TnpscTnpsc Current Affairs

19th & 20th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

19th & 20th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th & 20th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜெனீவா ஒப்பந்தங்கள்’ என்பதுடன் தொடர்புடையது எது?

அ) டிஜிட்டல் நாணயம்

ஆ) போரின்போது போர் நடத்தைக்கான விதிகள் 

இ) பருவநிலை மாற்றம்

ஈ) ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை

  • ‘ஜெனீவா ஒப்பந்தங்கள்’ என்பது போர் நடத்தைக்கான விதிமுறைகளை முன்னிலைப்படுத்தும் கொள்கைகளின் தொகுப்பாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய படையெடுப்பின்போது, குடிமக்களின் பல்வேறு உட்கட்டமைப்புகளும் இராணுவத்தைச் சாராத பலரும் பாதிக்கப்பட்டனர். மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

2. ‘நுண்ணிதி கடன்களுக்கான ஒழுங்குமுறை கட்டமை -ப்பின்’ வழிமுறைகளை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) NABARD

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி 

இ) நிதி அமைச்சகம்

ஈ) கூட்டுறவு அமைச்சகம்

  • இந்திய ரிசர்வ் வங்கி RBI (நுண்நிதி கடன்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு) விதிகள், 2022-ஐ வெளியிட் -டுள்ளது, இது 2022 ஏப்.1 முதல் நடைமுறைக்கு வரும்.
  • வழிகாட்டுதலின்கீழ், கடன்கள் பிணையமாக இருப்பதை உறுதிசெய்யுமாறு, சிறு நிதிப் பிரிவுக்கு கடன் வழங்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

3. ‘பயிர் பல்வகைப்படுத்தல் குறியீட்டை’ப் பயன்படுத்திய முதல் மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) தெலுங்கானா 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) பஞ்சாப்

  • நாட்டிலேயே முதன்முறையாக, தெலுங்கானா மாநிலம் ‘பயிர் பல்வகைப்படுத்தல் முறை’களை குறியீட்டு வடிவில் பதிவுசெய்யத்தொடங்கியுள்ளது. பயிர் பல்வகைப்படுத்தல் குறியீட்டின்படி, அம்மாநிலம் 77 வகைகளை பயிரிடுகிறது. எதிர்காலத்தில், மாநிலத்தில் பயிர் பல்வகைப்படுத்தலுக்கு இந்தக் குறியீடு ஓர் அடிப்படையாக இருக்கும்.

4. பன்னாட்டளவில் ஆயுதப்பரிமாற்றங்களின் போக்குகள் குறித்த SIPRI’இன் 2021 அறிக்கையின்படி, உலகளவில் ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா 

இ) சீனா

ஈ) இஸ்ரேல்

  • ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) பன்னாட்டு ஆயுதப் பரிமாற்றங்களின் போக்குகள், 2021 அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, உலக அளவில் ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
  • இந்தியாவின் பெரும்பாலான பாதுகாப்புப் பொருட்கள் ரஷ்யாவிலிருந்து வருகிறது. பாதுகாப்பு உபகரணங்களில் உள்நாட்டு வளர்ச்சிக்கு இந்தியா அழுத்தம் தந்துவருகிறது. மேலும் 2022-23ஆம் ஆண்டிற்கான மூலதன வரவு செலவுத்திட்டத்தில் 68 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கு இந்தியா ஒதுக்கியுள்ளது.

5. ‘இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம்’ என ஐநா அறிவித்துள்ள நாள் எது?

அ) மார்ச்.12

ஆ) மார்ச்.14

இ) மார்ச்.15 

ஈ) மார்ச்.18

  • ஐநா பொதுச்சபை மார்ச்.15-ஐ இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாக நிறுவும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. தீர்மானம் ஐநா’ஆல் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இது மத விடுதலைக்கான உரிமையை வலியுறுத்துகிறது. மேலும், கடந்த 1981ஆம் ஆண்டின் தீர்மானத்தையும் இது நினைவுபடுத்துகிறது.

6. “யுவ விஞ்ஞானி கார்யக்ரம்” (YUVIKA) திட்டத்தை நடத்துகிற அமைப்பு எது?

