TnpscTnpsc Current Affairs

19th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

19th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சட்லஜ்–யமுனா இணைப்புக்கால்வாயை நிறைவேற் –றக்கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) ஹரியானா 

இ) குஜராத்

ஈ) இராஜஸ்தான்

  • சட்லஜ்–யமுனா இணைப்புக் கால்வாயை கட்டி முடிக்கக் கோரி ஹரியானாவின் விதான் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஹரியானா மற்றும் பஞ்சாப் இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. சண்டிகரில் உரிமைகோரும் வகையில் பஞ்சாப் விதான் சபை நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து, ஹரியானா சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
  • இருமாநிலங்களுக்கு இடையே நிலவும் சமநிலையை சீர் குலைக்கும் வகையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அதில் கோரப்பட்டுள்ளது.

2. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற புச்சா நகரம் உள்ள நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) உக்ரைன் 

இ) இலங்கை

ஈ) ஆப்கானிஸ்தான்

  • உக்ரைனின் புச்சா நகரின் தெருக்களில் பொதுமக்களின் உடல்களின் படங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உலகம் முழுவதும் பெருஞ்சீற்றம் ஏற்பட்டுள்ளது.
  • உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐநாவில் உள்ள இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி T S திருமூர்த்தி ஆகியோர் உரையாற்றிய உக்ரைன் குறித்த UNSC கூட்டத்தில், புச்சா பொதுமக்கள் படுகொலைகளைக் கண்டித்து தன்னிச்சையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தனர்.

3. ‘மாநிலக்கல்விக்கொள்கை’யை உருவாக்குவதற்காக குழுவொன்றை அமைத்த மாநில அரசு எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளம்

இ) ஒடிஸா

ஈ) மேற்கு வங்கம்

  • தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநிலக்கல்விக்கொள்கையை வகுக்க 13 பேர்கொண்ட ஒரு குழுவை அமைத்தது. தில்லி உயர்நீதிமன்றத்தில் பணிசெய்து ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி முருகேசன் தலைமையிலான குழுவில் கல்வி நிபுணர்கள், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், கர்நாடக இசைக்கலைஞர் டி எம் கிருஷ்ணா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

4. ‘ஹைப்பர்சானிக் ஏவுகணைத் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறன்’ தொடர்பான ஒத்துழைப்பை அறிவித்த உலகளாவிய கூட்டணி எது?

அ) கரீபியன் சமூகம் (CARICOM)

ஆ) AUKUS பாதுகாப்பு கூட்டணி 

இ) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)

ஈ) வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO)

  • அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை ஐப்பர்சானிக் ஏவுகணைத் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறன் ஆகியவற்றில் இணைந்து செயல்படத் தொடங்குவதாக அறிவித்தன. இது அவர்களின் போட்டியாளர்களான ரஷ்யாவும் சீனாவும் ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருவதற்கான பதிலடியாகும்.

5. 2022 – போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

அ) 28

ஆ) 75

இ) 166 

ஈ) 321

  • 2022 – போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலின்படி, கடந்த ஆண்டு 140ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 166ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு $760 பில்லியன் டாலர்கள் ஆகும்.
  • ரிலையன்ஸ் தொழிற்துறையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி $90.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இந்திய அளவில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். உலக அளவில் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் அவர். டெஸ்லா & ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் உலகின் பெருஞ்செல்வந்தராக உள்ளார்.

6. ககன்யான் வன்பொருளின் முதல் தொகுப்பை இந்திய விண்வெளி & ஆய்வு மையத்திடம் (ISRO) ஒப்படைத்த நிறுவனம் எது?

அ) DRDO

ஆ) HAL 

இ) ஸ்பேஸ் X

ஈ) பிக்சல் ஸ்பேஸ்

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (HAL) ககன்யான் வன்பொருளின் முதல் தொகுப்பை இந்திய விண்வெளி மற்றும் ஆய்வு மையத்திடம் (ISRO) ஒப்படைத்தது. PS–2 நிலை என்பது PSLV ஏவுகணையின் 2ஆம் கட்டமாகும். இதில் பூமியில் வைக்கப்பட்டிருக்கும் உந்து அமைப்பு உந்துவிசைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
  • 2021 அக்டோபரில், HALஆல் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகக்கனமான செமி–கிரையோஜெனிக் புரொப்பல்லன்ட் டேங்க் (SC120–LOX) இஸ்ரோவிடம் வழங்கப்பட்டது.

7. பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் உலகின் நம்பர்.1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சார்ந்த நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) போலந்து 

இ) ஜெர்மனி

ஈ) பிரான்ஸ்

  • 20 வயதான இகா ஸ்வியாடெக் அண்மையில் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் உலகின் நம்பர்.1 வீராங்கனை ஆன முதல் போலந்து வீராங்கனை ஆனார். அவர் சமீபத்தில் மியாமி ஓப்பனை வென்றார். ஒரு பருவத்தில் முதல் மூன்று ‘WTA 1000’ நிகழ்வுகளை வென்ற முதல் வீராங்கனை ஆனார். 2020–இல், 28 ஆண்டுகளில் ரோலண்ட் கரோஸை வென்ற முதல் இளம்பெண் என்ற பெருமையையும் இகா ஸ்விடெக் பெற்றார்.

8. NITI ஆயோக்கின் மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு – சுற்று 1இல் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) பஞ்சாப்

இ) குஜராத் 

ஈ) ஒடிஸா

  • NITI ஆயோக்மூலம் மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று–1 வெளியிடப்பட்டது.
  • இதில் மாநிலங்களின் செயல்பாடு 6 அளவுகோல்களை கொண்டு தரவரிசை செய்யப்பட்டுள்ளது. 1) டிஸ்காம் செயல்பாடு 2) எரிசக்தி எளிதில், குறைந்த செலவில் நம்பகத்தன்மையோடு கிடைத்தது 3) தூய்மை எரிசக்திக்கான நடவடிக்கைகள் 4) எரிசக்திக்கென 5) சுற்றுச்சூழல் நீடித்திருத்தல் 6) புதிய முன்முயற்சிகள்.
  • குஜராத், கேரளா, பஞ்சாப் ஆகியவை தரவரிசையில் முதல் 3 பெரிய மாநிலங்களாக உள்ளன. தமிழ்நாடு இந்தத் தர வரிசையில் 43.4 சராசரி புள்ளிகளுடன் 9ஆமிடத்தைப் பெற்றுள்ளது. நன்றாக செயல்பட்ட சிறிய மாநிலங்களின் தரவரிசையில் கோவா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

9. ‘PM–DAKSH யோஜனா’வைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் அமைச்சகம்

இ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் 

ஈ) மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் PM–DAKSH (Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampann Hitgrahi) யோஜனா, விளிம்புநிலை ஆட்களின் திறமைக்கான தேசியத்திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், நீண்டகால மற்றும் குறுகிய கால திறன்களை வழங்குவதன்மூலம் இலக்கு இளைஞர்களின் திறனளவை அதிகரிப்பதாகும். அதைத் தொடர்ந்து ஒரு வேலைவாய்ப்பு/சுய வேலைவாய்ப்பும் அளிக்கப்படும். ஐந்து ஆண்டுகளில் சுமார் 2.71 லட்சம் பேர் பயிற்சிபெறுவார்கள். 2021–22 நிதியாண்டுக்கு `79.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

10. ‘மனிதனின் விண்வெளிப் பயணங்குறித்த உலக நாள்’ நினைவுகூரப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல்.10

ஆ) ஏப்ரல்.12 

இ) ஏப்ரல்.14

ஈ) ஏப்ரல்.15

  • ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஏப்ரல்.12 ஆம் தேதியை ‘மனிதனின் விண்வெளிப் பயணங்குறித்த உலக நாள்’ என நிறுவியது. ஏப்ரல் 12, 1961–இல், ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் வோஸ்டாக் 1 விண்கலத்தில் பூமியைச் சுற்றிவந்தார். மனிதகுலத்தின் நலனுக்காக விண்வெளி ஆய்வுக்கு வழிவகுத்த இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ‘மனிதனின் விண்வெளிப் பயணங்குறித்த உலக நாள்’ கொண்டாடப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வருவாய்த்துறை செயலி மூலம் வறட்சி நிலை கண்காணிப்பு: ஜூன் முதல் புதிய திட்டம் துவக்கம்

வறட்சி நிலையையும் செயலி வழியாகக் கண்காணிக்கும் புதிய திட்டம் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்தத் துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2021-22-ஆம் ஆண்டில் செயலிமூலம் மின்னல் தொடர்பான எச்சரிக்கை செய்திகளை அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. வறட்சி நிலையினை கண்காணித்து தகவல் அளிக்கை வசதியையும் அந்தச் செயலியில் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஜூன் முதல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

2. கடந்த 15 மாதங்களில் தமிழகத்தில் 131 யானைகள் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 131 யானைகள் உயிர் இழந்துள்ளதாக யானைகள் இறப்பு தொடர்பாக அமைக்கப் பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 2021 ஜன.1 முதல் டிச.31 வரை 101 யானைகளும், 2022 ஜன.1 முதல் மார்ச் 15 வரை 30 யானைகளும் உயிரிழந்துள்ளன. இதில், அதிகபட்சமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் இருபது யானைகள், கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் 18 யானைகள் உயிரிழந்துள்ளன.

