioritise the implementation of the Framework as a national level programme.

6. ‘Medaram Jatara’ is a fair celebrated in which Indian state?

A) Madhya Pradesh

B) Telangana 

C) Gujarat

D) Bihar

  • Medaram Jatara is the second–largest fair of India, after Kumbh Mela, celebrated by Koya Tribal Community of Telangana, for four days. The Ministry of Tribal Affairs has sanctioned ₹2.26 Crores for various activities related to Medaram Jathara 2022.

7. Ilker Ayci, former Turkish Airlines Chairman has been appointed as the MD and CEO of which Indian Airlines?

A) Spice Jet

B) IndiGo

C) Air India 

D) Vistara

  • The Tata Group has appointed Ilker Ayci, former Turkish Airlines Chairman, as Air India’s Managing Director and CEO. The decision is in line with the Tata Group’s plans to appoint an expatriate chief to run Air India, which it took over from the Indian government recently.

8. Which Union Ministry launched ‘New Frontiers’ program, as a part of Azadi ka Amrit Mahotsav?

A) Ministry of New & Renewable Energy 

B) Ministry of Power

C) Ministry of Coal

D) Ministry of External Affairs

  • Ministry of New & Renewable Energy is conducting a three–day program “New Frontiers” on Renewable Energy. This has been conducted as a part of Azadi ka Amrit Mahotsav celebrations. A brainstorming meeting on “Roadmap to achieve net–zero carbon emissions by 2070” will also be conducted

9. Which is the first institution set up under the National River interlinking policy?

A) Ken–Betwa Link Project Authority 

B) Kaveri–Godavari Link Project Authority

C) Godavari–Krishna Link Project Authority

D) Narmada–Tapti Link Project Authority

  • The Central Government has constituted the Ken–Betwa Link Project Authority to implement the first initiative under the national river interlinking policy. The policy seeks to bring nearly 11 lakh hectares of land under irrigation in the Bundelkhand region spanning between Uttar Pradesh and Madhya Pradesh.

10. Which is the only Indian documentary that has been nominated at 2022 Oscar awards?

A) India Untouched

B) Writing with Fire 

C) Period. End of Sentence

D) Jai Bhim

  • Indian documentary ‘Writing with Fire’, directed by filmmakers Rintu Thomas and Sushmit Ghosh, has been nominated at the 94th Academy Awards in the Best Documentary Feature category.
  • Writing with Fire is the only Indian documentary to be nominated at this year’s Oscar awards.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!