அ) ஆர்பிஐ

ஆ) இஸ்ரோ 

இ) டிஆர்டிஓ

ஈ) பார்க்

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) பள்ளி மாணவர்களுக்காக “யுவ விஞ்ஞானி கார்யக்ரம்” (YUVIKA) என்ற சிறப்புத் திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது. இது “இளம் விஞ்ஞானி திட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளிப் பயன்பாடுகள்பற்றிய அடிப்படை அறிவை இளம் மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதை நோக்கமா -கக் கொண்டுள்ளது.

7. ‘PM KUSUM’ திட்டத்தின் நோக்கம் என்ன?

அ) உழவர்களுக்கு நிதி மானியம்

ஆ) உழவர்களின் ஆற்றல் பாதுகாப்பு 

இ) உழவர்களுக்கு பயிர்க்காப்பீடு

ஈ) உழவர்களுக்கு உர மானியம்

  • உழவர்களின் ஆற்றல் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பிரதமர் கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியன் (PM KUSUM) திட்டம் 2019-இல் தொடங்கப்பட்டது.
  • கூறு-A ஆனது மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதை உள்ளடக்கியது. ‘B’ விவசாய பம்புகள் / நீர்ப் பாசன அமைப்புகளை நிறுவுதலையும் ‘C’ பம்புகளை சூரியமயமாக்கலையும் உள்ளடக்கியுள்ளது.
  • அண்மையில், கர்நாடக அமைச்சரவை PM KUSUM-B திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.

8. மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் சமீபத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை யார்?

அ) மிதாலி ராஜ்

ஆ) ஜூலன் கோஸ்வாமி 

இ) ஹர்மன்ப்ரீத் கவுர்

ஈ) ஸ்மிருதி மந்தனா

  • பெண்கள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி படைத்துள்ளார்.
  • 2022 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின்போது அவர் இச்சாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பையில் 31 போட்டிகளில் 40 விக்கெட்டுக
    -ளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் லின் புல்ஸ்டனின் (39) சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

9. உலக வனவுயிரிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச்.03 

ஆ) மார்ச்.02

இ) மார்ச்.01

ஈ) மார்ச்.05

  • ஆண்டுதோறும் மார்ச்.3ஆம் தேதி ஐநா சபையால் உலக வனவுயிரிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு (2022), “Recovering key species for ecosystem restoration” என்ற கருப்பொருளின் கீழ் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இது அழிவின் விளிம்பிலிருக்கும் வனவுயிரிகளைப் பாதுகாப்பதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. உலக சிட்டுக்குருவிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) மார்ச்.20 

ஆ) மார்ச்.21

இ) மார்ச்.22

ஈ) மார்ச்.23

  • உலக சிட்டுக்குருவிகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.20 அன்று கொண்டாடப்படுகிறது.
  • ஊர்க்குருவிகள் உட்பட பல்வேறு வகையான சிட்டுக் குருவி இனங்களுக்கு மனிதனால் ஏற்படும் அச்சுறுத்தல் -கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி ஆஃப் இந்தியா மற்றும் பிரான்சின் Eco-Sys Action Foundation ஆகியவற்றால் கொண்டாடப்படுகிறது. ‘LOVE Sparrows’ என்பது நடப்பு (2022) ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022-23: முக்கிய அம்சங்கள்…!

தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் `1,019 கோடி செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

* உயர்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை ‘தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்’ என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு முதற்கட்டமாக `40 கோடி வழங்கப்படும்.

* காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 750 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும் தரமுயர்த்தப்படும். இதற்காக `100 கோடி மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

* தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு `1,906 கோடி ஒதுக்கீடு.

* அவசர ஊர்தி சேவைகளுக்கு `304 கோடி ஒதுக்கீடு.

* டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு `817 கோடி ஒதுக்கீடு.

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு `17,901.73 கோடி ஒதுக்கீடு.

* அரசுத்துறைகளில் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை சேகரித்து கண்காணிக்க சொத்து மேலாண்மை மென்பொருள் உருவாக்கப்படும்.

* மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகளும், டீசலில் இயங்கும் 2213 பேருந்துகளும் வாங்கப்படும்.

* தமிழகத்தில் திறன்மிக்க மனித வளத்தை மேலும் மேம்படுத்தி அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது அரசின் தொலைநோக்கு திட்டமாகும்.