3. சேதி தெரியுமா?

மார்ச் 26: டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை (151 இன்னிங்ஸ்கள்) விரைவாகக் கடந்த வீரர் என்கிற சாதனையை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் படைத்தார்.

மார்ச் 27: சுவிஸ் சூப்பர் ஓபன் பாட்மிண்டன் தொடர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து பட்டம் வென்றார்.

மார்ச் 28: கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் தரன் பிள்ளை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மார்ச் 28: அமெரிக்காவில் நடைபெற்ற 94-வது ஆஸ்கர் விழாவில் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான விருது ‘CODA’ படத்துக்கு வழங்கப் பட்டது. சிறந்த நடிகராக ‘கிங் ரிச்சர்டு’ படத்துக்காக வில் ஸ்மித்தும் சிறந்த நடிகையாக ‘தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே’ படத்துக்காக ஜெசிகா சாஸ்டெய்னும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மார்ச் 29: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக வி. கீதா லட்சுமியைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்தார்.

மார்ச் 29: தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில் நீர் சேமிப்பில் இந்தியாவில் முதலிடம் பிடித்த உத்தரப் பிரதேசத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறந்த மாநிலத்துக்கான விருது வழங்கினார்.

மார்ச் 29: தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும், பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் நியமிக்கப் பட்டனர்.

மார்ச் 30: கத்தாரில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா அணி தகுதி பெற்றது.

மார்ச் 31: தமிழகத்தில் வன்னியர் களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்துசெய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

மார்ச் 31: நாகாலாந்து, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் உள்ள பகுதிகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

ஏப்.1: இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) இயக்குநர் ஜெனரலாக டாக்டர் எஸ். ராஜு பொறுப்பேற்றார்.

ஏப்.2: ஆந்திரப் பிரதேசத்தின் லெபக் ஷியில் உள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் மற்றும் ஒற்றைக்கல் நந்தி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

ஏப்.3: நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இது ஆஸ்திரேலியா வெல்லும் ஏழாவது கோப்பை.

ஏப்.4: பிஹாரில் உள்ள ஜெய்நகரையும் நேபாளத்தின் குர்தாவையும் இணைக்கும் 35 கி.மீ. குறுக்கு ரயில் பாதையில் தொடக்க ஓட்டம் நடைபெற்றது.

ஏப்.4: 2022 மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தி போலந்து வீராங்கனை இகா ஷ்வாடெக் பட்டம் வென்றார்.

ஏப்.5: ஹிமாச்சல பிரதேசத்தில் 9ஆம் வகுப்பு முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்பிக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் தெரிவித்தார்.

ஏப்.7: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏப்.7: தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

ஏப்.8: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஐ.நா. பொதுச் சபை ஒப்புதல் அளித்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் கிடைத்தன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்களிக்கவில்லை.

ஏப்.8: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சனை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.

ஏப்.9: தாய்லாந்தின் புக்கெட் நகரில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை ஓபன் தொடரில் இந்திய அணி 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றது.

ஏப்.10: கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பள்ளிக்கல் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பாவுடனும் கலப்பு இரட்டையர் பிரிவில் சவுரவ் கோஷலுடனும் இணைந்து பட்டம் வென்றார். உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா முதன் முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

ஏப்.11: இந்தியாவில் காய்கறி உற்பத்தியில் உத்தரப் பிரதேச மாநிலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இதேபோலப் பழங்கள் உற்பத்தியில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஏப்.12: மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABH) புதிய தலைவராக டாக்டர் மகேஷ் வர்மா நியமிக்கப்பட்டார்.

1. Which state has passed a resolution seeking completion of the Sutlej Yamuna Link Canal (SYL) Canal?

A) Uttar Pradesh

B) Haryana 

C) Gujarat

D) Rajasthan

  • The Haryana Vidhan Sabha has passed a resolution seeking completion of the Sutlej Yamuna Link Canal (SYL) Canal. There has been a long–pending dispute of sharing of river waters between Haryana and Punjab.
  • To counter the resolution passed by Punjab Vidhan Sabha staking a claim on Chandigarh, Haryana Assembly unanimously passed a resolution. It demanded that the central government should not take any steps that would disturb the existing balance between the two states.