* உலகளாவிய பங்களிப்புடன் ஒரு அறிவுசார் நகரம் உருவாக்கப்படும். இது உலகில் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும்.

* ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள, திறன் பயிற்சி மையங்கள், அறிவுசார் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளை இந்த அறிவுசார் நகரம் கொண்டிருக்கும்.

* தமிழத்தில் டிட்கோ, சிப்காட், டான்ஜெட்கோ போன்ற அரசு பொது நிறுவனங்களுடன் இணைந்து மாநில பல்கலைக்கழங்கள் தங்கள் வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.

* தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் உயர்ந்து வருகிறது. அரசு கல்லூரி, பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் கட்டமைப்பு மேம்படுத்துவது அவசியம்.

* அடுத்த 5 ஆண்டில் `1000 கோடியில் சிறப்பு திட்டம் உருவாக்கி புதிய வகுப்பறை, விடுதி, ஆய்வகம், திறன்மிகு வகுப்பறை உருவாக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் `250 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணத்துக்காக `201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த `100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு.

* இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும். இதற்காக `200 கோடி நிதி ஒதுக்கீடு.

* சென்னை நந்தம்பாக்கத்தில் `75 கோடியில் புத்தொழில் உருவாக்க மையம் அமைக்கப்படும்.

* கேவையில் கைத்தொழில் மேம்பாட்டு குழுவம் அமைக்க `5 கோடி நிதி ஒதுக்கீடு.

* கோவை, வேலூர், பெரம்பலூரில் புதிய தொழில் பூங்காக்கக்கள் அமைக்கப்படும்.

* சிதிலமடைந்த 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களை புணரமைக்க `100 கோடி ஒதுக்கீடு.

* இந்து சமய அறநிலைத்துறைக்கு `387 கோடி ஒதுக்கீடு.

* தமிழகத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட கீழைக் கடற்கரைச் சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும்

* மாநகர பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்யும் திட்டத்திற்கு `1520 கோடி மானியம்.

* துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு `5770 கோடி ஒதுக்கீடு.

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளா நிறைவு செய்ய `1,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு `8737 கோடி ஒதுக்கீடு.

* பிரதமரின் வீடு வசதித்திட்டத்திற்கு `7,300 கோடி ஒதுக்கீடு.

* ஏழை மக்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட `2030 கோடி ஒதுக்கீடு.

* 100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு `2800 கோடி ஒதுக்கீடு.

* சென்னையை மேம்படுத்தும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு `500 கோடி ஒதுக்கீடு.

* 149 சமத்துவபுரங்களை சீரமைக்க `190 கோடி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த குழந்த வளர்ப்பு திட்டத்திற்கு `2,542 கோடி ஒதுக்கீடு.

* அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் `1000 உதவித்தொகை வழங்கப்படும். பெண்கள் உயர்க்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் `1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும் வழங்கப்படும்.

* சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக `15 கோடி நிதி ஒதுக்கீடு.

* புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட `13,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில், அன்பழகன் பெயரில் திட்டம்.

*அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த `250 கோடி ஒதுக்கீடு.

* தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு `36,895.89 கோடி ஒதுக்கீடு.

* சுய உதவிக்குழுக்களுக்கான கடன், உழவர்களுக்கான பயிர்கடன் வழங்க `4,130 கோடி ஒதுக்கீடு

* சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.

* முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு `4,816 கோடி நிதி ஒதுக்கீடு.

* விழுப்புரம், இராமநாதபுரத்தில் `10 கோடியில் தொல் பொருள்களை வைக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்

* சென்னை அருகே தாவரவயில் பூங்கா `300 கோடியில் அமைக்கப்படும்.

* கிண்டி சிறுவர் பூங்கா மேம்படுத்தப்படும்.

* தந்தை பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். இதற்காக 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்மொழிக்கும் பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய குழு அமைக்கப்படும். அகர முதலி உருவாக்கும் திட்டத்திற்கு `2 கோடி ஒதுக்கீடு.

* தமிழ் மொழியின் தொன்மை, செம்மையை நிலைநாட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

* தமிழ் வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் `82.86 கோடி நிதி ஒதுக்கீடு

* நீர்நிலை பாதுகாப்பு மற்றும் அரசு நிலங்களை மீட்கும் பணிகளுக்காக `50 கோடி ஒதுக்கீடு.

* வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் `7ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

* வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக `500 கோடி ஒதுக்கீடு.

* தமிழகத்திலுள்ள 64 அணைகளை புனரமைக்க `1,064 கோடி ஒதுக்கீடு.

* தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு `7,338.36 கோடி ஒதுக்கீடு.

* வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு `200 கோடி நிதி ஒதுக்கீடு.

* வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%லிருந்து 3.80 ஆக குறையும்.

* வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் 7 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது.

* கொற்கையில் `5 கோடியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும்

* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக `496 கோடி ஒதுக்கீடு.

* வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க `10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழை மானிகள் அமைக்கப்படும்.

* `20 கோடியில் வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும்.

* ஆதரவில்லாத, கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் `20கோடி.

* தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு `849 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஆண்டுதோறும் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்த `5.6 கோடி ஒதுக்கீடு.

* மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்திறிகு `1062 கோடி ஒதுக்கீடு.

* எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு `1949 கோடி ஒதுக்கீடு.

* சமூக நலத்துறைக்கு `5922.40 கோடி ஒதுக்கீடு.

* முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு `1540 கோடி ஒதுக்கீடு.

* வரையாடு பாதுகாப்பு திட்டத்திற்கு `10 கோடி ஒதுக்கீடு.

* தமிழக அரசின் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் தேடல் திட்டத்திற்கு `25 கோடி ஒதுக்கீடு.

* சென்னையில் சதுரங்க ஒலிம்பியாட் நடைபெறுகிறது. இதில், 150 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

* விளையாட்டுத்துறைக்கு `293 கோடி ஒதுக்கீடு.

2. இராமாமிர்தம் நினைவு நிதி

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசுப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தவுடன் மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகைகளை பெற்று வந்தாலும் இந்தத் திட்டத்தில் கூடுதலாக உதவியைப் பெறலாம் எனவும், இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 இலட்சம் மாணவிகள் ஒவ்வோர் ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. சென்னை அருகே `300 கோடியில் தாவரவியல் பூங்கா – பட்ஜெட்டில் அறிவிப்பு

தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங்களின் இருப்பிடங் -களாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, லண்டன் க்யூபூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் “வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை” அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு, முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளம்வயதிலிருந்தே வனம் மற்றும் வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.

சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.

இம்மதிப்பீடுகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. இயற்கை வேளாண்மை முதல் டிஜிட்டல் விவசாயம் வரை: தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 சிறப்பு அம்சங்கள்

2022-23-ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகா, ஆந்திராவுக்குப் பின் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த வேளாண் பட்ஜெட்டில் மொத்த நிதி ஒதுக்கீடு – `33,007.68 கோடி. இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்:

* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு `300 கோடி நிதி ஒதுக்கீடு. அனைத்துத் துறை திட்டங்களையும் ஒருங்கிணைத்து. (1997 கிராம பஞ்சாயத்துகள் 2021-22)

* முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3,000 மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு `132 கோடி.

* இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு `71 கோடி மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.

* பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட `2,546 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகள் இயக்கம்

* இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்,

* திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் மண்டலம்,

* தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு இரண்டாவது மண்டலம்,

* துவரைப் பயிருக்கென சிறப்பு மண்டலம் (கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களைக் கொண்டது)

* சிறுதானியங்களின் ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழாக்கள்,

* சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு விதை முதல் விற்பனைக்கு `152 கோடியில் உதவி.

சூரியகாந்தி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தி எண்ணெய் வித்துக்களை `29.7 கோடிக்கு ஊக்குவித்தல்.

* `8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்

* அனைத்து கிராம நிலங்களுக்கும் புவியிடக்குறியீடு, புதிய பயிர்த் திட்டத்திற்கான பரிந்துரை,

* பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி,

* நீர்ப்பாசனத்தில் தானியங்குமயமாக்கலுக்கு நவீன இணையதள தொழில்நுட்பம் (Internet of Things)

* மண் வள அட்டைகளுக்கான ‘தமிழ் மண் வளம்’ இணையமுகப்பு

* பயிர் சாகுபடிப் பரப்பினை கணிக்க தொலை உணர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்,

* இடுபொருட்கள், விதைகள் மற்றும் கன்றுகளை ஆன்லைனில் பதிவு செய்து விநியோகம்,

* வேளாண் விரிவாக்க மையங்ளில் பணமில்லா பரிவர்த்தனை.

* மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம்

* உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க `5 கோடி

* பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக `5 கோடி

* கரும்பு விவசாயிகளுக்கு உதவி

* மெட்ரிக் டன்னுக்கு `195/- சிறப்பு ஊக்கத்தொகை – கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு `2,950/-

* கரும்பு சாகுபடிக்கு உதவி – `10 கோடி

* சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் – `4.5 கோடி

* மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி `20 கோடி ஒதுக்கீடு

* தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க – `30 கோடி

* தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக `27.51 கோடி.

* பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் (Vertical Garden) போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு `25.9 கோடி

* தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு `10.25 கோடி

* உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு `5 கோடி

* காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க `2 கோடி

* பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க `4 கோடி

* பனை மேம்பாட்டிற்காக `2.65 கோடி

* பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க `150 கோடி

* முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகள் – `65.34 கோடி மற்றும் 145 சூரியசக்தி உலர்த்திகள் `3 கோடி

* 50 உழவர் சந்தைகளை சீரமைக்க `15 கோடி மற்றும் 10 உழவர் சந்தைகளை அமைக்க `10 கோடி

* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி.

* 2022-23 தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

* மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கு முன்னுரிமை.

* திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் `381 கோடியில் மூன்று மிகப்பெரிய அளவிலான உணவுப் பூங்காக்கள்,

* கிராம அளவிலான மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையங்கள் 38 கிராமங்களில் அமைக்க `95 கோடி

* 3 கோடியில் 5 தொழில் கற்கும் சிறுமையங்கள்.

* 295 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைப்பதற்கு `5 கோடி.

* சென்னை மற்றும் திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகங்கள் அமைக்க `15 கோடி

* பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ” மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து, அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதி.

* மாநில அளவிலான “உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேலாண்மை மையம்” அமைத்து வணிக நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல்

* ஆறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கட்டமைப்பு வசதிகளுக்கு `36 கோடி.

* பெரம்பலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தருமபுரி, விருதுநகர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இரண்டாம் கட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பணிகளுக்கு `125.44 கோடி

* 60 ட்ரோன்களை வாங்குவதற்கும் பயிற்சி மற்றும் செயல்விளக்கத்திற்கு `10.32 கோடி

வேளாண் சார்ந்த துறைகளின் செயல்பாடுகள்

* காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கிமீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு `80 கோடி.

* அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு `5 கோடி.

* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCO விற்கு `5,157.56 கோடி.

* ஊரக வளர்ச்சித் துறை மூலம் `1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள்.

* விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் `604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள்,.

* தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டத்தின் மூலம் மூன்று இலட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு `42.07 கோடி,

* வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க `30.56 கோடி ஒதுக்கீடு,

* சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க `1.5 கோடி வரை மூலதன மானியம்.

* திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிட்கோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை,

* வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி

* வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு `1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.

5. சென்னை ஐஐடியில் புதிய முயற்சி! மனித மூளை செல்களை வரைபடமாக்கும் மையம் தொடக்கம்

மனித மூளைகளை, ‘செல்’களின் நிலையில் வரைபடமாக்கும் வகையில் ‘சுதா கோபாலகிருஷ்ணன் பிரெய்ன் சென்டர்’ என்ற பெயரிலான ஆராய்ச்சி மையம் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது.

6. மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றுக்கான மரபணு வங்கி உருவாக்கப்படும்

மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றுக்கான மரபணு வங்கி நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டப்பண்ணைகளில் உருவாக்கப்படும்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

உழவர்கள், உழவர் ஆர்வலர் குழு, உழவர் உற்பத்தியா -ளர் குழு ஆகியோராலும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளிலும் உற்பத்தி செய்யப்படும் செடிகள், விதைகள், இடுபொருள்கள், வாசனைப் பொருள்களான ஏலக்காய், மிளகு, பட்டை, கிராம்பு போன்றவையும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களான ஜாம், ஜெல்லி, ஊறுகாய், உலர்பழங்கள், யூகலிப்டஸ் தைலம், போன்றவையும் இணையம் வாயிலாக விற்க ஏற்பாடு செய்யப்படும்.