2. Bucha, which was seen in the news, is a city, is located in which country?

A) Russia

B) Ukraine 

C) Sri Lanka

D) Afghanistan

  • After images of civilian bodies were found in the streets of Bucha city of Ukraine, there have been outrages across the world. At the UNSC meeting on Ukraine which was addressed by Ukraine’s President Volodymyr Zelenskyy, T S Tirumurti, India’s Permanent Representative at the UN condemned the Bucha civilian killings and called for an independent probe.

3. Which state government formed a panel to frame the ‘State Education Policy’?

A) Tamil Nadu 

B) Kerala

C) Odisha

D) West Bengal

  • The Tamil Nadu government recently formed a 13–member panel to frame the state education policy.
  • The panel is headed by Delhi High Court retired Chief Justice D Murugesan and the panel members include education experts, writer S Ramakrishnan, former chess world champion Viswanath –an Anand and Carnatic musician T M Krishna, among others.

4. Which global alliance announced collaboration on ‘Hypersonic missile strike and defence capacity’?

A) Caribbean Community (CARICOM)

B) AUKUS Defence Alliance 

C) Shanghai Cooperation Organisation (SCO)

D) North Atlantic Treaty Organisation (NATO)

  • The United States, Britain and Australia announced that they would begin collaborating on hypersonic missile strike and defence capacity. This is in response to their rivals Russia and China advancing rapidly in the hypersonic technology.

5. How many Indians feature in the Forbes Billionaires List 2022?

A) 28

B) 75

C) 166 

D) 321

  • As per the Forbes Billionaires List 2022, Indian billionaires increased to a record high of 166 from 140 last year, with a combined wealth of USD 760 billion.
  • Reliance Industries Chairman and Managing director Mukesh Ambani continues to stay on top of the list as the richest Indian with a net worth of USD 90.7 billion. He ranked at the 10th position on the global list. Tesla and SpaceX chief Elon Musk emerged as the richest person in the world.

6. Which company has handed over the first set of Gaganyaan hardware to the Indian Space and Research Organisation (ISRO)?

A) DRDO

B) HAL 

C) SpaceX

D) Pixxel Space

  • The Hindustan Aeronautics Limited (HAL) handed over the first set of Gaganyaan hardware to the Indian Space and Research Organisation (ISRO). The PS2 stage is the second stage of the PSLV launch vehicle in which propellants, which can be stored in the Earth are used for propulsion.
  • In October 2021, the heaviest Semi–Cryogenic propellant tank (SC120– LOX) ever fabricated by HAL was delivered to ISRO.

7. Iga Swiatek, who has become the Women’s Tennis Association World No.1, is from which country?

A) Australia

B) Poland 

C) Germany

D) France

  • The 20–year–old Iga Swiatek recently became the first Polish player become the Women’s Tennis Association World No.1. She recently won the Miami Open to become the first player to sweep the first three WTA 1000 events in a season.
  • Iga Swiatek became the first teenager to win Roland Garros in 28 years in 2020.

8. Which state topped the NITI Aayog’s State Energy and Climate Index–(SECI) Round 1?

A) Kerala

B) Punjab

C) Gujarat 

D) Odisha

  • Gujarat has topped NITI Aayog State Energy and Climate Index–(SECI) Round 1 among larger states. It is followed by Kerala and Punjab. Among the smaller states, Goa topped the index.
  • The index ranks the states and union territories on six parameters — discoms performance, access affordability and reliability of energy, clean energy initiatives, energy efficiency, environmental sustainability and new initiatives.

9. Which Union Ministry implements the ‘PM–DAKSH Yojana’?

A) Ministry of Home Affairs

B) Ministry of Skill Development and Entrepreneurship

C) Ministry of Social Justice and Empowerment 

D) Ministry of Women and Child Development

  • PM–DAKSH (Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampann Hitgrahi) Yojana, implemented by Ministry of Social Justice and Empowerment, is a National Plan for the skilling of marginalized persons.
  • The main objective of the scheme is to increase the skill levels of the target youth by providing for long–term and short–term skills, followed by an employment/self–employment. Around 2.71 Lakh persons will be trained over 5 years. Rs.79.48 crore was allocated for 2021–22.

10. When is the ‘International Day of Human Space Flight’ commemorated every year?

A) April 10

B) April 12 

C) April 14

D) April 15

  • The United Nations General Assembly established April 12 to be the International Day of Human Space Flight.
  • On April 12, 1961, Russian cosmonaut Yuri Gagarin orbited Earth aboard the Vostok 1 spacecraft. The International Day of Human Space Flight is commemorating this occasion, which paved the way for space exploration for the benefit of humanity.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!