பொருள்களைத் தரம் பிரித்து, சிப்பம் கட்டி விநியோகம் செய்ய மூன்று சேமிப்பு கிடங்குகள் சென்னை, மதுரை, கோவையில் `1.50 கோடி நிதியில் ஏற்படுத்தப்படும். இணையவழி விநியோக நிறுவனங்கள்மூலம் வாடிக்
-கையாளர்களுக்குப் பொருள்கள் விநியோகம் செய்யப்ப -டும். இத்திட்டம் `2 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.

மரபணு வங்கி: விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ற ரகங்களை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுவைகூட்டும் பயிர்களின் வகைகளும் ரகங்களும் சேகரிக்கப்பட்டு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவு செய்து பராமரிக்கப்படும். முதல்கட்டமாக இந்த ஆண்டு மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றிற்கான மரபணு வங்கி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக் கலை பண்ணைகளில் தொடக்கப்பட்டு, உள்ளூர் வகைகள் அறிமுகப்படுத்தப்படும்.

இதற்கான உழவு, நடவு, இடுபொருட்கள், அறுவடை போன்ற பணிகளுக்காக `1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மூலிகை தோட்டங்கள்: 2022-23ஆம் ஆண்டில் `1 கோடி நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் நான்கு ஆயிரம் வீடுகளில் அமைக்கப்படும். இதற்கு தேவையான மூலிகைச்செடிகள், அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும். ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் முருங்கை நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

7. தேனி, திண்டிவனம், மணப்பாறையில் தரம் உயர்த்தப்பட்ட உணவுப் பூங்காக்கள்

தேனி, திண்டிவனம், மணப்பாறையில் தரம் உயர்த்தப்பட்ட உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

தேனி, திண்டிவனம் (விழுப்புரம்), மணப்பாறை (திருச்சி) ஆகிய வட்டங்களில் 451 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் நிறுவனத்தினால் உணவுப் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மாநில அரசு எடுத்த முயற்சியினால் தற்போது இந்த மூன்று உணவுப் பூங்காக்களும் தரம் உயர்த்தப்பட்ட பெரிய அளவிலான உணவுப்பூங்காக்கள் என மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்த மூன்று உணவுப் பூங்காக்களுக்கு அருகில் அமைந்துள்ள பிற மாவட்ட விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இந்த உணவுப் பூங்காக்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் `381.38 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தினால் நபார்டு வங்கியின் கடன் உதவியுடன் உருவாக்கப்படும்.

8. இந்தியா-ஜப்பான் இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்

வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை உறுதிசெய்வது, பசுமை திட்டங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 6 ஒப்பந்தங்கள் இந்தியா-ஜப்பான் இடையே கையொப்பமாகின.

இந்தியா-ஜப்பான் இடையே நடைபெற்ற 14ஆவது மாநாட்டில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாட்டின்போது இருநாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடா்பான ஒப்பந்தமும் கையொப்பமானது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தங்களும் மாநாட்டின்போது கையொப்பமாகின.

9. உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து

உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையைத் தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக பின்லாந்து பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி நாள் ஆண்டுதோறும் மார்ச் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐநா நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் அமைப்பு வெளியிட்டது. தொடர்ந்து 10ஆம் ஆண்டாக இப்பட்டியல் வெளியிடப்பட்டது.

மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. கணக்கெடுப்பின்போது மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆயுட்காலம், வாழ்வில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம், சமூக ஆதரவு, மக்களின் பெருந்தன்மை, ஊழல் உள்ளிட்டவை தொடர்பாக ஆராயப்பட்டது.

மொத்தம் 146 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பின்லாந்து தொடர்ந்து 5-ஆவது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டுக்கான அறிக்கையில் 139ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது மூவிடங்கள் முன்னேறியுள்ளது.

1. ‘Geneva Conventions’ which was seen in the news recently, is related to which field?

A) Digital Currency

B) Rules for Combatant Behaviour during a War 

C) Climate Change

D) Export–Import Policy

  • The Geneva Conventions are a set of principles highlighting the norms for combatant behaviour during a war. During the ongoing Russia’s armed invasion of Ukraine, several civilian infrastructures and non–combatants have been impacted. There is growing concern around the issue of human rights violations.

2. Which institution released the Directions of ‘Regulatory Framework for Microfinance Loans’?

A) NABARD

B) RBI 

C) Ministry of Finance

D) Ministry of Cooperation

  • The Reserve Bank of India has released the RBI (Regulatory Framework for Microfinance Loans) Directions, 2022, which will be effective from April 1, 2022. Under the directions, RBI asked regulated entities lending to the microfinance segment to ensure that loans are collateral–free.

3. Which is the first state in the country to use ‘Crop Diversification Index’?

A) Tamil Nadu

B) Telangana 

C) Andhra Pradesh

D) Punjab

  • For the first time in the country, Telangana has begun recording crop diversification patterns in the form of an index. According to the crop diversification index, the state grows 77 varieties. The index will serve as a base for future crop diversification in the state.

4. Which country is the largest importer of arms globally, as per SIPRI’s Trends in International Arms Transfers, 2021 Report?

A) USA

B) India 

C) China

D) Israel

  • Stockholm International Peace Research Institute (SIPRI) released the Trends in International Arms Transfers, 2021 Report. As per the report, India remains the largest importer of arms globally. Most of India’s defence imports come from Russia.
  • India has been pushing for indigenous development in defence equipment, and allotted 68 percent of the capital budget for 2022–23 for domestic manufacturing industries.

5. Which day has been declared by the UN as ‘International Day to Combat Islamophobia’?

A) March.12

B) March.14

C) March.15 

D) March.18

  • The U.N. General Assembly approved a resolution setting March 15 as the International Day to Combat Islamophobia. The resolution was adopted by consensus by the UN.
  • It emphasizes the right to freedom of religion and belief and recalls a 1981 resolution calling for “the elimination of all forms of intolerance and of discrimination based on religion or belief.”

6. Which organisation conducts the “YUva VIgyani KAryakram” (YUVIKA) programme?

A) RBI

B) ISRO 

C) DRDO

D) BARC

  • Indian Space Research Organisation (ISRO) is organising a special programme for school children called “YUva VIgyani KAryakram” (YUVIKA). Also called as “Young Scientist Programme”, it aims to impart basic knowledge on space technology, space science and space applications to young students, especially for those from rural areas.

7. What is the objective of ‘PM KUSUM’ scheme?

A) Financial Grant to Farmers

B) Energy Security of Farmers 

C) Crop Insurance to Farmers

D) Fertilizer Subsidy to Farmers

  • The Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Utthaan Mahabhiyan (PM KUSUM) scheme was launched in 2019, to ensure Energy security of farmers.
  • Component–A includes setting up of Grid Connected Renewable Energy Power Plants, ‘B’ includes Installation of agriculture pumps/ irrigation systems and ‘C’ includes Solarisation of the pumps. Recently, the Karnataka Cabinet approved the implementation of PM KUSUM–B scheme.

8. Which Indian cricketer recently became the highest wicket–taker in the history of the Women’s World Cup?

A) Mithali Raj

B) Jhulan Goswami 

C) Harmanpreet Kaur

D) Smriti Mandhana

  • Veteran Indian pacer Jhulan Goswami has created history by becoming the highest wicket–taker in the history of the Women’s World Cup. She achieved this feat during the match West Indies Women in the ongoing ICC Women’s ODI World Cup 2022. She has now clinched 40 wickets in 31 matches in the Women’s World Cup and has surpassed Australia’s Lyn Fullston (39).

9. World Wildlife Day is observed on which date?

A) March.03 

B) March.02

C) March.01

D) March.05

  • Every year, 3rd March is celebrated as World Wildlife Day by the United Nations and this year, the day is celebrated under the theme “Recovering key species for ecosystem restoration”. This aims to conserve some of the most critically endangered species of wild fauna and flora.

10. When is the World Sparrow Day celebrated every year?

A) March 20 

B) March 21

C) March 22

D) March 23

  • The World Sparrow Day is celebrated every year on 20th March. It is celebrated to raise awareness about various species of sparrows including house sparrow and of threats by manmade activities to their populations. It is celebrated by the Nature Forever Society of India along with the Eco–Sys Action Foundation of France.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!